யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
யாழ் இணையம்

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.1

Recommended Posts

வணக்கம்,

 

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல் இவை:

 

 

----------------------------------------------

 

குழுக்களாக இயங்குதல் தொடர்பான முக்கிய அறிவித்தல்

 

யாழ் இணையத்தின் கருத்துக் களத்தில் குழுக்களாகச் சிலர் இணைந்து இயங்குவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  யாழில் கடந்த சில மாதங்களாக இடம்பெறுகின்ற பல விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கிய காரணமாக இந்த குழுக்களாக சேர்ந்து இயங்கும் தன்மையே அமைகின்றது. இந்த நிலை தொடர்ந்து அனுமதிக்கப்படுவது கடுமையான ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்பதால் உடனடியாக இத்தகைய குழுக்களாக சேர்ந்து இயங்குவதை தவிர்க்குமாறு கோருகின்றோம்.

 

தொடர்ந்து இவ்வாறு குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கும் அப்பால் சென்று சில கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட விதிகள் 

 

1. 5+ எச்சரிக்கைப் புள்ளிகள் எடுப்பவர்களுக்கு ஒரு மாதத் தடையும், 8(+) எச்சரிக்கைப் புள்ளிகள் எடுப்பவர்களுக்கு  நிரந்தரத் தடையும் விதிக்கப்படும். இதுவரை 5 இற்கும் 8 இற்கும் மேற்பட்ட எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றவர்கள் இந்த விதி அமுலாகும் இன்றிலிருந்து மேலும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அவர்களுக்கும் இதே விதி பொருந்தும்.

 
2. குடும்ப உறவுகளை இழுத்து எழுதுகின்றவர்களுக்கு எதிராக அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரத் தடையும் கொண்டு வரப்படும்.
 
3. தூசண வார்த்தைகள், இழிவான கெட்ட வார்த்தைகள், பாலியல் ரீதியிலான வசைகள் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதுகின்றவர்கள் 1 மாதம் மட்டுறுத்துநர் பார்வைக்குள் கொண்டு வரப்படுவார்கள்.  இரண்டாம் முறை எழுதுபவர்களுக்கு 1 மாதத் தடையும், 3 ஆம் முறை எழுதுபவர்களுக்குத நிரந்தரத் தடையும் விதிக்கப்படும்.
 
4. நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாக திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்பட மாட்டாது. இதே போன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
 
5. வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் எச்சரிக்கைப் புள்ளிகளும், பின் மட்டுறுத்துநரின் பார்வைக்குள் உட்படுத்தப்படுவதும், அதன் பின் தடைகளும் கொண்டு வரப்படும். இவற்றில் எத்தகைய நடவடிக்கை முதலில் எடுக்கப்படும் என்பது மட்டுறுத்துநரின் முடிவுக்குட்பட்டது.
 
6. நிர்வாகத்தின் வேண்டுகோள்களையும், அறிவுறுத்தல்களையும் தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீதும் ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தர தடையும் கொண்டு வரப்படும்.
 
7. ஏதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக ஒருவரின் சுயபடைப்பு திருத்தப்படவோ அல்லது சில பகுதிகள் நீக்கப்படவோ வேண்டி ஏற்படின், அப் படைப்பை எழுதியவரிடமே அதற்கான பொறுப்பு வழங்கப்படும். அவ்வாறு படைப்பாளி அதனை திருத்தும் வரைக்கும் அப் படைப்பு நிர்வாகத்தினரைத் தவிர வேறு எவரும் பார்க்க முடியாத பகுதிக்கு நகர்த்தப்பட்டு, படைப்பாளி திருத்தம் செய்து அனுப்பிய பின்னர் 3 நாட்களுக்குள் மீண்டும் வழமையான இடத்தில் இணைக்கப்படும்.
 

 

எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்குவது தொடர்பான் நடைமுறை:

 

எச்சரிக்கைப் புள்ளிகள் எடுத்தவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து மூன்றாவது மாதத்தின் பின்னரிலிருந்து ஒவ்வொரு எச்சரிக்கைப் புள்ளி குறைக்கப்படும். 6 மாதத்திற்குள் எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளும் நீக்கப்படும்.

 

 

நன்றி,

யாழ் இணையம்.

  • Like 9

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு