Jump to content

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்''


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !!!!!!

 

பதினைந்தாவது அகவையில் நுளையும் யாழ் இணையத்திற்கு வாழ்த்தைக் கூறியவாறு , யாருமே தலமைப்பொறுப்பை முன்னெடுக்க வராமையால் நானே ஒருங்கிணைப்பு நிலையில் நின்றுகொண்டு இந்த விவாத அரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன் . எம்மால் நாற்சந்தியில் ஆரம்பிக்கபட்ட கள உறவுகளுக்கான பூர்வாங்க ஏற்பாட்டுத் திரியில் சுயவிருப்பில் தெரிவு செய்யப்பட்ட கருத்துக் கள உறவுகளும் ஏனைய கள உறவுகளும் இந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வருங்காலங்களிலே யாழ் இணையம் நான் சொல்லப்போகின்ற விடையங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும் எனக் கோருகின்றேன் . இன்று இந்த விவாத அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமானது ஒரேயொரு நோக்கத்திற்காகவே . அதாவது எமது கனவுகள் சிதைக்கப்பட்ட நிலையில் யாழ் பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மணர்வர்கள் எழுச்சியானது இன்று அதன் தொடரலையாக  தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சியும் , அதன் அடுத்கட்ட நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் மாணவர் அமைப்புகள் எந்தவகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற செயற் திட்டங்கள் ஒருபுறமும் , இதில் யாழ் இணயத்தின் பங்களிப்பு வருங்காலங்களில் எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் விவாதிக்கவே நாம் இந்த விவாத அரங்கிலே கூடியுள்ளோம். சுய விருப்பின் அடிப்படையில் இணைந்த கள உறவுகளான

விசுகு , சபேசன் , கிருபன் , மணிவாசகன் , ரகுநாதன் , இசைக்கலைஞன் , அர்ஜுன் , சண்டமாருதன் , ரதி அகூதா , புங்கையூரான் , தமிழீழன் , யாழ் அன்பு ஆகியோருக்கு நிகழ்சி ஒருங்கமைப்பாளன் என்ற வகையிலே எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் . இதிலே கருத்துக்கள விதிகளுடன் பின்வரும் விதிகளை இணைக்கின்றேன் .
 
01 இதில் எனது பங்கு ஒருங்கிணைப்பு மட்டுமே .

02 தனிமனித தாக்குதல் முற்றாக தடைசெய்யப்பட்டது .

03. மாணவர் போராட்டத்தில் இலவச ஆலோசனைகளும் கொச்சைப்படுத்தலும் கூடாது .

 

04 மாற்றுக்கருத்தாளர்களது கருத்துக்களை ஜனநாயகப்பண்புடன் உள்வாங்கி விவாதம் செல்லவேண்டும் .
 
05 இது மாற்றுக்கருத்தாளர்களுக்கும் பொருந்தும் .

06 தேசியம் போராட்டம் சார்பான பழைய கதைகள் , தனிநபர் சீண்டல்கள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டது .

07 இவற்றை மீறுபவர்கள் நிர்வாகத்தால் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.


எங்கே விவாதஅரங்கம் ஆரம்பமாகின்றது ...........  கள உறவுகளே உங்கள் கருத்துக்களை வையுங்கள் . வாழ்க தமிழ் !!! வாழிய யாழ் இணையம் !!!



நேசமுடன் கோமகன்

 

நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாகவும் தோழமையுள்ளதாகவும் இருக்கின்ற அதேவேளை நெஞ்சத்து நடுவுநிலை தவறாமல் மனச்சாட்சியுடன் பேச்சாளர்கள் உரையாடுவார்கள் என எண்ணி அனைவரையும் வாழ்த்துகின்றேன்!

 

வாழ்க தமிழ்! வெல்க தமிழன்! மலர்க தமிழீழம்!

Link to comment
Share on other sites

இந்த களத்தின் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து 'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்' அவசியமாகின்றது. முதற்கண் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
 
அதற்கும் மேலாக தமிழக மாணவர்களாம் எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு பல கோடி நன்றிகள், இது ஒரு முற்றுப்பெறாத நன்றியே. காரணம் உங்கள் இலக்கை இன்னும் நீங்களும் நாங்களும் அடையவில்லை.

எங்கே எமது மக்களும், அறுபது வருட அகிம்சை - ஆயுத  மக்கள், வீர மறவர்கள் தியாகங்கள் அனைத்தும் அநீதிக்கு புறம்பாக அழிக்கப்பட்டு நீதி மறுக்கப்பட்டு அடிமை வாழ்க்கை மட்டுமே ஆயுத முனையில் தரப்பட்டு நாலாண்டு கழியும் வேளையில் தூங்கி இருந்த மாணவ உணர்வுகள் பொங்கி எழுந்துள்ளன. உணர்வுகளே உள்ளதா? என எண்ணியவர்களுக்கும் இரண்டு நாளில் எல்லாம் முடிந்துவிடும் என எண்ணிய உள்ளங்களுக்கும் உங்களுக்குள் உள்ளது வெறும் உணர்வுகள் மட்டுமல்ல; வெறும் இளைய துடிப்பு மட்டும் அல்ல; புத்தி கூர்மை மிக்க எதிரிகளை அளந்த ஆழமான இனவிடுதலை என மூன்றாம் வாரமாக நிதர்சனமாக்கி வருகின்றீர்கள்.

நீங்கள் கண்ட வெற்றிகளை விடுத்து நாளை நீங்கள் பயணிக்க உள்ள நாட்கள் வாரங்கள் மாதங்கள் பற்றி சில கருத்துக்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்:

- மாணவர் போராட்டம் தொடர்ந்தும் அரசியல் சாராமல் வன்முறையை கையில் எடுக்காமல் தொடரவேண்டும்
 
- தமிழக மக்கள் போராட்டமாக மட்டுல் இல்லாமல் இந்திய போராட்டமாக மாற்ற  வேண்டும்
 
- வரும் இந்திய நடுவண் அரசிற்கான தேர்தலில் ஈழ பிரச்சனை சம்பந்தமான உங்கள் கோரிக்கைகள் முக்கிய இடம் பிடிக்க வேண்டும்

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம் பயனுள்ளதாக அமைய எனது வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாட்டில் இருந்தாலும் மாணவர் போராட்டத்தில் இருப்பது போல மனத்துக்கும், இரத்திற்கும் சூடான  உணர்வைக் கொடுக்கத்தக்க முறையில்  மாணவர் போரட்டத்தைப்பற்றிய செய்திகளை யாழிலும், திண்ணையிலும் சுட சுட அக்கறையுடன் தொடர்ந்து வழங்கி வரும்  துளசி, பையன், சகானா, சுண்டல் போன்றோருக்கு நன்றி. 



உங்கள் அரிய சேவையை. மெச்சுகிறேன்

Link to comment
Share on other sites

பிரித்தானியா தமிழ் சங்கம் மற்றும் லயோலா hunger strike போன்ற முக புத்தகங்களில் விளம்பர படுத்தி இருக்கு...... அகவே பொறுப்புணர்வுடன் அனைவரும் உரையாடுங்கள்....

Link to comment
Share on other sites

 

வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்!

தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு

 

 

தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன‌. சேனல் 4-ல் வெளிவந்த இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற முழக்கங்கள் தமிழகமெங்கும் எதிரொலித்தது. நாம் தமிழகமெங்கும் எழுச்சி கொண்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து நடந்த நமது போராட்டத்தின் விளைவாய்

 

• இந்திய அரசு பணிந்து அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்று (தனது பிராந்திய அரசியல் நலனுக்காக திருத்தங்களை முன் மொழியவில்லை என்றாலும்) வாக்களித்தது.

 

• தி.மு.க. கட்சியானது காங்கிரசு அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியது, அமைச்சரவையிலிருந்து விலகியது.

 

• தமிழீழ மக்களுக்கும், தமிழீழ ஆதரவு இயக்கங்களுக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

 

• நமது போராட்டம் தமிழக மக்களின், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பல்வேறு மக்கள் பிரிவினரை களத்தில் இறங்கி போராட வைத்தது.

 

அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?

 

நமது முதல் கட்ட போராட்டம் மேற்கூறிய வெற்றிகளைத் தந்துள்ளது. நமது வெற்றியை அடுத்த கட்ட படியை நோக்கி முன்னெடுக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் அய்.நாவின் பொதுப்பேரவை நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் நமது கோரிக்கையை ஏற்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டிய கடமை நம்முன்னுள்ளது.

 

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை கொடூரங்களை முழுமையாக வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை சேனல் 4 மேற்கொண்டு வருகிறது. ஈழத் தமிழர்களும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் இனப்படுகொலையை உலகின் பார்வைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

 

நாமும் நமது போராட்டத்தை மாணவர்கள் தளத்தோடு நிறுத்திக் கொள்ளாமல்

 

1. அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பதற்கான போராட்டமாகவும்

 

2. மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும்

 

மாற்றுவதற்கு அனைத்து திட்டமிட்ட வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

 

அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பது

 

ஆந்திராவில் தனித்தெலுங்கானா போராட்டத்தில் மாணவர்கள் போராட்டத்தோடு மக்களின் போரட்டமும், அரசியல் கட்சிகளின் போராட்டமும் ஒருங்கிணைந்து உள்ளதால்தான் அந்த போராட்டம் வீரிய‌த்துடன் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

• தனித்தெலுங்கானாவிற்காக தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களை ராஜினாமா செய்ய நிர்பந்தித்து போராடியது போல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்த வேண்டும். காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். அதற்காக காங்கிரசு எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மற்றும் காங்கிரசு கட்சித் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

 

• தனித் தெலுங்கானாவிற்காக தெலுங்கானாவில் உள்ள அனைத்து எம்.பி.க்க‌ளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராடுவது போல தமிழகத்தில் (புதுச்சேரி உட்பட) உள்ள 40 எம்.பி.க்களும் ஈழத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் எழுப்பி போராட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் போராட்டங்களை முன்னெடுக்க தமிழக எம்.பி.க்களை நாம் நிர்பந்திக்க வேண்டும்.

