Jump to content

ஆனந்தபுர மண் 04 -04 - 2009


Recommended Posts

2009 வருடம் இதே மாதம் 04 தேதி
கண்ணீராலும் செந்நீராலும்
ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள்


உலகின் நயவக்ஞ்சகத்தாலும்
சிங்களனின் கோழைத்தனத்தாலும்
ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள்
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை
பறிகொடுத்து துயரில் தொலைந்தோம்

 

அன்று தொலைந்த நாம் இன்றுவரை
மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம்

 

தமிழின வரலாற்றை...
தமிழின வீரங்களை...
கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை
நினைவேற்றி வணங்குகின்றோம்.

 

ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள்
இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது
ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.

 

544614_411445532284349_2007468672_n.jpg

Link to comment
Share on other sites

ஒப்பற்ற தளபதிகளாக, பெருமைக்குரியவர்களாக இருந்தபோதிலும் இனத்துக்காக வீழத் தயாரானவர்கள்..!

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

563671_411660848929484_341628433_n.jpg

 

வன்னியிலே வாழ்ந்த எங்கள் அக்கா

ஈழமண்ணில் வாழ்ந்த வீரவேங்கை துர்கா

புலிமறத்தி நெருப்பினிலே களமாடினாள்

போர் நடுவில் வீரமகள் விழி மூடினாள்

Link to comment
Share on other sites

528180_411658898929679_284990484_n.jpg

 

அழைத்தான் எங்கள் அண்ணன்

களமாடினான் மணிவண்ணன்

வீரம் படைத்தான் களத்திலே

விழுந்தான் மலைபோல் நிலத்திலே

மறப்போமா மறப்போமா

Link to comment
Share on other sites

531866_411659838929585_1944330525_n.jpg

 

நீ மறையவில்லை விதுசா

தலைவர் மதித்த தங்கை

பெண்புலிகள் வளர்த்த அன்னை

உன் இழப்பை நினைக்கும் நேரம்

என் இமையில் வழியும் ஈரம்

உன் சிறப்பை நினைக்கும் நேரம்

என் விழியில் விளையும் வீரம்

Link to comment
Share on other sites

527086_411663895595846_1446608320_n.jpg

 

வன்னி படைத்தலைவன் தீபன்

மறைந்தானா இல்லை

கண்முன் இருக்கிறான் களத்தில்

இருக்கிறான் எங்கள் பிள்ளை

தீபன் இருக்கிறான் புலிகள் வடிவிலே

வீரன் அவன் பயணம் இன்னும் முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியும்...எதிரி சார்ந்த நாடுகளின் ..தந்திரம் தெரிந்தும்...படைகொண்டு உடைத்தெறிய முயன்று  ..உயிரீந்த தளபதிகளுக்கு ..எனது கண்ணீர் காணிக்கை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் வீரச்சாவுடனே  ஆரம்பித்த தமிழனது கீழ்நிலை இன்றும் தொடர்வதிலிருந்தே இவர்களின் ஆளுமையை  உணரமுடியும்

 

எமக்காய்

இறுதிவரை

எதுவந்த போதும்

களமாடி விழுந்த

எம்மினத்தின் வீர புருசர்களுக்கு தலை வணங்குகின்றேன்

 

நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்குத்தந்தீர்.

 

நீங்கள் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் என உறுதி எடுத்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

"

"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
Link to comment
Share on other sites

"

"
Link to comment
Share on other sites

ஆனந்தபுரம்,
வஞ்சகர் நஞ்சால் எம் நெஞ்சகர் தின்றநிலம்.

உங்களின் வீரத்துக்கும் ஈகத்துக்கும் வீரவணக்கம்

Link to comment
Share on other sites

தமிழினத்தை தலை நிமிர வைப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த புயல்கள் ஓய்ந்துபோன நாள் இன்று...நெருப்பாற்றை ஒயாமல் விருப்போடு நீந்திக்கொண்டிருந்த வீரர்களின் தேகத்துள் எரிந்துகொண்டிருந்த ஆன்மா ஆனந்தபுரத்தில் நிரந்தரமாக உறங்கிப்போன நாள் இது...மண்டியிடாத வீரத்தை,தமிழனின் மானத்தை விலைபேச உலகம் விசத்தை உமிழ்ந்த ஆனந்தபுரம் எம் தேசத்தின் புயல்கள் உறங்குமிடம்...கனவுகள் சுமந்துகொண்டு களமாடிய கண்மணிகளே உங்கள் கனவுகள் நனவாகும் முன்னரே உலகம் உமிழ்ந்த விசம் உங்கள் உடல்களை அழித்திருக்கலாம்..உங்கள் கனவுகளை காவிக்கொண்டு உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களை அவர்களால் அழிக்கமுடியாது..வீரவணக்கம் தமிழின விதைகளே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. வீரனே,
எங்கள் மண்ணில்
உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ,
மடியவில்லையடா
உன் கதை
முடியவில்லையடா!

 

ஒப்பற்ற மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.