Jump to content

இஸ்ரேல் - லெபனான் மோதல்


Recommended Posts

_41884216_lebanon2_map416.gif

இஸ்ரேல் லெபனான் முறுகல் நிலையின் தொடர்ச்சியாக இஸ்ரவேலிய எல்லை புற நகரான Haifa மீது ராக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் 3 வது பெரிய நகரான Haifa லெபனானிய எல்லையிலிருந்து ஏறத்தாள 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இஸ்ரவேலின் இரண்டு படைவீரர்களை லெபனானிய ஆயுத குழுவான ஹிஸ்புல்லா பிடித்து சென்றதை தொடர்ந்து இஸ்ரவேல் - லெபனான் இடையே பதற்றம் ஆரம்பித்தது. தனது படை வீரர்களை சிறைப்பிடிக்கபட்டதற்கு பதிலடியாக லெபனானிய பெய்ரூட் விமானத்தளத்தை இஸ்ரேல் தாக்கியது. லெபனானிய விமானதளங்களை தாக்கி வான்வழி போக்குவரத்த்ததயும் லெபனானிய கடல்பரப்புக்கு வெளியே தனது கடற்கலங்களை நிறுத்தி கடல் வழி போக்குவரத்தையும் தடை செய்து லெபனானை முற்றைக்குள்ளாக்கியுள்ளது இஸ்ரேல்.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/5178058.stm

Link to comment
Share on other sites

லெபனான் மீது இஸ்ரேல் முற்றுகை

இஸ்ரேலின் இரண்டு படைச் சிப்பாய்களை ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் பிடித்துச் சென்றதை அடுத்து லெபனான் மீது இஸ்ரேல் கடல் மற்றும் வான்வழி முற்றுகையை மேற்கொண்டுள்ளது.

கடந்த 20 வருடத்தில் லெபனான் மீதான தனது மிகவும் கடுமையான வான் வழித்தாக்குதலில், பெய்ரூட் சர்வதேச விமான நிலையம் மற்றும் இரு இராணுவ விமானத் தளங்கள் மீது தனது வான்வழி மற்றும் ஆர்டிலறி தாக்குதல்களை இஸ்ரேல் தொடருகின்ற நிலையில், அவற்றினால் சுமார் 50 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இஸ்ரேலின் வடபகுதி நகரங்கள் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ராக்கட் தாக்குதல்களை நடத்தியதில் இரு சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள் மற்றும் 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எல்லையின் இரு புறமும் இருக்கின்ற சிவிலியன்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேலிய வாசிகள் சுரங்க பதுங்கிடங்களுக்கு செல்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி பயணிக்கிறார்கள்.

அதேவேளை லெபனானில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் எல்லை கடந்து சிரியாவுக்குள் செல்கிறார்கள்.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

லெபனான் மற்றும் காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேல் இரட்டைத் தாக்குதல்

இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக ராணுவ முற்றுகையை மேற்கொண்டுள்ள அதே நேரத்தில் பாலத்தீன காசா நிலப்பரப்பிலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய துருப்புக்கள் இருவரை சிறைபிடித்துள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்கவே லெபனான் மீது இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இருந்தும் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டால் மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் உள்நாட்டுப்போர் நடந்த இருண்ட நாட்களை நினைவு கூறும் வகையில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் சப்தங்கள் பெய்ரூட்வாசிகளின் தூக்கங்களைக் கலைத்தன.

இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதைகளை சேதப்படுத்தியதுடன் விமானநிலையத்தை மூடவும் வைத்தன.

மற்றுமொரு இஸ்ரேலிய விமானத்தாக்குதல் ஹெஸ்பொல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியது. இஸ்ரேல் , வடக்கு இஸ்ரேலுக்குள் , லெபனானின் ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் நுழைந்து இரண்டு இஸ்ரேலிய சிப்பாய்களை சிறைப்பிடித்ததற்கு பதிலடி தந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறது. இஸ்ரேலைப் பொறுத்த வரை, அது ஒரு போர் நடவடிக்கை. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல மார்க் ரெஜெவ் கூறுகிறார்.

ஆனால் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் சாகர் லெபனானில் ஹெஸ்பொல்லாவும் , காசா நிலப்பரப்பில் ஹமாஸும் ,இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய்வது என்று முன்னதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டு பிறகு அதைச் செய்யாமல் பின்வாங்கியதாலேயே, அவர்கள் இஸ்ரேலிய படையினரை சிறைப்பிடிக்க முடிவு செய்ததாக வாதிடுகிறார்.

முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் மத்யஸ்தர்கள் மூலம் சிறைக்கைதிகளை பேச்சுவார்த்தைகளூடாக மாற்றிக்கொள்வதே இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்குள்ள ஒரே வழி என்று அவர் கூறினார்.