 

• இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் தமிழக எம்.பி.க்கள் அரசியல் கட்சிகள் தமிழீழ சிக்கலை கொண்டு சென்று அனைத்து எம்.பி.களும் தமிழீழ சிக்கலை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஒருமித்து போராட வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நிர்பந்திக்கும் வகையில் மாணவர்கள் போராட்டத்தை கட்டியமைப்போம். நமது இரண்டு கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வைப்போம்.

 

மாணவர்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

 

• இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் ஆதரவை திரட்டுவதற்கான முன் முயற்சிகளில் உடனடியாக இறங்குவோம்.

 

• தமிழக மக்கள் மத்தியில் தமிழீழ சிக்கல் குறித்த விழிப்புணர்வை பரப்புரை செய்து மாணவர்கள் போராட்டத்தை தமிழக மக்களின் எழுச்சிப் போராட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.

 

• தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டளர்களை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலை குறித்து எழுதவும், பேசவும், வலியுறுத்துவோம்.

 

• ஏர்டெல், டாடா, அசோக்லைலேன்ட் போன்ற இந்திய முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இலங்கைக்கு ஆதரவாய் இந்திய அரசு செயல்படுகிறது. ஏர்டெல், டாடா, அசோக் லைலேன்ட், மாருதி, பஜாஜ் போன்ற இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சென்று இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருட்களை மற்றும் இலங்கை பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

 

ஒட்டுமொத்தத்தில் நமது முதல் வெற்றியை முதல் படியாகக் கொண்டு மாணவர்களின் போராட்டத்தை பரந்து விரிந்த தளத்தை நோக்கி முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே நமது கோரிக்கையில் நாம் வெற்றியடைய முடியும். செப்டம்பரில் நாம் சில வெற்றிகளையும் ஈட்ட முடியும்.

 

காங்கிரசு எம்.எல்.ஏ., எம்.பி.க்களே! காங்கிரசு தலைவர்களே! தமிழக காங்கிரசு கட்சியினரே!

 

* ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறுங்கள்! பதவிகளை ராஜினாமா செய்யுங்க‌ள்!

 

தமிழக (பாண்டிச்சேரி) 40 எம்.பி.க்களே!

 

* நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்பி போராட்டத்தை வெற்றியாக்குங்கள்!

 

* இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி. -க்களை ஒன்றிணைத்து காங்கிரசை பணிய வையுங்கள்!

 

இந்திய அரசே!

 

* இத்தாலிக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா?

 

* இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?

 

* இலங்கை அரசை நிர்பந்தித்து, ஈழத் தமிழர்களின் இனஅழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

 

- மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்து!

 

அய்.நா-மன்றமே!

 

* இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனபடுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்து!

 

* வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்து!

 

* ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை அய்.நா மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைபடுத்து!

 

* சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் ஈழ தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

 

- தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு

 

தொடர்புக்கு : 9789434804, 9629377789, 9944367319, 9092698346, 9698815767, 9659292249 8015118750

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23345

 

// 1. அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பதற்கான போராட்டமாகவும்

2. மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும்

 

ஏர்டெல், டாடா, அசோக்லைலேன்ட் போன்ற இந்திய முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இலங்கைக்கு ஆதரவாய் இந்திய அரசு செயல்படுகிறது. ஏர்டெல், டாடா, அசோக் லைலேன்ட், மாருதி, பஜாஜ் போன்ற இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சென்று இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருட்களை மற்றும் இலங்கை பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம். //

 

இந்த உரையாடல் தலைப்பில் தமிழக மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து எதுவும் உரையாடுவதற்கு இல்லை மாறாக இந்தப் போராட்டத்திற்கு இசைவாக நாமும் எப்படி இயங்க முடியும் என்ற உரையாடல் மட்டுமே!

 

இந்தப் புறக்கணிப்பில் எம்மால் முற்றுமுழுதாக ஈடுபட முடியும். இலங்கைப் பொருட்களை புறக்கணித்தல் இலங்கை விமான சேவையை புறக்கணித்தல் மேலே மாணவர்கள் குறிப்பிட்டுள்ளவர்களின் பொருட்களை புறக்கணித்தல்.

 

இப் புறக்கணிப்பு என்பதை தமிழக மாணவர்களுடன் உலகளாவிய தமிழர்களின் புறக்கணிப்பாக பரவலாக்கம் செய்வதிலேதான் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளது.

 

அரசுகள் முதலாளிகளுக்கு இசைவாக இயங்குகின்றது. முதலாளிகளுக்கு நட்டம் ஏற்படும்போது முதலாளிகள் ஊடாக அரசுகளின்  முடிவுகளும் மாறும்.

 

இவற்றுக்கு எல்லாம் பிரதானமாக உலகளாவிய தமிழர்களுடன் இணையவலையில் தொடர்புகள் பிணைந்திருக்கவேண்டும். இணையமே பிரதான ஆயுதம்.

 

தமிழர்களும் புறக்கணித்து ஏனையவர்களையும் புறக்கணிக்கும் படி பாடுபடுதல். ஏற்கனவே புறக்கணிப்பு தொடர்பான பரப்புரைகளை விரிவுபடுத்துதலும் வீரியப்படுத்துதலும் அவசியமாகின்றது.

 

மூன்று விசயங்களில் போராட்டத்தில் ஒத்திசைவான போக்கை நாம் கவனத்தில் எடுக்கலாம்.

 

1 உலகளாவிய தமிழர்களுக்கான இணையத்தொடர்பு

2 அந்தந்த நாடுகளில் தமிழர்களின் வாக்குகள்

3 இலங்கையில் லாபமீட்டும் முதலாளிகள் பொருட்களை புறக்கணித்தல்

 

இந்த விசயங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. கோசம் போடுவது உண்ணாவிரதமிருப்பது என்பது எழுச்சியை ஏற்படுத்தவல்லது ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தவல்லதல்ல. அவ்வெழுச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும்போதே தாக்கம் ஏற்படும். அந்த அடுத்த கட்ட நகர்வாகவே இந்த 3 விசயங்களில் செயல்படுதலை குறிப்பிடுகின்றேன்.

 

ஏனையவர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு இசைவாக நாம் என்ன செய்யலாம் என்ற உரையாடலை தொடர வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டாண்டு காலமாய் அடக்கு முறைக்கும்,இனவழிப்புக்கும் ஆளாகி இன்று அநாதையாய் நிற்கும் ஈழத்தமிழினதிற்கு விடிவெள்ளியாய் இருக்கும் எம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் மாணவச் செல்வங்களுக்கு இதயத்தில் பூத்த நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி,

 

வாழ்வா சாவா தருணத்தில் நிற்கும் நாம் எம்மை நாமே அலசிப் பார்க்க வேண்டிய நிலையிலேயே இந்த விவாதத்தைப் பார்க்கிறோம். தமிழக மாணவர்களின் போராட்டங்கள் குறித்து நான் எழுதப் போவதில்லை காரணம், எவ்வளவு கஸ்டங்களுக்கு மத்தியில் பல தியாகங்களை, உயிர்க்கொடைகளைச் செய்திருக்கும் போது உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தொடர்கிறேன்.

 

யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்களால் யாழில் ஆரம்பித்து தமிழர் தாயகம் எங்கும் பிரவி பின் புலம்பெயர் தேசமெங்கும் வியாபித்த பொங்குதமிழ் நிகழ்வுகளின் போது இருந்த உணர்ச்சி வெள்ளம் தாயக் கனவை மீட்டிடுவோம் என்ற வீச்சை 100 மடங்கு அதிகரித்திருந்தது அதன் பின்னர் தான் பல்கலை மாணவர்களில் இருந்து சகலரும் குறித்த துறை சார் சங்கங்கள், அமைப்புக்கள் சார்ந்து விரும்பி அடிப்படை ஆயுதப் பயற்சி எல்லாம் எடுத்த போது அண்ணளவாக இருந்த இளைஞர்,யுவதிகளில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதப்பயிற்சியின் அடிப்படை விடையங்களையாவது தெரிந்திருந்தார்கள். அப்போதெல்லாம்  நினைத்தது இனி ஒரு போர் வந்தால் யாழ் விழுவதுடன் ஒட்டு மொத்த வடக்குக் கிழக்கும் தமிழர் தரப்பிடம் விழும் என்று.

 

ஆனால் பல காரணங்களில் இதுவும் ஒரு மறுக்க முடியாத காரணம், புலிகளுக்கு ஆதரவான மக்கள் அலையைத் தடுக்கும் வழிகளில் ஒன்றாகத் தான் போர்நிறுத்த ஒப்பந்த முறிவுடன் ஏ9 பாதை மூடப்பட்டவுடன், யாழ் தனிமையாக்கப்பட்டதுடன் போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர்களை இனந்தெரியாத நபர்கள்  என்ற பெயரில் வேட்டையாடியதுடன். அதி உச்ச அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியதும் அதனால் இயன்றவர்கள் கல்வியை எல்லாம் இடையில் விட்டு புலம்பெயர்ந்ததும், சிலர் உயிரைக்காப்பாற்ற அரச அடிவருடிகளுடன் சேர்ந்தியங்கியதும் துரதிஸ்டவசமானது.

அப்படி ஒரு நிலையில் இந்த மாணவர் போராட்டமும் அரசியலுக்கு அப்பால் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே எம் அவா..

 

ஆனால் இதில் ஈழத்தமிழரின் பங்கு என்ன என்று கேட்டால் அது கேள்விக்குறியே??

முற்று முழுதாய் இராணுவ அடக்கு முறைக்குள் வாழும் தாயக மக்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள் தனம் ஆனால் அவர்களும் தம் அடக்குமுறைக்கு எதிராய் கிளர்ந்தெழச் செய்யும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழரிடமே இருக்கிறது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்????

 

இன்னுமின்னும் வேள்விக்கு ஆடுகளைத் தான் தேடுகிறோமே தவிர  ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. முகநூலிலும்,ட்விட்டரிலும்,கருத்துக்களங்களிலும் மட்டும் எழுதுவதால் இது மக்கள் மயப்படுத்தப் பட்டு விடாது. களப்பணி,நேரில் வீடு வீடாகச் சென்று செருப்படி வாங்கினாலும், காலில் விழுந்தாவது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான உறவுகளை இழந்தவர்கள் நாம், மாமன்,மச்சான் அயல் வீட்டுக்காரர் என்று யாராவது ஒருவரை இழந்திருப்போம். அதனால் அவர்களின் கோபம்,வெறுப்பை புரிந்து கொள்வதுடன் அவர்களை மனம் விட்டுக் கதைக்கச் செய்யவேண்டும். ஒரு ஆற்றுப்படுத்தல் தாயகத்தில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் வாழ் எம்மவருக்கும் தேவை இதை சோஷல் நெட்வேர்க்கில் மட்டும் செய்து விட முடியாது காரணம். பல சுமைகளுக்கு மத்தியில் இவற்றில் அவர்கள் செலவிடும் நேரம் என்பது எவ்வளவு தெரியாது.

 

அதை விட மற்றவர்கள் எமக்காகக் குரல்கொடுக்க வில்லை, போராடவில்லை என்று குறை கூறும் நாம் உலகில் விடுதலைக்காகப் போராடும் எந்த இனக்குழுமத்திற்கு ஆதரவாகவும் குரல்கொடுக்கவில்லை, ஒரு சில சந்தர்ப்பங்கள் தவிர தமிழகத்தில் எம் உறவுகள் நடத்திய எந்த ஒரு போராட்டத்திற்கும் கூட நாம் குரல் கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடையத்தில் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம்.

 

அடுத்த புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத் தமிழரை ஒன்றிணைக்கக் கூடிய தலைமைத்துவம் இல்லாமை மிகப் பெரிய பலவீனம்.  சொந்தப் பல்லைக் குற்றை மணந்து பார்க்கவும், பங்கு பிரிப்புகளிலுமே காலங்களை வீணாக்குவதால் ஒரு தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் உண்டு.

ஒரு சிறுபிள்ளைத் தனமான செயற்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் எம்மிடம் உண்டு.

அண்மையில் தேசியத்தலைவரின் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலையின் புகைபடம் வெளியாகி ஜெனீவாவில் மனிதவுரிமை மாநாட்டுக்கு முன்னர் பிரச்சாரம் செய்ய முகப்புத்தகத்தில் அனைவரையும் இணைக்கச் சொல்லிக் கேட்ட நாடுகடந்த அரசின் பிரதிநிதி ஒருவர் அந்த வேண்டுகோளை யாழிலும்  இணைத்திருந்தார், ஆனால் அதனால் என்ன நன்மை?

அது குறித்த எந்த விடையத்தையும் பகிரவும் இல்லை யாரும்(ஒரு சிலர் தவிர) முகப்புத்தகத்தில் குறித்த பாலச்சந்திரனின் படத்தை புரொபைல் படமாகப் போடவில்லை. யோசித்துப் பாருங்கள் எங்கள் தலைமைகளை? எவ்வளவோ விடையம் இருக்க யாகம் நடத்தும் எம்மவரை நினைத்து என்ன செய்ய?

 

இத்தனை நாளாக அம் மாணவர்கள் எமக்காக போராடும், உயிர்த்தியாகம் செய்யும் போதும் பாதிக்கப் பட்ட நாம் இன்னும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது வேதனையான ஒன்று. புலம்பெயர் நிலமை தெரியும் பணிச்சுமை,சல்லம் ஒழுங்கு என்று எல்லாம் ஆனால் எல்லாரும் ஒரு நாளில் கூடாமல் ஒரு சுழற்சி முறையிலாவது போராட்டத்தை முன்னெடுக்கலாம். இப்ப உள்ள மிகப்பெரிய சவாலே சரியான தலைமைத்துவம் இல்லாமையே. முதலில் விரைந்து அது குறித்துச் சிந்தித்து அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

 

 

Link to comment
Share on other sites

மூன்று விசயங்களில் போராட்டத்தில் ஒத்திசைவான போக்கை நாம் கவனத்தில் எடுக்கலாம்.

 

1 உலகளாவிய தமிழர்களுக்கான இணையத்தொடர்பு

2 அந்தந்த நாடுகளில் தமிழர்களின் வாக்குகள்

3 இலங்கையில் லாபமீட்டும் முதலாளிகள் பொருட்களை புறக்கணித்தல்

நீங்கள் குறிப்பிட்ட மூன்று கருத்துக்களிலும் மூன்றாவது பற்றி சில காலமாக தமிழகம் உட்பட பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்த திரி அதற்கு சான்று: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112922

 

ஆனால் இன்று அந்த முயற்சிக்கு மாணவர்கள் மேலும் வலு சேர்த்துள்ளனர்.

எனவே தற்பொழுது இது பற்றி மக்களாகிய / நுகர்வோராகிய எமக்கு மேலதிக தகவல்களும் சந்தைப்படுத்துபவர்கள் / இறக்குமதியாளர்கள் இலங்கை இறக்குமதி பற்றி மாற்று வழிகளையும் ஆராயவேண்டும்.

 

தனிப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிங்கள பொருட்களை; சேவைகளை புறக்கணிப்பது மூலம் எயர் லங்கா விமான சீட்டை விற்க மறுத்த சென்னை சரவணனுக்கு மதிப்பும் மாணவர்களுக்கு மரியாதையும் அளிக்கலாம்.

Link to comment
Share on other sites

இத்தனை நாளாக அம் மாணவர்கள் எமக்காக போராடும், உயிர்த்தியாகம் செய்யும் போதும் பாதிக்கப் பட்ட நாம் இன்னும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது வேதனையான ஒன்று. புலம்பெயர் நிலமை தெரியும் பணிச்சுமை,சல்லம் ஒழுங்கு என்று எல்லாம் ஆனால் எல்லாரும் ஒரு நாளில் கூடாமல் ஒரு சுழற்சி முறையிலாவது போராட்டத்தை முன்னெடுக்கலாம். இப்ப உள்ள மிகப்பெரிய சவாலே சரியான தலைமைத்துவம் இல்லாமையே. முதலில் விரைந்து அது குறித்துச் சிந்தித்து அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

மே 2009 பின்னர் ஆரம்பித்த ஆர்வமின்மை புலம் பெயர் நாடுகளில் மிக வருத்தத்தை தரும்  நிலைமை.

 

இதை தீர்க் களத்தில் ஒழுங்கமைக்க தக்க தொண்டர்கள் தேவை. இவற்றை இது வரை செய்து வந்தவர்களிடம் பேசினால் அவர்கள் நம்பிக்கை காட்டுகிறார்கள் இல்லை. மக்கள் அலுத்துப்போயிருக்கிறார்கள் என்று குறைப்படுகிறார்கள். மாணவர் போராட்டதை பயன் படுத்தி திரும்ப நம்பிக்கை வளர்க்க முயலவேண்டும்.

புலம் பெயர் தேசங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்தப்படவேண்டும்.  அப்போது மட்டும்தான் ஒரு மக்கள் பிரதிநிதியிடம் செல்லும் போது நீயார், ஏன் வந்தாய் என்று கேட்பார். நமது இருக்கை மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிய வர,  பாரிய பல வகை போராட்டங்கள் புலம் பெயர் தேசங்களில் நடத்தப்பட வேண்டும் என்பது உண்மை.

Link to comment
Share on other sites

தனித்து மாணவர் போராட்டம் எண்டது நெருப்பு மாதிரி...  பழுத்த அரசியல் தலைகள் எல்லாம் வேறுவேறு வளிகளில் இந்த நெருப்பை ஊதி பத்தவைத்து விடக்கூடாது என்பது இப்போது இருக்க கூடிய மிகப்பெரிய ஆதங்கம்...

