Jump to content

தலைப்பிடாத நாடகம்....


Recommended Posts

இன்றைய சூழலில் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக கோடை காலக் களியாட்டங்களில் செய்யக் கூடிய (செய்ய வேண்டிய மாற்றங்கள்) மாற்றங்கள் தாயக மக்களின் அவல வாழ்க்கைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்பவை குறித்த என் மன ஆதங்கங்களை ஏதோ ஒரு படைப்பு மூலம் வெளிக் கொணர வேண்டும் என நினைத்தேன். அந்த எழுத்து வடிவம் குறித்து ஒரு குழப்பகரமான சூழலில் ஒரு நாடக வடிவில் இதனை வெளிக்கொணர முயற்சிக்கிறேன்.
 
நாடகப் பிரதிகளை எழுதுவது குறித்த எந்தவிதமான அனுபமும் எனக்கு இல்லை என்பதால் இது குறித்த உங்கள் விமர்சனங்களை தவறாது முன்வையுங்கள். குறிப்பாக நாடகப் பிரதிகளை எழுதுவதில் அனுபவமுள்ள பலரும் இங்கிருக்கிறீர்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் என்னைப் புடம் போட்டுக் கொள்ள பெரிதும் உதவும்..
 
அத்துடன் சரியான பாதையில் இந்தத் தொடரை எழுதி முடிப்பதற்கு தேவையான எந்த வகையான ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
மற்றது இதற்கு என்ன தலைப்பிடுவது என்றும் தெரியவில்லை. காலக்கிரமத்தில் ஒரு தலைப்பிடுவோம். நீங்களும் ஒரு தலைப்பை முன்வைக்கலாமே!
 
 
 
 
 
பாத்திரங்கள் குறித்த அறிமுகம்……
 
மதனும் முரளியும் நீண்ட கால நண்பர்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் உயிரைப் பணயம் வைத்து கனடாவிற்குப் புலம்பெயரும் பயணத்தில் அறிமுகமானவர்கள். 
சிலகாலம் ரொறொன்ரோவில் ஒன்றாக வாழ்ந்த பின்னர் வியாபார நிலையம் ஒன்றை அமைப்பதற்காக முரளி மொன்றியலுக்குப் புலம் பெயர்ந்திருந்தான். 
 
வேலைப் பளு மற்றும் இன்னோரன்ன காரணங்களால் இருவருக்கிடையிலான தொடர்பாடல் அருகியிருந்தாலும் நண்பர்களாக ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் அன்பில் மாற்றமில்லை)
 
மதனின் மனைவி சாந்தி ….
 
ஏனைய பாத்திரங்களை அந்த அந்த சந்தர்ப்பங்களில் அறிமுகம் செய்கிறேன்.
 
 
 
 
பாகம் 1:
 
இடம் : ரொறொன்ரோவில் உள்ள மதனின் வீடு
 
அழைப்பு மணி அழைக்கிறது. மதன் கதவைத் திறக்கிறான்
 
மதன்: டேய் முரளி வா வா… கண்டு எவ்வளவு காலம்… மொன்றியலுக்குப் போனதோடை எங்களை மறந்திட்டாய் என்ன! சரி வாறது தான் வாறாய்.. ஒரு போனடிச்சிட்டு வாறதில்லையே! கனடாக்கு வந்து பத்து வருசமாய்ப் போச்சுது… இன்னும் பழக்க வழக்கங்களைப் பார்….
 
முரளி: இல்லையடா! திடீரெண்டு வந்து ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமெண்டு தான் போன் பண்ணாமல் வந்து இறங்கீட்டன். (பொய்க் கோபத்துடன்) சரி சரி உனக்குச் சங்கடமெண்டால் நான் போயிட்டு இன்னொரு நாளைக்குப்  போனடிச்சிட்டு வாறன்.
 
மதன்: (முரளியின் கையைப் பிடித்து இழுத்தவாறே) ஆளைப் பார் ஆளை… போகப் போறாராம். ஒண்டு விட்டனெண்டால் தெரியும். 
 
இஞ்சை பார் உன்னைக் கண்ட புளுகத்திலை உள்ளை வா எண்டு சொல்லாமல் வாசல்லை வைச்சுக் கதைச்சுக் கொண்டு நிக்கிறன்
 
(இருவரும் உள்ளே நுழைகின்றனர்.)
 
சாந்தி: என்ன திடீரெண்டு இங்காலை காத்தடிச்சிட்டுது..  இண்டைக்கு சினோ தான் கொட்டப் போகுது….
 
முரளி: தெரியும் தானே சாந்தி கனடா வாழ்க்கையை. அந்தக் கடையைத் தொடங்கினதிலை இருந்து மூச்சுவிடவே நேரமில்லை. காலையிலை எழும்பிக் கடைக்குப் போனா இரவு பத்து மணிக்குக் கடையை மூடீட்டு வாற மட்டும் ஒரே பிஸ்னஸ், பிஸ்னஸ் எண்டு தான் மனசு ஓடிக் கொண்டிருக்கும். வீட்டை வந்தா அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கும். சாப்பிட்டிட்டுப் படுக்கத் தான் சரி…
 
சாந்தி: ஓமண்ணை.. நான் குறையாச் சொல்லேல்லை. தெரியும் தானே இங்கத்தைய வாழ்க்கையை… சரி சரி வாங்கோ சாப்பிட்டிட்டுக் கதைப்பம்….
 
