Jump to content

தமிழர் மதம்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
923084_10152760576195198_441908195_n.jpg
இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் !

ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான் தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர்.

ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது . பிரமன் தலையில் இருந்து பிராமணன் பிறக்கிறான் , நெஞ்சுப் பகுதியில் இருந்து சத்திரியன் பிறக்கிறான், தொடைப் பகுதியில் இருந்து வைசியன் பிறக்கிறான், காலில் இருந்து சூத்திரன் பிறக்கிறான் என்று கதை கட்டி விட்டனர் ஆரியப் பிராமணர்கள். பிராமணனாக பிறந்த ஒருவன் கடைசி வரை பிராமணனாக தான் இருப்பான். சூத்திரன் சூத்திரனாகத் தான் இருப்பான். இது என்ன நியாயம்? தமிழர் மதமோ இவற்றை அடியோடு மறுக்கிறது . பிரமனையே மறுக்கிறது . அதனால் நமக்கு பிறப்பின் அடிப்படையில் உருவான சாதியை தமிழர் மதம் முற்றிலும் மறுக்கிறது . இதற்கு பல்வேறு சித்தர் நூல்கள் சான்றாக விளங்குகிறது.

இதனால் நாம் அறிய வேண்டியது தமிழர்களுக்கு தொழிலின் அடிப்படையில் தான் சாதி வேற்றுமை வந்துள்ளது அன்றி ஆரிய மதம் கூறுவது போல் பிறப்பின் அடிப்படையில் அல்ல. தொழில் மாற்றத் தக்கது ஆனால் பிறப்பு மாற்ற முடியாது. இனியும் தமிழர்கள் ஆரிய இந்து மதத்தின் மயக்கத்தில் இருக்காமல், தமிழர் பண்பாட்டை தழுவி சாதிய வேறுபாடுகளை களையுங்கள். பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்று உணருங்கள். அந்நிய ஆரிய மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தமிழருக்கு சாதி இல்லை என்பதை உணருங்கள். தமிழராய் இணையுங்கள்.

 

Link to comment
Share on other sites

 • Replies 52
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்!

 

இந்தக் கேடுகெட்ட 'வருணாச்சிர தர்மத்துச்' சாதிமுறை இலங்கைத் தமிழர்களிடையே ஊடுருவவில்லை!

 

எங்களது சாதிமுறை செய்யும் தொழிலை, அடிப்படையாகக் கொண்டதே! இலங்கையின் மற்றப்பகுதிகளில், இருக்கும் 'கொவிகம' முறையை ஒத்தது! எனினும் புத்தமதம், மற்றைய சாதிகளை ஓரளவுக்கு ஒழித்து விட்டது! ஆனால், இந்து மதம் இன்னும், இதற்குத் தூபமிட்டே வளர்க்கிறது!

 

இந்து மதச் சாதி அமைப்பின் கீழ், நாங்கள் அனைவரும் 'சூத்திரர்களே'

 

கேட்கவே வலிக்கிறது அல்லவா?

 

இப்படித்தான், சாதியினால் ஒருவனைத் தாழ்த்தும் போதும், அவனுக்கும் வலிக்கும்!

 

அப்பர், ஒரு பிராமணர் அல்லாத நாயனாராவர்!அதனால் தான், அவரைச் சிவபெருமான் பலமாகச் சோதித்தார்!

 

ஆவிரித்துத் தின்றுழலும் புலையரேனும்,

கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்பராகில்,

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

 

அப்பர் தான் பாடினார்! மற்றவர்கள், இதைப்பற்றிப் பாடியதாகத் தெரியவில்லை!

 

Link to comment
Share on other sites

அறிவுகெட்ட தமிழனுக்கு தமிழில் சொன்னாலும் புரியாது. விளங்காத வடமொழி கேட்டு பரவசப்படத்தான் தெரியும். இன்னும் எத்தனை தலைமுறை வந்து இவற்றை எல்லாம் மாற்றப் போகின்றனரோ தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னெத்தை எழுதினாலும் தமிழனை இந்துமதத்தில் இருந்து பிரித்து எடுக்கமுடியாது புதுசு புதிதா இந்துக்கொள்கைகளை தெரிவுசெய்கிறார்கள்

Link to comment
Share on other sites

உண்மையில் வடமொழி எதிர்ப்பாளர்களாகவே நாயன்மார்கள் அனைவரும் இருந்திருக்க வேண்டும். தமிழிலும் வழிபாடு செய்யலாம் எனவுணர்த்தவே தேவாரங்களைப் பாடினார்களோ தெரியவில்லை. இதனால் தான் பாடல்பதிகங்களை வடமொழி ஆதரித்த பிராமணர்கள் ஒளித்து வைத்திருக்கலாம். ராஜராஜ சோழன் பிற்பாடு அவற்றைத் தேடும்போது அவை கறையான் அரித்திருப்பதைக் கண்டு கோபமுற்றான். உடனே யாரோ ஒருவன் அசிரீரி என்ற வடிவில் ” காலத்துக்குதவாது போக மிகுதி உள்ளன” என குரல் கொடுத்து கடவுளின் பெயரால் சோழனைச் சாந்தப்படுத்தியிருக்கலாம்.

பிற்பாடு நாயன்மார்களின் வரலாறுகளையும் பாடல்களையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் தெரிந்தோ, தெரியாமலோ வரலாறுகளைத் திரித்திருக்க வேண்டும். அவர் வடமொழி ஆளுமை கொண்டவர் என்பதால், அதன் தாக்கத்தை உணராது இருந்திருக்க வாய்ப்புண்டு. தவிர, பிராமணரை உணர்த்திப் பேசியிருக்கலாம். இன்றுவரை என் சந்தேகம் எல்லாம் திருமணத்தின்போது, சம்பந்தர் நெருப்பில் கலக்கின்றார். அப்படி ஏன் செய்ய வேண்டும். சமணர்களுக்கும், இவருக்கும் உள்ள பிரச்சனையின் தொடர்ச்சியாக இவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

தமிழர் மதம் என்பதற்கு வரையறையாக எதைக் குறிப்பிடுகின்றீர்கள். திருவள்ளுவரை மட்டும் துாக்கிப் பிடித்துக் கொண்டு, இதர தமிழ்ப் புலவர்களைக் கைவிட்ட திராவிடக் கும்பல்கள் வழியையா?

