• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
மெசொபொத்தேமியா சுமேரியர்

வசந்தம் தொலைந்த வாழ்வு

Recommended Posts

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

 

ம்ம்ம்!

 

அனுபவங்களின் 'தொகுப்புரை' தானே வாழ்க்கை! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஒரு பக்க கதை கேட்டு இப்படி முடிவெடுக்க கூடாது! வசந்தனின் பக்கம் சுமேக்கு தெரியாது . சுமேயின் நண்பியின் பக்கம் தானே . இந்த கதையில் சித்தரிகபடுகின்ற வசந்தனை மாதிரி கெட்ட ஆட்களை பார்த்திருக்கின்றேன். ஆனா வசந்தி மாதிரி நல்ல பெண் இந்த உலகத்தில் இருக்கும் என்று நம்பவில்லை.

 

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கூறுவது சரிதான் காளான். வசந்தனுடன் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தாலும் வசந்தி சொன்னதை வைத்தே அவரைப் பார்த்ததால் அதை மட்டும் தான் என்னால் எழுத முடியும். நிட்சயமாக அவருக்கும் ஒன்று இருக்கும். நான் வசந்தியின் நண்பி என்பதனால் அவர் என்னிடம் மனம்திறந்து எதையும் கூற மாட்டார். இக்கதை எழுதி முடிய இதுபற்றி தனியாகக் கதைப்போம். நன்றி.

 

மன்னிக்கவும். இதுக்குபோய் என்னோட  தனியப்  பேசி h24069.gif

:lol:

Share this post


Link to post
Share on other sites

இக்கதையை எழுதிய பின்னர் திரியில் இவ்விடயம் தொடர்பாக கதைப்போம் என்றேனே தவிர உங்களுடன் தனிப்பட இல்லை. நல்ல ஆள்தான் போங்கள் :lol: :lol:

 

Share this post


Link to post
Share on other sites

பகுதி 16

வசந்தி கண்விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் கற்பம் கலைந்துவிட்டது. அதிர்ச்சி ஏற்படாவிட்டாலும் கலைந்துதான் இருக்கும். அவள் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. கணவனின் துரோகம் நினைவில் வர அழுகை ஒருபுறம்,கோபம் ஒருபுறம் வாய்விட்டு அழுதாள். வேறு என்ன தான் செய்வது. பக்கத்துக் கட்டிலில்  இருந்த ஒரு பெண் இவள் அழுவதைப் பார்த்து தாதியரை அழைக்கும் அழுத்தியை அழுத்தியவுடன் தாதி வந்து இவளை சமாதானப் படுத்தினாள். உன்கணவருக்கு அறிவித்துள்ளோம் இப்போது வருவார் என்று கூறும்போதே வசந்தன் தமக்கையுடன் உள்ளே வந்தான்.

 

வசந்திக்கு அவனைக் கண்டதும் ஆவேசம் வந்தது. இரண்டுபேரும் வெளியில போங்கோ. எனக்கு உங்களைப் பாக்க விருப்பமில்லை என்று கத்தினாள். தாதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன பிரச்சனை இப்பிடி நீ கத்துவது கூடாது என்று கூறிவிட்டு, நீங்கள் யார் என்று வசந்தனைப் பார்த்துக் கேட்டாள். நான் கணவன், இவ என் அக்கா என்றுவிட்டு வசந்தியைப் பார்த்தான். இவர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்று ஜேர்மன் மொழியில் தாதியிடம் கூறியவுடன் தாதி அவர்களை வெளியே போகும்படி கூறிவிட்டு, நீ உப்பிடிக் கத்தக்கூடாது என்று இவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள். தாதி சென்று ஐந்து நிமிடங்கள் செல்ல வசந்தன் மட்டும் தனியே உள்ளே வந்தான்.

