Jump to content

தமிழக மீனவர் தொடர்பான செய்திகள்


Recommended Posts

காரைக்கால் மீனவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தம்
Sunday 12th May 2013

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்களின் காவல் நீட்டிப்பைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் காரைக்கால் மீனவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மாவட்டம் மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் வரும் 17 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

 

http://www.newsalai.com/details/karaikal-fishermen-go-on-strike-for-7th-day.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 71
  • Created
  • Last Reply

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் விடுதலை
வியாழன், 23 மே 2013

 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 26 காரைக்கால் மீனவர்களை யாழ்பாணம் ஊர் காவல்படை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட அவர்களை இந்திய கடலோர காவல்படை கப்பல் அழைத்து வர சென்றுள்ள நிலையில் மீனவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி 4 படகுகளில் 26 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை 4 படகுகளில் இருந்த 26 மீனவர்களை சிறை பிடித்தனர்.

சிறைபிடித்த மீனவர்களை யாழ்பாணம் காவல்துறையில் ஒப்படைத்தனர். யாழ்பாணம் காவல்துறை மீனவர்கள் மீது எல்லை மீறி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து 26 மீனவர்களையும் யாழ்பாணம் ஊர் காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்கள் 4 முறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் கடந்த 20 ஆம் தேதி மீனவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை மண்டபம் அருகே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக வீசிய காற்று மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் மிகப்பெரிய கப்பல் மண்டபம் சென்றுள்ளது. மண்டபம் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்படும் மீனவர்களை பெற்றுக்கொண்டு மாலைக்குள் அவர்களை காரைக்கால் கொண்டு சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தி மீனவர்களின் குடும்பங்கள் மற்றும் இதர புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1305/23/1130523013_1.htm

 

Link to comment
Share on other sites

இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடை

 

இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால்- நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார் வீரதாசன் கூறியதாவது:-

மீனவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழில் மட்டுமே. மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடி உயிரையும் பணயம் வைத்து காலம் காலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சமீபகாலங்களாக காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்களும், தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே தற்பொழுது சுமூகமான உறவுமுறை இல்லாததுதான் காரணம் என்று கூறப்படு கிறது. நாங்கள் வேண்டும் என்றே இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதில்லை. இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகமாக காணப்படுவதால், இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடிக்கிறோம். எதிர்பாராதவிதமாக அலைகளின் ஓட்டம், காற்றின் வேகம் காரணமாக அங்கு செல்ல நேரிடுகிறது.

எனவே இந்திய கடல் எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிப் பது என்றும், கண்டிப்பாக இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று யாராவது மீன்பிடித்து இலங்கை கடற்படையினரிடம் சிக்கினால், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை யாரும் எடுக்க மாட்டோம் என்றும், அவ்வாறு மீன்பிடிக்கும் மீனவர்களை 2 மாதம் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடை விதிப்பது என்றும், ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பது என்றும் காரைக்கால், நாகை மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் இரட்டைமடிவலை மற்றும் சங்கு வலைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காமல் அள்ளும் சுருக்குவலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் குறையும் அல்லது அழியும் அபாயத்தை தடுக்க படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் சுருக்குவலைகளை பயன்படுத்துவதை கண்டிப்பாக தடை செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

http://www.newsalai.com/details/karaikal-naagai-fishermen-went-to-srilanka-border.html

 

Link to comment
Share on other sites

கச்சத்தீவில் இலங்கை போர்க்கப்பல்கள்:தமிழக மீனவர்கள் இன்று அவசர ஆலோசனை

31st May 2013

 

கச்சத்தீவுப் பகுதியில் இலங்கை போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கே தயங்குகின்றனர்.

 

வங்கக்கடல் பகுதியில் விதிக்கப்பட்ட மீன்பிடித் தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, தற்போது கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, அச்சமடையச் செய்துள்ளது இலங்கை அரசின் நடவடிக்கை. கச்சத்தீவுப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளதே அதற்கு காரணம்.

 

கச்சத்தீவுப் பகுதிக்கு அருகே இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல் கூட பாதுகாப்புக்காக நிறுத்தப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அச்சமின்றி கடலுக்குச் சென்று வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கச்சத்தீவுப் பகுதியில் இலங்கை கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்து, ராமேஸ்வரம் மீனவர் அமைப்பு பிரதிநிதிகளுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

 

http://www.newsalai.com/details/tamilnadu-fisherman-today-discussion.html

 



கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல், சீன வீரர்கள். பிரதமருக்கு வைகோ கடிதம்!
1st June 2013

 

1370087818.jpg

 

கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல், சீன வீரர்கள். பிரதமருக்கு வைகோ கடிதம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று (1.6.2013), பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதி உள்ள கடிதம்:

அன்புள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர். இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன்.
இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், மிருகத்தனமாகத் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை.

கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களின் உரிமைநலன்களைப் பறிக்கின்ற வகையில், 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக, இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

‘கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும்’ என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றம், அண்மையில்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்நிலையில், தற்போது, கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது; நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர். 45 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, இயந்திரப் படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.  

கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும்.  போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்; இலங்கைப் போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

 

http://www.newsalai.com/details/vaiko-writes-to-PM-to-clear-away-sri-lanka-navy-near-katchaththeevu.html

 

Link to comment
Share on other sites

மீன்பிடித்தடைக் காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்
1st June 2013

 

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கை கடற்படையினர் கச்சத் தீவு அருகே மிதவைகளை போட்டு 10க்கும் மேற்பட்ட போர் மற்றும் ரோந்து கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தடை செய்யப்பட்ட இழு விசை கொண்ட இன்ஜினைப் பயன்படுத்தக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனை மீறி பயன்படுத்துவோருக்கு ஓராண்டுக்கு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்தப்படுவதுடன் படகு பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.newsalai.com/details/rameswaram-fishermen-goes-to-sea.html

 

Link to comment
Share on other sites

எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது ; இந்திய கடற்படை அதிகாரி எச்சரிக்கை

 

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும் தடைவிதிக்கப்படும். இந்நிலையில் 45 நாட்கள் தடை காலம் முடிந்து இன்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 800 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

முன்னதாக மீனவர் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் அமிதாபா நந்தி பேசியதாவது:-

மீனவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து அனுமதி அட்டை (டோக்கன்) பெற்றுத்தான் கடலுக்கு செல்லவேண்டும். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடலில் சந்தேகத்திற்குரிய படகுகள் சுற்றித் திரிந்தால் உடனே கடற்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள் கடல் எல்லை பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநர் பிலோமீன் தியாகராஜன் கூறுகையில், மீனவர்கள் தடைசெய்த இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது, எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்றார்.

இந்நிலையில் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது. 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு இன்று அதிகாலை சென்ற மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசு போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளதால் தங்களால் மீன்பிடிக்க முடியுமா? என்ற சந்தேகத்துடனேயே கடலுக்கு சென்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 45 நாட்களாக கடலுக்கு செல்லாததால் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போதிய மீன்கள் பிடிக்க முடியுமா? என தெரியவில்லை.

குட்டி நாடான இலங்கை இந்திய பேரரசின் கடல் எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தி மீனவர்களை மிரட்டி வருகிறது. இதற்கு உரிய பதிலடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றனர்.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15107:i-go-fishing-limits-naval-officer-warning&catid=36:tamilnadu&Itemid=102

 

Link to comment
Share on other sites

பாம்பன் கடலில் மாயமான 7 மீனவர்கள் நெடுந்தீவில் கரை ஒதுங்கினர்
4th June 2013

 

45 நாள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த இரு நாட்களாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். 2-ம் தினம் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 100 படகுகளில் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் கரை திரும்பிய நிலையில் சகாயம் என்பவரது படகு மட்டும் திரும்பவில்லை.

அந்த படகில் அகஸ்டின், முருகன், செல்வம், முனிய சாமி, நல்லதம்பி, பூரணம் மற்றொரு முனியசாமி ஆகிய 7 பேர் சென்று இருந்தனர். 7 மீனவர்கள் மாயமான சம்பவம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கரை திரும்பிய மீனவர்களில் சிலர் தெரிவித்தனர். இதனால் அவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றிருக்கலாமா? என்ற அச்சம் ஏற்பட்டது.

இதற்கிடையே காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு திசைமாறி சென்று வேறு எங்காவது ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் ஜான்பிரிட்டோ, ஜெரோமியஸ், தேவசகாயம் ஆகியோரது படகுகளில் 21 மீனவர்கள் கடலுக்குள் மாயமான மீனவர்களை தேடி சென்றனர்.

இதற்கிடையில் மாயமான மீனவர்கள் படகுடன் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பகுதி இலங்கை கடல் எல்லைக்குள் கச்சத்தீவு அருகே உள்ளது. இதனால் அங்கு இந்திய மீனவர்கள் செல்ல முடியாது. எனவே இலங்கை கடலோர காவல்படைதான் சென்று அந்த மீனவர்களை மீட்க முடியும். அவர்கள் மீட்டாலும் உடனடியாக விட்டு விடுவார்களா? அல்லது சர்வதேச எல்லையை தாண்டி விட்ட குற்றத்திற்காக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்களா? என்பது தெரியவில்லை. எனவே 7 மீனவர்கள் கரை திரும்புவதில் சிக்கலான நிலை உள்ளது.

