-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Paranee · பதியப்பட்டது
சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள். -
By ஏராளன் · பதியப்பட்டது
உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்ளும். அதேபோல் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, முழு விவரங்களையும் இன்னதென அறிந்து கொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர். வேணு என்றால் மூங்கில். இதையே வாழைமட்டை, கரித்துண்டு, கற்பூரம் ஆகியவற்றை உதாரணம் காட்டியும் விளக்குவார்கள். ஆக, மூங்கில் அல்லது கற்பூர வகை சூட்சுமபுத்தி அமைவது பெரும்பாக்கியம். இத்தகைய புத்திக்காரர்கள் வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். கங்கைக்கரையில் ஞானி ஒருவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் பயின்று வந்தனர். அந்நாட்டு இளவரசனும் அங்கே சீடனாகத் தங்கியிருந்து பயின்றதுடன், அந்த ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தான். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி. இளவரசன் அதிர்ந்தான். ‘`என்ன இது… ஏன் அடித்தீர்கள்?’’ எனக் கேட்டான். ‘`உனது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்’’ என்றார் ஞானி. இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில் பலமுறை அடிவாங்கினான். போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடமிருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ‘`பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்குவேன். எச்சரிக்கையாக இரு’’ என்றார். இதிலும் ஆரம்பக்கட்டத்தில் பலமுறை அடி வாங்கிய இளவரசன், ஒரு நிலையில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், அவன் தூங்கும் வேளையில் அவனைத் தாக்குவதற்காகத் தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ‘`இனி மூன்றாம் கட்டப் பயிற்சி. தடிக்குப் பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய்விடும்!’’ என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். ‘விழிப்புணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே… ஒரு முறை, இவர் தூங்கும்போது நாம் தாக்கினால் என்ன?’ என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்… மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி. இளவரசன் வியந்தான். தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி! நாமும் அந்த ஞானியைப் போன்று, இளவரசனைப் போன்று உள்ளே விழிப்பு நிலையை அடைந்துவிட்டால் போதும்; எதிலும் தோற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், அதற்குச் சில பக்குவ நிலைகள் தேவைப்படுகின்றன. உங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளுங்கள்! மனிதனைப் பார்த்து, ‘நீயே பேரின்ப வடிவம்’ என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் படித்ததும் உங்களில் பலரும் எண்ணலாம்… தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாங்களா பேரின்ப வடிவம் என்று ஏளனம்கூட செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் பேரின்ப வடிவம்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் அதற்குக் காரணம், உங்கள் உண்மை இயல்பு பற்றிய அறியாமையே! சுவாமி விவேகானந்தரிடம், ‘மாயை என்றால் என்ன?’ என்று சிலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘`அறியாமை, அறியாமை, அறியாமையே’’ என்றார் அவர். ஒருவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. பெரிய சிங்கம் ஒன்று அவனைத் துரத்தியது. பதறி விழித்தான். தான் கண்டது கனவு என்பதை அறிந்ததும் அவனுக்கு எவ்வளவு நிம்மதி?! நீங்களும் உங்களின் நிஜ இயல்பை அறிந்துகொண்டால் இப்படியான நிம்மதியையும் ஆனந்தத்தையும் அடைவீர்கள். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது அவரிடம், ‘`நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘`இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாராம். அவரவர் நிஜ இயல்பை அறிவதும், காப்பாற்றிக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும். போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ‘`உன் தனித்தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். ஒரு நாள் சீடர்களோடு காட்டு வழியில் பயணித்துக்கொண்டிருந்தார் புத்தபிரான். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். “சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?’’ என்று கேட்டார். ‘`இதில் என்ன சந்தேகம். காட்டில் உள்ள இலைகளே அதிகம்’’ என்றனர் சீடர்கள். உடனே புத்தர் புன்னகையோடு கூறினார்… ‘`இந்தக் காட்டில் உள்ள இலைகளைவிட நானறிந்த உண்மைகள் அதிகம். என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்தாலே போதும், துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றிப் பழகுங்கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்’’ என்றார் கௌதமர். திருப்தியோடு இருங்கள்… ‘ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மனத்திருப்தி’ என்கிறது மகாபாரதம். பெரும் தலைவனாக இருந்தாலும் அறிஞனாக இருந்தாலும் நிறைவை அடையாதவன் நிலை தாழ்ந்துவிடுகிறான்’ என்கிறது மத் பாகவதம். மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? `வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி-துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை…’ என்கிறது மகாபாரதத்தின் சாந்தி பருவம். ஆகவே, சகலத்தையும் சமமாக பாவித்து மனநிறைவோடு