Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

 

என்ன

மாடியிலிருந்து பாய்வதற்கான ஊக்குவிப்பா....... :( .

நடக்கட்டும்

நடக்கட்டும்

இணையவனும் பச்சை  போட்டுள்ளார்

திகைத்துப்போனேன் :(

Link to post
Share on other sites
 • Replies 239
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் உறவுகள் யாயினி, இசை, நிலா அக்கா, விசுகு அண்ணா, இணையவன், அலை ஆகியோருக்கு நன்றி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகுதி 14

வசந்தி ஒரு ஓட்டோ பிடித்து கணவனுடன் மிகச் சாதாரண தங்குவிடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கள் பொருட்களை அங்கு வைத்துவிட்டு, தன் நகைகள் கடவுச் சீட்டு என்பவற்றை கைப்பையில் வைத்துக்கொண்டு வசந்தனைப் பார்த்து வாங்கோ என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே செல்ல வசந்தனும் ஒன்றுமே கூறாமல் பின்னால் சென்றான். நல்ல காலம் நகைகளை தன்னுடனேயே கொண்டு திரிந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அல்லது அதையும் ராம் எடுத்திருப்பான். வசந்தி கணவனையும் கூட்டிக்கொண்டு  நகைக் கடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவளிடமிருந்த நகைகளை விற்றாள். எல்லாமாக இருபத்தையாயிரம் தான் வந்தது. கொடியை மட்டும் கழற்றவில்லை. இங்கிருந்தால் ராம் யாரையும் விட்டு ஏதும் செய்யப் பார்ப்பான். அதனால் கணவனைக் கூட்டிக்கொண்டு பம்பாய் போவதே அவளது திட்டம். ஏனெனில் அவள் ஏஜெசியுடன் கதைத்தபோது அவர்களும் பம்பாயில் இருந்தே ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் எனக் கூறியிருந்தது நினைவில் நின்றது. மீண்டும் அவர்களிடம் சென்று தன் நிலைமையைச் சொல்லி பம்பாயில போய் யாரைச் சந்திக்க வேணும் என்று சொன்னால் நாங்கள் சந்திக்கிறம் என்றவளை மறுக்க மனமின்றி  விலாசத்தை எழுதிக் குடுத்தார் அவர்.

வெளியே வந்ததும் நீ என்ன உன்ர பாட்டுக்கு முடிவெடுக்கிறாய் என்னை ஒன்றும் கேட்காமல் என்ற வசந்தனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஆம்பிளையைக் கலியாணம் கட்டுறது அவன் தன்னை வச்சு வடிவாப் பாப்பான் என்றுதான். நான் நீங்கள் ஆண்  என்று நம்பித்தான் உங்களைக் காதலிச்சு ஏமாந்து போனன். படுக்கையில மனைவியைத் திருப்திப்படுத்தினால் மட்டும் ஒருத்தன் ஆண் ஆகமாட்டான். பெண்சாதிக்கு மற்றவையால கஷ்டம் வரேக்க, ஆபத்து வரேக்க எதிரித்து நிக்கிறவன், காப்பாத்திறவன்தான்  உண்மையான ஆம்பிளை. நான் நல்ல அம்மா அப்பாவாலை வளர்க்கப்பட்டதால என்னால இப்பவும் உங்களை விட்டுவிட்டுப் போக முடியேல்லை. எனக்குப் பிறகு இரண்டு தங்கச்சியள் இருக்கினம். உங்கடை ஆட்களே என்னைப்பற்றி கூடாமல் கதைச்சு அவையளின்ர வாழ்வையும் நாசமாக்கிப் போடுவினம். அதாலைதான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறன் என்றாள். வசந்தன் மூச்சுக் காட்டவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனைப் பார்த்தவள், வசந்த் எனக்கு இப்பவும் உங்களில நிறைய அன்பு இருக்கு. நீங்கள் நான் சொல்லுறதை கேட்டீங்கள் எண்டால் காணும். எனக்கு உங்களில இல்லாத அக்கறையோ மற்றவைக்கு வரப்போகுது. உங்கட அத்தானாக  இருக்கலாம். அதுக்காக அவருக்கு ஏன் நீங்களோ நானோ பயப்பிடவேணும். பாக்கப்போனால் அவர்தான் எனக்குச் செய்ததுக்குப் பயப்பிட்டிருக்க வேணும் என்று கூறி அவனருகில் சென்று நெருங்கி அமர்ந்து கொண்டாள். சரி வசந்தி நான் இனிமேல் நீர் சொல்லுறபடியே கேட்கிறன். இப்பவே வெளிக்கிடுறமோ பம்பாய்க்கு என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.  