 

http://www.newsalai.com/details/missing-pamban-fishermen-discovery-in-neduntheevu.html

 

Link to comment
Share on other sites

24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றது!

2013-06-05

 

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்ற அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 6 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=84387&category=IndianNews&language=tamil

 

Link to comment
Share on other sites

24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றது!

2013-06-05

 

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்ற அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 6 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=84387&category=IndianNews&language=tamil

 

விரிவான செய்தி....

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம். படகு கவிழ்ந்து மீனவர் பலி: 24 மீனவர்கள் கைது

6th June 2013

 

நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

மாலை 3 மணி அளவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். இந்திய கடல் எல்லையை தாண்டி வந்து மீன்படித்ததாக கூறி 5 படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் அந்தோணி, ஜோசப், அல்போன்ஸ் உள்பட 24 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

தமிழக மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று விரட்டியடித்தனர். சேதுராமன் என்பவர் படகையும் விரட்டினர். இதனால் அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் உயிர் பிழைத்தால்போதும் என்று படகை வேகமாக ஓட்டி வந்தனர். அப்போது காற்றும் வேகமாக வீசியது.

இதனால் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த 4 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் பிழைத்தனர். ஆனால் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி (வயது 55) மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

அவரது உடல் ராமேசுவரம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. படகு கவிழ்ந்து மீனவர் இறந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர்களையும் தலை மன்னாருக்கு கொண்டு சென்று கடற்படை முகாமில் அடைத்தனர். இன்று அவர்கள் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

 

http://www.newsalai.com/details/Sri-lanka-navy-once-again-chases-TN-fishermen-one-dead.html

Link to comment
Share on other sites

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 25 பேர் சிறைபிடிப்பு

ஜூன் 06, 2013

 

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

 

முன்னதாக நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்கள், மற்றும் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று அதிகாலை மீன்பிடித்து கரைதிரும்பிக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களுடன் 5 விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/again-25-rameswaram-fisherman-capture-by-srilankan-navy



மீனவர்களை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 06, 2013

 

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 49 மீனவர்களும் அந்நாட்டில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து எதிர்பார்ப்புகளுடன் கடலுக்குப்போன ராமேஸ்வரம் மீனவர்களை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

 

9 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரையும், இன்று சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு 19 ஆம் தேதி வரையும் நீதிமன்ற காவல் அளித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95



மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
ஜூன் 06, 2013

 

இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்திலிருந்து 10 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கவனத்திற்கு கொண்டுவருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்தும், அதனால் தமிழக மீனவர்கள் படும் அவதிகள் குறித்தும் பல முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் எவ்விதமான உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கடிதத்தில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்துக் கண்டனம் தெரிவிப்பதோடு, இலங்கை அரசோடு பேசி சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 49 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் பிரதமரை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/jayas-letter-to-pm-on-fishermen-issue

Link to comment
Share on other sites

இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு
ஜூன் 07, 2013

 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரையும், விடுவிக்க வலியுறுத்தி 22-ம் தேதி 1000 படகுகளில் சென்று இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

 

நேற்று மாலை நடைபெற்ற ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 20ஆம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் திட்டமிட்டபடி 22-ம் தேதி இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் வரும் 20-ம் தேதிவரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோல், நேற்று சிறைபிடிக்கப்பட்ட 25 மீனவர்கள் கெய்ட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 19ஆம் தேதிவரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

http://puthiyathalaimurai.tv/rameswaram-fishermen-announced-protest-against-sri-lanka-action

Link to comment
Share on other sites

இந்திய - இலங்கை ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்!

 

111.jpgபிரதமர் மன்மோகன்சிங்குக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்பட்டு துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

 

இதனால் அவர்களது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாக்கு நீரிணையை கடக்ககூடாது என மிரட்டப்படுகின்றனர்.

 

எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்டு இலங்கை குடிமகனாகி அங்கு தங்க விரும்புகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேசி விரைவில் உடன்பாட்டுக்கு வரவேண்டும். தேவைப்பட்டால் 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டும்.

 

1951-ம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நேபாளம் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. அதே வேளையில் 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கப்படவில்லை.

