• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...?

Recommended Posts

  :huh: வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...? :o

 

 

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொறுமை என்பது சற்றே குறைவுதான்....அதிலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ அல்லது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சேவை அலுவலர்களுக்கோ தேடி வரும் வாடிக்கையாளர்களின் குறைகளை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்க விருப்பம் கிஞ்சித்தும் இருப்பதில்லை.

 

இதற்கே இப்படியெனில், லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், தொழிலின் முன்னேற்றத்திற்கே காரணியான வாடிக்கையாளர்களை எப்படி கையாளுகிறார்கள்? 'வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்' எப்படி தமது வாடிக்கையாளர்களின் குறைகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, கனிவுடன் கேட்டறிந்து அதனை நிவர்த்திக்க ஆலோசனைகளை எவ்வாறு வழங்குகிறார்கள்?

 

"வாடிக்கையாள்ர்களே எங்கள் எசமானர்கள்" என்ற தாரக மந்திரத்தை பறைசாற்றும் கவர்ச்சியான சுவர் அலங்கார பதாகைகளை பல அலுவலக வரவேற்பறையில் கண்டிருப்பீர்கள்...

 

இவர்களுடன் கதைத்து வாங்கிக் கட்டி, பின் வட்டியும் முதலுமாக திருப்பியடித்த அனுபவம் உங்களுக்கு ஏதேனுமுண்டா? :huh:

 

பல்வேறு வகை கணணிகளையும், அதன் உப கருவிகளான அச்சுப்பொறிகளையும் பொதுமக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னான வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தில் நடந்த இந்த உரையாடலைக் கேட்டால், உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் மிதமிஞ்சி தலைக்கேறும்...

மிகமிக பொறுமையாக படிக்கவும்...!

 

 

 

 

வாடிக்கையாளர்: சார் வணக்கம், என் கணணியின் அச்சுப்பொறி(Printer) வேலை செய்யமாட்டேங்குது..சரி செய்து தாருங்கள்.

 

சேவை அலுவலர்: என்ன பிழையை கண்டீர்கள் சார்..?

 

வாடிக்கையாளர்: எலி(Mouse) வேலை செய்யாமல் மாட்டிக்கொண்டுவிட்டது!

 

சேவை அலுவலர்: என்னது எலியா? சார்.. அது ஒரு அச்சுப்பொறி, கணணி இல்லை, அச்சுபொறிகளில் எலி(Mouse)களுக்கு என்ன வேலை சார்...?

 

வாடிக்கையாளர்: அப்போ நான் என்ன மடையனா..? நான் பொய் சொல்கிரேனென்றா நினைக்கிறீகள்..?

 

சேவை அலுவலர்: (சலிப்புடன், 'சரியான சாவு கிராக்கி' என முணுமுணுத்தவாறு) அப்படியில்லை சார், சாதாரணமாக எந்த அச்சுப்பொறிகளிலும் எலி(Mouse) சேர்ந்து வருவதில்லை..அதனால நீங்கள் கணணிக்கும்(Computer), அச்சுபொறிக்கும்(Printer) வித்தியாசம் தெரியாமல் தவறான அனுமானத்தில் முறைப்பாடு செய்கிறீர்கள்.. அதானல் உங்கள் அச்சுப்பொறியை மீண்டுமொருமுறை சரியாக சோதித்துச் சொல்லுங்கள்..

 

வாடிக்கையாளர்: (கோபத்துடன்)  ஓ..அப்படியா...சங்கதி?  உங்களுக்கு இந்த அசசுப்பொறியின் படத்தை அனுப்பினால்தான் நம்புவீர்களா? அப்புறம்தான் திருத்தம் செய்து தருவீங்களோ..? சரி, இப்பவே படத்தை அனுப்புறேன்...!

 

 

சேவை அதிகாரியை பொறிகலங்கி மாட்ட வைக்கும் அப்படம் என்னவாக இருக்கும்?

 

அவர் அனுப்பிய  படத்தை பார்க்க உங்களுக்கும் ரொம்ப, ரொம்ப ஆசைதானே?

 

கீழே செல்லுங்கள்...!

 

 

..

 

 

 

..

 

 

 

 

..

 

 

 

 

..

 

 

 

 

..

 

 

 

 

 

..

 

 

 

 

 

 

 

..

 

 

 

 

 

 

nfp4zk.jpg

 

 

 

 

 

நீதி:

 

வாடிக்கையாளர்கள், என்றும் எசமானர்களே...!

அவர்கள் சொல்வதை நம்பிக்கையுடன் காது கொடுத்துக் கேளுங்கள்..!!

அவசரப்பட்டு தவறான உங்கள் முடிவினால், அசிங்கப்படாதீர்கள்...!!!

 

 

. :rolleyes::lol::D .

 

 

-தங்கள் பொறுமைக்கும், நன்றி!

 

 

.

Share this post


Link to post
Share on other sites

 ம் அப்ப எலிபோற அளவுக்கு வேலை நடந்திருக்கு,

 

Share this post


Link to post
Share on other sites

:lol:

எலி தன் முதுகில் படம் வரைய எடுத்த முயற்சிபோல் இருக்கு.. :D

Share this post


Link to post
Share on other sites

அப்படியே ரொம் மை அனுப்ப வேண்டியதுதானே...!

Tom%26jerry_tom.png

Share this post


Link to post
Share on other sites