Jump to content

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்களுக்கு...

Recommended Posts

எலே மொழி எப்பிடி முக்கியமோ... நாடு எப்பிடி முக்கியமோ அதே மாதிரி தான்லே ஜாதியும் முக்கியம்லே....ஆனா வன்முறை இல்லாம இருக்கனும்லே.......

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தலித் என்ற வார்த்தை பாவிக்கப்படுவதில்லை (நான் இருந்தவரை).

பொதுவாக "சாதி குறைந்தவர்கள்", "தாழ்த்தப்பட்டோர்", "தாழ்ந்த சாதி" என்றுதான் பாவிக்கின்றவர்கள்.

வயது போனவர்களைப் புதிதாகச் சந்திக்கும்போது "ஊரில் எவ்விடம்?" என்ற கேள்வியோடு ஆரம்பித்து "அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா?" அதன் பின்னர் "அவர் சொந்தமா? இவர் சொந்தமா?" என்ற கேள்விகளுடன் சாதியினை அறிந்துகொள்ள முயற்சிக்கும் சம்பாஷணைகள் நன்கு பரிச்சயமானவை. ஆனால் இப்படியான கேள்விகள் எல்லாம் இளவயதுக்காரர் கேட்பதில்லை.

புலிகள் சாதி ஒழிப்புப் போராட்டத்தை வெளிப்படையாகச் செய்ய முயலவில்லை. அப்படிச் செய்திருந்தால் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அடைந்த முன்னேற்றம் (அழிவுக்கு முன்னர்) கிட்டியிருக்காது. ஆயினும் சாதிக் கட்டமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பல முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் அழிவோடு புலிகளுக்குள்ளேயே கலப்புத் திருமணம் புரிந்து தற்போது சொந்தங்களால் ஒதுக்கப்பட்டிருக்கும் கதைகளும் பல உள்ளன.

Link to comment
Share on other sites

எப்பவோ எழுதினது. இதைப் பற்றி இன்னும் கதைச்சுக் கொண்டிருக்கிறம் எண்டது  வேதனை தான்.....
 
எச்சாதி சொல்வீரோ

பத்தே வயதான

பாலகனாய் இருக்கையிலே

பதிலறியாக் கேள்வியொன்றைப்

படித்தவரைக் கேட்டிருந்தேன்

என்வயதை ஒத்துநிற்கும்

எதிர்வீட்டுப் பையனுடன்

ஏற்புடனே விளையாட

எதற்காகத் தடுக்கின்றீர்

முத்தமிழில் புலமைபெற்ற

முன்வீட்டுத் தாயிடத்தில்

தமிழ்ப்பாடம் படிப்பதற்குத்

தடுப்பதுவும் எதற்காக?