Link to comment
Share on other sites

பக்தி மார்க்கம் என்பது சம்பிரதாய வேத சடங்களுக்கு எதிரானது.  சடங்குகளால் அன்றி பக்தியால் இறைவனை அடைய வேண்டும் என்பது இது. (ஆனால் இந்துமதக் கொள்கையின் படி இரண்டும் உண்மையானவை). அறுபத்து மூவர் சரித்திரத்தின் மூலமாக பத்திமார்க்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் நாயன்மார்களாக வருபவர்கள் பிராமணர், அரசர் தொடங்கி புலையர் வரைக்கும் இருக்கிறது.  ஆனால் இது மிக அண்மைக்காலத்தினது. 1500 ஆண்டுகள் மட்டும்தான் போகிறது.

 

சாதி சிந்து வெளியில் தோன்றியது. வர்ணம் சிந்து வெளி அழிந்த பின்னர் தோன்றியது. பிராமணர் ஆவது தீட்சை கேட்பதால் கொடுக்கப்படும் அந்தஸ்த்து. இது சாதியில் வராதது. சாதித்தொழில் சிந்து வெளிக்காலத்தில் மாறக்கூடியது. ஆனால் இரகசியம் காக்க பரம்பரையாக செய்யப்பட்டிருக்கலாம்.  வெள்ளாவி வைக்கும் இளைஞன் தான் துணிகளை கொடுக்கும் இடத்தில், ஆயுதம் செய்யும் குடும்பத்தில் ஒரு குமரியிடம் கையளித்து வந்தபோது அவளுடன் காதல் ஏற்பட்டு அவளைத்திருமணம் செய்தானாயின் அவன் கொல்லர் தெருவில் வாழ்க்கையை ஆரம்பித்து மாமனிடம் இரகசியங்களை பழகி தொழில் செய்யும் உரிமையை பெற்றிருந்தான்.

 

ஆனால் பிராமணன் ஆவது ஒழுங்கான கல்வி கற்று குருவிடம் தீட்சை பெற்றால் மட்டுமே முடியும்.  அப்படித் தீட்சை பெற்றவன் தன் ஒழுகங்களுடன் இயைய கூடிய பெண்களை மட்டும் திருமணம் செய்தான். காதலை தவிர்த்தான்.  காதலில் விழ நேர்த்தால் அந்தஸ்த்தில் கேள்வி ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்றையது போன்ற சாதிப் பிரதிஸ்டம் அல்ல.

 

சிவப்பு நிறச் சிவனும், தீட்சை கேட்டு பிராமணனாகும் பழக்கமும் சிந்து வெளியில் இருந்து இன்றும் நம்மிடம் இருக்கும் பழக்கங்கள்.  இன்று (நான் யாழ்ப்பாணத்தில் வசித்த நாட்களின் படி) மூன்றாவது தீட்சையின் பின்னர் பூநூல் தரிக்க முடியும். (நமது உறவினர்களில் சிலர் இந்த கடுமையான அநுஸ்டானங்களை பின்பற்றினார்கள்.) ஆனால் வருணத்தால் பிராமணன் ஆக முடியாது.  அது(வர்ணம்) சிந்து வெளி அழிந்த பின்னர் கொண்டு வரப்பட்டது. 

 

இன்றைய நிலையில் புத்தமும், சமணமும் பிராமண எதிர்ப்புச் சமயங்களாக ஆரம்பிக்கப்பட்டு ஆரியத்தால் தத்து எடுக்கப்பட்டுவிட்ட சமயங்கள். அவைகளுக்குள் இருக்கும் ஆரிய மாயை இன்று இந்து மதத்தில் இல்லை. இன்றைய இந்து மதம் கடைப்பிடிக்கப்படும் இடத்துக்கேற்றபடி பழைய சிந்துவெளிச் சமயத்திலிருந்து பிற்கால முழு ஆரிய மாயைக்குள் இருப்பது வரை வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆனால் பிரதானமாக  பௌத்தமும் குருக்கள்களால் மட்டும் ஆளப்படுவது.

 

எனவே பழைய பிராமணன் சாதியில் இல்லாதவன். ஆனால் படிப்பால் அந்தஸ்த்தை அடைபவன். பிற்கால பிராமணன் வர்ணத்தால் அந்தஸ்த்தில் உள்ளவன். படிப்பால், ஒழுக்கத்தால் அந்தஸ்தை தேடாதவன். திருகுறளில் பழைய அந்தணனை விவரிக்கப்பட்டிருக்கு. இது பிராமணன் என்ற வட சொல் புக முன்னைய வரைவிலக்கணம்.

 

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."

 

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது." இதில் ஒழுகங்களில் சிறந்திருப்பதால் இறைவனும் அந்தணனாக கொள்ளப்படுகிறான்.

 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் வடமொழி எதிர்ப்பாளர்களாகவே நாயன்மார்கள் அனைவரும் இருந்திருக்க வேண்டும். தமிழிலும் வழிபாடு செய்யலாம் எனவுணர்த்தவே தேவாரங்களைப் பாடினார்களோ தெரியவில்லை. இதனால் தான் பாடல்பதிகங்களை வடமொழி ஆதரித்த பிராமணர்கள் ஒளித்து வைத்திருக்கலாம். ராஜராஜ சோழன் பிற்பாடு அவற்றைத் தேடும்போது அவை கறையான் அரித்திருப்பதைக் கண்டு கோபமுற்றான். உடனே யாரோ ஒருவன் அசிரீரி என்ற வடிவில் ” காலத்துக்குதவாது போக மிகுதி உள்ளன” என குரல் கொடுத்து கடவுளின் பெயரால் சோழனைச் சாந்தப்படுத்தியிருக்கலாம்.

