Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி :)



வாழ்த்துக்கள் கோமகன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி அண்ணா, கோமகன் அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள். :) 

தமிழ்சிறி அண்ணா தனது மனதில் உள்ளதை நறுக்கென்று சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வகையில் வெளிப்படையாகச் சொல்லும் கள்ளமில்லாத வெள்ளை மனதுக்காரர். :icon_mrgreen:

 

கோமகன் பல்வேறு விடயங்களைப் பற்றியும் ஆர்வத்துடன் அலசி ஆராய்ந்து எழுதுபவர். அரசியலைப் பற்றி மட்டும் அதிகம் எழுதமாட்டார். :rolleyes:

 

இருவரும் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thanks.jpg

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.....
உடையார், ஜீவா, யாழ்வாலி, இசைக்கலைஞன், நுணாவிலான், புங்கையூரான், மல்லையூரான், விசுகு, தமிழரசு, யாயினி, நவரத்தினம், ஈசன், வாத்தியார், நெடுக்காலை போவான், அகூதா, சுண்டல், குமாரசாமி அண்ணா, அலைமகள், துளசி, யாழ்கவி, துளசி, கிருபன் ஆகியோருக்கு நன்றி. :)



600 ப‌ச்சைப் புள்ளிக‌ளைத் தாண்டிய... கோம‌க‌னுக்கும் வாழ்த்துக்க‌ள். :)

Link to comment
Share on other sites

600 பச்சை புள்ளிகள் பெற்ற தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

like.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தூயவனுக்கு, வாழ்த்துக்கள்.

வாசிக்கத் தூண்டும் அரசியல் கருத்துக்களை, எழுதுவதில்... தூயவனும், முக்கியமானவர்.

முன்பு இவர், அடிக்கடி எழுதிய போதும்.... கடந்த சில வருடங்களாக, எழுதுவதை குறைத்துக் கொண்டது கவலையான விடயம்.

தொடர்ந்தும்... அருமையான கருத்துக்களை, யாழ்களத்தில்.... எழுத வாழ்த்துகின்றேன். :) 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !!!!

 

கடந்த சில நாட்களாக எனது கவனம் வேறு பதிவுகளில் சென்றதால் உடனடியாக இதற்குப் பதில் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . நீங்கள் எல்லோரும் நான் 600 விருப்பு வாக்குகளை எடுத்தமைக்கு மனதார என்னைப் பாராட்டியுள்ளீர்கள் . நான் இந்த வேளையில் எனது மனதில் தோன்றிய சில எண்ணவலைகளை உங்களிடம் பகிரலாம் என நினைக்கின்றேன் .

 

இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் .  கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் . நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அருமை நண்பன் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்த வாழ்த்துப் பகுதியில் , வாழ்த்து என்ற போர்வையில் நான் நிர்வாணப்படுத்தப்பட்டு  அவமதிக்கப்பட்டேன் . அந்த நிலையானது மறைமுகமாக எனது ஆக்குதிறனை உசுப்பிக் கொச்சைப்படுத்தப்பட்டது . அப்பொழுது நான் நன்றி சொல்லவேண்டும் என்ற வேண்டுகோள்கள் பலரால் வைக்கப்பட்டன . ஒருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டு அவர் வந்து மண்டியிட்டு நன்றி சொல்லவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையினை அருவருப்பின் உச்சக்கட்டமாகப் பார்த்தேன் .

 

இங்கு பொதுவாக விருப்பு வாக்குகள் பல காரணங்களுக்காக உங்களால் அளிக்கப்படுகின்றன . ஒரு சிரிப்பிற்கே பல விருப்பு வாக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் என் மனதில் வந்து போகின்றன . நான் அடிப்படையில் ஒரு விமர்சகனோ கருத்தாளனோ கிடையாது . எனது சுயபடைப்புகளை நீங்கள் எல்லோருமே வாசித்து , அதனால் கவரப்பட்டே மனமுவந்து எனக்கு இவ்வளவு விருப்புவாக்குகளை தந்திருக்கின்றீர்கள் . இப்பொழுது எனது பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன . உண்மையில் உங்கள் பாராட்டுகள் யாவுமே இந்தக் கருத்துக்களத்திலே கள உறவாக உள்ள திருமதி கோமகனையே போய் சேரவேண்டும் . ஏனெனில் பல சந்தர்பங்களில் நான் மனம் வெறுத்துப்போய் கருத்துகளத்தை விட்டு மறைய முற்பட்டபொழுதெல்லாம் விடாப்பிடியாக நின்று தனது இதமான பேச்சுகளால் எனது ஆக்கு சக்கதியை அதிகரிக்கச் செய்தவர்.  இறுதியாக எனக்குப் பாராட்டுச் சொல்லிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி என்ற வார்த்தையின் அதியுச்ச வலுவுடைய வேறு சொல்லை அகராதியில் தேடியவாறு உங்கள் முன் எனது தலை சாய்கின்றது . அதே வேளையில் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் தமிழ் சிறியருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கின்றேன்  :)  :)  . நன்றி வணக்கம் .

 

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளை எடுத்த கோமகன் அண்ணாவுக்கும் அவர் அருகில் இருந்து அவரை ஊக்கப்படுத்தும் திருமதி கோமகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது குரு நடை அழகனுக்கு எனது வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி, சுபேஸ் & கோமகன் அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

Link to comment
Share on other sites

சுபேசுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல பச்சைகளை பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

யாழ்கள கருத்தாளர்களான கோமகனுக்கும் சுபேசிற்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் !

