• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
மெசொபொத்தேமியா சுமேரியர்

வசந்தம் தொலைந்த வாழ்வு

Recommended Posts

வசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்??என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.

அப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்? அவள்மட்டும் விதிவிலக்கா என்ன?

 

படிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.

அன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

முதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.

 

எந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.

பெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.

அவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா?? என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப்  பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.

எப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ?? என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.

தொடரும் ....... 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 7

Share this post


Link to post
Share on other sites

இப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........

 

Share this post


Link to post
Share on other sites

(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

Share this post


Link to post
Share on other sites
நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D

Share this post


Link to post
Share on other sites

இவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும். :lol:

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

 

ஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை ? ஏதும்  ?? :D

 

 நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

 

நீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை ?

:lol:

  

நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D

 

 

மாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.

ஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை. :lol:

 

 சுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....
வசந்தம் பாடி வர வைகையோடிவர....

 

 

https://www.youtube.com/watch?v=JtBHFadipg8

Share this post


Link to post
Share on other sites
உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.
என்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட் Edited by putthan

Share this post


Link to post
Share on other sites

கதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா. :)

 

(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)

 

 

Share this post


Link to post
Share on other sites

கருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே! நன்றி.

 இப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........

 

காதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.தொடருங்கள், சுமே!

 

நீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்! :o

 

ஏனெண்டு விளங்குதில்லை! :D

 

ஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.
`நானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல.. :lol:

 

வாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D :D 

நண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என. 
 
அடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று. :D  :D

 


நிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.இவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும். :lol:

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 

வசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.???நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ?? விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும்  பெண்டுகளுக்கு. :lol:

Share this post


Link to post
Share on other sites

கருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.

 

 

Share this post


Link to post
Share on other sites

என்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்

 

பொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D :D

Share this post


Link to post
Share on other sites

படிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.

 

ஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும  நிறுத்தப்பட்டது.  

 

Share this post


Link to post
Share on other sites

படிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.

 

ஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும  நிறுத்தப்பட்டது.  

 

உங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது.  :D :D

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.

 

சுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும்  வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா   :D​  ) பற்றியும் எழுதுங்கோ.

 

நாங்களும் விடுப்பு கேட்போமில்ல  :lol:

 

 

  

 

 

Edited by பகலவன்

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.

 

சுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும்  வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா   :D​  ) பற்றியும் எழுதுங்கோ.

 

நாங்களும் விடுப்பு கேட்போமில்ல  :lol:

 

 

கட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். :D  நன்றி பகலவன் வரவுக்கு.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலா அக்கா வரவுக்கு.

 

Share this post


Link to post
Share on other sites

அடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.
 அவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.

வசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி.  எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.

அதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும்,  ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.

அன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ? சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.

 

அவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது  தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.

 

அவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

 


தொடரும் .......

 

  

  
 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

கட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். :D  நன்றி பகலவன் வரவுக்கு.

 

 

இந்த அலை இல்லைத் தானே  :lol:

தொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்? :D  :D

சின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா ? :icon_idea:

 

இது என்ன கேள்வி? ஓமோம் அவரே தான்  :lol: 

 

 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

இந்த அலை இல்லைத் தானே  :lol:

 

 

உந்த அலையேதான். :lol: :lol:

 

 

Share this post


Link to post
Share on other sites

.

வசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.???நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ?? விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும்  பெண்டுகளுக்கு. :lol:

 

எனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது. :lol:

 

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.  

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.  