ஆனால் சாகர் இவ்வாறு கருத்து வெளியிட்ட ஒரு சில மணிநேரங்களுக்குள்ளாகவே, காசா நகரத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சகத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய போது அவரது அலுவலகமும் அழிக்கப்பட்டது.

இஸ்ரேல் இப்போது இரண்டு முனைகளில் ஒரே சமயத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஹெஸ்போல்லாவின் நடவடிக்கைகளுக்கு எப்படி லெபனான் அரசுதான் பொறுப்பேற்கவேண்டும் என்று அது கூறுகிறதோ, அதே போல , ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன அரசையும் அங்கு நடந்த கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பாக்குவதாகக் கூறுகிறது இஸ்ரேல்.

இந்தக் கருத்தை அமெரிக்காவும் பெரும்பாலும் அங்கீகரிக்கிறது. சிரியா தனது நாட்டிலிருந்து தீவிரவாதிகளை எல்லைகடந்து இராக்கில் சண்டையிட அனுமதிப்பதாக புஷ் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. இரான் அணு ஆயுதங்களை உருவாக்கிவருவதாகவும் அது கூறுகிறது.

அமெரிக்க அதிபர் புஷ், ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸை இந்த நெருக்கடிக்கு காரணம் என்று பழி போடுகிறார். இஸ்ரேல் மற்றும் அமைதி விரும்பும் பிற சக்திகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இஸ்ரேல் லெபனான் அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று புஷ் வலியுறுத்தினார். இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும் அபாயம் ஒரு பன்னாட்டளவிலான கவலையை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் லெபனானை முற்றுகையிட்டது அளவுக்கதிகமான நடவடிக்கை என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பிலிப் டூஸ்த் ப்லேசி கூறுகிறார்.

இஸ்ரேலியப் படையினரை ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் சிறைப்பிடித்தது ஒப்புக்க்கொள்ளமுடியாதது என்று கூறும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்கெய் லவ்ரொவ் ஆனால் இதற்கு பதில் நடவடிக்கை என்பது கவனமாக எடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்.

ஆனால் , அதிபர் புஷ் இஸ்ரெல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள அதற்குஇருக்கும் உரிமையை வலியுறுத்துகின்ற நிலையில், இஸ்ரேல் அதன் நடவடிக்கையை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று அதன் மேல் பலமான ராஜிய அழுத்தம் ஏது இது வரை இல்லை. இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் தரப்பு ஆகிய இரு தரப்பிலுமே பெருமளவில் கோபம் நிலவுகிறது.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

செய்திகளுக்கு நன்றி மதன்!

Link to comment
Share on other sites

þôÀ þŠ§ÈÄ¢Â÷ ÀÂí¸ÃÅ¡¾¢¸Ç¡ þø¨Ä «ÃÒì¸û ÀÂí¸ÃÅ¡¾¢¸Ç¡...???

இதைப்பற்றி அமெரிக்கா சமாளிக்குது போல கிடக்குது... அமெரிக்காவே இப்படி எண்டால் ஐரோபிய யூனியன் எந்த மட்டுக்கு...

"வலியவன் வெல்லவான்" அவனுக்குத்தான் எல்லாருடைய ஆதரவும்...! அவன் எது செய்தால்லும் நியாயமாக இருக்கும் என்பதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்...! :wink: 8) 8)

Link to comment
Share on other sites

எங்க நம்ம ஒற்றையாட்சி மதியையும், தீர்வுப்பொதி பூச்சியையும் இந்தப்பக்கம் காணேல்லை. :)

Link to comment
Share on other sites

//ஆனால் தன்னை பாதுக்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாக அதிபர் புஷ் கூறியுள்ளார்.//

இந்த உரிமை தமிழர்களுக்கில்லைாயாமோ?

Link to comment
Share on other sites

எங்க நம்ம ஒற்றையாட்சி மதியையும், தீர்வுப்பொதி பூச்சியையும் இந்தப்பக்கம் காணேல்லை. :D

என்ன நக்கலா பிறகு மோசட் வந்து யாழ்களத்தை தாக்கி விடும் :P :?: :P :P

Link to comment
Share on other sites

இஸ்ரேலை உதாரணம் காட்டி இஸரேலைப்போல..எண்டு விளாசினவங்கள்தான்.. பதில் சொல்லோணும்.. சுற்றியுள்ள இஸ்லாமியநாடுகள் துப்பினாலே இஸ்ரேல் காணாமல்போய்விடும்..என்றார் ஒருவர்.. அவர்தான் துப்புவதற்கு ஓடர் போடட்டும்..