 

60 , 70 பதுகளில் இதே அரசியல் தலைவர்கள் ஊதிவிட்ட நெருப்பு ஒரு பிரபாகரனை மட்டும் தான் உருவாக்கியது..  தலைவர்களாக உருவான பலதை கையாலாகாததுகளாகவும் கைப்பொம்மைகளாக்கியதும்,  மிகவும் கேவலமாகி இன விடுதலை உணர்வு எண்டது பிரபாகரனை பணியவைக்க எண்ற அளவில் மட்டுப்படுத்தப்படு எதிரியோடை கூட கைகோக்கும் அளவுக்கு  அவர்களை எல்லாம் கொண்டுபோனது... 

 

வேற ஒரு திரியிலை நிழலி கூறினார் பல புலம்பெயர்ந்தவர்கள் குடுக்க வேண்டிய தார்மீக ஆதரவை இந்த மாணவர்களுக்கு கொடுக்கவில்லை எண்று...   

 

நான் இந்த மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறனா இல்லையா எண்டு என்னையே கேட்டு பாத்தன் மனசு சொல்லுது ஆதரிக்க சொல்லி ,  அறிவு சொல்லுது பொறுமையாக அவதானித்து  யோசி எண்று... 

 

இண்றைய அளவிலை இருக்கும் ஒரே ஆறுதல் இலங்கையிலை சிங்களவருக்கு மத்தியில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் தமிழக உறவுகளால் பெரும்பான்மையினராக  தமிழரை மாற்றி இருக்கிறது...  அமெரிக்க ஐநா தீர்மானதை விட இதுதான் சிங்களத்தின் இப்போதய கவலை...

 

தமிழகத்தின் ஆதரவை வேண்டாம் எண்று சொல்லக்கூடிய நிலையில் ஈழத்தமிழர் இல்லை...  ஆனாலும் இந்த மாணவர்களை  கருநாநிதி ஜெயலலிதா போண்றவர்கள்  உபயோகித்து குளிர் காயாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய கவலை...

Link to comment
Share on other sites

சமூக வலை தளங்களும் மாணவர் அகிம்சை போராட்டமும்

இந்திய, அமெரிக்க உட்பட சம்பந்த்தப்பட்ட நாடுகளின் உளவு அமைப்புக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை மக்கள் ஆதரவுகளை சமூக வலைகள் ஊடாக நிச்சயம் அளவிடும். எனவே, நாமும் இதை எமக்கு சார்பாக பயன்படுத்த வேண்டும்.

 

எகிப்தில் நடந்த மாணவர் எழுச்சிற்கு கூகிளின் பிராந்திய முகாமையாளர் ஆதரவாக முக்கிய பங்காற்றினார். அமெரிக்காவும் மாணவர் / மக்கள் எழுச்சியை சமூகவலை ஊடாக அறிந்து இறுதியில் ஆதரவும் தந்தது.

 

புலம்பெயர் மக்கள் ஆதரவு மேலும் தேவையா இல்லையா?

ஆரம்பத்தில் இருந்தே தமிழக மாணவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பணம் வேண்டாம் என கேட்டிருந்தார்கள். எனது பார்வையில் அவர்களின் போராட்டத்திற்கு இந்திய நடுவண் அரசு உட்பட பலரும் 'புலி சாயம்' பூசி  விடுவார்கள் என்பதே. எனவே எமது புலம்பெயர் ஆதரவு போராட்டங்களும் இந்த மாணவர் போராட்டத்தின் மையம் தமிழகமும் இந்தியாவும் தான் என்பதை உணர்ந்து நடாத்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர் போராட்டம் தொடர்பாக எனது காதுகளுக்கெட்டிய செய்திகளை இங்கு முதலில் தெரிவித்துவிடுகிறேன். 1. 2009 மே மாதத்தில் தமிழர்கள் கூட்டங் கூட்டமாகக் கொல்லப்பட்டபோது ஏற்படாத தமிழ்நாட்டு உணர்வலைகள் பாலச்சந்திரனின் கொலைக்கான ஆதாரத்தால் உந்தப்பட்டதேன்? 2. மாணவர்கள் போராட்டம் இவ்வளவு விரிவடைவதற்கு அதன் பின்னால் ஏதேனும் சக்திகள் உள்ளனவா? 3. இதை அடக்குவதற்காக மத்தியஅரசாலும் தமிழ்நாட்டரசாலும் முன்னெடுக்கப்படப்போகும் நகர்வுகளில் இலங்கைத் தமிழரின் எதிர்பார்ப்புகள் என்ன விளைவைச் சந்திக்கப்போகின்றன? இங்கு குறிப்பிட்ட இவைகள் செய்திகளாக வந்தவைகளல்ல. நண்பர்களின் உரையாடல்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி.... இக் கருத்துகளத்தில் பதியப்படும் கருத்துக்கள் அனைத்தும் போராட்ட மாணவர்களை சென்றடைய வேண்டும். அவர்களின் கருத்துக்களையும் இங்கே இணைத்தால் நல்லது அதனுடாக பல மிக்கதொரு வீச்சையடையமுடியும். 

 

 

Link to comment
Share on other sites

இலங்கை

தமிழ்நாடு

இந்தியா 

சர்வதேசம் .

இந்த ஒழுங்கில் தான் சமாந்தரமாக எமது போரட்டம் எடுத்து செல்லப்பட வேண்டும் .

 

ஆரம்பத்தில் இந்த ஒழுங்கில் தான் எமது ஆயுதத்போரட்டம் போய்க்கொண்டிருந்தது .இந்திராகாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க எம் ஜி ஆர் எமது விடுதலை இயக்க போராளிகளை சுபாஸ் சந்திரபோஸ் உடன் ஒப்பிட்டதும் வரலாற்று பதிவு .அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மட்டத்திலும் எமது போராட்டத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது ,குறிப்பாக மாணவர் மத்தியில் இதே லோயலா கல்லூரி இயக்கங்களுக்கு மேடை போட்டுத்தந்தது.

தமிழ் நாட்டு அரசியலுக்குள் கால் வைத்ததும் எமக்குள் நாமே அடிபட தொடங்கியதும் தமிழ் நாட்டில் எமக்கான ஆதரவு சற்று தளர தொடங்கியது .அப்போதே எம்மை இவர்கள் ஒரு பிழையான சக்தியோ என்று சிலர் மத்தியில் அச்சம் தொடங்கிவிட்டது .

அடுத்து நடந்த இலங்கை -இந்திய ஒப்பந்தம் ,இந்திய இராணுவத்துடனான யுத்தம் ,ராஜீவ் கொலை எம்மை அனைவரிடமும் இருந்து அந்நியப்படுத்திவிட்டது அதே நேரம் எமது மக்களிடம் (நாட்டிலும் புலத்திலும் ) ஆதரவை அதிகரித்தது .தமிழிழமே தீர்வு அதற்காக இறுதிவரை போரட தயாரானார்கள் .

போரட்டம் பறந்து ஓடியது .சர்வதேசத்தில் சில விரும்பிய வேண்டாத நிகழ்வுகள் நடந்தன .முல்லிவாய்காலுடன் ஆயுத போரட்டம் முற்று பெற்று அடுத்து என்ன என்ற நிலைக்கு அனைத்து ஈழத்தமிழனும் தள்ளப்பட்டு  ஒரு முறையான தலைவனோ அல்லது அமைப்போ இல்லாமல் அவரவர்க்கு உள்ள தெரிவை வைத்து உலகெங்கும் தமக்கான தீர்விற்காக போராடுகின்றார்கள் .

இலங்கை அரசு செய்த ஈவு இரக்கமற்ற இனப்படுகொலை சர்வதேசமட்டதிலேயே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவரவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டையும் ஏற்படுத்திவிட்டது.அது ஆமை வேகத்தில் தான் நகரும் சிலவேளை நிறம் மாறும் என்பதும் வழக்கமான ஒரு விடயம் .

இந்த நேரம் தான் தமிழ் நாட்டு மாணவர்கள் ஒரு தொடர்சியான போரட்டத்தை தொடங்கியிருக்கின்றார்கள் .அது தமிழ் நாட்டு அரசை சற்று ஆட்டியிருக்கின்றது இந்திய அரசை அது எந்தளவிற்கு ஆட செய்யும் என்பதிலேயே இந்த போரட்டத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது .இன்று வரை எனக்கு டெல்கி எமது விடயத்தில் எதற்கும் இழகாத ஒன்றாகவே தோற்றமளிக்கின்றது .அவர்களுக்கு ஏற்பட்ட காயம் அப்படி .

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை டெல்கியை என்ன உலகையே ஆட்டமுடியும் .வெற்றிபெற வாழ்த்துக்கள் தமிழ் நாடு மாணவர்களே

Link to comment
Share on other sites

பிரித்தாளும் சூழ்ச்சிதான் ஆதிக்க சக்திகளின் இன்றியமையாத ஆயுதம்.. அன்றும் இன்றும்...

 

என்றுமே அது அவ்வாறுதான் இருக்கப்போகிறது..

 

எண்பதுகளில் ஒட்டுமொத்த ஈழமக்களுக்குமாக இருந்த போராட்டம் தொண்ணூறுகளில் வன்னி, தென் தமிழீழம் மற்றும் புலம்பெயர் தளம் என்று சுருக்கப்பட்டது.. அன்று யாழ்ப்பாணத் தமிழரும், கொழும்புத் தமிழரும் பிரித்தெடுக்கப்பட்டனர்..

 

இறுதிப்போரில் கிழக்கும் பிரித்தெடுக்கப்பட்டு, முடிவில் வன்னியும் அடக்கப்பட்டது. மீதமாக இருப்பது புலம்பெயர் தளம் ஒன்றுதான்.

