Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே தெரியாத எனக்கே விளங்குது, வசந்தன் ஒரு நச்சுப் பாம்பு எண்டு! :o

 

சகலவிதமான எச்சரிக்கைகளையும்  உணரும் திறன்களனைத்தும் இயற்கையாகவே கைவரப்பெற்ற, அதுவும் முன்பொருமுறை சூடுகண்ட, ஒரு யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண்ணின் முடிவு, 

மிகவும் ஆச்சரியமளிக்கின்றது!

 

இது ஒரு தெய்வீகக் காதலாக இருக்கவேண்டும், சுமே! :D

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

நல்லது....தொடருங்கள். வசந்தியென்ன பல பெண்கள் மயங்குவதும் வெளித்தோற்றத்தில்தான், உடல்தான் முக்கியம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அலை

 



 

  • வசந்தனின் அப்பா படித்தவர் என்றாலும் ஒரு படித்தவர் போல் நடந்துகொள்ளவில்லை..
  • வசந்திக்கு மானரோசம் கொஞ்சம் கம்மி.. :D

இது யாரையாவது புண்படுத்துமாக இருந்தால் வருந்துகிறேன்.. :icon_idea:

 

 

இசை, நீங்கள் என்ர கதை என்று நினைத்துக்கொண்டு கருத்தெழுதுகிறீர்கள் என நினைக்கிறன். :D

 

 




இது ஒரு தெய்வீகக் காதலாக இருக்கவேண்டும், சுமே! :D

 

இது தெய்வீகக் காதல் இல்லை விசர்க்காதல்

 

 



நல்லது....தொடருங்கள். வசந்தியென்ன பல பெண்கள் மயங்குவதும் வெளித்தோற்றத்தில்தான், உடல்தான் முக்கியம்

 

சில பெண்கள் உணர்வுமயமானவர்கள் ஆதலால் எதையும் நம்பியும் விடுவர்.

 

 

Link to comment
Share on other sites

 

இசை, நீங்கள் என்ர கதை என்று நினைத்துக்கொண்டு கருத்தெழுதுகிறீர்கள் என நினைக்கிறன். :D

 

 

உங்கள் கதையென்று இன்னும் (உறுதியாக :D ) சொல்ல முடியவில்லை.. ஆனால் குறைந்தபட்சம்  உங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தானே இருக்க வேண்டும்..  :huh:  அதனால்தான் முன்னெச்சரிக்கை முனுசாமி ஆகிவிட்டேன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில வாற பிரதான ஆண்மகன் தனக்கு என்று வாற ஒரு பெண்ணை வைச்சு காப்பத்த தெரியாத அளவுக்கு என்ன கன்டிகப்டா(handicapped).. :lol: வேலை வெட்டி இல்ல,இதில  சீதணம் வேறை 3 ஏக்கர் காணி,1 லட்சம் பணம்...ம்ம்ம் வேறை என்ன எல்லாம் வேணும்மாம்..பறவா இல்ல நீங்க தொடருங்க அக்கா..அப்ப,அப்ப யாயினி இப்படித் தான் ஏதாச்சும் கேக்கும்  கோவிக்காதீங்கோ.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக் கொள்ளுங்கோ யாயினி. நான் உங்களை தவறவிட்டுவிட்டேன். நன்றி வரவுக்கும் கருத்துக்களுக்கும். உங்களைப் போல உற்சாகம் தருபவர்களால்தான் தொடர்ந்து எழுத முடிகிறது. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையென்று இன்னும் (உறுதியாக :D ) சொல்ல முடியவில்லை.. ஆனால் குறைந்தபட்சம்  உங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தானே இருக்க வேண்டும்..  :huh:  அதனால்தான் முன்னெச்சரிக்கை முனுசாமி ஆகிவிட்டேன்.. :rolleyes:

 

இது எனது 20 வருட நண்பியின் கதை. அவரின் சம்மதத்துடனேயே எழுதுகிறேன். பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்வதால், அத்தனை வருடங்களாக நானும் அவர் வேதனையில் பங்குகொள்ளும்படி ஆகிவிட்டது. இதனால் கணவரிடம் திட்டும் அடிக்கடி வாங்கிக் கொள்வேன். ஏனெனில் என் இட்டுமுட்டை கணவரிடம் தானே கூற முடியும். :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 10

திருமணம் முழுக்க முழுக்க இவர்களின் செலவில் நடந்தது. கூறைக்கும் தாலிக்கும் மட்டும் அவர்கள் செலவழித்தனர். வசந்தனின் கையால் தாலி ஏறியதும், தன் காதல் உண்மையானதாக இருந்ததால் கடவுள் தன்னில் இரக்கப்பட்டு தனக்கு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கிறார் என்று வசந்தி கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டாள்.