இத்தனையும் ஏன்என்று

இதமாகக் கேட்டதற்கு

இழிசாதி அவரென்று

இரகசியமாய்ச் சொல்லிவைத்தார்

சாதிகளில் பலசொன்னார்

சமனுமில்லை எமக்குஎன்றார்

சகபாடி எனச்சொன்னால்

சண்டைவரும் இங்குஎன்றார்

இச்சாதி கணிப்பதற்கு

இருக்கிறதோ ஒருமார்க்கம்

இடக்காகக் கேட்டதற்கு

இலேசாகப் பதில்சொன்னார்

பரம்பரையாய் வருகின்ற

பழக்கமிது எனச்சொன்னார்

செய்தொழிலை வைத்துத்தான்

செப்புகின்றோம் இதனையென்றார்

தலைமுடியை எடுக்கின்ற 

தமிழருக்கு ஒருபெயராம்

சலவை செய்கின்ற

சந்ததிக்கு ஒருபெயராம்

மரமேறித் தொழில்செய்யும்

மக்களுக்கு ஒருபெயராம்

கூலித் தொழில்செய்யும்

கூட்டத்திற் கொருபெயராம்

பல்லாண்டு சென்றபின்பு

பனிக்குளிரில் யோசித்தேன்

பதிலறியாக் கேள்விமீள

படுத்துதுபார் பெரும்பாடு

தமிழ்மண்ணை விட்டகன்று

தனியாக இங்குவந்து

எதிர்கால வாழ்விற்காய்

எதையெதையோ செய்கின்றேன்

அடுக்களையில் நின்றுதினம்

அடுப்புடனே கருகுகின்றேன்

சலவைத் தொழிலினையும் 

சலிக்காமல் செய்கின்றென்

கள்வகையைப் பகிருகின்றேன்

கழிவறையைக் கழுவுகிறேன்

மழிக்கின்ற வேலையையும் 

மறுக்காமல் செய்கின்றேன்

அத்தனை வேலையையும்

அலுக்காமல் செய்கின்ற

அற்பன்நான் எச்சாதி

அறிஞர்நீர் சொல்வீரோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

வெளி வாரியாகப்பார்த்தால் உங்களது நிலை தான் எனதும்.

ஆனால் நடைமுறை  என்று ஒன்று உண்டு.

அதை நடைமுறைப்படுத்தம் போது தான் அதன் தாக்கங்களையும் பலன்களையும் இன்னொரன்ன பின் விளைவுகளையும் அறியவும் வகுக்கவும் முடியும்.

ஆரம்பத்தில் சில  கடுமையான நடவடிக்கைகளை  எல்லா இயக்கங்களும் எடுத்தன.

புலிகள் பல சட்டங்களையும் கொண்டு வந்து அமுல் படுத்தினார்கள்

ஆனால் மக்களும் ஒத்துழைக்கணும். மதிக்கணும்

இறுதியில் இதன் ஆணிவேரைப்புரிந்து கொண்ட புலிகள்

அதை மக்களிடம் விட்டுவிட்டு தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆனால் ஒரு பொழுதும் அதை புலிகள் கவனிக்காது விட்டதில்லை.

எனது தகப்பனார் தனது பரம்பரைக்கோயிலான கிராம்சியம்பதி  கந்தசாமி  கோவிலை புலிகள் காலத்தில் பொதுக்கோயிலாக எழுதிக்கொடுத்தார்.

போனமாதம் எனது தம்பி  இங்கிருந்து போய் கோடிக்கணக்கில் செலவு செய்து கோபுரம் கட்டி கொடி ஏற்றி கோபுரத்திலேறி  படம் எடுத்து  முகப்புத்தகத்தில் போட்டுள்ளான்.

எந்த தலைமுறையை  நோக.............

Link to comment
Share on other sites

எலே மொழி எப்பிடி முக்கியமோ... நாடு எப்பிடி முக்கியமோ அதே மாதிரி தான்லே ஜாதியும் முக்கியம்லே....ஆனா வன்முறை இல்லாம இருக்கனும்லே.......

களத்தில் உள்ள சாதிச்சங்கத் தலைவர் சுண்டல்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சாதி ஒழிப்புப் போராட்டத்தை வெளிப்படையாகச் செய்ய முயலவில்லை. அப்படிச் செய்திருந்தால் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அடைந்த முன்னேற்றம் (அழிவுக்கு முன்னர்) கிட்டியிருக்காது. ஆயினும் சாதிக் கட்டமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பல முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் அழிவோடு புலிகளுக்குள்ளேயே கலப்புத் திருமணம் புரிந்து தற்போது சொந்தங்களால் ஒதுக்கப்பட்டிருக்கும் கதைகளும் பல உள்ளன.

சாதியை ஒழிக்க முடியாது. காதலை எப்படி ஒழிக்க முடியாதோ அப்படித்தான். ஏனெனில் சாதியும் காதலும் மனிதர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விடயங்கள். ஒழிப்பு என்ற பதத்தை உணர்வுகளுக்குப் பயன்படுத்துவதே தவறு. அதற்காகவே காதலை இதனுடன் ஒப்பிட்டேன். உணர்வுகளை ஒழித்து விட்டதாக இந்த உலகில் எவருமே உரிமை கோர முடியாது.

