Jump to content

இதோ உங்கள் எல்லைகளில்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்கள் எல்லைகளில்.....!

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

வங்காலை அல்லைப்பிட்டி

வரலாற்றில் புதுமையில்லை

வழிவழியாய் தமிழரினம்

வாழ்வழிந்த கதையிதுவே.....

எண்ணுவதும் எழுதுவதும்

அழுவதும் பின் எழுவதுமாய்

தமிழர் கதை.....

எத்தனையாண்டுச் சாபமிது....

குத்திக் குதறி குடலறுத்துக்

கூரை முகட்டில் கயிறுகட்டி

காட்சிப்படுத்திக் கலங்கடித்து

நாளுக்கொரு பகுதி நம்மண்ணில்

இந்த நாசக்காரர் கையில்

நெஞ்சக் கூடறுந்து பிணமாக....

தடையிடுவோர் தலையெடுப்போர்

தண்டனையென்போர்

காதுகளில் இதுவெல்லாம் கேட்காத

கிடைக்காத புரியாத செய்திகளாய்.....

எல்லாம் புலியாக......

எங்கள் குழந்தைகளும் பலியாக....

குத்தியனின் கூட்டமொரு

பக்கமதால் கொன்றொழிக்க.....

மட்டுநகர் மாறிப்பெற்றெடுத்த

மற்றவன் மறுகரையால் தின்றழிக்க

வேலை மிச்சம் சிங்களத்தான் கைகளுக்கு.

தட்டிச்சுத்தித் தமிழினத்தின் தலையெடுத்து

பசியெடுத்து அலைகின்ற

பாதகர்கள் வெறியடங்கப் பலியாக

எங்கள் தங்கைளும் தாயருமாய்.....

ஓ....கொடியவரே.....!

உலகின் திசையெங்கள்

ஒளித்திரளை மென்றுவிட

தடைபோட்டுப் படையிறக்கி

அணைபோட்டு உங்கள்

ஆதரவாய் அகிலமே வரட்டும்

துரோகராய் உங்கள் முன் கிடக்கும்

து}சிகளைத் துடைத்தெங்கள் தேசம் காக்க

தமிழினனே முடிவெடுக்கும்.

எங்கள் சுூரியக்கோளைச் சுற்றி

ஆயிரமாயிரம் அக்கினிக் கோள்கள்

அனலாகிப் புனலாகி உங்கள்

ஆணவம் தொலைக்க

ஆயிரமாய் ஆயிரமாய்.....

இதோ உங்கள் எல்லைகளில்....

வெடியாகி இடியாகி - எங்கள்

மகனாரும் மகளாரும் உங்கள்

தெருக்களிலே தீர்ப்பெழுத வருவதன்

விதியிது என்பதை விரைவில் அறிவிப்பர்.

12.06.06

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாந்தி,

கவிதை நன்றாக இருக்கிறது.

குத்தியனின் கூட்டமொரு

பக்கமதால் கொன்றொழிக்க.....

மட்டுநகர் மாறிப்பெற்றெடுத்த

மற்றவன் மறுகரையால் தின்றழிக்க

வேலை மிச்சம் சிங்களத்தான் கைகளுக்கு. வேதனையான யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமதுஉடலை வெடியாக்கி...

தமதுயிரை எழுதுகோலாக்கி ..தமிழர் தலைவிதியை மாற்றி தாமே எழுதத் தொடங்கிவிட்டார்...இந்தவீரர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சுூரியக்கோளைச் சுற்றி

ஆயிரமாயிரம் அக்கினிக் கோள்கள்

அனலாகிப் புனலாகி உங்கள்

ஆணவம் தொலைக்க

ஆயிரமாய் ஆயிரமாய்.....

இதோ உங்கள் எல்லைகளில்

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணுவதும் எழுதுவதும்

அழுவதும் பின் எழுவதுமாய்

தமிழர் கதை.....

எத்தனையாண்டுச் சாபமிது....

கோபம் எழுகிறது.....

உய்யும் வழிதேடி உயிர் துடிக்கிறது...

சாவே வாழ்வு..

வாழ்வே சாவு....

வையம் எப்போது விழி திறக்கப் போகிறது?

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

எமக்காய் மரணித்த கரும்புலிகள் நினைவாக உருவான உங்கள் கவிதை அருமை! பாராட்டுக்கள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.