-
Tell a friend
-
Topics
-
1
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By வாத்தியார் · Posted
நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ? By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை: ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது. ஹர்ஷல் பட்டேல் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிதிஷ் ராணா ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் சஹார் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும். Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html?ref_medium=Desktop&ref_source=MK-TA&ref_campaign=Similar-Topic-Slider -
By உடையார் · பதியப்பட்டது
தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன் 86 Views “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும். இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல. தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை. உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றார் https://www.ilakku.org/?p=47301 -
நன்றி பகிர்வுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு
-
By உடையார் · பதியப்பட்டது
தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புதுவருட வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=47311 -
வெளிநாடு, பணம் இருக்கிறது, என்று சொல்லி இவற்றை (கை விசேடம் ..) கைவிடாதீர்கள். ஈழத்தமிழரின் தேசத்தின் முக்கிய அடையாளம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.