 

அவனும் ஜேர்மன் மொழியில் நன்றாகக் கதைப்பானாகையால் தாதியிடம் என்ன கூறினானோ மீண்டும் தாதி அவனை அனுமதித்துவிட்டாள். என்னத்துக்கு வந்தனீங்கள் நான் செத்திட்டனோ  எண்டு பாக்கவோ. நான் உங்கட ஆசைக்கெல்லாம் சாகமாட்டன். வெக்கம் இல்லையே இங்க வர எண்டு பொரிந்து தள்ளினாள். வசந்தி நான் சொல்லுறதைக் கேளும். நான் வேணுமெண்டு செய்யேல்ல. அந்தச் சப்பட்டைதான் மாறி விளங்கிக் கொண்டு தந்திட்டாள். நான் வேணுமெண்டால் சத்தியம் செய்யிறன் என்று கூறி அழுவாரைப்போல் நின்றான்.

 

உங்களுக்கு என்னெண்டு தெரியும் நான் சொல்லாமல். இப்பதான் வாறீங்கள் என்று இவள் சந்தேகத்துடன் கேட்க,  உம்மை அம்புலன்சில் இங்க அனுப்பிப்போட்டு உமது வைத்தியர் எனக்கு அடிச்சுச் சொன்னவர் என்றான். இப்ப வசந்திக்கு சந்தேகம் வந்துவிட்டது. கணவன் கூறுவது சிலநேரம் உண்மையாக இருக்குமோ என. அதனால் ஒன்றும் கூறாது படுத்திருந்தாள். எனக்கு உம்மில எவ்வளவு அன்பு இருக்கு என்று உமக்குத் தெரியாது என்று கூறியவாறு கிட்ட வந்து வசந்தியின் தலையைத் தடவினான். அவனின் அருகாமை அவளின் கோபத்தைத் தணிக்க ஒன்றும் கூறாவிட்டாலும் முகம் இயல்பு நிலைக்கு வர வசந்தனுக்கு விளங்கிவிட்டது வசந்தியின் நிலை.

 

வசந்தியின் மனதில் வேறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாள் இருக்க வேணுமாம் என்று அவன் சொல்ல, நீங்கள் உடன எங்கையாவது ஒரு வீடு பாருங்கோ. நான் திரும்ப உங்கட அக்காவீட்ட வரமாட்டன். எனக்கு தனிய நின்மதியா இருக்க வேணும். அவவுக்கு நான் என்ன அடிமையே அவவின்ர விருப்பத்துக்கு இருக்கவும் சமைச்சுச் சாப்பிடவும் என  வசந்தி கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தன் இடைமறித்து அக்காக்கள் என்ன நினைப்பினம் என்றான். உங்கட அக்கா என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை.உங்களுக்கு அக்காவோடை இருக்க விருப்பம் எண்டால் போய் இருங்கோ. நான் தடுக்கவில்லை. ஆனால் நான் நீங்கள் மருந்து தந்த விஷயத்தை இங்க சொன்னன் எண்டால் நீங்கள் ஜெயில்லையும் போய் இருக்கலாம் என்றாள். வசந்தனின் முகம் இருண்டு போவதை ஒருவித சந்தோசத்துடன் பார்த்தவள், போங்கோ இங்க நிக்கிற நேரம் வீடு பாக்கிற அலுவலைப் பாருங்கோ என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துவிட்டாள். சிறிது நேரம் வசந்தன் அங்கேயே நின்றுவிட்டு போவது தெரிந்தது. மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. ஆனாலும் என்ன செய்வது. இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் வராது என எண்ணி அமைதியடைந்தாள்.

வசந்தன் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்ற பயத்திலோ என்னவோ உடனேயே வீடு தேடி எடுத்துவிட்டான். தங்கள் இருவரின் பொருட்களை எல்லாம் புதிய வீட்டுக்கு மாறிவிட்டே வசந்தியை மருத்துவமனையிலிருந்து அங்கு கூட்டிக்கொண்டு போனான். ஒரு படுக்கை அறை கொண்ட வீடுதான் என்றாலும் தானும் கணவனும் மட்டும் இருக்கப் போகிறோம் என்னும் நினைப்பே வசந்திக்கு புத்துணர்வைத் தந்தது. அதுவே அவளை மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டும் வந்தது.