வாழும் மனிதர்கள் பாக்கியவான்கள். இவர்கள், வீண் ஆசைகளை அண்டவிடுவதில்லை. பற்றற்று இருங்கள்.! பற்றுகொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! பகவான் கண்ணன் நினைத்திருந்தால் `போர் புரிந்தே ஆக வேண்டும்’ என்று பார்த்தனுக்குக் கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. உற்றார் உறவுகள்மீது கொண்ட பற்றானது உள்ளத்தைப் பலவீனப்படுத்திவிட, தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனுக்கு, அவனை அவன் அறிந்துகொள்ளும் விதம் கீதை எனும் அமிர்தத்தைப் புகட்டினார். அதன்பிறகும் “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி, நீ உன் விருப்பம்போல் செயல்படு’’ என்று அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். விளைவு நாமறிந்ததே! பூந்தோட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சில பூக்கள் மட்டுமே இறைவனுக்கு ஆரமாகும். மீதம் உள்ளவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மலர்ந்து சிரிக்கவே செய்கின்றன. நாமும் மனதால் மலராக வேண்டும். https://thinakkural.lk/article/246653 -
By ஏராளன் · பதியப்பட்டது
வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு மேற்கு நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். நாம் மேற் சொன்னவைகள் அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அழிவுகளின் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இதுவரை அரசியல் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று நாம் அனுபவிக்கின்ற இந்த துயரங்கள் எப்படி எங்கிருந்து வந்தது.அவற்றை நமது தலைகளில் கொட்டி விட்டவர்கள் யார் என்று ஆராய முற்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் 75 வருடங்களின் சாபம் என்று ஒரு வார்த்தை நமது அரசியலில் இன்று பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக அடிக்கடி உச்சரிப்பது போல ஆகாயத்தில் இருந்து சோறு, குடி மக்களுக்கு சிங்கப்பூர் வாழ்வு, ஆசியாவின் ஆச்சர்யம், சௌபாக்கிய என்ற அனைத்தும் இதுவரை வாக்குக் கொள்ளைக்காக மக்களை ஏமாற்ற பாவித்த மந்திரங்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்பட்டு அரசியல் போக்கிலும் அது பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரத்தில் இருப்போர் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் தமது பிடியை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அரசியல் யாப்பை கூடக் கண்டு கொள்ளாமல் தான்தோறித்தனமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் இது பற்றிக் கேள்வி எழுப்புகின்ற போது நீதிபதிகளின் கழுத்தையே ஆட்சியாளர்கள் நசுக்குகின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது. சர்வதேசம் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரதான பௌத்த பீடாதிபதிகள் கூட மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர்களிடத்தில் கோரிக்கை விடுத்தாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சட்ட விரோத நடவடிக்கைகளில்தான் இப்போது ஆர்மாக இருந்து வருகின்றார்கள். இதுவரை நாட்டில் பேசு பொருளாக இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கதை நூலறுந்த பட்டம் போல தொலைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது விடயத்தில் இந்தியா ஈழத் தமிழர்களை ஏமாற்றி விட்டது. இதன் பின்னரும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் நமது கருத்து. ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது தமிழர்கள் மட்டுமல்ல பேரினத்தவர்களும் வஞ்சக அரசியல்வாதிகளினால் இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், கடந்த 75 வருடங்கள் நாம் செய்த தவறுகள்தான் இன்றைய அவலங்களுக்கு காரணம் என்று ஜனாதிபதி ரணிலே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் அப்போது ஆட்சியல் இருந்தவர்களைத்தான் இவர் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் கடந்த கால ஆட்சிகளில் அவரும் அவரது கட்சியினரும் கணிசமான காலத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இதனை மறந்து ஏதோ இன்று பிறந்த பாலகன் போல அவரது கதைகள் இருக்கின்றது. இதை நாம் வழக்கம் போல நகைச்சுவைப் பட்டியலில் தான் சேர்த்து விடுவோம். ஆனாலும் இது அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி குறுக்கு வழியில் இன்று அதிகாரமிக்க பதவியில் அமர்ந்திருக்கின்றது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வஜிர அபேவர்தனதான் இன்று ஆளும் தரப்பு சார்பாக பெரும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள்தான் நாட்டை பிழையான வழியில் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் சொல்லும் போது வஜிர அபேவர்தன இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று புதுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்? தற்போதைய ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் அரசியல் யாப்பையோ சட்டம் நீதி என்பவற்றையோ மதிக்கத் தயாராக இல்லை. தாம் நினைத்ததுதான் சட்டம், நீதி என்ற நிலையில்தான் இப்போது அவர்கள் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு படைத்தரப்பின் உதவிதான் தேவைப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பில் கூட அவர்களுக்கு விசுவாசமில்லா ஒரு நிலை தற்போது தோன்றி இருப்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகின்றது. இது தொடர்பான அந்தரங்க குறிப்பொன்றை நாம் மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம். தமது அரசியல் இருப்புக்காக ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை மதிக்கத் தயாராக இல்லை. நீதித்துறையிடம் இது பற்றி நியாயம் கேட்கப் போனால் நீதிபதிகளையே அதிகாரத்தில் இருப்போர் விசாரணைக்கு அழைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இதே ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆரின் ஆட்கள் தமக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகளுக்கு தொந்தரவு செய்து வந்தனர். அவர்கள் வீடுகளுக்குக் கூட குண்டர்களை வைத்து கல்லெறிந்த சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அதனையும் விஞ்சிய அட்டகாசம்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதன் நாட்டில் அதிகாரம் மிக்க கதிரையில் அமர்கின்றார் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பில் எந்தளவுக்கு பலயீனம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது.இவ்வாறான சம்பவங்கள் உலக அரசியலில் எங்கும் நாம் இதுவரை பார்த்ததில்லை. எனவே புதியதோர் அரசாங்கம் இலங்கையில் அதிகாரத்துக்கு வருமாக இருந்தால் யாப்பு மாற்றமொன்று காலத்தின் உடனடித் தேவை என்று இன்று உணரப்பட்டிருக்கின்றது. நாம் மேற்சொன்ன வஜிர அபேவர்தன கதைப்படி இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஆட்சி என்றால் இந்த நாட்டில் தேர்தலுக்கே வாய்ப்புக் கிடையாது. அரசியல் யாப்போ நீதியோ முக்கியமானதல்ல. நாடுதான் முக்கியம் என்ற ரணிலின் வார்த்தை கூட இதற்குக் களம் அமைப்பதாகத்தான் இருக்கின்றது. இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் படைத்தரப்பினரின் உதவியுடன்தான் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்றுகூட நாட்டில் அந்த நிலைதான் காணப்படுகின்றது. படைத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது கீழ்மட்ட படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் இந்தப் போக்கை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் படைத்தரப்புக்கு கொடுக்கப்படும் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் வெளியில் கசிய விடுகின்றார்கள். ஆனால் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக சிறு தொகை அதிகாரிகள் மட்டுமே செயலாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னைச் சந்தித்த ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அகசா குபோடாவுடன் நடந்த சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார். பொதுவாக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை பற்றித்தான் ஐ.நா கவனம் செலுத்தும். இப்போது நமது நாட்டு உள்நாட்டுப் பிரச்சினையிலும் ஐ.நா தலையிட வேண்டிய அளவுக்கு நிலமை கட்டுமீறிச் சென்றிருக்கின்றது. எனவே சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளின் போது பேரினத்து அரசு எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்துவரை இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது இனம் தெரியாத படைவீரர்கள் தடிகளை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் இந்த தடிகள் மின்னேரியக் காட்டில் வெட்டப்பட்டு இனமனுவ என்ற படை முகாமில் வைத்து லொறிக்கு ஏற்றப்பட்டு அது கொழும்பிலுள்ள ஒரு படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளி வந்தது. ஆனால் அன்றைய தினம் இந்த தடிகளை வைத்திருந்த இராணுவவீரர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன. ஆளும் தரப்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்மையில் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் படுதோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் எதிரணியினரும் நடுநிலை ஊடகங்கள் அதற்கு முற்றிலும் முரணாக செய்திகளில் இது பெரு வெற்றி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தச் செய்திகளைப் பார்க்கின்றார்களோ அந்த வகையில்தன் இது பற்றிய தீர்மானங்களுக்கு வருவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதனை மக்கள் தமது தேவைகளுக்காக அந்த இடங்களுக்குப் போகும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அப்போது யார் சொல்வது யதார்த்தம் என்பது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். கடந்த 15ம் திகதி நடந்த வேலை நிறுத்தம் காரணமாக 4600 கோடி ரூபாய்கள் இழப்பு என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறி இருக்கின்றார். அப்படியாக இருந்தால் வேலை நிறுத்தம் எப்படி தோற்றுப் போனது என்று கேட்கத் தோன்றுகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் அடிப்படை உரிமைகளுக்கு குறிப்பாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலையில்தான் ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இன்று மக்களைக் கொண்டு போய்விட்டிருக்கின்றது. https://thinakkural.lk/article/245688 -
By goshan_che · Posted
ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள். ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது. அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார். அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார். இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions. ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்? இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல. இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி. NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது, தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI.
-
Recommended Posts