பிற்பாடு நாயன்மார்களின் வரலாறுகளையும் பாடல்களையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் தெரிந்தோ, தெரியாமலோ வரலாறுகளைத் திரித்திருக்க வேண்டும். அவர் வடமொழி ஆளுமை கொண்டவர் என்பதால், அதன் தாக்கத்தை உணராது இருந்திருக்க வாய்ப்புண்டு. தவிர, பிராமணரை உணர்த்திப் பேசியிருக்கலாம். இன்றுவரை என் சந்தேகம் எல்லாம் திருமணத்தின்போது, சம்பந்தர் நெருப்பில் கலக்கின்றார். அப்படி ஏன் செய்ய வேண்டும். சமணர்களுக்கும், இவருக்கும் உள்ள பிரச்சனையின் தொடர்ச்சியாக இவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

தமிழர் மதம் என்பதற்கு வரையறையாக எதைக் குறிப்பிடுகின்றீர்கள். திருவள்ளுவரை மட்டும் துாக்கிப் பிடித்துக் கொண்டு, இதர தமிழ்ப் புலவர்களைக் கைவிட்ட திராவிடக் கும்பல்கள் வழியையா?

 

தமிழர் மதம் என்பது என்ன? என்பதனைப் பற்றிய முழு விவர்ங்கள் விரைவில் இதெ தொகுப்பில் காணலாம்.

 

பக்தி மார்க்கம் என்பது சம்பிரதாய வேத சடங்களுக்கு எதிரானது.  சடங்குகளால் அன்றி பக்தியால் இறைவனை அடைய வேண்டும் என்பது இது. (ஆனால் இந்துமதக் கொள்கையின் படி இரண்டும் உண்மையானவை). அறுபத்து மூவர் சரித்திரத்தின் மூலமாக பத்திமார்க்கம் ஆரம்பிகப்பட்டது. இதில் நாயன்மார்களாக வருபவர்கள் பிராமணர், அரசர் தொடங்கி புலையர் வரைக்கும் இருக்கிறது.  ஆனால் இது மிக அண்மைகாலத்தினது. 1500 ஆண்டுகள் மட்டும்தான் போகிறது.

 

சாதி சிந்து வெளியில் தோன்றியது. வர்ணம் சிந்து வெளி அழிந்த பின்னர் தோன்றியது. பிராமணர் ஆவது தீட்சை கேட்பத்தால் கொடுக்கப்படும் அந்தஸ்தது. இது சாதியில் வராதது. சாதித்தொழில் சிந்து வெளிக்காலத்தில் மாறக்கூடியது. ஆனால் இரகசியம் காக்க பரம்பரையாக செய்யப்பட்டிருக்கலாம்.  வெள்ளாவி வைக்கும் இளைஞன் தான் துணிகளை கொடுக்கும் இடத்தில், ஆயுதம் செய்யும் குடும்பத்தில் ஒரு குமரியிடம் கையளித்து வந்தபோது அவளுடன் காதல் ஏற்பட்டு அவளைத்திருமணம் செய்தானாயின் அவன் கொல்லர் தெருவில் வாழ்க்கையை ஆரம்பித்து மாமனிடம் இரகசியங்களை பழகி தொழில் செய்யும் உரிமையை பெற்றிருந்தான்.

 

ஆனால் பிராமணன் ஆவது ஒழுங்கான கல்வி கற்று குருவிடம் தீட்சை பெற்றால் மட்டுமே முடியும்.  அப்படித் தீட்சை பெற்றவன் தன் ஒழுகங்களுடன் இயைய கூடிய பெண்களை மட்டும் திருமணம் செய்தான். காதலை தவிர்த்தான்.  காதலில் விழ நேர்த்தால் அந்தஸ்த்தில் கேள்வி ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்றையது போன்ற சாதி பிரதிஸ்டம் அல்ல.

 

சிவப்பு நிற சிவனும், தீட்சை கேட்டு பிரமணனாகும் பழக்கமும் சிந்து வெளியில் இருந்து இன்றும் நம்மிடம் இருக்கும் பழக்கங்கள்.  இன்று (நான் யாழ்ப்பாணத்தில் வசித்த நாட்களின் படி) மூன்றாவது தீட்சையின் பின்னர் பூநூல் தரிக்க முடியும். (நமது உறவினர்களில் சிலர் இந்த கடுமையான அநுஸ்டானங்களை பின்பற்றினார்கள்.) ஆனால் வருணத்தால் பிராமணன் ஆக முடியாது.  அது(வர்ணம்) சிந்து வெளி அழிந்த பின்னர் கொண்டு வரப்பட்டது. 

 

இன்றைய நிலையில் புத்தமும், சமணமும் பிராணமன எதிர்ப்பு சமயங்களாக ஆரபிக்கப்பட்டு ஆரியத்தால் தத்து எடுக்கப்பட்டுவிட்ட சமயங்கள். அவைகளுக்குள் இருக்கும் ஆரிய மாயை இன்று இந்து மதத்தில் இல்லை. இன்றைய இந்து மதம் கடைப்பிடிக்கப்படும் இடத்துகேற்றபடி பழைய சிந்துவெளிச் சமயத்திலிருந்து பிற்கால முழு ஆரிய மாயைக்குள் இருப்பது வரை வேற்பட்டுக் காணப்படுகிறது. ஆனால் பிதாணமாக  பௌத்தமும் குருக்கள்களால் மட்டும் ஆளப்படுவது.

 

எனவே பழைய பிராமணன் சாதியில் இல்லாதவன். ஆனால் படிப்பால் அந்தஸ்த்தை அடைபவன். பிற்கால பிராமணன் வர்ணத்தால் அந்தஸ்த்தில் உள்ளவன். படிப்பால், ஒழுக்கத்தால் அந்தஸ்தை தேடாதவன். திருகுறலில் பழைய அந்தணனை விவரிக்கப்பட்டிருக்கு. இது பிராமணன் என்ற வட சொல் புக முன்னைய வரைவிலக்கணம்.

 

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்."

 

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது." இதில் ஒழுகங்களில் சிறந்திருப்பதால் இறைவனும் அந்தணனாக கொள்ளப்படுகிறான்.

 

பக்தி மார்க்கம் ம்ற்றும் சம்பிரதாய வேத சடங்குகள் எல்லாம் தமிழர் மதத்திலிருந்து எடுத்தாளப்பட்டவையே. விவரங்கள் விரைவில்.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியன் என்ற அடையாளத்தில் இருந்து தமிழனை மீட்பது எவ்வாறு முக்கியமோ அதே போல் இந்து என்ற மதத்தில் இருந்து தமிழர் மதத்தை மீட்பதும் காலத்தில் கட்டாயம் !