 

இதுவரை இலங்கை அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இந்தியா வந்த சீன பிரதமர் எல்லை பிரச்சினையை இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

எனவே இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்க 1974-ம் ஆண்டு இந்திய - இலங்கை அரசால் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்
ஜூன் 15, 2013

தமிழக மீனவர்கள் எட்டு பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் தலைமன்னார் கொண்டு செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

http://puthiyathalaimurai.tv/sri-lanka-navy-violated-agai

Link to comment
Share on other sites

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு

ஜூன் 16, 2013

 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்று மதியம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் இருந்த 8 மீனவர்களை சிறைப் பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

 

கைது செய்யப்பட்ட அவர்களை, வரும் 27ம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/tamil-fisher-men-sent-to-jail

Link to comment
Share on other sites

ஜூலை 4 வரை தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

ஜூன் 20, 2013

 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது.

 

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை மீண்டும் இன்று ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் அனுராதபுரம் சிறையில் உள்ள 24 மீனவர்கள், மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே 5-ஆம் தேதி கைதான 25 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். 6-ம் தேதி பிடிக்கப்பட்ட 24 மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

http://puthiyathalaimurai.tv/sri-lanka-court-ordered-2


புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு? இலங்கை கடற்படையினர் பிடித்ததாக தகவல்

ஜூன் 22, 2013

 

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 220 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே இவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை விரட்டியதாக கூறப்படுகிறது.

 

மேலும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு படகு நீரில் மூழ்கிய நிலையில் தத்தளித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

 

http://puthiyathalaimurai.tv/tn-fishermen-taken-into-custody-by-srilankan-fishermen

Link to comment
Share on other sites

இலங்கைக்கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ஜூன் 23, 2013

 

ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் சுமார் 700க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர்.

 

இவர்கள் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இவர்களது மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதோடு, துப்பாக்கியைக்காட்டி விரட்டியடித்துள்ளனர்.

 

இதில் ஒரு சில மீனவர்கள் மட்டும் நேற்றிரவு கரை திரும்பினர். மற்ற மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

 

தங்கள் வாழ்வாதாரம் இது போன்ற சம்பவங்களால் கடும் பாதிப்புக்குள்ளாவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

http://puthiyathalaimurai.tv/tn-fishermen-are-attacked-by-sri-lanka-navy

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் போல வந்தும் தாக்குகிறது இலங்கைக் கடற்படை! - பாகிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு கனிமொழி காட்டம். 

kanimozhi-8813-150.jpg

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது குறித்து பாராளுமன்ற மேல்சபையில் விவாதம் நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது: இந்த விவாதத்தின்போது பதிலளித்த மந்திரி, பாகிஸ்தான் ராணுவ உடையணிந்த நபர்கள் என்று குறிப்பிட்டார். இது தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுகையிலும் ராணுவ உடையணிந்த சிங்கள மீனவர்களே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலில் ஈடுபடுவது இலங்கை கடற்படையினரே.

  

இதுபோல ஒவ்வொரு முறை, இந்திய சிவிலியன்களும், ராணுவத்தினரும் தாக்கப்படுகையில், ஏதாவது காரணம் கூறி இதை நாம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது. இது எந்த வகையிலும் நமக்கு உதவாது.நாம் உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும். தாக்கியவர்கள் யாரென்றே தெரியாத பொழுதே அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து, அவர்கள் இதற்குக் காரணம் இல்லை என்று சொல்லும் அணுகுமுறை தொடரக் கூடாது. நமது மக்களுக்காகவும், நமது ராணுவத்துக்காகவும் உறுதியாக நிற்க வேண்டும். மற்ற நாடுகள் தாக்குவதற்கு, காரணங்களையும், சாக்குபோக்குகளையும் சொல்லக்கூடாது.

 

இதுபோன்ற ஊடுருவல்களும், தாக்குதல்களும் 80 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக, அமைச்சர் பதிலளிக்கையில் தெரிவித்தார். இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது? எதற்காக இப்படி அதிகரிக்கும் தாக்குதல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்? சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நமது அண்டை நாடுகள் அனைத்தோடும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகிறோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இணக்கமான சூழல் நிலவ இந்த பேச்சுவார்த்தைகள் உதவும் என்ற அடிப்படையில் நாம் இதைச் செய்கையில், நாம் தற்காலத்தையும், நம் நாட்டின் பாதுகாப்பையும் புறக்கணிக்கிறோம். எதிர்காலத்தை நினைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நாம் துரதிருஷ்டவசமாக நமது மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறுகிறோம்.