திருமணம் முடிந்து ஒரு வாரமாகியும் வசந்தனைத் தவிர அவர்கள் யாரும் இவளுடன் ஒட்டவில்லை. மாமியாரின் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் ஒரு சிரிப்பின்றி பார்த்த இவளுக்கு சந்தேகமாக இருக்க, என்னைக் கட்டினத்தில உங்கட அம்மாவுக்கு விருப்பம் இல்லையோ என்று வசந்தனைக் கேட்டாள். ஏன் அப்படிக் கேட்கிறீர். இப்ப தானே இங்க வந்திருக்கிறீர். போகப் போகப் பழகினால் கதைப்பினம் என்றுவிட்டு அவன் தன் பாட்டில் இருந்தான்.

ஒரு வாரம் கழிய எப்ப வேலைக்குப் போப்போறீர் என்று வசந்தன் கேட்டான். இப்பதானே ஒரு கிழமை முடிஞ்சிருக்கு. இன்னும் மூண்டு கிழமை இருக்கு என்றவளைப் பார்த்து, நெடுக அறைக்குள்ளே இருக்காமல் அம்மாவுக்கும் போய் குசினிக்குள்ள உதவி செய்யும். அப்பத்தான் அவையும் உம்மோட பழகுவினம் என்றான் வசந்தன். அவளுக்கும் அது சரி என்றே பட்டது. வசந்தனின் தமக்கை ஏற்கனவே திருமணமாகி கணவனுடன் அவர்களுடனேயே இருந்தனர். தமக்கை கூடப் பெரிதாக வசந்தியுடன் கதைப்பதில்லை. தம்பியார் மட்டும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுப் போவான்.

தமக்கையின் கணவனும் வேலை இல்லாமல்த்தான் இருக்கிறாரோ? ஒரு வாரமா வெளியே சென்ற சிலமனே இல்லையே. அவரும் அறைக்குள்ளையே அடைந்து கிடக்கிறார் என எண்ணிக் கொண்டு வசந்தனிடம் அதுபற்றிக் கேட்டாள். ஓம் அத்தானுக்கும் வேலை இல்லை அப்பாக்கும் வேலை போட்டுது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்திருந்தான் வசந்தன். வசந்திக்கு தன் காதுகளை நம்பமுடியாமல் இருந்ததால் மீண்டும் என்ன என்று கேட்டாள். இங்க இருக்கிற மூண்டு ஆம்பிளையளுக்கும் வேலை வெட்டி ஒண்டும் இல்லை என நக்கலாகக் கூறிவிட்டு தன் அலுவல் பார்த்தான். அவன் கூறியதை வசந்தி கிரகிக்கக் கொஞ்ச நேரம் எடுத்தது. அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. எங்கு தொடங்குவது எப்படிக் கேட்பது என்று ஒன்றுமே விளங்கவில்லை.

அப்பா வேறை வேலை ஒன்றும் தேடவில்லையோ என்று கேட்டாள். அப்பாவின்ர வயதுக்கு எங்க உப்பிடி நல்ல வேலை எடுக்கிறது. அப்பா இவ்வளவு நாளும் வேலை செய்தவர் தானே. இனி நான் தான் வேலை தேடவேணும். உமக்கு ஆரையும் தெரிஞ்சா 
பிடிச்சு ஒரு நல்ல வேலை எனக்கு எடுத்துத் தாருமன் என்று சுரணை கெட்டுச் சொல்லிவிட்டு சுரணையற்று அவளையும் பார்த்தான். நீங்கள் கொழும்பில வேலை செய்யவில்லையோ? என்றதற்கு. அங்க திரும்பப் போக எனக்கு விருப்பமில்லை. அம்மாவுக்கும் என்னை விட்டுவிட்டு இருக்க விருப்பம் இல்லை என்றான். உன்னை விட்டிட்டு இருக்க முடியாது என்று கூறியிருந்தானானால்  அவளுக்கு இறகு முளைத்திருக்கும். அவன் கூறியதைக் கேட்டு அவளுக்கு அவன்மேல் கோவமும் வந்தது. ஆனாலும் வெளிக்காட்டாது, நான் எங்கட அலுவலகரிட்டைச் சொல்லிவைக்கிறன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் நிற்க விருப்பமின்றி அங்கால் சென்றுவிட்டாள்.

அடுத்தநாள் முதல் வேலையாக  மேலாளர் வந்தவுடன் தன் கணவனுக்கு வேலை இல்லை. அவருக்குத் தெரிந்தவர்களிடம் இருந்தால் கூறும்படி கேட்டாள். அதற்கென்ன இங்கேயே ஒரு உதவிக் கிளாக் தேவைதான். நாளைக்கு கணவரை வரச் சொல்லுங்கோ என்று கூறி நட்புடன் சிரித்தவரைப் பார்த்து நன்றி கூறினாள். இவ்வளவு விரைவில் என் கணவனுக்கு வேலையா என மனம் மகிழ்ந்தது. சரி இரண்டு பேரும் வேலை செய்து குடும்பத்தைப் பார்ப்பம். இது இப்ப என் குடும்பம் தானே. வேற என்ன செய்யிறது எனத் தனக்குள் நினைத்தவள் வசந்தனிடம் அந்த சந்தோசமான விடயத்தைக் கூறுவோம் என்று  வீட்டுக்கு விரைந்தாள்.