வசந்தன் மறந்துபோய் தன்னும் தமக்கை ஆட்களைப் பற்றிக் கதைக்கவில்லை. கொஞ்சநாள் போக வசந்தியும் வேலைக்குப் போக வேண்டும் என எண்ணி வேலை தேடியபோது, பக்கத்து நகரில் ஒரு பெரிய நிறுவனத்தில் நிறையப்பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு விண்ணப்பித்தாள். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்ததும் வசந்தன் இவ்வளவு தூரத்துக்கு வேலைக்குப் போகப் போறீரோ என்றான். பக்கத்தில ரெயின் ஏறினால் அங்கயும் பக்கத்தில வேலை. இதில உங்களுக்கு என்ன கஸ்ரம் என்று சிரித்துவிட்டு வசந்தி கிளம்பினாள்.

அங்கு சென்றவுடன் பார்த்தால் ஒரு முப்பது நாற்பது பேராவது இருக்கும். கடவுளே எனக்கு வேலை கிடைச்சிடவேணும் என கடவுளை வேண்டியபடி காத்திருக்க உள்ளே அழைத்து அதிக கேள்விகேட்டு பதட்டப்பட வைக்காமல் ஐந்து மாதங்கள் வேலைக்கு பதிந்தனர். நன்றாக வேலை செய்பவர்களைப்பார்த்து நிரந்தரமாக்குவார்கள். அது ஒரு பிஸ்கட் மற்றும் சொக்ளற்  செய்யும் தொழிற்சாலை. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வேலை செய்கின்றனர். இரண்டு நாட்கள் செல்ல முதல் நாளாக வேலைக்குச் சென்றவளுக்கு, அங்கு இன்னும் இரண்டு தமிழ் பெண்களைக் கண்டதும் மகிழ்ச்சி பெருகியது. அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துச் சிரிக்க இவளும் சிரித்தாள். கிட்டப் போய் கதைக்கவேண்டும் போல் இருந்தாலும் இதனை பேர் நிற்கையில் போய் கதைப்பதற்க்கு ஒருமாதிரி இருந்தது.

ஆனால் அந்த இருவரில் ஒருபெண் துணிவாக இவள் அருகே வந்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நான் இங்கு ஒருநாளும் உங்களைக் காணவில்லையே என்றாள். நான் இங்கு இருப்பதில்லை பக்கத்து நகரில் இருக்கிறேன் என்றுகூறிவிட்டு நட்பாகச் சிரித்தாள். வசந்திக்கு அவளை நன்கு பிடித்துவிட்டது. தன் பெயர் நித்தியா எனக் கூறி வசந்தியின் பெயரையும் அறிந்துகொண்டாள் அவள். உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா என வசந்தி கேட்க ஏன் கேட்கிறீர்கள் வந்ததும் வராததுமா. கலியாணத் தரகர் வேலை பார்க்கிறீர்களோ எனச் சிறித்தபடியே கேட்க இல்லை எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். உங்களுக்குத திருமணம் ஆகவில்லை என்றால் அவனுக்கு உங்களைக் கட்டி வைக்கலாம் என்று உங்களைப் பார்த்தவுடனேயே என் மனதில் ஆசை தோன்றியது. அதுதான் கேட்டேன் என்று கூறிவிட்டு நித்தியாவைப் பார்த்தாள். எனக்கு இரண்டு வருடங்களின் முன்பே  திருமணம் ஆகிவிட்டது என நித்தியா கூற, இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
இப்படியாக ஆரம்பித்த அவர்கள் உறவு வசந்தி தன உள்ளக்கிடக்கையை எல்லாம் நித்தியாவுக்குக் கொட்டித்த் தீர்க்கும் அளவு நெருக்கமானது. அதற்கு இன்னொரு காரணம் அவர்கள் இருவரும் ஒரே பகுதியில் ஒருவருக்கு முன் ஒருவர் இருந்து கதைக்கக் கூடியதாக இருந்ததும் காரணம்.