 

நம் ராணுவம் எத்தகைய சூழலிலும் எல்லையைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் இருக்கிறது என்று மந்திரி கூறினார். அந்த நடவடிக்கைகள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவை என்ன வெற்று வசனங்களா? சீனா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் தொடர்ந்து நம்மிடம் நடந்து கொள்வதை இனியும் நாம் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தெரியப்படுத்தப் போகிறோமா? இல்லையா? இது தொடர்ந்து கொண்டே போகிறது நாமும் பொறுத்துக் கொண்டே இருக்கிறோம். இந்தியாவையே இந்த சம்பவங்கள் பாதித்துள்ளன. நாங்கள் ஒட்டு மொத்தமாக உங்களோடு இருக்கிறோம். இந்தியாவே உங்களோடு இருக்கிறது. உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இனியும் இந்தத் தாக்குதல்கள் தொடராமல் தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கனிமொழி பேசினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89579&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Indian-fishermen.jpg

 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். இது தொடர்பில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 20 ஆம் திகதி பல்வேறு மீனவ இயக்கங்கள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

மேலும், இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து, தற்காத்துக்கொள்ள, அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7075

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கடற்படையின் தொடரும் அட்டூழியம்! 19 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

 

ராமேஸ்வரம்: இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நேற்று இரவு சிறை பிடித்து சென்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏற்கெனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம், புதுவை மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து தாக்கி சிறைபிடித்து சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தொடரும் தமிழக மீனவர்கள் கைது! 35 பேர் கடற்படையால் கைது!

October 15, 2013

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 35 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் நேற்று (14) இரவு வேளையில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

புதுக்கோட்டை மீன​வர்​கள் 15 பேரை இலங்கை கடற்​ப​டை​யி​னர் கைது செய்​துள்​ள​னர்.​

 

புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 15 மீனவர்கள், 5 விசைப்​ப​ட​கு​க​ளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியுள்ளதால் இலங்கை கடற்படையினர் மீன​வர்​கள் 15 பேரை கைது செய்துள்ளனர்.

 

முன்னதாக நேற்று ராமே​சு​வ​ரம் மீன​வர்​கள் 20 பேரை இலங்கை கடற்​ப​டை​யி​னர் கைது செய்​தனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

http://www.tamizl.com/?p=44586

Link to comment
Share on other sites

மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: தமிழக தலைவர்களிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்
news

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை தடுக்குமாறு மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசியல் எதுவும் இல்லை. இலங்கையின் கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையில் வரும் தமிழக மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் தமிழக மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இலங்கை மீனவர்கள் தம்மாலான நடவடிக்கைகள் யாவற்றையும் எடுத்தனர். எனினும் எதுவும் பயன்தரவில்லை. எனவே இது தொடர்பில் தமிழக முதல்வரும், கருணாநிதியும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மன்னார் ஆயர் மேலும் கோரியுள்ளார்.

 

இதுதான் அங்கு உண்மையில் நடப்பது ,சொல்ல சொல்ல மீண்டும் மீண்டும் எல்லை மீறுபவர்களை சுடுவதில் தவறில்லை என நினைக்கின்றேன் ,இவ்வளவிற்கும் பெரும் தமிழக பெரும் அரசியல்வாதிகள் , பணமுதலைகளால் நடாத்தப்படும் இந்த மீன்பிடி வியாபாரத்தில் உயிரைவிடுபவர்கள் அப்பாவி மீனவர்கள் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

navy-201013-150.jpg

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன்வர்கள் இன்று கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியுள்ளனர். இதனால் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளும் சேதமடைந்தன. காயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தாக்குதல் குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95377&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர் - இலங்கை கடற்படை தாக்கியதாக குற்றச்சாட்டு
25 அக்டோபர் 2013



தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களது மீன் வலைகளை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் தாலுகா வானவன்மகாதேவி மீனவர் கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சக்திகுமார், பாலமுருகன், உலகநாதன், சக்திவேல், காளியப்பன் உள்பட 8 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இவர்கள் கடந்த 23ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று (24.10.13) மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் வேதாரண்யம் மீனவர்களை தாக்கிவிட்டு, படகில் இருந்த வலை, மீன், ஜீ.பி.எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவற்றின் மதிப்பு இந்திய ரூ.2 லட்சம் ஆகும். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் காளியப்பன், பாலமுருகன் ஆகிய 2 மீனவர்கள் படுகாயம் அடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98113/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
indians-seithy-20130922.jpg

கச்சத்தீவுக்கு அருகே தமிழக மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகில் தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மீனவர்களின் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக இலங்கை மீனவர் கூட்டமைப்புகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

  

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மீன்பிடி படகு சேதம் அடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், உடனடியாக கரை திரும்பினர். இந்த சம்பவத்திற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95819&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.