 

 

மேலும், புதிய கருத்துக்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய கோமகனுக்கும், தம்பி சுபேசுக்கும், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

 

புதிய படைப்புக்களின் மூலம். யாழ் களத்தை மேலும், மெருகூட்ட வேண்டுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி தம்பி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழிலும் வாழ்விலும்  பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைகள் கண்ட கோமகன் மற்றும்.. சுபேஸிற்கு இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகாராஜா ஹரி சிங் வரலாறு: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த ஜம்மு - காஷ்மீரின் கடைசி டோக்ரா மன்னர் அஷோக் குமார் பாண்டே பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES)   படக்குறிப்பு, மகாராஜா ஹரி சிங் (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 56ஆவது கட்டுரை இது.) மகாராஜா ஹரி சிங்கின் பிறந்ததினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற டோக்ரா அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஹரி சிங் ஒரு 'சிறந்த கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் லட்சியவாதி' என்று மனோஜ் சின்ஹா வர்ணித்துள்ளார். ஹரி சிங் மற்றும் டோக்ரா ஆட்சி குறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கருத்துகள் மாறுபட்டவையாக உள்ளன. ஜம்மு மக்களுக்கு தங்களின் இழந்த புகழ் மற்றும் பெருமையின் அடையாளமாக டோக்ரா வம்சத்தின் கடைசி ஆட்சியாளர்கள் இருக்கும் அதே நேரம், பள்ளத்தாக்கில் உள்ள பலர் டோக்ரா ஆட்சியாளர்களை அடக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். 1846-ல் சோப்ரானில் நடந்த ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலான போரில், பஞ்சாப் ராணி குலாப் சிங்கை தளபதியாக நியமித்தார். ஆனால் அவர் போரில் இருந்து விலகி ஆங்கிலேயர்களுக்கு உதவினார். அதன் பிறகு குலாப் சிங் 'அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் கீழ்' 75 லட்சம் நானக் ஷாஹி ரூபாயை வழங்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மீது ஆட்சி செலுத்தும் முழு உரிமையை பெற்றார். ஜம்மு பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ஒப்பந்தம் 'அமிர்தசரஸ் பைனாமா( விற்பனை பத்திரம்)' என்று குறிப்பிடப்படுகிறது.   அதற்கு முந்தைய காலகட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஜம்முவின் மன்னர்கள் பள்ளத்தாக்கின் மன்னர்களுக்கு அடிபணிந்தனர் அல்லது அவர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். குலாப் சிங், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் மகராஜாவாக ஆனபிறகு, இது தலை கீழாக மாறியது. ஆட்சிக்கு வந்த பிறகு குலாப் சிங்கின் கொள்கைகள் இந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய விதமானது, பள்ளத்தாக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பாகுபாட்டு உணர்வை ஏற்படுத்தியது.   காஷ்மீரின் கதை: 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது? அம்பேத்கர் பூமியில் அவரது பெயர் தொடர்பாக நடந்த பயங்கர சாதி கலவரம்   ஹரி சிங்கின் பரம்பரை ஹரி சிங் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக எப்படி ஆனார் என்ற கதை மிகவும் சுவாரசியமானது. ஆனால் முதலில் ஹரி சிங்கின் பரம்பரை என்ன என்று பார்ப்போம்.   பட மூலாதாரம்,KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES 1925ல் ஹரி சிங் அரியணை ஏறியபோது, ஆரம்பம் சிறப்பாக இருந்தது. அவரது முடிசூட்டலுக்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்புகள் புரட்சிகரமானவை என்றே சொல்லலாம். "மகாராஜா ஹரி சிங் தனது முதல் உரையில், , நான் ஓர் இந்து. ஆனால் என் மக்களின் ஆட்சியாளராக, எனக்கு ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது. அதுதான் நீதி என்று கூறினார். ஈகை பெருநாள் கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். 1928இல் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் நகரத்தை சுற்றிப் பார்க்கச்சென்றார்," என்று 'The Tragedy Of Kashmir' என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் எச்.எல். சக்சேனா குறிப்பிட்டுள்ளார். "முகத் துதி செய்வோரை ஹரி சிங் வெறுத்தார். எனவே ஒவ்வோர் ஆண்டும் அவர்களை இழிவுபடுத்தும்விதமாக மிகச்சிறந்த முகத் துதி செய்பவருக்கு , அரசவையின் மூடிய கதவுகளுக்குள் 'விருது' வழங்கப்பட்டது," என்று 'காஷ்மீரி ஃபைட்ஸ் ஃபார் ஃப்ரீடம்' என்ற தனது புத்தகத்தில் எம்.ஒய்.சராஃப், ஜம்மு காஷ்மீர் அரசில் அமைச்சராக இருந்த ஜார்ஜ் எட்வர்ட் வேக்ஃபீல்ட் என்பவரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இதுமட்டுமின்றி தனது முடிசூட்டு விழாவில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் உண்மையில் நவீனமயமாக்கலை நோக்கிய படிகள். உதாரணமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தலா 50 பள்ளிகளையும், கில்கிட் மற்றும் லடாக்கில் தலா 10 பள்ளிகளையும் திறப்பதாக அறிவித்தார். அவற்றின் கட்டுமானத்திற்காக வனத் துறையிலிருந்து இலவசமாக மரங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கில் தலா மூன்று நடமாடும் மருத்துவமனைகளைத் திறப்பது, தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்துவது, ஸ்ரீநகரில் மருத்துவமனையைத் திறப்பது, குடிநீர் ஏற்பாடு செய்தல் ஆகியவை அவரது பல பெரிய நடவடிக்கைகளில் அடங்கும். ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகவும், சிறுமிகளுக்கு 14 ஆகவும் உயர்த்தினார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்தார்.   காஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் - ஓர் அலசல் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா போரில் கைப்பற்றிய காஷ்மீர் கிராமம் விநாயகி என்ற பெண் தெய்வம் தெரியுமா?   விவசாயிகளின் நிலையை மேம்படுத்த, 'விவசாய நிவாரணச் சட்டம்' இயற்றினார். இது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஜம்மு காஷ்மீரில், கட்டாயக் கல்விக்கான விதிகளை உருவாக்கினார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டது. அதனால்தான் இந்த பள்ளிகளை மக்கள் 'ஜபரி பள்ளி' (கட்டாயப் பள்ளி) என்று அழைக்கத் தொடங்கினர். 1932 அக்டோபரில் அவர் மிகவும் புரட்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். மாநிலத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் தலித்துகளும் செல்லலாம் என்று அவர் அறிவித்தார். மகாத்மா காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்திற்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது . இது நாட்டிலேயே இந்த திசையில் முதல் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோலாப்பூரின் ஷாஹுஜி மஹாராஜைத் தவிர, அந்தக் காலத்தில் இந்த வழியில் சிந்தித்தவர்கள் வேறு யாரும் இல்லை. ரகுநாத் கோவிலின் தலைமை அர்ச்சகர் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த அளவிற்கு இது புரட்சிகரமான முடிவாக இருந்தது. 35-A பிரிவை நோக்கிய பயணம் காஷ்மீர் மாநிலத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் நிலம் வாங்கல், மாநில குடிமக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது. பிரிட்டிஷ் ரெசிடென்ட் நியமிக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையில் வெளி அதிகாரிகள் வர ஆரம்பித்தனர்.1889ஆம் ஆண்டில் பாரசீக மொழிக்கு பதிலாக உருது, ஆட்சி மொழியாக மாற்றப்பட்டது. மேலும் அரசுப் பணிகளுக்கான நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் செய்யப்பட்டன. பதிமூன்று-பதிநான்காம் நூற்றாண்டிலிருந்தே பாரசீக மொழி காஷ்மீரி பண்டிட்டுகளின் மொழியாக இருந்தது. எனவே இந்த முடிவு காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லிம்களின் வேலை வாய்ப்புகளை அழித்தது. அதே நேரத்தில் உருது ஏற்கனவே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த பஞ்சாபைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் திறந்தது. 1925 இல் ஹரி சிங் அரசராகும் வரை இந்த செயல்முறை தொடர்ந்தது. "காஷ்மீரை காஷ்மீரிகள் அல்லது ஆங்கிலேயர்களுக்காக ஒதுக்காமல், பஞ்சாபியர்கள் மற்றும் பிற இந்தியர்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று மாநில ஊழியர்களிடையே ஒரு எண்ணம் உள்ளது," என்று 1909ஆம் ஆண்டில், காஷ்மீரில் வசித்த சர் பிரான்சிஸ் யங்ஹுஸ்பெண்ட் எழுதினார். இந்த சூழ்நிலையால், 'காஷ்மீரிகளுக்கு காஷ்மீர்' என்ற கோரிக்கை அங்கு எழுந்தது. காஷ்மீரி பண்டிட்டுகள் படித்தவர்கள் மற்றும் வேலைக்கு தகுதியானவர்கள் என்பதால், அவர்கள் முதலில் இந்தக் கோரிக்கையை எழுப்பினர். கஷ்மீர் குடிமகனாக இருக்க ஒரு 'அனுமதியை' கட்டாயமாக்கும் விதிமுறை 1912இல் அறிமுகமானது. ஆனால் அது பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை.   பட மூலாதாரம்,HORACE ABRAHAMS/KEYSTONE/GETTY IMAGES மகாராஜா ஹரி சிங் இந்த பிரச்னையில் தனது கவனத்தை திருப்பினார். அவரது ஆட்சியின் போது ஒரு வலுவான "மாநில வாரிசு சட்டம்" 1927 ஜனவரி 31ஆம் தேதி இயற்றப்பட்டது. இதன் கீழ் மகாராஜா குலாப் சிங் அரசராவதற்கு முன்பில் இருந்து மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் மாநிலத்தின் குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். வெளியாட்கள் காஷ்மீரில் நிலம் (விவசாயம் அல்லது விவசாயம் அல்லாதது) வாங்குவது தடைசெய்யப்பட்டது. வேலை வாய்ப்புகள், உதவித் தொகைகள் மற்றும் சில சமயங்களில் அரசு ஒப்பந்தங்கள் பெறுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு காஷ்மீரில் வெளியாட்கள் வேலை பெறுவது அல்லது சொத்து வாங்குவது திறம்பட நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த சட்டம் பிரிவு 35-A இன் அடிப்படையாக மாறியது. "மாநில குடியுரிமைக்கான வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை இது ஓரளவு பூர்த்தி செய்தாலும், இதன்மூலம் எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியாது என்பதற்கான அறிகுறிகள் இருந்தன," என்று புகழ்பெற்ற காஷ்மீர் வரலாற்றாசிரியர் பிரேம்நாத் பஜாஜ் எழுதுகிறார். மாநில குடியுரிமைச் சட்டத்தை அமல் செய்ததன்மூலம் மகாராஜா ஹரி சிங், வெளியாட்களின் ஊழலுக்கும், உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன், ஒரு