நித்தியாவைச் சந்தித்ததன் பின்னர், வசந்தியின் மனச்சுமைகள் குறைந்துபோயின. வசந்தனிடம் கூட மாற்றம் தெரிவதாகப் பட்டது வசந்திக்கு. எப்படி ஐந்து மாதங்கள் ஓடிப்போனது என்று தெரியவில்லை. வசந்திக்கு ஏனோ தெரியவில்லை வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. நித்தியாவுடனான நட்பின் நெருக்கம் இப்போது அதிகரித்துவிட்டதால் வேலையை விட்டு நிற்பதிலும் நித்தியாவுடனான அந்த நேரம் இல்லாமற் போகிறதே என்ற வருத்தம் தான் வசந்திக்கு. ஆனாலும் என்ன தொலைபேசியில் கதைக்கலாம் தானே என மனதைத் தேற்றிக் கொண்டாள்  வசந்தி.

அடுத்தடுத்த வாரங்களில் நித்தியா வசந்தியின் வீட்டுக்கு வருவதாகக் கூறியதில் மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. நித்தியாவுக்கும் வசந்தி வசந்தனைப் பற்றிக் கூறியதில் இருந்து வசந்தனை ஒருமுறை பார்த்துப் பேசவேண்டும் போல் இருந்தது. தன்  கணவனையும் கூட்டிக்கொண்டு வசந்தியின் வீட்டுக்குச் சென்றால், திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.


தொடரும்................

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

Share this post


Link to post
Share on other sites

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

கதையில் சிறு திருப்பம்  வசந்தியின் வாழ்விலும் நல்ல மாற்றம் வர வேண்டும்.

கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

Share this post


Link to post
Share on other sites

 கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் இசை, நிலா அக்கா,காளான், தமிழினி, அலை ஆகிய உறவுகளே நன்றி.

 கவலைப் படாதீர்கள் அக்கா . மனைவி புருஷனை அடக்காமல் விட்டதில்லை. என்ன ?ஆயுதங்களும் அதுக்கு எடுக்கும் நேரமும் வேறுபடும். கல்யாணம் (அப்பாவி ஆண்களின்) கால்கட்டு எம் முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

:lol:

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 இவ்வளவையும் மனதில் ஒரு  மூலையில்  

இவ்வளவு காலமும் ஒருத்தருக்கும் தெரிவிக்காது  வைத்திருந்த சுமேயின் பொறுமை பெரும்  பாராட்டுக்குரியது.

தொடர்ந்து இறக்குங்கள் சுமே............... :icon_idea:

 

இந்தக் கதை என்னுடையது இல்லை என்று கூறியும் நீங்கள் நம்பவில்லை. என் குடும்பம், பெற்றோர் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் இப்படிக் கூற மாட்டீர்கள் அண்ணா.

 

 

Share this post


Link to post
Share on other sites

ம்ம்.................. தொடருங்கள் சுமே!

 

 

 

ம்ம்.............. நல்லாய் நொந்து போய் தான் இருக்கிறியள்! :lol:  :icon_idea:

ஆண் ஆணாக இருந்தால் பெண் பெண்ணாககவே இருப்பாள்!! :D

 

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

Share this post


Link to post
Share on other sites

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

Share this post


Link to post
Share on other sites

 

நீங்கள் களத்துக்குப் புதிது இல்லை என்று மட்டும் புரிகிறது. ஆனால்..... :lol: :lol:

 

 

 

சும்மா பகிடிக்கு சொன்னேன். வசந்தி மாதிரி பாதிக்கபட்ட  பெண்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

 
கதை நன்றாக போகிறது. தொடருங்கள் சுமே.  :)

Share this post


Link to post
Share on other sites

பெண் பெண்ணாக நான் இவ்வளவு நொந்து போயிருக்க மாட்டேன் இல்லையா?

:lol:

 

ஆண் ஆணாக இருக்கும்வரை பெண்ணும் பெண்ணாகவே இருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். விதிவிலக்குகளும் இருக்கும்தான். விதியை மாற்ற முடியாதுதானே.

எங்கேயோ கேட்ட  குரல்  

 

கதையை வாசிக்கும்பொழுது பலருடைய முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றன.

 

அப்படியெல்லாம் இருக்காது..... இது கதைதானே......

 

நீங்கள் தொடருங்கள் சுமேரியர். 

 

எத்தனையோ கதைகள் உலகில் ஒரேமாதிரி நடப்பதுதானே வாத்தியார்.