அந்த வகையில் எவர் செய்யக்காட்டினும் புலிகள் சாதி என்ற உணர்விருப்பினை அதிகம் நீர்த்துப் போகச் செய்திருந்தனர். இதனை முன்னர் எவருமே செய்திருக்கவில்லை.

சிலர் பெருமைக்காக.. நாலு வீட்டுக்குப் போயிட்டு வந்து.. நான் அங்க சாப்பிட்டன்.. இங்க சாப்பிட்டன் என்று சொல்லிக் கொண்டே.. சாதி வெறியில் கிடப்பவர்கள்.

அர்ஜூனின் கதையையும் அப்படியான ஒன்றாகவே இருக்க வாய்ப்புள்ளது..! அவை  உண்மையான முன் மாதிரிகளுக்காக தெரியவில்லை. மாறாக.. ஊருக்க தங்களை வித்தியாசமாகக் காட்டி விளம்பரப்படுத்திக்க..! ஒரு அரச சேவையாளன்.. சாதி பிரதேசம் பார்த்து வேலை செய்ய வாய்ப்பளிப்பதில்லை. மேலதிகாரி சொன்ன இடத்தில் வேலை செய்வது அவரின் கட்டாயக் கடமை. அதையே அர்ஜூனின் தந்தையும் செய்துள்ளார். அவரிடத்தில் எவர் இருந்தாலும் செய்திருப்பர்.

கோவில் அன்னதானம்.. அது அந்தக் காலத்தில் இருந்து கொடுக்கிறார்கள். மேல் சாதி ஆக்களுக்கு கோவில் மண்டபத்தில் வைத்து அன்னம் போடுவார்கள். மற்றவர்களுக்கு கொஞ்சம்.. வெளியில்.....!! இவையும் அன்னதானமாகத்தான் சொல்லப்பட்டு வருகின்றன.

நம்மவர்கள் இன்று ஓரளவுக்கு நீர்த்துப் போன விசயத்தை இரண்டு முக்கிய காரணங்களுக்காக மீண்டும்.. உயிர்ப்பித்து.. முன்னிறுத்துகின்றனர்.

1. வெட்டிப் பெருமைக்கு...!

2. விளம்பரத்திற்கு அரசியலுக்கு..!

நம்ம தமிழாக்களைப் பற்றி உங்களுக்கு இன்னும் சரியாத் தெரியல்ல..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார் .

சாதியத்தை பற்றி சுவையாக கதைப்பதே சாதியத்தை வளர்பதில் ஒரு வகையில் பங்குஉள்ளது 

Link to comment
Share on other sites

இப்போ உள்ள பிரச்சனைகளுக்குள் இதுவா முக்கியம் :rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு முன்னர் சாதியம் வடகிழக்கில் ஓங்கியிருந்தது உண்மை .

அதை நானே என் கண்ணூடு கண்டிருக்கின்றேன் .

தண்ணீர் எடுக்கச்செல்லும்போது யாராவது வரமாட்டார்களா எனப் பலர் காத்திருப்பார்கள்

யாராவது மேற்குடியினர் வந்துதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தண்ணீர் அள்ளி

வழங்கவேண்டும் .நானும் அப்படிச் செய்திருக்கின்றேன் .சில வேளைகளில்

வேறு எவரும் இல்லாத பட்சத்தில்(அந்த வயதில் இருந்த பயம்) என் வயதொத்தவனாக இருந்தால் அவனையும் 

நீயே அள்ளிக் கொண்டு செல் என ஆதரவும் கொடுத்திருக்கின்றேன்..

விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் குறைந்திருந்ததை எல்லோரும் ஒத்துக்கொள்கின்றனர்.விடுதலைப் போராட்டத்தின் கட்டாயம் அது.

இல்லையேல் எப்போதோ  விடுதலைப் போராட்டம் சிதறிப்போக வாய்ப்பிருந்திருக்கும்.

சாதிய,வர்க்க  முரண்பாடற்ற வாழ்க்கைமுறை விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்தது.

விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் மீண்டும் சாதியம் 

வடகிழக்கில் தலைதூக்கியுள்ளது என்பது 

சாதிய வர்க்க முரண்பாடற்ற வாழ்க்கைமுறை ஈழத்தில் அமைய வேண்டும் என்றால்

 அங்கு விடுதலைப்புலிகளின் ஆட்சி அமைய வேண்டும் என்பதையே காட்டி நிற்கின்றது

Link to comment
Share on other sites

சாதியம் என்பது ,,,,,,,,,,,,,,,,,,மனித  பலவீனத்தின் உச்சம் ....உலகில் உண்மையும் ,சாந்தியும் ,சமாதானமும் நிலவும் வரை .தவிர்க்கமுடியாத கொள்ளை நோய்.................அந்த வகையில் தமிழருக்கென்று ஒரு தனியரசு உருவாக்கி பொருளாதார ரீதியில் ஒவ்வொரு தமிழனும் மேலோங்கி நிற்கும்போது இந்த சாதியம் என்ற கொள்ளை நோய் பறந்தோடிவிடும் .............

அதை  2007 ஆம் ஆண்டிற்கு முன்னாள் நேரடியாக பார்த்தவர்கள் நாம் .நன்றி ....

Link to comment
Share on other sites

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

Link to comment
Share on other sites

உண்மைதான் நிழலி.. :D

உண்மை நிழலி

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு முன்னர் சாதியம் வடகிழக்கில் ஓங்கியிருந்தது உண்மை .

அதை நானே என் கண்ணூடு கண்டிருக்கின்றேன் .

தண்ணீர் எடுக்கச்செல்லும்போது யாராவது வரமாட்டார்களா எனப் பலர் காத்திருப்பார்கள்

யாராவது மேற்குடியினர் வந்துதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தண்ணீர் அள்ளி

வழங்கவேண்டும் .நானும் அப்படிச் செய்திருக்கின்றேன் .சில வேளைகளில்

வேறு எவரும் இல்லாத பட்சத்தில்(அந்த வயதில் இருந்த பயம்) என் வயதொத்தவனாக இருந்தால் அவனையும் 

நீயே அள்ளிக் கொண்டு செல் என ஆதரவும் கொடுத்திருக்கின்றேன்..

விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் குறைந்திருந்ததை எல்லோரும் ஒத்துக்கொள்கின்றனர்.விடுதலைப் போராட்டத்தின் கட்டாயம் அது.

இல்லையேல் எப்போதோ  விடுதலைப் போராட்டம் சிதறிப்போக வாய்ப்பிருந்திருக்கும்.

சாதிய,வர்க்க  முரண்பாடற்ற வாழ்க்கைமுறை விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்தது.

விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் மீண்டும் சாதியம் 

வடகிழக்கில் தலைதூக்கியுள்ளது என்பது 

சாதிய வர்க்க முரண்பாடற்ற வாழ்க்கைமுறை ஈழத்தில் அமைய வேண்டும் என்றால்

 அங்கு விடுதலைப்புலிகளின் ஆட்சி அமைய வேண்டும் என்பதையே காட்டி நிற்கின்றது

பச்சையான உண்மை

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

உண்மை ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

அப்படி ஒன்று நடந்திருப்பின் ஒருவேளை 2009ம் ஆண்டு வரைக்கும் இந்தப் போராட்டம் தாக்குப் பிடித்திருக்குமா என்பதே பெரிய கேள்வி தான்.  காரணம் என்ன தான் சாதீயம் புலிகளின் காலத்தில் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல அது உறங்குநிலையில் இருந்தது இருக்கிறது என்பது தான் உண்மை.

கோவில்களிலும், பொதுக்கிணறுகளிலும் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட போது சாதீயச் சமநிலையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டதா?

வசதி படைத்தவர்கள் சொந்தமாக கிணறு இல்லை குழாய்க்கிணறு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்தது நாளடைவில் பொதுக்கிணறு என்பது அவர்கள் மட்டுமே பாவிக்கும் ஒன்றானது.