வசந்திக்கு மனம் நின்மதியாகிப் போனது. இவன் அடிப்படையில் நல்லவன்தான். என்ன செய்வது பெற்றோரும் சகோதரிகளும் இவனை வெருட்டி வைத்தபடியால் அவன் அவர்கள் சொல்கேட்டு ஆடுகிறான். நான் இவனைத் திருத்திவிடுவன் என மனதில் நினைத்துக்கொண்டு வெளிக்கிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள். அத்தோடு மனதில் தன் துணிவைத் தனக்குள் மெச்சியபடி ஒன்றும் தெரியாத இடத்தில் வந்து நானும் பயந்தவளாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என எண்ணிக்கொண்டாள்.மூன்றாம்நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். ஏஜென்சி கொடுத்த விலாசத்தை வைத்துக்கொண்டு அங்கு சென்றால் பலர் வெளிநாடு போக காவல் இருந்தனர். மிகக் குறுகிய ஒரு அறையில் எந்த அடிப்படை வசதிகளுமற்று அறை இருந்தது. என்ன செய்வது காசும் மட்டுமட்டாக இருக்கு, எல்லாம் சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணிகொண்டு காலம் கழித்தாள்.

இங்கும் ஏஜென்சி நாற்பதாயிரம் இருந்தால் இருவரையும் அனுப்பலாம் என்றார். தேவன் என்ற பெயர் கொண்ட அவர் இவளுடன் வாஞ்சையுடன் கதைத்தார். உங்களுக்கு பணக் கஸ்ரம் என்றால் நான் ஒரு சூட்கேஸ் தருவன். அதை நீங்கள் நான் சொல்லுற இடத்தில குடுத்தால் நான் உங்களுக்கும் டிக்கட் போட்டு அனுப்பிவிடுறன் என்றுவிட்டு இவள் என்ன கூறுவாளோ என்று இவளைப் பார்த்தார். இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன சூட்கேஸ் அண்ணை  என்றாள். அதொன்றும் நீங்கள் கேட்கக் கூடாது சொல்லுற இடத்தில குடுத்தால் சரி என்றார். வசந்தன் இவள் காதில் உது கடத்தல் சாமான் என்றதும் இவள் அதிர்ந்துபோய், அண்ணை நான் உப்பிடியான வேலை செய்ய மாட்டன். உப்பிடிச் செய்யிறதிலும் பாக்க இங்க கிடந்தது சாவேனே தவிர என்னால முடியாதண்ணை என்று கூறிக்கொண்டு எழுந்தாள். அவர் உடனே தங்கச்சி கொஞ்சம் பொறுங்கோ. வெளிநாடு போறதுக்கு என்னண்டாலும் செய்வினம். நீங்கள் செத்தாலும் சாவேனே தவிர உப்பிடிச் செய்ய மாட்டன் என்று சொன்னது என்ர நெஞ்சைத் தொட்டுவிட்டுது. நான் உங்கட நேர்மையை மதிக்கிறன். உங்களிட்டைக் கிடக்கிற காசைத் தாங்கோ. உங்களை யேர்மனிக்கு அனுப்புறன். அங்க போய் செட்டிலான உடன என்ர காசைத் தந்தால்  சரி என்றார். வசந்திக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இப்பிடிக் கூட ஆட்கள் இருக்கினமா?? நான் கும்பிடுற முருகன்தான் எனக்கு இந்த வழியைக் காட்டிக்கிடக்கு என்று மனதுள் முருகனுக்கும் நன்றி சொன்னாள். பின் தேவன் அண்ணை உங்கடை உதவியை நான் வாழ்க்கை பூரா மறக்க மாட்டன் என்று மனமாரக் கூறிவிட்டு, நெஞ்சு நிறைந்த மகிழ்வோடு அறைக்குச் சென்றனர். வசந்தனுக்குக் கூட நம்ப முடியாமல்த்தான் இருந்தது. தன் மனைவியில் அவனுக்கு மரியாதை கூடியது. நானெண்டா என்ன செய்திருப்பன் என யோசித்தவன், மேற்கொண்டு எதையும் எண்ணாமல் அவளுடன் நடந்தான்.

