Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்''


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் உரிமைப்போராட்டம் சார்ந்து

அந்த மக்களுக்கான நீதியான தீர்வு சார்ந்து

சிந்திப்போர் எவரும்  அடுத்த கட்டத்தை  அல்லது அதில் ஒரு தொய்வு வரும்போது அதை எவ்வாறு நிவர்த்தி  செய்து நகர்த்தலாம் என்றே  சிந்திப்பர். மாற்றாக

இது இவ்வளவு தானா???

அல்லது

முன்னரே சொன்னனான் தானே போன்ற நகைப்புக்கள் அவர்களின் மக்கள் மீதான கரிசனையையும் வேறு எவரதோ பகையை  இங்கு தீர்த்துக்கொள்ளலையுமே காட்டி நிற்கின்றது. 

இது போன்ற நகைப்புக்களை  தமது சொந்த இனம் மீது இவர்கள் உமிழ்வது மல்லாக்காகப்படுத்தக்கொண்டு துப்புவதற்கு சமன்.

 

 

அவர்கள் யதார்த்தத்தை எழுதியிருக்கிறார்கள்.  நீங்கள் கற்பனையில் வாழ்கிறீர்கள்.  யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவாவது முயற்சியுங்கள்.  இந்த யதார்த்தம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் வேதனையான விடயம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுதானா ???????

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

Link to post
Share on other sites

இதன் பொருள் என்ன?

 

நான் எடுத்த பொருள்  யாழ்க்களத்தோர் ஆர்வமாக மாணவ போராட்ட உடையாடலில்  பங்கு பற்றுகிறார்கள் இல்லை என்பதாகும். 

 

உங்களுக்காகவாவது எனது தமிழ் புரிந்ததே மல்லை . அந்தவகையில் எனக்குச் சந்தோசமே :) :) .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே வேறு யாராவது செய்யும்போது பார்வையாளர்களாக நின்று பார்த்து நாலு நொட்டை, நொடிகள் சொல்லிப் பழகிவிட்டதாலும், மேய்ப்பர்கள் எவரும் சரியான வழிகாட்டலைத் தராததாலும் உரையாடலில் என்னத்தைச் சொல்வது என்ற குழப்பம் இருக்கலாம். அதுதான் பலர் பேசாமல் இருக்கின்றார்கள்.
 

Link to post
Share on other sites

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பினால் அதை செய்யுங்கோ ,விரும்பினவர்கள் அப்பப்போ தோன்றும் கருத்துகளையும் எழுதட்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ஆயுதப் போராட்டாமிருந்தாலும் சரி,அரசியல் போராட்டமாயிருந்தாலும் சரி உணர்ச்சி வசப்பட்டு போராடப் போவதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை...இந்தப் போராட்டமானது இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?...சலிப்பு வந்தவுடன் தாங்களாகவே போராட்டத்தை கொஞ்சங் கொஞ்சமாய் நிறுத்தி விடுவார்கள்...இறுதி யுத்தம் நடக்கும் போது புலம் மக்களோடு[மாணவர்களோடு]இவர்களும் போராட்டத்தை நடத்தி இருந்தால் அங்கு கொல்லப்பட்ட மக்களில் அரைவாசிப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம்...அந்த நேரத்திலும் தமிழகத்தில் மாணவர்கள் இருந்தார்கள் தானே அந் நேரம் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது...அரசியல்வாதிகள் போராட விடவில்லை என்பதெல்லாம் நொண்டிச் சாட்டு...வைகோவும்,சீமானும் இருந்தார்கள் தானே! அவர்கள் இருந்தும் எதனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது?
 
பாலசந்திரனின் கொலைக்கு நியாயம் கேட்டும்,மகிந்தா சகோதரர்களை தூக்கில் போடச் சொல்லிக் கோரிக்கை வைப்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்டாலும் கொத்துக் கொத்தாய் சிறுவ,சிறுமிகள் கொல்லப்படும் போது பக்கத்தில் அதுவும் 4 வருடங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டு இருந்து போட்டு பாலசந்திரனின் படத்தைப் பார்த்ததும் பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது என்பது ஏற்கக் கூடியதாய் இல்லை :(
 
எதுவும் காரணத்தோடு தான் நடக்க வேண்டும் ...காரணமில்லாமல் நடக்கின்ற எதுவும் வெற்றியளிக்காது...ஒவ்வொரு வருடமும்,தங்கட படிப்பு முடிய இந்த மாணவர்கள் தங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்...இவர்கள் இப்படித் தான் போராட்டம் அது,இது என தொடங்குவார்கள் கொஞ்ச நாள் போக தாங்களாவே அடங்கிடுவார்கள் என்று தான் அரசும்,மற்றவர்களும் நினைப்பார்கள்...தமிழர்கள் என்டாலே இப்படித் தான் எதுவும் காரணமில்லாமல் தொடங்குவதும் பின் இடையில் விடுவதும் தான் அவர்களது பழக்கம் என்றாகி விடும்.
 
