Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு சா அண்ணை
யாழில் உங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அதில் நானும் ஒருவன். பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களுக்கு இரண்டு வரிகளில் பதிலடி கொடுக்க உங்களை விட யாராலும் முடியாது.
தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணை .

உங்கள் சேவை நாட்டிற்கு தேவை .

Link to comment
Share on other sites

மப்புறுப்பினர், கள்ளுக்கொட்டில், கள்ளடித்தல் என குமாரசாமி அவர்கள் தன்னை  வெளிப்படுத்திய நகைச்சுவையைச் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். அதேநேரம்  
அறிவியல், அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கியம் என அனைத்திலும் அவர் நுழைந்து அசத்துவது கண்டு மலைத்ததும் உண்டு. சிலவேளைகளில் சாமியைச் சீண்டி எழுதும் ஆவல் ஏற்படும்போதும் பக்தனைப்போலவே பயமும் வந்ததுண்டு. 
 
குமாரசாமி அவர்களை வாழ்த்தி ஒரு கவிதை எழுதமுடியுமா? என்று தமிழ் சிறி அவர்கள் என்னைக் கேட்டபோது நானா...! கவிதையா...! அதுவும் சாமியாருக்கா..! என்று தயங்கியபோதும், தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்து இணைத்தபோது வந்ததுதான் இந்தக் கவிதை. அதற்குச் சாமியவர்களிடம் இருந்தே பாராட்டும் கிடைத்தது என் பாக்கியமாகும். 
 
கணணித் தொழில்நுட்பம் நிறைந்த ராசவன்னியரின் திறனில் இந்தக் காணொளித் தொகுப்பு அசத்தி நிற்கிறது. பூவோடு சேர்ந்த நார்போல் என் கவிதையும் அதில் சேர்ந்து எனக்கும் பாராட்டுகளைத் தேடித் தந்துள்ளது. இந்தக் காணொளி உருவாகக் காரணமான தமிழ் சிறி அவர்களுக்கும், காணொளியை உருவாக்கிய ராசவன்னியர் அவர்களுக்கும் முதற்கண் நன்றிகூறி 2000ம் விருப்புப் புள்ளிகள் பெற்று இக்காணொளிக்கு மூலகாரணமான திரு. குமாரசாமி அவர்கள் மேலும் மனிதவாழ்வைச் சீரமைத்து மகிழ்ச்சியுறச் செய்யும் பதிவுகளைப் பதிந்து, மேன்மேலும் விருப்புப் புள்ளிகளும் பெறவேண்டி உளமார வாழ்த்துகிறேன்!!  :rolleyes:  :rolleyes: 
 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

 

யாழ்களத்தின் சிறந்த கருத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் ஒருவரான புங்கையூரன் இன்று(19-06-2015) 2000 பச்சைகளைப் பெற்றுள்ளார்..

யாழ்களத்தில் சமீபத்தில் இணைந்து, மிகக்குறுகிய காலத்தில் அனைவரின் நன்மதிப்பையும் பெற்று வீறுநடைபோடும் 'புங்கை'க்கு, யாழ் உறவுகள் சார்பாக காற்றினில் வரும் கீதமாய் இந்த வாழ்த்துக் காணொளி பரிசு..!

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், புங்கையூரன்..  congratulation.gif

இக்காணொளியை தயாரிக்க உதவிய தமிழ் சிறி மற்றும் உயர்திரு.பாஞ் அவர்களுக்கு மிக்க நன்றி!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கையூரான்....! தொடரட்டும் தங்களின் சேவை...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

 

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

 

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

 

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக! :D:lol:

 

 

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! :icon_idea:

 

 

http://youtu.be/W-eiO1mUGy0

 

 

 

குறிப்பு:

 

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

 

நன்றி..நன்றி. எனக்காக நேரம் செலவழித்து ஒரு சிறு காணொளியையே உருவாக்கியிருக்கின்றீர்கள். 
உங்களின் காணொளி உருவாக்கம் மிகவும் அழகாக உள்ளது.
மீண்டுமொருமுறை நன்றிகள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அண்ணா !

 

அழுகின்ற போது.....!

உனது கரங்கள் அணைப்பது போல,

சில வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்!

 

கருத்து மோதல்களில்...,

கருத்து மட்டும் தனித்துப் போக...,

'கௌரவங்கள்' மட்டும்,

தங்களுக்குள் மோதிக் கொள்வதுண்டு!

 

மரங்களிலிருந்து....,

மகிழுந்துகளுக்குள் வீழ்ந்த மனிதர்கள்,

'மூலம்' மறந்த நிலையில்...,

கடந்த கால  வாழ்வை,

கற்கால வாழ்வாகக் கருதுகையில்....,

நீ வந்து நினைவு படுத்துவதுண்டு!

 

காவோலை வேலி தாண்டிய,

உனது கவிதை...,

இன்றும் மனத்தில் நிழலாடுகின்றது!