 

ஆனால் இத்தனை அழிவுகளுக்குள்ளும் பிரசவிக்கப்பட்டதுதான் தமிழினத்துக்கான விடுதலை என்கிற கருத்தியல். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததும் பல மனத்தடைகள் உடைந்து போயின. தமிழராக ஒன்றிணைதலை சட்டங்களால் தடுக்கமுடியவில்லை.

 

ஆக, சிறுபான்மை ஈழத்தமிழருக்கும், பெரும்பான்மை சிங்களவருக்கும் இடையிலான போராட்டம் இப்போது பெரும்பான்மை தமிழருக்கும், சிறுபான்மை சிங்களவருக்குமான போராக மாற்றம் பெற்றுள்ளது.

 

இந்தக் கட்டத்திலேயே எமது மாணவரின் போராட்டத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அன்று ஈழம் என்று சொல்லவே அச்சப்பட்ட ஒரு சனத்திரள் இன்று ஒரு இறுமாப்புடன் அதே ஈழத்தைக் கையில் ஏந்திப் பிடிக்கிறது. சட்டங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

 

எங்கள் தமிழ் இனக்குழுமத்தின் ஆணிவேர் அதன் அதிகபட்ச திரட்சியைக் கொண்டிருக்கும் தமிழகத்தில்தான் உள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. ஒட்டுமொத்த இனத்தின் விடுதலை ஊடாக தமிழருக்கான தேசத்தை விடுவித்தலே இன்று நமக்கு முன் இருக்கக்கூடிய ஒரே சாத்தியப்பாடான வழியாகும்.

 

மாணவரின் எழுச்சி எமது போராட்டத்தை அந்தத் திரட்சியான மக்கள் குழுமத்திடம் எடுத்துச் செல்கிறது. தமிழர் தாயகம் குறித்த சந்தேகங்களைப் போக்கி ஒருங்கிணைக்கிறது.

 

இனி.. தமிழ்நாட்டில் இருந்து இந்தியத்தை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழர் விடுதலைக்குக் குறுக்கே நிற்பது சிங்களம் அல்ல.. சர்வதேசமும் அல்ல..! இந்திய அரசு மட்டும்தான் என்றால் அது மிகையில்லை.

 

அத்தகைய இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் வலிமையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்..! அங்கே கொள்கைமாற்றம் நிகழாமல் தமிழர் தேசத்திற்கான விடிவு என்பது இல்லை..! இதற்கு ஒரு ஆட்சி மாற்றம் உதவலாம்..! ஆனால் தொடர்ச்சியாக இப்போராட்டங்களை முன்னெடுத்து, ஒரு கொதிநிலையில் வைத்திருப்பதே கொள்கை மாற்றங்களுக்கு வழி சமைக்கும்.

 

சமாந்தரமாக இந்திய முதலாளிகள், அந்நிய முதலீடுகளுக்கெதிரான அழுத்தங்கள் வியாபார அலகை முன்னிறுத்தும். அப்போது இந்திய அரசின் பிடியைத் தளரச் செய்யும் சந்தர்ப்பங்கள் உண்டு.

 

இன்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு என்றுமே எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபணியாது என்பது நிதர்சனம். காரணம் தெரிந்ததே.. தங்களுக்கான சவக்குழியை அவர்களே தோண்டமாட்டார்கள்..! அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தவிர்ந்த ஒரு கூட்டாட்சி ஏற்படுவது மிகுந்த நன்மை பயக்க இடமுண்டு. சாமி தரிசனத்தை மறைக்கும் இறுக்கமான இந்தியக் கொள்கைகள் என்கிற நந்தியை சிறிது விலகச் செய்ய வேண்டும்.

 

ஐநாவிடம் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், சர்வதேசத்திற்கு எல்லாம் தெரிந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது இருப்பதற்க்கு இந்த நந்தியே காரணம் என்பது தெரிந்ததே. ஆனால் மக்களின் உண்மையான திரட்சியின்மூலம் இந்தியாவில் கொள்கைமாற்றம் என்பது சாத்தியம் மிக்கதுதான்.

 

இச்சமயத்தில், புலம்பெயர் தமிழர்கள் தார்மீகரீதியிலான தமது ஆதரவை வெளிக்காட்டக் கடமைப்பட்டவர்கள்..! ஒருங்கிணைந்த சக்தி என்பது பலம் மிக்கது. ஆனால் முன்னிலைபெறவேண்டியது தமிழகத்தின் எழுச்சியே..! தாயகச் சூழலில் எவற்றையும் எதிர்பார்ப்பதற்கில்லை..! மலேசியா, கொரியா, ஜப்பான் என்று சிறு அளவிலேனும் போராட்டங்கள் இடம்பெறுவது தமிழினத்தின் பரம்பலை வெளிக்காட்டி தார்மீக பலத்தை முன்னிறுத்தும் நோக்கம் கொண்டவை என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites


 

லயோலா கல்லுாரி மாணவர்கள் ஒரு தன்னிச்சையான போராட்டம் ஒன்றை ஆரம்பித்தவுடனயே எனக்கு விளங்கி விட்டது இது ஒரு மைக்கல்லாக கடக்கும் என்று. அந்த மாணவர்களை அதிகாலை அடத்தாக கைது செய்து தமிழ்நாட்டின் முதல்வர் ஒரு எதிர்மறையான நடவடிக்கை மூலம் மறைமுகமான ஆதரவை கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை இன்று உலகமே திரும்பி பார்க்கின்ற அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார் இதில் பல அரசியல் கட்சிகள் பல கூத்துக்களை காட்டினாலும் மாணவர்கள் யாவற்றையுமே தங்களது சாதுரியமான நடவடிக்கை முலம் புறந்தள்ளி விட்டனர் என்பதே உண்மை! அவர்களின் ஒருங்கினைந்த
தகவல் பரிமாற்ற வீச்சும் அவர்களின்
போராட்ட வீச்சினை உயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது என்பது  உண்மைதான். மாணவர்களது பேஸ்புக், டிவீட்டர், கையடக்க தொலைபேசியுடனான குறுஞ்செய்திகள் யாவும் போரட்ட செய்திகள் , போரட்டம் பற்றிய அடுத்த நகர்வு அல்லது அடுத்த போராட்ட அறிவிப்பு போன்றவற்றால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன உண்மையிலேயே இது பலராலுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அமைந்திருந்தது. கல்லுரிகளுக்கிடையேயான,
மாவட்ட ரீதியான ஒன்று கூடலும் கலந்தாய்வுகளும் மாணவர்களின் போராட்ட வடிவங்களை
வெவ்வெறாக்கியது அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் மாணவர்கள் தமது பரப்புரைகளை
மேற்கொண்டு விஸ்தரித்தனர். இதன் மூலம் மத்திய அரசை ஆட்டம் காண செய்து விட்டனர்
ஜநாவில் உள்ள இந்திய துாதரை அவசரமாக அழைத்து மீள அனுப்ப வேண்டி நிலைக்கு
தள்ளப்பட்டானர். திமுக ஆதரவு விலக்கி கொள்ளப்பட்டதும்தான் மத்தியரசு நடவடிக்கைகளை
மேற்கொண்டதாக தெரியவில்லை மாணவர்களின் போராட்ட வடிவங்கள் மாற்றமடைந்ததன் விளைவே
காங்கிரஸ்சின் சோனியா வாய் திறக்கவும் காரணமாக அமைந்ததாக கருதலாம். மொத்தத்தில்
மாணவர்கள் ஓரு புதிய வரலாறு படைக்க தொடங்கி விட்டனர் என்றே கருதலாம் இதனுடாக
புலத்தில் உள்ள இளையோர் அமைப்பினர் போராட்டங்களை தமிழக மாணவர்களுக்கு சார்பாக
நிகழ்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் கருத்து வேறுபாடுகளை கடந்து சமகாலத்தில்,
சமநேரத்தில், ஓரே இலக்கு நோக்கி யாவரும் பயணித்தால் விடுதலை என்பது நிழலாகன்றி
நிஜமாக்க முடியும்!!



முன்னர் நான் குறிப்பிட்டது போல
மெய் சிலிர்க்க மறுத்த என் உணர்வுகள் மாணவர்களின் போராட்ட வீச்சினை பார்த்து
மீண்டும் மெய்சிலிர்த்தன விடுதலை இலக்கு என்பது நாம் போராடும்வரை துாரம்தான்
பேராடினால் எதுவுமே இயலாத ஒன்று என்று ஒன்றல்ல!!!



 



 



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் அறப் போராட்டம் ஆரம்பித்தபோது அதன் வீச்சையும் வேகத்தையும் சரியாகக் கணிக்க எவராலும் முடியவில்லை. நம்மில் பலர்கூட இது வழமையான ஒரு அடையாளப் போராட்டம்; சில நாட்களில் ஓய்ந்துவிடும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் பலரின் எதிர்வுகூறல்களுக்கு அப்பாலும் மாணவர்களின் அறப் போராட்டமானது இன்னமும் வீரியமாக வளர்ந்து வருகின்றது.

