• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

சுவாமி விவேகானந்தர் துடிப்புள்ள முற்போக்கான இளைஞர்களுக்கு அருளியவை.

Recommended Posts

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

Share this post


Link to post
Share on other sites

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

மிகவும் அருமையான கேள்வி. அவர் ஆன்மீக வாழ்வுக்கு வருவதற்கு முன்னர் அவருக்கும் சாதாரண மனிதர்களுக்குள்ள காம உணர்வுகள் இருந்திருக்கும். அது இயற்கையானது. ஆனால் ஆன்மீக வாழ்வில் தியான பயிற்சியினால் மனதில் உள்ள பலவீனங்களை வென்று மாகாஞானியாக ஒளிர்ந்தவர் விவேகானந்தர். அவர் அமெரிக்கா வந்தபோது அவரிடமே இந்த கேள்வியை கேட்டார்கள். " சுவாமிஜி தாங்களோ ஆசைகளை வென்ற ஞானி. ஆனால் தங்களின் கம்பீரமான ஆண்மையும் உயிர்துடிப்புமுள்ள தோற்றம் தங்களைப்பார்க்கும் பெண்களின் மனதில் காம உணர்வை தோற்றுவிக்காதா" என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் " காமத்தை எரித்து பரிசுத்தமான அன்புமயமாக வாழும் என்னை பார்த்ததும் அந்த பெண்கள் அன்புமயமான குழந்தைகள் போலாகி விடுவார்கள்" அவர் கூறியவாறே நடந்தது. ஒரு நாள் சுவாமிஜி அமெரிக்காவில் ஒரு வீதியில் நடந்து போய்கொண்டிருந்த போது அவரது நண்பர்கள் அது விலை மாதுக்கள் வசிக்குமிடம் என்றும் அந்த வீதியால் செல்ல வேண்டாமென்றும் சுவாமிஜியிடம் கூறினார்கள். சுவாமிஜி அதனை பொருட்படுத்தாது   அவ்வீதியால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விலை மாதுக்கள் அவரிடம் வந்து தாம் பாவம் செய்து விட்டதாக கூறினார்கள். அதற்கு சுவாமிஜி அவர்களிடம் " உங்கள் அனைவரிலும் எனது தாயையே காண்கிறேன் என்று சொல்லி அவர்களது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவர்களின் ஆசி பெற்று சென்றார். விலைமாதுக்களில் கூட தனது தாயையே பார்த்த சுவாமி விவேகானந்தரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கிறது. அடியேனின் தனிப்பட்ட வாழ்வில் பல தடைகளை கடந்து பல வெற்றிகளை அடைவற்கு உந்து சக்தியாக ஆதரிசமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் சுவாமி விவேகானந்தர் மற்றவர் தலைவர் பிரபாகரன்.  

Share this post


Link to post
Share on other sites

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

பொடி பெட்டையை பார்க்கிறது.. பெட்டை பொடியப் பார்க்கிறது.. காமத்துக்கு அப்பால் தான் அதிகமே நிகழ்கிறது. இதற்கு பிரமச்சாரி என்ற நிலை தான் அவசியமென்றில்லை. காமம் என்பது வெறும் பார்த்ததும் வெகுண்டெழும் உணர்வு அல்ல. சில இயற்கையான தூண்டல்கள் எல்லாம் காமம்.. கலவியில் போய் முடிவதும் இல்லை. அந்த வகையில்.. குழந்தை முதல் வரும்... பசியைக் கூட கட்டுப்படுத்தலாம்.. உணவு கிடைக்கும் வரை. வாழ்க்கையின் ஒரு இடையில் வரும் காமத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பிரமச்சாரியம் தான் அவசியம் என்றில்லை. தனி மனித ஒழுக்கமும்.. மனக் கட்டுப்பாடும்.. மன ஒடுக்கமும்.. மனதை மூளையால் ஆளத்தெரிந்திருந்தால் போதும்.

 

பெண் என்பவள்.. காமத்துக்கு அப்பால் பார்க்கப்படும் போது இன்னும் அழகாகவும்.. நித்திய அன்போடும் தெரிவாள். ஆனால் பல பெண்களுக்கு ஆண்களை அப்படிப் பார்க்கும் பக்குவமின்மை தான் இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமே..! அதேபோல்.. காம உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் உலகில் அதனைக் கட்டுப்படுத்த வழிகாட்டல் இல்லை. அந்த வகையில்.. விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகள் பாடமாகக் கற்றுக்கொடுத்தவை இளைஞர்களுக்கு மட்டுமன்றி யுவதிகளுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

 

விவேகானந்தவரை விட எம் போராளிகள்.. கற்றுத்தந்தவை கூட சிறப்பான மன ஒடுக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நல்ல சான்றாகும். எத்தனையோ போராளிகள்.. குடும்ப வாழ்வு என்ற ஒன்றின் சிந்தனை இன்றியே.. தேசத்தை நேசித்ததற்காக தம் வாழ்க்கை என்ற ஒற்றை நினைப்புத் தவிர்த்து.. தம்மையே வெடியாக்கி சிதறிப் போனார்கள். அவர்கள் விவேகானந்தரை விட சிறந்த ஆன்மீகவாதிகள் என்றால் மிகையல்ல. அதுமட்டுமல்ல.. சாகிறேன் என்று தெரிந்தும்.. உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் போன்றவர்களும்.... காவி உடை.. பிரம்மச்சாரியப் பட்டம் தரியாக்காத ஆன்மீகவாதிகளே. ஆழ நோக்கினால்.. இங்கு வேறுபாடுகளின்றி.. அந்த மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை எமக்கு நல்ல பாடமாக இருக்கும். :icon_idea::)

Share this post


Link to post
Share on other sites