கோவில்களில் கிரகப்பிரவேசம் என்று அனுமதித்ததோடு திருவிழாக்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கியும் ஏதும் மாற்றம் நடந்ததா? இன்னும் கோவிலில் சுவாமி தூக்குவது மேட்டுக்குடியே இல்லை அவர்களின் பூசை நடக்கும் நாட்களில் வரும் சனத்தை வைத்தே தெரியும்.

அடுத்து வடமராட்சியில் இருந்தவர்களுக்குத் தெரியும் "கிண்ணி" என்று சொல்லி ஒரு போராளி அண்ணா இருந்தவர். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகளின் பாடசாலை போக வேண்டும் என்று, கசிப்பு விக்கக் கூடாது என்று பிடிக்கப் போகும் போது சைக்கிள் ரயரை வெட்டி துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவர்களே சிலவற்றில் இருந்து மீண்டுவரத் தயார் இல்லை என்பதே நிதர்சனம்.

அடுத்து முன்னர் நான் ஒருவருடைய கதைக்கு எழுதிய கருத்துத் தான்.

கலப்புத்திருமணம் என்பது கீழ்சாதியைச் சேர்ந்தவர் மேல் சாதியைச் செய்வது தான் புரட்சியா? ஏன் அவர்கள் கூட தம்மிலும் கீழான ஒருவரைச் செய்வதை விட வேளாளரிடம் வரன் எடுப்பதை மட்டும் புரட்சி என்கிறார்கள்? அதன் மூலம் சொல்லும் உளவியல் சித்தாந்தம் என்ன?

அவர்களும் தம்மை மேட்டுக்குடியாக அடக்கியாளும் சமூகமாக கட்டமைத்துக் கொள்ளத் தானே இயைகிறார்கள்? இல்லை புலிகளின் காலத்தில் சாதீயக்கட்டமைப்புக்களில், ஏற்றத்தாழ்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் பதிவு பண்ணப்பட்டுள்ளனவா?

எப்போதும் இருப்பது போல ஒரு சிலர் காதலித்து ஓடிப்போய் கலப்புத் திருமணம் செய்திருக்கலாம்.

இது எத்தனை வீதம்?

அதை விட போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து 1996 யாழ்ப்பாணம் ஆமிக்கட்டுப்பாட்டுக்கு வந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரைக்கும் போராட்டத்துக்கு இணைந்தவர்கள் எத்தனை வீதம்? வெகு வெகு அரிது. யாழ் வீழ்ந்ததோடு பல வழங்கல்கள் தடைப்பட்டுப் போனது தான் உண்மை.

அடுத்து விடுதலைப்புலிகளில் மட்டுமல்ல,பொதுவாகவே அனைத்து இயக்கங்களிலும் இருப்பது தாழ்த்தப்பட்டோர் என்பது தான் பொதுவான அபிப்பிராயம். அதனால் தான் காசை மட்டும் குடுத்தால் சரி அடிபட வேலைக்காரர் இருக்கு என்ற எண்ணவோட்டம் விதைக்கப்பட்டுள்ளது, அதை விட ஆதிக்கவர்க்கத்தின் கருத்துக்கள் தான் பல இடங்களில் போராட்ட அமைப்புக்களின் குரலாய் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

பேசுவதற்கு வேண்டுமென்றால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம் ஆனால் யதார்த்தம் என்னவென்று எம் எல்லோருக்கும் தெரியும். எந்தக் கடுமையான சட்டங்களாலும் மனங்களை வெல்ல முடியாது.

பி.கு: நல்லூர் போல் ஒரு சில கோவில்கள் விதி விலக்காகவும் உள்ளது.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் வழமை போல மாட்டை பற்றி எழுதசொன்னால் மாட்டுக்கொட்டிலை பற்றி எழுதுகின்றார் .தம்பி எமது ஊரில் தான் பெற்றோர் படிப்பித்தார்கள் அங்குதான் இவை அனைத்தும் நடந்தது .