பல்வேறு நாடுகளின், குறிப்பாக இந்தியாவினதும் அமெரிக்காவினதும், ஆசியுடன் புலிகளை அழிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு பேரழிவைத் தந்திருந்தது. இறுதிக்காலத்தில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது சர்வதேச நாடுகள் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டிருந்தன. அவ்வேளையில் புலம்பெயர் நாடுகளில் அறவழியில் நடாத்தப்பட்ட போராட்டங்களும் தமிழர்களை அழிவில் இருந்து காப்பாற்றவில்லை. தமிழகத்தில் போரை நிறுத்த நடாத்தப்பட்ட போராட்டங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் அரசியல் சூது நாடகங்களால் எதுவித பயனையும் தராமல் இறுதியில் முள்ளிவாய்க்காலில் பெருத்த அழிவுடன் போர் முடிவுக்கு வந்திருந்தது.

போரில் புலிகளை வென்ற சிங்கள அரசும் அதன் பாதுகாப்புப் படைகளும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் கொடுப்பதை விடுத்து, தமிழ்த் தேசிய அடையாளத்தை இலங்கைத் தீவில் இருந்து அப்புறப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து பரவலாக இராணுவ முகாம்களை அமைத்தும், புலனாய்வுப் பிரிவுகள் மூலம் தமிழ் மக்களின் சாதாரண அரசியல் செயற்பாடுகளை அச்சுறுத்தியும் தமிழ் மக்களை தினமும் ஒடுக்கும் நடவடிக்கைகளையும், தமிழரின் தாயகத்தில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி தமிழர்களின் இன விகிசாரத்தை குறைத்து தமிழரை வட-கிழக்குப் பகுதிகளில் சிறுபான்மையினராக்கவும் துரிதமான திட்டங்களை வகுத்து அவற்றை எதுவித தடையுமின்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கடந்த நான்கு வருடங்களாக ஐ.நா. மூலம் போர்க்குற்றம், இனவழிப்பு போன்றவற்றை முன்னெடுத்து இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை காண எடுத்த முயற்சிகளும் நத்தை வேகத்தில் நகர்கின்றன. ஐ.நாவில் வைக்கப்பட்ட நீர்த்துப்போன தீர்மானங்களைக் கூட இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இத்தகைய அரசியல் பின்புலத்தில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இராணுவச் சாவடியில் உயிருடன் இருந்ததும், பின்னர் மிக அருகில் வைத்து இரக்கமின்றிச் சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் பட ஆதாரங்களாக வெளிவந்து உலகத் தமிழரை ஒரு உலுக்கு உலுக்கியது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கியது செய்திகளாக தமிழக மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படம் இறுதிப் போர் நாட்களில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தமிழக மாணவர்களின் அறவழிப் போராட்டம் ஒரு பொறியாக லயோலா கல்லூரியில் ஆரம்பித்து, சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம், ட்ருவிற்றர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் பெருந்தீயாகப் பரவி கட்சி சாராத அரபு வசந்தத்திற்கு இணையான ஒரு பாரிய அறவழிப் போராட்டமாக இன்று தமிழகமெங்கும் நடந்து வருகின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மாணவர்களின் அறப்போராட்டத்தின் முதலாவது வெற்றியாக தமிழக சட்டசபையில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் 'தனி ஈழம்' குறித்து வாக்கு எடுப்பு நடாத்தப்படவேண்டும் என்ற முக்கிய பிரேரணையையும் கொண்டுள்ளது. ஆயினும் இந்த்த் தீர்மானம் இதுவரை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலோ, இலங்கையரசின் தமிழ்மக்களுக்கு எதிரான கொள்கைகளிலோ எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. எனவே கடக்கவேண்டிய பாதை இன்னும் அதிகமாகவே உள்ளது. இதை நன்குணர்ந்த மாணவர்களும் தமது கல்வி செயற்பாடுகளைக் கவனிக்கவேண்டிய நிலையிலும் அறவழிப் போராட்டத்தைத் தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

மாணவர்களின் போராட்டம் இந்திய மத்திய அரசையும் அதன் கொள்கை வகுப்பாளர்களையும் சிக்கலுக்குள் கொண்டுவந்துள்ளது உண்மையே. இலங்கை அரசு சீனா பக்கம் சாயாமல் இருப்பதற்காக இலங்கை அரசிற்குப் பிடிக்காத செயற்பாடுகளையோ அழுத்தங்களையோ இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள முனையாது. அதேவேளை மாணவர்களின் கோரிக்கைகளையும் தொடர்ந்து தட்டிக் கழிக்கமுடியாது. அப்படித் தட்டிக் கழிக்க முனைந்தால் அது நீண்ட கால ரீதியில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு தீங்காக முடியலாம் என்பதும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு நன்கு தெரிந்ததே.

இவ்வாறான காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வெல்ல என்ன செய்கின்றார்கள்? என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன.

கடந்த ஒரு மாத காலச் செயற்பாடுகளைக் கவனிக்கும்போது தமிழக மாணவர்களின் போராட்டம், அது செல்லும் திசை, அது எவ்வளவு தூரம் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவும் என்பது பற்றிய அரசியல் உரையாடல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் அல்லது காட்ட முனைவோர் மாணவர் போராட்டம் பற்றி அதிகம் கருத்துக் கூறவில்லை. கட்சி சாராத மாணவர் போராட்டம் என்பதால் அவர்களுடன் அடையாளப்படுத்தி சாயம் பூசும் வேலைகள் பாதகமான விளைவுகளைத் தரும் என்பதால் தயங்குகின்றார்கள் என்ற வாதம் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் மாணவர்களின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத் தரும் அறிக்கைகளை ஒரே குரலில் ஒரு அறிக்கையாகவாவது இக்கட்சிகள்/அமைப்புக்கள் தந்திருக்கலாம்/தரலாம். அப்படி முடியாமல் இருப்பது தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் அரசியல் தலைமையில் பெரியதோர் வெற்றிடம் உள்ளததைத்தான் காட்டுகின்றது.

தாயகத்தில் இராணுவ அழுத்தங்கள் அதிகமாக இருப்பதாலும், தெருவில் இறங்கிப் போராடினால் வெலிக்கந்தவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுப்பில் இருக்கவேண்டி வரும் என்பது மாணவர்களைக் கட்டிப் போட்டாலும் தமிழ்த் தேசியத்தை உச்சரித்து அரசியல் செய்யும் கட்சிகள் நிலைமைகளை அவதானிக்கின்றோம் என்று சொல்லி வாளாவிருப்பது நல்லதல்ல.

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் மக்களைத் திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்திய புலம்பெயர் அமைப்புக்கள் தற்போது பார்வையாளர்களாகவே உள்ளனர். வெறும் அடையாள ஆர்ப்பாட்டங்களே புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்றன. ஈழத் தமிழ் மக்களாகிய எமது விடிவுக்கு அறவழியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏன் பாரிய பேரணிகளையோ, ஆர்ப்பாட்டங்களையோ செய்யமுடியாமல் உள்ளது? எல்லாமே முடிந்துவிட்டது, இனி எதுவும் எமது கையில் இல்லை என்ற எதிர்மறையான சிந்தனைகள் எம்மில் பெருகியுள்ளதும், ஓரணியில் இல்லாமல் குழுக்களாகப் பிரிந்து செயற்படுவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன. இவற்றினைப் புறந்தள்ளி, இலங்கையரசுடனான இணக்க அரசியலைக் கைவிட்டு ஓரணியில் செயற்படவேண்டிய காலம் இது. இல்லாவிடின் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் போகும் நிலைதான் தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

 

எனது விவாதத்தை தயாவின் கருத்துக்களை  உள் வாங்கி  ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றேன்

 

புலம் பெயர் தேசங்களில் மட்டுமல்ல தாயகத்திலும் இறுதியாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலும் செய்யப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் நீறு பூத்த நெருப்பாக எம்மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை உள் வாங்கி நாமே எதிர்பார்க்காத செய்தியாக எம்மனதிலும் அப்படி நீறுபூத்த நெருப்பாகவே ஈழத்தில் செய்யப்பட்ட தியாக வேள்வியும் அதில் கொடுக்கப்பட்ட போராளிகள் மற்றும் மக்களது தியாகங்களும்  அத்துடன்  அதைத்தொடர்ந்து நடாத்தப்பட்ட சாத்வீக போராட்டங்களுக்கு கிடைத்த ஒடுக்குமுறைகளும் பதிந்திருக்கின்றன என்ற  ஒரு எமது போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தமிழக மாணவர்களின் எழுச்சியையும் போராட்டத்தையும் நான் பார்க்கின்றேன்.  அந்தவகையில் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் அதிலும் முக்கியமாக இந்தியாவினதும் தொடர் ஏமாற்றுக்களும் புறக்கணிப்புக்களும் வஞ்சக போக்குமே இந்த மாணவர்களை இந்தநிலைக்கு கொண்டுவந்த காரணிகள்  போர் முடிந்து இந்த 4 ஆண்டு காலப்பகுதி  மாணவர்களால் மிகவும்  உன்னிப்பாக  அவதானிக்கப்பட்டிருப்பது அவர்களது பேச்சிலும் வீச்சிலும் தெரிகிறது. 

 

இதன் பெறுபேறு

 

தயாக குறிப்பிட்டது போல

அநாதரவான இனம்

ஒரு சிறு பான்மையான இனம்

என்றநிலை
மாறி  நான் எப்பொழுதுமே குறிப்பிட்டு வருவது போன்று தமிழனம் ஒரு
சிலிர்ப்புச்சிலிர்த்தால் சிங்களம் சிறு பான்மையாகிவிடும் என்பது
சிங்களத்துக்கும் இந்தியாவுக்கும் உலகுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் அமெரிக்கா இப்போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்கின்றோம் என்று
அறிவித்தது அதன் பலத்தை சொல்லி  நிற்கிறது.