முரளி: இல்லை சாந்தி நான் சாப்பிட்டிட்டுத் தான் வந்தனான். கொஞ்ச நாளைக்கு இங்கை தான் நிக்கப் போறன். ஆறுதலாச் சாப்பிடலாம்..
 
மதன்: என்னடா ஏதாவது முக்கியமான விசயம் ஏதாவதோ… ஏன் திடீரெண்டு இந்தப் பயணம். கொஞ்ச நாள் நிக்கப் போறன் எண்டும் சொல்லுறாய்…
 
முரளி: ஓமடா! முக்கியமான விசயம் தான். உன்னோடையும் கனக்க கதைக்க வேணும்..பின்னேரம் ஆறுதலாக் கதைப்பம்..
 
மதன்: நீயும் களைச்சுப் போய் வந்திருப்பாய்.. இப்ப கொஞ்ச நேரம் றெஸ்ற் எடு.. பிறகு கதைப்பம்..
 
 
(பாகம் 2)
 
(மாலை வேளை! நீண்ட நேரத் தூக்கத்தின் பின் குளித்து முடித்து முன்கூடத்திற்கு வருகிறான் முரளி!. கூடத்தில் மதனும் மனைவியும் அமர்ந்திருக்கிறார்கள்.)
 
மதன்: என்னடாப்பா! அந்த மாதிரி நித்திரை கொண்டிருக்கிறாய் போலை கிடக்கு…
 
முரளி: ஓமடா! ராத்திரிக் கடையாலை வர பன்ரெண்டு மணிக்கு மேலையாச்சு. பிறகு வந்து கொஞ்ச நேரம் நெற்றிலை குந்தியிருந்து செய்திகளைப் பாத்திட்டு படுக்கப் போனது ரெண்டு மணிக்கு மேலை. பிறகு நாலு மணிக்கு எழும்பி வெளிக்கிட்டாச்சு. அதுதான் அடிச்சுப் போட்ட மாதிரி நல்லாப் படுத்திட்டன். முளிச்சுப் பாக்கிறன் ஏழுமணியாப் போச்சுது.
 
மதன்: சரி! சரி உடம்பு அலுப்புக்கு நான் நல்ல மருந்தெல்லாம் வைச்சிருக்கிறன். எல்லாம் சரியாயிடும். சரி என்ன எடுக்கப் போறாய்.. விஸ்கியோ பிறண்டியோ!
 
முரளி: சீச்சீ நான் அதெல்லாம் எடுக்கிறதில்லை.
 
மதன்: சரி அப்ப ஒரு பியரெண்டாலும் தரட்டோ!
 
முரளி: இல்லையில்லை நான் ஒண்டும் எடுக்கிறதில்லை.
 
மதன்: என்னடாப்பா புதினமாக் கிடக்கு, கனடாக்கு வந்து பத்து வருசமாப் போச்சுது. இன்னும் இதுகளை நீ பழகேல்லையே!. இந்தக் குளிருக்குள்ளை இதுகள் இல்லாமல் இருக்கிறது வலு கஸ்டமெல்லே! 
 
முரளி: கனடாக்கு வந்து பத்து வருசமெண்டது உண்மைதான். ஆனால் அதைவிட முக்கியமா நான் அஞ்சு வருசம் இயக்கத்திலை இருந்தனான் எண்டதை நீ மறந்திட்டியே! இயக்கத்திலை இருக்கேக்குள்ளை குடியையும் புகையையும் தொடப்படாது எண்டு கண்டிப்பாச் சொல்லித் தான் எங்களை வளத்தவை. இப்ப எல்லாம் முடிஞ்சு போனாலும் நாங்களும்; குடியும் கூத்துமா இருந்தால் முன்னாள் போராளிகள் எண்டு சொல்லிறதிலையே அர்த்தமில்லையெல்லே!.
 
மதன்: சொறியடா! உன்ரை மனசைக் காயப்படுத்திட்டனோ தெரியேல்லை.
 
முரளி: அதெல்லாம் ஒண்டுமில்லை. இந்தப் பத்து வருசத்திலை நான் படாத காயமா? ஊரிலை இருந்து வாற செய்தியெல்லாம் குத்தூசியாக் குத்திக் கொண்டு இருக்குது. ஏன் தான் தமிழனாப் பிறந்தம் எண்டு ஒரு வெறுப்புத் தான் வருகுது.
 