 

வீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது. :D

Share this post


Link to post
Share on other sites

வீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது. :D

 

 

படம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: இலங்கை தமிழர்களை மோதி அரசு ஒதுக்குகிறதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது. இந்திய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களிடையே மதப் பாகுபாடு காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மத அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன. மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் சிங்கள - பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டது மத ரீதியிலான பாதிப்புதானா? என்றும் இந்த மசோதா குறித்து எப்படிப் பார்க்கிறார் என்றும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவரான மறவன்புலவு க.சச்சிதானந்தனிடம் கேட்டது பிபிசி தமிழ். தெற்கில் இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ? "வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெற்கிலே இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ என்று ஒரு ஆதங்கம் இருக்கிறது" என்று தொடங்கினார் அவர். படத்தின் காப்புரிமை Getty Images Image caption கனடாவின் ஒன்டாரியோவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்தும் சமயத்திருவிழா. "1958ம் ஆண்டு கொழும்பு அருகில் உள்ள பாணந்துறை முருகன் கோயிலில் இந்து பிராமண குருக்கள் ஒருவரை உயிரோடு கோயிலுக்குள் வைத்து சிங்கள பௌத்தர்கள் கொளுத்திய நேரத்தில்தான் முதல் கலவரமே வெடித்தது. அந்தக் கோயிலின் அறங்காவலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு சித்தப்பா முறை. அந்த சம்பவமே தமது மனதில் அடித்தள மாற்றத்தை கொண்டுவந்தது என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார் சச்சிதானந்தன். "1983 கலவரத்தில் திருகோணமலை கோட்டை வாயிலில் இருந்த ஒரு கோயிலின் பிள்ளையார் சிலையைப் பெயர்த்துச் சென்று அரசுப் படையினர் கடலில் போட்டனர். அந்த இடத்தில் சிங்களத்தில் 'கண தெய்யோ நாண்ட கியா' என்று எழுதி வைத்தார்கள். இதற்கு 'கணபதிக் கடவுள் கடலில் குளிக்கப் போய்விட்டார்' என்று பொருள்" என்று மேலும் அவர் தெரிவித்தார். "மசோதா இந்துக்களை புண்படுத்துகிறது" 2019ல் ராவணன் தாய்க்கு இறுதிக் கிரியை செய்த இடம் என்று நம்பப்படும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா நீரூற்றுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலை சீரமைக்க முயற்சி நடந்தபோது புத்த பிக்குகள் தடுத்தார்கள் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை மறவன்புலவு க.சச்சிதானந்தன்/Facebook Image caption மறவன்புலவு க.சச்சிதானந்தன் விடுதலைக்குப் பிந்திய சுமார் 70 ஆண்டுகாலத்தில் இலங்கையில் இந்துக்கள் மீது கொடுமை நடப்பதால்தான் 12 லட்சம் இந்துக்கள் உலகம் முழுவதும் 40 நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். அப்படிச் சென்ற நாடுகளில் இந்தியா தவிர பிற நாடுகளில் எல்லாம் இலங்கை இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். கனடாவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நார்வேயிலே ஒரு தமிழர் மாநகர முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குடிமகனாகி அந்தந்த நாட்டின் ஆட்சிப் பீடத்திலே கூட இருப்பதற்கான வாய்ப்பை அந்தந்த நாடுகள் கொடுத்திருக்கின்றன. 1983க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களையெல்லாம் புத்த சமயத்தவரால் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட இந்துக்களாக நினைக்காத ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டுவருவது இலங்கை இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளது" என்கிறார் சச்சிதானந்தன். "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்கிறார்கள். அவர்களில் 2014க்கு முன்பு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்தை இலங்கை இந்துக்களுக்கும் வழங்கும் வகையில் மாற்றவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு அங்கே இயல்புநிலை திரும்பிவிடவில்லையா என்று கேட்டபோது, அதை மறுக்கிறார் சச்சிதானந்தன். "2019ல் கன்னியாவில், முல்லைத் தீவில், செம்மலையில் பிள்ளையார் கோயிலின் வழிபாட்டு உரிமையை புத்த பிக்குகள் கூடியிருந்து மறுக்கும் சூழ்நிலையில் சமாதானம் நிலவுகிறது என்று இந்தியாவில் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். செம்மலையில் இந்துக்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள். நந்தி