Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்''


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

 

அவர்கள் யதார்த்தத்தை எழுதியிருக்கிறார்கள்.  நீங்கள் கற்பனையில் வாழ்கிறீர்கள்.  யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவாவது முயற்சியுங்கள்.  இந்த யதார்த்தம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் வேதனையான விடயம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுதானா ???????

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

Link to post
Share on other sites

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

 

உங்களுக்காகவாவது எனது தமிழ் புரிந்ததே மல்லை . அந்தவகையில் எனக்குச் சந்தோசமே :) :) .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே வேறு யாராவது செய்யும்போது பார்வையாளர்களாக நின்று பார்த்து நாலு நொட்டை, நொடிகள் சொல்லிப் பழகிவிட்டதாலும், மேய்ப்பர்கள் எவரும் சரியான வழிகாட்டலைத் தராததாலும் உரையாடலில் என்னத்தைச் சொல்வது என்ற குழப்பம் இருக்கலாம். அதுதான் பலர் பேசாமல் இருக்கின்றார்கள்.
 

Link to post
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பினால் அதை செய்யுங்கோ ,விரும்பினவர்கள் அப்பப்போ தோன்றும் கருத்துகளையும் எழுதட்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ஆயுதப் போராட்டாமிருந்தாலும் சரி,அரசியல் போராட்டமாயிருந்தாலும் சரி உணர்ச்சி வசப்பட்டு போராடப் போவதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை...இந்தப் போராட்டமானது இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?...சலிப்பு வந்தவுடன் தாங்களாகவே போராட்டத்தை கொஞ்சங் கொஞ்சமாய் நிறுத்தி விடுவார்கள்...இறுதி யுத்தம் நடக்கும் போது புலம் மக்களோடு[மாணவர்களோடு]இவர்களும் போராட்டத்தை நடத்தி இருந்தால் அங்கு கொல்லப்பட்ட மக்களில் அரைவாசிப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம்...அந்த நேரத்திலும் தமிழகத்தில் மாணவர்கள் இருந்தார்கள் தானே அந் நேரம் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது...அரசியல்வாதிகள் போராட விடவில்லை என்பதெல்லாம் நொண்டிச் சாட்டு...வைகோவும்,சீமானும் இருந்தார்கள் தானே! அவர்கள் இருந்தும் எதனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது?
 
பாலசந்திரனின் கொலைக்கு நியாயம் கேட்டும்,மகிந்தா சகோதரர்களை தூக்கில் போடச் சொல்லிக் கோரிக்கை வைப்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்டாலும் கொத்துக் கொத்தாய் சிறுவ,சிறுமிகள் கொல்லப்படும் போது பக்கத்தில் அதுவும் 4 வருடங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டு இருந்து போட்டு பாலசந்திரனின் படத்தைப் பார்த்ததும் பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது என்பது ஏற்கக் கூடியதாய் இல்லை :(
 
எதுவும் காரணத்தோடு தான் நடக்க வேண்டும் ...காரணமில்லாமல் நடக்கின்ற எதுவும் வெற்றியளிக்காது...ஒவ்வொரு வருடமும்,தங்கட படிப்பு முடிய இந்த மாணவர்கள் தங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்...இவர்கள் இப்படித் தான் போராட்டம் அது,இது என தொடங்குவார்கள் கொஞ்ச நாள் போக தாங்களாவே அடங்கிடுவார்கள் என்று தான் அரசும்,மற்றவர்களும் நினைப்பார்கள்...தமிழர்கள் என்டாலே இப்படித் தான் எதுவும் காரணமில்லாமல் தொடங்குவதும் பின் இடையில் விடுவதும் தான் அவர்களது பழக்கம் என்றாகி விடும்.
 
