Jump to content

நிலமை...படு மோசம் தான் !


Recommended Posts

நிலமை...படு மோசம் தான் !

கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர்.

கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா?

புத்தன்: :D

கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது"

புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!"

கந்தப்பு: :shock:

---------------------------------------------------

சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்...

டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க"

சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?"

டக்கு: "இல்லை அத்து இரவில அர்த்தமில்லாம கனவுகள் வருது"

சி*5: :twisted:

---------------------------------------------------

கானா பிரபா அண்ணா கேரள சென்று வந்ததிற்காக ஒரு சின்ன விருந்து... எல்லாம் நம்மாக்களுக்கு தான்..அரவிந்தன், புத்தன், கந்தப்பு, சுண்டல் & நான்..எல்லாரும் விருந்திற்கு ஏதாவது கொண்டு போனம்..அரவிந்தன் அண்ணா மட்டும் ஒரு சின்ன அளவுகோளோட வந்திருந்தார்...

கானா பிரபா: "அரவிந்தன், என்னபா இது, கணித வகுப்பில இருந்தா வாறியள்?"

அரவிந்தன்: "இல்லை வீட்டில "அளவோட சாப்பிடனும்" என்று சொல்லிட்டினம்..அதுக்கு தான்

கானா பிரபா: :shock:

----------------------------------------------------

இது எங்கட முகத்தார் ஆரம்பத்தில் கணணி வாங்கிய நேரம்..பாலைவனத்தில் முதலாவதாக ஒரு கணணி.. ஆள் பயங்கர கெட்டிக்காரர்...கணணி எல்லாம் சரியா பூட்டியாச்சு...ப்ரின்டர் பூட்டினால்..அது சரியே வரலை..உடனே வாங்கிய இடத்திற்கு போன் போட்டார்..எங்கட வசியண்ணா தான் அந்த கடையின் உரிமையாளர்..

முகம்ஸ்: "தம்பி வசி, உன்னை நம்பி வாங்கினது, வேலையே செய்யுது இல்லை..திரையில "ப்ரின்டரை காணவில்லை" என்று வருதடா

வசி: "பிரச்சனை இல்லை, இலகுவா இந்த பிரசனையை தீர்க்கலாம்.."

முகம்ஸ்: "என்ன இலகுவா, நான் திரைக்கு முன்னால கூட இந்த ப்ரின்டரை தூக்கி காட்டீட்டன், ஆனால் இப்பவும் "ப்ரின்டரை காணவில்லை" என்று சொல்லுதடா"

வசி: :?

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

தூயாவின் அம்மா- என்னபிள்ளை படிக்காமல் கணனியில் இருக்கிறாய்

தூயா - அம்மா, உங்களுக்கு விளங்காது. நான் கணனியின் ஊடாகத்தான் படிக்கிறேன்.

தூயாவின் அம்மா - கோவிலில் உவன் சுண்டலைக்கண்டனன். நீ படிக்காமல் எப்பவும் யாழில் தான் இருப்பதாகச் சொன்னான்

தூயா - சுண்டல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

அங்கே அப்பொழுது வந்த தூயாவின் அப்பா - படிக்காமல் எப்பவும் சாப்பாட்டிலதான் இவளுக்கு எண்ணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவுக்கு சுண்டல் மேல் எப்பவும் கிண்டல்தான்.

தூயா பபாவுக்கும் கந்தப்புவுக்கும் வாழ்த்துக்கள். நகைச்சுவைகள் நன்றாக உள்ளன. :lol:

Link to comment
Share on other sites

கந்தப்பு, இருங்கள் குஞ்சாச்சிட்ட சொல்லிவிடுறன்.