எல்லோரும் வெளி விறாந்தையில் இருந்து மகிழ்வாகக் கதைத்துக்கொண்டு இருந்தனர். இவளைக் கண்டதும் சொல்லி வைத்ததுபோல் எல்லோருடைய பேச்சும் நின்றது. இவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதில் அவர்களோடு நிற்கலாமா அல்லது உள்ளே செல்வதா என ஒரு வினாடி யோசித்தவள், உங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே ஒரு வேலை ஒழுங்கு செய்திருக்கிறன். நாளைக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவர் AGA என்றாள் வசந்தனைப் பார்த்து. என்ன வேலை என்றதற்கு உதவிக் கிளாக் என்றுவிட்டு அவன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்துக்கொண்டு நின்றாள். எனக்கு உம்மட இடத்தில வேலை செய்யப் பிடிக்கேல்லை என்று கூறிவிட்டு நிலம் பார்த்தான். நீங்கள் பெரிய பதவியில இருக்க அண்ணா உங்களுக்குக் கீழ வேலை செய்யிறதோ என்று இவளைக் குற்றம் சாட்டும் தொனியில் தமக்கை கேட்க, வேலை இல்லாமல் இருக்கிறார் என்று நான்தான் கேட்டனான். இந்த வேலை தான் தற்சமயம் இருக்கு. நல்லா வேலை செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் தானே என்று எல்லோரையும் பார்த்துக் கூறினாள். இதுவரை வாயே திறக்காத தாய், வசந்தனை இந்தியாவுக்கு அனுப்புறதுதான் நல்லது. கொழும்பில நிக்கேக்க ஒருக்கா பிடிச்சுக்கொண்டு போய் வெலிக்கடையில வச்சிருந்தவங்கள். காசுகட்டிப் பிணையிலதான் வெளியில கொண்டு வந்தது. நீ ஒண்டும் உவவுக்குச் சொல்லேல்லையே என்று முடித்தார். வசந்தன் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். வசந்தி வேறொன்றும் கதைக்காது அப்ப சரி என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

தொடரும்...........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 11

திருமணம் நடந்து இரண்டே இரண்டு மாதங்கள்தான். வசந்தனை கள்ளத்தோணியில் இந்தியாவுக்கு அனுப்பியாச்சு. வசந்தன் போக முதலே தாயும் சகோதரிகளும் இவள் காது படவே குசுகுசுக்கத் தொடங்கிவிட்டார்கள். இவன் வெளிநாடு போனால் எங்களை எல்லாம் மறந்திடுவான். காசும் அவவுக்குத் தான் அனுப்புவான் என்று. தமக்குத் தானே அவர்கள் கதைப்பதைக் கேட்ட  வசந்திக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். ஒரு விதத்தில் அவர்களின் பயமும் நியாயமானதுதானே என அவர்கள் மேல் இரக்கமும் வந்தது. வசந்தன் போனதன் பின் வசந்தியின் தாய் வசந்தியை தங்களோடு வந்து இருக்கும்படி கேட்டபோது இவள் மறுத்துவிட்டாள். கலியாணம் கட்டின பிறகு அவையளோட இருக்கிறதுதான் சரி அம்மா. அதோட இப்ப அவைக்கு எந்த வருமானங்களும் இல்லை. என்னை நம்பித்தான் இருக்கினம். அவையைப் பாக்கிறது என்ர கடமைதானே என மறுத்துவிட்டாள். இரண்டு நாட்கள் இரு குடும்பமும் வசந்தி என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று வாக்குவாதப் பட்டார்கள். உதுகள் உன்னை வறுகிப்போட்டுத் துரத்தாட்டிப் பார் என்று அம்மா கூறியதுக்கு, இவர்களை நான் திருத்தி எடுக்கிறன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தாள். இவளுக்கு, தமக்கு உழைத்துப் போடுவதற்குக் கடமை இருப்பதுபோல் அனைவரும் நடந்துகொண்ட விதம் கொஞ்ச நாட்கள் செல்ல வசந்திக்கே வெறுப்பை வரவழைத்தது. மனம்விட்டுப் பேசிச் சிரிக்காது இயந்திரம் போல் எத்தனை நாட்களுக்கு பலருடன் ஒருவீட்டில் இருப்பது என்று வசந்தி யோசித்தாள்.