கிருபன் எழுதியிருந்தார் புலம் பெயர் நாட்டில் மக்கள் இப்ப ஒரு போராட்டங்களையும் செய்வதில்லை என கேட்டு இருந்தார்...நாங்கள் தோத்துட்டமே என்ட விரக்தியை விட கடைசி நேரத்தில் லண்டனில் மாணவர்களுக்கு இடையே நடந்த பாகுபாடும்,குழுப் பிரிப்பும் அடி பிடியும் சண்டையும்,அது பத்தாதென்று இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள்,பெரிய மனிதர்களின் தலையிடு,நீ பெரிசா,நான் பெரிசா என்று சண்டைகள் வேறு நடந்தது...இது எல்லாம் சேர்ந்து தான் இங்கு போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டது இல்லா விட்டால் சுழற்சி முறையில் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை இன்று வரை தொடர்ந்திருக்கலாம்...இது லண்டன் கதை மற்ற நாடுகளில் என்ன நடந்ததோ தெரியாது...என்னைப் பொறுத்த வரை தமிழனை அழிக்க வேறு ஒருத்தரும் தேவையில்லை தமிழனே போதும்.
 
இனி மேல் போராட்டம் என்பது மக்கள் எழுச்சியாகத் இருக்க வேண்டும்...அதில் தமிழ்,முஸ்லீம் மக்கள் இருக்க வேண்டும்...இலங்கையில் அனைத்து தமிழ் பேசும் பகுதியில் தொடங்கப்பட்டு அதே நேரத்தில் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு,உலகம் பூரா இருக்கும் அனைத்து மக்களும் சேர்ந்து போராட வேண்டும்...அதுவே எமக்கு வெற்றியை பெற்றுத் தரும் அல்லது உலக நாடுகள் சேர்ந்து எதாவது ஒரு காரணத்திற்காக போனாப் போகுது என எமக்கு ஒரு நல்ல தீர்வைத் தர வேண்டும்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு உரையாடலில் ஒரு கருத்தை மட்டும் பதிவதே நல்லது..! அவ்வாறு இல்லாவிட்டால் விவாதம் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

 

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது வரவேற்கத்தக்க கருத்து.

யாழ் இணைய நிர்வாகம் இதை பொது விதியாகக் கொண்டுவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முடிவற்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை இக் களத்தில் கண்டதும் இல்லை.

 

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...விவாதங்கள் தொடர்ந்து நடக்கும் போது தான் தெளிவு பிறக்கும்...எப்படி ஒரு விடயம் சம்மந்தமாக ஒருவர் எழுதும் ஒரு கருத்தை வைத்து கொண்டு அவர் என்ன சொல்ல வாறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.


 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும், அவர்களின் எழிச்சி பகைவர்களுக்கும், எம் பழைய புதிய அரசியல் வித்தகர்களுக்கும், மாற்றமே இல்லாத மாற்றுக்கருத்து பொத்தகர்களுக்கும், ஒரு நீண்ட சூனிய காலத்தடத்தில் கூனிய முதுகுகளை நிமிர்த்தி, மாட்டிய முகமூடிகளை கழட்டி  முணுமுணுக்கும் எம் முன்னாள் மறத்தமிழ் மாணிக்கங்களுக்கும், இன்னும் வெந்து போய் நொந்து போய் பாயிலும் நோயிலும் வீழ்ந்து போய்க் கிடக்கின்ற எந் தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் திண்ணங்களுக்கும் எதிராக  ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது, இனியும் தணியாது என்பதையே.

 

 

விசுகு அண்ணா இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தாலே உங்களுக்கு விளங்க வேண்டும் ஏன் இந்தத் திரியில் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என்று...பதில் கருத்து எழுத முடியாமல்[ தெரியாமல்] இப்படி எழுதுபவர்களுக்கு பயந்து தான் ஒருத்தரும் இத் திரியில் கருத்து எழுதுவதில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அம்மணி ரதி , எல்லோரையும் போல் நானும் மூஞ்சிபொத்தகத்திலிருந்து மூலைமுடுக்கெல்லாம் முளைச்சிக்கிடக்கின்ற இ தளங்களுக்குள் நாளும் ஈயாக அலைகின்றேன். எல்லா இடத்திலையும் ஊத்துகின்ற கருத்துக்களையும் சாத்துகின்ற சரத்துக்களையும் அள்ளி அள்ளி கூட்டினால் இந்த உலகத்தில வைக்க இடமில்ல.  

