Jump to content

நிலவு குளிர்சியாக இல்லை


Recommended Posts

நிலவு குளிர்சியாக இல்லை

 

zzzzzwpo.jpg

 

வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது.

 

ஜானவி ஊரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் இளைப்பாறிய அதிபர். அவளது கணவரோ பிரபல கண்வைத்திய நிபுணராக இருந்து பத்து வருடங்களுக்கு முதல் காலமாகிவிட்டார். கணவரின் இழப்பை ஜானவியால் ஜீரணிக்க முடியவில்லை. கணவர் உயிருடன் இருந்தபொழுதே தனது ஒரே மகளான மைதிலியை பிரான்சில் இருந்த அவர்களது நண்பர் ஒருவரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டாள் ஜானவி. தனது கணவர் ஆரம்பித்த வயது முதிர்ந்தோர் இல்லத்தைப் பொறுப்பெடுத்து நடத்திக் கொண்டிருந்தாலும், கடந்த மூன்று வருடங்களாக மகள் மைதிலி தன்னிடம் வந்து இருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.  மைதிலியோ, தனது பிள்ளைகளைப் பார்பதற்கும் அம்மாவால் வரும்  வயது முதிர்ந்தோருக்கான உதவித்தொகை எல்லாவற்றையும் மனதில் வைத்தே அம்மாவை வற்புறுத்திக் கொண்டிருந்தது அந்த அப்பாவி அம்மா ஜானவிக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அடிக்குமேல் அடி அடிக்க அம்மியும் நகரும் என்பது போல மைதிலி வெளிநாட்டு வாழ்வின் மகத்துவங்களையும் சொல்லி ஜானவியின் மனதை வென்று விட்டாள்.

 

ஜானவியை மருந்து போடுவதற்கும், பகல் சாப்பாடு சாப்பிடுவதற்கும் விமானப்பணிப்பெண் மெதுவாகத் தட்டி எழுப்பினாள். ஜானவியின் நுனிநாக்கு ஆங்கிலம் அப்பொழுது நன்றாகவே கைகொடுத்தது. ஜானவி பகல் சாப்பாட்டை முடித்துவிட்டுப் புதினம்  பார்க்கும் ஆவலில் தனது இருக்கையின் ஜன்னலை மெதுவாகத் திறந்தாள். அங்கே சூரியவெளிச்சம் அவள் கண்களைக் கூசியது. வெண்முகில் கூட்டங்கள் திட்டுத்திட்டாகப் பரவி இருந்தன. அதனூடே விமானம் ஊடறுத்துத் தன் இலக்கு நோக்கி வரைந்தது, அவள் மனதைப் போலவே. விமானம் பாரிசில் தரைதட்ட இன்னும் ஒருமணித்தியாலங்களே இருந்தன. அவளின் மனம் பலவாறு மறுகியது. அவளிற்குப் பேரப்பிள்ளைகள் பிறந்தது செவிவழிச் செய்தியே.தனது குடும்பத்தின் பெயர்சொல்ல வந்த வாரிசுகளை காண அவள் மனம் ஆலாய் பறந்தது. விமானம் தனது அகலக் கால்களைப் பரப்பி ஓடுபாதையில் வழுக்கி ஓடி நின்றது.அப்பொழுது  மாலை வேளையாகையால் விமானநிலையமும் அதன் சுற்றுப்புறம் எங்கும் வெத்திலை துப்பியிருந்தது .

 

 ஜானவி தனது குடிவரவு அலுவல்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அதிக நேரம் அவள் விமானத்தில் இருந்தமையால் கால்கள் வீங்கி நடப்தற்கு அவள் சிரமப்பட்டாள். எல்லோரும் தனக்காக அங்கு கூடியிருப்பார்கள் என்றே அவள் எதிர்பார்த்தாள் ஜானவி. தனது மருமகன் மட்டும் அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்திருப்பதை ஜானவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வழமையான விசாரிப்புகளுடன், மைதிலியின் வீடு அருகே இருந்ததால் அவளை ரெறியினிலேயே மருமகன் அழைத்துச் சென்றார். பத்துநிமிட பயணத்தின்பின் அவர்கள் அவர்களது குடியிருப்புத்தொகுதியை அடைந்தார்கள். ஜானவி வரும்பொழுது எல்லாவற்றையுமே அவதானித்துக்கொண்டுதான் வந்தாள். கிராமத்தில் இருந்த ஜானவிக்கு நீண்ட நெடிய அடுக்குமாடிகளின் தொகுப்பு பிரமிப்பை ஏற்படுத்தின சுற்றாடல்கள் ஆள்நடமாட்டமற்று மிகவும் அமைதியாக இருந்தன. அது அவளிற்கு நெருடலாகவே இருந்தன. மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பற்றி  மருமகனிடம் கேட்க ஜானவிக்குக் கூச்சமாக இருந்தது. அவள் வீட்டில் நுளையும்பொழுது வீட்டில் யாருமே இருக்கவில்லை. அவளது கூச்சத்தை தீர்க்குமுகமாக மைதிலி வேலைக்குப் போனதையும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதையும் மருமகன் கூறிக்கொண்டிருந்தார்.