தமிழர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை . தான் எந்த மதத்தில் இருக்கிறோம் ? இதன் பின்னணி வரலாறு என்ன ? எத்தன அடிப்படையில் இந்த மதம் தோன்றியது? எந்தப் பண்பாடு இந்த மதத்திற்கு ஆணிவேராக விளங்குகிறது போன்ற தெளிவு தமிழர்களுக்கு ஏற்படும் போது தான் தமிழன் தனது அடிமைத் தனத்தில் இருந்து வெளியேறி சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்குவான்.

இப்போது தந்திரமாக வரையறுக்கப்பட்ட இந்து மதம் என்பது பல பண்பாடுகள், வழிபாடுகள், நூல்கள் , சாத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் ஆரியப் பண்பாடும் தமிழர் பண்பாடும் சேர்ந்தே இருக்கிறது . ஆரியப் பண்பாடு என்பது தமிழர் பண்பாடுகளை வழக்கம் போல் அழிக்கவே எத்தனிக்கிறது. தமிழர் சமயங்களையும் ஆரிய சமயங்கள் தான் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தமிழர்கள் ஆரிய மதம், பண்பாடு, மொழியை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை . தமிழர் திருமணம், பெயர்சூட்டு விழா தொடங்கி புதுமனை விழா கருமாரி வரை ஆரியப் பண்பாட்டை , மொழியை தமிழர்கள் இன்று ஏற்றுக் கொண்டு அது தான் இந்து மதம் என்ற மாயையில் சுழல்கின்றனர். தமிழை எல்லாத் தளங்களிலும் புறக்கணிக்கின்றனர் தமிழர்கள்.

தமிழர்கள் தங்களுக்கான வழிபாடு, சித்தாந்தம், மெய்யியல், பூசனைகள், ஓகம், குமுக பழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றை தமிழர் மதத்தின் அடிப்படையில் அதாவது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வழக்கப் படுத்திக் கொள்வதே தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரியப் பண்பாட்டை எல்லா வகையிலும் புறக்கணிக்க வேண்டும் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற வடநாட்டு கட்டுக் கதைகளை தமிழர்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரக் கூடாது . வள்ளுவரின் குரல் நெறியை கற்றுக் கொடுத்து மெய் பொருளை காணச் செய்ய வேண்டும். மெய்யியல் விரும்புபவர்கள் தமிழ் சித்தர் நூல்களை படிக்க வேண்டுமே தவிர பொய்யான வேதங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து தமிழர்களும் தான் தமிழர் மதத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மையை புரிந்து கொண்டு , இந்து மதமாக தங்களை அடையாள படுத்துவதை நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும் . தமிழர்களுக்கு தேவை ஒரு பண்பாட்டுப் புரட்சி . தமிழர் மதத்தை இந்து மதம் என்ற அழுக்கு குட்டையில் இருந்து மீட்பது காலத்தின் கட்டாயம் .

 தமிழிய சுருக்க வரலாறு

தெற்கே குமரி கடலில் (இந்துமா கடல் ) குமரி கண்டம் தோன்றியது என்றும் வேதியல் மாற்றங்களால் குமரி கண்டம் மூழ்கி போனதும் , வடக்கே பனி மலை (இமயமலை) தோன்றியதும் நிலவியல் வரலாறு !
இது ஒரே காலத்தில் நடந்தது அன்று முதட்கட ற் கோளில் குமரி மலையும் பற்றுளி யாறும் , தலை கழக தென் மதுரையும் இரண்டாம் கட ற் கோளில் இடை கழகமும் காபாட புரமும் மூன்றாம் கட ற் கோளில் காவேரி பூம் பட்டினமும் அழிந்தது , அதன் பின் பாண்டியர்கள் வடக்கே இமயம் வரை அரசுஆண்டார்கள் என்பது வரலாறு , பற்றுளி யாறு என்று தொடங்கும் சிலபதிகார செய்யுள் லும் மலிதிரையூர்ந்து என்று தொடங்கும் களிதொகையுளும் (104) வடா அது என்று தொடங்கும் புறநானுறு (6) மூலம் தெரிய வருகிறது . நம் இலக்கியங்களில் இமயம் வரை தமிழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு பல எடுத்துகாட்டுகள் உள்ளன ,
காவேரி பூம்பட்டினம் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆரசியாலர்களால் நிருபிக்க பட்டு உள்ளது , சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்று நிருபிக்க பட்டு உள்ளது .
சமஸ்கிருதம் பிராகிதமும் , பாலி யும் கலந்தது , இது தீய நோக்கத்துடன் தமிழ் மொழியுடன் கலக்க பட்டு தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் 22 மொழிகளாக பிரிக்கப்பட்டது , மற்றும் தமிழ் ஓலைசுவடிகளை எடுத்து சமஸ்கிருததில் பெயர்த்து எழுதி புராண கதைகளை புனைந்து தமிழர்களின் மதம் , கலாசாரம் போன்றவட்டை அழித்து வருகின்றனர் .
தமிழர் மதமாகிய சிவனிய (சைவ) மாலிய (வைஷ்ணவ ) மதங்களின் தேவ வணக்கங்களை தம் வேத மதத்தில் புனை கதைகளுடன் இணைத்து தமிழர்களின் மதத்தின் தனி தன்மையை அழித்து ஹிந்து மதம் என்னும் பொய்யான வாதத்தை வைத்து தமிழை சீரழிக்க வைணவம் , சைணவம் என்னும் மத போராட்டத்தை உருவாக்கி தமிழ் மற்றும் தமிழர்களை அழிப்பதில் இன்று வரை இவர்கள்(சமஸ்கிருதத்தை உயர்ந்ததாக நினைபவர்கள் ) முக்கிய மானவர்கள் .