தொடரும்.........      

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் சுடு பிடிக்கத் தொடங்கி இருக்குது :lol:  தொடருங்கள் சுமோ

 

Link to post
Share on other sites

இந்த வசந்தனை எப்படித் தான் உங்கள் நண்பி காதலித்தாவோ தெரியாது, தொடருங்கள் வாசிக்க ஆவல் சுமே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே! 

 

இறுதிப் பாகங்களை, வாசித்தபிறகு எல்லாமே தெளிவாகப் புரிகின்றது!

 

உங்கள் தோழி ஒரு ' Split Personality'.

 

வசந்தன் ஒரு நரி!

 

தொடருங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் சுமே.....

 

Link to post
Share on other sites

ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த ரதி, அலைமகள், புங்கை, வந்தி, இசை ஆகியோருக்கு நன்றி.

 ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

 

உங்கள் அற்ப ஆசையை ஏன் கெடுப்பான். நீங்கள் அப்பிடியே நினைச்சுக்கொண்டு இருங்கோ இசை :lol:

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகுதி 15

தேவன் அண்ணை சொன்னபடியே இருவருக்கும் டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டார். இவர்கள் போய் பேர்லினில் இறங்கிய உடனேயே அங்கும் இவர்களுக்கு உதவ ஒருவரை ஒழுங்குசெய்திருந்தார். அந்தப் பையன் விமான நிலையத்தில் இவர்களுக்காகக் காத்திருந்தான். இவர்களைப் புகையிரத நிலையத்துக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து மேற்கு யேர்மனிக்குச் செல்லும் புகைவண்டியில் ஏற்றி கையில் 100 ஜேர்மன் மாக்குகளும் கொடுத்துவிட்டார். வசந்தி மீண்டும் அந்த முருகனுக்கே நன்றி கூறினாள். கடவுள் தான் எனக்கு தேவன் அண்ணையைக் காட்டியிருக்கு என்று.

ஒருவாறு யேர்மனியுடன் பொருந்தியாயிற்று. இரண்டு மாதங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு அகதியாகியும் விட்டனர். உதவித்தொகையும் வரத் தொடங்க மனம் கொஞ்சம் நின்மதியானது. இத்தனை நாளும் அகதி முகாமில் ஒரு அறை. அவர்கள் தரும் உணவு. சிறைச்சாலை போல் நேரத்துக்கு மணியடித்தால் உணவு. வேறு எங்கும் செல்லவும் முடியாது. மற்றவர்களுடன் அரட்டை இப்படியே போன பொழுது, இப்ப மாறி இவர்கள் எங்கும் சென்று இருக்கலாம் என கூறியபடியால், அகதிமுகாமில் பழக்கமான இன்னுமொரு குடும்பத்துடன் சேர்ந்து தனியே வசிக்க முடிந்தது.

வசந்தன் ஒருவாறு வேலை தேடி ஒரு சீன உணவகத்தில் தட்டுக்கள் கழுவும் வேலை எடுத்துவிட்டான். எக்கவுண்ட்ஸ் படித்துவிட்டு இந்தவேலை செய்வது அவமானமாக உணர்ந்தாலும், யேர்மனியில் துவேசம் காரணமாக அதுகும் கருப்பு நிறத்தவற்கு நல்ல வேலை கிடைப்பது கடினம். எனவே கிடைத்ததை விடாது பகுதிநேரத்தில் யேர்மன் மொழியையும் இருவரும் கற்று, வசந்தியும் ஒரு தொழிற்சாலையில் வேலை எடுத்துவிட்டாள். முதல் சம்பளம் வந்த உடனேயே ஒரு கணிசமான தொகையை இவளிடம் சொல்லாமல் தன் வீட்டுக்கு அனுப்பினான் வசந்தன். ஒரு வாரம் கழிய பணம் அனுப்பிய விபரம் வசந்திக்குத் தெரியவர நீங்கள் திருந்திவிட்டியள் என்று நினைத்தேன் என்றால் மனத்தாக்கலுடன் வசந்தனைப் பார்த்து. என்ர அம்மா அப்பாக்கு நான் ஒரு ஆண்பிள்ளைதான் காசு அனுப்புறது என்ற கடமை என்றான் அவன். உங்கட கடமைதான் அதுக்காக எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். சரி அப்பா விடும். இதுகும் உம்மட குடும்பம் தானே என்று சடைந்துவிட்டு அவன் போய் விட்டான்.