கிருபன் எழுதியிருந்தார் புலம் பெயர் நாட்டில் மக்கள் இப்ப ஒரு போராட்டங்களையும் செய்வதில்லை என கேட்டு இருந்தார்...நாங்கள் தோத்துட்டமே என்ட விரக்தியை விட கடைசி நேரத்தில் லண்டனில் மாணவர்களுக்கு இடையே நடந்த பாகுபாடும்,குழுப் பிரிப்பும் அடி பிடியும் சண்டையும்,அது பத்தாதென்று இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள்,பெரிய மனிதர்களின் தலையிடு,நீ பெரிசா,நான் பெரிசா என்று சண்டைகள் வேறு நடந்தது...இது எல்லாம் சேர்ந்து தான் இங்கு போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டது இல்லா விட்டால் சுழற்சி முறையில் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை இன்று வரை தொடர்ந்திருக்கலாம்...இது லண்டன் கதை மற்ற நாடுகளில் என்ன நடந்ததோ தெரியாது...என்னைப் பொறுத்த வரை தமிழனை அழிக்க வேறு ஒருத்தரும் தேவையில்லை தமிழனே போதும்.
 
இனி மேல் போராட்டம் என்பது மக்கள் எழுச்சியாகத் இருக்க வேண்டும்...அதில் தமிழ்,முஸ்லீம் மக்கள் இருக்க வேண்டும்...இலங்கையில் அனைத்து தமிழ் பேசும் பகுதியில் தொடங்கப்பட்டு அதே நேரத்தில் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு,உலகம் பூரா இருக்கும் அனைத்து மக்களும் சேர்ந்து போராட வேண்டும்...அதுவே எமக்கு வெற்றியை பெற்றுத் தரும் அல்லது உலக நாடுகள் சேர்ந்து எதாவது ஒரு காரணத்திற்காக போனாப் போகுது என எமக்கு ஒரு நல்ல தீர்வைத் தர வேண்டும்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

 

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

 

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...விவாதங்கள் தொடர்ந்து நடக்கும் போது தான் தெளிவு பிறக்கும்...எப்படி ஒரு விடயம் சம்மந்தமாக ஒருவர் எழுதும் ஒரு கருத்தை வைத்து கொண்டு அவர் என்ன சொல்ல வாறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.


 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.

 

 

விசுகு அண்ணா இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தாலே உங்களுக்கு விளங்க வேண்டும் ஏன் இந்தத் திரியில் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என்று...பதில் கருத்து எழுத முடியாமல்[ தெரியாமல்] இப்படி எழுதுபவர்களுக்கு பயந்து தான் ஒருத்தரும் இத் திரியில் கருத்து எழுதுவதில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அம்மணி ரதி , எல்லோரையும் போல் நானும் மூஞ்சிபொத்தகத்திலிருந்து மூலைமுடுக்கெல்லாம் முளைச்சிக்கிடக்கின்ற இ தளங்களுக்குள் நாளும் ஈயாக அலைகின்றேன். எல்லா இடத்திலையும் ஊத்துகின்ற கருத்துக்களையும் சாத்துகின்ற சரத்துக்களையும் அள்ளி அள்ளி கூட்டினால் இந்த உலகத்தில வைக்க இடமில்ல.  

கருத்து சொல்வது பிழையென்று நான் சொல்ல வரவில்லை. ஆண்டாண்டு காலமாக கருத்து சொல்லியாச்சி கடமையை முடிச்சாச்சி என்ற கணக்கோடு காலாவதியாகி கணக்கு விடுகின்றார்களே என்றுதான் சொல்லுகின்றேன். ஆனால், சிலர்தான் கருத்துக்கு கைகாட்டிவிட்டு செயலுக்கு முகம் காட்டுகின்றார்கள்.

தமிழக மாணவர்களின் போராடம் செயல்.

முள்ளிவாய்க்காலின் பின் இன்றுவரை துள்ளிவாய்பிளந்த எத்தனையோ கொள்ளிவாய் போசகர்களின் கருத்துப் பிதற்றல்களுக்கும் காய் நகர்த்தல் சுற்றலுக்கும் பஞ்சமில்லை இணைய மேடையில் ஆனால், ஆன காரியம் ஒன்றுமில்லை.

