Jump to content

ஆனந்தபுர மண் 04 -04 - 2009


Recommended Posts

2009 வருடம் இதே மாதம் 04 தேதி
கண்ணீராலும் செந்நீராலும்
ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள்


உலகின் நயவக்ஞ்சகத்தாலும்
சிங்களனின் கோழைத்தனத்தாலும்
ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள்
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை
பறிகொடுத்து துயரில் தொலைந்தோம்

 

அன்று தொலைந்த நாம் இன்றுவரை
மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம்

 

தமிழின வரலாற்றை...
தமிழின வீரங்களை...
கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை
நினைவேற்றி வணங்குகின்றோம்.

 

ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள்
இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது
ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.

 

544614_411445532284349_2007468672_n.jpg

Link to comment
Share on other sites

ஒப்பற்ற தளபதிகளாக, பெருமைக்குரியவர்களாக இருந்தபோதிலும் இனத்துக்காக வீழத் தயாரானவர்கள்..!

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

563671_411660848929484_341628433_n.jpg

 

வன்னியிலே வாழ்ந்த எங்கள் அக்கா

ஈழமண்ணில் வாழ்ந்த வீரவேங்கை துர்கா

புலிமறத்தி நெருப்பினிலே களமாடினாள்

போர் நடுவில் வீரமகள் விழி மூடினாள்

Link to comment
Share on other sites

528180_411658898929679_284990484_n.jpg

 

அழைத்தான் எங்கள் அண்ணன்

களமாடினான் மணிவண்ணன்

வீரம் படைத்தான் களத்திலே

விழுந்தான் மலைபோல் நிலத்திலே

மறப்போமா மறப்போமா

Link to comment
Share on other sites

531866_411659838929585_1944330525_n.jpg

 

நீ மறையவில்லை விதுசா

தலைவர் மதித்த தங்கை

பெண்புலிகள் வளர்த்த அன்னை

உன் இழப்பை நினைக்கும் நேரம்

என் இமையில் வழியும் ஈரம்

உன் சிறப்பை நினைக்கும் நேரம்

என் விழியில் விளையும் வீரம்

Link to comment
Share on other sites

527086_411663895595846_1446608320_n.jpg

 

வன்னி படைத்தலைவன் தீபன்

மறைந்தானா இல்லை

கண்முன் இருக்கிறான் களத்தில்

இருக்கிறான் எங்கள் பிள்ளை

தீபன் இருக்கிறான் புலிகள் வடிவிலே

வீரன் அவன் பயணம் இன்னும் முடியவில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதிரியும்...எதிரி சார்ந்த நாடுகளின் ..தந்திரம் தெரிந்தும்...படைகொண்டு உடைத்தெறிய முயன்று  ..உயிரீந்த தளபதிகளுக்கு ..எனது கண்ணீர் காணிக்கை...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் வீரச்சாவுடனே  ஆரம்பித்த தமிழனது கீழ்நிலை இன்றும் தொடர்வதிலிருந்தே இவர்களின் ஆளுமையை  உணரமுடியும்

 

எமக்காய்

இறுதிவரை

எதுவந்த போதும்

களமாடி விழுந்த

எம்மினத்தின் வீர புருசர்களுக்கு தலை வணங்குகின்றேன்

 

நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்குத்தந்தீர்.

 

நீங்கள் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் என உறுதி எடுத்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

"

"
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
Link to comment
Share on other sites

"

"
Link to comment
Share on other sites

ஆனந்தபுரம்,
வஞ்சகர் நஞ்சால் எம் நெஞ்சகர் தின்றநிலம்.

உங்களின் வீரத்துக்கும் ஈகத்துக்கும் வீரவணக்கம்

Link to comment
Share on other sites

தமிழினத்தை தலை நிமிர வைப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த புயல்கள் ஓய்ந்துபோன நாள் இன்று...நெருப்பாற்றை ஒயாமல் விருப்போடு நீந்திக்கொண்டிருந்த வீரர்களின் தேகத்துள் எரிந்துகொண்டிருந்த ஆன்மா ஆனந்தபுரத்தில் நிரந்தரமாக உறங்கிப்போன நாள் இது...மண்டியிடாத வீரத்தை,தமிழனின் மானத்தை விலைபேச உலகம் விசத்தை உமிழ்ந்த ஆனந்தபுரம் எம் தேசத்தின் புயல்கள் உறங்குமிடம்...கனவுகள் சுமந்துகொண்டு களமாடிய கண்மணிகளே உங்கள் கனவுகள் நனவாகும் முன்னரே உலகம் உமிழ்ந்த விசம் உங்கள் உடல்களை அழித்திருக்கலாம்..உங்கள் கனவுகளை காவிக்கொண்டு உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களை அவர்களால் அழிக்கமுடியாது..வீரவணக்கம் தமிழின விதைகளே..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓ.. வீரனே,
எங்கள் மண்ணில்
உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ,
மடியவில்லையடா
உன் கதை
முடியவில்லையடா!

