Jump to content

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே எனது கடைசி இலக்கியச் சந்திப்பு என எனக்குள் ஆழமாக முடிவெடுக்கவைத்தும் விட்டது.

.

இதுக்குத்தான் வரலாறுகளைப் படித்து அவற்றில் இருந்து பாடங்களைக் கற்கவேண்டும் என்று அடிக்கடி யாழில் நான் எழுதுவது! 
Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

இப்படியான இலக்கிய கூட்டங்களுக்கு இலங்கையில் இருக்கும் போதும், கனடாவுக்கு வந்த பின்னும் போய் மண்டை காய்ந்து வந்த ஞாபகம். கடந்த வருடமும் இப்படியான ஒரு சந்திப்பு பற்றி சுமதி ஒரு Flyer தந்து வரச் சொன்னார்..எடுத்தேன் ஓட்டம்.

Link to comment
Share on other sites

இலக்கிய கூட்ட மண்டபத்திற்கு  உள்ளே நான் போய் சில நிமிடங்களில்  ஒருவர்   சிறிய புத்தகம் போல தயாரித்திருந்த  பிரதிகளை கொண்டு வந்து ஒவ்வொருவராக வினியோகம் செய்து கொண்டிருந்தவர் ஒன்றை என்னிடமும் நீட்டினார். வாங்கி பார்த்தேன் முகப்பில்  சாத்திரி  ரயாகர  மயாண காண்டம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.பக்கங்களை  புரட்டியபோதுதான்  அது என்னையும் ராயாகரனையும் போட்டுதாக்குவதற்காக தயாரிக்கப் பட்டி பிரதிகள் என்றுபுரிந்தது. இன்றைய நிகழ்ச்சி  சூடாகத்தான்  இரக்குமென்று புரிந்தது. அது போலவே  நான் பேசும் முறை வந்ததும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக  சில நிமிடங்கள் கழிந்தது.அதைப் பற்றியும்  எனது உரைக்குப் பின்னரான  விவாதத்தின்போது  கேள்வி பதில்களை  தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல் குழப்பங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்ததும். எனது கையில் இருந்த பிரதியை காட்டி  சாத்திரி மயான காண்டம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவே சாத்திரியை  அரிச்சந்திரன்  என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ரெிவித்தபடி  எனது உரையை  தொடங்கினேன் கீழே எனது உரையின் முழு வடிவம்.

போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.

அனைவரிற்கும் வணக்கம்

இலண்டினில் இப்படி ஒரு  நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும்  நண்பர் பொளசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந் கொள்ளலாமா என கேட்டிருந்தேன். காரணம் புலம்பெயர் வாழ்வில்  இப்படியான நிகழ்வுகளில்  எதிலுமே நான் கலந்து கொள்ளாது இதுவரை  விலகியே இருந்திருக்கிறேன் அதற்கான தேவைகளும் இருந்தது.  நான் கேட்டதுமே  உடனடியாக   ஓஓஓ...தாராளமாக கலந்து கொள்ளுங்கள் ஆனால்  போருக்குப் பின்  புலம்பெயர்ந்து வாழும் எமது சமூகத்தின் அரசியல் பற்றி  20 நிமிடம் கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்பதான்..அடடடா..சொந்தச் செலவிலை சூனியம் வைச்சிட்டமே என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை  இணையங்களிலை  ஏதாவது கதை கட்டுரை  எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும் பேனையையும். அல்லது ஒரு கணணியை தந்தால் மட மடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால். இப்பிடி கொஞ்சப் பேருக்கு முன்னாலை  கதைக்கவேணும் ..அதுவும் அரசியல். ..உருப்பட்ட மாதிரித்தான்...
போரிற்கு பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் எப்படியான அரசியலை செய்யலாம்.
. என்ன செய்யலாமென்று  யோசித்துப் பார்த்தேன்    மிக சாதாரணம் ஒரே வரியில் சொல்லி விடலாம்.இப்போது  உள்ள சூழ் நிலையில் பொத்திக்கொண்டு போசாமல் இருப்பதுதான் சிறந்தது. ..
இல்லை அதை விட வேறு எதையாவது புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்யவேண்டும் என நினைத்தால் . ஜ.நா சபை வரை நடக்கலாம்.அடுத்தது   இந்த  கங்கம் ஸ்ரைல் பாடலை எடுத்து    செய்து அதில்  மகிந்தா . சோனியா.  மன்மோகன் சிங். வேணுமெண்டால்  பான்கி மூன்.  இவர்கள்  சேர்ந்து  ஆடுகிற மாதிரி  கிராபிக் செய்து  யூ ரியூப்பில்  தரவேற்றி  இணையத்தில பரவ விடுவதோடு  முகப் புத்தகத்தில்  பதிவு செய்து அப்படியே  லைக்குகளை அள்ளலாம்.யாகம் நடாத்தலாம்.தேவாலயத்தில் திருப்பலி பூசை கொடுக்கலாம்.

சாகும்வரை உண்ணாவிரதம்  என்று அறிவித்து விட்டு  சில நாட்களின் பின்னர் ஒரு மனுவை யாரிடாவது  கொடுத்து விட்டு அப்படியே பேசாமல் போயிடலாம்.  உண்மையில் எனக்கு தெரியாத ஒரு விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி  சாகும்வரை உண்ணாவிரதம் என்று    அதிரடி  அறிவிப்புக்கள்  சிலரது படங்களோடு வெளியாகும்..  ஆனால்   இந்த சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம்  என்று அறிமுக காலத்தில் இருந்து  இன்று வரை  திலீபனைத்தவிரை   கொண்ட கொள்களிற்காகவே  யாராவது  உண்ணா விரதம் இருந்து  உயிரை விட்டிருக்கிறார்களா????   யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை சொல்லுங்கள்.. பிறகு எதுக்கு  சாகும்வரை உண்ணா விரதம் என்று தொடங்கி  பிறகு   அதை  சத்தமேயில்லாமல் கைவிட்டு    சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் என்னவென்று  செய்து காட்டிய திலீபனை கொச்சைப்படுத்துகிறீர்கள்...... பேசாமல்  அடையாள உண்ணா விரதம் எண்டு அறிவியுங்கப்பா..
 ஆனால்  இவை எல்லாவற்றையும் ஏற்கனவே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் பலா பலன்கள் என்ன  என்பதும்  அதனை செய்பவர்களிற்கும் தெரியும் ஆனாலும் அதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை அப்படியே  விட்டு விடுவோம் அவரகள் தொடரட்டும்.

ஆனால்  இலங்கையில் வாழுகின்ற சிறு பான்மை இனங்களான தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆக்கபூர்வமாக . நடைமுறைக்கு சாத்தியமான .யதார்த்தமான அரசியல்  எப்படிச் செய்யலாம் என்றுதான் பாரக்கவேண்டும்.  அதை செய்வது இலகு ஆனால் அதனை செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இங்கு நான்  தனியாக  தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டதற்கு காரணம். அவர்கள் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்கட்சிகளோடு இணைந்து வேலை செய்து தங்கள் அரசியல் போராட்டங்களை  தொடங்கவேண்டிய காலகட்டம் இன்:று வந்து விட்டது.என்பதற்குமப்பால் அதற்கான கட்டயம்  வந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இது இரண்டு  இனங்களிற்குமான இறுதி சர்ந்தர்ப்ம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் முடிவில் இலங்கையில் தமிழினம் தனது அனைத்து வளங்களையும் இழந்து  அதன் பலம் இழந்து  பேரினவாத அரசுடன் பேசும் பேசும் சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல். அங்கு புலிகளின்  முடிவு  என்பது   தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு அல்லது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தங்களோடேயே அனைத்தையும் அழித்துக்கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் முக்கியமானது இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான் .
இப்படியாக தமிழ்த்தரப்பினை  முழுமையாக பலவீனப் படுத்தி முடித்துவிட்ட பேரினவாதம்  அடுத்தாக  இப்பொழுது கைவைக்கத் தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீதுதான்.அதைப்பற்றி விபரமாக நான் இங்கு சொல்லததேவையில்லை.

இன்றைய  இலத்திரனியல் உலகத்தில் வினாடிக்கு வினாடி செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது. இந்த இடைவெளியை பயன்படுத்தி  இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி விட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற  தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும்  வசதி வாய்ப்புக்களை அனுபவித்து விட்டார்கள்.
இப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப் பட்டு விட்டதன் பின்னர்  தங்களிற்கு  துணை நின்ற  தமிழ்தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய் விட்ட நிலையில்  சிங்கள பேரினவாதம் தனது பார்வையை  முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலையில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு  முண்டு கொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள்  ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப் படுத்துவதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில்  தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல் தமிழ் இளைஞர்கள்  எப்படி  பேரினவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ  அதே போல இன்று பேரினவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய  முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்புக்களை காட்டத் தொடங்கி விட்டது.

இங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை  பேரினவாதிகள்  என்று அழைப்பது எதனால் என்றால்  தமிழ் சமூகமும்  சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய்  தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின்  முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது  தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும்  மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை  உண்மையான  சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய  மகிந்தாவிற்கும்  பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...

அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....

இதனால் அவர் எதிரணிக்கு  தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான  விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக   இலங்கை வாழ் தமிழர்களிற்கு   பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால்  அவர்களும் இந்த நாட்டில்  சகல உரிமைகளோடும் வாழும்  சுய நிர்ணய முறையிலான  தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு  இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை  அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த  பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்  1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.

இங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும்... தமிழர்களிடேயே  இனவாதம் இருக்கின்றது என்றில்லை முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு  இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்படவில்லை..பிறகு அவர்களிற்குள்ளேயே  கிறீஸ்தவர்கள்  இந்துக்கள் என்று மோதிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால்  அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள்  தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான  சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடேயும் இல்லை.
சரி பலகாலமாக வளர்க்கப்பட்ட இனவாதத்தை விட்டு  இப்பொழுதுள்ள  நடை முறைக்கு வருவம்.யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக்கான  பெண்போராளிகளின்  நிலை  மிக மோசமாக இருக்கிறது. பாவம் அவர்கள்.புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய அதே சமூகத்தால்  அதே உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை  முன்னை நாள் போராளிகள் என்று தூக்கி கொண்டாடச்சொல்லவில்லை  சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை  தமிழ் சமூகம்....இப்போ அண்மைக்காலத்திலும்  அல்ஜசீரா  தொலைக்காட்சியினர் முன்னைநாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித்திருந்தார்கள்.

 சில நேரங்களில் நீங்களும் பாத்திருக்கலாம்.. எனக்கு பார்க்கக்கிடைத்தது. அதை பார்த்தபோது அவர்கள்  ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால்  இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக  இருந்தவள் இரவு பகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள் யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கி அடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது ஆனால் இப்பொழுது  இரவு ஏழுமணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை  அதற்கு காரணம் எனக்கு பயம் அல்ல என்னை சுற்றியுள்ள சமுகம்தான்  இரவு வெளியில் போனாலே   இவள் இந்த நேரம் எங்கை போறாள்???..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ??....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில்  பப்பாளிப்பழம்  மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும்  ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய்  தாவிப் பாய்ந்து  கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே  எனக்கு பயமாக இருக்கின்றது .. .........இவள் என்ன  ஆம்பிளையா  பொம்பிளையா???? என்கிறது சுற்ற உள்ள சமூகம்.