நிழலி ,

சிங்கள அரசுகள் பெடியங்கள் ஆயுதம் தூக்கி விட்டார்கள் என்று வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது சரி என்பது போலிருக்கு உங்களது கருத்து . இயக்கங்கள் தொடங்கிய காலத்தில் ஒரு கொஞ்சம் என்றாலும் சமுக பிரச்னை பற்றி கதைத்தது இரண்டு இயக்கங்கள் தான் .மற்றவர்கள் ஆயுதம் மூலம் தமிழிழம் அதன்பின் அடுத்து எல்லாம் என்ற நிலைப்பாடுதான் .ஒரு ஒழுங்கான அரசியல் அமைப்பை உருவாக்க புலிகள் என்றும் முயற்சிக்கவில்லை .

தண்டித்து எதையும் சாதிக்க முடியாது ,புலிகளுக்கு அது மட்டும்தான் தெரியும் .புலம் பெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எங்களுக்கு இவை எல்லாம் விளங்காமல் இருப்பது அதிசயமே .

பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்க  சாதியம் பறந்துவிடும் .(தமிழ்நாட்டில் இளையராஜாவும் பாரதிராஜாவும் வைரமுத்துவும் உதாரணம் ).

Link to comment
Share on other sites

http://en.wikipedia.org/wiki/Vellalar

இலங்கையில்தான் பெரிய சாதி.. ஆனால் பிராமணர்களுக்கு சூத்திரர்கள்தான்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் வழமை போல மாட்டை பற்றி எழுதசொன்னால் மாட்டுக்கொட்டிலை பற்றி எழுதுகின்றார் .தம்பி எமது ஊரில் தான் பெற்றோர் படிப்பித்தார்கள் அங்குதான் இவை அனைத்தும் நடந்தது .

நீங்க காகம் நீந்துது.. மீன் பறக்குது என்றும் சொல்லக் கூடிய ஆள். அந்த வகையில்..

"மற்றவர்கள்" (அது யார் மற்றவர்கள் வேற்றுக்கிரகவாசிகளா..).. "அப்பா மற்றவர்களின் விளையாட்டுக்கு தலைமை தாக்கப் போறவர்".. (ஒரு ஆசிரியர் தலைமை தாங்கப் போவது என்ன அவரின் தொழில் கடமை தானே அதில் என்ன விசேசம்..) "அதனால் ஊரில் நச்சரிப்பு".. "எல்லோரும் ஒன்றா இருந்து சாப்பிட்டது... மகிழ்ச்சி என்று சொன்னவர்" (ஏன் அவர்கள் என்ன இவ்வளவு காலமும் சாப்பிடாமல் அன்று என்ன.. விசித்திரமாவா சாப்பிட்டார்கள்..)...

இதற்குள் உட்புகுத்தப்பட்டுள்ள.. வேற்றுமைகளை உணராமல்.. பாராட்ட எனக்குத் தெரியவில்லை. மேலும் உங்கள் அப்பா தான் இல்லாத ஒன்றை செய்திட்டதாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

ஆனால் போராட்ட கால வரலாற்றில்.. இது சர்வ சாதாரணமாக இருந்த நிலைமை. அதை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு மனப்பக்குவம் இல்லை. மாறாக உங்கள் பெற்றோர் தான் மாற்றிக் காட்டினர் என்று நிறுவ முயல்கிறீர்கள். அதனைச் செய்ய.. வேற்றுமைகளை இனங்காட்டுகிறீர்கள். இதைத் தான் சொல்வது சுயவிளம்பரம் என்று. சமூக அக்கறை அல்ல இதற்குப் பெயர். இப்ப புரியனும் யார் மாட்டுக்குள் ஆட்டைக் கலக்கிறார்கள் என்று.