நன்றி சுஜீந்தன் :lol:

Link to comment
Share on other sites

இதையும் சேர்த்து சொல்லிவிடுறனே....ப்ரிண்ட் போட்டு நீங்கள் எழுதினதை ஆச்சிட்ட காட்டாட்டி..பாருங்க

Link to comment
Share on other sites

தூயா பரிட்சையில் சித்தி பெற்றதற்கு தூயா வீட்டில் ஒரு சின்ன விருந்து. புத்தன், கானாபிரபா, சுண்டல்,அரவிந்தன், நான் கலந்து கொண்டோம்.

சுண்டல் - சாப்பாடு எல்லாம் நீங்கள் செய்ததா இல்லை கடையில் எடுத்ததா

தூயா -எல்லாம் என்ற அம்மா செய்தவ. இந்தச் சம்பல் தான் நான் செய்தனான்.

கந்தப்பு(மனதுக்குள்) - அட மறுபடியும் ஊடாங் சம்பலா?. சாப்பிடக்கூடாது

புத்தன்(சாப்பிட்டுக்கொண்டே மனதுக்குள்) - சம்பல் நல்ல ருசியாய் இருக்கிறது. சுண்டலும், அரவிந்தனும் சாப்பிடாமல் கானாபிரபாவிடம் சிதம்பரக்கோவில் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கினம். கந்தப்பு சம்பலினைச் சாப்பிடாமல் வெள்ளி பார்த்துக்கொண்டு இருக்கிறார். கந்தப்புக்குத் தெரியாமல் அவற்றை கோப்பையில் இருந்து சம்பலை எடுக்கவேணும்.

20 நிமிடங்களின் பின்பு, புத்தன் வெஸ்மிட் வைத்தியசாலையில்

Link to comment
Share on other sites

பாவம் புத்தன்.. "பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல" என நான் எழுதி வைத்ததை பார்க்கவில்லை போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்...

டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க"

சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?"

டக்கு: "இல்லை அத்து இரவில அர்த்தமில்லாம கனவுகள் வருது"

சி*5: :twisted:

:lol::lol:

ஆமா டன் அண்ணாத்தை எங்கே? யாழ்பக்கமே காணவில்லை.

Link to comment
Share on other sites

டக்குவை தேட படை அனுப்பவேண்டும் போல ;)

அது சரி நீங்கள் ஏன் முகத்தாருக்கு வேலை செய்யாத ப்ரின்டரை குடுத்திங்கள் ;)

Link to comment
Share on other sites

செல்வமுத்து ஆசிரியர் - பிள்ளை வெண்ணிலா 10, மிருகங்களின் பெயரைச் சொல்லு பாப்பம்

வெண்ணிலா - 5 புலி,3 கரடி 2 சிங்கம்

---------------------------------

செல்வமுத்து ஆசிரியர் - அனுராதபுரத்தை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

அருவி(உரத்த குரலில்) -எல்லாளன்

வகுப்பில் தூக்கத்தில் இருந்த யாழ் கள எல்லாளன் திடுக்கிட்டு எழுந்து, அருவி எதாவது ஆசிரியருக்கு கோள் மூட்டுவதாக எண்ணி - சத்தியமாக நான் இல்லை, ஆதிவாசியாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

சின்னப்பவும் ரசிகாவும் எம் எஸ் என் அரட்டையில்

சின்னப்பு வணக்கம் பிள்ளை ரசிகா எப்படி சுகம்

rasikai. hai sinnapu ungadai font vilangalai english pls

சின்னப்பு . ஓ காய் ரசிகா அய் ஆம் சின்னப்பு கவ் ஆர் யுூ

rasikai . iooo vilangellai

சின்னப்பு புறுபறுக்கிறார் என்னத்தை படிச்சதெண்டினம் ஒழுங்கா தமிழும் விழங்கேல்லை இங்கிலிசும் விழங்கெல்லை எண்டாலும் என்ரை அறிவுக்கு உவையள் கிட்ட நிக்கமாட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்கள் ஆக்கமும் அருமை

Link to comment
Share on other sites

சின்னப்பு: நம்ம கல்யாணத்ணின் போது உங்கப்பா ரொம்பவும் பணத்தாசை புடிச்சவரா நடந்துகிட்டாரு!