வசந்தன் போய் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. மூன்று முறை மட்டும் இவளுடன் கதைத்தான். இவளுக்குக் கடிதம் எதுவும் வருவதில்லை. வசந்தன் கடிதம் போட்டது என சிலநேரம் இவள் காதுபடக் கூறிப் பின் இவள் தூண்டித் துருவிக் கேட்டும் பெரிதாக ஒன்றும் கூறாது விடும்போது, இவள் ஒவ்வொரு தடவையும் இவர்களிடம் ஒன்றுமே கேட்பதில்லை என்று தான் எண்ணுவாள். ஆனாலும் கணவனைப் பற்றி அறியும் ஆவல் கிளர்ந்தெழ மீண்டும் கேட்பாள். வசந்தனின் மேல் தான் இவளுக்குக் கோபமெல்லாம். எனக்குத் தனிய ஒரு கடிதம் போட எண்ணவில்லையே என்று. பிறகும் கடிதம் வந்து இவர்கள் தான் தரவில்லையோ என தனக்குள் நினைத்துக் கொண்டாளேயன்றிக் கேட்கவில்லை. இப்படிப் பட்டவர்களுக்கு இரக்கம் காட்டிக்கொண்டு ஏன் இங்கிருப்பான் அம்மா வீட்டுக்கே போகலாமோ என இவள் யோசித்துக்கொண்டு இருந்தபோது கடவுளாகப் பாத்துக் கண் திறந்தார். வசந்தநிடமிருந்து இவளின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது என்று தாய் கொண்டு வந்தார். வசந்தனுக்கு இத்தனை துணிவு எப்படி வந்தது என வியந்துகொண்டு கடிதத்தை உடைத்தவள், அதில் இரு வரிகள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டு மனம் சோர்ந்தாலும், அடுத்த நிமிடமே அதில் எழுதியிருந்த விடயத்தால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

வசந்தன் இவளை உடனே வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வரும்படி கூப்பிட்டிருந்தான். வசந்தி எல்லோருக்கும் முன்னால் அதை வாய்விட்டு வாசித்தாள். அவளையும் தாயையும் தவிர மற்றவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. தாய் நின்றபடியால் அவர்கள் எதுவும் பேசாது நின்றுவிட்டு போனபின் வசந்தியின் மேல் பாய்ந்தார்கள். நல்லா எங்கட பிள்ளையை மருட்டிப் போட்டாய் என்று ஆளாளுக்கு வாயில் வந்தபடி அர்ச்சனை நடந்தது. நல்ல காலம் வசந்தி வசந்தன் தன்னுடன் தொர்டர்பு கொள்ளும்படி கூறியிருந்த தொலைபேசி  இலக்கம் பற்றி அவர்களுக்குக் கூறவில்லை.

வசந்தியின் பெற்றோரே வசந்தியை அங்கிருந்து அனுப்புவதில் முன்னின்றனர். வசந்தன் வீடு என்ன எண்ணியதோ தெரியவில்லை. வசந்தனின் சகோதரியின் கணவனையும்  வசந்தியுடன் இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறினார். வசந்திக்கு எரிச்சல் வந்தாலும்  அடக்கிக்கொண்டு தன்  தந்தையிடம் ஆலோசனை கேட்டாள். தந்தை வசந்தியின் பதினாறு வயதுச் சகோதரனை வசந்தியோடு அனுப்பி அவனை இந்தியாவில் தொடர்ந்து படிக்கவைக்கப் போவதாகக் கூறியது வசந்திக்கு மலையளவு துணிவைத் தந்தது. சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா கூறினார்கள். தந்தையே வசந்திக்கும் சேர்த்து கடவுச் சீட்டுக்கும் ஒழுங்கு செய்தார். வசந்தனிடம் செல்வதனால் அவளுக்கு பிரிவுத்துயர் ஒன்றும் தெரியவில்லை.

இரண்டு நாள் கொழும்பில் நிறுத்தான் செல்ல வேண்டும். தந்தையே எல்லாத்துக்கும் பணம் குடுத்தார். பெண்களைப் பெற்றால் திருமணம் ஆனால் என்ன ஆகாவிடால் என்ன செலவு பெற்றோருக்குத்தான் செலவு பாவம் என மனதுக்குள் வருத்தமாகவும் இருந்தது.

பேருந்தில் ஏற யாழ்ப்பாணம் போய் நின்றபோதுதான் பார்த்தால் வசந்தனின் அத்தான் ராமின் தந்தையும் அவர்களோடு கொழும்பு வருவதற்கு தயாராக நிற்கிறார். கொழும்புபோய் மாலை சேர்ந்தாச்சு.பக்கத்தில் ஒரு தங்கு விடுதியில் தங்கலாம் என்று கூட்டிக்கொண்டு போனால் ஒரு அறை மட்டும் எடுத்துவிட்டு எல்லோரும் அங்கேயே தங்கலாம். இரண்டு நாட்கள் தானே என்றான் ராம். எனக்கும் தம்பிக்கும் வேறு அரை எடுங்கோ என்று வசந்தி கொஞ்சம் பிடிவாதமாகக் கூறியபிறகே வசந்திக்கு இன்னொரு அறை எடுத்துக் கொடுத்தான் ராம். அதுக்கும் வசந்தியே பணம் கொடுத்தாள்.