 

 

Share this post


Link to post
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

 

அவ தான் சுமோ :lol:
 

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

Share this post


Link to post
Share on other sites

யார் இந்த நித்யா..?! :rolleyes: சரி.. சரி.. தொடருங்கோ.. :D

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

 

Share this post


Link to post
Share on other sites

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 


 

 

Share this post


Link to post
Share on other sites

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

Share this post


Link to post
Share on other sites

 

இணையவன் பச்சையை வந்து போடுங்கோ :) இல்லாட்டி சுமோ என்னைத் திட்டித் தீர்க்கப் போறா :D

 

 

உங்களால பச்சை போச்சு :lol:

 

 

மூச்சுக்காட்டாமல் வாசிச்சிட்டு இருக்க வேணும். :lol: முதல் கதையை எழுதி முடிச்சாப்பிறகுதான் சுமேயக்காவிட்டை கேள்வி கேட்கும் நேரம் ஆரம்பமாகும். இப்ப கேள்வி நேரத்தை துவங்கினீங்களெண்டா பிறகு கதை தாமதமாகத்தான் எழுதுவா. :lol:

 

சாந்தியே இப்ப பொறுமையா இருக்கு. மற்றவைக்கு என்ன அவசரம் என்று கேட்கிறன். :lol:

 

 

"திறுநீற்றுப் பூச்சோடு சிரித்த முகத்துடன் வாங்கோ என வரவேற்ற வசந்தனைப் பார்த்ததும் வசந்தி கூறியது பொய்யோ என ஒருகணம் நித்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது."

 

வசந்தி ஏமாந்தாள், இந்த நித்தியாவும் ஏமாந்தாள்.

 

பெண்களே ஒட்டு மொத்த ஏமாளிகாளா? தொடருங்கள்......

 

 

 

 

நான் ஏமாளி இல்லை வந்தி :D

 

 

செய்த பாவத்திற்கு காலம் கடந்த பின்னராவது  சாமி கும்பிடத் தானே வேணும்..அது தான் வீபுதி பூசி சாமிய வேண்டிக்கொள்கிறராக்கும் பாவம்..விட்டுங்கோ.ஓடி ஒழிக்காமல் பிரச்சனைகளுக்கு நின்று பிடிக்கிறாரே அதற்கு நன்றி சொல்லவேணும்..மேலும் தொடருங்கள் அக்கா...

 

ஓடாமல் இருக்கிறது  தான் பிரச்சனையே :huh:

 

 

Share this post


Link to post
Share on other sites

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

Share this post


Link to post
Share on other sites

நித்தியும், எப்பவும் சிரிச்ச முகமும், திருநீத்துப் பூச்சும் தான்! :D

 

NT_130205105628000000.jpg

 

இது தான், பெண்களைப் பேய்க்காட்டும் ரகசியமோ? :o

 

இனித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்! :icon_idea:

 

நீங்கள் தொடருங்கள், சுமே!

 

தாற லிங்கை ஒழுங்காத் தாறேல்லையோ.

 

 

Share this post


Link to post
Share on other sites

பகுதி 17

வசந்தியிலும் பார்க்க வசந்தனே ஓடியோடி உபசரித்தான். நித்தியா கொஞ்சநேரம் திக்குமுக்காடித்தான் போனாள். இதில் வசந்தி கூறுவது உண்மையா அல்லது வசந்தனுக்குப் பல முகங்கள் இருக்கா என ஒருவிதக் குழப்பம் மனதை ஆட்கொள்ள குழப்பத்துடன் அவள் கணவரும் வசந்தனும் சுவாரசியமாக உரையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வசந்தி எல்லோருக்கும் தேநீரைப் பரிமாறிவிட்டு, வாங்கோ நித்தியா நாங்கள் சமைத்துச் சமைத்துக் கதைப்போம் எனக் கூப்பிட்டதில் நின்மதியாகி எழுந்து அவளுடன் சென்றாள். குசினிக்குள் சென்றதுமே என்ன வசந்தி அக்கா நீங்கள் கூறியதுக்கும் உங்கள் கணவருக்கும் சம்மந்தமே இல்லைபோல் இருக்கே என தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டாள். உண்மைதான் நித்தியா. அவர் மற்றவர் முன்னாள் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்னவும் செய்வார் என்றாள்.

