• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

நாடோடி நான்...

Recommended Posts

 

இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார்அவருக்கு எழுபது வயதாகின்றதுஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர்.

 

இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர்பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" .

 

எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

 

இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர்நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம்அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர்.

 

மூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள்நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள்எமக்கு எதுவும் புரியவில்லைபின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக...

 

கடைசியாக நான்என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லைஅவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்...

 

மற்றைய மூவருக்கும் தமக்கென மொழி மதம்நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லைஅவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்...

 

எங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்ததுஅதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம்அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்...

 

அழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்ததுபெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது....  அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்...

 

இப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார்தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார்.

 

1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லைஇடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார்உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார்.

 

தாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள்.

 

தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள்ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள்இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்...

 

எங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில்  எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்...

 

கடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்...  தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்.........

 

முடிவில் அவர்களிடம்  ஒன்றை மட்டும்  சொல்வேன்

 

"உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால்  நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள், தீயா!

 

நல்லதொரு பகிர்வு!

 

வெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்!

 

எமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது மக்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது! :o , 

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு பதிவு. விரைவில் மலரனும் எங்கள் தமிழீழம்

 

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள், தீயா!

 

நல்லதொரு பகிர்வு!

 

வெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்!

 

எமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது மக்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது! :o , 

நன்றி புங்கையூரான்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 

நல்லதொரு பதிவு. விரைவில் மலரனும் எங்கள் தமிழீழம்

உங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன் 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்

 

 

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.

அண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் "பரதேசி" படம் பார்த்தீர்களா? அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்

 

சரியாகச் சொன்னீர்கள் 

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.

அண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் "பரதேசி" படம் பார்த்தீர்களா? அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.

உண்மைதான் கிருபன் தமிழகத் தமிழரை விடுவோம் இன்று ஈழத் தமிழர் பலரே எமது வரலாறு தெரியாமல் உள்ளனர்.  முதலில் எங்கள் பிள்ளைகளுக்கு எம் வரலாற்றை மொழியை சொல்லி கொடுக்க தயங்கக் கூடாது. நாம் எமது பணியை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மைவிட புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் சிறந்தவர்கள் எம் பிள்ளைகள் அவர்களுக்கான படித்தவர்கள் மத்தியிலான ஊடாட்டங்களும் அந்தந்த நாடுகளில் எம்மைவிட அதிகம். 

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • குழு: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்... பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா   இது கண்ணன் வரும் பொழுதல்லவா, ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்  விடை பெறும் உயிரல்லவா.... பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா   இது கண்ணன் வரும் பொழுதல்லவா, ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை  பெறும் உயிரல்லவா, ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை  பெறும் உயிரல்லவா, வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா, பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா   இது கண்ணன் வரும் பொழுதல்லவா..... பெ: இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய  கண்ணீர் அணைக்கின்றதே, உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்  என்னுயிரும் கரைவதென்ன, இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா, கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லய்யா....... பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா   இது கண்ணன் வரும் பொழுதல்லவா, ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை  பெறும் உயிரல்லவா, ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை  பெறும் உயிரல்லவா, வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா..... ஆ: சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள்  மகளே வா வா, ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...  ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா... (மார்கழி)     
  • ஸீனத் தொடர்பு மூலம் தெரிய வந்தது.  ஹாங் காங் ஐ பிரித்தானிய சீனாவிடம் கையளித்த போது நடந்த கொண்டாட்டமும், உணர்வும், சீன அரசாங்கத்தில் ராஜபக்சேக்களின் வெற்றி உருவாக்கி இருக்கிறது. வெளிப்படையான, நெஞ்சை முட்டி தட்டி  கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சீன அரசாங்கம் வெகு விமிரிசையாக கொண்டாடுகிறது. 
  • திமுக, அதிமுகவுக்கு அடுத்து... வியூகம் வகுக்கும் பாஜக! மின்னம்பலம்   காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்... “ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாஜக என மூன்று அமைப்பினரும் பொதுமக்களிடம் சென்று அவர்களுக்கு தேவையானதைப் பூர்த்திசெய்து கொடுத்து அரசியல் பயிற்சி கொடுக்கிறோம். உதாரணமாகக் கடந்த ஆண்டு புதுச்சேரியில் வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 99 சதவிகிதம் பேர் தொடர்ந்து பாஜகவினருடன் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜகவில் சேருபவர்களுக்கு பொருளாதார உதவிகள், வெளித் தொடர்புகள், மும்பை, டெல்லி என வெளி மாநிலங்களுக்கு அழைத்துப்போவது, அதிகாரத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி உதவிசெய்வது போன்ற நடவடிக்கைகளால் பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.   பாஜக தலைமையின் நோக்கம் தமிழகத்தின் வாக்கு வங்கியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே. அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கட்சியாக பாஜகதான் இருக்கவேண்டும் என்று அதற்கான திட்டமிடுதல்களை முன்னெடுக்கின்றனர். தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகள் வாங்கத் திட்டமிட்டு அதற்கான வீயூகங்களை வகுத்து வருகிறார்கள்” என்று கூறுகிறார்கள். மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒருவரிடம் பேசினோம்... “டெல்லி, மும்பை என எங்கு சென்றாலும் பாஜக என்றால் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். காவல் துறையிடம் இருந்தும் நல்ல மரியாதை கிடைக்கிறது. நாங்கள் கொடுக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். பாஜக தலைவர்கள், அமைச்சர்களை எளிமையாக சந்திக்க முடிகிறது. நான் வைக்கும் கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது” என்றார். இதுபோலவே பாஜகவுக்கு எதிராகவோ, கடவுளுக்கு எதிராகவே யாராவது பேசினால், சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அவரது விவரங்களைத் தெரிந்துகொண்டு அப்பகுதி நிர்வாகிகள் மூலமாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் அளிக்கிறார்கள். அத்துடன் பாஜகவில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு ஒரு பிரச்சினை என்று காவல் நிலையம் சென்றால் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக குரல் கொடுக்கிறார்கள். அதனை பார்க்கும் கிராமத்து இளைஞர்கள் தங்களது பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தமக்குப் பின்னால் பெரிய கூட்டம் இருப்பதாகவும் நினைத்து மற்ற இளைஞர்களையும் பாஜகவுக்கு வளைக்கிறார்கள் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில். திருமணம், காதணி விழா, இறப்பு, கரும காரியங்கள் என்றால் ஊரிலுள்ள பாஜகவினர் மூலம் போஸ்டர், பேனர்கள் வைக்கச் சொல்கிறது பாஜக தலைமை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓலைப்பட்டிக் கிராமத்தில் திருவேங்கடம் என்பவர் இறந்துவிட்டார். அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக சார்பில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலாவவிடப்பட்டன. . ஆனால், அவரும் அவரது குடும்பத்தினரும் பாரம்பரியமாக திமுககாரர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதுபோன்ற விளம்பரங்களை ஒரு உத்தியாக கையாண்டு ஊர் ஊராகக் கட்சியை வளர்க்க முயற்சி செய்கிறார்கள் பாஜகவினர்.   https://minnambalam.com/politics/2020/08/07/8/tamilnadu-third-place-bjp-plan
  • தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக்கூறுவது பொருத்தமற்றது. தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அனைத்து உறுப்பினர்களும், மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/தமிழரசுக்-கட்சியின்-தலைம/