Jump to content

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?


இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
 

 

Link to post
Share on other sites
 • Replies 52
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

http://www.misstamilswitzerland.ch/

இந்த இணையத்தில் அழகிப்போட்டி விபரங்கள் இருக்கிறது.

Link to post
Share on other sites

புலம்பெயர் மண்ணில் பிறந்த தமிழ் வம்சாவழிகளான பெண்மணிகள் அழகி போட்டி என்ன எதுவும் நடத்தலாம் . ஏனெனில் அவர்கள் வயதுக்கு வரும்பொழுது கெலியிலும் , பல்லக்கிலும் , லுமோ காரிலும் தூக்கிப் பறித்து அவர்களுக்கு தாங்கள் அழகி என்ற போதையை ஏற்றியது புலம்பெயர் டமிழ்ஸ் தானே !!!!!

Link to post
Share on other sites

என்னுடைய மேலான கருத்து என்னவென்றால், இவர்கள் எங்களின் மானத்தை வாங்கி விட்டார்கள். இனி எப்படி வெளியில் தலை காட்டுவது என்று தெரியவில்லை. இவர்கள்தானா உங்கள் அழகிகள் என்று யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்???!!!

Link to post
Share on other sites

ஏன் அவர்கள் அழகா இல்லையா

Link to post
Share on other sites

இலக்கிய சந்திப்புக்கு போனதன் பிற்பாடு சாத்திரி ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்

Link to post
Share on other sites

இலக்கிய சந்திப்புக்கு போனதன் பிற்பாடு சாத்திரி ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்

.

அந்த சோகத்தை சுகத்தை தனிய. எழுதிறன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே ஆரம்பிச்சிருக்குது. அது நாடு நாடா பரவேக்க.. யாழ் கள உறவுகளும் தங்கள் பிள்ளைகளை வெளிக்கிடுத்திக் கூட்டிக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. :lol:

 

இது வாழும் இடத்தின் பால்.. நாகரிகக் கலப்பிற்கு இளையவர்கள் விரும்புவதை இனங்காட்டுகிறது. நீங்கள் என்னதான் கத்தினாலும்.. வாழும் நாடுகளின் கலாசார.. நாகரிகப் பண்புகள் கலந்து இளையவர்கள் தம்மை இனங்காட்ட விரும்புவதை யாரும் தடுக்க முடியாது. ஏன்னா அதுதான் அவர்களுக்கு கூடிய மகிழ்ச்சி அளிக்கிறது.

 

கனடாவில் தமிழ் பஷன் சோ... நடக்குது..

 

http://youtu.be/WrkjqMHFxSc

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சந்திப்புக்கு போனதன் பிற்பாடு சாத்திரி ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்

அங்க ஏதாவது வந்தாதானே  காஞ்சு போய்க் கிடந்திச்சு  :D

Link to post
Share on other sites
முதலில், உலகின் எந்த விவாதத்திலும் பொருளாதார முனைப்புத் தான் கடைசிக் கருத்தைக் கூறிக்கொண்டிருக்கிறது. இது மாற்ற முடியாதது. எங்கெல்லாம் பணம் பண்ண முடியுமோ அங்கெல்லாம் அது பண்ணப்பட்டுக்கொண்டே இருக்கும். எமது சமூகத்திற்குள் எத்தனை புடவைக் கடைகள் இருக்கின்றன. எப்போதேனும் நிகழ்வுகளிற்கு மட்டும் உடுத்தப்படும் கீழத்தேய உடைகள் பலநூறு டொலர்களிற்கு விற்பனையாகிக்கொண்டு தானே இருக்கின்றன. ஊடகம் நாகரிகம் வியாபாரம் மனங்கள் கடத்தப்படுதல் என்பதெல்லாம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
 
அடுத்து, புலத்தில் இந்தியத் திரைப்படங்கள் மட்டும் தான் இன்று தமிழ் அடையாளத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் நிலையிருக்கிறது. அதனால் தான், கலியாணவீடுகள், சாமத்தியவீடுகள் என்று அனைத்தும் திரைப்படம் ஒத்ததாக இருக்கிறது. ஒரு கலியாணத்திற்கு எம்மவர்கள் சர்வசாதாரணமாக 40 முதல் 60 ஆயிரம் டொலர்களைச் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். அழகு என்பது என்ன என்பதையும் திரைப்பட ஊடகம் தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், ஒரு விiயாட்டுபோட்டியினைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு சிறுவன் எப்படா மாலை மைதானத்திற்குச் சென்று அந்த தொலைக்காட்சி காட்டிய வீரர் போல் விளையாடுவது என்று ஏங்குகின்றானோ அது போன்றே யுவதிகள் திரைப்படத்தில் பார்த்தபடி நடக்க ஏங்குகிறார்கள். பெண் என்பவளின் பெருமை அழகில் இருக்கிறது என்பதாக இந்தியத் திரைப்படங்கள் காமடி ற்றாக்கிற்குச் சமாந்தரமாக கதாநாயகியின் அழகிப்போட்டி ற்றாக்கை மட்டுமே ஓட்டிக்கொண்டிருக்கையில் அழகிப்போட்டி எதிர் பார்க்கக் கூடிய விளைவே.
 