 

auclairdelalune500x500.jpg

 

 

ஜானவிக்கு தான் வளர்த்த பிள்ளையும் பேரப்பிள்ளைகளும் தன்னை பார்க்க விமானநிலயத்திற்கு வராதது பெரிய எமாற்றமாகவே இருந்தது. சிறிது நேரத்தின் பின்பு மைதிலியும் பேரப்பிள்ளைகளும் வீட்டினுள் நுளைந்தார்கள். மைதிலி தாயைக் கண்டவுடன் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதாள். பத்துவருடப் பிரிவின் ஆற்றாமை அதில் தெரிந்தது. பேரப்பிள்ளைகள் மைதிலியின் பின்பு முழுசிக்கொண்டு நின்றார்கள். மைதிலி அவர்களை ஜானவிக்கு அறிமுகப்படுத்தினாள். அவர்கள் பிரெஞ்சிலேயே ஜானவியுடன் கதைத்தார்கள். பேரப்பிள்ளைகள் தமிழ் கதைக்க முடியாமல் கஸ்ரப்படுவதை பார்க்க ஜானவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னிடம் படித்தவர்களெல்லாம் பல உயர் பதவிகளில் இருக்கும்பொழுது தனது பேரப்பிள்ளைகளுக்கு தாய்மொழி தெரியவில்லை. என்பது ஆற்றமுடியாமல் இருந்தது மைதிலி பிள்ளைகளைக் கவனிக்காது எந்தநேரமும் வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்தது ஜானவிக்கு ஒருவித எரிச்சலையே கொடுத்தது.

 

நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஜானவி வந்து ஒருமாதத்திற்கு மேலான நிலையில். ஜானவிக்கு மைதிலியின் வாழ்க்கை முறை அறவே பிடிக்கவில்லை. ஓரிருநாட்கள் ஜானவியை கோயிலுக்குக் கூட்டிச் சென்றாள் மைதிலி. அப்பொழுது ஜானவிக்கு வெளியில் இடங்களை பார்த்தது சிறிது சந்தோசமாக இருந்தது. தனதுமகள் இப்படி மாறுவாள் என்று ஜானவியால் நம்ப முடியாமல் இருந்தது. அவளும் கணவரும் வேலை செய்தும் மைதிலியை எந்தவித குறையுமில்லாமலேயே வளர்த்தெடுத்தார்கள். ஆனால் தனது பேரப்பிள்ளைகள் அன்புக்காக ஏங்கி தன்னிச்சையாக வளருவது அவளுக்கு மனச்சங்கடமாகவே இருந்தது. மொத்தத்தில் அவளுக்கு பிரான்ஸ் வாழ்க்கை மனச்சங்கடமாகவே இருந்தது. அவளது எதிர்பார்புகள் எதுவுமே நிறைவேறவில்லை. அவளது மனமோ ஊரிற்குப் போக ஏங்கியது. ஒரு அங்கு பிரச்சனைகள் இருந்தாலும் அன்பும் அரவணைப்பும் அங்கு நிறையவே இருந்தது. ஊரின் போலித்தனமல்லாத வாழ்க்கைக்கு ஜானவியின் மனம் நிறையவே ஏங்கியது.  தான் இங்கு வர எடுத்தமுடிவு பிழையோ என்று ஜானவி நிறையவே யோசித்தாள். அவள் தீவிரமாக யோசித்து ஒருமுடிவுக்கு வந்திருந்தாள். தனது ஏயார்லைன்ஸ்சுக்கு போன் பண்ணி தனது ரிக்கற்ரை மீள்பதிவு செய்தாள் ஜானவி. தனது முடிவை மைதிலிக்கு சொன்னப்பொழுது அதிர்ச்சியுடன் அவளை வினோதமாகப் பார்த்தாள். மைதிலியின் திட்டம் தவிடுபொடியாகியது அப்பாவி ஜானவிக்கு தெரியவாய்ப்பில்லைத்தான் .