மதன்: என்னடாப்பா செய்யிறது. நாங்களும் எங்களாலை முடிஞ்சதையெல்லாம் செய்து பாத்திட்டம். ஒரு பலனையும்; காணேல்லையே! எல்லாம் சாணேற முழம் சறுக்கின கதையாத் தானே கிடக்குது.
 
முரளி: உண்மையைச் சொன்னால் நாங்கள் எங்களாலை முடிஞ்சதையெல்லாம் செய்தனாங்கள் எண்ட கருத்திலை எனக்கு உடன்பாடேயில்லை. சும்மா எங்களை நாங்களே திருப்திப்படுத்திக் கொள்ளச் சொல்லுற கதை தான் அது. 
 
மதன்: சரி சரி உந்த கண்டறியாத அரசியலை விடடா! கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறாய். கொஞ்சம் பம்பலாக் கதைப்பம்
 
முரளி: எதடாப்பா அரசியல். இதெல்லாம் அரசியல் இல்லையடாப்பா. எங்கடை வாழ்க்கை. சனத்தின்ரை உயிர் வாழுற உரிமையே பறி போய் கொத்தடிமைகளா இருக்குது. என்ரை அம்மா என்ரை அப்பா என்ரை சகோதரங்கள் என்ரை சொந்தக்காறர் எண்ட சின்ன வட்டத்தை விட்டு வெளியிலை வந்து பாத்தால் என்ரை தமிழ்ச் சனம் படுற கஸ்ரத்தைப் பற்றிக் கதைக்கிறது எப்படி அரசியலாகும் சொல்லு பாப்பம். என்ரை அக்கா மாரின்ரை கற்புக்குப் பாதுகாப்பில்லை. என்ரை தம்பிமார் தங்கடை சின்னச் சின்னப் பிரச்சினைக்காக ஒரு போராட்டம் செய்தாக் கூட அவையை வெள்ளை வான கடத்திக் கொண்டு போகுது. இதுகளைப் பற்றிக் கதைக்கிறது அரசியலோ சொல்லு பாப்பம்….
 
மதன்: ம்ம்ம் எனக்கும் விளங்குதடா! ஆனால் நாங்களும் ஒரு அளவுக்குத் தானே செய்யலாம். 
 
முரளி: அந்த ஒரு அளவு என்ன எண்டது தான் இப்ப பிரச்சினையே!
 
மதன்: அடேய் குறை விளங்காதை. வேலை விசயமா ஒராளை சந்திக்க வேணும் அரை மணித்தியாலத்திலை வந்திடுவன். அது மட்டும் ரிவியைப் பாத்துக் கொண்டு இரு. 
 
முரளி: சரி சரி நீ பொயிட்டு ஆறுதலா வா.. நான் ரிவியைப் பாத்துக் கொண்டு இருக்கிறன்
 
 
( தொடரும்)
 
 
 
  
 
 

 

                                                                                                                                                                                    (தொடரும்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் கூட எழுதுங்கோ மணிவாசகன். வாசிக்கத் தொடங்கின உடன முடிஞ்ச மாதிரி இருக்கு. எழுத்து இயல்பாக இருக்கு.

 

Link to comment
Share on other sites

வணக்கம் சுமோ அக்கா!

 

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.  அதற்கிணங்க இந்தப் பதிவில் சிறு திருத்தமொன்றையும் செய்யப் போகிறேன். தங்கள் பச்சைப் புள்ளிகளை ஏற்கனவே இட்டுள்ள நுணாவிலானும் தமிழ் சிறியும் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

 

இனிமேல் முடிந்த வரை சற்று அதிகமாக எழுதி இணைக்க முயல்கிறேன். 

 

நன்றி

Link to comment
Share on other sites

தொடர்ந்து நீங்கள் எழுதும் போது கருத்துக்களை வைக்கலாம் என இருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான்!

 

சுமோ அக்கா கேட்டதன் படி இரண்டாம் பகுதியையும் எழுதி முதலாவதுடனேயே இணைத்துள்ளேன். 

 

நேரத்துடன் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தாலும் முடிந்தவரை விரைவாக எழுதி முடிக்க முயல்கிறேன்.

 

உங்களுடைய ஆதரவிற்கு மறுபடியும் எனது நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி பந்தியாக ஒரு விடயத்தை எழுதி மற்றவரை வெறுப்படைய வைக்காது, உங்கள் இந்த யுத்தி பிடிக்காத பலரையும் வசிக்க வைக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சிந்தனையும் நல்ல எழுத்து நடையும் உள்ளது 

தொடருங்கள் மணிவாசகன்  

 

Link to comment
Share on other sites

வித்தியாசமான சிந்தனையும் நல்ல எழுத்து நடையும் உள்ளது 

தொடருங்கள் மணிவாசகன்  

 

கருத்துக்களுக்கு நன்றி வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மணிவாசகன்.இத் தொடரையாவது இடையில் விடாது முடிப்பீர்கள் என நினைக்கிறேன் :)

 

Link to comment
Share on other sites

வணக்கம் ரதி!