ராம் கொஞ்சம் அப்பிடி இப்பிடியான ஆள் என்று முன்பு கேள்விப்பட்டிருந்தாள். அப்படி இல்லாவிட்டால் கூட அவன் தன்னை பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணி இருந்தால் ஒரே அறையில் இருக்கலாம் என்று கேட்பான். இன்னும் இரண்டு நாள் தானே. கணவனிடம் சென்றுவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.அங்கு சென்ற பின்தான் அவளுக்குத் தெரிந்தது, வசந்தன் தன்னை ஆசையிலோ அல்லது அக்கறையிலோ அழைக்கவில்லை என்பது. தன்னால் ஒன்றுமே அங்கு செய்ய முடியவில்லை. வசந்தி வந்தாவது ஏதும் செய்வாள் என எண்ணியே இவளை வரவழைத்திருந்தான். அவளுக்குத் தன் நிலையை எண்ணி பரிதாபமே ஏற்பட்டது.


தொடரும் ....................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி

காதால் கேட்ட கதை போல் தெரியவில்லை

நிஐமாகத்தெரிகிறது

Link to comment
Share on other sites

வசந்தி போன்றவர்கள் எதைக்கொண்டு சிந்திப்பார்கள்? :blink: கிட்னி என நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

சில ஆண்களால் ஆணினத்துகே அவமானம். வசந்தன் ஒரு அலி. உங்கள் நண்பிக்கு என் அனுதாபங்கள். விசாரித்தாக சொல்லுங்கள். இதில் வசந்தனின் தாயும் தமக்கையும் தங்களும் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டார்கள். பெண்களை அழவிட்டு வேடிக்கை பார்ப்பவன் இருப்பதிலும் பார்க்க துக்கில் தொங்குவதே மேல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகளுக்கும் கருத்தைப் பகிர்ந்த உறவுகள் விசுகு அண்ணா, இசை, அலை, வந்தி,புங்கை ஆகியோருக்கும் நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 12

 

 

பயணக் களைப்புப் போக நன்றாகக் குளித்துவிட்டு வந்தவள், அறைக்கு வெளியே இரண்டு மூன்று பேர் இன்னும் எழும்பாது படுத்துக் கிடப்பதைக் கண்டாள். இவை ஏன் இங்க படுத்திருக்கினம். ஏன் இன்னும் எழும்பவில்லை என வசந்தனிடம் கேட்டாள். உவங்கள் கஞ்சாக் கோஷ்டி. உப்பிடித்தான் பகலில் படுத்துக் கிடப்பாங்கள் என்றுவிட்டு வசந்தன் எழுந்தான். இது உங்கட அத்தான் ஆட்களின் வீடு என்று சொல்லித்தானே என்னை  இங்க கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்றாள்  குற்றம் சாட்டும் குரலில். வேறை என்ன செய்யிறது. நான் ஆறு மாதமா இங்க தானே இருக்கிறன். நீ வந்த உடன விட்டுட்டுப் போக ஏலுமே என்று கூறி இவள் என்ன சொல்வாளோ என்று பார்த்தான்.

உங்களை நம்பி என்ர தம்பியையும் இங்க கூட்டிக்கொண்டு வந்தாச்சு என்று இவள் கொஞ்சம் குரலை உயர்த்தினாள் . நானும் கஞ்சா அடிச்சு உன்னையும் அடிக்கச் சொன்ன மாதிரி எல்லோ கதைக்கிறாய் என்றுகொண்டே குளியலறையில் புகுந்துகொண்டான். வசந்திக்கு அவன் கூறியது சரி என்றும் படுத்து. அவர் நல்லவர் என்றதாலை தானே இந்த நரகத்துக்குள்ளை  இருந்தும் உதுகளைப் பழகாமல் இருந்திருக்கிறார். அவர்மட்டும் உதுக்குள்ள மாட்டுப்பட்டிருந்தால் என்ர கதி என்ன ஆகியிருக்கும். எப்பிடியாவது இவரை இங்கை இருந்து கூட்டிக்கொண்டு போவிடவேணும் என மனதுள் முடிவெடுத்தாள்.