வகையான ராஜபுத்திர ஆதிக்கம் நிலவத்தொடங்கியது. ராஜபுத்திரர்கள் அரசின் பல்வேறு துறைகளின் தலைவர்களாக ஆனார்கள். ராணுவம் முழுவதுமாக டோக்ராக்களுக்கு குறிப்பாக ராஜபுத்திரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமான முக்கிய அரசு பதவிகள் டோக்ராக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதோடுகூடவே முஸ்லிம் மாணவர்கள் நன்கு படித்து இந்த வேலைகளில் தங்களுக்கான நியாயமான பங்கைக் கோரத் தொடங்கியபோது பண்டிட்களுக்கு போட்டி எழுந்தது. இந்த வேலைவாய்ப்பு தகராறு பின்னர் காஷ்மீரில் இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியது. மேலும் 1930களின் வன்முறை மோதல்களுக்குப் பிறகு முஸ்லிம் அரசியலின் ஆரம்பம் காஷ்மீருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஷேக் அப்துல்லா இந்த அரசியலில் இருந்துதான் முன்னணிக்கு வந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் தாக்கத்தின் கீழ் மதச்சார்பற்ற தேசிய மாநாட்டு கட்சியை நிறுவினார். டோக்ரா-பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து காஷ்மீரின் சுதந்திரத்திற்கான சங்க நாதத்தை எழுப்பினார்.   இந்திய வரலாறு: நிஜாம் ஆட்சியில் ஓர் அரசு அதிகாரி வீழ்ந்த கதை சகோதரியை மணந்த மன்னர்கள் - எகிப்து, கிளியோபாட்ரா பற்றி அறியப்படாத தகவல்கள் சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள்   சிறப்பான தொடக்கத்திற்குப் பிறகு சரிவு மகாத்மா காந்தி ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார்: "ஒவ்வொரு இந்திய அரசனும் தனது ராஜ்ஜியத்தில் ஹிட்லர் தான். எந்த சட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவன் மக்களைச் சுடலாம். ஹிட்லரிடம் கூட இதைவிட அதிக அதிகாரம் இல்லை. அப்படியானால் ஹரி சிங் தனது காலத்தை விட எப்படி முன்னே இருந்திருக்க முடியும்?" 1930களில் இயக்கம் தீவிரமடைந்தபோது, எந்த ஓர் ஏகாதிபத்திய அரசனும் கடைப்பிடிக்கும் அதே கொள்கைகளை ஹரி சிங்கும் ஏற்றுக்கொண்டார். முன்னதாக வட்டமேசை மாநாட்டில் இந்த இளம் மகாராஜா பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளில் இந்தியர்களுக்கு சம உரிமை கோரியது மற்றும் அகில இந்திய கூட்டமைப்பில் சேருமாறு மன்னர்களிடம் வேண்டுகோள் விடுத்த விதம், பிரிட்டிஷ் அரசை அதிருப்தி அடைய வைத்தது. கில்கிட்டின் கட்டுபாடு தொடர்பான மகாராஜாவின் அணுகுமுறை பிரிட்டிஷ் அரசை சிக்கலில் தள்ளியது. இதன் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிருப்தி ஏற்பட்டபோது, மகாராஜாவுக்கு உதவுவதற்கு பதிலாக பிரிட்டிஷ் அரசு தன்னை முஸ்லிம்களின் நலவிரும்பியாக காட்டிக் கொண்டது. இதை சாதகமாக்கிக் கொண்டு அப்போதைய பிரதமர் ஹரிகிருஷ்ண கெளலின் இடத்தில் காஷ்மீர் பிரதமராக பிரிட்டிஷ் அதிகாரி கால்வினை நியமிக்க வைத்தது. கூடவே மாநிலத்தின் உள்துறை, வருவாய், காவல்துறை ஆகிய மூன்று முக்கிய அமைச்சகங்களும் பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மகாராஜா ஹரி சிங், கில்கிட்டின் கட்டுப்பாட்டை அறுபது வருட குத்தகைக்கு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். ஆனால் கில்கிட் ராணுவத்தின் சம்பளம் மகாராஜாவின் கருவூலத்தில் இருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது. இந்த நேரத்தில் ஹரி சிங் காஷ்மீரில் தனது பிரபலத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், அவரது நிர்வாகத் திறனுக்கும் சவால் எழுந்தது. 1930களின் மந்தநிலையால் அழிந்த காஷ்மீரி தொழில்களை அவரால் ஒருபோதும் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லை. முக்கிய வருமான ஆதாரமான சால்வைத் தொழிலும் நொடிந்துபோனது. 1946-ல் ஷேக் அப்துல்லா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பின்னணியில் காஷ்மீரைவிட்டு வெளியேறு இயக்கத்தை தொடங்கியபோது, இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. 'அமிர்தசரஸ் ஒப்பந்தத்தை முடித்துவிடு, காஷ்மீரைவிட்டு வெளியேறு' என்ற கோஷத்தை மகாராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவிலை. ஹரி சிங்கிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி பற்றி மேலும் விவாதிப்போம். ஆனால் அதற்கு முன் ஹரி சிங் நேரடியாக அரியணையை அடையவில்லை என்ற சுவாரசியமான விஷயத்தை தெரிந்துகொள்வோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES முடிசூட்டல் வரையிலான பயணம் குலாப் சிங் மற்றும் ரன்பீர் சிங்கிற்குப் பிறகு, மகாராஜா பிரதாப் சிங் ஜம்மு காஷ்மீரின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஹரி சிங் உண்மையில் மகாராஜா பிரதாப் சிங்கின் சகோதரரின் மகன். சித்தப்பா அவரை வாரிசாக்க விரும்பவில்லை. ஆனால் ஹரி சிங்கின் சகோதரர் அமர் சிங்கின் மரணத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஹரி சிங்கை ஆட்சியாளராக தயார் செய்தனர். இப்பணிக்காக ராணுவ அதிகாரி மேஜர் எச்.கே.