போராட்ட காலத்தில்.. தமிழர் எல்லோரும்... வேற்றுமைகள்.. புறம்பு.. பெருமை.. காட்டாமல்.. கூடவும் சேரவும் இதனை விடக் கூடிய வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் அளிக்கப்பட்டதை அனுபவித்தவர்கள் என்ற வகையில்.. உங்களின் கதையில் நிறைய மறைமுக மேல்சாதி அதிகாரம் தொனிப்பதையே காண முடிகிறது. அடுத்த முறை எழுதும் போது இவற்றைத் தவிர்க்க முயலுங்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

உண்மைதான்  சரி புலிகளின் முக்கிய தளபதிகள் யார் யார் தங்களை விட சாதி குறைந்த(  பனையேறும்) இனத்தில்  உள்ளவர்களை திருமணம் செய்தார்கள் என்று கூற முடியுமா? அடிமட்ட போராளிகள் இல்லை தளபதிகள் ஏன் தலைவர் கூட  காதலை தியாக செய்து விட்டு  பனையேறும் ஒருவனின் மகளை திருமணம் செய்து முதல்  புரட்சியை ஆரம்பித்து வைத்து இருக்கலமே?

எனக்கு தெரிந்த வரை இலங்கையில் எந்த ஒரு மீனவ இனத்தைச் சேர்த யாருமே  தங்களை விட குறைந்த ஒரு இனத்தில் இருந்து பெண் எடுத்தோ அல்லது காதலித்து திருமணம் செய்த வரலாறு இல்லை.

மனதால் சாதியை  அழிக்கும் நல்ல அரிய சந்தர்ப்பத்தை விட்டு விட்டு இப்ப ஆயுதத்தால் செய்து இருந்தால் குறை கூறுவார்கள் என்று நொண்டிசாட்டு கூறக் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்தில்  சாதீயம் சற்றே அமுங்கியே இருந்த்தது .ஆனாலும் சில இடங்களில் அப்பட்டமாக இருந்தன .காரைநகரில்  கிணற்றுக்குள் கழிவு ஒயில் ஊற்றிய கூட்டமும்  இருந்த்தது 

Link to comment
Share on other sites

சரி ஒன்றும் வேண்டாம் இங்கை  அவர் அவர்களுக்கு தெரிந்த போல் சாதியினை ஒஅழுங்கு படுத்து எழுதவும்  எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பார்போம்?

புலிகளின் காலத்தில்  சாதீயம் சற்றே அமுங்கியே இருந்த்தது .ஆனாலும் சில இடங்களில் அப்பட்டமாக இருந்தன .காரைநகரில்  கிணற்றுக்குள் கழிவு ஒயில் ஊற்றிய கூட்டமும்  இருந்த்தது 

உண்மைதான் புலிகள்  சாத்தியத்தை ஊக்கப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதை இல்லாது ஒழிப்பதுக்கான  முயற்சியை அவர்கள் சட்டமாக்கி செய்ற்படவில்லை.

அப்படி ஒன்று நடந்திருப்பின் ஒருவேளை 2009ம் ஆண்டு வரைக்கும் இந்தப் போராட்டம் தாக்குப் பிடித்திருக்குமா என்பதே பெரிய கேள்வி தான்.  காரணம் என்ன தான் சாதீயம் புலிகளின் காலத்தில் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல அது உறங்குநிலையில் இருந்தது இருக்கிறது என்பது தான் உண்மை.

கோவில்களிலும், பொதுக்கிணறுகளிலும் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட போது சாதீயச் சமநிலையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டதா?

வசதி படைத்தவர்கள் சொந்தமாக கிணறு இல்லை குழாய்க்கிணறு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்தது நாளடைவில் பொதுக்கிணறு என்பது அவர்கள் மட்டுமே பாவிக்கும் ஒன்றானது.

கோவில்களில் கிரகப்பிரவேசம் என்று அனுமதித்ததோடு திருவிழாக்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கியும் ஏதும் மாற்றம் நடந்ததா? இன்னும் கோவிலில் சுவாமி தூக்குவது மேட்டுக்குடியே இல்லை அவர்களின் பூசை நடக்கும் நாட்களில் வரும் சனத்தை வைத்தே தெரியும்.