      

கோமகன்

02/02/2013

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எத்தனை குடும்பங்கள் எம் கண் முன்னே..

நான் இப்படி இரண்டு வயதான ஆச்சிகளுடன் கதைத்துள்ளேன்.

 

ஒருவர் கோண்டாவிலைச் சேர்ந்தவர். இரண்டு மகள், ஒரு மகன் 6,7 பேரப்பிள்ளையள். மனுசி என்னுடன் பேசும் போது அழாத நாளே இல்லை. ஊரில் இருந்தால் சொந்த வீடு, பிச்சை எடுக்காட்டியும் கோயில், குளத்திலையாவது தொண்டு செய்து வயிற்றைக் கழுவி விடுவேன், இன சனத்தோடு நிம்மதியா இருந்திடுவேன். இஞ்சை ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என்று. மாதம் தொடங்க சோஷல் காசு வாற நாள் பிள்ளையள், பேரப்பிள்ளையல் வருமாம் வந்து ஆளாளுக்கு அந்தக் காசைப் பறிச்சுக்கொண்டு போடுங்களாம் பிறகு தான் சாப்பிடுறதுக்கு ஒவ்வொரு பிள்ளையளின்ரை வீட்டை போய் நாய் படாப் பாடுபடுவேன். சாவு கூட வருகுதில்லை என்று கவலைப் படும்.

 

இன்னொரு மனுசிக்கு இஞ்சை ஒரு மகன், சுவிஸிலை ஒரு மகள். இங்கும் அதே நிலை. மகன் காரன் வேலைக்குப் போறதில்லை அவன்ரை மனுசி தான் மக்டொனாஸிலை வேலை செய்யுது. சோஸல் காசும் வரும். 3 பிள்ளையள். அவன் தாயின்ரை காசைப் பறிச்சிட்டு சுவிஸுக்கு துரத்தி விடுவான் மனுசி அங்கை மகள் கூட இருந்திட்டு மாத தொடக்கத்திலை இஞ்சை வரும்.

இவனுக்கு காசு குடுக்கிறதாலை மருமகன் காரன் சண்டையாம். பாவம் மனுசி படாத பாடு படுகுது.

 

எத்தனை பேர் இப்படி?

 

காசு தான் வாழ்க்கை என்று பலர் நினைப்பதால் உறவுகள் என்பதே வேதனையாய் ஆகிவிட்டது.

காசுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதே நிதர்சனம். :( :(

 

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் கோமகன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை அவரசத்தில் எழுதியது மாதிரி இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இயந்திரத்தனமான வாழ்வின் பிரச்சினைகளையும், புதிதாக வருபவர்கள், அதிலும் வயது முதிர்ந்தவர்கள், புதிய சூழலுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இயைபாக்கம் அடையமுடியாததையும் விபரித்துச் சொல்லியிருக்கலாம்.

பணம் ஒன்றே குறியாக வாழுபவர்கள்தான் தமது அன்புக்குரியவர்களையும் பணத்திற்காகப் பயன்படுத்துவார்கள்.

சட்டப்படி விவாகம் செய்யாமல் கூடி வாழ்ந்து குழந்தைகள் பெற்று தனிய வாழ்ந்தால் அதிக அரசாங்கத்தைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் நமது தமிழர்களில் சிலர் தாலி கட்டி மட்டும் வாழுகின்றனர். கணவன் வேறு இடத்தில் வாடகைக்கு இருப்பார். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டும் வந்துவிடுவார்.!

Link to comment
Share on other sites

இப்படி எத்தனை குடும்பங்கள் எம் கண் முன்னே..

நான் இப்படி இரண்டு வயதான ஆச்சிகளுடன் கதைத்துள்ளேன்.

 

ஒருவர் கோண்டாவிலைச் சேர்ந்தவர். இரண்டு மகள், ஒரு மகன் 6,7 பேரப்பிள்ளையள். மனுசி என்னுடன் பேசும் போது அழாத நாளே இல்லை. ஊரில் இருந்தால் சொந்த வீடு, பிச்சை எடுக்காட்டியும் கோயில், குளத்திலையாவது தொண்டு செய்து வயிற்றைக் கழுவி விடுவேன், இன சனத்தோடு நிம்மதியா இருந்திடுவேன். இஞ்சை ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என்று. மாதம் தொடங்க சோஷல் காசு வாற நாள் பிள்ளையள், பேரப்பிள்ளையல் வருமாம் வந்து ஆளாளுக்கு அந்தக் காசைப் பறிச்சுக்கொண்டு போடுங்களாம் பிறகு தான் சாப்பிடுறதுக்கு ஒவ்வொரு பிள்ளையளின்ரை வீட்டை போய் நாய் படாப் பாடுபடுவேன். சாவு கூட வருகுதில்லை என்று கவலைப் படும்.