கருத்து சொல்வது பிழையென்று நான் சொல்ல வரவில்லை. ஆண்டாண்டு காலமாக கருத்து சொல்லியாச்சி கடமையை முடிச்சாச்சி என்ற கணக்கோடு காலாவதியாகி கணக்கு விடுகின்றார்களே என்றுதான் சொல்லுகின்றேன். ஆனால், சிலர்தான் கருத்துக்கு கைகாட்டிவிட்டு செயலுக்கு முகம் காட்டுகின்றார்கள்.

தமிழக மாணவர்களின் போராடம் செயல்.

முள்ளிவாய்க்காலின் பின் இன்றுவரை துள்ளிவாய்பிளந்த எத்தனையோ கொள்ளிவாய் போசகர்களின் கருத்துப் பிதற்றல்களுக்கும் காய் நகர்த்தல் சுற்றலுக்கும் பஞ்சமில்லை இணைய மேடையில் ஆனால், ஆன காரியம் ஒன்றுமில்லை.

அதனால்தான் அம்மணி தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கண்ட கண்ட கருத்து கழிப்பிடங்களில் கண்ட கண்டவர்களால் கண்ட கண்டபடி துப்பப்பட்டிருந்தாலும் என்கின்ற அநியாயதை பொதுவிட்டு சாட்டியிருந்தேன். ஆனால், வீட்டிலே குந்தியிருந்து இ ஏட்டிலே மட்டும் பலவாறு கோட்டை கட்டுகின்ற இவர்களுக்கும் மற்றய  தமிழர்களுக்கும் மாணவர்களின் போராட்டம் ஒன்றை மட்டும் அடித்து உரைத்து இடித்து விறைத்து சொல்லி நிக்கிறது என்றேன் அது தமிழீழ விடுதலைப்போராட்டம் இனியும் ஓயாது இனியும் தணியாது என்பதையே. ஏன் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சூழலிலே இளம் மாணவர்கள் தமிழீழம் கேட்டு சுழன்றடித்தார்கள் என்றபடியினால்.