 

கட்டாயமாக முடிக்கிறேன்...... :)

 

முடிந்தவரை ஒரு மாதத்திற்குள் எழுதி முடிப்பதாக உத்தேசம்... ஏற்கனவே ஒரு தொடரில் உங்களையெல்லாம் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.

 

அந்தத் தலைப்பும் இப்போது உத்தியோகபூர்வமாக முடிக்கப்பட்டுள்ளது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கியமான கருப்பொருளைத் தொட்டிருக்கின்றீர்கள் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், மணிவாசகன்! :D

Link to comment
Share on other sites

வரவிற்கும் கருத்திற்கும் நன்றி புங்கையூரான். தொடர்ந்து உங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் ஒரு நாடகத்தொடர். வாழ்த்துக்கள் மணிவாசகன். தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எழுத்துநடையும் சுவாரிசயமான வசனங்களும் உங்கள் நாடகத்துக்கு மெருகூட்டுகின்றன.

 

Link to comment
Share on other sites

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பகலவன்....

 

ஏற்கனவே குறிப்பிட்டபடி நாடகப் பிரதி எனக்குப் பழக்கமானதல்ல. எனவே குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.. பேருதவியாயிருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மணிவாசகன் அண்ணா, ஆவலைத் தூண்டிவிட்டு அதகம் காக்க விடாதீர்கள்.

தொடருங்கள் படிக்கிறோம். :)

Link to comment
Share on other sites

வரவுக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி ஜீவா!

 

முடிந்தவரை வாரமொருமுறையாவது பாகங்களை இணைக்கிறேன்.

 

நீங்களும் கருத்துக்களோடு தொடர்ந்து இணைந்திருங்கள்...

Link to comment
Share on other sites

பாகம் 3
 
(வெளியே சென்றிருந்த மதனும் மனைவியும் வருகிறார்கள். கூடத்தில் முரளி அமர்ந்திருக்கிறான்.)
 
மதன் : என்னடா யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய்.  
 
முரளி: (சிரிப்புடன்) ஓமடா! யோசிக்கிறதுக்கு ஒண்டுமேயில்லையே எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.
 
மதன்: அட அவற்றை பகிடியைப் பார். ஆனால் சிரிப்புத் தான் வரேல்லை.
 
முரளி: உதிலை எங்கடை தமிழ் ரிவியைப் பாத்துக் கொண்டிருந்தன். இதிலை வாற விளம்பரங்களைப் பாக்க சிரிப்புத் தான் வருகுது.
 
மதன் : என்னடாப்பா அதிலை அப்பிடிப் பெரிய கொமெடியைக் கண்டிட்டாய்
 
முரளி: இல்லையடா எங்கடை  விளம்பரங்களை ஆராவது வெளியாக்கள் பாத்தால் தமிழரைப் பற்றி என்ன நினைப்பாங்கள். ஒரே சாப்பாட்டுக் கடைக்கும் புடவைக் கடைக்கும் தான் விளம்பரங்கள் போகுது.
 
அதிலையும் இப்ப ஒரு விளம்பரம் போச்சுது. ஊர்க் கோழி, நாட்டுப் பண்டி எல்லாம் இருக்குதாம்..
 
மதன் : சரியடாப்பா ! தின்னிறதையும் உடுக்கிறதையும் விட்டால் வேறை என்ன தான் இருக்குது..
 
முரளி :  ம்ம்ம் 
 
மதன் : என்ன பெருமூச்செல்லாம் கடுமையா இருக்குது. சரி என்ன விசயமா ரொறொன்ரோ வந்தனி
 
முரளி : உனக்கும் தெரியும் தானே ஊர் நிலமை. சனம் சாப்பிட வழியில்லாமல் படுற கஸ்ரத்தையும் படுற அவஸ்தையையும் நினைக்க நினைக்க என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை. 
 
மதன் : நீ என்ன கதை கதைக்கிறாய். அங்கை சனம் மோட்டச் சைக்கிளும் ஐபோனுமா எல்லோ  சுத்திக் கொண்டிருக்குதுகளாம்..
 
முரளி : நான் உந்த நகரத்துச் சனத்தைப் பற்றிக் கதைக்கேல்லை. தமிழன் தொடர்ந்து அடிமையா இருக்கக் கூடாதே எண்டு பொதுநலமா யோசிச்சு தங்களாலை முடிஞ்ச அளவு அல்லது அதுக்கும் மேலையும் தியாகங்களைச் செய்து போட்டு இண்டைக்கு ஊர்ச்சனத்தாலையே கைவிடப்பட்ட ஏராளமான குடும்பங்கள் கிராமங்களிலை இருக்குது. உனக்கும் தெரிஞ்சிருக்கும் தானே! 
 