ஆனால் மேலிரு விடயங்களும் அழகிப்போட்டி நடத்தப்படுவதற்கான பல காரணங்களில் இரண்டைக் கூறுகின்றன. ஆனால் உங்கள் கேள்வி அழகிப்போட்டி சரியா அல்லது தேவையா என்பதே. எனவே மேலிரண்டு விடயங்களும் உங்கள் கேள்விக்கான பதிலில்லை. எனது பார்வையில் அழகிப்போட்டியியில் எந்தத் தவறும் இல்லை. அது தேவைதானா என்று தீர்ப்புக் கூறுவது எங்களைச் சார்ந்ததும் இல்;லை:
 
உலகில் எது தான் முடிந்தமுடிவான அர்த்தபூர்வமானது? அனைத்தையும் அர்த்தமானது என்றும் நிறுவலாம் அர்த்தமற்றது என்றும் நிறுவலாம். வாழ்வு என்பது தான் அனைத்திற்கும் அடிப்படை. வாழ்வு என்ற அடிப்படை சார்ந்து தான் அனைத்து அர்த்தங்களும் உணரப்படுகின்றன. அந்த வாழ்வு என்பதைக் கூட உலுக்கித்தள்ளி விவாதங்களை முன்வைத்தபடி இருக்கின்றார்கள். இந்நிலையில் அழகிப்போட்டி தேவையா என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.
 
கடந்த ஆண்டு கனடாவில் ஹொண்டா எக்கோட் கார்களைக் காட்டிலும் பி.எம்.டபிள்யூ கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. அதற்காக கனடாவின் மத்தியதரத்தின் பணநிலை ஒட்டுமொத்தமாக பி.எம்.டபிள்யூ நிலையாகிவிட்டது என்பதல்ல. பலர் மூச்சுமுட்டும் கடனிற்கு வாகனம் வாங்குகிறார்கள். பி.எம்.டபிள்யூ எக்கோட் என்ற அளவிற்கு இன்று இருப்பது சார்ந்து பல விடங்கள் அவதானிக்கப்படலாம். மேலும் பி.எம்.டபிள்யூ தவிர்த்து அவுடி மற்றும் இதர பெயர்களிற்கான தேடல்களும் நோக்கப்படலாம். இந்த அவதானிப்புக்களிற்கும் அழகிப்போட்டிக்கும் இடையில் பலத்த சமாந்தரங்களை அவதானிக்க முடியும்.
 
முடிவாக, 'மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா' என்று ரசிச்சிற்றுப் போறது தான் வினைத்திறன் மிக்கது :D  போட்டி ஒழுங்கமைப்பாளர்கள், காலாதிகாலமான மேலோட்டமாக அழகு விடயங்களிற்கு அப்பால் அழகு என்றால் என்ற விசாரணைகளை உள்ளடக்கி போட்டியை மேலும் மெருகூட்டலாம் என்பதை மட்டும் நாம் வேண்டுமாயின் எதிர்பார்க்கலாம். 
Link to post
Share on other sites

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

அழகான புலம்பெயர்  தமிழ்ப் பெண்களா??? எங்கப்பா இருக்கிறார்கள் ??????

அலை, ஏன் கொஞ்ச நாளா, ஏலம் விடுகிற மாதிரிக் கருத்தெழுதிறீங்கள்? :D

 

றியல் எஸ்ரேற்றிலா, இப்ப வேலை? :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்நாடுகளிலை நடக்கிற சாமத்தியவீடு கலியாண வீட்டிலையெல்லாம் மானாட மயிலாட,சூப்பர்சிங்கர் எல்லாமே நடக்குது. அப்பிடிப்பாக்கேக்கை இது வெரி சிம்பிள்......ஆனால் நான் இரண்டுக்கும் எதிர்ப்பு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுக்கு நான் எதிர்ப்பு இல்லை, ஆனால் தவிர்கக்கூடிய ஒரு நிகழ்வு இது.

 

ஆனால் சுவிஸ் நாட்டில் எமது பெண் பிள்ளைகள் மிக அழகாக இருக்கிறார்கள் என்பதனை சொல்லியே ஆகவேண்டும்.