அடுத்து வந்த நாட்களில் தம்பியாரை கொலிச்சில் சேர்த்துவிட்டு, வேறு இடத்தில் போய் இருப்போம் என்றால் வசந்தன் மறுத்துவிட்டான். தம்பியாரின் பாஸ்போட்டையும் வசந்தியே பாதுகாப்பாய் வைத்துக்கொண்டாள். கொண்டுவந்த காசும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வசந்தியின் அண்ணன் துபாயில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறான். இதுவரை அவன் எந்தப் பணமும் வீட்டுக்கோ இவளுக்கோ அனுப்பவில்லை. வேறு வழியில்லை கடைசியாக அவனிடம் கேட்பதென முடிவு செய்து அவனுக்கு கடிதம் ஒன்று எழுதிப் போட்டாள் வசந்தி.

என்ன நல்ல காலமோ அவன் 1000 அமெரிக்கன் டொலர்களை அனுப்புவதாக எழுதியிருந்தான். வசந்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. வசந்தனிடம் கூற வசந்தனும்  வசந்தனின் அத்தானின் தங்கையின் அக்கவுண்டுக்கு போடச்சொல்லி வங்கிக் கணக்கிலக்கங்களை வாக்கிக் கொடுத்தான். இருவாரங்களானது பணம் வரவில்லை

மூன்றாவது வாரம் வேறு வழியின்றி தனது தமயனுக்கு பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று எழுதிப் போட்டாள். அடுத்த வாரங்களில் தமையனிடமிருந்து ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்னர் பணம் பனுப்பிய பற்றுச்சீட்டின் கொப்பியுடன் கடிதம் வந்திருந்தது. நல்ல காலம் அவர்கள் வெளியே செல்வதற்கு தயாராகிக் கீழே வந்தபோதே கடிதமும் வந்தது. அவர் திருமதி வசந்தன் என்றவுடனேயே அவளுக்குக் கேட்டுவிட்டது.வசந்தனின் அத்தான் கடிதத்தை வாங்க முதலே அவள் ஓடிப்போய் கையை நீட்டி அதை வாங்கிவிட்டாள். அவள் அதையும் கொண்டு கணவனுடன் வங்கி எங்கே இருக்கிறது என்ற விபரங்களைக் கேட்டுவிட்டு அங்கு சென்றாள். அங்கு சென்று விசாரித்தால் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்னர் அப்பணம் எடுக்கப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த இடத்திலேயே அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அழுவதை நிறுத்திவிட்டு மனேஜரிடம் யார் பணம் பெற்றது என்று கூற முடியுமா என்று கேட்டாள். அவரும் இவள்மேல் இரக்கப்பட்டுப் பார்த்துவிட்டு ராம் என்றவர் தான் எடுத்திருக்கிறார். என்றார். சரி நன்றி என்றுவிட்டு விடுவிடு என முன்னாள் நடந்தாள்.

வீடு வரும் வரை அவளோ அவனோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் உங்கள் அத்தானைக் கூப்பிடுங்கள் என்றவுடன் தலை குனிந்தபடி வசந்தன் வெளியே போனவன், சிறிது நேரத்தில் தனியாகத் திரும்பி வந்தான். எங்க அந்த ஆள் என இவள் கேட்டதற்கு அவர் வரமாட்டாராம். காசும் தர முடியாதாம் எனக் கூறிவிட்டு பேசாமல் இருந்தான்.உங்களுக்கு வெக்கம் இல்லையே ஒண்டும் சொல்லாமல் பேசாமல் வந்தனீங்களே என கேட்க என்னண்டு அதானிட்டைச் சண்டைப் பிடிக்கிறது என்றுவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் இருந்தான். இவள் கடகடவென கீழே இறங்கி கூடத்துக்குள் சென்று நின்றாள். ராம், சகோதரி, கணவன் எல்லோரும் இருந்தார்கள். என்ர காசை  மரியாதையாக வைக்கவேணும். வெக்கமில்லாமல் என்ர காசை எடுத்ததுமில்லாமல் சொல்லாமலும் மறைச்சிருக்கிறியள் என்று விட்டு பார்க்க ராம், இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்லிறாய். என்றான் ஒருமையில். வசந்திக்கு கையும் காலும் கோவத்தில் பதற வெளிக்கிட்டுது. உப்பிடி ஆற்றையன் காசுக்கு ஆசைப்படுற நேரம் ரோட்டில பிச்சை எடுக்கலாம் என்றுவிட்டு மீண்டும் மேலே வந்தாள். கணவனைப் பாக்க கோபம் தான் வந்தது. இப்பிடி கையால் ஆகாதவனாக இருக்கிறானே என்று. போய் கேட்டு காசு தந்தவையோ என தந்தவையோ என அவன்கேட்டத்தில் நக்கல் இருந்ததா என்று தெரியாத அளவு கோபம் அடங்காமல் இருந்தது. நான் உவனுக்குச் செய்யிறன் வேலை என்று கருவினால். நீர் ஒண்டும் செய்ய ஏலாது. ஏனென்டால் காசு அவையின்ர பேர்ல தான் வந்தது. அதுகும் அத்தானின்ர தங்கச்சியாக்கள் இங்க காண காலமா இருக்கினம். நாங்கள் இப்ப வந்துபோட்டு என்ன செய்யிறது. அதுக்கும் எல்லாரையும் பாக்க ரவுடிக் கும்பல் போல கிடக்கு என்று சேங்குத்தனமாகக் கூறுபவனை கன்னத்தில் அறியவேண்டும் போல் கோபம் எழுந்தது. போயும்போயும் இப்படிப் பட்டவனையா விழுந்துவிழுந்து காதலித்தேன் என தன்மேலேயே வெறுப்பும் வந்தது.