ஆகவே இங்கு   பெரும்பான்மை  அரசிடம்  இருந்து சிறுபான்மை இனங்களிற்கான  நிம்மதியான சுதந்திரமான  வாழ்க்கையை  பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லமல்  எங்கள் சமுகத்திடம் இருந்தும் இந்த முன்னை நாள் போராளிகள் குறிப்பாக பெண்போராளிகளிற்கும் நிதந்தரமானதும் சுதந்திரமாதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம் பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம்....  அப்பாடா  சாத்திரி இப்பவாவதே ஒருமாதிரி தலைப்புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்....
யோசிக்கும்போது  நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல்  பொத்திக்கொண்டும் போக  முடியாது...அடுத்ததாக  கூறியது போல  இந்த யாகம் வளக்கிறது  ..ஜெனீவா நொக்கி நடப்பது ..காவடி எடுப்பது... இதனை பலர் செய்துகொண்டிருப்பதால். அவர்களே  அதனை தொடர்ந்து செய்யட்டும்.  ஆனால்  புலிகளின் வெற்றிகளின் போது  விசிலடித்து  மகிழ்ந்து  யுத்தத்திற்காக  பணம் கொடுத்தவர்கள்.  புலிகள்  சரியில்லை  அவர்களிடம்  ஜன நாயம் இல்லை  அவர்களின் போராட்டம் சரியில்லை.என்றவர்கள்..  வெளி நாட்டிற்கு வந்தாச்சு  அங்கை  இருப்பவர்கள் எக்கேடு கெட்டால்  என்ன  எங்களிற்கு புலியும் வேண்டாம் அரசாங்கமும் வேண்டாம்  என்று  ஒதுங்கி இருந்தவர்கள்  என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு  காரணம்..  புலம்பெயர் ந்து வாழும் அனைத்து  தமிழர்களும் ஏதோ வழியில்  காரணம்...இதனை யாரும் தட்டிக் கழிக்ககவோ மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள்.நாங்கள் சார்ந்த  சங்கங்கள்....சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததமிழன் இன்று புலம் பெயர் தேசமெங்கும் ஊர்சங்கம்..பழைய மாணவர் சங்கம். வர்த்தகர்  சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள்  வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு  தேவையில்லாத விடயம்

. அதைவிட  எங்கள்  பிரதமர்  திரு  உருத்திர குமார் இருக்காக.....
ஆம். நாடு கடந்த தமிழீழ அரசு ..உலகத்தமிழர் பேரவை. பிரித்தானியத் தமிழர் பேரவை. எல்லா நாடுகளிலும் இருக்கும்  மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடுகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள்.  அதை விட மிக   மிக முக்கியமாக  இலங்கைத் தீவில்  தமிழர் தரப்பையும். தமிழ் பேசும் முஸ்லீம்  தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  அமைப்புக்கள்.  காணரம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து  கத்தினாலும்  சர்வதேசம் என்பது  அங்கிருந்து வரும் குரலிற்கே  அதிகளவு   செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனெனன்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல..எனவே எல்லாருமே ஒரு பொது நோக்கத்தோடு இணைந்து  ஒவ்வொரு அமைப்பில்  இருந்தும் ஒரு பிரதிநிதியை  தேர்வு செய்து  ஒரு குழுவை  உருவாக்க வேண்டும்.  அந்தக் குழு  பேச்சு வா்த்தையில் ஈடுபடவேண்டும்.......

யாரோடு?????....பேச்சு வார்த்தையில் ஈடபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை  யாரோடை பேசிறதெண்டு சொல்லவேயில்லையே......??. இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்..........

அப்பவே நினச்சம் ஜயா.சாத்திரி இதைத்தான் சொல்லுவானெண்டு...பெரிய தொகையா வாங்கியிருப்பானோ??? இலங்கை புலனாய்வுத்துறை  அனுப்பியிருக்குமோ??? இணக்க அரசியல்  செய்யச்சொல்லுறானோ????இப்படித்தான்  பலர் நினைக்க முதல்  எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.இதனை பேச்சுவார்த்தை என்பதை விட  ஒரு பேரம் பேசுதல். நிகோசியேசன்.இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால்.எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ. அமெரிக்காவோ..ஜ.நா.சபையோ. இந்தியாவோ..வந்து வாங்கித் தருவார்கள் என்றும். ஒவ்வொரு ஆண்டும் ஜ.நா  கூடும்போது  இலங்கையரசிற்கு  எதிராக  தீர்மானம் கொண்டு வந்து  மகிந்தா அரசை கலைத்து போர்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தாவையும் கோத்தபாயாவையும். கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. ஏனென்றால்  மக்காளால் தெரிவு செய்யப் பட்ட  ஒரு நாட்டின் அதிபரை அது எந்த மக்கள்  என்றெல்லாம்  கிடையாது   அவர் பதவில் இருக்கும் போது  விசாரணையே செய்யமுடியாது  இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம்.  அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது.அப்படியிருக்கும்போது  பதவியில் இருக்கும் மகிந்தாவை  அதுவும் போர் குற்றவிசாரநை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது  நடக்கவே நடக்காது.

அவரது பதவி பறி போனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம் ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று சொன்னேன்.  அடுத்ததாக    எம்மவர்களால்  நடாத்தப்படும் போர்குற்ற விசாரணை  போராட்டங்களில் பொன்சேகா  பெயர் இல்லை ஏனெண்டால் அவர் இப்ப நம்மாள்...  
இந்தியா எங்கள் பிரச்சனையை  தீர்க்கவேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம் ஆனாலும் அதன்  வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் எதனையும்  உடனடியாக நாங்கள் எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் கொகை வகுப்பு என்பதே  இந்திய நலன் என்பதற்குமப்பால்  இந்திய கொள்கை வகுப்பளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இந்தியாவின் கொள்கைவகுப்பாகின்றது  இந்த கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில்  எடுத்தில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு.இந்தியா தனது நலன்களிற்காக  இலங்கைத் தீவில் பிரச்சனைகளை உருவாக்குமே தவிர தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்னபதும்  எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது.அது மட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே   இலங்கையரசிற்கு அழுத்தத்தை கொடுத்து  பிரச்னையை தீர்த்திருக்கலாம்.. ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது  தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை..

இன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்  எம்மவர் எல்லாரது கவனத்தையும் திருப்பியிருக்கின்றது ..நல்ல விடயம். ..தமிழர்கள்  என்கிற  ரீதியில் அதற்கான தார்மீக கடைமை அவர்களிற்கும் உண்டு.ஆனால் அது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதனையும் இது கொண்டு வந்துவிடாது . ஏன்  ??சட்ட மன்றத்தில் முதவமைச்சர் ஜெயலலிதாவே  தீர்மானம் போட்டிருக்கிறாரே  என்று சொல்லலாம்.  அது கூட அடுத்த லோக்சபா  தேர்தலிற்காக  ஈழத் தமிழர் விவகாரத்தை   மீண்டும் தன் கையில் எடுத்து டெசோ  மூலமாக  தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை  மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக  கருணாநிதி போட்ட திட்டத்தை  முறியடிக்க  சாதுரியமாக  மாணவர் போராட்டங்களிற்கு ஆதரவளித்து  சட்ட மன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த  உணர்சியலையின் ஆதரவுகள் அனைத்தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி  அரசியல் சாதுரியத்தை காட்டி விட்டிருக்கிறார். ஜெயலலிதா..இது அவர்களது  அரசியல் என்றாலும்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது  எமங்கு வந்தவரை இலாம்  என்பதோடு இதை வைத்துக்கொண்டு  நாங்கள் அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்தப் போகிறோம்  என்தில் தான் மிகுதி தங்கியிருக்கின்றது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை..

அதே நேரம் இந்தியா என்பது 28 மானிலங்களையும்.  ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு  28 மானிலத்தில் ஒரேயொரு மானிலம்  அந்த மானில அரசின் எந்த பிரதிநிதியும்  மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை  இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம்  மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழ் நாடு அரசு   தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறைவேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே  ஆயிரக்கணக்கில்  இருக்கின்றது.  அதை விட  மத்திய  அரசானது  தமிழ்நாட்டையும் தமிழர்களையும்  எந்தளவு  கவனத்தில்  எடுக்கின்றது  என்பதற்கு அண்மைய  உதாரணம். இரண்டு  மலையாள  மீனவர்களை இந்திய கடல் எல்லையில்   இத்தாலிய  கப்பல் சிப்பந்திகள்  சுட்டு கொன்றதும்  இந்தியா  எடுத்த  நடவடிக்கைளும்.  அதே நேரம்  இன்றுவரை  சுமார் நானூறு தமிழ்நாட்டு தமிழர்கள்  இலங்கை இராணுவத்தால்  கொல்லப்பட்டு  பலர் இலங்கை சிறையில் வாடினாலும்  அதற்காக  ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல்   இலங்கை நட்பு நாடு என்று    அதனை தாங்கி பிடிக்கும்  இந்தியாவை  நாம் எவ்வளவு  தூரம் நம்பலாம். இது கேள்விதான்.
வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது அண்ணன் தம்பி பிரச்சனை நாங்கள் அடித்து கொள்ளுவோம்  கட்டியும் பிடிப்போம் எனவே   இதனை எங்களிற்குள்  தீர்த்துக்கொள்கிறோம் என்று இந்தியாவிற்கு  பகிரங்கமாக அறிவித்திருந்தார்  அன்றைய இலங்கை ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசா.இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன் படுத்தாமல்  .அனுப்பியாச்சு..

 அடுத்ததாக  சர்வதேசம். வருடா வருடம் ஜ.நா சபையில்  தீர்மானம் கொண்டு வரும். இந்த வருடமும் கொண்டு வந்தது. அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு  போவார்கள்.  தீர்மானத்திற்கு  ஆதரவாக  25 நாடுகள் ..எதிராக   18 நாடுகள்  வாக்களித்தன..  10 நாடுகள்  வாக்களிப்பில்  கலந்து கொள்ளவில்லையென்று செய்திகளிள் வெளியாகும்.  ஆனால் தீர்மானம் என்னவென்றால்  இலங்கையில்  நடந்து முடிந்த   மேசமான  வன்முறைகளை   இலங்கையரசு விசாரிக்கவேண்டும்.  அதவது  இலங்கையில் நடந்தது படுகொலைகள் என்றோ  இனவழிப்பு என்றோ அங்கு  குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அதை அவர்களே  விசாரிக்கவேண்டுமாம். களவு எப்படி நடந்தது  கள்ளனே  விசாரிக்க வேண்டுமாம். தீர்மானம் நல்லாயில்லையா???? ஆகவே சர்வதேசமும்  தமிழரிற்கானதொரு தீர்விற்காக  இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக் போவதில்லை. அவர்களின அழுத்தங்கள் எல்லாம் இலங்கையரசை பணிய வைத்து தங்கள் சார்புநிலை  எடுக் வைத்து  தங்கள் பொருளாராதார  நலன்களை  பேணுவது மட்டுமே.

ஆகவேதான்  சாட்சிக் காரனை விட சண்டைக்காரனேடு  பேசுலாம் என்கிறேன். தனித் தமிழீழத்திற்கான  வாக்கொடுப்பு வேண்டும் என்று  தமிழகத்திலும் போராட்டங்கள்  சூடு பிடித்திருக்கிற நேரத்திலை   சில நேரம்  ஜ. நா சபையே  வாக்கெடுப்பு நடத்தி  தமிழீழத்தை வாங்கி  தந்தாலும் தரலாம்  இந்த நேரம் போய்  இந்த நேரத்திலை சாத்திரி  வேணுமெண்டே குளப்புறானே........

சரி  ஜ. நா சபையே நாளைக்கு  இந்த தீர்மானத்தை நிறைவேற்றி  இலங்கையில் வாக்கெடுப்பு  நடத்தி அதற்கு வாக்குகளும் விழுந்து விட்டது  என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போ தமிழீழத்தை கொண்டுபோய் யார்  கையில் கொடுப்பது.  சம்பந்தர் தலைமையிலால தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமா??? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும்  பதிவு செய்யப் படாத கட்சியாக  உள்ளுக்குள் தமிழரசு  கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு  உடைனேயே   சைக்கிள்  சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது  டக்லசிடமா????டக்லஸ் ஒட்டுக்குழு  துரோகி என்பார்கள்.  அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான்.  அதனாலை அங்கை விடுவம்  தமிழீழத்தை   இங்கு  நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமா??   முடியாதே   உருத்திரா கே.பின்  ஆள் என்கிறார்கள். சரி இந்த  ஜி. ரி. எவ்...  பி. ரி.. எவ்...   இவங்களும்  இடைக்கிடை  ஏதாவது  கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான்  இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது...  சரி அப்ப  வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு  மாவீரர் தினத்தை  இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே  அவங்களிட்டை  கொண்டு போய் குடுக்கலாமா??.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு  முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும்.  என்ன தான் செய்யலாம்  தமிழீழத்தின்  அரசாங்கத்தை நிருவகிக்க  தமிழீழத்  தமிழர்கள்  சரியான   தகுதியானவர்கள் யாருமே இல்லையே  என்ன செய்யலாம்  ஒரு மாறுதலுக்காக  கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா??? வை.கோ....நெடுமாறன்.... இவர்கள் தமிழ் நாட்டில் இருந்து  தமிழீழத்தை நிருவாகிக்கலாம்.  எப்பிடி ஜடியா??

ஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை ..தனி நாட்டை..  சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி ..சுயநலம் இன்றி  தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த  அக்கறைகளோடு  வழி நடாத்தக் கூடிய   ஒட்டு மொத்த தமிழர்களின்  நம்பிக்கைகளையும் பெற்ற  பலமானதொரு  அமைப்பு எம்மிடம் உள்ளதா??????........இல்லை.....அது மட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை. ... பக்கத்து நாட்டுக் காரனையும் வெளி நாட்டுக்காரர்களையும் நம்பி காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் போகின்றோமா??
அல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு  முதலில்  அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும்.  அவர்கள் நிலங்கள்  இருக்கவேண்டும் .  எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும்.  எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர் .. எமது உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்தும்  இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை.. பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு  எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும்.  முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும். பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப் படுத்தப் படவேண்டும்.  அதற்கு  நான்  முன்னர் கூறியது போல் அனைத்து  தமிழர் தரப்பையும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு  குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை  தொடங்கவேண்டும்.  அந்த பேச்சு வார்த்தைகள்  ஊடாக  சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு  அவர்களிற்கு  காவல்த்துறை  மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு  நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..  அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை  தூக்கி நிறுத்த முடியும்.  அவர்கள் அரசியல் ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள்  எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால்  அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள்  தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.
 
Link to comment
Share on other sites

ஒரு எழுத்தாளனை தனது படைப்பிற்கு மன்னிப்பு கேட்க வைக்கின்ற கூச்சல்கள் சரியான விமர்சனமாக இருக்க முடியாது  மாறாக அது காட்டுமிராண்டித்தனமாகவே இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி எதிர்ப்பு கக்கிறதிற்கு.. சனத்தை கூட்டம் கூட.. வெளிப்படையாக் கூப்பிட முடியாது. கூப்பிட்டா செருப்பால அடிக்கும். இலக்கிய சந்திப்பு என்று சொல்லி.. மாற்றுக் கருத்து அரிசியல் செய்கிறதுதான் இப்ப புலம்பெயர் பூச்சி (புரட்சி என்று சில பேர் சொல்லுறாங்கப்பா) அரசியல்..!!

போரின் பின்.. புலி எதிர்ப்பு... தமிழ் இலக்கியமாயிடிச்சு..! கொடுமை சரவணா. இதில டொம்னிக் ஜீவா வேற. இவருக்கு.. முத்தமிழ்  விழாவில் புலிகள் கெளரவிக்கவில்லை என்ற கோவமோ என்னமோ..???! இவங்க எல்லாம் ஊரில.. சொல்லிக்கிட்டு திரிஞ்சது ஒன்று.. இப்ப சேருற கூட்டம் வேற. எல்லாம் பொய் முகங்கள். இவர்கள் தான் எங்க இலக்கியவாதிகள். இதை கேட்க வேண்டிய கொடுமை..! தமிழன் தலைவிதி இது...???! :icon_idea::)

Link to comment
Share on other sites

சாத்திரி! உங்களுக்கு றெய்னிங் போதாது. ஒரு பேப்பருக்கு அனுப்ப வைச்சிருந்த கட்டுரையை இலக்கிய சந்திப்பில் வாசித்துப் போட்டீங்கள். அடுத்த முறை இப்படி நடக்கக் கூடாது. றொஸ்கிசம் என்று ஆரம்பித்து பெண்ணியத்தால் வந்து பின்நவீனத்துவம் என்று போய் பாசிசத்தில் முடிக்க வேண்டும். ஆனால் கட்டுரை யாருக்கும் விளங்கக் கூடது. புரிகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுத்துக்களைப் படிக்கவில்லை இந்த வீடியோ பார்த்ததும் தோன்றுவது ஒன்று தான்.

"பெரிய சுவரா கொண்டு வந்து வையுங்கப்பா என் தலையக் கொண்டு போய் முட்ட" :o

இதுகளைப் பார்க்கிற எங்கள் மேல் இவர்களுக்கு இரக்கமே வராதா???? :( :( :wub: :wub:

புரியிற மாதிரி எழுதிட்டனே??    அடுத்த தடைவை புரியாத மாதிரி எழுத முயற்சிக்கிறன்  சபேசன். ஆனால்  இப்படி எழுதியுமே  புரியாத ஆக்களிற்கு எப்படி புரிய வைக்கலாம் என்றுதான்  யோசித்தபடி இருக்கிறன். புரிகிற மாதிரி சொன்னால்  புரியாமல் போகுது புரியாத மாதிரி சொன்னால் புரியிது :lol:

நான் எழுத்துக்களைப் படிக்கவில்லை இந்த வீடியோ பார்த்ததும் தோன்றுவது ஒன்று தான்.

"பெரிய சுவரா கொண்டு வந்து வையுங்கப்பா என் தலையக் கொண்டு போய் முட்ட" :o

இதுகளைப் பார்க்கிற எங்கள் மேல் இவர்களுக்கு இரக்கமே வராதா???? :( :( :wub: :wub:

சுவரை விட உங்கள் தலை பெரிதா ??  சுவரை கொண்டு வந்து வைக்க முடியாது  நீங்கள் வேண்டுமானால் தலையை கொண்டு போகலாம். :lol:

Link to comment
Share on other sites

!

 சடையப்பர் எல்லா இடங்களிலும் காட்சி தந்தால் மவுசு குறைந்துவிடும். ஒரு "சிண்"ணை அனுப்பியிருந்தேன்.

அப்ப சடையப்பர் சீடர்கள் படைசூழ பவனி வருகிறார்.

:lol:

இப்படியான இலக்கிய கூட்டங்களுக்கு இலங்கையில் இருக்கும் போதும், கனடாவுக்கு வந்த பின்னும் போய் மண்டை காய்ந்து வந்த ஞாபகம். கடந்த வருடமும் இப்படியான ஒரு சந்திப்பு பற்றி சுமதி ஒரு Flyer தந்து வரச் சொன்னார்..எடுத்தேன் ஓட்டம்.

நான் 2002இல் பெண்கள் சந்திப்புக்கு ஒருமுறை போனேன். திரும்ப போறது பற்றியே எண்ணம் வரேல்ல. ஆனால் திறமையான பெண்களை அந்தச் சந்திப்பில் கண்டேன். நிருபா , தேவா இருவரையும்ம் அந்த 2002 சந்திப்பில் சந்தித்த போது அவர்கள் இருவரது ஆழுமையையும் கண்டேன். திறமை மிக்கவர்கள் இருவரும்.

Link to comment
Share on other sites

"சாத்திரி! உங்களுக்கு றெய்னிங் போதாது"

கொஞ்ச நாளைக்கு குப்பி எடுக்க வேண்டியதுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்த பேச்சு வார்த்தைகள் ஊடாக சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு அவர்களிற்கு காவல்த்துறை மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.. அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை தூக்கி நிறுத்த முடியும். அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள் எடுக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதைத்தானே செய்யவேண்டும் என்று சொல்லியினம்....நீங்களும் அதைத்தான் செய்யவேண்டும் எண்டுறீயள்....பிறகு என்ன பேசால் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்க வேண்டியதுதானே
Link to comment
Share on other sites

இலக்கிய சந்திப்புக்கள் ஒன்றிற்கு நான் சென்றேன் அதைவிட வேறு பல இலக்கிய கூட்டங்களுக்கும் சென்றிருக்கின்றேன் சர்சைக்களுக்கு இப்படியான இடங்களில் குறைவில்லை .இது சங்ககாலம் தொட்டு இருந்த விடயம் தான் .தமிழ் நாட்டிலும் இன்றுவரை இது தொடர்கின்றது .

பலரது  எழுத்திற்கும்  அவர்களது செய்கைகளுக்கும் பெரிய முரண்பாடு  இருக்கும். பெரும்பாலும் தம்மை முன்னிறுத்துவதிலும் சுய தம்பட்டதிலும் குழுவாக பிரிந்து மற்றவர்களை மட்டம் தட்டுவதிலுமே நேரம் போய்விடும் .இவையெல்லாவற்றையும் தாண்டி பல நல்ல விடயங்களும் நடைபெறும் அதிவிட நல்ல சில மனிதர்களையும் எனக்கு அறிமுகமாக்கியிருக்கின்றது ..இதானால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இப்படியான நிகழ்வுகளுக்கு சந்தோசமாக போய்க்கொண்டே இருக்கின்றேன் .

இதில் பெரிய பகிடி என்னை எழுத்துக்களால் மிக கவர்ந்த  பலர் சுயநலவாதிகள்களாகவும் போலியாக பழகுபவர்களாகவும் இருப்பதுதான் .

கோ -எழுத்தாளனின் படைப்பிற்கு மன்னிப்பு கேட்க வைக்க கூடாது ஆனால் தனி நபர் தாக்குதல்கள செய்திருந்தால் அதை அவர்கள் கேட்பதற்கும் உரிமையுள்ளவர்கள் ஆகின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதோபாருட.. இது.. கீரன் சபையில் சிவன் விளைவித்த கலகமாமில்ல...! திருவிளையாடல்.. புராணமாமில்ல..! :lol::D

வெட்டிக்கு இருக்கிறதுகள்.. தங்களைத் தாங்களே இலக்கியவாதின்னு சொல்லிக்க வேலை இல்லா இடைவெளியில்.. செய்யுறதெல்லாம்.. எல்லாம் கீரன் சபை கலகமாமில்ல..! தமிழன் நிலத்தை மட்டுமல்ல.. சமகால.. கடந்த கால.. இலக்கியத்தின் நயம்..விழுமியம்.. மாண்புகளையும் இழந்து விட்டான்..! எதுவும்.. ஒட்டுக்குழுக்களின் கைக்குப் போனால் இதுதான் ஆகும்..! நாலு விஜயிட குத்துப்பாட்டு போட்டிருந்தா.. அது இதைவிட சிறந்த இலக்கியமாக இருந்திருக்கும்.  :)

கீரன் சபையில் சிவன் சொல்ல வந்திட்டார்.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கப்பு வாங்க நானும் கதைக்கிறன் சித்திர வதையை அனுபவிக்கவேண்டாமா?? விரும்பின ஆக்கள் வரலாம்.

479838_586965367980130_1371747018_n.jpg

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன்

06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

இந்த நிகழ்வில் கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான" சல்மா " கலந்து

கொள்கிறார்.-"பெண்களும் ஒடுக்கும் அதிகாரமும்"- எனும் பேசு பொருளில்

உரையாற்றவுள்ளார்.இலங்கை, அவுஸ்ரேலியா,ஐரோப்பிய நாடுகளில் இருந்து

எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டளர்கள் கலந்து கொள்கின்றனர்.