:P :lol::D

எங்க நம்ம ஒற்றையாட்சி மதியையும், தீர்வுப்பொதி பூச்சியையும் இந்தப்பக்கம் காணேல்லை. :lol:
Link to comment
Share on other sites

அடடடா........

அறிவு கொழுந்து நம்ம தாத்து.......

கிள்ளி வாயில போடுங்கப்போ...........

உதாரணம் காட்டினது ........

இஸ்ரேல் என்ற தேசம் .........

எப்பிடி தன் மானத்தோட-எழுந்தது- வாழுது என்று..........

உதாரணம் தான் காட்டினேன்..........

அப்பிடி ஒண்ணு கிடைக்கவே கூடாது என்னுதான் - நீங்க போராடுறீங்களே ..... அதுதானாம் - சண்டை!

உங்க - பஞ்சுமுட்டாய் நெஞ்சுக்கு ஏதும் தோணினால்- என்ன- நான் பண்ண?

நான் சொன்னதெல்லாம் ........

இஸ்ரேல் என்ற நாட்ட்க்குள்ள - இருந்து கொண்டே ............

நீங்க- குருவி போல காலை வாராதீங்க --அப்பிட்டின்னு!

உதாரணம் அது!

8)

Link to comment
Share on other sites

இஸ்ரேலை உதாரணம் காட்டி இஸரேலைப்போல..எண்டு விளாசினவங்கள்தான்.. பதில் சொல்லோணும்.. சுற்றியுள்ள இஸ்லாமியநாடுகள் துப்பினாலே இஸ்ரேல் காணாமல்போய்விடும்..என்றார் ஒருவர்.. அவர்தான் துப்புவதற்கு ஓடர் போடட்டும்..

:P :lol::D

துப்பி பாக்கட்டுமன்...! ஆறுநாள் யுத்தம் நடந்தது தெரியாதாக்கும்.... :wink: :P :P

ஓய் அப்பு இஸ்ரேல்காறன் உலகம்பூரா கோடிக்கணக்கா இருகிறாங்கள்....! அவாக்களில கையவைச்சா பாத்துக்கொண்டு இருக்கவும் எதிரியை வாழ்த்தவும் அவங்களிலை ஈழத்தமிழரை போல ஒட்டுக்குழுக்கள் இல்லையப்பு....! உவங்கள் இஸ்றேல்காறரின்ர கருணை அமெரிக்கனுக்கே தேவை எண்டுற நிலமையை வச்சிருக்காங்கள்.... இது தெரியாம.... இங்க வந்து.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

யோவ்.. தல.. துப்பினா அழிஞ்சுபோடும் எண்டு சொன்னது வர்ணன்யா.. அவருக்குத்தான் நீங்கள் பாடம் குடுக்கவேணும்.. அதுக்கு மேலாலை நீங்கள் சொல்லிற ஒட்டுக்குழு.. ஓனான்குழு எல்லாம் உருவாக்கினது.. ஒட்டுக்குழு சொல்லி போட்டுக்கொண்டே இருக்கிறியள்.. எங்கையிருந்து வருகுதெண்டு நானும் மண்டையைவிட்டுப்பாத்தன்.. ரெண்டுவருஷத்துக்கு முன்னாலை உருவாக்கிது பெருகிக்கொண்டே பொகுது.. மக்கள் சப்போட்டும் பெருகிறமாதிரி இருக்கிறதாலை இனி அதுகளையும் சேர்ப்பியள்.. எண்டபடியா ஒட்டுக்குழு ஓனான்குழு போட்டு ஒழிக்கலாம் எண்ட கனவை விடுங்கோ.. யாழ்ப்பாணத்திலையும் உங்கடை கணக்குப்படி பல ஆயிரம் கூடியிருக்கவேணும்.. அப்பாவியள்..வழியில்லாததுகள் உதவிக்குப்போய் மாட்டுப்பட்டிட்டுதுகள்.. :!: :!:

துப்பி பாக்கட்டுமன்...! ஆறுநாள் யுத்தம் நடந்தது தெரியாதாக்கும்.... :wink: :P :P

ஓய் அப்பு இஸ்ரேல்காறன் உலகம்பூரா கோடிக்கணக்கா இருகிறாங்கள்....! அவாக்களில கையவைச்சா பாத்துக்கொண்டு இருக்கவும் எதிரியை வாழ்த்தவும் அவங்களிலை ஈழத்தமிழரை போல ஒட்டுக்குழுக்கள் இல்லையப்பு....! உவங்கள் இஸ்றேல்காறரின்ர கருணை அமெரிக்கனுக்கே தேவை எண்டுற நிலமையை வச்சிருக்காங்கள்.... இது தெரியாம.... இங்க வந்து.... :lol::lol::lol:

இஸ்ரேலை உதாரணம் காட்டி இஸரேலைப்போல..எண்டு விளாசினவங்கள்தான்.. பதில் சொல்லோணும்.. சுற்றியுள்ள இஸ்லாமியநாடுகள் துப்பினாலே இஸ்ரேல் காணாமல்போய்விடும்..என்றார் ஒருவர்.. அவர்தான் துப்புவதற்கு ஓடர் போடட்டும்..