சின்னாச்சி: எப்டி சொல்றிங்கள்?

சின்னப்பு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகத்தார்: ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

சின்னப்பு: இந்த பாழாப்போன ஞாபக மறணியால கஷ்டப்படறேன்!

முகத்தார்:என்னடா ஆச்சு?

சின்னப்பு

Link to comment
Share on other sites

அது சரி நீங்கள் ஏன் முகத்தாருக்கு வேலை செய்யாத ப்ரின்டரை குடுத்திங்கள் ;)

அது என்ரை ராசியம்மா என்ன செய்யிறது எதை வாங்கினாலும் வேலை செய்யுதில்லை கலியாணமும் அப்பிடித்தான்..............ஆனா பிள்ளை எல்லாரையும் துணிஞ்சு வம்புக்கு இழுக்கிறீர் எல்லாரும் என்னைபோல சும்மா இருக்க மாட்டீனம் கவனம்..........

Link to comment
Share on other sites

ஐயோ யாழ் களத்தின் நிலமை ரொம்ப மோசமாகத்தான் இருக்கு :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பிக்க முன்னால் பாதுகாப்புக் கருதி ஒரு கேள்வி

தூயவன் வாட்டசாட்டமா இருப்பாரா அல்லது ஒல்லியா இருப்பாரா??

தூயவன்; தேம்ஸ் ஆற்றங்ரையில் வைத்து மனைவியை நாடாவால் அளந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த விளங்காப்பயல் ஏனண்ணை மனிசியை இதிலை வைச்சு அளந்து கொண்டிருக்கிறியள் எண்டு கேட்டார்

அதுக்கு தூயவன் சொன்ன பதில்

"இல்லை ஆத்திலை போட்டாலும் அளந்து போடவேணுமெண்டு சொல்லியிருக்கு. அதுதான் அளக்கிறன்"

Link to comment
Share on other sites

கந்தப்பு எழுதியது:

வகுப்பில் தூக்கத்தில் இருந்த யாழ் கள எல்லாளன் திடுக்கிட்டு எழுந்து, அருவி எதாவது ஆசிரியருக்கு கோள் மூட்டுவதாக எண்ணி - சத்தியமாக நான் இல்லை, ஆதிவாசியாகத்தான் இருக்கும்

வடிவேலு எழுதியது:

முகத்தார்: ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

சின்னப்பு: இந்த பாழாப்போன ஞாபக மறணியால கஷ்டப்படறேன்!

முகத்தார்:என்னடா ஆச்சு?

சின்னப்பு: என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்தினேனா, ஞாபக மறதியில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

அப்பிடி போடு போடு போடு .........

அசத்தி போடுறீங்க ஜோக்காலே!

:D 8)

Link to comment
Share on other sites

ஆரம்பிக்க முன்னால் பாதுகாப்புக் கருதி ஒரு கேள்வி

தூயவன் வாட்டசாட்டமா இருப்பாரா அல்லது ஒல்லியா இருப்பாரா??

அபச்சாரம்!

தூயவன் வாட்ச்சமாக இருப்பாரோ, இல்லையோ என்று கேட்பதற்கு முதல் அவருக்கு கலியாணம் ஆகி விட்டதோ என்று கேட்கவேணும்! :evil: :evil:

விட்டால் என்னைக் கிழவன் ஆக்கி விடுவீர்கள் போலிருக்குதே! :evil: :evil:

Link to comment
Share on other sites

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

:D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியர் - ஜ. நா. சபை என்றால் என்ன நித்திலா

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் - ஐம்பெரும் காப்பியங்கள் எவை?

நித்திலா - தெரியாது

செல்வமுத்து ஆசிரியர் -பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகுதூரம் போல

நித்திலா - அதனால் தான் நான் பேருந்தில் வாரனான்

அட பாவமே இவளவு தூரமா :?: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.