228393_584825584860775_1042780647_n.jpg

சல்மா எதைப் பற்றி உரையாற்றினார்?...பெண்ணிலைவாதம் பற்றி ஒருத்தம் கருத்து ஒன்றையும் முன் வைக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கிய கூட்ட மண்டபத்திற்கு  உள்ளே நான் போய் சில நிமிடங்களில்  ஒருவர்   சிறிய புத்தகம் போல தயாரித்திருந்த  பிரதிகளை கொண்டு வந்து ஒவ்வொருவராக வினியோகம் செய்து கொண்டிருந்தவர் ஒன்றை என்னிடமும் நீட்டினார். வாங்கி பார்த்தேன் முகப்பில்  சாத்திரி  ரயாகர  மயாண காண்டம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.பக்கங்களை  புரட்டியபோதுதான்  அது என்னையும் ராயாகரனையும் போட்டுதாக்குவதற்காக தயாரிக்கப் பட்டி பிரதிகள் என்றுபுரிந்தது. இன்றைய நிகழ்ச்சி  சூடாகத்தான்  இரக்குமென்று புரிந்தது. அது போலவே  நான் பேசும் முறை வந்ததும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக  சில நிமிடங்கள் கழிந்தது.அதைப் பற்றியும்  எனது உரைக்குப் பின்னரான  விவாதத்தின்போது  கேள்வி பதில்களை  தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல் குழப்பங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்ததும். எனது கையில் இருந்த பிரதியை காட்டி  சாத்திரி மயான காண்டம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவே சாத்திரியை  அரிச்சந்திரன்  என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ரெிவித்தபடி  எனது உரையை  தொடங்கினேன் கீழே எனது உரையின் முழு வடிவம்.

போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.

அனைவரிற்கும் வணக்கம்

இலண்டினில் இப்படி ஒரு  நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும்  நண்பர் பொளசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந் கொள்ளலாமா என கேட்டிருந்தேன். காரணம் புலம்பெயர் வாழ்வில்  இப்படியான நிகழ்வுகளில்  எதிலுமே நான் கலந்து கொள்ளாது இதுவரை  விலகியே இருந்திருக்கிறேன் அதற்கான தேவைகளும் இருந்தது.  நான் கேட்டதுமே  உடனடியாக   ஓஓஓ...தாராளமாக கலந்து கொள்ளுங்கள் ஆனால்  போருக்குப் பின்  புலம்பெயர்ந்து வாழும் எமது சமூகத்தின் அரசியல் பற்றி  20 நிமிடம் கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்பதான்..அடடடா..சொந்தச் செலவிலை சூனியம் வைச்சிட்டமே என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை  இணையங்களிலை  ஏதாவது கதை கட்டுரை  எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும் பேனையையும். அல்லது ஒரு கணணியை தந்தால் மட மடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால். இப்பிடி கொஞ்சப் பேருக்கு முன்னாலை  கதைக்கவேணும் ..அதுவும் அரசியல். ..உருப்பட்ட மாதிரித்தான்...

போரிற்கு பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் எப்படியான அரசியலை செய்யலாம்.

. என்ன செய்யலாமென்று  யோசித்துப் பார்த்தேன்    மிக சாதாரணம் ஒரே வரியில் சொல்லி விடலாம்.இப்போது  உள்ள சூழ் நிலையில் பொத்திக்கொண்டு போசாமல் இருப்பதுதான் சிறந்தது. ..

இல்லை அதை விட வேறு எதையாவது புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்யவேண்டும் என நினைத்தால் . ஜ.நா சபை வரை நடக்கலாம்.அடுத்தது   இந்த  கங்கம் ஸ்ரைல் பாடலை எடுத்து    செய்து அதில்  மகிந்தா . சோனியா.  மன்மோகன் சிங். வேணுமெண்டால்  பான்கி மூன்.  இவர்கள்  சேர்ந்து  ஆடுகிற மாதிரி  கிராபிக் செய்து  யூ ரியூப்பில்  தரவேற்றி  இணையத்தில பரவ விடுவதோடு  முகப் புத்தகத்தில்  பதிவு செய்து அப்படியே  லைக்குகளை அள்ளலாம்.யாகம் நடாத்தலாம்.தேவாலயத்தில் திருப்பலி பூசை கொடுக்கலாம்.

சாகும்வரை உண்ணாவிரதம்  என்று அறிவித்து விட்டு  சில நாட்களின் பின்னர் ஒரு மனுவை யாரிடாவது  கொடுத்து விட்டு அப்படியே பேசாமல் போயிடலாம்.  உண்மையில் எனக்கு தெரியாத ஒரு விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி  சாகும்வரை உண்ணாவிரதம் என்று    அதிரடி  அறிவிப்புக்கள்  சிலரது படங்களோடு வெளியாகும்..  ஆனால்   இந்த சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம்  என்று அறிமுக காலத்தில் இருந்து  இன்று வரை  திலீபனைத்தவிரை   கொண்ட கொள்களிற்காகவே  யாராவது  உண்ணா விரதம் இருந்து  உயிரை விட்டிருக்கிறார்களா????   யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை சொல்லுங்கள்.. பிறகு எதுக்கு  சாகும்வரை உண்ணா விரதம் என்று தொடங்கி  பிறகு   அதை  சத்தமேயில்லாமல் கைவிட்டு    சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் என்னவென்று  செய்து காட்டிய திலீபனை கொச்சைப்படுத்துகிறீர்கள்...... பேசாமல்  அடையாள உண்ணா விரதம் எண்டு அறிவியுங்கப்பா..

 ஆனால்  இவை எல்லாவற்றையும் ஏற்கனவே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் பலா பலன்கள் என்ன  என்பதும்  அதனை செய்பவர்களிற்கும் தெரியும் ஆனாலும் அதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை அப்படியே  விட்டு விடுவோம் அவரகள் தொடரட்டும்.

ஆனால்  இலங்கையில் வாழுகின்ற சிறு பான்மை இனங்களான தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆக்கபூர்வமாக . நடைமுறைக்கு சாத்தியமான .யதார்த்தமான அரசியல்  எப்படிச் செய்யலாம் என்றுதான் பாரக்கவேண்டும்.  அதை செய்வது இலகு ஆனால் அதனை செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இங்கு நான்  தனியாக  தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டதற்கு காரணம். அவர்கள் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்கட்சிகளோடு இணைந்து வேலை செய்து தங்கள் அரசியல் போராட்டங்களை  தொடங்கவேண்டிய காலகட்டம் இன்:று வந்து விட்டது.என்பதற்குமப்பால் அதற்கான கட்டயம்  வந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இது இரண்டு  இனங்களிற்குமான இறுதி சர்ந்தர்ப்ம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் முடிவில் இலங்கையில் தமிழினம் தனது அனைத்து வளங்களையும் இழந்து  அதன் பலம் இழந்து  பேரினவாத அரசுடன் பேசும் பேசும் சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல். அங்கு புலிகளின்  முடிவு  என்பது   தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு அல்லது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தங்களோடேயே அனைத்தையும் அழித்துக்கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் முக்கியமானது இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான் .

இப்படியாக தமிழ்த்தரப்பினை  முழுமையாக பலவீனப் படுத்தி முடித்துவிட்ட பேரினவாதம்  அடுத்தாக  இப்பொழுது கைவைக்கத் தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீதுதான்.அதைப்பற்றி விபரமாக நான் இங்கு சொல்லததேவையில்லை.

இன்றைய  இலத்திரனியல் உலகத்தில் வினாடிக்கு வினாடி செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது. இந்த இடைவெளியை பயன்படுத்தி  இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி விட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற  தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும்  வசதி வாய்ப்புக்களை அனுபவித்து விட்டார்கள்.

இப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப் பட்டு விட்டதன் பின்னர்  தங்களிற்கு  துணை நின்ற  தமிழ்தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய் விட்ட நிலையில்  சிங்கள பேரினவாதம் தனது பார்வையை  முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலையில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு  முண்டு கொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள்  ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப் படுத்துவதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில்  தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல் தமிழ் இளைஞர்கள்  எப்படி  பேரினவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ  அதே போல இன்று பேரினவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய  முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்புக்களை காட்டத் தொடங்கி விட்டது.

இங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை  பேரினவாதிகள்  என்று அழைப்பது எதனால் என்றால்  தமிழ் சமூகமும்  சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய்  தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின்  முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது  தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும்  மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை  உண்மையான  சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய  மகிந்தாவிற்கும்  பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...

அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....

இதனால் அவர் எதிரணிக்கு  தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான  விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக   இலங்கை வாழ் தமிழர்களிற்கு   பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால்  அவர்களும் இந்த நாட்டில்  சகல உரிமைகளோடும் வாழும்  சுய நிர்ணய முறையிலான  தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு  இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை  அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த  பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்  1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.

இங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும்... தமிழர்களிடேயே  இனவாதம் இருக்கின்றது என்றில்லை முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு  இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்படவில்லை..பிறகு அவர்களிற்குள்ளேயே  கிறீஸ்தவர்கள்  இந்துக்கள் என்று மோதிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால்  அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள்  தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான  சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடேயும் இல்லை.

சரி பலகாலமாக வளர்க்கப்பட்ட இனவாதத்தை விட்டு  இப்பொழுதுள்ள  நடை முறைக்கு வருவம்.யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக்கான  பெண்போராளிகளின்  நிலை  மிக மோசமாக இருக்கிறது. பாவம் அவர்கள்.புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய அதே சமூகத்தால்  அதே உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை  முன்னை நாள் போராளிகள் என்று தூக்கி கொண்டாடச்சொல்லவில்லை  சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை  தமிழ் சமூகம்....இப்போ அண்மைக்காலத்திலும்  அல்ஜசீரா  தொலைக்காட்சியினர் முன்னைநாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித்திருந்தார்கள்.

 சில நேரங்களில் நீங்களும் பாத்திருக்கலாம்.. எனக்கு பார்க்கக்கிடைத்தது. அதை பார்த்தபோது அவர்கள்  ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால்  இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக  இருந்தவள் இரவு பகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள் யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கி அடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது ஆனால் இப்பொழுது  இரவு ஏழுமணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை  அதற்கு காரணம் எனக்கு பயம் அல்ல என்னை சுற்றியுள்ள சமுகம்தான்  இரவு வெளியில் போனாலே   இவள் இந்த நேரம் எங்கை போறாள்???..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ??....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில்  பப்பாளிப்பழம்  மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும்  ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய்  தாவிப் பாய்ந்து  கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே  எனக்கு பயமாக இருக்கின்றது .. .........இவள் என்ன  ஆம்பிளையா  பொம்பிளையா???? என்கிறது சுற்ற உள்ள சமூகம்.

ஆகவே இங்கு   பெரும்பான்மை  அரசிடம்  இருந்து சிறுபான்மை இனங்களிற்கான  நிம்மதியான சுதந்திரமான  வாழ்க்கையை  பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லமல்  எங்கள் சமுகத்திடம் இருந்தும் இந்த முன்னை நாள் போராளிகள் குறிப்பாக பெண்போராளிகளிற்கும் நிதந்தரமானதும் சுதந்திரமாதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம் பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம்....  அப்பாடா  சாத்திரி இப்பவாவதே ஒருமாதிரி தலைப்புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்....

யோசிக்கும்போது  நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல்  பொத்திக்கொண்டும் போக  முடியாது...அடுத்ததாக  கூறியது போல  இந்த யாகம் வளக்கிறது  ..ஜெனீவா நொக்கி நடப்பது ..காவடி எடுப்பது... இதனை பலர் செய்துகொண்டிருப்பதால். அவர்களே  அதனை தொடர்ந்து செய்யட்டும்.  ஆனால்  புலிகளின் வெற்றிகளின் போது  விசிலடித்து  மகிழ்ந்து  யுத்தத்திற்காக  பணம் கொடுத்தவர்கள்.  புலிகள்  சரியில்லை  அவர்களிடம்  ஜன நாயம் இல்லை  அவர்களின் போராட்டம் சரியில்லை.என்றவர்கள்..  வெளி நாட்டிற்கு வந்தாச்சு  அங்கை  இருப்பவர்கள் எக்கேடு கெட்டால்  என்ன  எங்களிற்கு புலியும் வேண்டாம் அரசாங்கமும் வேண்டாம்  என்று  ஒதுங்கி இருந்தவர்கள்  என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு  காரணம்..  புலம்பெயர் ந்து வாழும் அனைத்து  தமிழர்களும் ஏதோ வழியில்  காரணம்...இதனை யாரும் தட்டிக் கழிக்ககவோ மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள்.நாங்கள் சார்ந்த  சங்கங்கள்....சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததமிழன் இன்று புலம் பெயர் தேசமெங்கும் ஊர்சங்கம்..பழைய மாணவர் சங்கம். வர்த்தகர்  சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள்  வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு  தேவையில்லாத விடயம்

. அதைவிட  எங்கள்  பிரதமர்  திரு  உருத்திர குமார் இருக்காக.....