 

 

இன்றைய எமது நிலை

எல்லாவகையாலும் போராடி எல்லாமே முறியடிக்கப்பட்டு கவனிக்காது விடப்பட்டு  இனி எமது நிலை அடிமை வாழ்வு தானா? என ஒரு சோர்வு  நிலை அடைந்த எமது போராட்டத்துக்கு பெரும்  கரம் கை கொடுப்பதாகவும் உந்துசக்தியளிப்பதாகவும் இந்த மாணவர் எழுச்சி அமைந்துள்ளது.  இனி புலம் பெயர்ந்த மற்றும் தாயக மக்களின் எழுச்சிகள் எதிர்பார்க்கப்படலாம்.  உலகம் முழுவதும் அதைக்காணக்கூடியதாக உள்ளது. அவை இனி  பொதுமக்கள் போராட்டமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கலாம். இதற்குநாம்  ஒவ்வொருவரும்  எமது முயற்சிகளையும் தூண்டுதல்களையும்  ஒத்துழைப்புக்களையும்  நல்கவேண்டும் இதுவே எமக்கான கடைசிசந்தர்ப்பமாக பார்க்கப்படவேண்டும்.

 

நன்றி

 

 

Link to comment
Share on other sites

மத்திய மாநில அரசுகளின் சட்ட நடவடிக்கைகளாலும் றோ உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் ஹிந்து றாம், சண் குழுமம் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரங்கள் அல்லது இருட்டடிப்புகள் காரணமாகவும் மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒரு பிரச்சினையாக இருந்த ஈழத் தமிழரின் அல்லல்களை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்றுள்ள தமிழக மாணவர்களுக்கும் அவர்களது ஆதரவாளரகளுக்கும் முதலில் என் சிரந்தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையை ஒத்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஈழம் வாழ் தமிழ் மக்களுக்கு தமது பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது என்பது மிகவும் சிக்கலாயுள்ள ஒரு நிலையிலும் தமது இருப்புக்களையும் சொத்துக்களையும் காத்துக் கொள்வதற்காய் திக்கிற்கொருவராய் பிரிந்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தந்த ஏமாற்றம் காரணமாய் புலத்திலே ஒரு பிரமாண்டமான கவனயீர்ப்பைச் செய்ய முடியாத நிலையிலும் ஈழத் தமிழர்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்தோம்.
 
தமிழகத்தின் பலம்வாய்ந்த, மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே தமது அரசியல் காய்நகர்த்தல்களுக்கான விடயமாகவே பார்த்துக் கொண்டிருந்த நிலையிலும் உள்ளார்ந்த தமிழுணர்வு கொண்ட தலைவர்களிடம் போதிய அரசியல் பலம் இல்லாத காரணத்தாலும் தமிழக மக்களின் உள்ளார்ந்த தமிழுணர்வையும் சகோதர பாசத்தையும் கிஞ்சித்தும் மதிக்காமல் மத்திய அரசும் அதிகாரிகளும் செயற்பட்ட நிலையே தொடர்ந்து நிலவி வந்தது.
 
ஆயினும் அரசியல் கட்சிகளின் தூண்டுதலோ பின்புலமோ இல்லாத ஒரு நேரத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் பற்ற வைத்த ஒரு சிறு பொறி இன்று பெரு நெருப்பாக மாறி ஈழத் தமிழருக்காய் குரலெழுப்பாதவர்கள் தமிழகத்தில் அரசியல் அனாதையாக்கப்படுவர் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருப்பதே மாணவர்களின் போராட்டத்தின் முதல் வெற்றி எனலாம்.
 
இதன் தொடர்ச்சி தான் மத்திய அரசிலிருந்து விலகும் திமுகவின் அறிவிப்பும் தனித் தமிழீழம் குறித்த சட்டசபைத் தீர்மானமுமாகும்.
 
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்களுக்கும் மாணவர்கள் என்றால் சினிமாவிற்கும் தொலைபேசிக்கும் அடிமையாகிப் போன சமூக எண்ணம் அற்ற ஒரு குழுமம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் பெரும் சாட்டையடியைத் தந்து தொடர்ந்தும் தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாணவர்களின் தமிழுணர்வும் சகோதர பாசமும் நெகிழ வைக்கிறது.
 
பெரும் உணர்வுடன் கிளர்ந்தெழுந்துள்ள இந்த மாணவர்களின் பொராட்டத்தை ஒருங்கிணைப்பது என்பது மிகச் சிரமமான ஒரு பணியென்பதை யாமறிவோம். அதன் காரணமாய் போராட்டத்தின் போது சிற்சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே கட்சி சாராத தமிழுணர்வுள்ள ஐயா பழ நெடுமாறன் உள்ளிட்டவர்களின் அரசியல் பட்டறிவை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உணர்ச்சிப் பிழம்பாயுள்ள மாணவ சமூகத்தின் சக்தியை மிகச் சரியான வழியில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பது என் கருத்து.
 
இந்தப் போராட்டம் மட்டுமே தமிழீழத்தையோ ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்;வையோ பெற்றுத் தந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்றாலும் இன்றைய நிலையில் மாணவர்க் ஆரம்பித்து வைத்துள்ள இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் இது மக்கள் போராட்டமாக மாறுகின்ற பட்சத்தில் மத்திய மாநில அரசுகளால் தமதெண்ணப்படி சிறிலங்காவுடனான அரசியல் தொடர்புகளைப் பேணுவதென்பது முடியாததொன்றாகி விடும்.
 
இந்த நேரத்தில் மாணவர் போராட்டத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் காட்டிவரும் பின்னடிப்பு சற்றுக் கவலை தருவதாயுள்ளது.
 
இந்த நாடுகளில் இயங்கி வரும் தமிழ் பாடசாலைகள். பழைய மாணவர் சங்கங்கள் ஏனைய ஆமைப்புகள் என்பன வெளிப்படையான தமது ஆதரவை மாணவரi; பொராட்டத்திற்கு வழங்க வேண்டும் அந்த ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்;பதே எனது கருத்தாயுள்ளது.
 
இறுதியாக எதிர்வரும் காலங்களில் இந்தப் போராட்டம் எவ்வாறமையப் போகிறது என்ற எதிர்வுகூறல் தற்போதைக்குச் சிரமமானதாயிருந்தாலும் மாணவர்கள் ஆரம்பித்து வைத்த இந்தப் பொறி தமிழரகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.
Link to comment
Share on other sites

பல உறவுகளும் தமிழகமாணவர் போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தந்த ஆதரவு காணாது என ஆதங்கப்படுகின்றனர்.

 

இங்கே போராட்டத்தினை ஆரம்பித்தவர்களும் முன்னெடுப்பவர்களும் மாணவர்களாகவே இருக்கவேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக மட்டுமே புலம்பெயர் நடவடிக்கைகள் இருக்கவும் வேண்டும்.
 
#1: புலம்பெயர் மாணவர்கள் தரும் சகோதர ஆதரவு : பல நாடுகளிலும் சிறிய அளவில் என்றாலும் ஆதரவு தரப்பட்டு உள்ளது. முதலாம் இரண்டாம் தலைமுறை மாணவர்கள் தரும் ஆதரவு பாராட்டுக்கு உரியது இதை தமிழக மாணவர்களும் ஏற்றுள்ளார்கள்.

#2: புலம்பெயர் ஈழ மக்கள் தரும் ஆதரவு: இது ஏமாற்றத்தை தந்தாலும், இந்த வகையான போராட்டங்களின் இலக்கு என்ன என்பதை நிர்ணயிக்கவேண்டும்.


தமிழக மாணவர்களுக்கு இவ்வாறான போராட்டங்கள் ஆதரவு தருமா?
அவற்றை இந்திய தூதுவராலயத்திற்கு முன்னால் செய்யவேண்டுமா? இல்லையா?
 
#3: புலம்பெயர் ஈழ மக்கள் தமிழக  மக்களின்  / மாணவர்களின் கோரிக்கைகளுக்கு வேறு வழியில் பலம் சேர்க்கலாம். தமது நாடுகள்  ஊடாக அரசியல் ரீதியாக மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை சேர்க்கலாம். பொருளாதார தடைக்கு பலம் சேர்க்கலாம். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தை புறக்கணிக்க பலம்  சேர்க்கலாம்....

#4: உலகம் வாழ் தமிழக மக்களும் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சிறு சிறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த முக்கிய நாடுகளில் எவ்வாறு அவர்களுடன் இணைந்து மாணவர் கோரிக்கைகளுக்கு அரசியல் பலம் சேர்க்கலாம் என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப்போராட்டம், மீண்டும் சுடர்விட்டெரியும் என்ற நம்பிக்கையை தமிழக மாணவர்களின் வடிவில் தன் வரலாற்றின் நீட்சியை புதிய களமுனையொன்றினூடாக திறந்துவிட்டுள்ளது. யாரும் கணித்துப் பார்க்காததும் எவரும் சிந்தித்திருக்காததுமான கோணத்தில் இருந்து இந்த வேள்வி தொடங்கப்பட்டு இன்று வீறு கொண்டு எழுந்து நிற்கிறது.