அதனால்தான் அம்மணி தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும் என்கின்ற அநியாயதை பொதுவிட்டு சாட்டியிருந்தேன். ஆனால், வீட்டிலே குந்தியிருந்து இ ஏட்டிலே மட்டும் பலவாறு கோட்டை கட்டுகின்ற இவர்களுக்கும் மற்றய  தமிழர்களுக்கும் மாணவர்களின் போராட்டம் ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது என்றேன் அது தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது இனியும் தணியாது என்பதையே. ஏன் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சூழலிலே இளம் மாணவர்கள் தமிழீழம் கேட்டு சுழன்றடித்தார்கள் என்றபடியினால்.

ஆக, எங்கும் நீங்கள் எதையும் எழுதுங்கள் எதையும் கிழியுங்கள் ஆனால், தமிழக மாணவர்களின் எழிச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான மீள் வளர்ச்சி என தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடலுக்கு எனது கருத்தை மேலே இறுதி செய்திருந்தேன் அவ்வளவுதான் அம்மணி வேறோன்றுமில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்தக் குதர்க்கம்தானே வேண்டாங்கிறது. சரியாகத் தமிழில்தானே எழுதியிருந்தேன்? விளங்கவிட்டால் மீண்டும் ஒருமுறை, "தன் தலைவனை, தன் போராட்டத்தை எதிரியிடம் காட்டிக்கொடுத்து, விற்று  சன்மானம், சலுகை, பதவி பெற்ற ஒருவரை எவ்வாறு அழைப்பது?"  இதுவே எனது கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள். தெரியாவிட்டால், சொல்ல நா வராவிட்டால் விடுங்கள் . நான் தப்பாய் எடுக்க மாட்டேன். இலை மரத்தில் இருந்தாற்தான் அழகாக, பசுமையாக இருக்கும்.  இலை என்று அழைக்கப்படும்.  மரத்தில் இருந்து உதிர்ந்துவிட்டால் அது வெறும் சருகே. 
  • அத்தனை மடைச்சியா நான்??அது பழசு அது நீங்கள் என்று அன்றே கண்டுபிடிச்சிட்டன் 😀 நன்றி இனிமேல் உந்தச் சமையல் எல்லாம் செய்யிறேல்லை எண்டு  நினைச்சிருக்கு
  • இதை பார்த்தல் M2 போல இருக்கு  M2 என்றால் புதுசு $5 மில்லியனுக்கு வாங்கலாம்  எனது நண்பர் ஒருவரும் டொரோண்டோவில்  ஒரு பிளேன் வாங்கி பறந்து திரிகிறார்.   
  • என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன். மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார். "வணக்கம் எப்படி இருக்கிறாய்" " சரியான தண்ணீர்த் தாகம்" " இப்ப தலை சுற்றலில்லையா" " இல்லை. எனக்கு என்ன நோய்" " உனக்கு liver இல் தான் பிரச்சனை" "அதிலா கான்சர்" " உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு" " எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே" "உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்" " இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு" " நீ அல்ககோல் குடிப்பாயா" " இல்லை " எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது. " சிகரெட் பிடிக்கிறனியா" " எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை" " கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்" " ஓமோம் மூன்று குழந்தைகள்" " வேலை செய்கிறாயா" " ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது" " கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் " " ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் " " ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்" " நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் " " இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் " " காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...." "என்ன குளிசைகள் பாவிக்கிறாய்" "பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்" " எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் " "கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்" " உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா" " என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா" "இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்" "முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்" அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது" "மஞ்சள் காமாளையா" "ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்" "கோப்பி குடிப்பேன்" " வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு" "ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்" "மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை" "அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை" எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன். " வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder " " இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது" " யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்" " எந்தளவு குடித்தாய்" " இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்" "உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா" " மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை" " நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "    " அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் "  " இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு" "சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே" "ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.     பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.    வரும் இன்னும்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.