அந்தச் சனத்துக்காக என்னாலை தனிப்பட்ட முறையிலை கொஞ்சக் கொஞ்ச உதவிகளை இவ்வளவு நாளும் செய்து கொண்டு தான் இருக்கிறன். ஆனால் அது யானைப் பசிக்குச் சோளப் பொரி போட்ட மாதிரி இருக்குது.  அதாலை என்ரை யாவாரம் அது இதைக் கொஞ்ச நாளைக்கு மனிசிட்டையும் கடைப் பெடியளிட்டையும் விட்டிட்டு ஒரு ஆயிரம் குடும்பத்துக்காவது ஒரு வழியைக் காட்டிறதுக்கு ஆக்களின்ரை உதவியைச் சேப்பம் எண்டு வெளிக்கிட்டு வந்திட்டன்.
 
அதுக்காக இங்கை இருக்கிற எனக்குத் தெரிஞ்ச ஆக்கள், அவைக்குத் தெரிஞ்ச ஆக்கள், சங்கங்கள், கோயில்கள் இப்படியான ஆக்களோடை கதைச்சு என்னாலை முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யப் போறன். 
 
சாந்தி : கேக்க நல்லாத் தானிருக்குது. ஆனால் இதையெல்லாம் இங்கை இருக்கிற பெரிய அமைப்புகள் எல்லே செய்ய வேணும். அவைக்குத் தானே ஆள் பலம், பண பலம், அறிமுக பலம் எல்லாம் இருக்கு. அவை சொன்னாத் தானே சனம் உடனை கேக்கும்.
 
முரளி : அவைக்கு இப்ப ஆயிரம் பிரச்சினை அக்கா! திக்குக்கொருத்தரா பிரிஞ்சு நிண்டு கொண்டு மற்றப் பக்கத்திட்டை பிழை பிடிக்கிறதும் நாட்டுக்கெண்டு சேத்த காசை எப்படிப் பதுக்கிறது எண்டும் யோசிக்கிறதிலை அவை பிசியாப் போச்சினம்.
 
அவை செய்வினம் செய்வினம் எண்டு எத்தினை வருசமா பாத்துக் கொண்டு இருந்தாச்சு. இனி நாங்கள் தான் எங்கடை எங்கடை சக்திக்கேற்ற வகையிலை செய்ய வேணும் எண்ட முடிவுக்கு நான் வந்திட்டன்.
 
அதுதான் வெளிக்கிட்டு வந்திட்டன்.
 
மதன் : நல்ல விசயம். நானும் எனக்குத் தெரிஞ்ச ஆக்களை உனக்கு அறிமுகப்படுத்தி விடுறன். இந்த மாதிரி விசயங்களுக்கு உதவி செய்யாட்டி நாங்கள் தமிழர் எண்டு சொல்லுறதிலை அர்த்தமேயில்லையடா?
 
சாந்தி: எனக்கும் தெரிஞ்ச தமிழ் பள்ளிக்கூடங்கள், பழைய மாணவர் சங்கங்கள் இருக்குது. நானும் அறிமுகப்படுத்தி விடுறன்.  மற்றது இந்த சனிக்கிழமை எங்கடை அப்பான்ரை அந்திரட்டி செய்யிறம். அங்கையும் கன ஊர்ச்சனம் வரும். அவையிட்டையும் கதையுங்கோ!
 
முரளி : சரி பிள்ளையார் சுழி போட்ட மாதிரி உன்னட்டையே கேக்கிறனடா. வன்னியிலை ஒரு குடும்பம். அந்த ஐயாக்கு நாலு பிள்ளைகள். அதிலை மூண்டு பிள்ளைகள் சண்டையிலை மாவீரராகீட்டினம். தாய் தேப்பனோடை இருந்த ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளையும் செல்லடியிலை காயம் பட்டு ஒரு காலில்லாமல் இப்ப தாய் தேப்பனோடை தான் இருக்குது. 
 
ஐயாக்கும் இப்ப அறுவது வயதாகுது. கடற்தொழில் செய்த குடும்பத்தைக் கொண்டு போய் நடுக் காட்டுக்குள்ளை குடியேத்தி விட்டிருக்கிறாங்கள். அந்த ஐயாக்கு தொழில் செய்ய ஆசையிருந்தும் வழியில்லை. மனிசிக்கும் பி;ள்ளைக்கும் சாப்பாடு போடவே வழியில்லாமல் கஸ்ரப்படுகுது. வன்னி இடப்பெயர்விலை ஒரு பத்துக் குடும்பத்தையாவது தங்கடை வீட்டிலை வைச்சு சாப்பாடு குடுத்த குடும்பத்தை இண்டைக்குத் திரும்பிப் பாக்க ஆக்களில்லை. 
 
அந்தக் குடும்பத்தை நீ பொறுப்பெடுக்கிறியே! ஒவ்வொரு மாதமும் ஒரு நூற்றம்பது டொலரை அந்தக் குடும்பத்துக்காக ஒதுக்க முடியுமா? இல்லாட்டில் ஒரேயடியா ஒரு இரண்டாயிரம் டொலர் குடுத்தால் அந்த ஐயா ஒரு சின்ன கோழிப் பண்ணையை வைச்சுக் குடும்பத்தைப் பாத்துக் கொள்ளுவார்.
 