ஆக, எங்கும் நீங்கள் எதையும் எழுதுங்கள் எதையும் கிழியுங்கள் ஆனால், தமிழக மாணவர்களின் எழிச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான மீள் வளர்ச்சி என தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடலுக்கு எனது கருத்தை மேலே இறுதி செய்திருந்தேன் அவ்வளவுதான் அம்மணி வேறோன்றுமில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன்   (வ.சக்திவேல்) கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர். காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர். கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.   https://thinakkural.lk/article/92891
  • காட்டு மிராண்டிகளிடம்... நாகரீகத்தை, எதிர்பார்க்க முடியாது. 
  • ⭐🌟66ஆவது அகவையில் கால் பதிக்கும் எங்கள் அண்ணாவை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் வணங்குகிறேன்.🌟⭐💖🙏  
  • Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி   நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது. பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரப்படுத்தலில், கொமர்ஷல் வங்கிக்கு 27.6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் 30 ஆவது இடத்தைப் பெற்ற நிறுவனத்துக்கு 4.4 புள்ளிகள் கிடைத்திருக்க, இரண்டாவது இடம் கிடைத்த நிறுவனத்துக்கு 26.95 புள்ளிகள் கிடைத்திருந்தன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன், பூகோளப் பெருந்தொற்று ஆரம்பிக்க முன்னரேயே குறிப்பிடத்தக்களவு சவால்களை வழங்கிய ஓர் ஆண்டில், பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் முதலிடத்துக்கு நாங்கள் மீள வந்தமை குறித்து, நாங்கள் இயல்பாகவே பெருமகிழ்ச்சியடைகிறோம். கூட்டாண்மை நிறுவனமொன்றின் உறுதிக்கான மிகச்சிறந்த பரீட்சையாக இன்னல்களே காணப்படுகின்றன. பெருந்தொற்றின் தாக்கங்கள் தொடர்ச்சியாக உணரப்படும் நேரத்தில், இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள முன்னரெப்போதும் ஏற்படாத சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கொமர்ஷல் வங்கியின் முழு அணிக்கும் இந்தத் தரப்படுத்தலில் கிடைத்துள்ள அடைவை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் எனத் தெரிவித்தார். தரப்படுத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிஸ்னஸ் டுடே, 2019-20 காலப்பகுதிக்கான பிஸ்னஸ் டுடே முதல் 30 தரப்படுத்தலில் இம்முறை நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீண்டகாலமாகச் செயற்பட்ட அனுபவம் மிக்க நிறுவனங்கள் தமக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள, சில நிறுவனங்கள் முதன்முறையாகத் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளன. தற்போதுள்ளதைப் போன்ற சவாலானதொரு காலப்பகுதியில், கூட்டாண்மை நிறுவன உலகில் புதிய நிறுவனங்கள் தமது அடையாளத்தைப் பதிப்பதென்பது ஊக்கத்தைத் தரும் ஒன்றாகும் எனத் தெரிவித்தது. 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பலமான வங்கி வணிகக்குறி என பிரான்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கி, 1.4 ட்ரில்லியன் ரூபாய் மொத்தச் சொத்துக்கள், 150 பில்லியன் ரூபாய் மொத்த வருமானம், 17.4 பில்லியன் ரூபாய் நிகர இலாபம் 1.07 ட்ரில்லியன் ரூபாய் வைப்புகள், 930.7 பில்லியன் ரூபாய் நிகரக் கடன்களும் நிலுவைகளும் என, 2019 ஆம் ஆண்டை நிறைவுசெய்திருந்தது. தேசியப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்குவதில் பல தசாப்தங்களாக முன்னிலை வகித்த நிறுவனம் என்ற வகையில் கொமர்ஷல் வங்கி, பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னரான பொருளாதார மீட்சியை உந்தும் ஒரு நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது. நடைமுறை மூலதனக் கடன்களை வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குச் சலுகைகளை வழங்குவதிலும் தனியார் வங்கிகளில் கொமர்ஷல் வங்கி முன்னிலையில் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமென அமுல்படுத்தப்பட்டுள்ள வௌவேறான 11 திட்டங்களை, சூர்யோதயம் நிதியியல் உதவித் திட்டத்தின் கீழ் வங்கி வகைப்படுத்தியுள்ளதுடன் வழங்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட கடன் தவணைக்கால நீடிப்புக்கு மேலதிகமாக இந்த நிவாரணத் திட்டங்களை வழங்கியுள்ளது. உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது. பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.   Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி (adaderana.lk)
  • குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்     -எம்.எஸ்.எம். ஐயூப்   நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது.   இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள்.    2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயருடைய பயங்கரவாதிகள் சிலர், மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் தாக்கி, 250க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர்.  இதையடுத்து, நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கான காரணங்களில் ஒன்றாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து செயற்படுவதைப் பலரும் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து, இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்களின் குறி, முஸ்லிம் கட்சிகளாகவே இருந்து வருகிறது.   முஸ்லிம்கள் பொதுவாக, இந்த எதிர்ப்பை எதிர்த்து வந்த போதிலும், அண்மைக் காலமாக சில முஸ்லிம்களும், “இனி மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கலாநிதி அமீர் அலி, அண்மையில் எழுதியிருந்த கட்டுரையொன்றில், ‘முஸ்லிம் அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.   கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களித்ததை அடுத்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.  20ஆவது திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா, இல்லையா என்பதை விட, இந்த ஆறு எம்.பிக்களும் ‘விலைபோனார்களோ’ என்ற ஆதங்கமே, முஸ்லிம் அரசியல் கட்சிகளே வேண்டாம் என்ற நிலைக்கு, சிலரைத் தள்ளிவிட்டுள்ளது.   கட்சி தாவலும் மக்களின் ஆணைக்குத் துரோகம் செய்தலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் இலட்சணமல்ல. குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், தம்மைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் ஆறு முஸ்லிம்களும் என, நாட்டின் மூன்று பிரதான இனங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் என்றால் ‘தொப்பி பிரட்டிகள்’ என்றதொரு கருத்து, நீண்ட காலமாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. அதைத்தான், இப்போது அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள்.    முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத்தை முன்நிறுத்தியே அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு இருக்க, பணத்துக்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து, தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படுவதை, எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்கள்?   ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை.    முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள்.  ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.    மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும்.  இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார்.    ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது.  எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர்.    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள்.    போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது.  இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் கட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர்.   தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும்.    போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை.    ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந்தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை.    உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர்.  உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது.   உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள்  பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது.   இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது?   Tamilmirror Online || குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.