:P :lol::D

Link to comment
Share on other sites

:evil: உந்த ஒட்டுக்குழுக்களை அழித்துவிட்டால் ஈழத்தில் பிரச்சினை முடிந்துவிடும். :twisted:

Link to comment
Share on other sites

இஸ்ரேலுக்கு ஈரான் தான் ஆப்பு வைக்கவுணும். ஆனால் அவன் வெளிக்கிட்டால், அமெரிக்க மூக்கை நுழைக்கப்பாப்பான்.

Link to comment
Share on other sites

பிருந்தன்.. ஒட்டுக்குழு ஓனான்குழுக்களை அழிப்பதாக பட்டம் சூட்டுவிழா அடிக்கடி நடாத்தி பெருக்கிக்கொண்டு போகிறீர்களேயன்றி குறைப்பதாக் தெரியவில்லை.. உதவிகோரும் மக்கள் அத்தனைபேரையும் ஒட்டுக்குழு பட்டியலிடும் பார்வை இனிமேல் மாறப்போவதில்லை.. போற போக்கைப்பார்க்கும்போது..ஒட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சின்னப்பிள்ளைகளை கறுணாக்கும்பல் கடத்திக் கொண்டு போற செய்தி கேட்கின்றதில்லையோ! இப்ப மட்டும் 300 பேர் மட்டில் கடத்திக் கொண்டு போனால் ஒட்டுக் கும்பல் இருக்காமல் என்ன செய்யும்!

Link to comment
Share on other sites

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் பதிலடி கொடுக்க தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலின் போர்க் கப்பல் தகர்க்கப்பட்டது.

லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் சரமாரி ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். 50-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

லெபனான் மீதும் இஸ்ரேல் கடல் பகுதியில் இருந்து ஏவு கணை வீசிய போர்க்கப்பல் மீதும் லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணை வீசி எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் இஸ்ரேலின் போர்க் கப்பல் தகர்க்கப்பட்டது. அதில் 72 இஸ்ரேல் வீரர்கள் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரிய வில்லை.

இந்த தாக்குதலில் எகிப்து நாட்டுக்கு சொந்தமான ஒரு கப்பலும் பலத்த சேதம் அடைந்தது. கடந்த 3 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் இஸ்ரேல் மற்றும் லெபனானை சேர்ந்த பொதுமக்கள் 73 பேர் பலியாகி விட்டனர்.

இணைப்பு : newstamilnet.com

Link to comment
Share on other sites

லொபனான் நாட்டவர் தங்கள் தலையில் தாமே மண்ணள்ளி போட்டுள்ளார்கள் சிரியா நாட்டு படைகளை எவளவு கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள் அதைப்பெரிய சந்தோசமாக கொண்டாடினார்கள் இப்ப அனுபவிக்கினம் நாம் இந்தியரை வரவேற்றது போல் சிரியா படைமட்டுமிருந்திருந்தால் இப்ப நடைப்பதே வேற!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலின் விமானங்கள் பெய்ரூட்டிலும் தெற்கு லெபனானிலும் தொடர்ந்து குண்டு வீச்சு

இஸ்ரேலிய விமானங்கள் புதன்கிழமை தொடர்ந்தும் பெய்ரூட் உட்பட லெபனானின் பல பகுதிகள் மீது விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா போராளிகள் ரொக்கெட் தாக்குதலை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை காலை வரை லெபனானில் 242 பேரும், இஸ்ரேலியர்கள் 25 பேரும் மோதல்களின்போது கொல்லப்பட்டுள்ளனர்.

நபட்டியே நகரில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் அலுவலகம் மீது இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பலியான இலங்கைப் பணிப்பெண்ணின் உடல் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென்பகுதி நகரான பயரில் உள்ள கிராமப் பகுதியொன்றில் இஸ்ரேலிய விமானங்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் காரணமாக 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் ஹெஸ்புல்லா அமைப்பின் அலுவலகங்களையும் ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் வாகனங்களையும் இலக்கு வைத்து தாக்கி வருவதன் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

லெபனான் இராணுவத்தின் இலக்குகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் சிறிய படையணியொன்று தென் லெபனானுக்குள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னேறும் நடவடிக்கையை முறியடித்துள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை பெய்ரூட்டின் பல பகுதிகளில் விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள சுவெய்வட் நகரம் தாக்கப்பட்டுள்ளது. வாகனத் தொடரணி மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த தலைப்பு முற்றும் பிழையானது. லெபானன் மோதவுமில்லை. ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லையே! இஸ்ராயேல் தான் லெபனானை ஆக்கிரமித்துள்ளது. இந்த நாடகத்திற்கு எப்போது முன்னைநாள் மந்திரி கொலையுண்டாரோ அப்போதே மேடை தயாராகிவிட்டது. கார்குண்டு, அதன்பின்பு, சீரியாவை வெளியேற்றியது, தற்போது ஹிஸ்புல்லாவை வெளியேற்றும் முயற்சி.