ஆம். நாடு கடந்த தமிழீழ அரசு ..உலகத்தமிழர் பேரவை. பிரித்தானியத் தமிழர் பேரவை. எல்லா நாடுகளிலும் இருக்கும்  மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடுகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள்.  அதை விட மிக   மிக முக்கியமாக  இலங்கைத் தீவில்  தமிழர் தரப்பையும். தமிழ் பேசும் முஸ்லீம்  தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  அமைப்புக்கள்.  காணரம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து  கத்தினாலும்  சர்வதேசம் என்பது  அங்கிருந்து வரும் குரலிற்கே  அதிகளவு   செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனெனன்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல..எனவே எல்லாருமே ஒரு பொது நோக்கத்தோடு இணைந்து  ஒவ்வொரு அமைப்பில்  இருந்தும் ஒரு பிரதிநிதியை  தேர்வு செய்து  ஒரு குழுவை  உருவாக்க வேண்டும்.  அந்தக் குழு  பேச்சு வா்த்தையில் ஈடுபடவேண்டும்.......

யாரோடு?????....பேச்சு வார்த்தையில் ஈடபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை  யாரோடை பேசிறதெண்டு சொல்லவேயில்லையே......??. இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்..........

அப்பவே நினச்சம் ஜயா.சாத்திரி இதைத்தான் சொல்லுவானெண்டு...பெரிய தொகையா வாங்கியிருப்பானோ??? இலங்கை புலனாய்வுத்துறை  அனுப்பியிருக்குமோ??? இணக்க அரசியல்  செய்யச்சொல்லுறானோ????இப்படித்தான்  பலர் நினைக்க முதல்  எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.இதனை பேச்சுவார்த்தை என்பதை விட  ஒரு பேரம் பேசுதல். நிகோசியேசன்.இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால்.எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ. அமெரிக்காவோ..ஜ.நா.சபையோ. இந்தியாவோ..வந்து வாங்கித் தருவார்கள் என்றும். ஒவ்வொரு ஆண்டும் ஜ.நா  கூடும்போது  இலங்கையரசிற்கு  எதிராக  தீர்மானம் கொண்டு வந்து  மகிந்தா அரசை கலைத்து போர்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தாவையும் கோத்தபாயாவையும். கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. ஏனென்றால்  மக்காளால் தெரிவு செய்யப் பட்ட  ஒரு நாட்டின் அதிபரை அது எந்த மக்கள்  என்றெல்லாம்  கிடையாது   அவர் பதவில் இருக்கும் போது  விசாரணையே செய்யமுடியாது  இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம்.  அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது.அப்படியிருக்கும்போது  பதவியில் இருக்கும் மகிந்தாவை  அதுவும் போர் குற்றவிசாரநை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது  நடக்கவே நடக்காது.

அவரது பதவி பறி போனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம் ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று சொன்னேன்.  அடுத்ததாக    எம்மவர்களால்  நடாத்தப்படும் போர்குற்ற விசாரணை  போராட்டங்களில் பொன்சேகா  பெயர் இல்லை ஏனெண்டால் அவர் இப்ப நம்மாள்...  

இந்தியா எங்கள் பிரச்சனையை  தீர்க்கவேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம் ஆனாலும் அதன்  வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் எதனையும்  உடனடியாக நாங்கள் எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் கொகை வகுப்பு என்பதே  இந்திய நலன் என்பதற்குமப்பால்  இந்திய கொள்கை வகுப்பளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இந்தியாவின் கொள்கைவகுப்பாகின்றது  இந்த கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில்  எடுத்தில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு.இந்தியா தனது நலன்களிற்காக  இலங்கைத் தீவில் பிரச்சனைகளை உருவாக்குமே தவிர தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்னபதும்  எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது.அது மட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே   இலங்கையரசிற்கு அழுத்தத்தை கொடுத்து  பிரச்னையை தீர்த்திருக்கலாம்.. ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது  தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை..

இன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்  எம்மவர் எல்லாரது கவனத்தையும் திருப்பியிருக்கின்றது ..நல்ல விடயம். ..தமிழர்கள்  என்கிற  ரீதியில் அதற்கான தார்மீக கடைமை அவர்களிற்கும் உண்டு.ஆனால் அது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதனையும் இது கொண்டு வந்துவிடாது . ஏன்  ??சட்ட மன்றத்தில் முதவமைச்சர் ஜெயலலிதாவே  தீர்மானம் போட்டிருக்கிறாரே  என்று சொல்லலாம்.  அது கூட அடுத்த லோக்சபா  தேர்தலிற்காக  ஈழத் தமிழர் விவகாரத்தை   மீண்டும் தன் கையில் எடுத்து டெசோ  மூலமாக  தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை  மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக  கருணாநிதி போட்ட திட்டத்தை  முறியடிக்க  சாதுரியமாக  மாணவர் போராட்டங்களிற்கு ஆதரவளித்து  சட்ட மன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த  உணர்சியலையின் ஆதரவுகள் அனைத்தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி  அரசியல் சாதுரியத்தை காட்டி விட்டிருக்கிறார். ஜெயலலிதா..இது அவர்களது  அரசியல் என்றாலும்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது  எமங்கு வந்தவரை இலாம்  என்பதோடு இதை வைத்துக்கொண்டு  நாங்கள் அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்தப் போகிறோம்  என்தில் தான் மிகுதி தங்கியிருக்கின்றது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை..

அதே நேரம் இந்தியா என்பது 28 மானிலங்களையும்.  ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு  28 மானிலத்தில் ஒரேயொரு மானிலம்  அந்த மானில அரசின் எந்த பிரதிநிதியும்  மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை  இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம்  மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழ் நாடு அரசு   தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறைவேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே  ஆயிரக்கணக்கில்  இருக்கின்றது.  அதை விட  மத்திய  அரசானது  தமிழ்நாட்டையும் தமிழர்களையும்  எந்தளவு  கவனத்தில்  எடுக்கின்றது  என்பதற்கு அண்மைய  உதாரணம். இரண்டு  மலையாள  மீனவர்களை இந்திய கடல் எல்லையில்   இத்தாலிய  கப்பல் சிப்பந்திகள்  சுட்டு கொன்றதும்  இந்தியா  எடுத்த  நடவடிக்கைளும்.  அதே நேரம்  இன்றுவரை  சுமார் நானூறு தமிழ்நாட்டு தமிழர்கள்  இலங்கை இராணுவத்தால்  கொல்லப்பட்டு  பலர் இலங்கை சிறையில் வாடினாலும்  அதற்காக  ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல்   இலங்கை நட்பு நாடு என்று    அதனை தாங்கி பிடிக்கும்  இந்தியாவை  நாம் எவ்வளவு  தூரம் நம்பலாம். இது கேள்விதான்.

வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது அண்ணன் தம்பி பிரச்சனை நாங்கள் அடித்து கொள்ளுவோம்  கட்டியும் பிடிப்போம் எனவே   இதனை எங்களிற்குள்  தீர்த்துக்கொள்கிறோம் என்று இந்தியாவிற்கு  பகிரங்கமாக அறிவித்திருந்தார்  அன்றைய இலங்கை ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசா.இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன் படுத்தாமல்  .அனுப்பியாச்சு..

 அடுத்ததாக  சர்வதேசம். வருடா வருடம் ஜ.நா சபையில்  தீர்மானம் கொண்டு வரும். இந்த வருடமும் கொண்டு வந்தது. அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு  போவார்கள்.  தீர்மானத்திற்கு  ஆதரவாக  25 நாடுகள் ..எதிராக   18 நாடுகள்  வாக்களித்தன..  10 நாடுகள்  வாக்களிப்பில்  கலந்து கொள்ளவில்லையென்று செய்திகளிள் வெளியாகும்.  ஆனால் தீர்மானம் என்னவென்றால்  இலங்கையில்  நடந்து முடிந்த   மேசமான  வன்முறைகளை   இலங்கையரசு விசாரிக்கவேண்டும்.  அதவது  இலங்கையில் நடந்தது படுகொலைகள் என்றோ  இனவழிப்பு என்றோ அங்கு  குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அதை அவர்களே  விசாரிக்கவேண்டுமாம். களவு எப்படி நடந்தது  கள்ளனே  விசாரிக்க வேண்டுமாம். தீர்மானம் நல்லாயில்லையா???? ஆகவே சர்வதேசமும்  தமிழரிற்கானதொரு தீர்விற்காக  இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக் போவதில்லை. அவர்களின அழுத்தங்கள் எல்லாம் இலங்கையரசை பணிய வைத்து தங்கள் சார்புநிலை  எடுக் வைத்து  தங்கள் பொருளாராதார  நலன்களை  பேணுவது மட்டுமே.

ஆகவேதான்  சாட்சிக் காரனை விட சண்டைக்காரனேடு  பேசுலாம் என்கிறேன். தனித் தமிழீழத்திற்கான  வாக்கொடுப்பு வேண்டும் என்று  தமிழகத்திலும் போராட்டங்கள்  சூடு பிடித்திருக்கிற நேரத்திலை   சில நேரம்  ஜ. நா சபையே  வாக்கெடுப்பு நடத்தி  தமிழீழத்தை வாங்கி  தந்தாலும் தரலாம்  இந்த நேரம் போய்  இந்த நேரத்திலை சாத்திரி  வேணுமெண்டே குளப்புறானே........

சரி  ஜ. நா சபையே நாளைக்கு  இந்த தீர்மானத்தை நிறைவேற்றி  இலங்கையில் வாக்கெடுப்பு  நடத்தி அதற்கு வாக்குகளும் விழுந்து விட்டது  என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போ தமிழீழத்தை கொண்டுபோய் யார்  கையில் கொடுப்பது.  சம்பந்தர் தலைமையிலால தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமா??? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும்  பதிவு செய்யப் படாத கட்சியாக  உள்ளுக்குள் தமிழரசு  கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு  உடைனேயே   சைக்கிள்  சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது  டக்லசிடமா????டக்லஸ் ஒட்டுக்குழு  துரோகி என்பார்கள்.  அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான்.  அதனாலை அங்கை விடுவம்  தமிழீழத்தை   இங்கு  நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமா??   முடியாதே   உருத்திரா கே.பின்  ஆள் என்கிறார்கள். சரி இந்த  ஜி. ரி. எவ்...  பி. ரி.. எவ்...   இவங்களும்  இடைக்கிடை  ஏதாவது  கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான்  இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது...  சரி அப்ப  வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு  மாவீரர் தினத்தை  இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே  அவங்களிட்டை  கொண்டு போய் குடுக்கலாமா??.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு  முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும்.  என்ன தான் செய்யலாம்  தமிழீழத்தின்  அரசாங்கத்தை நிருவகிக்க  தமிழீழத்  தமிழர்கள்  சரியான   தகுதியானவர்கள் யாருமே இல்லையே  என்ன செய்யலாம்  ஒரு மாறுதலுக்காக  கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா??? வை.கோ....நெடுமாறன்.... இவர்கள் தமிழ் நாட்டில் இருந்து  தமிழீழத்தை நிருவாகிக்கலாம்.  எப்பிடி ஜடியா??

ஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை ..தனி நாட்டை..  சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி ..சுயநலம் இன்றி  தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த  அக்கறைகளோடு  வழி நடாத்தக் கூடிய   ஒட்டு மொத்த தமிழர்களின்  நம்பிக்கைகளையும் பெற்ற  பலமானதொரு  அமைப்பு எம்மிடம் உள்ளதா??????........இல்லை.....அது மட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை. ... பக்கத்து நாட்டுக் காரனையும் வெளி நாட்டுக்காரர்களையும் நம்பி காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் போகின்றோமா??