பார் அவரது பாதுகாவலராக நியமிக்கப்பட்டு ஆங்கில வழியில் கல்வி புகட்டப்பட்டது. அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பிறகு, டேராடூனின் 'இம்பீரியல் கேடட் காப்ஸ்'-இல் ராணுவ பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். அவரது பயிற்சி முடிந்தபோது முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அவர் பிராந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது அவரது பொறுப்பு. அவர் பல முனைகளில் சிறப்பாக செயல்பட்டார். அரியணை ஏறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1921இல் ஓர் இளம் இளவரசராக அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது மிரட்டி பணம் பறிப்பவர்களின் வலையில் சிக்கினார். பாலியல் விவகாரத்தில் சிக்கியதால், அவரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. பிரச்னையை மூடிமறைக்க கணிசமான தொகை அரசு கருவூலத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அவரது தொழில் வாழ்வில் இடையூறு ஏற்படுத்தியது மற்றும் அவர் சிறிது காலம் அரசுப் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். இருப்பினும் அடுத்த ஆண்டு பிரதாப் சிங்கிற்கு முழு நிர்வாக உரிமை கிடைத்ததும், ஹரி சிங்கிற்கு ஆட்சியில் முக்கிய இடம் வழங்கப்பட்டது. மகாராஜா பிரதாப் சிங்கின் கீழ் ஒரு சிறந்த நிர்வாகியாக ஹரி சிங் செயல்பட்டார். தன் சாமர்த்தியத்தால் மாநிலத்தில் வர இருந்த பஞ்சத்தைத் தடுத்தார். டோக்ரா வம்சத்தில் நவீன கல்வியைப் பெற்ற முதல்அரசர் ஹரி சிங். அவர் சமயவாதியும் அல்ல, பழமைவாதியும் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீரும் அதனுடன் சுதந்திரமடைந்தன. இப்போது ஹரி சிங் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க வேண்டியிருந்தது, ஆங்கிலேயர்களை அல்ல. அதற்காக அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். அதுதான் 'ஸ்டாண்ட் ஸ்டில்' ஒப்பந்தம் . அதாவது உள்ளது உள்ளபடியே இருக்கும் ஒப்பந்தம். முகமது அலி ஜின்னாவைப் பொருத்தவரை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைவது என்பது ஒரு கௌரவப் பிரச்னையாக இருந்தது. 'ஸ்டாண்ட் ஸ்டில்' ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. பின்னர் பழங்குடியினர் என்ற போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் அனுப்பப்பட்டது. காஷ்மீரைக் கைப்பற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம். ராணுவப் பயிற்சி பெற்ற மகாராஜா போரிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால் காஷ்மீரின் வலு குறைவான ராணுவம் பாகிஸ்தானுடன் போட்டியிட முடியாது என்பதை அவர் விரைவில் புரிந்து கொண்டார். இப்போது அவரிடம் இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. இந்தியாவின் உதவியை நாடுவது அல்லது பாகிஸ்தானிடம் சரணடைவது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னுடன் இணையாதவரை உதவிகளை அனுப்ப இந்தியா தயாராக இல்லை. எனவே சுதந்திரம் அடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1947 அக்டோபர் 26 அன்று, மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அத்துடன் சுதந்திர டோக்ரிஸ்தான் என்ற அவரது கனவு முடிவுக்கு வந்தது. காஷ்மீரில் டோக்ரா வம்சத்தின் கடைசி ஆட்சியாளரின் கடைசி நாள் இது. அவர் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு சென்றார். வைரங்கள், நகைகள், ஓவியங்கள், கம்பளங்கள் என விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் 48 ராணுவ டிரக்குகளில் எடுத்துச்சென்றார். இதுமட்டுமின்றி பழங்குடியினரின் தாக்குதலை எதிர்கொள்ள வாகனங்கள் தொடர்ந்து தேவைப்பட்ட அந்த நேரத்தில், காஷ்மீரின் பெட்ரோல் கோட்டா அனைத்தையும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். இப்படியாக 1846ல் குலாப் சிங் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு இடம் பெயர்ந்ததுடன் ஆரம்பித்த டோக்ரா வம்சத்தின் பயணம், இந்தத் திரும்புதலுடன் இறுதி கட்டத்தை எட்டியது. தான் ஆட்சியாளராக இனி ஸ்ரீநகருக்கு திரும்ப முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தனது குடும்பம், உறவினர்கள், செல்வம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். அதன்பிறகு அவர் ஒருபோதும் ஸ்ரீநகருக்குத் திரும்பிச் செல்லவில்லை.1949 ஜூன் 20ஆம் தேதி அதிகாரத்தில் இருந்து முறையாக வெளியேற்றப்பட்டபோது அவர் பம்பாய் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். கூடவே அவருக்கு விருப்பமான குதிரை பந்தய மைதானமும் இருந்தது. டோக்ரா ஆட்சியின் முடிவு மற்றும் ஷேக் அப்துல்லா தலைமையிலான புதிய அமைப்புடன், மாநில அரசியலின் மீது பள்ளத்தாக்கின் மேலாதிக்கம் மீட்டெடுக்கப்பட்டது. டோக்ரா சமூகத்திற்கு தனது ஆதிக்கத்தின் முடிவு போல இது இருந்தது. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அதிகாரத்தை இழந்தபிறகு, ஷேக் அப்துல்லாவுடனான பகைமையும், டோக்ரா ஆட்சியின் சிறந்த நாட்கள் பற்றிய நினைவுகளுமே இந்த சமூகத்திற்கு எஞ்சியிருந்தது. ஹரி சிங்கின் பிறந்ததினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது, புதிய எல்லை மறுவரையறுப்பு மற்றும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை மீண்டும் அளித்துள்ள நம்பிக்கை உணர்வின் வெளிப்பாடாகும். ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு இடையேயான இந்த மோதலை பாரதிய ஜனதா கட்சியும், ஜனசங்கமும் எப்போதும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் ஜம்முவில் தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவை நம்புகின்றன. தனது சுயசரிதையான 'ஹேர் அப்ரண்ட்' இல், கரண் சிங் தனது தந்தை மகாராஜா ஹரி சிங்கைப் பற்றி ஒரு சுவாரசிமான கருத்தைக் கூறுகிறார். இது மகாராஜா எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளைக் காட்டுகிறது. "அப்போது இந்தியாவில் நான்கு பெரிய சக்திகள் இருந்தன. அவர்களுடனான எனது தந்தையின் உறவு விரோத போக்குடனேயே இருந்தன. ஒருபுறம் ஆங்கிலேயர்கள் இருந்தனர். அவர் (ஹரி சிங்) மிகவும் தேசபக்தியுடன் இருந்தார். எனவே அவர் ஆங்கிலேயர்களுடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை. மறுபுறம் காங்கிரஸ் இருந்தது. ஜவஹர்லால் நேரு மற்றும் ஷேக் அப்துல்லாவுக்கு இடையிலான நெருக்கம் என் தந்தையின் பகைக்கு முக்கிய காரணம். மூன்றாவதாக முகமது அலி ஜின்னா தலைமையிலான இந்திய முஸ்லிம் லீக் இருந்தது. லீக்கின் வலுவான முஸ்லிம் வகுப்புவாத நிலைப்பாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இந்துவாக என் தந்தை இருந்தார். இறுதியாக ஷேக் அப்துல்லா தலைமையிலான 'தேசிய மாநாடு' கட்சி இருந்தது. என் தந்தை பல தசாப்தங்களாக அவருடன் விரோத உறவைக் கொண்டிருந்தார். தனது அதிகாரம் மற்றும் டோக்ரா ஆட்சியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக என் தந்தை அவரை கருதினார். முக்கியமான நேரம் வந்தபோது எல்லா செல்வாக்குமிக்க சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தன," என்று கரண் சிங் எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட மகாராஜா ஹரி சிங் வரலாற்றின் ஏடுகளில் பின்னுக்கு தள்ளப்பட்ட வரலாற்றுச் சூழல்கள் இவை. ஹரி சிங்,1961 ஏப்ரல் 26ஆம் தேதி பம்பாயில் கிட்டத்தட்ட அனாமதேயமாக காலமானார். https://www.bbc.com/tamil/india-63022838
    • ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? டுகா ஒர்ஜின்மோ பிபிசி நியூஸ், அபுஜா 23 நிமிடங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,IEROMIN அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் 'சாட்டிங்' செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் ஆன்லைன் மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இணையதளங்களில் செலவு செய்கின்றனர். ஆனால், அப்படி அவர்களிடம் சாட்டிங் செய்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பிபிசி கண்டறிந்துள்ளது. இத்தகைய மோசடி குறித்து பல மாதங்களாக திரட்டிய ஆதாரங்கள், இத்தகைய போலி கணக்குகளுக்கு பின்னால் நடக்கும் உலகளவிலான மோசடியை வெளிக்கொண்டு வந்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா வரை, சுரினாம் வழியாக நைஜீரியா வரை வந்தோருக்கான டிஜிட்டல் நடத்தை மீதான கடுமையான சட்டங்களை மீறுவதாக இந்த சாட் மோசடிகள் இருக்கும். நைஜீரிய பல்கலைக்கழக மாணவரான அபியோடுன் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்பவர், மெட்டியோர் இன்டராக்ட்டிவ் பிவி ( Meteor Interactive BV) என்ற டச்சு நிறுவனத்துக்கு சொந்தமான டேட்டிங் வலைத்தளங்களில் போலி ப்ரொஃபைலை பயன்படுத்தும் பலரில் ஒருவர்.   அபியோடுன் இந்த இணையதளங்களில் அவர் நிர்வகிக்கும் டஜன் கணக்கான போலி கணக்குகளை காட்டுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கவர்ச்சியான இளமையான வெள்ளை நிற பெண்ணாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். ஒரு தளத்தில், அவர் ஜிஞ்ஜர்ஹனி என்ற பெயரில், 21 வயது மாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இளஞ்சிவப்பு நிற போர்வையை இடுப்பில் சுற்றியுள்ளார். அவர் அந்த தளத்தில் இவ்வாறு தன்னை விவரித்து கொள்கிறார் - 'என் கூந்தலின் நிறமும், ஜிஞ்சர் (இஞ்சி) நிறமும் ஒன்றாக இருப்பதால், ஆண்கள் என்னை ஜிஞ்சர் என்று அழைக்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர்கள் மேலும் கவர்ச்சிகரமான படங்கள் கேட்டால் அனுப்புவதற்கு, ஜிஞ்சர்ஹனியின் மிகவும் கவர்ச்சிகரமான படங்களை அபியோடுனின் கணினியில் ஏதோ ஒரு ஃபோல்டரில் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் உள்ள ப்ரொஃபைல் படம் உள்ளிட்ட படங்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஜின்ஞர்ஹனியின் ப்ரொஃபைலைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அபியோடுன் மட்டும் வைத்திருக்கவில்லை. பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷிப்ட் அடிப்படையில் அந்த ப்ரொஃபைலை பயன்படுத்தி வேலை செய்கின்றனர்.     படக்குறிப்பு, இந்த வலைதளங்களின் பின்னணியில் நடக்கும் பணிகள் அபியோடுனும் அவரது சக ஊழியர்களும் ஜிஞ்சர்ஹனியின் இருப்பிடத்தை வாடிக்கையாளரின் 50 கிமீ (30 மைல்) சுற்றளவுக்குள், மேம்பட்ட வரைபடக் கருவி கொண்டு போலியாக உருவாக்கினர். அதனால்தான் வாடிக்கையாளருக்கு பொருத்தமாக இருப்பதாக காட்டியது. வாடிக்கையாளர் இந்த சாட்டுக்கு பணம் செலுத்தி உள்ளார். அவர் சொல்லவில்லை என்றாலும், ஜிஞ்சர்ஹனியைச் சந்திக்க முடியும் என்று அவர் நம்புகிறார். இந்த இணையத்தளங்களில் இலவசமாக சேரலாம் என்றாலும், வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகளை சம்பந்தப்பட்ட 'பெண்களுக்கு' அனுப்ப பணம் செலுத்த வேண்டும். அதற்கான கட்டணம் 6 டாலர் முதல் 300 டாலர் வரை. இளைஞர்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பெண்களை நேரடியாக சந்திக்க விரும்பினாலும், வயதான வாடிக்கையாளர்கள் செக்ஸ் சாட்கள், கவர்ச்சிகரமான படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம்பெரும்பாலும் திருப்தி அடைகிறார்கள் என்று அபியோடுன் கூறுகிறார். இந்த சந்தாதாரர்களை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இணையதளங்களில் வைத்திருப்பதே அபியோடுனுக்கும், அவரைப் போல உள்ள மற்றவர்களுக்குமான நோக்கமாகும். 