• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

புரட்சிகர தமிழ்தேசியன்

" நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"

Recommended Posts

" நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"

 

img1130329011_1_1.jpg

 

நாட்டுக்கு சிறப்பான பணியை
நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான்
அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க
வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார்.

மூன்றாவது
அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள்
கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார்.

மேலும்
2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்
பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை
ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க
முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.

அடுத்ததாக
80 வயதை தாண்டிய பிறகும் நீங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்களா? அல்லது
ஓய்வு பெறுவீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு பிரதமர் கூறுகையில்,

'' இந்த
நாட்டுக்கு எனது சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி
சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள்
தான் தீர்மானிக்க வேண்டும். ''

என்று மன்மோகன்சிங் கூறினார்.

மன்மோகன்சிங்
தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம்
வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது
சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன் மோகன் சிங்கின் இந்த பதில் எதிர்கட்சிகளின் எதிர்வினைகளை பெற்றுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1303/29/1130329011_1.htm

 

டிஸ்கி

 

'' இந்த
நாட்டுக்கு எனது சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி
சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள்(?????????????????????????????????????????????????????????????????????)
தான் தீர்மானிக்க வேண்டும். ''

Share this post


Link to post
Share on other sites

Manmohan-Singh-Funny-sms.jpg

Share this post


Link to post
Share on other sites