அல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு  முதலில்  அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும்.  அவர்கள் நிலங்கள்  இருக்கவேண்டும் .  எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும்.  எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர் .. எமது உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்தும்  இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை.. பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு  எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும்.  முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும். பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப் படுத்தப் படவேண்டும்.  அதற்கு  நான்  முன்னர் கூறியது போல் அனைத்து  தமிழர் தரப்பையும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு  குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை  தொடங்கவேண்டும்.  அந்த பேச்சு வார்த்தைகள்  ஊடாக  சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு  அவர்களிற்கு  காவல்த்துறை  மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு  நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..  அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை  தூக்கி நிறுத்த முடியும்.  அவர்கள் அரசியல் ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள்  எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால்  அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள்  தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.

அண்ணெய் சாத்திரி அண்ணெய் உண்மையைச் சொல்லுங்கோ அண்ணெய் இதில் இருக்கின்ற உரையை அப்படியே நீங்கள் பேசீனீங்களே அண்ணெய்? பேச விட்டவங்களேய் உங்கள :) அதெப்படி அண்ணெய் உங்களால் இப்படி பச்சை பொய் சொல்ல முடியுது :lol: ஒருதரும் வந்து உண்மையை சொல்ல மாட்டார்கள் என்ட தைரியம் தானே அண்ணெய் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதோபாருட.. இது.. கீரன் சபையில் சிவன் விளைவித்த கலகமாமில்ல...! திருவிளையாடல்.. புராணமாமில்ல..! :lol::D

வெட்டிக்கு இருக்கிறதுகள்.. தங்களைத் தாங்களே இலக்கியவாதின்னு சொல்லிக்க வேலை இல்லா இடைவெளியில்.. செய்யுறதெல்லாம்.. எல்லாம் கீரன் சபை கலகமாமில்ல..! தமிழன் நிலத்தை மட்டுமல்ல.. சமகால.. கடந்த கால.. இலக்கியத்தின் நயம்..விழுமியம்.. மாண்புகளையும் இழந்து விட்டான்..! எதுவும்.. ஒட்டுக்குழுக்களின் கைக்குப் போனால் இதுதான் ஆகும்..! நாலு விஜயிட குத்துப்பாட்டு போட்டிருந்தா.. அது இதைவிட சிறந்த இலக்கியமாக இருந்திருக்கும்.  :)

கீரன் சபையில் சிவன் சொல்ல வந்திட்டார்.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு..! :D

கீரன் ராஜேஸக்காவின்ட பான் போல :lol:  அக்காவை பத்தி தப்பாய் எழுதினதிற்கு சாத்திரி மன்னிப்பு கேட்கோனும் என்டு உணர்ச்சி வசப்பட்டு பேசினார் :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து  தமிழர் தரப்பையும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு  குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை  தொடங்கவேண்டும்.  அந்த பேச்சு வார்த்தைகள்  ஊடாக  சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு  அவர்களிற்கு  காவல்த்துறை  மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு  நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..  அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை  தூக்கி நிறுத்த முடியும்.  அவர்கள் அரசியல் ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள்  எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால்  அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள்  தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.

நாலு பேருக்கே எட்டு முரண்பட்ட அபிப்பிராயம் இருக்கும். அதோட சனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்கின்ற குழு அரசியல் செய்கின்றவர்கள் நம்மவர்கள். இதுக்குள்ள எல்லா வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களையும் கொண்டு குழு அமைத்து அரசியல் உரிமைகளை வெல்லலாம் என்தை எழுதி வாசிக்கும்போதே சாத்திரி நம்பியிருப்பாரா தெரியாது.

வெவ்வேறு அமைப்புக்களாக இருந்தாலும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு முதலில் ஒரு தெளிவான கொள்கைவேண்டும். கொள்கையை கொள்ளை என்று நினைக்கின்றவர்கள்தானே இப்ப அதிகம்!!

கிருபன் உண்மையிலேயே  இலங்கையில்  சிறு பான்மையினரிற்கான உரிமைகள் உறுதிப் படுத்தபட வேண்டுமானால்   பல அமைப்புக்களிமிருந்தும் இப்படியானதொரு  குழு அமைத்து  செயற்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.  அதற்கு முயற்றி செய்யா விட்டால் பேசாமல் பொத்திக் கொண்டு இருப்பது நல்லது

கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் குறைந்த பட்சத் தீர்வு பற்றிய தெளிவு பல அமைப்புக்களை ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்ய உதவலாம். இதைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று போர் முடிந்த சூட்டோடு நடந்ததாக நினைவு. ஆனால் குறைந்த பட்சத் தீர்வு என்ன என்பது பற்றியே ஒருமித்த கருத்துக்கு வரமுடியாதவர்களாக தமிழர் அமைப்புக்கள் இருப்பதால் ஒரு அங்குல முன்னேற்றமும் இல்லை.

அத்தோடு பொத்திக் கொண்டிருப்பதால் வரும் விளைவுகள் என்ன என்பதையும் எல்லோரும் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேனன்

40th-Ilakkiyach-Chanthippu-London-6th-7t

40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர். இதற்கான எதிர்ப்புடன் கலந்துகொண்ட அரசு சார் இலக்கியவாதிகள் அடுத்த சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக பறித்துச் சென்றுள்ளனர்.

இவர்களின் நோக்கத்தையும் அவர்தம் அரசியற் பின்னணியையும் அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஈழம் இன்றிருக்கும் நிலையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கிய‌ம் என்று பேசுவது தவறு. சுயநலன்களுக்கும் அப்பாலான ஒடுக்கப்பட்டோர் அரசியல் சார்ந்து சிந்தித்து எத்தகைய அரசியலைப் பலப்படுத்துகிறோம், எதைப் பலவீனப்படுத்துகிறோம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் ‘புலம்பெயர் இலக்கியச் சந்திப்புக்கு’ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். நடத்துவோரின் அரசியலைக் கண்டிக்க வேண்டும்.

1.
ஈழத்தில் இலக்கியக் கூட்டம் போட அங்கிருக்கும் இலக்கியவாதிகளின் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது. எல்லாப் பிரச்சினைகளுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் அங்கு பத்திரிகைகள் வருகின்றன; கூட்டங்கள் நடக்கிறது. பல காத்திரமான எழுத்துக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

2.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குச் சென்று கூட்டம் போடலாம் என்பதையும் மறுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தில் அதை நடத்துபவர்கள் தாம் ‘அதிகாரத்துக்கு எதிர்’, ‘அரசுக்கு கண்டணம்’ என்றெல்லாம் கூடப் பேசலாம். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கியிருந்ததை அறிவோம். பல்வேறு எழுத்தாளர்கள் தமது கடும் எதிர்ப்பைப் பதிந்துதான் வருகிறார்கள்.

3.
எதிர்ப்பரசியலுக்குள் இருந்து முளைத்த வரலாறு இலக்கியச் சந்திப்புக்குண்டு. கடும் எதிர்ப்பிலக்கியம் செய்யும் கலைஞர்களின் தளமாக இருக்கவேண்டும் – பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளான கலைஞர்கள் ஒன்றுகூடும் இடமாக இருக்க வேண்டும் – ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் கலையையும் பேசும் தளமாக இருக்க வேண்டும் – கருத்துச் சுதந்திரத்தைப் பலப்படுத்தவேண்டும் ‍ போன்று பல்வேறு அடிப்படைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, பல்வேறு கலைஞர்கள் இச்சந்திப்புடன் நீண்டகால உறவு கொண்டவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களுள் சுசீந்திரன், லட்சுமி, ரஞ்சி, உமா போன்றவர்கள் லண்டன் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்.

4.

இருப்பினும் பல ஆண்டுகளாக இலக்கியச் சந்திப்பின்மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல கலைஞர்கள் சந்திப்பில் நின்று விலகி நிற்க இது காரணமாக இருந்தது. கிழக்கின் உதயம் என்ற பெயரில் கருணா, பிள்ளையான் முதலான அதிகார சக்திகளின் பிரச்சாரக்கூடமாக இலக்கியச் சந்திப்பை மாற்ற முனைந்தனர் சிலர். டக்ள‌ஸ் தேவானந்தா, சிறிடெலோ என்று அரச சார்புக்குழுக்களின் ஆதரவாளர்கள் அல்லது அங்கத்தவர்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. ‘மாற்று’ அரசியல் என்ற போர்வையில் கொலைகார அரசியலுக்கு புலத்தில் தளம் தேடியோர் இலக்கியச் சந்திப்பை நோக்கித் திரும்பினர் என்று கூறுவது மிகையில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சந்திப்போடு சம்மந்தப்பட்டோர் பலர் இந்த நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொண்டதை நான் உட்பட பலர் கண்டித்திருக்கிறோம். அவர்களுக்கு கருத்து சொல்ல இன்று பல தளங்கள் உண்டு. இலக்கியச் சந்திப்பிலும் அவர்கள் கலந்து கொள்ளலாம்; கருத்துச் சொல்லலாம். ஆனால் அவர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்கு தளம் தேடுவதற்கு துணை போகக்கூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த விமர்சனங்களைச் செய்திருந்தோம். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளர்வது தவிர்க்கப்படவில்லை. அராஜக அரசு ஆதரவாளர்கள் தமது அரசியல் நலன்களுக்காக இலக்கியச் சந்திப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டவட்டமான நகர்தலைச் செய்தது இன்று பல கலைஞர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

5.

இலங்கை கலைஞர்கள் கேட்டா அங்கு சந்திப்பு நிகழ்கிறது? இல்லை.

புலத்தில் நடந்துவரும் இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்குள் இருந்து எழவில்லை. அது பிரான்ஸ் கலைஞர்களிடம் இருந்துதான் எழுந்தது. அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்துவோம் என்பது பிரான்ஸ் வாழ் தேவதாசிடம் இருந்து வந்த கோரிக்கை. ‘அவங்கள் அங்க பொன்னாடை போர்த்தித் திரியிறாங்கள். அவங்களுக்கொருக்கா நடத்திக் காட்டோனும்’ என்றும் பேசியதாகத் தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் எழுத்தாளர்களைத் தாம் தொடர்பு கொண்டு அங்கு இச்சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்ததை தேவதாசும் அசுராவும் லண்டன் சந்திப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

6.

லண்டன் சந்திப்பின்மேல் அவதூறு

‘இலங்கை இலக்கியச் சந்திப்பின் ஊடக அறிக்கை’ என்ற தலையங்கத்தோடு ஒரு அறிக்கை மார்ச் 28ல் தேவதாசின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அது 40வது இலக்கியச் சந்திப்பின்மேல் பின்வரும் தாக்குதல்களைச் செய்தது.

‘மூன்றாவதாக ஒரு பொது அரங்கை நிர்மானித்து அதன் உச்சியில் பௌசரும் கிருஸ்ண‌ராஜாவும் அமர்ந்திருந்து தீர்ப்பு வழங்க எத்தனிக்கும் அவல நாடகத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என அறிவித்துக்கொண்டது அவ்வறிக்கை.

‘லண்டன் இலக்கியச் சந்திப்பின் செயல் வெறுக்கத்தக்கது.’ என்று சாடியது அறிக்கை.

தாம் இலங்கையில் சந்திப்பு நடத்துவது மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து யூலையில் சந்திப்பை நடத்திக் காட்டுவோம் என்றும் அவ்வாறான ‘பிளவு’ ஏற்பட்டால் அதற்கும் நீங்களே பொறுப்பு என்றும் மிரட்டியிருந்தது. இலக்கியச் சந்திப்பை உடைத்தாவது தாம் இதைச் சாதிப்போம் என்ற அவர்களின் அடாவடித்தனத்தையும் அவர்தம் மொழியில் இருக்கும் அதிகாரத்தையும் இவ்வறிக்கையை படிப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தவிர இந்த அறிக்கையை ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வி எமக்குண்டு. ஆக இவ்வறிக்கையின் தலையங்கத்தைப் பொய்ப்பாவனையாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இது தவிர இணையத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மேல் கேவலமான அவதூறுகள் தூவிவிடப்பட்டுக் கொண்டிருந்தது.