'சாட்'டை தொடர ஒவ்வொரு குறுஞ்செய்தியும் குறைந்தது 150 எழுத்துகளும், 'திறந்த முனையாக'வும் (open ended) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "இது ஒரு வாடிக்கையாளர்-சேவை வேலை போன்றது. வித்தியாசம் என்னவென்றால், வாடிக்கையாளர் மட்டுமே தலைமை நிர்வாக அதிகாரியுடன் சாட் செய்வது போல நினைத்துக் கொள்வார்," என்று அபியோடுன் பிபிசியிடம் கூறினார். சுரினாமில் உள்ள Logical Moderation Solutions (LMS) என்ற 'அவுட்சோர்சிங்' நிறுவனம் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துகிறது, தன் நைஜீரியப் பணியாளர்களுக்கு பயிற்சி தருகிறது அபியோடுனின் மெட்டியோர் இன்டராக்ட்டிவ் பிவி நிறுவனம். இந்த அவுட்சோர்சிங் நிறுவனம் ஒரானோ ரோஸ் என்ற சுரினாமைச் சேர்ந்தவரால் நிறுவப்பட்டது. இந்த எல். எம். எஸ் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மற்றும் ஸ்கைப் கணக்குகளில் பிபிசி ஆதாரங்களைக் கண்டறிந்தது. அதில் இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான நபர்களை வேலைக்கு அமர்த்தி, பயிற்சி அளித்தது என்று தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் நைஜீரியாவின் லாகோஸ் மற்றும் அபுஜா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் டெலிகிராமில் வேலைக்கான விளம்பரத்தை அளிக்கின்றனர். நைஜீரியாவின் வேலையற்ற, படித்த இளைஞர்களை இலக்காகக் கொண்டு 'ஆன்லைன் வேலைகள்', 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகள்', 'சாட் மதிப்பீட்டாளர் வேலைகள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வயது வந்தோருக்கான விஷயங்களை கையாள வேண்டும் என்று ஊழியர்களுக்கு எந்த குறிப்பும் இல்லை. எல்.எம்.எல் நிறுவனத்தில் உள்ள ஆட்சேர்ப்பு பணியில் உள்ள முக்கியமான ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த அடெடமோலா யூசுப் ( Adedamola Yusuf). தனது சமூக ஊடக கணக்குகளில் வேலை விளம்பரங்களைக் கையாளுகிறார். அந்தக் கணக்குகளில் அவர் தாம் பல ஆடம்பரமான இடங்களில் தமது மகிழ்ச்சியான விடுமுறையை கழிக்கும் வாழ்க்கை முறையை காட்டுகிறார். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற திருமணம் செய்திருக்க வேண்டியது அவசியமா? கிரெடிட் கார்டு கணக்கை சிக்கல் இல்லாமல் முடிப்பது எப்படி? வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்த சம்பவம் - முழு பின்னணி தகவல்கள் "நீங்கள் சலிப்படைந்த வெள்ளைக்காரர்களுடன் சாட் செய்கிறீர்கள். ஜெர்மனியிலும் நைஜீரியாவிலும் இந்த வேலை முற்றிலும் சட்டப்பூர்வமாகவும் உரிமம் பெற்றதாகவும் உள்ளது," என்று அவர் வாட்ஸ்அப் சாட்டில் பணிக்கு சேர்ந்த முதல் நாளில் ஊழியர்களிடம் சொல்கிறார். யூசுப் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆட்சேர்ப்பு பணியை செய்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த ஆட்சேர்ப்பு முகாமில், நூற்றுக்கணக்கானவர்கள் பதிவுசெய்தனர். அவரிடம் கருத்து கேட்டது பிபிசி. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. "மேற்கு நாடுகளைச் சேர்ந்த இவர்கள் முக்கியமாக சாட் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் முடிந்தவரை கடுமையான ஆங்கில மொழி சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்," என்று ஒரு பயிற்சியாளர் புதிய பணியாளர்களிடம் கூறினார். நைஜீரியாவில் எல்எம்எஸ் இயக்குநரான நிக்கோலஸ் அகண்டே, ஜூலை முதல் வாரத்தில் 100க்கும் மேற்பட்டோரை இதற்காக பதிவு செய்து, இந்த வேலை சட்டப்பூர்வமானது என்று அவர்களிடம் கூறினார். அவரிடம் பிபிசி கருத்து கேட்டது. அவர் பதிலளிக்கவில்லை.   பட மூலாதாரம்,NICHOLAS AKANDE/INSTAGRAM   படக்குறிப்பு, நிக்கோலஸ் அகண்டே வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப்பில் புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களில் கலாசாரம், எழுத்து நடை மற்றும் பிரபலமான உரையாடல்கள் பற்றிய பாடங்களும் வழங்கப்படுகின்றன. சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும் இந்த பயிற்சியின் முடிவில், அவர்களுக்கு இணையதளங்களில் 'லாக்-இன்' (log in) விவரங்கள் வழங்கப்படுகின்றன. அங்கு சந்தாதாரர்களின் வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் வயது போன்ற தனிப்பட்ட தகவல்களைக் காணலாம். ஆன்லைனில் ஆண்களின் கருத்துக்களை பிபிசி பார்த்தது அவர்கள் தங்களுடன் சாட் செய்யும் 'பெண்களை' சந்திக்கும் நம்பிக்கையில் இந்த இணையதளங்களில் 300 முதல் 700 டாலர் வரை செலவழித்ததாகக் கூறியுள்ளனர். "நான் 20 பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறும் போதெல்லாம் விலகி