நீ என்னட்டையோ அல்லது வேறை ஆரிட்டையுமோ காசு குடுக்கத் தேவையில்லை. நேரடியா அந்தக் குடும்பத்தோடை தொடர்பை ஏற்படுத்தி விடுறன். பெத்த தாய் தேப்பனுக்கும் சகோதரனுக்கும் செய்யிற உதவி எண்டு நினைச்சுக் கொண்டு  இதைச் செய்யிறியா?
 
 
மதன் : முரளி ! எனக்கும் அந்தக் குடும்பத்தின்ரை கஸ்ரம் விளங்குது. உதவி செய்ய வேணும் எண்டு தான் மனசு சொல்லுது.
 
ஆனால் என்ரை குடும்ப நிலையையும் உனக்குச் சொல்ல வேணும். இந்த வீட்டை வாங்கினதிலை இருந்து ஒரே செலவு தான். மோட்கேஜ் எண்டும் பில்லுகள் எண்டும் ஒரே செலவாத் தான் கிடக்குது. மற்றது மனிசிக்கும் இப்ப சரியான வேலையில்லை. பார்ட் ரைம்மாத் தான் ஒரு இடத்துக்குப் போய் வாறா? பிள்ளைகளின்ரை படிப்பு அது இது எண்டு ஏதோ கடனில்லாமல் ஓடிக் கொண்டிருக்குது. அதாலை மாதம் மாதம் நூற்றம்பது டொலர் கஸ்ரமடா? நீ கேட்டிட்டாய் எண்டதாலை ஒரு நூறு டொலர் இண்டைக்குத் தாறன். ஆனால் மாதம் மாதம் கஸ்ரமடா?
 
சாந்தி: மற்றதண்ணா! நாங்கள் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் போகப் பிளான் பண்ணியிருக்கிறம். இனி அங்கை போனால் தெரியும் தானே செலவை. மற்றது எங்கடை சொந்தக் காறர் கன பேர் அங்கை இருக்கினம். போறதெண்டால் அவைக்கும் ஏதாவது gift வாங்கிக் கொண்டு தானே போக வேணும். அதுகும் மருமக்கள் எல்லாம் பெரிய பிள்ளைகள் அவை laptop உம் ஐபோனும் தான் வேணுமெண்டு கேட்டு அடிக்கடி போன் பண்ணுதுகள். இனி நாங்கள் வெளிநாட்டிலை இருந்து போறனாங்கள் ஏலாது எண்டு சொல்லேலுமே. வாங்கிக் கொண்டு தானே போக வேணும். அதுகளை வாங்கிறதுக்கே காசுக்கு என்ன செய்யிறதெண்டு யோசிச்சுக் கொண்டு இருக்கிறம்.
 
 
முரளி: சாந்தி சொல்லிறனெண்டு குறை நினைக்காதேங்கோ! நான் உயிர்போற அவசரத்திலை இருக்கிற சனத்துக்கு உதவி கேக்க நீங்கள் புளிப்பெடுத்த சனத்துக்கு ஐபோன் வாங்கிறதைப் பற்றிக் கதைக்கிறியள்.
 
டேய் மதன் நான் வேறையாக்களோடை இப்படிக் கதைக்கேலாது. ஆனால் பத்து வருச சினேகிதன் எண்ட உரிமையோடை கேக்கிறன். உண்மையிலை உனக்கு மாதம் நூற்றைம்பது டொலரை ஒதுக்கிறது கஸ்ரமா? கொஞ்சம் யோசிச்சுப் பார். உன்ரை கப்போர்ட்டைப் பாக்கவே தெரியுது. அதுக்குள்ளை இருக்கிற குடிவகையின்ரை பெறுமதி. எல்லாம் விலை கூடின விஸ்கியும் பிரண்டியும் தான் அடுக்கி வைச்சிருக்கிறாய். இந்தக் குடிவகைக்கு மட்டும் உனக்கு மாசத்துக்கு எவ்வளவு தேவை எண்டு கணக்குப் போட்டுப்பார். 
 
நல்லூர்த் திருவிழா நடக்கிற 25 நாளும் நீ இதொண்டும் பாவிக்கிறதில்லை எண்டு எனக்குத் தெரியும். அதே மாதிரி எங்கடை சகோதரங்களுக்காண்டி நீ இதை ஒரு ரெண்டு வருசம் பாவிக்காமல் இருக்கேலாதா? இது நான் சொன்னது ஒரு சின்ன உதாரணம் தான். இதே மாதிரி எத்தனை ஆடம்பரச் செலவுகள் அல்லது தவிர்க்கக் கூடிய செலவுகள் இருக்குது எண்டு பட்டியல் போட்டுப் பார்.
 
வாசலிலை பாத்தனான் மகன் 4 சோடி சப்பாத்துக்களை அடுக்கி வைச்சிருக்கிறார். அதுகும் எல்லாம் பிறாண்ட் நேம் போட்ட சப்பாத்துக்கள். இதிலை ஒண்டைக் குறைச்சா எவ்வளவு மிச்சம் பிடிக்கலாம்.  
 