அடுத்து வடமராட்சியில் இருந்தவர்களுக்குத் தெரியும் "கிண்ணி" என்று சொல்லி ஒரு போராளி அண்ணா இருந்தவர். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகளின் பாடசாலை போக வேண்டும் என்று, கசிப்பு விக்கக் கூடாது என்று பிடிக்கப் போகும் போது சைக்கிள் ரயரை வெட்டி துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவர்களே சிலவற்றில் இருந்து மீண்டுவரத் தயார் இல்லை என்பதே நிதர்சனம்.

அடுத்து முன்னர் நான் ஒருவருடைய கதைக்கு எழுதிய கருத்துத் தான்.

கலப்புத்திருமணம் என்பது கீழ்சாதியைச் சேர்ந்தவர் மேல் சாதியைச் செய்வது தான் புரட்சியா? ஏன் அவர்கள் கூட தம்மிலும் கீழான ஒருவரைச் செய்வதை விட வேளாளரிடம் வரன் எடுப்பதை மட்டும் புரட்சி என்கிறார்கள்? அதன் மூலம் சொல்லும் உளவியல் சித்தாந்தம் என்ன?

அவர்களும் தம்மை மேட்டுக்குடியாக அடக்கியாளும் சமூகமாக கட்டமைத்துக் கொள்ளத் தானே இயைகிறார்கள்? இல்லை புலிகளின் காலத்தில் சாதீயக்கட்டமைப்புக்களில், ஏற்றத்தாழ்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் பதிவு பண்ணப்பட்டுள்ளனவா?

எப்போதும் இருப்பது போல ஒரு சிலர் காதலித்து ஓடிப்போய் கலப்புத் திருமணம் செய்திருக்கலாம்.

இது எத்தனை வீதம்?

அதை விட போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து 1996 யாழ்ப்பாணம் ஆமிக்கட்டுப்பாட்டுக்கு வந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரைக்கும் போராட்டத்துக்கு இணைந்தவர்கள் எத்தனை வீதம்? வெகு வெகு அரிது. யாழ் வீழ்ந்ததோடு பல வழங்கல்கள் தடைப்பட்டுப் போனது தான் உண்மை.

அடுத்து விடுதலைப்புலிகளில் மட்டுமல்ல,பொதுவாகவே அனைத்து இயக்கங்களிலும் இருப்பது தாழ்த்தப்பட்டோர் என்பது தான் பொதுவான அபிப்பிராயம். அதனால் தான் காசை மட்டும் குடுத்தால் சரி அடிபட வேலைக்காரர் இருக்கு என்ற எண்ணவோட்டம் விதைக்கப்பட்டுள்ளது, அதை விட ஆதிக்கவர்க்கத்தின் கருத்துக்கள் தான் பல இடங்களில் போராட்ட அமைப்புக்களின் குரலாய் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

பேசுவதற்கு வேண்டுமென்றால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம் ஆனால் யதார்த்தம் என்னவென்று எம் எல்லோருக்கும் தெரியும். எந்தக் கடுமையான சட்டங்களாலும் மனங்களை வெல்ல முடியாது.

பி.கு: நல்லூர் போல் ஒரு சில கோவில்கள் விதி விலக்காகவும் உள்ளது.

100%
 
ஜீவா! நல்ல கருத்துக்களை ஆணித்தரமாக  சொல்லியிருக்கின்றீர்கள். அதிலும் நான் வர்ணமிட்ட கருத்து புலம்பெயர் தேசத்திலும் பக்குவவாக முன்னெடுக்கப்படுகின்றது.முன்னர் இங்கு சம்பந்தமில்லாத திரிகளில் இதுபற்றி சொல்லியிருந்தேன்.கவனிக்க மாட்டார்கள் :)

சரியான பார்வை.

எங்கள் ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள்  எந்தச் சாதியிலும் பெண் எடுகலாம் ஆனால் குறைந்த சாதியில மாப்பிள்ளை எடுக்க கூடாது என்று.

Link to comment
Share on other sites

ஏன் கணக்க வேண்டாம் யாராச்சும் முடிஞ்சா தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்ட ஆளை கொண்டு வர முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.