ஆதாரம் : பாவாணர் எழுதிய தமிழர் மதம் ,
மாசோ விக்டர் எழுதிய பற்றுளியாறு
குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம்
சிந்து சமவெளி நாகரிகக் வரலாறு

 ஆரியர் வருகைக்கு முன்னே சிவன் (சேயோன் )கோவில்களில் குருக்கள் அல்லது பண்டாரம் , திருமால் கோவில்களில் நம்பிமார்களும் , காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பார் களும் பூஜையை தனி தமிழில் செய்தனர் ,

வானியலோடும் கணியதொடும் தொடர்பு உடைய தமிழ் நான்மறை யை கற்றவர்களே வள்ளுவம் எனப்படும் பார்பரியம் இவர்கள் கணியம் நாள் பார்ப்பார்கள் அதனால் தான் தமிழ் பார்பரியர்கள் என அழைக்க பட்டனர் ,

நான்மறைக்கு முந்தைய நூல் ஆதிநூல் , எழுதாக் கேள்வி ,நத்து , சாகை ,கேள்வி ஆகிய பெயர்களும் உண்டு நான்மறையை சந்கேதபடுதி ரிக் , யஜுர் , சாமம் ,அதர்வணம் என்று நான்கு வேதங்களாக ஆரியர்களால் திரிக்க பட்டது .

கி .பி 5 ம் நூற்றாண்டில் ஆகமம் , சங்கேத தந்திரம் என்று தொடு மறைகளை இயற்றி பிராமணரே திரு கோவில் வழிபாடு செய்யும்மாறு ஆரியயர்களால் நம் வழிபாடு சிதைக்கப்பட்டது .

வடக்கே இருந்து வரும் அரகரிகர்கள் கொணர்ந்த நிற வெறி கொள்ள்கையே ஆரியம் ஆகும் சேரலத்தில் பரசுராமன் என்னும் வடுகன் நம் தமிழ் வள்ளுவ பார்பரியத்தை திரித்து கட்டியதால் வந்த கட்டுமானமே பிராமணியம் , தமிழ் பார்பரியர்கள் அதாவது வள்ளுவர் காலத்திற்கு முற்பட்ட பார்பரியம் வள்ளுவ பார்பரியம்.
வள்ளுவ பார்பரியமும் , பிராமணியமும் ஒன்றே என்னும் மாயையில் கட்டுப்பட்டு இருபவர்களே இன்றைய தமிழ் பார்பரியர்கள் அதனால் தான் தமிழ் மொழி மீது வெறியாக இருக்கும் தமிழரை ஹிந்து என்றும் இந்தியா என்றும் சொல்லும் இவர்களால் தான் " தமிழன் " என்று சொல்லுவதற்கு கூட வெட்கப்பட்டு தமிழ்க்கும் தமிழர்க்கும் தூரோகம் செய்கின்றனர் .

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் மதத்தின் தெளிவுகளை மேலும் அறிய கீழ்கண்ட புத்தகத்தை வாசிக்கவும்.

 

http://www.slideshare.net/smohankr/kalaga-thamil-vinaa-vidai?ref=http%3A%2F%2Fwww.infoog.com%2Fweblogs%2Fkalaga-thamil-vinaa-vidai.html

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இந்தியன் என்ற அடையாளத்தில் இருந்து தமிழனை மீட்பது எவ்வாறு முக்கியமோ அதே போல் இந்து என்ற மதத்தில் இருந்து தமிழர் மதத்தை மீட்பதும் காலத்தில் கட்டாயம் !

தமிழர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை . தான் எந்த மதத்தில் இருக்கிறோம் ? இதன் பின்னணி வரலாறு என்ன ? எத்தன அடிப்படையில் இந்த மதம் தோன்றியது? எந்தப் பண்பாடு இந்த மதத்திற்கு ஆணிவேராக விளங்குகிறது போன்ற தெளிவு தமிழர்களுக்கு ஏற்படும் போது தான் தமிழன் தனது அடிமைத் தனத்தில் இருந்து வெளியேறி சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்குவான்.

இப்போது தந்திரமாக வரையறுக்கப்பட்ட இந்து மதம் என்பது பல பண்பாடுகள், வழிபாடுகள், நூல்கள் , சாத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் ஆரியப் பண்பாடும் தமிழர் பண்பாடும் சேர்ந்தே இருக்கிறது . ஆரியப் பண்பாடு என்பது தமிழர் பண்பாடுகளை வழக்கம் போல் அழிக்கவே எத்தனிக்கிறது. தமிழர் சமயங்களையும் ஆரிய சமயங்கள் தான் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தமிழர்கள் ஆரிய மதம், பண்பாடு, மொழியை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை . தமிழர் திருமணம், பெயர்சூட்டு விழா தொடங்கி புதுமனை விழா கருமாரி வரை ஆரியப் பண்பாட்டை , மொழியை தமிழர்கள் இன்று ஏற்றுக் கொண்டு அது தான் இந்து மதம் என்ற மாயையில் சுழல்கின்றனர். தமிழை எல்லாத் தளங்களிலும் புறக்கணிக்கின்றனர் தமிழர்கள்.

தமிழர்கள் தங்களுக்கான வழிபாடு, சித்தாந்தம், மெய்யியல், பூசனைகள், ஓகம், குமுக பழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றை தமிழர் மதத்தின் அடிப்படையில் அதாவது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வழக்கப் படுத்திக் கொள்வதே தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரியப் பண்பாட்டை எல்லா வகையிலும் புறக்கணிக்க வேண்டும் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற வடநாட்டு கட்டுக் கதைகளை தமிழர்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரக் கூடாது . வள்ளுவரின் குரல் நெறியை கற்றுக் கொடுத்து மெய் பொருளை காணச் செய்ய வேண்டும். மெய்யியல் விரும்புபவர்கள் தமிழ் சித்தர் நூல்களை படிக்க வேண்டுமே தவிர பொய்யான வேதங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து தமிழர்களும் தான் தமிழர் மதத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மையை புரிந்து கொண்டு , இந்து மதமாக தங்களை அடையாள படுத்துவதை நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும் . தமிழர்களுக்கு தேவை ஒரு பண்பாட்டுப் புரட்சி . தமிழர் மதத்தை இந்து மதம் என்ற அழுக்கு குட்டையில் இருந்து மீட்பது காலத்தின் கட்டாயம் .