இஸ்ராயேல், அமரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்று லெபனன், அடுத்தது சீரியா என்று தொடங்கியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாடுகளும் கட்டுப்பாடின்றி, "பங்கரவாதத்திற்கு எதிரான் யுத்தம்" என்று தொடங்கினால் உலகம் உருப்படியான் மாதிரித்தான். இந்தியா பாகிஸ்தானையும், துருக்கியும் கிரேக்கமும், சீனாவும் தாய்வானும் கொரியாக்களும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்...ஒன்றையொன்று தாக்க முற்படுவதற்கு! இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறார்கள் என்று ஐநா தெரிவித்திருக்கிறது. இங்கே யார் பயன்கரவாதிகளாக மாறியிருக்கிறார்கள். சிறார்களை கொல்பவன், கொன்றுவிட்டு "என் இராணுவத்தினனை விட்டுவிடு, உன் மக்களை கொல்வதை விடுகிறேன்" என்பவனே எனக்கு பயங்கரவாதியாக தோற்றமளிக்கிறான்.

Link to comment
Share on other sites

அதுமட்டுமில்ல..சர்வதேச சமூகம் என்று சொல்லிக் கொள்வோரின் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பது கூட தங்கள் தங்கள் நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற முன்னிற்பதையே இனங்காட்டுகிறது. தொடர்ந்து உள்நாட்டு மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களால் அவதிப்பட்டு போயுள்ள லெபனிய மக்களின் பாதுகாப்புப் பற்றி யாரும் அக்கறையெடுத்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

நிச்சயம் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில்..இஸ்ரேல் மற்றும் கிஸ்புல்லாவை அவற்றின் வன்முறைச் செயல்களை நிறுத்த நிற்பந்திக்க முடியும்..!

அது மட்டுமின்றி லெபனானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர்களே அதிகம்..! :idea:

FOREIGNERS IN LEBANON

Sri Lanka: 80,000

Canada: 40,000

Philippines: 30,000

Australia: 25,000

US: 25,000

UK: 22,000 (inc. 10,000 with dual nationality)

France: 20,000

source - bbc.com

Link to comment
Share on other sites

லெபனானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர இந்திய கடற்படை கப்பல்கள் சென்றுள்ளன. அவற்றில் இலங்கையரையும் அழைத்து வர வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுள்ளதாம். கப்பலில் இடவசதியை பொறுத்து முடிவு செய்வதாக இந்திய அரசு பதிலளித்துள்ளது.

Link to comment
Share on other sites

லெபனானில் இந்தியக் கப்பல்கள்

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்களை மீட்க நான்கு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் அங்கு சென்றடைந்துள்ளன.

லெபனானில் 12 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் ஆயிரம் பேர் உடனடியாக அங்கிருந்து புறப்படத் தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.

அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர, இஸ்ரேல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகளுடன் இந்தியா பேசியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியக் கப்பல்களில் தங்களது பிரஜைகளையும் அழைத்து வருமாறு இலங்கை மற்றும் நேபாள நாடுகள் இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

கப்பல்களில் இடம் இருப்பதைப் பொறுத்து, அவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று சர்னா தெரிவித்தார்.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா சண்டை தொடர்கின்றது

20060719161531israel_lebanon_tank.jpg

இஸ்ரேலின் தரைப்படைகளுக்கும் ஹெஸ்புல்லா கொரில்லாக்களுக்கும் இடையில் தெற்கு லெபனானில் மீண்டும் சண்டை நடைபெற்று வருகின்றது.

இஸ்ரேல் எல்லைக்கு அருகாமையில் தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக லெபனானில் உள்ள ஐ.நா இராணுவ படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு இஸ்ரேலிய டாங்கிகளை அழித்து இருப்பதாக ஹெஸ்புல்லா கூறியமை இது வரையில் உறுதி செய்யப்படவில்லை. எனினும் தங்களது தரப்பில் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

தன்னுடைய நேரம் முடிந்து விட்டது என்பதினை ஹெஸ்புல்லா புரிந்து கொள்ள வேண்டுமென இஸ்ரேலின் பொது பாதுகாப்பு அமைச்சர் அவி டிக்டர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லையில் லெபனான் நாட்டு அரசுக்கு சொந்தமான படைகளை மட்டுமே இஸ்ரேல் ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

--------------------------------------------------------------------------------

மத்திய கிழக்கில் இரு சாராரும் மோதலை நிறுத்த வேண்டும்-கோஃபி அன்னான்.