இன்னும் ஒரு மாதத்தில் வசந்தனின் தமக்கையும் கணவரும் வெளிநாடு வந்து இவர்கள் இருக்கும் நகரத்திற்கே வந்தார்கள். வசந்தன் தான் இங்கு வரச் சொல்லி இருப்பான் என்று இவளுக்குப் புரிந்தது. இவள் நினைத்ததுபோலவே இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தவனை கோபப் பார்வை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாது வசந்தி எதுவும் நடக்காததுபோல் வாங்கோ என வரவேற்றாள். எங்கு வந்தாலும் சிலர் மாற மாட்டார்கள். அவர்கள் இருவரும் வசந்தனிடம் விழுந்துவிழுந்து காதைத்துவிட்டு  இவளிடம் ஏனோ தானோ எனக் கதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களுக்கு இரு சிறிய பிள்ளைகள் இருந்ததால் அரசாங்கம் அவர்களுக்கு இரு படுக்கை அறையுடன் கூடிய வீட்டு வசதிசெய்து கொடுத்தது. ஒரு வாரத்தின் பின் நாங்கள் அக்கா ஆட்களுடன் போய் இருப்பம் என்றான் வசந்தன். பாம்புப் புற்றுக்குள் கையை விட வசந்தி தயாராக இல்லை. நான் வரமாட்டன் அங்கே என வசந்தி மறுத்தும், அவனோ விடாப்பிடியாக நின்றதனால் வேறு வழியின்றி அவனின் பின்னே வசந்தி போகும்படியாயிற்று. அங்கு சென்றபின் வசந்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான். எதோ மூன்றாம் ஆள்போல் வசந்தியை அவர்கள் நடத்தியதை பார்வையானனாய் பார்த்துக்கொண்டிருந்தானே அன்றி மனைவி என்று அவள்மேல் இரக்கப்படவில்லை. காலையில் பல்விளக்குவது கூடப் பச்சைத் தண்ணீரில்தான். சுடுநீர் கொதிக்கும் தாங்கியை தமக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தான் போடுவாள். அதற்குமுன் யார் தண்ணீரைப் பயன்படுத்தினாலும் குளிர் நீர்தான். வசந்திக்கு வரும் கோபத்தில் கணவனிடம் கத்தியும் எதுகும் அவன் காதில் ஏறவே இல்லை. சமையல் விடயம் கூட அவர்களின் விருப்பப்படிதான். இவள் இன்று நாங்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து சமைப்பமோ என்றாலும் அக்காவுக்குப் பிடிக்காது என்பான். இவளுடன் வெளியே போவதோ சந்தோசமாக இருந்து கதைப்பதோ கூட தமக்கையின்அனுமதியோடுதான். வசந்திக்கு அவனை அங்கிருந்து எப்பிடியாவது கிளப்பிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று எழும்பவே அவளுக்கு தலை சுற்றுவது போல இருக்க வேலைக்குப் போகாது படுத்தே கிடந்தாள். மாலை முழுவதும் கூட எழும்ப முடியவில்லை. அடுத்தநாள் வசந்தனே இவளை வைத்தியரிடம் அழைத்துக்கொண்டு போனான். இவள் கற்பமாக உள்ளதாகவும் இன்னும் நான்கு வாரத்தில் மறுபடியும் வரும்படியும் கூறி இவள் வீக்காக இருப்பதால் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். இவளுக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வசந்தனின் முகத்தில் பெரிதாக மலர்வைக் காணவில்லை. இவள் இனி வேலையை விடட்டோ  என்றதற்கு பொறு அக்காவைக் கேட்பம் என்றான். நான் வேலையை விடுறதுக்கு எதுக்கு உங்கள் அக்காவைக் கேட்க வேண்டும் என கேட்டவள் எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுது. இனி எண்டாலும் திருந்துங்கோ என்றால் அழுகையுடன். நான் என்ன திருந்தக் கிடக்கு. அக்கா இரண்டு குழந்தை பெத்தவ. அதனாலதான் சொன்னேன் என்று இவள் வாயை அடைத்தான்.