7.

லண்டனில் நடந்தது என்ன?

சுசீந்திரன், ரஞ்சி. லட்சுமி, ராஜா, பௌசர் நான் உட்பட பலர் அடுத்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். தேவதாஸ் முதற்கொண்டு பலர் இந்தச் சந்திப்பை புறக்கணிக்க நின்றனர். அவர்களை வரவழைத்தது தான்தான் என்ற ராகவன் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என்றார். நாடுகடந்த தமிழீழம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி சனநாயகம் பேசுவதெல்லாம் விசர்க்கதை என்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துக் கைதூக்கினார்கள். நாங்கள்தான் பெரும்பான்மை என்று ஒருவர் சத்தமாகச் சொல்லிக்கொண்டார். இந்த விசர்த்தனமான சனநாயகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு சந்திப்புக்குழு கூடி முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்த சந்திப்பை இவர்கள் நடத்தலாம் என்று முடிவை பௌசர் அறிவித்தார். அடுத்த சந்திப்பை எங்கு நடத்துவது என்பதையும் இங்கு தீர்மானிக்க வேண்டும் என்றார். ஜேர்மனியில் நடத்துங்கள் என்று சொல்லி கொதிப்பில் நின்ற சுசீந்திரனை வளைச்சுப்போடும் முயற்சி நிகழ்ந்தது. நீங்கள் புலமபெயர் இலக்கியச் சந்திப்பை இச்சமயத்தில் இலங்கைக்கு எடுத்துச் செல்வது சந்திப்பை உடைப்பதற்குச் சமன் என்று அவர்கள் முன்பு வைத்த மிரட்டலை அவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. முடிவை அறிவித்த போதும் ராஜா, பௌசர் உட்பட பலரும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘வந்திட்டான் உடைக்கிறதுக்கு’ என்று என்மேலும் அனாவசியமாக தாக்குதல் நடத்தினர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வரலாற்றில் பதிய வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் உறுதியாக இருந்தது தெரிந்தது. சந்திப்பு அரசுசார் கலைஞர்கள் – அரச எதிர்ப்புக் கலைஞர்கள் என்று பிரிந்தது என்று சொல்வது மிகையில்லை.

ஏற்கனவே அரசுசார் ‘கலைஞர்கள்’ அள்ளி எறிந்து கொண்டிருந்த பொய்கள், புரட்டுகள், அடாவடிக் குற்றச் சாட்டுகள் என்பவற்றை பலரும் வரிசைப்படுத்தியிருந்தனர். கேவலமாக அரச எதிர்ப்பாளர்களை அரசுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தது தொடங்கி காசுவாங்குவது ஈறாக கேவலமான முறையில்தான் இந்த அரச ஆதரவாளர்கள் தொடர்ந்து இயங்கி வந்தனர் என்பதை யமுனா ராஜேந்திரன், பௌசர், ரஞ்சி ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்காக தேவதாஸ் ‘பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று பாலா பலதடவை வற்புறுத்தி அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இவர்கள் எல்லாரும் வெள்ளாள சாதி அரசியல் செய்பவர்கள் என்ற குண்டைத் தூக்கி எறிந்தார் கீரன். சாதி வெறி இப்படியும் கிளம்பும் என்ற உய்தறிவின்றி ரஞ்சி கலங்கிப்போய் நின்றதையும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. தலித் என்ற சொல்லை எப்ப கீரன் கண்டுபிடித்தவர் என்று சிலர் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டனர்.

அரச எதிர்ப்புக் கலைஞர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வாரிக்கொட்டப்பட்டது. உரத்து நடந்த உரையாடலில் ஒவ்வொருவரையும் சுற்றி நின்று விதண்டாவாதத்தை ஏற்கும் படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. படங்கள் எடுக்கப்பட்டது. அதிகாரங்களுக்கு எதிராக என்று தொடங்கி இலக்கிய சந்திப்பு தளம் எவ்வாறு அதிகாரங்கள் கொக்கரிக்கும் தளமாக சிலரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர்கள் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு சென்றார்கள். தனி ஒரு மனிதன் இருக்கும் வரையும் உங்களின் வெற்றி வெற்றியல்ல என்று மற்றவர்கள் துக்கத்துடன் கலைந்தார்கள்.

8.

யாரிந்த அரச ஆதரவாளர்கள்?

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள். மகிந்த அரசை முற்றாக எதிர்ப்பது தவறு என்று பகிரங்கமாக பேசி வருபவர்கள். இவர்களுக்காவது எதிர்ப்பரசியல் செய்த பழைய வரலாறுண்டு. புலி எதிர்ப்பு தவிர வேறு அரசியல் தெரியாதவர் ராகவன். புலி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே அரசியலாக வைத்து இயங்கும் ராகவன், நிர்மலா போன்றவர்கள் அண்மைக்காலமாகத்தான் சந்திப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். தம்மை எதிர்ப்போரை கேவ‌லமான முறையில் மட்டம் தட்டி மற்றையவர்களையும் அவர்களுக்கு எதிராக திருப்பி உடைக்கும் வேலிச் சண்டை அரசியல்தான் இவர்கள் அரசியல். இவனுக்கென்ன தெரியும் என்று தன்னை நிர்மலா மட்டம் தட்டியதை ராஜா பதிவு செய்திருந்தார்.

இவர்கள் புலி எதிர்ப்பு என்ற ஒன்றை முன்வைத்தே தமது முடிவுகளுக்கு தாவுகிறார்கள். வன்னி மவுஸ் என்ற குறுந்திரைப்படம் விம்பம் விருதுக்கு தகுதியானதாக இருந்தபோதும் அந்தப்படம் ‘புலிப்பொடியனால்’ எடுக்கப்பட்டது என்பதால் அதற்கு விருது கொடுக்கப்படக்கூடாது என்று ராகவன் வாதித்ததை ராஜா பதிவு செய்திருந்தார். இவர்களின் இந்த வக்கிர அரசியல் லண்டன் வாழ் கலைஞர்கள் பலருக்கும் தெரிந்ததே. புலிகள் கொல்லப்பட்டது பிரச்சினையில்லை; மக்கள் கொல்லப்பட்டதுதான் பிரச்சினை என்று கொலைக்கு வக்கால‌த்து வாங்குபவர் சோபாசக்தி. இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தலித்துகள், பெண்கள், குழந்தைகள் இலங்கை இராணுவத்தால் வேட்டையாடப்பட்டதை அது பிரச்சினையில்லை என்று ஒதுக்கிக்கொண்டு தலித் அரசியல் முத்திரை கேட்டு அலையும் கேவலத்தை என்ன சொல்வது? இந்த அரசுசார் தரப்பினரின் செயற்பாடுகள் நன்கு பதியப்பட்டிருக்கிறது.

9.

அதிகார‌த்தை எதிர்ப்பார்களா?

முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைக்கு எதிராகப் பேசிய தோழர் தான் லண்டனிற் பேசுவதைக்கூட அளந்துதான் பேசவேண்டியிருக்கு என்று பச்சையாக போட்டுடைத்திருந்தார். இதே கூட்டத்திற் கலந்துகொண்டிருந்த ஒருவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட கிராமங்களை முன்னேற்றுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடி வருபவர். அவர் அதிகாரங்களுக்கும் எதிராக இருக்கிறார் என்பதால் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது பற்றி நமக்கு பயம் உண்டாகியிருக்கிறது.

இவர்களின் அரசுசார் அரசியற் பின்னணியைத் தெரிந்த பின்பும் இவர்கள் அதிகார எதிர்ப்பு செய்யப் போகிறார்கள் என்று நம்ப முடியுமா? என்னே வேடிக்கை. யாழ்பாணச் சந்திப்பின்போது பொலிசை வைத்து கைதாகி வெளியாகும் ஸ்டண்டை உருவாக்கக்கூட உங்களுக்கு சக்தியிருக்கிறது. எமது அழுத்தம் காரனமாக டக்ள‌சுக்கு மாலைபோட்டு கூட்டம் தொடங்குவதை நீங்கள் தவிர்க்கலாம் – அதைக்காட்டி உங்கள் அவியலில் வேகச் சொல்லி எங்களைக் கேட்காதீர்கள்.

அரச வாகனங்களிற் பயணிக்கும் அவர்கள், கூட்டம் போட்டு அது அரச எதிர்ப்புக் காட்டும் என்கிறார்கள் – அதை நாம் நம்பவேண்டுமாம். எப்படியாவது மகிந்த அரசுக்கெதிரான எதிர்ப்புகளை மழுங்கடிப்பது என்பது இவர்கள் தலையாய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக இவர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் என்று எந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையையும் பாவித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தலித் மக்களின் பெயரில் நீங்கள் செய்யும் அநியாயத்தை நாம் முடிந்தளவு அம்பலப்படுத்துவோம். அதிகார சக்திகள் எத்தகைய முகமூடிகளைப் போட்டிருந்தாலும் அது கிழித்துக் காட்டப்படுவது வரலாற்றில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் கூட்டம் போடுவார்கள்; கூத்தடிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கும் சேர்த்துத்தான் நாம் போராடுகிறோம். ஆனால் நீங்கள் அதிகாரத்தை எதிர்க்கிறீர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கதைக்கிறீர்கள் என்ற பம்மாத்துகளுக்கு நாம் எடுபடமுடியாது.

10.

காந்தியக் காய்சல்

இந்த அரச ஆதரவாளர்களிற் பலர் காந்தியவாதிகளாகவும் தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள். அடிபட்டது போதும் இனி இணக்கமாக வாழவேண்டும் என்று காந்திய ஆலோசனை வழங்குகிறார்கள். இதில் பலர் சொந்த வீடு- குடும்பம் ‍வள‌ர்ந்து ‘நல்லாவரும்’ குழந்தை குட்டிகள் என்ற ‘நல்’ வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுக்கு இணக்கம் சாத்தியப்படலாம். நித்தம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தினமும் இராணுவத்தினரால் வன்பாலுறவுக்குள்ளாக்கப்படுபவர்களுக்கு இந்த இணக்கம் எப்படிச் சாத்தியம்? இவர்கள் புறவய காரணிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்று நாம் சுட்டிக் காட்டினால் காரசாரமாக இடதுசாரிய மறுப்பு – மார்க்சிய மறுப்பு வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டு வாதத்தை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களில் யாரும் இன்று வரைக்கும் தாம் சொல்லும் காந்தியம் என்ன என்றோ அல்லது தாம் தற்போதைய சமூக-அரசியல் நிலவரத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்றோ எதையும் எழுதியதில்லை என்பதையும் இங்கு பதியவேண்டும். ஏனென்றால் இது ஏதோ அவர்கள் தத்துவார்த்த முறையில் எடுத்த முடிவு என்ற பிழையான முடிவுக்கு நீங்கள் தாவி விடக்கூடாது. அவர்கள் தமது ஸ்டண்டுகளுக்காக அவ்வப்போது எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று இது.

11.

வளரும் குற்றச் சாட்டுகள்.

பானுபாரதி, மலர் பத்மநாதன் போன்றோர் சாஸ்திரி என்ற எழுத்தாளர் லண்டன் சந்திப்பில் கலந்துகொண்டமையைக் காரசாரமாக விமர்சித்து வருகிறார்கள். சாஸ்திரி பல மோசமான எழுத்துக்களை எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே. இன்று படுகொலை அரசின் ஆதரவு சக்திகளுடன் சேர்ந்து கூக்குரலிடுவதுதான் வேடிக்கையான விசயம். ‘புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது அதுதானா இது’ என்று சாதாரண‌ கேள்வியைக் கேட்ட யோ.கர்ணணுக்கும் அடி விழுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை இவர்கள் எவ்வாறு வகுத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்.

12.