20060130224507_41274960_duo-afp203i.jpg

அன்னான் - ரைஸ் சந்திப்பு

இஸ்ரேலிய தாக்குதல்களுக்கான இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் கோபி அன்னான் அவர்கள் பாதுகாப்புச் சபைக்கு விவரித்தார்.

இரு சாராரும் உடனடியாக மோதல்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சண்டைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்த ரஷ்யா, உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் அளவு, இஸ்ரேல் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் எல்லைகளை மிகவும் அதிக அளவில் தாண்டிச் சென்றுவிட்டது என்பதைக் காட்டுகிறன என்று கூறியுள்ளது.

இவை லெபனானிய பொதுமக்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களை இஸ்ரேல் கணக்கில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டனும் கூறியிருக்கிறது.

கோபி அன்னான் அவர்களை அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டோலிஸா ரைஸ் அவர்கள் இன்று பின்வேளையில் சந்திக்கவுள்ளார்.

வாஷிங்டனில் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றம், இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவினை வழங்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெபனானிலிருந்து 120 இலங்கையர்கள் சிரியாவுக்கு வெளியேற்றம்

இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா மோதல் நடந்துகொண்டிருக்கும் லெபனான் நாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்கள் சுமார் 90,000 பேரில் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இலங்கை தூதரகத்திடம் பதிவு செய்திருந்த சுமார் 300 இலங்கையர்களில் , சுமார் 120 பேர் இன்று பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்து அண்டை நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி மூன்று பேருந்துகளில் அனுப்பப்பட்டனர்.

_41898940_travellers203ap.jpg

தவிக்கும் தெற்காசியர்கள்

இலங்கையர்கள் 90,000

இந்தியர்கள் 12,000

நேபாளிகள் 4,000

புலம்பெயர்வு குறித்த சர்வதேச அமைப்பான, ஐ.ஓ.எம், இந்த இலங்கையர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தது.

மீதமுள்ளவர்கள் நாளை விசேட பேருந்துகளில் டமாஸ்கஸ்ஸுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று ஐ.ஓ.எம் தெரிவித்துள்ளது.

அவசரமாக லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என்று சுமார் 5,000 இலங்கையர்கள் தமது நாட்டுத் தூதரகத்திடம் பதிவு செய்துள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது.

--------------------------------------------------------------------------------

இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்

laun.jpg

இஸ்ரேலுக்கு கண்டனம்

பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களை இஸ்ரேல் கைது செய்திருப்பதற்கு இந்தியா கண்டனம்

தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவர்களை

உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா இஸ்ரேலுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதற்குப் பதிலடியாக, காஸா நிலப்பரப்பு மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்று ஓர் அறிக்கையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

லெபனானிலிருந்து 700 பேரை மீட்டது இந்தியா

_41909656_usship203ap.jpg

மீட்புப் பணியில் கப்பல்

லெபனானில் பெய்ரூத் துறைமுகத்தில் இருந்து 700 பேருடன் இந்தியாவின் முதல் கடற்படைக் கப்பல் வியாழக்கிழமை இரவு புறப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.

அந்தக் கப்பல், வெள்ளிக்கிழமை காலை லர்னாகா துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து விமானம் மூலம் பயணிகள் இந்தியா கொண்டுவரப்படுவார்கள். 700 பேரில் நேபாள பிரஜைகள் சிலரும் உள்ளதாக சர்னா தெரிவித்தார்.

மேலும் பலர் இந்தியா திரும்பக் காத்திருக்கின்றனர். அவர்களை மீட்க இன்னொரு கப்பல் வெள்ளிக்கிழமை பெய்ருத் சென்றடைகிறது.

லெபனானின் பேகா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்திருப்பதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் சர்னா கூறினார்.

--------------------------------------------------------------------------------

லெபனானில் சிக்கிய தூத்துக்குடி மாவட்ட கிராமவாசிகளின் கதி என்ன?

_41065520_tamil_tiruch2_map203.gif

தூத்துக்குடி மாவட்ட கிராமவாசிகளின் கதி என்ன?

இஸ்ரேல் - ஹெஸ்புல்லா மோதல் நடந்துவரும் லெபனானில் பிழைக்கச் சென்ற வெளிநாட்டவர்களில் , தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லெக்கம்பட்டி கிராமவாசிகள் 27 பேர் இருக்கிறார்கள்.

இவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் , இவர்களை பத்திரமாக தாயகம் கொண்டுவந்து சேர்க்குமாறு , இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்று கிராமவாசிகளால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்த மனுவை தான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், இது குறித்து அமைச்சகம் லெபனானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனியாண்டி தமிழோசையிடம் தெரிவித்த்தார்.

இத் குறித்து இந்திய வெளியுறத்துறை துணை அமைச்சர் அஹமது அவர்களிடம் தான் பேசியுள்ளதாகவும், அவர்களை மீட்டுக் கொண்டுவர அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும், திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------

லெபனானில் மனித நேய நெருக்கடி

20060720083459lebanon1.jpg

மோதலில் சிக்கித்தவிக்கும் மழலைகள்

மோதல் நடந்துவரும் லெபனானில் உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுவருவது குறித்து கவலை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் , உதவிப்பொருட்கள் அடங்கிய விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் லெபனானில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது குறைந்து வருவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இஸ்ரேல் இடைவிடாமல் லெபனான் மீது குண்டுத்தாக்குதல் நடத்திவருவது அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை அப்புறப்படுத்துவதை அவசரமாக செய்யவேண்டிய வேலையாக்கி இருக்கிறது.

அமெரிக்க பிரஜைகளை லெபனானிலிருந்து மீட்க அமெரிக்க சிறப்பு படையினர் ( மரைன்கள்) பெய்ரூட்டில் வந்தடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் அதிபர் லெபனானில் பணியாற்றிக்கொண்டிருக்கும் சுமார் 30,000 பிலிப்பைன் நாட்டவர்களை தாக்காதிருக்குமாறு வேண்டியுள்ளார்.

லெபனானில் நிலவும் மனித நேய நெருக்கடி குறித்த விரிவான தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்பதற்கு:-

http://www.bbc.co.uk/tamil/

BBC tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் லெபனான் சிறிய சிறிய பகுதிகளாக துண்டாடப்பட்டிருப்பதாக விசனம் - பிரதமர் சனியோரா சாடுகிறார்

இஸ்ரேல் கடந்த ஒரு வார காலமாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக லெபனான் சிறிய, சிறிய பகுதிகளாக சிதறடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பியுயட் சனியோரா தெரிவித்துள்ள அதேவேளை, பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகளுக்காக எவராவது தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்க வேண்டி வரும் என ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியாக கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானில் உள்ள பல பகுதிகள் மீது கடும் விமான தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக பல வீடுகளும் கட்டிடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

ஹெஸ்புல்லா தலைவர்களின் அலுவலகங்களையும் வீடுகளையும் இலக்கு வைத்து விமான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அதேவேளை தென் லெபனானிற்குள் மேலும் தனது படைகளை ஊடுருவச் செய்துள்ளது.

கடந்த எட்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக 300 பேர் பலியாகியுள்ளதாக லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை 70 பேர் வரை பலியாகியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு தினத்தில் அதிகளவானவர்கள் பலியானது இதுவே முதற் தடவை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். கண்மூடித்தனமான எறிகணை வீச்சு காரணமாக அப்பாவிகள் உயிரிழப்பது அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் எவராவது பொறுப்பேற்க வேண்டி வரும். குறிப்பாக, உயர் பதவிகளில், தலைமைப்பீடங்களில் உள்ளவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லெபனான் பிரதமர் பியுயட் சனியோரா உடனடி யுத்த நிறுத்தமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

லெபனான் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் தற்பாதுகாப்பிற்காகவே இவ்வாறு நடந்து கொள்கின்றது என்ற அமெரிக்க நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

சர்வதேச சமூகம் தற்பாதுகாப்பு என இதனையா கூறுகின்றது என கேள்வி எழுப்பியுள்ள அவர் எமது ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க விரும்பியமைக்காக நாம் செலுத்தும் விலை இதுவா எனக் கேட்டுள்ளார்.

இஸ்ரேல் தென் லெபனானில் உள்ள பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுள்ளது.

இஸ்ரேல் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளமைக்கான முன்னோடி நடவடிக்கையாக இது இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானிலிருந்து நூற்றுக்கணக்கில் அமெரிக்கர்கள் தப்பியோடி சைப்பிரஸ் நாட்டில் தஞ்சம்

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான விமான தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடியுள்ள நூற்றுக் கணக்கான அமெரிக்கர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் சைப்பிரஸில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதன்கிழமை சைப்பிரஸில் லர்னகா துறைமுகத்திற்கு மூன்று கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன.

