Jump to content

101 நாளில் எளிதாக குண்டாகலாம் (உபயம் :- முகப்புத்தகம்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

101 நாளில் எளிதாக குண்டாகலாம்

குண்டாக tips உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம். 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ¬ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே. எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும். தயிர் சேர்க்கவும் நன்றாகத் தூங்கவும் மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ்,தயிர் சாதம், உருளை சிப்ஸ்,ஐஸ்க்ரீம், சாக்லெட்,எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,சிக்கன், மட்டன்,வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க. இளைத்தவனுக்கு எள்ளு அன்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும் கூட. இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத் தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில் மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள் சற்று வாளிப்பான உடல்வாகு பெற எள்ளும் உளுந்தும் மிகப்பயன் தரும்.
வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண்/குடல்புண் இருந்தாலும் உடல் எடை ஏறுவதில்லை.அது போன்ற நோயினர் தினசரி காலையில் நீராகாரம்(உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம் & சீரகம் போட்டு செய்து வடிப்பது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இது குடற்புண்ணையும் ஆற்றி, உடல் எடை உயர்த்திட உதவும். தேங்காய்ப் பால் வாரம் இரண்டுமுறையேனும் உணவில் சேர்ப்பதும் நல்லது.

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தூண்டும் irritable bowel syndrome எனும் கழிச்சல் நோயிலும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. உணவு உண்ட பின், எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தம் ஆகும் போது, சூடான, காரமான உணவை சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில் மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பின், சரியான மருத்துவ சிகிச்சையுடன் சுண்டைவற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது னோயையும் நீக்கி உடல் எடையை கண்டிப்பாக அதிகரிக்கும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குண்டாவதற்கு (உண்டாவதற்கு அல்ல ) ஆலோசனை தேவைப்பட்டால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கோ  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

101 நாளில் எளிதாக குண்டாகலாம்

. எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும். தயிர் சேர்க்கவும் நன்றாகத் தூங்கவும் மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ்,தயிர் சாதம், உருளை சிப்ஸ்,ஐஸ்க்ரீம், சாக்லெட்,எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,சிக்கன், மட்டன்,வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க. இளைத்தவனுக்கு எள்ளு அன்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும் கூட. இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத் தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில் மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள் சற்று வாளிப்பான உடல்வாகு பெற எள்ளும் உளுந்தும் மிகப்பயன் தரும்.

http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161

http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648

இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

 

வெந்தயத்துக்கு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதும், பெண்களில் அதிகம் காணப்படும் ஈஸ்ராஜன் எனும் ஓமோனின் செயற்பாடில் செல்வாக்கு செலுத்தலாம் என்பதும் விஞ்ஞான ரீதியில் அறியப்பட்டுள்ளது.  ஆனால் உடல் நிறை கூட நாளாந்தம் 50 கிராம் வெந்தயம் உதவும் என்பதில் நம்பிக்கை இல்லை. :rolleyes:

 

எப்படி 101 நாள் கணக்கு வந்தது என்றும் தெரியவில்லை.

 

 

மற்றும் படி மேலே மேற்கோள் கட்டிய பகுதியில் இருக்கும் உணவுகளை பார்த்தீர்கள்  என்றால், பல உணவுகள் மாச்சத்து , கொழுப்பு கூடிய உணவுகள். இவற்றை அளவு  கணக்கில்லாமல் நாளாந்தம் உண்டால் 101 நாளும் தேவையில்லை. அதுக்கு ஓடியாடி வேலை செய்யாது  , உடற் பயிற்சியும் செய்யாது  விட்டல் 101 நாள் என்ன 60 நாள் காணும் உடம்பு வைக்க. :icon_idea:

 

உடம்பு வைத்த பின் அதனுடன் வரும் வருத்தங்களுக்கு வைத்தியம் செய்ய சரியாக இருக்கும். :icon_idea:

 

உடம்பு வைத்து, வண்டி வைத்து இருந்தால் தான் பணம் வசதியுடன் இருப்பதாக நினைக்கும் எண்ணகரு  மாற வேண்டும். :icon_idea:

 

அளவான , உயரத்துக்கு ஏற்ற நிறை இருந்தால் போதும் /

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.