 

இன்னொரு மனுசிக்கு இஞ்சை ஒரு மகன், சுவிஸிலை ஒரு மகள். இங்கும் அதே நிலை. மகன் காரன் வேலைக்குப் போறதில்லை அவன்ரை மனுசி தான் மக்டொனாஸிலை வேலை செய்யுது. சோஸல் காசும் வரும். 3 பிள்ளையள். அவன் தாயின்ரை காசைப் பறிச்சிட்டு சுவிஸுக்கு துரத்தி விடுவான் மனுசி அங்கை மகள் கூட இருந்திட்டு மாத தொடக்கத்திலை இஞ்சை வரும்.

இவனுக்கு காசு குடுக்கிறதாலை மருமகன் காரன் சண்டையாம். பாவம் மனுசி படாத பாடு படுகுது.

 

எத்தனை பேர் இப்படி?

 

காசு தான் வாழ்க்கை என்று பலர் நினைப்பதால் உறவுகள் என்பதே வேதனையாய் ஆகிவிட்டது.

காசுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதே நிதர்சனம். :( :(

 

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் கோமகன் அண்ணா. :)

 

இதுவும் ஒரு உலகமயாதலின் அங்கமாக எடுக்கலாம் தானே ஜீவா ??? அதேவேளையில் இவற்றிற்கு அடிமையாகாத அன்பையே நேசிக்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள் தான் . ஆனால் அவர்களின் விகிதாசாரம் குறைவாகவே காணப்படுகின்றது. புலத்திலே ஒருவிதமான " கூட்டுப்புழு "  வாழ்க்கை நிலமைகளுக்கும் இவைகளே காரணமாகின்றன . உங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் ஜீவா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத் தொடங்கப்பட்டுள்ளது. முடிவு இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த  பல வயதான வர்களின் நிலை இப்படிதான் இருக் கிறது. புலம் பெயர்வில் உள்ள இயந்திரத்தனம் அவர்களுக்கு பழகக் படுவதில்லை. அவர்களை அவர்களுக்கு இயல்பாக விடுவதே நன்று.

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த  பல வயதான வர்களின் நிலை இப்படிதான் இருக் கிறது. புலம் பெயர்வில் உள்ள இயந்திரத்தனம் அவர்களுக்கு பழகக் படுவதில்லை. அவர்களை அவர்களுக்கு இயல்பாக விடுவதே நன்று.

 

நிலா அக்கா நீங்கள் எந்த பக்கம் கருத்து எழுதிறீர்கள் என்பது புரியவில்லை.

 

கதையில் ஜானவியை அவவின் பாட்டுக்கு விடுவதற்காக அல்ல பரிசுக்கு அழைத்து வந்தது.  ஜீவாவின் நீண்ட கருத்தும் இதைதான் சொல்கிறது.

 

 

நிலவு குளிர்சியாக இல்லை

 

வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது.

 

இதற்கு பிறகு கதையின் கலையாளுமைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை பிளேன் மாதிரி பறக்கிது . கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம் . உங்கடை கதைக்கு வாழ்த்து சொல்லிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி  கோ

 

நிலவு குளிர்சியாக இல்லை

 

(நிலவு குளிர்ச்சியாக இல்லை)

 

எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்படணும்

(நான் வேறு எதைச்சொல்வேன்)

 

 

கதை பிளேன் மாதிரி பறக்கிது . கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம் . உங்கடை கதைக்கு வாழ்த்து சொல்லிறன் .

 

உங்களிடமும் அதுவே............
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்களுக்கும் ஊரின் இயற்கையான சூழலில்...... வாழ்ந்தவர்களுக்கும் 

வெளி நாட்டு வாழ்க்கை சரியாக வரமாட்டாது என்பது உண்மை

அவர்களுக்காக எங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றமுடியாது.

அப்படி மாற்ற வெளிக்கிட்டால் பணம்.....  கையில் கடிக்கும்.

 

கனடாவில் எனது சின்னம்மாவிற்கும் இந்த நிலை வந்தது

இன்னும் அதிகமாகச் சில விபரீதமான தாக்குதல்களும்... நடந்தது .

 

கனகாலம் ஒளித்து வைத்திருந்தவர்... என்னுடன் கதைக்கும் போது

தாங்கமுடியாமல் உண்மையைக் கூறிவிட்டார்.