முரளி: பிள்ளைகள் ஆசையாக் கேக்கேக்குள்ளை அவைக்கு அரசியல் பாடம் எடுக்க ஏலுமே!
 
மதன் : ஏன் எடுக்கக் கூடாது எண்டு கேக்கிறன். இந்தப் பிள்ளைகள் ஒண்டும் வானத்திலை இருந்து குதிக்கேல்லை. எங்கடை ரத்தங்கள் தானே.! அதுகளுக்கு ஊர் பிரச்சினையையும் அங்கை அவையொத்த பிள்ளைகள் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறதையும் சொல்லி காசின்ரை அருமையைச் சொல்லி வளக்கிறதிலை என்ன பிழையெண்டு கேக்கிறன்.
 
இதுகளைச் சொல்லி வளக்காததாலை தான் எங்கடை பிள்ளைகள் எதியோப்பியாவிலை பட்டினியாலை சாகிற பிள்ளைகளைப் பற்றி மட்டும் கதைச்சுக் கொண்டு திரியுதுகள். அந்தப் பிள்ளைகளுக்காக காசு கேக்க எண்டு வீடுவீடா ஏறி இறங்குதுகள். 
 
மதன்: சரி இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய்
 
முரளி : திரும்பவும் யோசிச்சுப் பார். நீ நினைச்சி எண்டால் இந்த நூற்றம்பது டொலரை வேறை ஏதோ ஒரு வழியிலை குறைக்கலாம். வடிவா யோசிச்சுப் பாரடா? நாங்கள் யாழ்ப்பாணத்திலையிருந்து இடம்பெயர்ந்து போன உடனை அந்தச் சனம் எங்களை என்ன மாதிரிப் பாத்ததுகள். தங்கடை குட்டி வீட்டுக்குள்ளை எங்கடை பொம்பிளைகளையும் படுக்கச் சொல்லிப் போட்டு தாங்கள் போய் தாழ்வாரத்திலை படுத்திருந்ததுகள். இப்பிடி தமிழன் எண்ட ஒரே சொந்தத்தை வைச்சு எங்களுக்கு ஓடியோடி உதவி செய்த சனத்தை இப்படி நட்டாத்திலை விடுறது சரியோ  எண்டு ஒருக்கால் யோசிச்சுப் பார்.
 
மதன்: ஓமடா நீ சொல்லுறது எனக்கும் விளங்குது. இவ்வளவு நாளும் ஒவ்வொரு சாட்டுப் போக்கைச் சொல்லிக் கொண்டு நாங்களும் சுயநலமா இருந்திட்டம். இப்ப உடனை அந்தக் குடும்பத்தை நாங்கள் பொறுப்பெடுக்கிறம். 
 
சாந்தி: அது மட்டுமில்லை எவ்வளவு காசை உங்கடை இந்தத் திட்டத்துக்காக சேமிக்க ஏலுமோ அவ்வளவு காசை எங்கடை தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை நிப்பாட்டி சேத்துத் தாறம்.
 
கொஞ்சம் பொறுங்கோ. ஒரு கோலெடுத்திட்டு வாறன். 
 
(தொலைபேசியில்) றாசாத்தி அக்கா ! நான் ஒரு கறுப்பு பிளவுஸ் தைக்கிறதுக்கு காலமை கொண்டு வந்து தந்தனானேல்லே. அதைத் தைக்க வேண்டாம். நான் பிறகு வந்து துணியை எடுக்கிறன்.
 
(தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு வந்தமர்கிறாள்)
 
அண்ணை நான் சொன்னனானெல்லே இநத சனிக்கிழமை எங்கடை அம்மாவின்ரை அந்திரட்டி இருக்குது எண்டு. அதுக்கு பிள்ளைகள் மருமக்கள் எல்லாம் ஒரே மாதிரி சாறி கட்டிறது எண்டு சொல்லி கறுப்பும் வெள்ளையும் கலந்த சாறி வாங்கினனாங்கள். அந்த பிளவுசைத் தான் தைக்க வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டு வந்தனான்
 
முரளி: என்ன அந்திரட்டிக்குத் ஒரே மாதிரி சாறியா? அட கலியாண வீட்டுக்குத் தான் நண்பிகள் ஒரே மாதிரி சாறி வாங்குகினம் கட்டுகினம் எண்டு பாத்தால் இப்ப சாவு வீடு மட்டும் அது வந்திட்டுதா?
 
மதன்: நீ மொன்றியலுக்குப் போய்த் தப்பிட்டாய். இங்கை ரொறொன்ரோவிலை இதுமாதிரிக் கன கூத்து நடக்கிது.
 
முரளி : சந்தனம் மெத்தினா எங்கையோ எல்லாம் தடவுவினமாம். புளிப்புப் பிடிச்ச சனம்.
 