 

தமிழிய சுருக்க வரலாறு

தெற்கே குமரி கடலில் (இந்துமா கடல் ) குமரி கண்டம் தோன்றியது என்றும் வேதியல் மாற்றங்களால் குமரி கண்டம் மூழ்கி போனதும் , வடக்கே பனி மலை (இமயமலை) தோன்றியதும் நிலவியல் வரலாறு !

இது ஒரே காலத்தில் நடந்தது அன்று முதட்கட ற் கோளில் குமரி மலையும் பற்றுளி யாறும் , தலை கழக தென் மதுரையும் இரண்டாம் கட ற் கோளில் இடை கழகமும் காபாட புரமும் மூன்றாம் கட ற் கோளில் காவேரி பூம் பட்டினமும் அழிந்தது , அதன் பின் பாண்டியர்கள் வடக்கே இமயம் வரை அரசுஆண்டார்கள் என்பது வரலாறு , பற்றுளி யாறு என்று தொடங்கும் சிலபதிகார செய்யுள் லும் மலிதிரையூர்ந்து என்று தொடங்கும் களிதொகையுளும் (104) வடா அது என்று தொடங்கும் புறநானுறு (6) மூலம் தெரிய வருகிறது . நம் இலக்கியங்களில் இமயம் வரை தமிழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு பல எடுத்துகாட்டுகள் உள்ளன ,

காவேரி பூம்பட்டினம் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆரசியாலர்களால் நிருபிக்க பட்டு உள்ளது , சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்று நிருபிக்க பட்டு உள்ளது .

சமஸ்கிருதம் பிராகிதமும் , பாலி யும் கலந்தது , இது தீய நோக்கத்துடன் தமிழ் மொழியுடன் கலக்க பட்டு தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் 22 மொழிகளாக பிரிக்கப்பட்டது , மற்றும் தமிழ் ஓலைசுவடிகளை எடுத்து சமஸ்கிருததில் பெயர்த்து எழுதி புராண கதைகளை புனைந்து தமிழர்களின் மதம் , கலாசாரம் போன்றவட்டை அழித்து வருகின்றனர் .

தமிழர் மதமாகிய சிவனிய (சைவ) மாலிய (வைஷ்ணவ ) மதங்களின் தேவ வணக்கங்களை தம் வேத மதத்தில் புனை கதைகளுடன் இணைத்து தமிழர்களின் மதத்தின் தனி தன்மையை அழித்து ஹிந்து மதம் என்னும் பொய்யான வாதத்தை வைத்து தமிழை சீரழிக்க வைணவம் , சைணவம் என்னும் மத போராட்டத்தை உருவாக்கி தமிழ் மற்றும் தமிழர்களை அழிப்பதில் இன்று வரை இவர்கள்(சமஸ்கிருதத்தை உயர்ந்ததாக நினைபவர்கள் ) முக்கிய மானவர்கள் .

ஆதாரம் : பாவாணர் எழுதிய தமிழர் மதம் ,

மாசோ விக்டர் எழுதிய பற்றுளியாறு

குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம்

சிந்து சமவெளி நாகரிகக் வரலாறு

 

ஆரியர் வருகைக்கு முன்னே சிவன் (சேயோன் )கோவில்களில் குருக்கள் அல்லது பண்டாரம் , திருமால் கோவில்களில் நம்பிமார்களும் , காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பார் களும் பூஜையை தனி தமிழில் செய்தனர் ,

வானியலோடும் கணியதொடும் தொடர்பு உடைய தமிழ் நான்மறை யை கற்றவர்களே வள்ளுவம் எனப்படும் பார்பரியம் இவர்கள் கணியம் நாள் பார்ப்பார்கள் அதனால் தான் தமிழ் பார்பரியர்கள் என அழைக்க பட்டனர் ,

நான்மறைக்கு முந்தைய நூல் ஆதிநூல் , எழுதாக் கேள்வி ,நத்து , சாகை ,கேள்வி ஆகிய பெயர்களும் உண்டு நான்மறையை சந்கேதபடுதி ரிக் , யஜுர் , சாமம் ,அதர்வணம் என்று நான்கு வேதங்களாக ஆரியர்களால் திரிக்க பட்டது .

கி .பி 5 ம் நூற்றாண்டில் ஆகமம் , சங்கேத தந்திரம் என்று தொடு மறைகளை இயற்றி பிராமணரே திரு கோவில் வழிபாடு செய்யும்மாறு ஆரியயர்களால் நம் வழிபாடு சிதைக்கப்பட்டது .

வடக்கே இருந்து வரும் அரகரிகர்கள் கொணர்ந்த நிற வெறி கொள்ள்கையே ஆரியம் ஆகும் சேரலத்தில் பரசுராமன் என்னும் வடுகன் நம் தமிழ் வள்ளுவ பார்பரியத்தை திரித்து கட்டியதால் வந்த கட்டுமானமே பிராமணியம் , தமிழ் பார்பரியர்கள் அதாவது வள்ளுவர் காலத்திற்கு முற்பட்ட பார்பரியம் வள்ளுவ பார்பரியம்.

வள்ளுவ பார்பரியமும் , பிராமணியமும் ஒன்றே என்னும் மாயையில் கட்டுப்பட்டு இருபவர்களே இன்றைய தமிழ் பார்பரியர்கள் அதனால் தான் தமிழ் மொழி மீது வெறியாக இருக்கும் தமிழரை ஹிந்து என்றும் இந்தியா என்றும் சொல்லும் இவர்களால் தான் " தமிழன் " என்று சொல்லுவதற்கு கூட வெட்கப்பட்டு தமிழ்க்கும் தமிழர்க்கும் தூரோகம் செய்கின்றனர் .

 

 

அருமையான பதிவு.

 

அப்படியானால் தமிழர் மதம் என்ற ஒன்று இன்று எங்குமே இல்லையே. அதற்கு உங்கள் விளக்கம் என்ன?

 

1) எதற்கெடுத்தாலும் ஆரியனை குற்றம் சொல்லிக் கொண்டு இருப்பதனால் என்ன பயன்?

2) இன்று நாம் செய்ய வெண்டியது என்ன?

3) நிகழ் கால தமிழர் மதம் எங்கே இருக்கிறது?

4) தமிழர் மதம் தான் உண்மையான மனித மதம் என்பதற்கான் ஆதாரங்களை வையுங்கள்.

