-
Tell a friend
-
Topics
-
Posts
-
By மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted
நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் -
மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
-
By பிழம்பு · பதியப்பட்டது
பி.சி.ஆர் பரிசோதனையைக் குறைத்து விட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா தொற்றால் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கொ ரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நோய் குறைவதாக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசி நோய் பரவுவதைத் தடுக்காது, ஆனால் நோய் அதிகரிப்பதைத் தடுக் கிறது என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லு நர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். Thinakkural.lk -
By பிழம்பு · பதியப்பட்டது
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானோ இலங்கை இழைத்த குற்றங்களிற்காக இலங்கையை பொறுப்புக்கூறச்செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கான சிவில் அமைப்புகளிற்கான அச்சுறுத்தல்கள் நினைவுகூறுதலை ஒடுக்குதல் மதசிறுபான்மையினரின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தல் சட்டத்தின் ஆட்சியில் வீழ்ச்சி ஆகிய உட்பட இலங்கையின் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது என தெரிவித்துள்ள கனடாவின்; வெளிவிவகார அமைச்சர் கனடா பொறுப்புக்கூறல் நல்லிணக சமாதான நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார். Thinakkural.lk -
இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர் (எம்.மனோசித்ரா) இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாடுட்டுடன் செயற்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்க ஆர்வத்துடன் உள்ளது. பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைதன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார். இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர் | Virakesari.lk
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.