கொடி கட்டினார்கள். இவற்றை புத்த பிக்குகள் பிடுங்கி எறிந்தார்கள். இந்தியாவில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்து கருத்துத் தெரிவிக்கக்கூட அவகாசம் இல்லை. உலக இந்துக்களுக்காக இருக்கிற விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, மற்ற அமைப்புகளோ தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களோ இதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று அழுத கண்ணீரோடு எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடுகிறார் சச்சிதானந்தன். குடியுரிமை கேட்கிற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. "இலங்கை தமிழர்களுக்கு பொருந்தாது" படத்தின் காப்புரிமை OfERR Image caption சந்திரஹாசன் அதே நேரம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் வேறுவிதமான நிலைப்பாடு கொண்டிருக்கிறார். "இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல உதவ வேண்டும்" என்கிறார் அவர். தங்கள் இடத்துக்கே திரும்பச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கடமை அகதிகளுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். உள்நாட்டுப் போரில் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தவர்களில் சிறிய அளவு பௌத்தர்களும், கிறித்துவர்களும் இருந்தார்கள் என்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை மத வேறுபாடு அல்ல என்றும் அவர் தெரிவிக்கிறார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கும் தங்கள் பிரச்சனைக்கும் வேறுபாடு உண்டு என்கிறார் அவர். இதனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நோக்கம் இலங்கை தமிழர்களுக்குப் பொருந்தாது என்றும் கூறுகிறார். தங்களைப் பாதிக்காத விஷயம் என்பதால் இந்திய சட்டம் குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என்கிறார் அவர். "மத ரீதியாக முஸ்லிம்கள், இன ரீதியாக தமிழர்கள் விலக்கப்படுகிறார்கள்" இதனிடையே, இந்த மசோதா தாக்கல் ஆவதற்கு முன்பே "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும். வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்" என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில் "இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது" என்று தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை D.Ravikumar Image caption து.ரவிக்குமார் இந்த பதில் மூலம், இலங்கை தமிழ் அகதிகளை அகதிகளாககூட அங்கீகரிக்காமல் அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்றே அமைச்சர் மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறும் ரவிக்குமார், அகதிகளுக்கான இரண்டு ஐ.நா. ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்கிறார். "அண்டை நாடுகளில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது என்றால், மியான்மரும் அண்டை நாடுதான், இலங்கையும் அண்டை நாடுதான். இலங்கையில் இந்தியாவின் கொள்கை காரணமாகவே தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். மியான்மரில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு இலக்கான ரோஹிஞ்சா அகதிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில்கூட துன்புறுத்தலுக்கு இலக்கான அகமதியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எனவே மதரீதியாக முஸ்லிம்களையும், இன ரீதியாக தமிழர்களையும் விலக்கி வைக்கும் வகையிலேயே இந்த குடியுரிமை மசோதா அமைந்திருக்கிறது" என்கிறார் ரவிக்குமார். "மலையகத் தமிழ் அகதிகளின் பிரச்சனை கவனிக்கப்படவில்லை" அகதிகள் உரிமைகளுக்காக வாதிடுகிறவரும், அகதிகள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நூல்கள் எழுதியவருமான டாக்டர் வி.சூரியநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இலங்கை அகதிகள் என்று சொல்லும்போது அவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று இலங்கையை தாயகமாக கொண்ட தமிழர்கள். மற்றொரு வகையினர் இலங்கையில் வாழ்ந்து வந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள்.  