 

ஒப்பற்ற மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Popular Now

 • Topics

 • Posts

  • ஆலமூர் சௌமியா பதவி,பிபிசி 8 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது. இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தோசை, அப்பம், வடை, பஜ்ஜி போன்றவை குறித்து தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது கி.மு.300ல் இருந்தே இவை நம்மிடம் பழக்கத்தில் உள்ளன. ஆனால், இட்லி? இட்லியின் கதை இந்தியாவில் கர்நாடகா பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளில் இட்லி முதன்முதலில் குறிப்பிடப்பட்டதாகவும், அவை சமஸ்கிருதத்தில் 'இடலிகே' மற்றும் 'இத்தாரிகா' என்று அழைக்கப்பட்டதாகவும் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சையா கூறுகிறார். அலிகே என்றால் கன்னடத்தில் நீராவி பாத்திரம் என்று பொருள். இதிலிருந்தே 'இடலிகே' என்ற சொல் வந்திருக்கலாம் என்பது அச்சையாவின் ஊகம். 920ல் கன்னடக் கவிஞர் சிவகோடி ஆச்சார்யா எழுதிய வத்தராதனே என்ற கவிதையில் இட்லி பற்றிய முதல் குறிப்பு உள்ளதாக கே.டி. அச்சையா தனது 'இந்திய உணவு: வரலாற்றுத் துணை' புத்தகத்தில் எழுதியுள்ளார். அதன் பின்னர் பல படைப்புகளில் இட்லி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1025ல் சவுந்தராயா என்ற கவிஞர் இட்லி செய்யும் முறையை விவரித்துள்ளார். அதன்பிறகு, கி.பி.1130ல் 'மனசொல்லாச' என்ற சமஸ்கிருத நூலில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கி.பி 1235 தேதியிட்ட கர்நாடகக் குறிப்பு இட்லிகளை ஒளி மற்றும் விலைமதிப்பற்ற நாணயம் போன்ற பொருள் என்று குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்சபுராணத்தில் 'இட்டலி' என்ற பெயரில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட மூன்றிலும், இட்லி தயாரிக்க அரிசி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பு இல்லை. எனவே முற்காலத்தில் இட்லி உளுந்துடன் சமைக்கப்பட்டிருக்கும் என்று அச்சையா நம்புகிறார். அதேபோல நவீன காலத்தில் இட்லி தயாரிக்கப்படும் முறையும் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. எனவே நவீன கால இட்லி தயாரிப்பு செயல்முறைகள் எப்போது நம்மிடம் பழக்கத்திற்கு வந்தன என்பதைச் சொல்ல தெளிவான சான்றுகள் இல்லை என்று அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இட்லி எங்கிருந்து வந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES இட்லி இந்தோனீசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார். அவருடைய ஆராய்ச்சியின் படி, இந்தோனீசியாவில் பழங்காலத்திலிருந்தே பொருட்களை வேகவைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. சோயாபீன்ஸ், வேர்க்கடலை, மீன் போன்றவற்றை அந்த மக்கள் வேகவைத்து உண்டார்கள். 'கெட்லி' என்பது இந்தோனீசியாவில் புளிக்கவைக்கப்பட்டு வேகவைக்கப்படும் ஒரு பொருள் என்று அச்சையா கூறுகிறார். சீனாவிலும் பழங்காலத்திலிருந்தே வேகவைத்தல் முறை நடைமுறையில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன புத்த துறவி ஹுயன் சாங் இந்தியாவில் நீராவி பாத்திரங்களே இல்லை என்று கூறினார். 8 ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தோனீசியாவை ஆண்ட இந்து மன்னர்களிடம் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இந்தியா திரும்பிய போது நொதித்தல் செயல்முறையை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கே.டி. அச்சையா கூறுகிறார். பிற்காலத்தில், தினையுடன் அரிசியைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றி, இட்லி தயாரிப்பில் அரிசி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இந்தோனீசியாவில் கெட்லி இருந்தது போலவே செக்கோஸ்லோவாக்கியாவில் நீட்லீக் என்ற பொருள் சமைக்கப்பட்டது. புளிக்கவைப்பது மற்றும் இட்லி செய்வது எப்படி என்பது தெரியாவிட்டாலும், இந்தியர்களுக்கு ஆவியில் சமைக்கத் தெரியும் என்று அச்சையா கூறுகிறார். "இந்தியாவில் நீராவி பாத்திரங்கள் இல்லை என்று சீனப் பயணி ஹுயென் சாங் கூறினார். அதற்கு நீராவியில் சமைக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல. இந்தியர்களுக்கு எளிமையான முறையில் ஆவியில் வேக வைக்கத் தெரியும். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்த பிறகு மெல்லிய துணிஅல்லது மூங்கில் கூடைகளில் பண்டம் மூடப்பட்டு மேலே இருந்து தொங்கவிடப்பட்டது. கேரளாவில் புட்டு இந்த முறையில் சமைக்கப்படும். மேலும், சிந்து பள்ளத்தாக்கு பகுதிகளில், ஒரு நீண்ட துளையிடப்பட்ட மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாம் நீராவியில் சமைத்ததைக் குறிக்கிறது" என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். எத்தனை வகை இட்லி உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோனீசியாவிலிருந்து நம் நாட்டில் குடியேறியதாக நம்பப்படும் இட்லி, நவீன காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இட்லி சமைப்பதில் நிறைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்டிஆர் இட்லியும், காஞ்சிபுரம் இட்லியும் மிகவும் பிரபலமாகிவிட்டன. இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே இட்லி மிக முக்கியமான உணவுப் பொருள் என்கிறார் பிரபல உணவு எழுத்தாளர் வீர் சிங்வி. ரவா இட்லி, ராகி இட்லி, பொடி இட்லி எனப் பல வகையான இட்லிகள் உள்ளன. சமீபத்தில், மற்றொரு புதிய வகை இட்லியாக கரி இட்லிகள் எனப்படும் கருப்பு இட்லிகள் பிரபலமாகின. இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்தது. “இந்திய பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்கலமான ககன்யானில் பயணிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்காக சில உள்நாட்டு உணவுகளை தயாரித்துள்ளது. அதில் ஒன்று சாம்பார் இட்லி” என கடந்த 2020ஆம் ஆண்டு ஏஎன்ஐ செய்தி முகமை ட்வீட் செய்தது. எனினும், கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். அதாவது, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இட்லியும் விண்வெளியை அடையும். உணவு வரலாறு - இட்லி: நாம் விரும்பிச் சாப்பிடும் உணவின் பூர்வீகம் என்ன தெரியுமா? - BBC News தமிழ்
  • தீவுப்பகுதியில், வெள்ளைக்கடற்கரை என்று பகுதியை Chaddy என்று அழைப்பார்கள். இந்த பெயர் யார் வைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கே தங்கி இருந்திருக்கிறார்கள், அவர்கள் பள்ளி ஒன்றும் உள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில், தாம் 11ம் நூறாண்டில் வந்து தங்கி வியாபாரம் செய்ததாக, 2017ல் சீனாக்காரர் வந்து கிண்டினார்கள். https://www.google.co.uk/maps/place/Mankumban,+Sri+Lanka/@9.6563704,79.8952611,13.25z/data=!4m5!3m4!1s0x3afe51bf4c52569d:0xc2d3c3b1464ff391!8m2!3d9.6343901!4d79.9444526?hl=en&authuser=0  
  • இமாச்சல பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத்,      இமாச்சல பிரதேசத்தில்  ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் அக்கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இதில் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் காலை 11 மணிக்கு மேல் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மதிய 12 மணி நிலவரப்படி 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 27 இடங்களில் வெற்றிமுகம் கண்டுள்ளது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆம் ஆத்மி ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அடைய 35 இடங்களில் வெல்ல வேண்டும் என்கிற நிலையில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைவதை தற்போதைய நிலவரப்படி தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்த நிலையில் தற்போது காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலேயே வெற்றி பெற்றது. தற்போது ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்து வருகிறது. அந்த பட்டியலில் மேலும் ஒரு மாநிலம் சேர்வது காங்கிரஸ் கட்சியினிரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி | Virakesari.lk
  • உண்மையில் அவர்கள் தமது பாலினத்தை தேர்ந்தெடுப்பதில்லை. ஒரு கரு உருவாகிய உடனேயே அது ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கப்பட்டுவிடும். (XX, XY). அதனால் கருவில் வளரும் குழந்தையின் ஒன்றில் டெஸ்டிஸ் அல்லது ஓவரி வளரும். ஆனால் அந்தரங்க உறுப்புகள் உருவாக்க ஆண் சிசுவுக்கு ஆண் ஹார்மோனும் பெண் சிசுவுக்கு பெண் ஹார்மோனும் தேவைப்படும். அவை இல்லாமலோ, குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் இவ்வுறுப்புகள் அரைகுறையாக உருவாக்கி இருக்கும். அதனை அறுவை சிகிச்சை மூலம் ஓரளவு சரிபண்ணலாம். ஹார்மோன்களின் தாக்கத்தை பொறுத்து அந்த ஆணோ பெண்ணோ அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்
  • Times Magazine ஐயும் NY Times ஐயும் இரண்டு இடங்களில் போட்டுள்ளேன்.  1) பள்ளிக் காலங்களில் கொப்பி புத்தகங்களுக்கு உறையாக Times Magazine ஐயும்  2) கனடா வந்த புதிதில் NY Times ஐ வீடுகளுக்குப் போட்டுமுள்ளேன்  (🤣) (- South of Kingston Road + South of Dunforth Road ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்பது Torontonians க்கு புரியும் ) கவனக் குறைவை குறைபாடாக எடுக்கக் கூடாது எனும் பக்குவம் எனக்குண்டு.  இவற்றை பிழையாக விளங்கிக்கொள்வதற்கோ அல்லது சடைவதற்கோ நான் கோசான் அல்லவே .  அதுசரி மேலே தாங்கள் குறிப்பிட்ட  குப்பைகளை கிளறாவிட்டால் உங்களுக்கு தீனி எங்கிருந்து கிடைக்கிறது ?  😉
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.