தமக்கையிடம் கூறியபோதும் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாது அப்பிடியே என்றுவிட்டு எழு மாதம் வரையும் வேலை செய்யலாம். அதுக்குப் பிறகு லீவு தருவாங்கள். வேலை செய்தால்தான் சுகமாக குழந்தை பிறக்கும் என்றாள் தமக்கை. வசந்திக்கு குழந்தை சுகமாகப் பிறந்தால் சரி என்ற எண்ணம். அவளுக்கு முடியாமல் இருக்கும்.ஆனாலும் குழந்தைக் கனவுடனே வேலைக்குப் போனதால் கனவு பொய்யாகி கரு பன்னிரண்டாவது  வாரமே கலைந்தது. இரு வாரங்கள் வைத்திய சாலையில் இருந்தவள், வீட்டுக்கு வந்தும் கவனிப்பாரற்று கணவனின் கருணை இல்லாது ஆறுதல் வார்த்தை இல்லாது, தாய்க்கு தன் உள்ளக் கிடக்கையை எல்லாம் மடலாக வடித்துப் போட்டாள். தாய் வழமைபோல் உவர்களோடு இருக்காதை. உவர்கள் உன்னைச் சாக்காட்டிப் போடுவினம் என்று எழுத இவளுக்கு தாயின்மேல் வெறுப்புத்தான் வந்தது. வீட்டில் இருந்தால் உதை  நினைத்து நினைத்து நோய்தான் எற்படும் என எண்ணியவளாய் மீண்டும் வேலைக்குப் போக ஆயத்தமானாள். சும்மா ஒரு பேச்சுக்குத் தன்னும் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போ என வசந்தன் கூறவே இல்லை.

சரி இத்தனை நாளில் அவரின் குணம் தெரிந்ததுதான். என்ன எண்ணியும் பயனில்லை என எண்ணிக்கொண்டு தன்பாட்டில் இருந்தாள். வசந்தன் இப்பவெல்லாம் இவளிடம் வரும்போது பாதுகாப்பு உறையுடனே வந்தான். ஏன் எனக் காரணம் கேட்டதுக்கு திரும்ப உடன பிள்ளை உண்டாகிவிட்டால் உமக்குத்தான் கூடாது என  அவன் கூறியதை நம்பி நான்கு மாதங்கள் அவளும் பேசாமல் இருந்தாள். அதன் பின் அவனின் சொல்லைக் கேட்காது வசந்தி பிடிவாதம் பிடித்ததில் மீண்டும் வசந்தி கருத்தரித்தாள். இம்முறை இவர்களைக் கேட்காமல் அவளே வேலையை விட்டு நின்றது வசந்தனுக்கும் தமக்கைக்கும் கடுப்பாகியது.

இவள் தாயிடம் பொதுத் தொலைபேசி இருக்கும் இடத்துக்கு வரும்படி கூறி தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். எதுக்கும் கவனமா இரு என்றுவிட்டு தாய் போனை வைத்தார். இம்முறை வசந்தன் இவளுடன் கற்பம் பற்றி அக்கறையாகக் கேட்டது இவளை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. பத்தாததுக்கு பிள்ளைக்கு நல்லது என்று கூறி ஒரு கப்சுலும் கொண்டுவந்து கொடுத்தான். ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுக்கிறதாம். எனது உணவு விடுதியில் வேலை செய்யும் ஒரு சப்பட்டை கொண்டுவந்தது என்றான். இவளுக்கு தன்  கணவனுக்கு தன்மேல் அக்கறை இருக்கிறது.  நான்தான் எப்போதும் அவரைப்பற்றி தவறாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என எண்ணிணாள்.
 
