Jump to content

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்..


Recommended Posts

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்..

மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே..

மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே..

மரம் இல்லையேல் மனித இனமில்லை..

காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்..

மாசகற்றும் மாண்புள்ளது மரம்..

தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்..

உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்..

இன்னொரு உண்மை சொல்லட்டுமா?

ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்..

அகழ்வாரைத் தாங்கும் நிலம்..

வெட்டுபவனுக்குப் பொருள் கொடுக்கும் மரம்..

புத்தனுக்கு ஞானம் கொடுத்த போதி மரம் தேடுகிறோம்..

புரிந்தவனுக்கு ஒவ்வொரு மரமும் போதிமரம்தான்..

இன்னும் கூட சொல்வேன்..

மரத்தை மறந்த மனிதனுக்கு 

மரணத்தில் கூட உடலெரிக்க உதவுவது மரம்தான்..

மரம் மழை கொடுக்கிறது என்பது அறிவியல்..

மரம் பொருள் கொடுக்கிறது என்பது பொருளியல்..

மரம் மனிதம் கொடுக்கிறது என்பது வாழ்வியல்..

மரம் வளர்ப்போம்.. மழை மட்டுமல்ல மனிதமும் பெறுவோம்..

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றிகள்.

 

ஒரு காலத்தில் எமது தாயக பூமிகள் பல ஆறுகளை , நதிகளை கொண்டிருந்தன. பல இல்லாமல் போய் இன்று வரட்சி எம்மை இறுகப்பிடித்து உள்ளது.


மரங்கள் வளர்ப்பது மூலம் இந்த அழிவில் இருந்து எம்மை,வருங்காலத்தை பாதுகாக்கலாம்.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றிகள்.

 

ஒரு காலத்தில் எமது தாயக பூமிகள் பல ஆறுகளை , நதிகளை கொண்டிருந்தன. பல இல்லாமல் போய் இன்று வரட்சி எம்மை இறுகப்பிடித்து உள்ளது.

மரங்கள் வளர்ப்பது மூலம் இந்த அழிவில் இருந்து எம்மை,வருங்காலத்தை பாதுகாக்கலாம்.

 

வருங்காலம் பாதுகாக்கப்படும்.. பூமி பாதுகாக்கப்படும்.. நிச்சயம்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தை மறந்த மனிதனுக்கு 

மரணத்தில் கூட உடலெரிக்க உதவுவது மரம்தான்..

என்னைச் சிந்திக்க வாய்த்த வரிகள்!

 

கவிதைக்கு நன்றிகள், ராஜா! தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.