1983 கலவரத்தின்போதும், அதற்குப் பிறகும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள் 29,500 பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கு இந்தியா என்னென்ன அளவுகோல்களை வைக்கிறதோ அவை அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இவர்களை குடியுரிமைக்கு உரியவர்களாக இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை" என்று கூறினார். படத்தின் காப்புரிமை Getty Images Image caption கீழ்புத்துப்பட்டு அகதிமுகாமில் இலங்கை தமிழ் அகதிக் குடும்பம் ஒன்று. குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இந்த வேறுபாட்டை குறிப்பிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபற்றி மேலும் கூறிய அவர் "இந்தியாவில் நீண்டகாலம் வசித்துவரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளைப் பொருத்தவரை அவர்கள் விரும்பினால் தங்கள் இலங்கை குடியுரிமையை திருப்பிக்கொடுத்துவிட்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இயல்பாக்கம் பெற்றவர்கள் என்ற முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தரமுடியாது என்று இந்திய அரசு 1983-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றால்தான் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வழி பிறக்கும்" என்றார் அவர். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் இணைக்காததற்கு காரணம் அங்கே இருப்பவை தியோகிரசி எனப்படும் மத ஆட்சிமுறை அல்ல என்பதுதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது பற்றிக் குறிப்பிட்ட சூரியநாராயணன் "கராறாகப் பார்த்தால் இலங்கையில் இருப்பது மத ஆட்சிமுறை அல்லதான். ஆனால், பௌத்தத்தை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அரசின் கடமை என்று அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் சொல்வதால் அதனை மதச்சார்பற்ற அரசு என்று பலரும் ஒப்புக்கொள்வதில்லை. புத்த மதகுருமார்கள் அங்கே உத்வேகத்தோடு அரசியலில் பங்கேற்கிறார்கள் எனவே, இலங்கை மத ஆட்சிமுறை இல்லை என்று வாதிடுவதை முழுமையாக ஏற்கமுடியாது" என்று கூறினார் சூரியநாராயணன். இலங்கை தமிழ் அகதிகளுக்கு சொந்த நாடு திரும்புவதே இலக்கு என்று சந்திரஹாசன் கூறுவது பற்றி கருத்து கேட்டபோது, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களை இப்படி மீண்டும் இலங்கையில் குடியேறும்படி அழைக்கமுடியுமா என்று கேட்ட சூரியநாராயணன், இலங்கைக்கு திரும்பிச் சென்ற பல தமிழ் அகதிகள் மீண்டும் அங்கிருந்து வெளியேறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். "பாதி அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை"  திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் அகதி முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இது பற்றி பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முகாம்களில் வசிக்கும் அகதிகளில் பாதிபேர் இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவதாகவும், மீதி பேர் இந்தியாவிலேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டார். 10 வயதாக இருக்கும்போது 30 ஆண்டுகள் முன்பு குடும்பத்தோடு இந்தியா வந்த தாம் இந்தியப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு இங்கே வாழ்வதாக கூறிய அவர், இனி திரும்பிச் சென்று அங்கே உழைத்து, பழைய நிலைமைக்கு வருவதென்றால் ஒரு தலைமுறைக்கு மேலாகும் என்றார். தம்மைப் போலவே பல அகதிகளும் நினைப்பதாகவும் அவர் கூறினார். படத்தின் காப்புரிமை Getty Images Image caption 2011ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் அகதிகள் சிலர். மனைவியின் குடும்பத்தில், தாமோ தமது குடும்பத்தில் மனைவியோ இடம் பெற்று ரேஷன் கார்டு பெறும் சூழ்நிலைகூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், அகதிகளுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள், உதவிகள்கூட வேண்டாம், இந்தியக் குடியுரிமை கிடைத்தால் போதும் என்றும் குறிப்பிட்டார். இந்திய குடியுரிமை கிடைத்தால், பாஸ்போர்ட் பெற்று இலங்கை சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டு வரமட்டுமே விரும்புவதாகவும் அவர் கூறினார். ஏன் அவரைப் போன்ற பலர் இலங்கை செல்ல விரும்பவில்லை என்று கேட்டபோது, இப்போது மீண்டும் இலங்கையில் ஆட்சிக்குவந்துள்ள அரசின்கீழ் ஜனநாயக உரிமையோடு வாழ முடியாது என்று குறிப்பிட்ட அவர், தாங்கள் விட்டு வந்த காணிகள் பலவற்றில் சிங்கள குடியேற்றம் நடந்துள்ளதாகவும், எனவே திரும்பிச் சென்றாலும் சிலருக்கு மட்டுமே அவர்களின் இடம் கிடைக்கும் என்றும் கூறினார். அத்துடன் வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி ஆகியவை இலங்கையில் அதிகம் என்று கூறிய அவர் தற்போது இந்தியாவில் வெங்காயம் விலை ரூ.100 எனில், இலங்கையில் அது ரூ.400 ஆக இருக்கும். என்றும் குறிப்பிட்டார். இலங்கைக்கு திரும்பிச் சென்ற தமது சகோதரி அதுபற்றி வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-50718976
  • தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்