 

இரண்டாயிரம் பச்சைகள்..!

 

இன்னும் பல ஆயிரங்களாக,

பல்கிப் பெருக  வாழ்த்துகிறேன்!

 

 

 

கவிதையுடன் கூடிய வாழ்த்திற்கு நன்றி புங்கை...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி

நன்றி உடையார். என்றாவது ஒருநாள் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு சா அண்ணை மற்றும் புங்கை.

கு சா வின் நகைச்சுவைகளை ஆதி முதல் ரசித்து வருவபன் நான்.

அண்மையில் விளையாட்டு விபரீதமாகி, அண்ணை ரெண்டு நல்ல வார்த்தை சொல்லும் படி ஆயீற்று.

அதை நான் மோதிரகைக் குட்டாகவே எடுத்துக் கொண்டேன்.

மேலும் பல்லாண்டுகள் யாழைச் சிறபிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசமியன்னை .

நன்றி பெருமாள்.
நன்றி...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை..மிக அருமை

 

நான் யாழில் இணையும் போது கு.சா அண்ணா வின் பல பதிவுகள் என்னை யாழில் நிலைத்து இருக்க தூண்டுகோளாக இருந்தன.

 

கு.சா அண்ணையின் பதில்களை / பதிவுகளை தவறாமல் வாசிக்கும் ஒரு உறவாக என்றும் நான் இருக்கின்றேன்...

 

வாழ்க்கையில் ஒருக்காவேனும் சந்திக்க விரும்பும் ஒரு அன்பான உறவாக குமாரசாமி அண்ணை இருக்கின்றார்.

 

இவர், ஊர் நடையில் மற்றும் பல விடயங்களில் அற்புதமாக கவிதை எழுதக் கூடிய ஒரு பெரும் இலக்கியவாதி.... ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களாக அப்படி ஒன்றும் எழுதாமல் ஏன் இருக்கின்றார் என்றுதான் புரியவில்லை.

 

என்றும் நலமுடன் எம்முடன் இணைந்திருங்கள் அண்ணா

 

 

உங்கை வீட்டுக்கு வந்தே சந்திப்பன்....அப்ப மயங்கி விழாமல் இருந்தால் சந்தோசம்....:lol:

வேண்டுதலுக்கு நன்றி.:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணா.
யாழ்களத்தில், இவர் பதிந்த... கருத்துக்களை, நான் தேடி வாசிப்பதில், கு.சா. அண்ணையின் பதிவுகளும் அடங்கும்.
நீட்டி முழங்காமல்... இரண்டு வரிகளில்... சொல்ல வேண்டிய விடயத்தை காத்திரமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் திறமைசாலி.
ஊரில் பாவித்து, நாம் மறந்த.... சில சொற்பதங்களை, இன்னும்... ஞாபகமாக பாவிப்பதை காண ஆச்சரியமாக இருக்கும்.
தொடர்ந்து எம்முடன் இணைந்து இருந்து, யாழ். களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா. :)

 

தனது வேலைப்பளு மத்தியிலும்,  அருமையான ஒரு காணொளியை தயாரித்த... ராஜவன்னியனுக்கு நன்றி.
பின்னணி இசையும், தேர்ந்தெடுத்த படங்களும்... அருமை.
அதிலும்... "தாத்தா, நான் பத்தாம் வகுப்பு... பாசாகிட்டேன்" என்று வருவது... நகைச்சுவை உணர்வு உள்ளாவரால் மட்டுமே சிந்தித்து, அந்த ஒரு வார்த்தையை...எங்கையோ.... தேடிப் பிடித்து இணைத்த வன்னியனின் திறமையை, கண்டு வியந்து போனேன்.
பாராட்டுக்கள் வன்னியன். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணை... நன்கு அறிமுகமானவர், ஆனால்.....
கவிதை எழுதக் கூடிய திறமை அவரிடம் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று, அவரிடம் கேட்ட போது... தயங்காமல்.. "லொள் கவிதை" ஒன்றை உடனே அனுப்பி... பிடித்திருந்தால்... இதனை பாவியுங்கள் என்று தந்த போது....
நாம் எதிர்பார்த்த கவிதை, அப்படியே.... வந்ததில் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பிறகு விசாரித்த போதுதான் தெரிந்தது.... அவர் "வித்துவான் வேந்தனாரிடம்"  தமிழ் கற்றவர் என்று.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும், கவி பாடும் என்று... சும்மாவா... சொன்னார்கள் :D.
கவிதைக்கு நன்றி பாஞ்ச் அண்ணை. :)  

என்னத்தை சொல்ல????
ஆதியும் நீயே அந்தமும் நீயே என்பது போல் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிட்டீர்கள்.
நன்றியை தவிர எனது மடியில் எதுவுமில்லை....நன்றி.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள். அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த ராஜவன்னியன் அண்ணாக்கு நன்றிகள். :)

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நெடுக்கு சாமி.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கு . சா...! மென்மேலும் தங்களின் நயமான கருத்தாடல்கள் தொடரட்டும்...! :D

 

வர்ணஜாலத்தாலும் , வார்த்தை அலங்காரத்தாலும் , ஊக்குவிப்பாகவும் செயற்பட்ட மூவேந்தருக்கும் என்ன தரலாம் அன்பைத்தவிர...! :D :D

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி சுவியர்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள்.