பெருமளவு அமெரிக்கர்கள் உட்பட 1,044 பேருடன் அமெரிக்க கப்பலொன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ள அதேவேளை ஐக்கிய நாடுகளினதும் பிரான்சினதும் கப்பல்களும் துறைமுகத்திற்கு வந்துள்ளன. பெய்ரூட்டிலிருந்து சைப்பிரஸிற்கு அமெரிக்க பிரஜைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சைப்பிரஸிற்கான அமெரிக்க தூதுவர், அடுத்த சில நாட்களில் மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வந்துசேரக் கூடும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் பெருமளவு அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறலாம். அவர்களின் எண்ணிக்கை ஏழாயிரம் வரையிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லர்னகா துறை முகத்தில் தரித்து நின்ற கப்பல்களிலிருந்து கையில் காயங்களுடன் பெண்மணியொருவரும் சக்கர நாற்காலியிலிருந்து முதியவர் ஒருவரும் இறக்கப்பட்டு அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க பேராசிரியர் ஒருவர் தனக்கு இரண்டு நாடுகள் எனவும் லெபனான் அழிக்கப்படுவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சிறுவனொருவன் தனது கட்டிடத்திற்கு அருகில் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ளான். சில அமெரிக்கர்கள் தாங்கள் மீண்டும் லெபனான் திரும்பப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அமெரிக்கர்களே அதிகம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. பெய்ரூட்டிலிருந்து சைப்பிரஸிற்கு 75 மணித்தியால பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்க மாணவனொருவன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். நகரத்தை முழுமையாக அழிக்க முயன்றிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

லெபனானில் நிலை இவ்வளவு மோசமடைய வேண்டிய அவசியமில்லை. லெபனானில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்தால் இஸ்ரேலியர்கள் தங்களது அரசாங்கத்தை கண்டிப்பார்கள் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் 6000 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள 8000 அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக ஒன்பது இராணுவ கப்பல்களும் ஒரு ஹெலிகொப்டர் கப்பலும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சைப்பிரஸில் உள்ள கனடா நாட்டவர்களை அழைத்து வருவதற்காக கனடா விமானமொன்றினை அனுப்பியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சிற்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான லெபனான் நாட்டவர்கள் உட்பட பலர் சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முரண்பாடு

ஹெஸ்புல்லா கெரில்லாக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் கைவிட வேண்டுமா என்பது குறித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.

பொது மக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பது, போராளிகளைப் பலப்படுத்தி, லெபனானின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடும் என ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

புஷ் நிர்வாகம் இது குறித்து கவலை கொண்டிராத அதேவேளை, ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது.

இவ்வாறான குழப்பமான செய்தி இஸ்ரேலின் நோக்கம் நிறைவேறுவதற்கு உதவினாலும் கூட, நீண்ட கால அடிப்படையில் இஸ்லாமிய கடும் போக்காளர்களும் போராளிகளும் வெற்றி பெறுவதற்கு உதவக் கூடும்.

லெபனானில் ஏற்பட்டுள்ள அழிவு அவர்களது ஆதரவு அதிகரிப்பதற்கு உதவக் கூடும்.

இஸ்ரேல் மீது அதிகளவு செல்வாக்கு செலுத்தும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாப்பதற்கான உரிமையுள்ளதாக தெரிவித்துள்ளது.

அர்த்தமுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கை அவசியமென தெரிவித்துள்ள வாஷிங்டன், இது ஹெஸ்புல்லா அமைப்பினை ஆயுத களைவிற்கு உட்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகளை பாதுகாக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ள முடியாததென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு மாறாக உடனடி யுத்த நிறுத்த உடன்படிக்கையை கோரியுள்ளதுடன் கண்மூடித்தனமான இஸ்ரேலின் தாக்குதல்களையும் கண்டித்துள்ளது. இஸ்ரேலிய பிரதமரை சந்தித்த பின்னர் ஐரோப்பிய வெளிவிவகார கொள்கைத் தலைவர் ஜேவியர் சொலான் ஹெஸ்புல்லா அமைப்பின் நடவடிக்கைகளை கண்டித்துள்ள அதேவேளை, உடனடி யுத்த நிறுத்தத்திற்கும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸும் தொலைபேசி மூலம் ஒல்மோர்ட்டுடனும் சொலானானுடனும் உரையாடியுள்ளனர்.

எனினும், ரைஸ் மத்திய கிழக்கிற்கான விஜயத்திற்கான திகதியை அறிவிக்கவில்லை.

இதன் மூலம் அவர் இஸ்ரேலுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்க விரும்புகின்றார் என்ற ஊகம் உருவாகியுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், ஏனைய ஐரோப்பிய நாடுகள் சொல்லளவிற்கு ஆதரவளித்துள்ளன.

Dinakural

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.