இனியும் இங்கிருப்பது ஆபத்து என எண்ணியவள் அடுத்தநாள் காலை எழுந்து வசந்தனையும் கூட்டிக்கொண்டு ஏஜென்சி ஒன்றிடம் போனாள். அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்ப நாற்பதாயிரம் இந்தியன் காசு கேட்டார்கள். அடுத்தநாள் பாஸ்போட்டையும் காசையும் கொண்டுவரும்படி கூறியதால் மனதுக்கு ஒரு நின்மதி ஏற்பட்டது. அவளிடம் இருந்தது போட்டுக்கொண்டு வந்த நகைகள். அதைவிடக் கொஞ்ச நகைகள். எலாவற்றையும் விற்று வெளிநாடு போக வேண்டியதுதான். வேறு வழி இல்லை  என மனதுள் நினைத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து கொண்டுவந்த சூட்கேசை எடுத்தால் அவள் பூட்டியிருந்த பூட்டைக் காணவில்லை. ஐயோ சூட்கேஸ் உடைச்சுக் கிடக்கு என்று திகிலோடு கத்தியபடி திறந்து பார்த்தாள்.அவளின் பொருட்கள் எல்லாம் இருந்தன.ஒரு நிமிடம் அற்ப மகிழ்வு கொண்டவள், இன்னும் அடியில் கையை விட்டுத் தேடியதும் அதிர்ந்தாள்.


தொடரும் ..............

 

Link to comment
Share on other sites

சும்மா அதிருதில்ல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருமில்ல.. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நியாயமில்லாத கணவன் ஒருவனின் செயல்களை, மீண்டும் மீண்டும் மன்னித்து விடுபவளை அவளது கணவன் கூட மன்னிக்கக் கூடாது!

 

வசந்தி ஒரு படித்த முட்டாளாகத் தான் எனக்குத் தெரிகிறாள்! அவள் 'கையறு; நிலையில் உள்ளாள் என்பதைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், தன் தமையன் அனுப்பும் பணத்தைத் தனது பெயருக்கு அனுப்பச் சொல்ல முடியாதவள், எப்படி அரசாங்க உத்தியோகம் ஒன்றைப் பார்த்து, அதில் நல்ல பெயர் வாங்கினாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை!

 

இனிவரப்போகும் தொடர்கள் இதைத் தெளிவு படுத்தும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், சுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், இசை,விசுகு அண்ணா,புங்கை ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில அதிருறதுக்கு ஒண்டும் இல்ல.....திருமணம் சுத்த வேஸ்ட் என்று மட்டும் புரியுது...வசந்தி இன்னும் திருந்தின மாதிரி தெரிய இல்லயே..தன்னையே,தன் மனத்தையே ஏமாற்றிக் கொண்டு காலத்தை நகர்த்துவது போல் தான் இருக்கிறது....முதல் பாகத்தில் இருந்து தொடங்கிய ஏமாற்றம் இன்னும் முடிந்த பாடாய்க் காணம். :unsure:  :rolleyes: 
 

 

 

 

Link to comment
Share on other sites

இதில அதிருறதுக்கு ஒண்டும் இல்ல.....திருமணம் சுத்த வேஸ்ட் என்று மட்டும் புரியுது...வசந்தி இன்னும் திருந்தின மாதிரி தெரிய இல்லயே..தன்னையே,தன் மனத்தையே ஏமாற்றிக் கொண்டு காலத்தை நகர்த்துவது போல் தான் இருக்கிறது....முதல் பாகத்தில் இருந்து தொடங்கிய ஏமாற்றம் இன்னும் முடிந்த பாடாய்க் காணம். :unsure:  :rolleyes: 

 

 

அந்த தொடர் ஏமாற்றம்தான் அதிருது என்கிறோம்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தொடர் ஏமாற்றம்தான் அதிருது என்கிறோம்.. :wub::D

 

 

ம்ம்ம்.....புரிய வைச்சதிற்கு நன்றியண்ணா..