 

அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த மூவேந்தருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றிகளும்.  :)

வாழ்க வளமுடன்...

நன்றி விசுகர். நான் இங்கு உரிமையுடன் கதைக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா

நான்  செல்லமாக அழைக்கும் நண்டருக்கு நன்றி.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு சா அண்ணை
யாழில் உங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அதில் நானும் ஒருவன். பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களுக்கு இரண்டு வரிகளில் பதிலடி கொடுக்க உங்களை விட யாராலும் முடியாது.
தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும்.

வாழ்த்திற்கு நன்றி வாத்தியார். சந்திப்போமா....thanks2_zpsf923e96a.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணை .

உங்கள் சேவை நாட்டிற்கு தேவை .

பாராட்டுக்கு நன்றி அண்ணை........போகும் பாதைகள் வேறு இலக்கு ஒன்றே....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மப்புறுப்பினர், கள்ளுக்கொட்டில், கள்ளடித்தல் என குமாரசாமி அவர்கள் தன்னை  வெளிப்படுத்திய நகைச்சுவையைச் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். அதேநேரம்  
அறிவியல், அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கியம் என அனைத்திலும் அவர் நுழைந்து அசத்துவது கண்டு மலைத்ததும் உண்டு. சிலவேளைகளில் சாமியைச் சீண்டி எழுதும் ஆவல் ஏற்படும்போதும் பக்தனைப்போலவே பயமும் வந்ததுண்டு. 
 
குமாரசாமி அவர்களை வாழ்த்தி ஒரு கவிதை எழுதமுடியுமா? என்று தமிழ் சிறி அவர்கள் என்னைக் கேட்டபோது நானா...! கவிதையா...! அதுவும் சாமியாருக்கா..! என்று தயங்கியபோதும், தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்து இணைத்தபோது வந்ததுதான் இந்தக் கவிதை. அதற்குச் சாமியவர்களிடம் இருந்தே பாராட்டும் கிடைத்தது என் பாக்கியமாகும். 
 
கணணித் தொழில்நுட்பம் நிறைந்த ராசவன்னியரின் திறனில் இந்தக் காணொளித் தொகுப்பு அசத்தி நிற்கிறது. பூவோடு சேர்ந்த நார்போல் என் கவிதையும் அதில் சேர்ந்து எனக்கும் பாராட்டுகளைத் தேடித் தந்துள்ளது. இந்தக் காணொளி உருவாகக் காரணமான தமிழ் சிறி அவர்களுக்கும், காணொளியை உருவாக்கிய ராசவன்னியர் அவர்களுக்கும் முதற்கண் நன்றிகூறி 2000ம் விருப்புப் புள்ளிகள் பெற்று இக்காணொளிக்கு மூலகாரணமான திரு. குமாரசாமி அவர்கள் மேலும் மனிதவாழ்வைச் சீரமைத்து மகிழ்ச்சியுறச் செய்யும் பதிவுகளைப் பதிந்து, மேன்மேலும் விருப்புப் புள்ளிகளும் பெறவேண்டி உளமார வாழ்த்துகிறேன்!!  :rolleyes:  :rolleyes: 
 

எனக்காக கவிதை எழுதி ஆனந்த கண்ணீர் வரவழைத்த மாயவனே!!!!! நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சா. வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.  :)(இனிமேல் உங்களோடை புடுங்குப்படுறேல்லை எண்டு முடிவெடுத்துத்துட்டன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு சா அண்ணை மற்றும் புங்கை.

கு சா வின் நகைச்சுவைகளை ஆதி முதல் ரசித்து வருவபன் நான்.

அண்மையில் விளையாட்டு விபரீதமாகி, அண்ணை ரெண்டு நல்ல வார்த்தை சொல்லும் படி ஆயீற்று.

அதை நான் மோதிரகைக் குட்டாகவே எடுத்துக் கொண்டேன்.

மேலும் பல்லாண்டுகள் யாழைச் சிறபிக்க வேண்டுகிறேன்.

வாழ்த்தியமைக்கு நன்றி. :)

ஒரு கணப்பொழுதில் நடந்த என் தவறுக்கு உங்களிடம் நான் தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். சூழ்நிலைகள் மூலம் வந்த தவறான வார்த்தை துர்ப்பிரயோகங்களுக்கு மன்னிக்கவும். :(
பேதங்களை மறந்து எமது உரிமைகளுக்காக ஒன்றாக பயணிப்போம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி புங்கை மற்றும் பச்சை உறவுகளுக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.