Jump to content

'இத்தமிழச்சியால் எழுந்து நிற்க முடியாது என யார் சொன்னது?'


Recommended Posts

thusa+family.jpg2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது கடின முயற்சியால் தற்போது மிகவும் தேறி விட்டார். ஆம் வைத்தியர்களின் முடிவுக்கு மாறாக இவரால் இப்போது உபகரணத்தின் உதவியுடன் நிற்க முடிகின்றது. இது மருத்துவர்களை வியப்புக்குள்ளாக்கி விட்டது.

thusa.jpg

மேலும் இம்முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக இவரால் மெல்ல மெல்லத் தனது சொந்தக் கால்களால் நடக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இவர் துப்பாக்கிச் சூடு பட்ட முதல் மணிநேரங்களில் இரு முறை இதயத் துடிப்பு நின்று பரா மெடிக்ஸ் உதவியால் இயங்க வைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிருடன் இருப்பதே போதும் என்ற நிலை மாறி இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்குக் காரணமாக துஷாவின் தன்னம்பிக்கை மாத்திரமின்றி அவருக்கு ஊக்கமளித்து மிக ஆதரவாகக் கவனித்துக் கொண்ட பெற்றோரும் சகோதரர்களும் கூட அடங்குவர்.

இந்நிலையில் துஷா தனக்கு மிக விரைவில் குணமடைய வேண்டும் எனக் கடும் மனவுறுதிப்பாட்டுடன தினசரி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் ஏனைய சிறுவர் சிறுமியருக்கு இணையாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சிறுமி தனக்கு நடனமாடவும், நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடவும் உலகம் முழுதும் சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளதாகக் கூறியுள்ளாள். இச்சிறுமி மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட 21 வயதுடைய இளைஞனுக்கு கடந்த வருடம் 17 வருட சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

துஷாவின் மருத்துவ செலவுகள் இன்னமும் தொடர்வதால் அவருக்கு உதவி செய்ய விரும்புவோர் BACS payment மூலம் account number 53441075, sort code 20-44-22க்கு அனுப்பலாம்.

 

http://4tamilmedia.com/all/tips/12699-london-gang-shooting-victim

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறுமியே..! தன்னம்பிக்கையே வாழ்க்கை என்பதற்கு நீவிர் சாட்சி!

 

துஷாவின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்கூட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!!

Link to comment
Share on other sites

மிகவும் சந்தோசமான செய்தி! சோர்ந்து விடாமல் ஊக்கம் கொடுக்கும் பெற்றோர் மிகவும் மெச்சப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. துஷா விரைவில் நடக்கமுடியும் என்று நம்புகின்றேன்,.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியா இருக்கு, வைத்தியரால் இனி எழுந்து நடமாட முடியாது என்று சொன்ன சிறுமி தன் தன்னம்பிகையாலும் விடாமுயற்சியாலும் எழுந்து நிற்பதைப்போல் நாமும் நம்பிக்கை விடாமுயற்சியோடு எம் இலட்சியப் பயணத்தை தொடர்ந்தால் நிச்சயம் வெல்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தகவலுக்கு, இணையத்தில் சுட்டது: http://www.bbc.co.uk/news/uk-england-london-19717503 http://www.dailymail.co.uk/news/article-2120557/Thusha-Kamaleswaran-shooting-Why-gunmen-bars.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக‌ ம‌கிழ்ச்சியான‌ செய்தி. ம‌னித‌ உட‌ல், அதுவும் ந‌ர‌ம்புத் தொகுதி மிக‌வும் அதிச‌ய‌மான‌ செய‌ல் பாடு கொண்ட‌து. மூளையில் இர‌த்த‌ ஓட்ட‌ம் த‌டைப்பட்டு ஏற்ப‌டும் stroke நோயாளிக‌ளின் மூளையில், பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ந‌ர‌ம்புக் க‌ல‌ங்க‌ளின் தொழிலை, சுற்றியிருக்கும் ஆரோக்கிய‌மான‌ ந‌ர‌ம்புக் க‌ல‌ங்கள் எடுத்துக் கொண்டு ப‌குதிய‌ள‌வான‌ உட‌ல் அவ‌ய‌வ‌த் தொழிற்பாட்டை மீள‌ ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. துஷாவின் விட‌ய‌த்தில் முண்ணான் பாதிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. முண்ணானை ஆக்கும் ந‌ர‌ம்புக் க‌ல‌ நீட்சிக‌ள் (axons) மீள‌வும் புதுப்பிக்க‌ப் ப‌டும் ஒரு செய‌ல் பாடு ந‌டைபெறுவ‌து சாத்திய‌ம். அனேக‌மாக‌ இது உட‌ற்ப‌யிற்சியாலும் ம‌ன‌ உறுதியாலும் வேக‌ப் ப‌டுத்த‌க் கூடிய‌ ஒரு செய‌ல்பாடும் கூட‌. அது வ‌ரை ம‌ன‌ம் த‌ளராம‌ல் இருக்க‌ எல்லோரும் கை கொடுக்க‌ வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மகள் மேலும் குணமடைய எல்லாம் வல்ல அந்த இறைவனை நாடுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.முயற்ச்சிக்கு எப்பவும் பயன் உண்டு.இணைப்பிற்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சியான செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி எங்கட கோயிலுக்கு குடும்பமாக வருவினம்...இச் சிறுமிக்கு தன்னம்பிக்கையும்,தெய்வ பக்தியும் அதிகம்...துசாவையும்,அவவின் பெற்றோரையும் பாராட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷா முழுதும் குணமடைந்து நடைபோட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி, வாழ்த்துக்கள் துஷாவிற்க்கும் மனம் தளராமல் ஊக்குவித்த பெற்றோருக்கும், விரைவில் பூரண குணமாக பிரார்த்திக்கிறேன். பலர் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமே கதைப்பார்கள், இப்பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகிறது, என் வீட்டிலும் பிறந்தவுடன் மகளுக்கு கழுத்து எலும்பு நேராக இல்லை, பின் ஒரு வைத்தியரை வைத்து மசஜ் செய்துதான் நேராக வந்தது, ஆனா உறவினர்களின் தொல்லைகள் & கதைகள் தாங்க முடியாமல் பல நாட்கள் மனைவி அழுதிருக்கிறார்

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. விரைவில் நன்கு நடப்பதற்கு வாழ்த்துவதுடன் இறைவனை
வேண்டுகிறேன். சுட்ட மிருகத்திற்கு 17 வருட ஜெயில் காணாது. ஆக்கள்
இருக்கும் கடைக்குள்  உங்கள் மோட்டு வேலையைக் காட்டுவதா. பெற்றோர்
சகோதர்கள் தான் இந்தச் சிறுமியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான  தகவல் ,முயற்சி  பலனைத்தரும் .

பெற்றோருக்கு  வாழ்த்துக்கள் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. இன்னும் விரைந்து பூரண குணம் பெற்று தான் வைத்தியராகனும் என்று துஷா முன்னர் ஒரு தடவை பிபிசியில் சொன்னதற்கு இணங்க.. அவர் விருப்பம் போல ஆகி..  வாழ வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. துஷா விரைவில் நடக்கமுடியும் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷா முழுதும் குணமடைந்து நடைபோட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நம்பிக்கையுள்ள சிறுமி. கண்டிப்பாக ஒருநாள் நடப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.