 

குறிப்பாக இது ஒரு பாரிய பின்னணியுடன் அரங்கேற்றப்படும் ஒரு நிகழ்வாக இருக்கலாம். கொடுக்கல் வாங்கல் சமப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் தேசியத்தின் சார்பில் கூச்சல்கள் எழுப்பப்பட்டிருக்கக்கூடும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கால, கலாச்சார  வெள்ளத்தில் அடியுண்ட நதி எப்படிக் கரை சேரப் போகிறதோ ? 
 

Link to post
Share on other sites

அலை, ஏன் கொஞ்ச நாளா, ஏலம் விடுகிற மாதிரிக் கருத்தெழுதிறீங்கள்? :D

 

றியல் எஸ்ரேற்றிலா, இப்ப வேலை? :o

 

 

என்னவோ தெரியாது 2 முறை வசனங்கள் விழுகுது புங்கை, உந்த அழகுராணிப் போட்டிக்கு நடுவர்களாக தம்பிமார் சுண்டனையும் சுபேசனையும் அனுப்பலாமா?

உப்பிடி திருமதிகளுக்கும் வைச்சால் நாங்களும் போவமாக்கும் :lol:  :lol:

என்ன சோத்தன்ரிமாரின் எண்ணத்தைப் பாருங்கோ எண்டு சொல்லுறது விளங்குது :lol:  :lol:  :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய மேலான கருத்து என்னவென்றால், இவர்கள் எங்களின் மானத்தை வாங்கி விட்டார்கள். இனி எப்படி வெளியில் தலை காட்டுவது என்று தெரியவில்லை. இவர்கள்தானா உங்கள் அழகிகள் என்று யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்???!!!

 

அழகி என்பதிற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன?

 

இப்பும் தலை காட்டுகின்றீர்கள்தானே, அதேமாதிரி இனியும் காட்டலாம்

Link to post
Share on other sites

இது  விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் சார்ந்த விசயம்.

 

முன்னாள் அகதிகளின் அழகிப்போட்டி. நாடற்றவர்களின் அழகிப்போட்டி. இவ்வாறன தலைப்புகளே உண்மை. இவ்வாறன தலைப்புகளில் ஏதாவது நடந்தால் அதில் கருத்துச் சொல்லலாம். சுவிஸ் கனடா பிரான்ஸ் இங்கிலாந்து தமிழர்களின் அழகிப்போட்டி என்பதில் கருத்துக்கூற எதுவும் இல்லை.

 

உலகில் பல நாடுகளில் நடக்கும் அழகிப்போட்டிகள்போல் இதுவும் ஒன்றாக கருதுவது ஒன்றே சிறந்த வழி என்பது எனது கருத்து.

 

 

இதுதான் அழகு என்பது வியாபாரம். அங்கே ஏனையவை அழகில்லை என்பது நிறுவப்பட்டு வியாபாரம் நடக்கின்றது. இதற்கு குறிப்பிட்ட சமூகக் கண் தமிழ்க்கண் ஈழக்கண் எல்லாம் கொண்டு அணுக முடியாது. உலகில் பொதுவாக நடக்கும் ஒரு வியபாரச் சமாச்சாரம்.

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீலை கட்டிக் கொண்டு அழகிப் போட்டி செய்வதை விட... நீச்சல் உடையில், அழகிப் போட்டி செய்வதை... வரவேற்கின்றேன். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மூளை நல்லாக வேலை செய்யும். வேறு சிலருக்கு பாடும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். மற்றும் சிலருக்கு அழகான உடல் இருக்கிறது. அவரவர் தமக்கு கிடைத்ததை மேலும் வளப்படுத்தி, பெருமை கொள்ளவும் வாழும் வழியை வகுத்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை நாடுகளும் சமுதாயங்களும் வழங்க வேண்டும்; வழங்கி வருகின்றன. மூளை வேலை செய்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டு அழகான உடலை கொண்டவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க மறுப்பது நியாயமற்ற ஒதுக்குமுறையாக அமைகிறது. ஆகவே அழகி போட்டிகள் தேவையானவையும் ஊக்கப்படுத்தப்பட வேண்டியவையும் ஆகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப முக்கியமானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அட விடுங்கப்பா!
 
வான் கோழிகளுக்கும், ஒரு ஆசை இருக்காதா?
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் இன்னும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நிற்கின்றோம்


இளையவர்கள் அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் எம் இளையவர்கள்

எங்கோ சென்றுவிட்டார்கள்

 

வேகமாக அடிக்கும் காற்றினை எதிர்த்து அதன்  விசையில் வீழ்ந்து புரள்வதைவிட

அந்தக் காற்றின் வேகத்துடன் இசைந்து நடந்தால் தாக்கம் குறைவாகவே இருக்கும்

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.