ஒரு வாரம் செல்ல அவளுக்கு அடி வயிறு சுண்டி இழுப்பதுபோல் இருக்க,  வீட்டில் இருந்தவள் தனியாக வைத்தியரிடம் சென்று தன நிலைமையை எடுத்துக் கூறினாள். வேலை செய்கிறாயா இப்பொழுதும் என்று கேட்டவர் அவள் இல்லை என்றதும் இவளைப் பரிசோதித்துவிட்டு நான் தந்த மருந்துகளை ஒழுங்காக உண்கிறாயா என்று கேட்டார். அவள் மருந்துகளை தன் கைப்பையுள் வைத்திருப்பதால் இந்த மருந்துகள் தானே என எடுத்துக் காட்டினாள். அவள் எடுத்து வைத்த மருந்துகளோடு வசந்தன் கொடுத்த மருந்தும் இருந்தது. இது நான் தரவில்லையே என்று கூறியவர், இதுவும் உண்கிறாயா என கேட்க இவள் ஆம் எனத் தலையாட்டினாள். அதை எடுத்து வடிவாக வாசித்துவிட்டு கணனியில் தட்டி அதன் விபரம் பார்த்தார். என்னைக் கேட்காமல் கண்ட மருந்துகளையும் உன்னை யார் உண்ணச் சொன்னது. இது கற்பம் கலைக்கும் மருந்து என்று கூறி இவளை உறைய வைத்தார். இவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. காதுகள் இரண்டும் அடைத்து மண்டை பிளந்துவிடுவதுபோல் வந்து கதிரையிலே மயங்கிச் சரிந்தாள்.


தொடரும்...........

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

Link to post
Share on other sites

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், ரதி, விசுகு அண்ணா, இசை ஆகியோருக்கு நன்றி.

 

Link to post
Share on other sites

தூ.................. வசந்தனும் ஒரு ஆளா. கேடு கெட்ட மனிதப் பிறவி! தொடருங்கள் சுமே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

நீங்களும் சிலை வைக்க மாட்டியள். யாரும் வச்சாலும் விட மாட்டியள். அப்ப நாங்கள் என்னதான் செய்யிறது ரதி. :D  ஏற்கனவே செத்த பாம்பை நீங்கள் அடித்து என்ன பயன்.

 

 

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

 

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

கதையில் ஒரு பக்கம் அதி வேகத்தில்  சாய்வது தெரிகிறது

இது கள கண்மணிகளின் எதிர்பார்ப்புக்காகவா என்று கேட்டேன் :D

 

(தேவன் எனது ஊரைச்சேர்ந்தவர்..??)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிய கதையை விரைவில் முடித்து விடவேண்டும் என்று ஓடுறீங்கள் புரிகிறது..ஏற்கவே குறுகியகதையாக முடிக்க விட்டு இருக்கலாம் போல இருக்கு....ச்சே... :wub:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையில்

 

ஆண்கள்(வசந்தன்) பற்றி  ஒரு முகம் காட்டப்டபடுகிறது.

அது எம்மில் பலருக்கு ஒருவித எரிச்சலையும் ஆத்திரத்ததையும் தருகிறது.

ஆனால் உண்மையில் பல ஆண்கள்  ஏறக்குறைய முழு ஆண்களுமே  அவரது குடும்பத்துக்கும் மனைவியின் குடும்பத்துக்கும்  தனது குடும்பத்துக்கும் இடையே ஆன பிணைப்பை உருவாக்க அந்த பாலத்தைப் போட பல தியாகங்களைச்செய்யவேண்டியுள்ளது.  பெரும் பொறுமையைக்கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஊரில் சொல்வார்கள்

எதையும் உடைப்பது சில செக்கன் வேலை

ஆனால் மீண்டும் ஒட்டுவது....................??? :(

Link to post
Share on other sites

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

உங்கள் நட்பு வட்டாரங்கள் எனக்குப் பரீட்சயம் ஆகாதவரை சேதாரம் குறைவாகத்தான் இருக்கும்.. :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசந்தியின் கதை, நெஞ்சை உருக்குகின்றது!