5) தமிழர் மதத்தை தமிழரிடமாவது கொண்டு சேர்க்கவே இந்த பதிவு எனவே விரிவான் விளக்கம் தேவை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழர் மதம் என்பதற்கு வரையறையாக எதைக் குறிப்பிடுகின்றீர்கள். திருவள்ளுவரை மட்டும் துாக்கிப் பிடித்துக் கொண்டு, இதர தமிழ்ப் புலவர்களைக் கைவிட்ட திராவிடக் கும்பல்கள் வழியையா?"

இல்லை. தமிழில் இன்றைக்கு கையில் கிடைத்திருக்கிற தமிழனின் அறிவுச்சொத்து மிக சொற்பம். அழிந்தவைகள் ஏராளம். இருப்பவையையே நாம் இன்னும் முழுவதாக புரியவில்லை. இதற்கிடையில் நாம் நம் அறிவுச்சொத்துக்களை வளர்த்தெடுக்க வேண்டிய மாபெரும் கடமை நமக்குண்டு. தமிழர்களாகிய ஒவ்வொருவரும் கொஞ்சம் இதற்காக உழைப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் மதமாகிய சிவனிய (சைவ) மாலிய (வைஷ்ணவ ) மதங்களின் தேவ வணக்கங்களை தம் வேத மதத்தில் புனை கதைகளுடன் இணைத்து தமிழர்களின் மதத்தின் தனி தன்மையை அழித்து ஹிந்து மதம் என்னும் பொய்யான வாதத்தை வைத்து தமிழை சீரழிக்க வைணவம் , சைணவம் என்னும் மத போராட்டத்தை உருவாக்கி தமிழ் மற்றும் தமிழர்களை அழிப்பதில் இன்று வரை இவர்கள்(சமஸ்கிருதத்தை உயர்ந்ததாக நினைபவர்கள் ) முக்கிய மானவர்கள்.

 

தமிழர் மதமாகிய சிவனிய (சைவ) மாலிய (வைஷ்ணவ ) மதங்களின் கோட்பாடுகள் என்ன?  தமிழர்கள் அதனை முற்றிலுமாக ஏன் கைவிட்டார்கள்?

 

 

 

Link to comment
Share on other sites

இப்போது இந்தத்திரி சரியான ஒரு திசைக்கு வந்திருப்பது போல் தெரிகிறது.
 
ஆரம்பத்தில் வேறு எங்கோ போகப்போவது போல் இருந்தது.  :icon_idea:
 
மறைமலை அடிகள் எழுதிய புத்தகங்களில் தமிழர்மதமாகிய சிவவழிபாட்டினைப் பற்றி பல தகவல்களை அறிந்து கொள்ள முடியுமென நினைக்கிறேன். 
 
வாழ்த்துக்கள் தொடருங்கள் jdlivi.  :)
 
அதுசரி jdlivi என்றால் என்ன ?  :)
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா என் பெயர் ஜா.டேவிட் லிவிங்ஸ்டன், ஆங்கிலத்தில் J. David Livingston. நான் முதலில் இமெயில் திறக்கும் போது David or Livingston or Livi என கொடுக்கும்போது ஆயிரக்கணக்கான பெயர்கள் வந்தன. ஆக கொஞ்சம் சுருக்கி வைப்போம் என நினைத்தபோது J D Livi ஆக அத்தனையும் இணைந்து jdlivi எனத்தான்  இமெயில் திறக்க முடிந்தது. ஆக அதனையே இணையப் பெயராக வைத்துக் கொண்டேன். போதும் என நினைக்கிறேன்.

 

 அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

அண்ட, பிண்ட விசாரம்

பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது. அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.


அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.

சிதம்பர இரகசியம்

“ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.”


ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் – ஆக 16 உயிர்ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை)பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது.தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13 உயிர்(· சேர்த்து)


“வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
விதழீராறாமங்குலத்தில் திட்டமிட்டவனாகதத்தில்
வீற்றிருந்த சிறந்தருளும் ருத்திரனுத்திரியைப் போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் திருநீறாயானவாறும்அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்
பாத மைம்பத்தோரட்சரமுங் காப்புத்தானே.”(ஞானம் எட்டி)


“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலுமுதலானசு
வாதிட்டான மெழுத்தா றாகும்பத்திதரும் பூரகத்திலெழுத்தோ
பத்துபாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்சித்திரமாம்
விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்சிறந்தவாக் கினையிலெழுத்
திரண்டு மாகும்சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சுசார்
வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”(ஞானம் எட்டி)

மூலாதாரம் …….. – 4
சுவாதிட்டானம்… – 6
மணிபூரகம் …….. -10
அநாகதம்……….. – 12
விசுத்தி………….. – 16
ஆக்கினை……….. – 2
அம்பரம்………….. – 1
*****************************
ஆக மொத்தம் ..-51
*****************************
இவையே சிதம்பர இரகசியம்.

ஐம்பத்தியொன்று ஐந்தானது.

‘ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே’


இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.


“அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்” எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.


கால்கள் – நகரம் – நடப்பு – நிலம் – உ – சிவப்பு -வயிறு – மகரம் – மறைப்பு – நீர் – எ – பச்சை -தோள் – சிகரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம் -வாய் – வகரம் – வனப்பு – விண் – ஒ – கறுப்பு -கண்கள் – யகரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம் -


“ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.”இதுவே பிண்ட இரகசியம்.


வழிபாடு:“மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.”(திருமந்திரம்)


“நமசிவய”வே வழிபாட்டு முதன்மை மந்திரம்.
அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க – மலர் வழிபாடு
எனும் அருட்சுனையாம்(அருச்சனை) உந்தியினுள்ளே
உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.


நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன: நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

நன்றி: பால நேசன்

 

நன்றி: முகநூல்

 தனையறியான் வகைகெட்ட சண்டிமாடே..!

இப்போது உலகில் பல சித்து வேலைகளைச் செய்பவர்களை எல்லாம் மக்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாம் சித்தர்களுமல்ல, ஞானிகளும் அல்ல..! தன்னிலை அறிந்தவர்கள் மட்டுமே மேன்மையுடையவர்கள். மற்ற எல்லோரும் சண்டிமாட்டுக்கு ஒப்பானவர்கள் என்பது சுப்ரமண்ய சித்தரின் திருவாக்காகும்.