இனி…

யாழ்ப்பாண‌ இலக்கியச் சந்திப்பு அரசியலுக்கு மறுப்பைக் கடுமையாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்பு இவர்கள் கைகளுக்குள் நிரந்தரமாக போய்விடக்கூடாது என்பதற்காக ஜேர்மனியில் அடுத்த சந்திப்பு நிகழவேண்டும் என்றும் கோரப்படுகிறது. எதிர்ப்பிலக்கியவாதிகள் ஓய்ந்து போய்விடப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில் அவர்கள் தமது இருத்தலைக்கூடி பதிவு செய்த வண்ணம்தான் இருப்பர்.

அரச ஆதரவாளர்களுக்கு பரந்த எதிர்ப்பை பதிவது இன்று அவசியம். தயவு செய்து தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

- சேனன்

http://inioru.com/?p=34563

Link to comment
Share on other sites

இலக்கியச் சந்திப்பு என்றால் கம்பர், சீத்தலைச் சாத்தனார் பற்றி யாராவது பேசினார்களா? அல்லது அங்கே வந்தவர்கள் தாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டார்களா? :unsure::D

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் ஒருக்கா எட்டிப்பார்க்க ஆசைதான் ,அதுக்கு ஏதாவது எழுதவேண்டுமே,எழுதினாலும் மற்றவன் வாசிக்க வேண்டுமே :D . சாத்திரி  அதற்குள் போனது பலருக்கு பொறுக்கமுடியல.இனி எட்டிக்கூட பார்க்க மாட்டம் என்று சொல்பவர்கள் தான் அடுத்த சந்திப்பு எப்ப என்று ஏங்குபவர்கள் .  

Link to comment
Share on other sites

நட்புடன் சாத்திரிக்கு....
உங்களின் பின்வரும் கூற்று தமிழ் மேலாதிக்க கூற்றிலிலையா....?
இவ்வாறுதானே சிங்களப் பேரினவாதமும் தமிழர்கைளப் பார்த்துக் கூறுகின்றது....
நன்றி

"கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது.

"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே சாத்திரி அண்ணே இந்த உலக தரம் மிக்க உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களோட எல்லாம் எப்ப நீங்க சேர்ந்திங்க?

Subject ah பாரு.....

இனங்களுக்கான ஐக்கியமும் அதன் தேவையுமாம்....

இலங்கை அரசும் தேசிய இனங்களுமாம்....

இலங்கை ஜனநாயகம் சமுக ஒருமை பாடம்....

அயோ முடியல்ல......

இதெல்லாம் பேச ஒரு ஹோட்டல் ஈஸ்வரா...... :D

:D:( :( :D

இந்த கூட்டத்திற்கு போறதெல்லாம் anti tigers ....

இவர்களின் ஒன்றுகூடலுக்கு சதிரி அண்ணாவும் போவது தான் கஷ்டமா இருக்கு....

அதுவும் சாதியத்திற்கு எதிரா போராடுறன் எண்டிட்டு சாதியத்தை தூண்டி விடுற டொமினிக் ஜீவாவுக்கு கவுரவிப்பாம்....செம காமடி கலாட்டா தான் போங்க .... :D

சாத்திரியாரை பேசக்கூடாது என்று சொல்லி போட்டாங்களாம் உண்மையா? மாற்று குழுவில் சாத்திரியாரை சேர்க்க அவரிடம் இன்னமும் நிறைய மாற்று கருத்துக்களை எதிர்பாக்கிறாங்கள் போல இருக்கு :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் சாத்திரிக்கு....

உங்களின் பின்வரும் கூற்று தமிழ் மேலாதிக்க கூற்றிலிலையா....?

இவ்வாறுதானே சிங்களப் பேரினவாதமும் தமிழர்கைளப் பார்த்துக் கூறுகின்றது....

நன்றி

"கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது.

"

யாழ்ப்பாணம் அல்ல. வடக்கு முஸ்லீம்களின் அன்றைய வெளியேற்றம் நியாயத்தின் அடிப்படையில் அவர்களுக்குப் பாதகம் அல்ல.

மூதூரிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரச ஆதரவோடு..முஸ்லீம் குழுக்கள் அவிழ்த்துவிட்ட வன்முறைகளின் பெருக்கத்தை தடுக்கவும்.. இரு இனங்களையும் மோதவிட்டு சிங்கள அரசு ஆதாயம் தேடுவதை தடுக்கவும் அந்த நடவடிக்கை பெரிதும் உதவி இருந்தது.

முஸ்லீம் கடும்போக்கு மதவாதிகளால் அது திரிக்கப்பட்டு புலிகள் மீதான மோசமான விமர்சனமாக அது முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் செய்ய வழி இன்றி இருந்த அஸ்ரப் போன்றவர்களிற்கு அதைப் பாசிசமாகக் காட்டி ஒரு கட்சி வளர்க்கும் நோக்கம் இருந்தது. அந்த அடிப்படையில் பிறந்ததே முஸ்லீம் காங்கிரஸ். இன்று கூட அது தமிழ் மக்களின் அரசியலோடு ஒட்டிப் போகும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. வெளிக்காட்டியதும் இல்லை. இதே தான் அன்று யாழ்ப்பாணத்திலும் இருந்தது.

முஸ்லீம்கள் தங்களை தனி ஒரு துருவமாக்கி வைத்துக் கொண்டு மற்றைய இனங்கள் நடுவே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழலாம் என்று தொடர்ந்து செயற்பட முடியாது. மற்றைய இனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதும்.. முஸ்லீம்கள் ஆதாயம் பெறக் கூடியதுமான ஒரு கூட்டு சமூக வாழ்விற்கு அவர்கள் தங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லீம்களுக்காக கூவும் ஒட்ழுக்குழுக்கள்.. அவர்களின் வரலாற்று நெடுகிலும் அவர்களின் அமைப்பில் முஸ்லீம்களுக்கு இடமளித்ததில்லை. புலிகள் முஸ்லீம்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை எந்த ஒரு அமைப்பும் அளித்தது கிடையாது. ஆனால் இன்று நன்றி கெட்டதனமாக புலிகளைச் சார்ந்த சிலரே.. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஒரு ஆராய்ந்தலும் அற்ற கட்டுரைகள் வரைந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் படைகள் காலத்தில்.. முஸ்லீம் இளைஞர்களை விரட்டி விரட்டி துன்புறுத்தியவர்கள் இன்று..  முஸ்லீம்களுக்காக.. யாழ்ப்பாண வெளியேற்றம் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள். இலக்கியம் என்ற போர்வையில் தங்களின் சுத்த பித்தலாட்டங்களை எல்லாம்.. மக்கள் மதிப்பற்ற அரசியலாக தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்றா..! இவற்றை ஏற்றுக் கொள்ள மக்கள் தயார் நிலை.

இந்த போலி இலக்கியவாதிகள் ஒன்றில் வெளிப்படையாக ஒட்டுக்குழு அரசியல் செய்ய வேண்டும் இன்றேல்.. தமிழ் கூறும் உலகின் நடைமுறையில் இருந்தும் விலகி தமக்கான ஒற்றையடிப் பாதையில் பயணிக்க வேண்டும். நிச்சயம் இவர்களை மக்கள் ஒருபோதும் இலக்கியவாதிகள் என்று கருதமாட்டார்கள் என்பதற்கு இவர்களின் நிகழ்வுகளிற்கு வரும் மக்களின் பங்களிப்பே சான்று..!

முஸ்லீம்களின் வடக்கு இடம்பெயர்வு இப்போ 23 வருடங்களாக பேசு பொருளாக உள்ளது. ஆனால் இதே முஸ்லீம்களால் தமிழ் மக்கள் 1986 இல் இருந்து தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்யப்படுவதோடு.. தமிழ் மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து எந்த முஸ்லீமும் பேசியதில்லை. ஒட்டுக்குழு இலக்கியவாதிகளும் அதனை முன்னிறுத்தியதில்லை. இன்று சிங்களத்தில் ஒரு பொதுபல சேனை தோன்றக் காரணம்.. முஸ்லீம்களின் கடும்போக்கு மதவாதம் என்றால் அது மிகையல்ல. இப்படியான நிலைப்பாடுகளை எவரும் எதிர்ப்பிலக்கியம் என்று படைப்பதில்லை. கல்முனையில் 250 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தக குடும்பங்களை சார்ந்த மக்கள்.. வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டபோது.. அதை மறைக்கத் தெரிந்த முஸ்லீம்கள் காத்தான்குடிப் படுகொலையை மட்டும் முன்னிறுத்துவது மட்டும் நீதியான செயலா..???!

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மூதூர்.. கிண்ணியா.. போன்ற இடங்கள் இன்று முழு  முஸ்லீம் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. அதே நிலை வடக்கு மன்னாரிலும்.. இன்று முல்லை முள்ளியவளையிலும் தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடாவடி முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் அணுகுமுறையோடு. இதை எவர் தட்டிக் கேட்கிறார்கள்..???!

கூட்டுச் சமூக முறை இருந்த காத்தான்குடி இன்று தனி முஸ்லீம் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. ஏன் ஒரு அரபுப் பிரதேசம் போல உள்ளது.

சனத்தொகை அடர்த்தி நிறைந்த வடக்கில் ஒரு பல்கலைக்கழகத்துள் மூவின மக்களும் உள்வாங்கப்படும் வேளை.. கிழக்கில்.. இரண்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் கூடிய அளவு முஸ்லீம்கள் உள்வாங்கப்படுகின்றனர். இந்த.. சமநிலைகளற்ற வளப் பாகுபாடு பற்றி எவர் பேசுகிறார்கள்..??! யாரும் இல்லை. கதைப்பது எல்லாம்.. யாழ்ப்பாண இடம்பெயர்வும்.. காத்தான்குடி படுகொலையும்..??!

இலக்கியம் என்பது.. காலக் கண்ணாடி. வெறுமனவே 1990 இல் நக்கூரமிட்டு நிற்பது அல்ல. அதுவும் புலிகளைச் சுற்றி மட்டும் பின்னப்படுவதல்ல இலக்கியம்..! மக்களை மக்களின் துயரை நெருக்கடியை வாழ்வியலை நோக்கி பின்னப்படுவதே இலக்கியம். முஸ்லீம்கள் பற்றிப் பேச இலக்கியம் உதவுது என்றால்.. அங்கே ஏன்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களால் பட்ட அவஸ்தைகளைப் பற்றிப் பேச அந்த இலக்கியங்கள் இடம் கொடுப்பதில்லை...??!

இதில் இருந்து தெரிவது என்ன..???!

சிலர் இனவாதத்திற்கும் உரிமைக் குரலுக்கும் இடையில் வித்தியாசம் அறியாமல்.. தம்மை இலக்கியவாதிகள் என்று சுயபிரகடனம் செய்து திரிகின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.. தமிழ் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக பாதுகாப்புக்காக இருப்பிற்காக முன்னிறுத்தும் குரலை இனவாதம் என்று கூறுவார்களாக இருந்தால்.. அந்த இலக்கியவாதிகள்.. சுத்தப் பாசிசவாதிகள் என்ற முடிவுக்கு மிக இலகுவாக வரலாம்..!

இலக்கியம் என்பது பக்கச்சார்பானதல்ல. காலத்தின்.. கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது 1990 க்குள் மட்டும் சுழலக் கூடாது. வெறுமனவே புலிகளை தமிழ் மக்களின் தவறுகளை மட்டும் பற்றிச் சுழலக் கூடாது. அந்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணிகள் குறித்தும் பேச வேண்டும். அவை.. பதியப்பட வேண்டும். மாற்றங்கள் எல்லா சமூகங்களிடமும் வர வேண்டும். தமிழ் மக்களிடம் மட்டும் அதனை எதிர்பார்க்கக் கூடாது.

புலிகள்.. இன்றிய இந்தக் கால இடைவெளியில்.. ஒட்டுக்குழுக்கள்.. தமது பிரச்சார வடிவமாக இலக்கியத்தை பயன்படுத்த நினைக்கிறார்களே தவிர... இவர்களின் இந்த நிகழ்வுகள் தமிழுக்கும்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆற்றிய காத்திரமான பங்களிப்பு என்பது பூச்சியமாகும்..! :icon_idea::)

உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120875

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.