Archived

This topic is now archived and is closed to further replies.

பிழம்பு

'ஆண் வழுக்கையர்களுக்கு இருதய நோய் ஆபத்து அதிகம் '

Recommended Posts

வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று.

முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக, 37,000 ஆண்களிடையே நடத்திய ஆய்வின் பின்னர் இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆய்வு பி.எம்.ஜே ஓப்பன் என்ற இணைய சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

ஆனால் வழுக்கைத்தலையை விட, புகை பிடித்தலும், உடல் பருமனும் இந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய மேலும் முக்கியமான அம்சங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் தங்கள் இடுப்பு அளவைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டும், முடி எண்ணிக்கையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது.

http://www.bbc.co.uk/tamil/science/2013/04/130404_malebaldness.shtml

Share this post


Link to post
Share on other sites