Jump to content

பள்ளிக்கூடப் பேருந்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை  வீதி செல்கிறது. அப்பாதையில்  தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை.

இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச்
செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு.
எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தானே.

எமது ஊரில் பேருந்து வந்து நிற்கும்போது எல்லா இருக்கைகளும் நிறைந்துபோய்
இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்லும்போது ஒருநாள்க் கூட இருந்து
சென்றதில்லை. அனால் பள்ளி முடிந்து வரும் வேளை, ஆகச் சுண்டுக்குளிப்
பெண்களும் கொன்வென்ற் பெண்களும் குறைந்தளவானவர்களே இருப்பதனால் அதிக இருக்கைகள் வெற்றிடமாக இருக்கும். ஆனாலும் வேம்படியில் அதிகமானவர்கள் ஏறுவதால் முண்டியடித்துக் கொண்டு ஏறினால் விரும்பிய இருக்கையில் இருக்கலாம். அல்லது நிக்க வேண்டியதுதான்.

எனக்கு பேருந்தின் பின்பக்கம் உள்ள உயரமான இருக்கைதான் பிடித்தமானது. அதில் இருப்பதற்காக எப்படியாவது இடித்துப்பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். எனக்குப் போட்டியாக நான்கு பேர் இருந்தார்கள் தான். நாங்கள் நான்கு பேரும் பக்கத்தில்
பக்கத்தில் பேருந்து வரும் நேரம், தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக
நிற்பதுபோல் நிற்போம்.  எனது அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொருமுறையும் நானே வெற்றிக்கொடி நாட்டுபவளாக அந்த உயரமான இருக்கையைப் பிடித்திருப்பேன்.

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

ஒருநாள் எனக்கொரு விபரீத ஆசை ஏற்பட்டுவிட்டது. இன்று கடைசியாக் நின்று பேருந்தில் ஏறினால் என்ன என்று. நண்பிகளிடமும் கூறினேன். அவர்களும் சரிஎன,  எல்லோரும் ஏறும் வரை நாங்கள் காத்திருந்தோம். இன்னும் ஏற இனது ஆறு பேர்தான் பேருந்து நகரத் தொடங்கியது.

எல்லோரும் பயந்துபோய் தள்ளிக் கொண்டு ஏற முயல  நான் தான் கடைசி ஆள். பேருந்து வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. கடைசிப் படிவரை என் நண்பிகள் நிற்கிறார்கள். நான் கால் வைக்க இடமே இல்லை. எறடி எறடி என்கிறார்களே தவிர நான் ஏற இடம் விட எண்ணவில்லை. அவர்களுக்கும் பதட்டம். நான் கொஞ்சநேரம் கைபிடியைப் பிடித்தபடி ஓடினேன் இடம் கிடைக்குமென்று. அதன்பின் தொங்கிக் கொண்டு வரும் பழக்கம் இல்லாததால் கையை விட்டுவிட்டேன்.

பேருந்து தன்பாட்டில் போய்க்கொண்டு இருக்கு. எனக்கோ அவமானம் ஒருபுறம் ஏமாற்றம் ஒருபுறம். இனி என்ன செய்வது. யாழ் தரிப்புவரை தனியே  நடந்ததை 
இன்றுவரை மறக்க முடியவில்லை. ஆனாலும் மனதுக்கு ஆறுதல் தந்த விடயம், நான் யாழ் தரிப்பிடத்தை அடைந்தபோது, எனக்காக நண்பிகள் நால்வரும் பேருந்தை விட்டு இறங்கி, எனக்காகக் காத்திருந்ததுதான்.

இப்படி எத்தனையோ நினைவுகள் மீட்டிப் பார்க்கும் போது இன்பத்தையும் துன்பத்தையும் 
தருவன எம்முள்ளே உள்ளன.

Link to comment
Share on other sites

ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!

உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245

பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.

ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!

உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:
 
Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245

பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.

மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:

காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:

வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

Link to comment
Share on other sites

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D

Link to comment
Share on other sites

பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

வேம்படி மாணவிகள் தமது யாழ் இந்து மகளிர் நண்பிகளுக்கு சீட் பிடித்துக்கொண்டுவர அதே தரிப்பிடத்தில் ஏறிய யாழ் இந்துமாணவர்கள் வேம்படி மாணவிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்தால் இரண்டு தனி தனி பஸ்கள் விடவேண்டிவந்தது என கேள்விப்பட்டேன் .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

Link to comment
Share on other sites

சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொழும்பு கோட்டடையில் கோனர் சீற் பிடிக்க ஓடுப்பட்ட ஞாபகம் தான் வந்ததது.நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றி.

காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:

வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

அதுக்கும் ஒரு துணிவு வேணும் அலை.சும்மா வாய்தான். :lol:

அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D
 
நீங்கள் சின்னப் பெடியள். உங்களுக்கெல்லாம் சொல்ல ஏலாது மயூரன். :D

பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

 .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

இப்பிடி ஒரு கதை நான் கேள்விப் பட்டதே இல்லை.

சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

மொக்கை எண்டால் என்ன?? எனக்கு விளக்கம் வேணும். ரதியும் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்கிறவர்.

Link to comment
Share on other sites

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் களிச்சுப் பாத்தா என்னையும் என் அனுபவக் கதையையும் மொக்கு என்று சொல்வதில் கனபேர் சந்தோசப்படுறியள் போல கிடக்கு.சரி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கோ எனக்கொன்றுமில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு சுமோ.
நான்... சின்னனாக இருக்கும் போது... ஊரில் இரட்டைதட்டு பஸ், பலாலி வீதியால் ஒடும்.
தம்பி, தங்கச்சி, எல்லாரும்... பான்ஞ்சு விழுந்து, மேல் தட்டில் முன்பக்கம் போயிருப்போம்.
இனிமையான.... இளமைக் காலங்கள், மீண்டும் வராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.
எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)
இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.
நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,

நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

நான் லண்டன் வந்து ஒரே ஒருமுறை தான் பஸ்சின் மேல் மாடியில் போய் இருந்திருக்கிறேன். நன்றி சிறி.

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,

நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

பள்ளிக்கூட நினைவுகள் மகிழ்வும், வேதனையும் கொள்ள வைக்கும் நினைவுகள்.நன்றி  நவீனன்.

Link to comment
Share on other sites

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

Link to comment
Share on other sites

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

Link to comment
Share on other sites

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

அது கவிதை இல்லை புதுக் கவிதை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

நீங்கள் சாவச்சேரி சந்தைக்கு  போன தேங்காய்களோடு  பயணம் செய்திருக்கிறீங்கள். எண்டு தெரியிது. ஆனா  கத்தரிக்காய்தான்  பாவம்  நசிஞ்சிருக்கும்.

:lol:

குமாரசாமி அண்ணா,

உங்கள் எழுத்தை பாத்தாலே உங்கட குழப்படியள்  விளங்கும் எ ங்களுக்கு.நீங்கள் மிச்சம் சொல்லாட்டியும் நாங்கள் கெஸ்பண்ணுவம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.