ஆயுதம், அறம் சார்ந்த அறுபது வருட போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணோடு மூச்சடங்கி போய்விடும் என்று மூக்கு சாத்திரம் சொன்னவர்களின் முழிகள் இப்போது பிதுங்குகின்றன. புலத்தில் வாழும் மக்களும் தாய் நிலத்தில் வாழும் மக்களும் இன்று தளம்பி நிற்கின்ற வேளையில் இந்த புதிய பாதையில் வேங்கைகள் கூட்டமொன்று புகுந்துள்ளது. இந்த எழிச்சியை இந்த மகிழ்ச்சியை நீர்த்துப்போகாமலும் வேர்த்துப்போகாமலும் பார்ப்பதும் மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை. அதற்காக ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அவர்களுக்கு வேண்டிய அரவணைப்புக்களையும் ஊடக வெளியிலும் தொடர்பாடல்கள் வழியிலும் கொடுத்துதவுதல் எமது எண்ணிய காரியத்தை எட்டிட வழி வகை செய்யும்.

என்றைக்கும் இல்லாத எழிச்சி இன்றைக்கு தமிழக மண்ணில் கருக்கூட்டி களமாடுகின்றதென்றால் இதற்கு முதன்மையாக பங்கு வகிப்பது ஊடகங்களின் தொழிற்படும் நிலைப்பாடாகும். இன்றைய சூழலில் அன்றைய ஈழத்தின் கொடிய போரின் வலியினை ஒரு சில ஊடகங்கள் சுதந்திரமாக வெளியிட்டு வெளிச்சம்போட்டு காட்டியதன் காரணமாகவே நிகழ்தவொன்றெனலாம். அத்தோடு, இணைய வழி தொடர்பாடல்களின் வளர்ச்சியும் விரிச்சியும் இதற்கு இன்னொரு கருவியாகும்.

அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உண்மை நிலவரத்தினை  திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இருட்டடிப்பு செய்தும் மூண்ட தீயினை கூட தீர்த்து போகச் செய்யவும் ஊடகங்கள் ஊமையாக்கப்பட்டன. அன்று முற்று முழுதாக அதிகார மனிதர்களின் கைகளில் ஊடகங்கள் அடங்கிக்கிடந்ததனாலேயே அவைகள் உண்மை நிலையினைப்பேசவில்லை. உண்மையும் அதனால் எழும் உணர்வும் அவர்களின் இருப்புக்கு சிறப்புக்கும் சிக்கலைத்தரும் என்பதினால் வஞ்சகர்கள் எம்மை வஞ்சித்தனர். இன்று அதில் ஓரளவுக்கு மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது அதனாலேயே இளம் வீரர்கள் இன்று உண்மையினைக்கண்டு துடித்து வீதிக்கு வந்துள்ளனர். எதிர் காலத்தில் ஊடகத்தளம் அங்கு தங்கு தடையின்றி மூலை முடுக்கெல்லாம் சுதந்திரமாக உலாவிவர நாம் வழிவகை செய்தல் வேண்டும்.

எம் சோகங்களையும் வேதனைகளையும் கொண்டு தமிழகத்தை தட்டியெழுப்ப தமிழக உறவுகளின்  உணர்வுபூர்வமானதும் உன்னதமானதுமான பரப்புரைகளுக்கும் எழிசியுரைகளுக்கும் முக்கிய இடமுண்டு. இவர்களின் கவனயீர்ப்பு போராட்டங்களும் கருத்துரைகளுமே இன்றைய மாணவர்களின் எழிச்சிக்கோலத்துக்கு முன்னோடியானவை. இப்படியான ஒரு சூழ்நிலையை கட்டியமைக்க தமிழ்த்தாயின் பிள்ளைகள் கண்டு கொண்ட துன்பங்கள் துயரங்கள் சொல்லிமாளாதவை. வலிய இரும்பு கோட்டையொன்றை இருகரம் கொண்டு இடித்து தகத்து தக்கவைத்துள்ள சாதனை இதுவாகும். இன்று தமிழர்களுக்கு உதவாத மாயக் கோட்பாடுகளை தகர்த்து மண்ணின் மைந்தர்கள் அங்கு மண்ணாளும் ஏற்பாடுகளை விதைத்து விருட்சமாய் எழுந்து நிற்கின்றார்கள். இந்த விருட்சத்தை போற்றி தமிழீழ மோட்சத்தை ஏற்றிக் கொள்ளுவது காலத்தின் தேவை.

இதற்காக தமிழகம் தமிழகம் தாண்டிய மாபெரும் பரப்புரைப்பணியை மாணவ மணிகளும் மண்ணின் மைந்தர்களும் இன்னும் செய்ய வேண்டியுள்ளது. இவைகள் கலைகள், கருத்துரைகள், கண்காட்சிகள் வாயிலாக நகரம் முதல் கிராமம் வரை உண்மையினை மக்களின் காலடிக்கு கொண்டு சென்று வென்று வரவேண்டியுள்ளது. இவர்களுக்கு பலமாய் ஐந்நிலங்களெங்கும் அகதியாய் அலையும் அன்பு உறவுகள் நாங்கள் என்றும் உறுதுணையாய் இருக்கவேண்டியுள்ளது.

அறம் நிலைக்கும் புறம் இளைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இன்று சுயம்பாக எழுந்துள்ளது தமிழக மாணவகளின் போராட்டக்களம். இந்த கொதி நிலையின் பாதி நிலை எமக்கு நம்பிக்கை தந்து கொண்டிருந்தாலும் மீதி நிலை தொடர்பில் எமக்கு கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

மாணவர்களின் போராட்டம் ஆதிக்க சக்திகளின் ஓட்டங்களுக்கும் அதிகாரக் கரங்களின் ஆட்டங்களுக்கும் ஈடு கொடுத்து முன் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களின் முயற்சிகள் எங்கேனும் வஞ்சக வலைக்குள்ளோ அல்லது வெஞ்சின அலைக்குள்ளோ சிக்கி சீரழிந்து விடுமோ என்கின்ற அச்சமே அது. இது தொடர்பிலும் அவர்களுக்கு நாங்கள் ஊடகங்கள் வாயிலாகவோ தொடர்பாடல்கள் மூலமாகவோ வேண்டியதை செய்ய வேண்டியுமிருக்கின்றது இவைகளே அவர்களுக்கு உந்துசக்தியை இன்னும் ஊட்டும் .

ஆனாலும் களத்தில் நிற்கும் கரும வீரர்கள் என்ன சொல்கிறார்கள்..

மாணவி திவ்யா,
”எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம்.
‘இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.
எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். ”

மாணவன் ஜோ.பிரிட்டோ,
”எங்களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காகவோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது.

மாணவன் செம்பியன்,
”மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்கள்.

உண்மையில் சீராகவும் சிறப்பாகவும் சென்று கொண்டிருக்கும் போராட்டதை சீர் குலைக்கும் வேலைகளில் சில்லறைக்கூட்டங்கள் இப்போது சீண்டிட வீதிக்கு வருவதை காண்கிறோம். இந்த இடத்திலும் இதுபோன்ற இடத்திலும் மாணவ மணிகள் நிதானமாகவும் அவதானமுமாக இருப்பதே பிரதானமாகும். அத்தோடு, போராட்ட களத்தையும் போராட்ட கருத்தையும் நரித்தனமாக கைப்பற்ற  கயவர்கள் கூட்டம் கண்ணி வைப்பதையும் களத்தின் நாயகர் கருத்தில் கொள்ளவேண்டும். கருத்தில் கொள்ளுவார்கள் அதற்கான வல்லமைகளும் வல்லவர்களும் அவர்களுக்குள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் கருத்து வெளியிலும் ஆதரவு தளத்து வழியிலும் அவர்களுக்கு நாங்கள் எல்லா வகையிலும் கைகொடுத்து பக்க பலமாய் பயணிப்போம்.

Link to comment
Share on other sites

உண்மையில் இப்படியான ஒரு உணர்வாவது தமிழ் நாட்டு மாணவர்களிடம்  இருக்கென்று பெருமைப்படலாம்.அடுத்த தலை முறைக்கும் சில விடயங்கள் எடுத்து செல்லப்படலாம் .

அதைவிட்டு ஒரு அரபு ஸ்பிரிங்கை இந்தியாவில் எதிர்பார்த்தால் அது மடைமைத்தனம்.

எம்மவர் இப்போ எங்கு எது கிடைத்தாலும் அதில் பிடித்து தொங்கத்தயார் அதுவும் சில ஊடகங்கள் காங்கிரஸ் அரசே ஆட்டம் காணப்போகின்றது சோனியா இத்தாலிக்கு ஓட போகின்றார் என்ற ரீதியில் எடுப்பு எடுத்தது ரொம்ப ஓவர் (இங்கும் சிலர் அதை நம்பிவிட்டார்கள்.இவர்கள் எதைத்தான் நம்பவில்லை  ).

 

Link to comment
Share on other sites

காங்கிரஸ் ஆட்டம் காணப்போகிறது என்றது வரைக்கும்தான் தெரிய வந்தது. கருணாநிதி காங்கிரசை விட்டு விலகியதும் தெரியும்.

 

சோனிய இத்தாலி போகப்போவது மாதிரியாகவும் படித்தீர்களா? அப்போது கிந்தியர் இனி "ராகுல் சோனியாவுக்கு" பிரதமர் பதவி இல்லை என்று சொல்லிவிட்டார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.