தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.
இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
பொதுவாக, தொலைபேசி வாங்கும்போது டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், ஸ்பீக்கர், மெமரி கார்டு, ஹெட்செட் போன்ற பொருட்கள்தான் இலவசமாக வழங்குவது வழக்கம்.
ஆனால், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற தொலைபேசி கடைக்காரரின் இந்த வித்தியாசமான அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
https://www.virakesari.lk/article/70693
நேரம்: 19:00 (IST) 13:30(GMT) December 08, 2019டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ்பவுலிங் தேர்வுவானிலை: க்ளியர்ஆட்ட நாயகன்: லென்டில் சிம்மன்ஸ்தொடரின் நிலை: 3 டீ20ஐ தொடர் லெவல் 1-1முடிவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றதுஅதிகாரிகள்: நடுவர்: அனில் குமார் சவுத்ரி, செட்டிதோடி ஷாம்ஷூதின், நிதின் நரேந்திர மேனன் | ரெஃப்ரி: டேவிட் பூன்
https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-t20i-thiruvananthapuram-inwi12082019190935
மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா!
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது.
தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது.
இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் ரோகிர் சர்மா 15 ஓட்டத்தையும், கே.எல்.ராகுல் 11 ஓட்டத்தையும், சிவம் டூப் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டத்தையும், விராட் கோலி 19 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் அய்யர் 10 ஓட்டத்தையும், ஜடேஜா 9 ஓட்டத்தையும், வொஷிங்டன் சுந்தர் டக்கவுட்டுடனும், ஆட்டமிழக்க ரிஷாத் பந்த் 33 ஓட்டத்துடனும், தீபக் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஹேடன் வால்ஷ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல் மற்றும் கரி பியர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
https://www.virakesari.lk/article/70692