வசந்தியிலும் நித்தியா நான்கு வயது இளையவளாதளால் என்னதான் நட்பாக இருந்தாலும் அக்கா என்னும் பதத்தைப் பாவிக்கத் தவறுவதில்லை. நித்தியா இத்தனை நாட்களாக நான் யாரிடமும் எதையும் சொல்லி மனதை அற்ற முடியாமல் இருந்தேன். இப்ப உங்களைச் சந்தித்தபிறகு எனக்கு எவ்வளவு நின்மதியாக இருக்குத் தெரியுமா என்றாள். சரி எனக்குப் பிரச்சனை இல்லை. நீங்கள் எது என்றாலும் என்னிடம் கதைக்கலாம் என்று கூறி அதன்பின் பொதுவான விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.

வசந்தியின் பிரச்சனைக்கள் எதனையும் நித்தியா கணவனிடம் ஒழிக்காது கூறியிருந்தபடியால், வீட்டுக்குப் போகும்போது அவள் கணவன், என்ன நீர் சொன்னதுக்கும் வசந்தனுக்கும் தொடர்பே இல்லைப்போல் இருக்கே என்று தன் சந்தேகத்தைக் கூறினான். நானும் வசந்தி அக்காவிடம் அதைத்தான் கேட்டேன். அவர் மற்றவர் முன்னாள் இப்படித்தான் வேடம் போடுவார் என்று அவ கூறினா என்றதற்கு, சரி போகப் போக எங்களுக்கே விளங்கும்தானே என்று அத்தோடு அவர்கள் கதையை விட்டனர் இருவரும்.

மூன்றாவது தடவை வசந்தி கர்ப்பமானாள். இம்முறை மகிழ்வை உடனே கணவனிடம் பகிர்ந்துகொள்ளாது நித்தியாவிடம் மட்டும் கூறினாள் வசந்தி. மூன்று மாதம் முடியும் வரை வசந்தனுக்குக் கூறவேண்டாம் என்ற அறிவுரையை வசந்தி கேட்டாளாயினும் மனம் வசந்தனிடம் இன்னும் கூறவில்லையே என குறுகுறுக்கத்தான் செய்தது. ஆனாலும் இம்முறை குழந்தையை நல்லபடியாகப் பெற்றே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

வசந்தனும் அதற்கிடையில் நல்ல வேலை ஒன்றை எடுத்துவிட்டதனால் அந்த வேலைப் புலாதியில் இவளைக் கவனிக்கவில்லை. இவளுக்கு அது வசதியாகப் போயிற்று. மூன்று மாதங்கள் கழிந்தபின் வைத்தியரிடம் சென்று நிட்சயம் செய்தபின் வசந்தனிடம் கூறினாள். அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை. எதிர்மறையாக எதுவும் கூறவும் இல்லை. சாதாரண செய்தி ஒன்றைக் கேட்பதுபோல் கேட்டுவிட்டு இருந்தான். அதன்பின் அவன் கொஞ்சம் மாறியதுபோல் இருந்தது. உமக்கு என்ன விருப்பம் சொல்லும் வாங்கிக் கொண்டு வாறன் என்பான். வாரும் வெளியே நடந்துபோட்டு வருவோம் என்பான். சில நேரம் தானே சமைக்கிறேன் என்பான். வசந்திக்குச் சந்தேகம் உடனே வரும். ஏன் மருந்து ஏதும் சாப்பாட்டுடன் போட்டுத் தரப்போறீங்களோ என் நேரடியாகவே தாக்குதல் தொடுத்தாள்.