 

இப்போது  ஊரில் சந்தோசமாக வாழ்க்கை நடத்துகின்றார்

 

பதிவிற்கு நன்றி கோமகன் . 

 

Link to comment
Share on other sites

ஏன் இந்த அம்மாக்கள் திரும்பி ஊருக்குப் போகக் கூடாது, அவர்களும் போவதை விரும்பவில்லை என்று தான் நினைக்கிறேன், இங்கு ஒரு அம்மா இருக்கிறா அவா மகளுடன் தான் இருக்கிறா. மகள், மருமகணைப் பிடியாதாம் அவவுக்கு, பேரப் பில்ளைகளுக்காகவும், பென்ஷனுக்காகவும் தான் இருக்கிறாவாம். ஊரில் தோட்டம் செய்த ஆட்களாம். திரும்பிப் போனால் வாழக் காசில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த அம்மாக்கள் திரும்பி ஊருக்குப் போகக் கூடாது, அவர்களும் போவதை விரும்பவில்லை என்று தான் நினைக்கிறேன், இங்கு ஒரு அம்மா இருக்கிறா அவா மகளுடன் தான் இருக்கிறா. மகள், மருமகணைப் பிடியாதாம் அவவுக்கு, பேரப் பில்ளைகளுக்காகவும், பென்ஷனுக்காகவும் தான் இருக்கிறாவாம். ஊரில் தோட்டம் செய்த ஆட்களாம். திரும்பிப் போனால் வாழக் காசில்லையாம்.

இது தான் எனக்கும் விளங்காதது, அலை! :o

 

சுவாசிக்கிற காற்றும், குடிக்கிற தண்ணியும், போட்டுக் கொள்ளுற குளுசைகளும் இருக்கிற நாட்டின்ர தருமம்!

 

போங்கோ எண்டு பிடிச்சுத் தள்ளினாலும், போகமாட்டினம்! :o

 

ஆனால் இருக்கிற நாட்டைப் பற்றிப் பாடிற புறணி எண்டால், கொஞ்ச நஞ்சமில்லை! :huh:

Link to comment
Share on other sites

கதையை அவரசத்தில் எழுதியது மாதிரி இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இயந்திரத்தனமான வாழ்வின் பிரச்சினைகளையும், புதிதாக வருபவர்கள், அதிலும் வயது முதிர்ந்தவர்கள், புதிய சூழலுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இயைபாக்கம் அடையமுடியாததையும் விபரித்துச் சொல்லியிருக்கலாம்.

பணம் ஒன்றே குறியாக வாழுபவர்கள்தான் தமது அன்புக்குரியவர்களையும் பணத்திற்காகப் பயன்படுத்துவார்கள்.

சட்டப்படி விவாகம் செய்யாமல் கூடி வாழ்ந்து குழந்தைகள் பெற்று தனிய வாழ்ந்தால் அதிக அரசாங்கத்தைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் நமது தமிழர்களில் சிலர் தாலி கட்டி மட்டும் வாழுகின்றனர். கணவன் வேறு இடத்தில் வாடகைக்கு இருப்பார். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டும் வந்துவிடுவார்.!

 

உண்மைதான் எனக்கே இந்தக் கதையில் முழுத்திருப்தி இல்லை . இதை பேப்பருக்காக எழுதினேன் . ஆனால்  சிலகாரணங்களுக்காக என்னால் அனுப்ப முடியவில்லை . அப்படியே இணைத்து விட்டேன் . அடுத்தமுறை கனதியாகவே எழுதுகின்றேன் . வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கிருபன் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகர் புலம்பெயர்ந்த வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என்று சொல்லுவினம் ....பிறகு இப்ப ஊர் அந்தமாதிரி இருக்கு என்றும் சொல்லுவினம்.....சிட்னியில் வாழும் அனேகர் தங்களது சொத்துக்களை விற்றால் 5 தலைமுறைக்கு வசதியாக நல்லாய் வாழமுடியும்.ஆனால் ஒருத்தரும் போகமாட்டினம்.....புரியல்ல... கோமகன் பதிவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா அம்மாவை அங்கத்தையான் சூழலை இருக்கவிடுகிறது நல்லம் . இங்கைதானே பிள்ளையளை பாக்க எல்லா வசதியளும் இருக்கு . பேபி கெயரிலை விடலாம்தானே ; காசுக்காக இப்பிடியெல்லாம் செய்யக்கூடாது . உங்கடை கதையை பராட்டிறன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.