• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

சுவாமி விவேகானந்தர் துடிப்புள்ள முற்போக்கான இளைஞர்களுக்கு அருளியவை.

Recommended Posts

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

Share this post


Link to post
Share on other sites

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

மிகவும் அருமையான கேள்வி. அவர் ஆன்மீக வாழ்வுக்கு வருவதற்கு முன்னர் அவருக்கும் சாதாரண மனிதர்களுக்குள்ள காம உணர்வுகள் இருந்திருக்கும். அது இயற்கையானது. ஆனால் ஆன்மீக வாழ்வில் தியான பயிற்சியினால் மனதில் உள்ள பலவீனங்களை வென்று மாகாஞானியாக ஒளிர்ந்தவர் விவேகானந்தர். அவர் அமெரிக்கா வந்தபோது அவரிடமே இந்த கேள்வியை கேட்டார்கள். " சுவாமிஜி தாங்களோ ஆசைகளை வென்ற ஞானி. ஆனால் தங்களின் கம்பீரமான ஆண்மையும் உயிர்துடிப்புமுள்ள தோற்றம் தங்களைப்பார்க்கும் பெண்களின் மனதில் காம உணர்வை தோற்றுவிக்காதா" என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் " காமத்தை எரித்து பரிசுத்தமான அன்புமயமாக வாழும் என்னை பார்த்ததும் அந்த பெண்கள் அன்புமயமான குழந்தைகள் போலாகி விடுவார்கள்" அவர் கூறியவாறே நடந்தது. ஒரு நாள் சுவாமிஜி அமெரிக்காவில் ஒரு வீதியில் நடந்து போய்கொண்டிருந்த போது அவரது நண்பர்கள் அது விலை மாதுக்கள் வசிக்குமிடம் என்றும் அந்த வீதியால் செல்ல வேண்டாமென்றும் சுவாமிஜியிடம் கூறினார்கள். சுவாமிஜி அதனை பொருட்படுத்தாது   அவ்வீதியால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விலை மாதுக்கள் அவரிடம் வந்து தாம் பாவம் செய்து விட்டதாக கூறினார்கள். அதற்கு சுவாமிஜி அவர்களிடம் " உங்கள் அனைவரிலும் எனது தாயையே காண்கிறேன் என்று சொல்லி அவர்களது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவர்களின் ஆசி பெற்று சென்றார். விலைமாதுக்களில் கூட தனது தாயையே பார்த்த சுவாமி விவேகானந்தரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கிறது. அடியேனின் தனிப்பட்ட வாழ்வில் பல தடைகளை கடந்து பல வெற்றிகளை அடைவற்கு உந்து சக்தியாக ஆதரிசமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் சுவாமி விவேகானந்தர் மற்றவர் தலைவர் பிரபாகரன்.  

Share this post


Link to post
Share on other sites

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

பொடி பெட்டையை பார்க்கிறது.. பெட்டை பொடியப் பார்க்கிறது.. காமத்துக்கு அப்பால் தான் அதிகமே நிகழ்கிறது. இதற்கு பிரமச்சாரி என்ற நிலை தான் அவசியமென்றில்லை. காமம் என்பது வெறும் பார்த்ததும் வெகுண்டெழும் உணர்வு அல்ல. சில இயற்கையான தூண்டல்கள் எல்லாம் காமம்.. கலவியில் போய் முடிவதும் இல்லை. அந்த வகையில்.. குழந்தை முதல் வரும்... பசியைக் கூட கட்டுப்படுத்தலாம்.. உணவு கிடைக்கும் வரை. வாழ்க்கையின் ஒரு இடையில் வரும் காமத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பிரமச்சாரியம் தான் அவசியம் என்றில்லை. தனி மனித ஒழுக்கமும்.. மனக் கட்டுப்பாடும்.. மன ஒடுக்கமும்.. மனதை மூளையால் ஆளத்தெரிந்திருந்தால் போதும்.

 

பெண் என்பவள்.. காமத்துக்கு அப்பால் பார்க்கப்படும் போது இன்னும் அழகாகவும்.. நித்திய அன்போடும் தெரிவாள். ஆனால் பல பெண்களுக்கு ஆண்களை அப்படிப் பார்க்கும் பக்குவமின்மை தான் இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமே..! அதேபோல்.. காம உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் உலகில் அதனைக் கட்டுப்படுத்த வழிகாட்டல் இல்லை. அந்த வகையில்.. விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகள் பாடமாகக் கற்றுக்கொடுத்தவை இளைஞர்களுக்கு மட்டுமன்றி யுவதிகளுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

 

விவேகானந்தவரை விட எம் போராளிகள்.. கற்றுத்தந்தவை கூட சிறப்பான மன ஒடுக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நல்ல சான்றாகும். எத்தனையோ போராளிகள்.. குடும்ப வாழ்வு என்ற ஒன்றின் சிந்தனை இன்றியே.. தேசத்தை நேசித்ததற்காக தம் வாழ்க்கை என்ற ஒற்றை நினைப்புத் தவிர்த்து.. தம்மையே வெடியாக்கி சிதறிப் போனார்கள். அவர்கள் விவேகானந்தரை விட சிறந்த ஆன்மீகவாதிகள் என்றால் மிகையல்ல. அதுமட்டுமல்ல.. சாகிறேன் என்று தெரிந்தும்.. உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் போன்றவர்களும்.... காவி உடை.. பிரம்மச்சாரியப் பட்டம் தரியாக்காத ஆன்மீகவாதிகளே. ஆழ நோக்கினால்.. இங்கு வேறுபாடுகளின்றி.. அந்த மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை எமக்கு நல்ல பாடமாக இருக்கும். :icon_idea::)

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம்  புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற  சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக  பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம். நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை  மீட்டு எடுத்து  நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என  தெரிவித்தார்     https://www.virakesari.lk/article/85379
    • கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்? - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான். தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார். கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார்? இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா! கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்தார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது? உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது. இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும்? கூட்டமைப்புக்குள் காணப்படும் உள் மோதல்கள் ஒரு விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்;டுகின்றன. அதாவது, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது. மக்கள் தமக்கு பழக்கப்பட்ட ஒரு சின்னம் என்னும் நிலையில் ஒரு வேளை கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கலாம் ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களின் வெற்றியாக அமையாது மாறாக, கூட்டமைப்பின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதில் காணப்படும் போதைமைகளாவே இருக்க முடியும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போதே மாற்றங்கள் சாத்தியப்படும்.   http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்குள்-தீவிர/