நீர் என்னை இன்னும் நம்புகிறீர் இல்லை முந்தி அக்காவின்ர  சொல்லைக் கேட்டு நான் உம்மோட அப்பிடி நடந்திட்டன். இப்ப நான் அக்காக்களோட கதைக்கிறதே இல்லையே. பிறகும் ஏன் சந்தேகப் படுறீர் என்று கேட்டதன் பின் வசந்தி அவனைக் காயப்படுத்துவதில்லை. குழந்தை வயிற்றில் வளர வளர வசந்தியும் பூரித்து வசந்தனுடன் ஒன்றி வாழப் பழகிக் கொண்டாள். பத்து மாதத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டாம் நாள் வசந்தன் வந்தபோது, வசந்தி கோவிக்காதையும் அக்கா பிள்ளையைப் பார்க்க வரப்போகிறாவாம். நான் உம்மட்டைக் கேட்டுப்போட்டுச் சொல்லுறன் எண்டனான். வரச் சொல்லட்டோ என்றான். அவவை என்னத்துக்கு. அதுதான் வேண்டாம் என்று விட்டாச்சே. பிறகென்ன. இல்லை வசந்தி அவ எனக்கு அக்கா. என்னதான் கோபதாபம் என்றாலும் இப்பிடியான நேரத்தில தான் ஒன்று சேருறது. என்னில சின்னனிலை இருந்தே சரியான அன்பு. பிள்ளையைப் பாக்கப்போறன் எண்டு சொல்லேக்கை எப்பிடி வேண்டாம் என்று சொல்லுறது என்றதற்கு  சரி உங்களுக்காக அவவை வர விடுறன். ஆனால் அதுக்காக வீட்டை வந்து சொந்தம் கொண்டாட விடமாட்டன் என்று கறாராகக் கூறினாள்.

வசந்தனும் சம்மதிக்க அடுத்தநாள் தமக்கையும் கணவனும் வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்டதும் இவளை அறியாமல் வாங்கோ என்று வரவேற்றுவிட்டாள்  என்றாலும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. குழந்தை எங்கே என்று தமக்கைதான் கேட்டார். பொறுங்கோ எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறித் தாதிமாரிடம் சென்று குழந்தையை வாங்கிவந்து அவர்களிடம் காட்டினாள். தமக்கையை வரச் சொல்லிவிட்டு இந்தாள் எங்கே போய்த் தொலைந்தார் என்று எரிச்சல் ஏற்பட்டது. நல்ல காலம் அவர்களுக்கும் இவளுடன் என்ன பேசுவது என்று தெரியாததால் என்ன பெயர் வச்சிட்டியளோ? எத்தினை கிலோ ? இப்பிடிப் பொதுவாகக் கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். இவள் முருகனைத்தான் தினமும் வணங்கி தனக்கு பிள்ளை ஒரு குறையும் இன்றிப் பிறக்கவேண்டும் என்று கும்பிட்டதால் அவனின் பெயரையே பிள்ளைக்கும் வைத்தாயிற்று.

குழந்தை பிறந்தபின் வசந்தனும் வேலை நேரம்போக மிகுதி எல்லாம் மகனுடனும் மனைவியுடனுமே கழித்ததால், கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார் என்று வசந்தி கடவுளுக்கு நன்றி சொல்வதும் தீபம் காட்டி வழிபடுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இரண்டு வருடங்கள் வசந்திக்கு வசந்தகாலமானது. இன்னொரு பெண் குழந்தையும் பிறந்து நித்தியாவுடனான நட்பும் நெருக்கமாகி, இவள் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்கு  வைத்தியசாலைக்குச் சென்றபோது நித்தியாவே கணவனுடன் இவள் வீட்டில் வந்து நின்று இவள் முதல் மகனை ஒரு வாரங்கள் பார்க்குமளவு வளர்ந்தது.

வசந்தன் வேலை ஒன்று மாறிய படியால் லீவு எடுக்கும் பிரச்சனை இருந்தது. சரி முன்பு வசந்தன் எப்படியோ. இப்போது நல்லா மாறிவிட்டான். வீடு வாசல் கூட முன்பு இருந்ததைவிட வசதியாக, நன்றாகத்தான் வசந்தியை வைத்திருக்கிறான். உண்மையில் திருந்தித்தான் விட்டான். ஒருவன் தவறுசெய்தால் அவனை எப்போதும் குற்றவாளியாகவே பார்ப்பதும் தவறு என எண்ணிக்கொண்டு நித்தியாகூட அவனை மதித்து இயல்பாய்க் கதைக்கத் தொடங்கினாள்.

தொடரும்........

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.