சென்று விடுவார்கள்," என்று ஒருவர் கூறியுள்ளார். அவர் மெட்டியோர் இன்டராக்ட்டிவ்க்கு சொந்தமான தளத்தில் 64.99 டாலரை செலவிட்டதாகக் கூறுகிறார். பெண்களை நேரில் சந்திக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையின் பேரில் 300 டாலருக்கு மேல் செலவழித்ததாக ஒருவர் கூறினார்: "அவர்கள் உங்கள் நகரத்திலோ அல்லது அதற்கு அருகிலோ வசிப்பதாகக் கூறி, 'இன்றிரவு' உங்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி உங்களை ஈர்ப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கு செலவிடுவீர்கள். நீங்கள் சந்திக்க ஒரு இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்ய விரும்பினால், அன்று ஏதோ ஒரு காரணம் சொல்ல தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார். அந்தக் கணக்குகளின் சில சுயவிவரங்கள் கற்பனையானவை என்பதையும், "நேரடி சந்திப்புக்கான சாத்தியமில்லை" என்பதையும் மெட்டியோர் இன்டராக்ட்டிவ் நிறுவனம், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவுபடுத்துகிறது என கூறுகிறது. இருப்பினும், அதன் நைஜீரிய பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தை போலியாக உருவாக்க வரைபடக் கருவியை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை அது விளக்கவில்லை. இந்தக் கருவி, இந்த மோசடி மீது அதிக நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும் ஒருபோதும் நடக்காத சந்திப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு தவறான நம்பிக்கையை அளிக்கிறது. ஆபாசமான அல்லது வயது வந்தோருக்கான விஷயங்களை ஆன்லைனில் வெளியிடுவதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் நைஜீரியாவில் இந்த நபர்களின் நடவடிக்கைகள் இணைய மோசடிக்கு இணையாக இருப்பதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டின் சைபர் கிரைம் சட்டம் பின்வரும் விஷயங்களுக்கு தடை விதிக்கிறது: உண்மைகளை தவறாக சித்தரிக்கும் மின்னணு செய்திகளை அனுப்புதல் மிகவும் புண்படுத்தும், ஆபாசமான, அநாகரீகமான அல்லது அச்சுறுத்தும் செய்திகளை அனுப்புதல் நிதி அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்து சேவைகளைப் பெறுதல். நைஜீரியாவில் ஏமாற்றுதல் மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தால் எல். எம் எஸ் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யும் அபாயம் இருப்பதாக ஒரு அரசு அதிகாரி கூறினார். பிபிசியிடம், தான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும், நைஜீரியாவில் உள்ள சைபர் கிரைம் சட்டம் பற்றி அவருக்கு தெரியாது என்றும் ஒரானோ ரோஸ் கூறினார். அவர் சுரினாமில் இருப்பதால், அவர் மீது வழக்குத் தொடர்வது கடினம். பல லட்சக்கணக்கான நைஜீரியர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அங்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல மாத கால வேலைநிறுத்ததில் உள்ளனர். இதனால், இளைஞர்கள் தீவிரமாக வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 355 டாலர் வரையிலான மாதச் சம்பளத்தை பணியில் சேர்பவர்களுக்கு வழங்குவதாக எல் எம் எஸ் கூறுகிறது. இது புதிதாக ஆசிரியர் பணிக்கு சேர்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகம். வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த ஊதியத்தைப் பெறலாம்.     படக்குறிப்பு, இந்த வேலை வாய்ப்புக்கான விளம்பரம் அபியோடுன் தான் செய்யும் பணி குறித்து கூறுகையில், 'உலகளவில் நடப்பதில் இது ஒரு சிறிய பகுதியே என்றும், இணைய மோசடியுடன் ஒப்பிடும் போது குற்றம் குறைவாகவே உள்ளது எனவும்" கருதுகிறார். "அன்பானவர்களுடன், நண்பர்களுடன் சாட் செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இது லட்ச கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார். டேஷ்போர்டில் ஒரு குறுஞ்செய்தி வர ஜிஞ்சர்ஹனி ப்ரொபைலுக்கு அவர் மாறுகிறார். அமெரிக்காவில் இருக்கும் 50 வயது முதியவர் சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார். " மன்னிக்கவும், நான் இப்போது என் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும்," ஜிஞ்சர்ஹனி பதிலளிக்கிறார். அத்தகைய கோரிக்கைகளைத் திசை திருப்ப அவர் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு வகையான காரணம் இது. அபியோடுன் ஒரு டேபை மூடிவிட்டு மற்றொன்றைத் திறக்கிறார். அங்கே "உங்கள் கிறுக்குத்தனமான கற்பனைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு முத்து" என்ற குறிப்போடு இருக்கும் அவரது மற்றொரு புரொஃபைல் இருக்கிறது. அந்தக் கணக்குக்கு ஒரு செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறார் லண்டன் நகரை சேர்ந்த சாம். https://www.bbc.com/tamil/global-63023182  @Nathamuni 
    • அதிரடி தாக்குதல் மாதிரி, இதுக்கு ஏன், அதிரடி பணிப்புரை. 😁 சாதா... பணிப்புரையே... போதுமே. 😜 மாணவர்கள்தான்... பயப்பிட போறார்கள். 🤣
    • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி பணிப்புரை   க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும். இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=165983
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.