 

வசந்தன் போன்றவர்கள் பிறக்கும் போதே, பொறுப்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட படியே பிறக்கின்றார்கள் என்பது உண்மையே எனினும், வசந்தனின் அக்காவினது நிலைக்கும், வசந்தனின் நிலைக்கும் பொருளாதார ரீதியில் அதிக வேறுபாடுகள் இல்லை. சொல்லப் போனால், அக்கா வசதியாக இருக்கின்றார். ஆனால் பொறுப்பு  என்று வரும்போது, அக்காவும், வசந்தனுடன் சேர்ந்து அதைப் பகிர்ந்து கொள்ளவதில்லை. முழுப் பொறுப்புக்களும், நேரடியாக வசந்தன் மீதும், மறைமுகமாக வசந்தியின் மீதும் சுமத்தப்படுவதே, எமது கேடுகெட்ட சமுதாய அமைப்பாகும். அதற்குப் பலியாவது வசந்தி என்னும், எதிலும் நல்லதையே காணத் துடிக்கும் ஒரு அப்பாவி!

 

சுமே, கதையை நகர்த்தும் விதம், வாசகர்களை 'எரிபற்று நிலைக்குக்' கொண்டு செல்கின்றது! :D

Link to post
Share on other sites

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

 

அதனால்தான் நான் இப்போ

திரவநிலைக்குள் உள்ளேன்  ஐயா........ :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

யாயினி, கொஞ்சம் இழுத்துப் பிடித்து நன்றாக எழுத முயல்கிறேன்.

அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :rolleyes:

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ரம்மியமான ரமலானே வருக, வருக!!     இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது - (2:185). திருக்குர்ஆன் இறங்கியமாதமென்றால் அது எத்தகைய மகத்துவமிக்க மாதமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! இம்மாத மாண்பைப் பற்றி அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறவுரைகளில் ஒன்றை ஆய்வோம். “ரமலான் மாத ஆரம்ப இரவு தோன்றிவிட்டாலே, ஷைத்தான்களும் மூர்க்கஜின்களும் சிறையிடப்பட்டு விடுகின்றனர். நரகவாயில் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. மேலும் சொர்க்க வாயிற்படிகள் திறக்கப்படுகின்றன; அவற்றிலொன்றும் அடைக்கப்படுவதில்லை, பின்னர் வானவர்கள் (மானிடனை நோக்கி) அறைகூவிஅழைக்கின்றனர்: நன்மையைத் தேடுபவனே! (நன்மை செய்வதில்) முன்னேறிச்செல்! துர்க்கிரியை புரிபவனே! (இன்றிலிருந்து பாபமேதும் செய்யாமல்) உன்னை நீ நரக நெருப்பிலிருந்து விடுதலைப் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் அழைக்கப்படுகிறது.” (திர்மதி). புனித ரமலான் மாத மகத்துவத்துக்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும். நோன்பின் மாண்பு ரமலான் மாதத்தை அடையப் பெறும்முஸ்லிம்களை நோக்கி இறைவன் ஆணையிடுகிறான் இவ்வாறு: ‘‘ஆகவே உங்களின் எவன் அம்மாதத்தை அடைகிறோரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்’’ - (2:185). ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிடும் இறைவன் அதைவலியுறுத்தி, ‘‘(எத்தகைய காரணங்களும் காட்டி நீங்கள் தப்பிக்க முயலாமல்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (இந்தஉண்மையை) நீங்கள் அறிவுடையோர் களாயிருந்தால் (புரிந்துகொள்வீர்கள்) (2:184) என்று கூறியிருக்கிறான். இறைவனின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மொழிந்த வாக்கியங்களில் சிலவற்றை காண்போம். ஹலரத்அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதன் புரியும் நற்கிரியைக்காக பத்திலிருந்து 700 வரை இரட்டிப்பாக நற்கூலி கிடைக்கிறது; ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர, ஏனெனில் அதுஎனக்கே சொந்தம்; அதற்கு நானாகவே கூலி கொடுப்பேன். காரணம் (நோன்பு நோற்கும்) அவன் எனக்காகவே தன் மனைவியோடு புணர்வதை; உண்பதை விட்டிருக்கிறான் என்றும் நோன்பு நோற்பவர்களுக்கு இரு (முறை) மகிழ்ச்சிகள்(அடையும் வாய்ப்பு) இருக்கின்றன. 1-வது நோன்பு திறக்கும்போதும், 2-வதுமறுமையில் தனது இறைவனை தரிசிக்கும்போதும் தோன்றும் மகிழ்ச்சிகளாகும். நோன்பு (உலகில் பாபங்களையும், நோய்களையும், ஷைத்தானிய எதிர்ப்புகளையும், மறுமையில் நரகவேதனையையும் தடுக்கக்கூடிய) கேடயமாக திகழ்கிறது!” என்று இறைவனின் தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்). நோன்பின் நோக்கம் ‘‘விசுவாசிகளே! நீங்கள் பரிசுத்தவான்களாக வேண்டியே முந்தைய (சமூகத்த)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைவன் நோன்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான் தன் வேதத்திலே. ‘தராவீஹ்’ தொழுகை ரமலான் மாத பகல் காலங்களில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருப்பதைப் போன்றே ரமலான்மாத இரவுகளில் நின்று வணங்கும்படி எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்திருக்கிறார்கள். ரமலான் மாதம் இரவில்தொழ வேண்டிய தொழுகைக்குத்தான் ‘தராவீஹ்’ எனப்படும். இறைவனுக்காக பசித்திருந்து அவன் அருளுக்கு உரியவனாகும் முஸ்லிம் இரவில் விழித்திருந்து அவன் அருளையும் அனுக்கிரகத்தையும் பாபமன்னிப்பையும் பெறலாம் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முஸ்லிமாக இருக்க விரும்புபவன், மறதியாலோ, லோக மாய்கையில் மூழ்கியோ மார்க்கத்தை மறந்துபாபங்கள் இழைத்துவிடினும் உடனடியாக அதற்கான பரிகாரத்தை தேடி அலைவான். பரிகாரத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை துரிதமாக பயன்படுத்திக் கொள்வான். அதன்பின்னர், தன்னை அவன் தூய்மைப்படுத்திக் கொள்வான். எனவே நாம் ரமலானை வரவேற்போம். ரஹமத்தை என்றும் பெறுவோம். வருக ரமலானே வருக!! கட்டுரையாளர்: ‘ரஹ்மத்’ ஆசிரியர், தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை. https://www.hindutamil.in/news/tamilnadu/658823-ramzan-month-3.html    
  • அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்    10 Views தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக  கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து,  இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம். எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள்,  இறுதியாக சிங்களபொதுமக்கள் அவர்கள்  எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் . பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம். இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே”என்றனர்.       https://www.ilakku.org/?p=47321
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை     இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 14,  2021 16:56 PM புதுடெல்லி:  கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.   அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், அவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் இன்னும் அதிகமாகி  போர் ஏற்படும் சூழல் ஏற்படும். இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது. இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, உளவுத்துறை சமூகம் சீனாவை "ஒரு நெருக்கமான போட்டியாளராகக் கண்டது, பல அரங்கங்களில் அமெரிக்காவை சவால் விடுத்தது. ரஷ்யா  உலகளவில் அமெரிக்காவுக்கு எதிராக தந்து சக்தியைப் பயன்படுத்துவது உட்பட நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஈரான் ஒரு பரந்த பிராந்திய செல்வாக்கு நடவடிக்கைகளுடன் "பிராந்திய அச்சுறுத்தல்" என்று விவரிக்கப்பட்டது; மற்றும் வட கொரியா ஒரு "பிராந்திய மற்றும் உலக நிலைகளில் சீர்குலைக்கும் நிலையில் உள்ளது. சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின்  விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/14165621/Crises-Between-India-Pak-Likely-To-Intensify-US-Intelligence.vpf
  • நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ? By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை:   ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.   ஹர்ஷல் பட்டேல்   பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   நிதிஷ் ராணா   ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.   சஞ்சு சாம்சன்     கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.   ராகுல்  சஹார்   கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர்.   அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும். Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html?ref_medium=Desktop&ref_source=MK-TA&ref_campaign=Similar-Topic-Slider
  • தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்  86 Views “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும். இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல. தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை. உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றார்       https://www.ilakku.org/?p=47301
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.