Jump to content

நெல்லை அருகே கேரளா தமிழக மாணவர்கள் மோதல்.


Recommended Posts

நெல்லை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கல்லூரியில் உள்ள லேப், கம்ப்யூட்டர் அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரூ. 30 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாணவி ஒருவரிடம் பேசியது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு விடுதியில் தங்கியுள்ள கேரள மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உருட்டுக் கட்டையுடன் திரண்டு வந்து எதிர்தரப்பு மாணவர்களை தாக்க முயன்றனர். அவர்களை பார்த்து பயந்த மற்ற மாணவர்கள் சுவர் ஏறிகுதித்து தப்பியோடினர். தடுக்க முயன்ற காவலர்களுக்கும் அடி உதை விழுந்தது. ஆத்திரம் அடங்காத மாணவர்கள் கல்லூரி முதல்வர் அறைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். கல்லூரி லேப் மற்றும் கம்ப்யூட்டர் அறைகளும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன. கதவு, ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர்.இந்த சம்பவத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லூரி முன்பு  100க்கும் மேற்பட்ட அதிரப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13923:nellai-kerala&catid=36:tamilnadu&Itemid=102

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபகுதி இனத்துக்காக  போராடுகின்றது.
மறுபகுதி பெண்ணுக்காக அடித்து நொருக்குகின்றது.

 

சபாஷ் சரியான போட்டி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் இன்றையநிலையில் இது திசை மாற்றமடைய வைக்கப்படலாம்

ஆபத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்

 

(இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களையும்சேர்த்து ஒரு பொராட்டம் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற செய்திகள் மாணவர்களின் போராட்டங்களை திசை திருப்பும்.   :(  

 

Link to comment
Share on other sites

இதற்கும் மாணவர் போராட்டங்களும் எவ்வித தொடர்பும் இல்லை!

தமிழகத்தில் படிக்கும் கேரள மாணவர்களின் திமிரை அடக்க கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை தமிழக மாணவர்கள் தவறவிட்டுவிட்டார்கள்

சம்பந்தப்பட்ட மாணவர்களை தமிழகத்துக்குள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.