சாந்தி : என்ன என்னையும் சேத்துத் தானே புளிப்புப் பிடிச்ச சனம் எண்டு சொல்லுறியள். நான் தான் திருந்திட்டனெல்லே. அந்த சாறியை கடையிலை திருப்பிக் குடுக்கப் போறன். அந்த சாறிக் காசையும் பிளவுஸ் தைக்கிற காசையும் உங்களிட்டைத் தாறன். அதை வைச்சுக் கொண்டு உங்கடை திட்டத்தை ஆரம்பியுங்கோ! அது மட்டுமில்லை. இந்த சமருக்கு எப்படியும் ஒரு பத்துக் கலியாண வீடெண்டாலும் வரும். போன வருசம் பத்து சாறி வாங்கினனான். இந்த வருசம் வாங்கவே மாட்டன் எண்டு சொல்ல இல்லை. ஒண்டே ஒண்டு வாங்கிறன். மிச்ச ஒம்பது சாறிக் காசும் உங்களுக்குத் தான் சரியா..
 
முரளி: பாத்தீங்களே. ஒரு வீட்டுக்குள்ளையே இப்ப எவ்வளவு காசு சேந்திட்டுது. இப்படி ஒவ்வொருத்தரும் உணர்ந்தால் எங்கடை சனம் அடுத்தவனிட்டைக் கையேந்திற தேவை இருக்காது.
 
மதன்: சரி சரி கதைச்சது காணும். இப்ப வா சாப்பிடுவம். 
 
(தொடரும்;)
Link to comment
Share on other sites

"பங்களிப்பு" என்று தலைப்பு வைக்கலாம்.இன்னும் பல பெரியவர்களின் அறிவுரையையும் கேட்ட பின்   தலைப்பிடலாம்.

 

Link to comment
Share on other sites

தலைப்பினை முன்மொழிந்தமைக்கு நன்றி நுணாவிலான்...

 

ஏனையவர்களின் ஆலோசனைகளையும் செவிமடுத்து முடிவெடுப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "தலைப்பில்லாத நாடகம்" என்ட தலைப்பே பிடித்திருக்குது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ராசா

இதுக்கு மேல என்னால  எழுத முடியல.........

 

எவரையும் எதிர்பார்த்திராது நாம நாம முதலில் செய்யணும்

செய்யமுயலணும்

இதைத்தான் பல காலமாக நான் இங்கு எழுதி  வருகின்றேன்

செய்தும் வருகின்றேன்

 

தலைப்பு

நாங்க நினைச்சா...............

 

(இங்கு ஒரு நாடகம் போட்டோம்

அதுவும் கிட்டத்தட்ட  இதே கருதான்

பெயர் நாங்க  இருக்கிறம்...............)

Link to comment
Share on other sites

எண்ணமும் சிந்தனையும் நல்லது நடைமுறை தான் கேள்விக்குறி ?

படம் போட மட்டும் தான் எமது ஆட்கள் லாயக்கு .

Link to comment
Share on other sites

அருமை ராசா

இதுக்கு மேல என்னால  எழுத முடியல.........

 

எவரையும் எதிர்பார்த்திராது நாம நாம முதலில் செய்யணும்

செய்யமுயலணும்

இதைத்தான் பல காலமாக நான் இங்கு எழுதி  வருகின்றேன்

செய்தும் வருகின்றேன்

 

தலைப்பு

நாங்க நினைச்சா...............

 

(இங்கு ஒரு நாடகம் போட்டோம்

அதுவும் கிட்டத்தட்ட  இதே கருதான்

பெயர் நாங்க  இருக்கிறம்...............)

 

வரவிற்கும் உங்களுடைய கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா!

எனக்கு "தலைப்பில்லாத நாடகம்" என்ட தலைப்பே பிடித்திருக்குது

 

வணக்கம் ரதி! ஏனையவர்களின் கருத்தினையும் பொறுத்து தலைப்புக் குறித்து முடிவெடுப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் இப்படி எல்லோரும் செய்ய வேண்டும் என்ட தன் எண்ணத்தை எழுத்தில வடித்திருக்கிறார் அதற்காக அவருக்கு எனது நன்றியினை சொல்லிக் கொள்கிறேன்.ஆனால் அதற்காக அவர் தன்னுடைய குடும்ப செலவெல்லாம் ஒறுத்து ஊரில் கஸ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார் என்பது ஏற்புடையதாய் இல்லை அதற்காக அவர் உதவி செய்யாமல் சும்மா எழுத்தில் மட்டும் எழுதிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை.அவர் மட்டுமில்லை உதவி செய்கிறவை உதவி செய்து கொண்டு தான் இருக்கினம் அதே நேரத்தில் தங்கட குடும்பத்திற்கு செய்கிறதை எல்லாம் செய்து போட்டு தான் மிச்சத்தை ஊருக்கு அனுப்புகினம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது நாடகம். தலைப்புப் போடாது விடுங்கள் மணிவாசகன். அதுதான் இன்னும் பலரை வந்து பார்க்க வைக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.