 

muthal puriya ella...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 13

பெட்டியைத் திறந்து அடியில் கைவிட்டுப் பார்த்தால், அவளதும் தம்பியாரதும் கடவுச் சீட்டுக்களைக் காணவில்லை. நிலத்தில் பெட்டிக்குள் இருந்த அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஒவ்வொன்றாக உதறி உதறித் தேடியும் கடவுச் சீட்டுக்கள் இல்லை. உங்கட அத்தான் தான் எடுத்திருப்பார். மரியாதையாப் போய் வாங்கிக்கொண்டு வாங்கோ பாஸ்போட் இல்லாமல் திரும்ப வராதிங்கோ. இந்த அறைக்குள்ள வெளி ஆட்கள் யாரும் வரமாட்டினம். நிக்காதைங்கோ போங்கோ எனக் கணவனை விரட்டினாள்.

அப்பிடி அவள் ஒருநாளும் கத்தியதே கிடையாது. பெண் என்டதாலை என்னவும் செய்யலாம் எண்டு ராம் நினைச்சிட்டான் போல என மனதுள் கறுவியபடி கணவனுக்காகக் காத்திருந்தாள். அவனோ தலையைக் குனிந்துகொண்டு அத்தானிடம் இல்லையாம் என்று வந்து நின்றான். இவர்கள் இருந்த குடியிருப்பு மூன்று மாடிகள் கொண்டது. மேலே மொட்டை மாடி. இவள் வாசலில் நின்ற கணவனைத் தள்ளிவிட்டு வெளியே வந்து கடகடவென மொட்டை மாடிக்குச் சென்று வீதியில் போவோர் வருவோரை அழைத்தாள். அவர்களும் என்ன எதோ என வந்து  நின்றனர். என்ர பாஸ்போட்டையும் தம்பியின்ர பாஸ்போட்டையும் ராம் எண்டவர் எடுத்து ஒழிச்சுப் போட்டார். இப்ப எனக்கு அது இரண்டும் வேணும். இல்லை எண்டால் நான் கீழை குதிப்பன் என்றாள்.
வசந்தன் உடன கீழே சென்று அத்தானின் வீட்டுக் கதவைத் தட்ட ராமும் வலு கூலா வெளியே வந்தவர், வீட்டுக்கு முன்னால் இத்தனை பேரை எதிர்பார்க்காது என்ன செய்வது,உள்ளே திரும்பப் போவோமா அல்லது நிற்பதா என யோசிக்க முதலே வசந்தன் எல்லோருக்கும் முன்னால், அத்தான் வசந்தியின்ர பாஸ்போட்டைக் குடுங்கோ வசந்தி குதிக்கப் போறன் என்று மொட்டை மாடியில் ஏறி நிக்கிறாள் என்று அழுவார்போல் கூறினான்.

என்ன தம்பி என்ன பிரச்சனை என ஆளாளுக்குக் கேள்வி கேட்கவும் ராமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் மேலிருந்து வசந்தியின் குரல் குளறலாக வந்தது. இன்னும் 5 நிமிசத்துக்குள்ள பாஸ்போட் வரவேணும். உவன்தான் எடுத்து வச்சிருக்கிறான். வராட்டில் குதிச்சிடுவன் என்று கூறினாள். சனமும் ஆளாளுக்கு ஏன் தம்பி எடுத்தனி குடுத்திடு என்று கூற ராமும் வேற வழியில்லாமல் வசந்தனிடம் பாஸ்போட்டைக் கொண்டுவந்து கொடுத்தான். வசந்தனும் அதைக் காட்டி கீழே வா பாச்போட்டைத் தந்திட்டார் என்று கத்த, வசந்தி உங்களை நம்பமாட்டன். அதைக் கொண்டு நீங்கள் மேல வாங்கோ என்றாள் . வசந்தனும் அதைக் கொண்டு மேலே போக ராம் பின்னால் வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்து பாஸ்போட் இரண்டையும் வாங்கினாள். வாங்கியதுடன் நில்லாமல் கணவனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே தாம் தங்கியிருந்த அறைக்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு, நான் இனியும் இங்க இருக்க மாட்டன். நீங்களும் என்னோட வாறதெண்டால் வாங்கோ அல்லது இங்கே கிடந்தது சாகுங்கோ என்றுவிட்டு, தனது பொருட்களை எல்லாம் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டு தயாராகி வருகிறாயா இல்லையா என்பதுபோல் கணவனைப் பார்த்தாள்.வசந்தனுக்கு அங்கு தான் தனிய இருந்து பயனில்லை என்று தெரிந்தது. தன பொருட்களையும் எடுத்துக்கொண்டு வசந்தியுடன் கிளம்பினான்.


தொடரும்......

 

Link to comment
Share on other sites

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 13 இல் இருந்து உத்வேகம் தருகிறது தொடருங்கோ படிக்கும் ஆவலில்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.