பி.கு: ஆதிச்சித்தன், ஆதிசிவன், ஞானபண்டிதரான முருகப்பெருமான் தன் சீடரான சிவபெருமான்களில் (சிவத்தோடு இரண்டறக் கலந்தவர்கள்அனைவரும் சிவபெருமான்களே. அஃதாவது, சித்தர்கள் அனைவரும் சிவபெருமான்களே.) ஒருவருக்கு மகவாக வந்து பிரணவ மந்திரமான ஓங்காரத்திற்கு (ஓம்) விளக்கமளித்த, அருட்பெருஞ்சோதியான இறையும், சித்தர்களின் ஆசானே சுப்ரமணியரான முருகப்பெருமான் ஆவார். ஆசான் சுப்ரமணியரை மிஞ்சிய தெய்வமில்லை என்பது சித்தர் வாக்கு.

 

நன்றி: முகநூல்

 

 321373_440006936092631_1563666444_n.jpg

 389018_439913496101975_718107950_n.jpg

 923027_439339746159350_1788540822_n.jpg

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

slide-1-638.jpg?1358327880

 slide-2-638.jpg?1358327880

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

slide-3-638.jpg?1358327880

 slide-4-638.jpg?1358327880

 slide-5-638.jpg?1358327880

 slide-6-638.jpg?1358327880

 slide-7-638.jpg?1358327880

 slide-8-638.jpg?1358327880

 slide-9-638.jpg?1358327880

 slide-10-638.jpg?1358327880

 slide-11-638.jpg?1358327880

 slide-12-638.jpg?1358327880

 slide-13-638.jpg?1358327880

 slide-14-638.jpg?1358327880

 slide-15-638.jpg?1358327880

 slide-16-638.jpg?1358327880

 slide-17-638.jpg?1358327880

 slide-18-638.jpg?1358327880

 slide-19-638.jpg?1358327880

 slide-20-638.jpg?1358327880

 slide-21-638.jpg?1358327880

 slide-22-638.jpg?1358327880

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரியர்கள் என்பவர்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து வந்தனர் ? அவர்கள் பேசிய சமஸ்க்ரிதம் எங்கிருந்து வந்தது ? எந்த காலக் கட்டத்தில் சமஸ்க்ரித வேதங்களை அவர்கள் இயற்றினார்கள் எம்பதையும், இந்திய கண்டத்தில் ஆரியர் வருகை பற்றி ரிக் வேதத்தில் என்ன கூறியுள்ளனர் என்பதை பற்றியும் பி பி சி ஒரு ஆவணப் படம் எடுத்துள்ளது. இந்தப் படம் இந்திய அரசின், இந்திய தொல்லியல் துறையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது . ஆரியர்களின் வருகைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் பூர்விகப் பண்பாடுகள், மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டது. ஆரியர்களின் ஹோமம் செய்முறை, அஸ்வமேத யாகம் , சோம பானம் முதலிய பண்பாடுகள் துருக்கி மினிஸ்தான் நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்திற்கு வரும் முன்னேரே ஆரியர்கள் இவற்றை பின்பற்றி உள்ளனர். அதை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து உள்ளனர் ஆய்வாளர்கள். இதே காணொளி தொகுப்பில் தான் , இந்தியாவின் முதல் பூர்வ குடி மனிதன் விருமாண்டி என்ற தமிழரை அடையாளம் காட்டினார்கள். எனினும் இந்துத்வா ஆதரவாளர்களும் , ஆரியர்களும் இந்த ஆராச்சியை மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தமிழர்கள் அவசியம் இந்த வரலாறு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் .

 

<iframe src="http://www.facebook.com/video/embed?video_id=638555952825925" width="640" height="352" frameborder="0"></iframe>

 

Link to comment
Share on other sites

மேலும் இவர்களே தான் பஞ்சபூதங்களை வணங்கினார்கள் என்றும் அந்த பக்கங்களில் இன்னமும் பஞ்ச பூதங்களை வணங்கும் பழக்கம் இருக்கிறது என்றும் கேள்விப்படேன். தமிழர் சிவனின் ஞ்ன மார்க்கத்தை மட்டும்  பின்பற்றியவர்கள்.

 

குந்தி திராவிடப் பெண். அவளுக்கு சூரியனால் பிள்ளை பிறந்ததாக சேர்க்கப்பட்டது உண்மையாக நிலவி வந்த கர்ணபரம்பரை பாரதக் கதையில் இருக்காதது. கதை வடமொழியில் எழுதிய  நேரத்திற்கு சற்று முன்னர் தமிழர் தனிய ஞான மார்க்கத்தைதான் பின் பற்றினார்கள். இதனால் கடவுள் பற்றிய தத்துவங்கள் சிவன் போன்ற அந்தணர் அல்லது பிரமணரால் குரு சீடன் முறையால் போதிக்கப்பட்டது.  இதனால்தான் சிந்து வெளியில் கோவில்கள் இல்லை. குரு- அறிந்தவன், சீடன்- அறிய முயல்பவன். இதில் சாதியும் இருக்கவில்லை. வர்ணமும் இருக்கவில்லை. ஆனால் பிற்காலம் குருக்கள் என்பது வர்ணம் ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய நிலைக்கு காரணம் என்ன  என்று பார்த்தோமானால்............... கீழே

 

 

புலிக்கொடி பறக்க உலகம் முழுவதும் ஆண்டான் தமிழன் ( முன்பொரு காலத்தில்)

உலகம் முழுவதும் ஆண்ட நம் தமிழனின் பலம் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டியது

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம்.

காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது.

அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. பள்ளன்,பறையன் என்ற சாதிவெறிக்கொடுமைகள்… போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்… அப்பப்பா…எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!!

இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத் தலைப்படுகிறானோ… அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…அன்றைக்குத்தான்.

நன்றி : அறிவுலகம்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
945893_454544271294000_234198604_n.jpg
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா… இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது. அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!.

அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த் ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.

அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!NanTri: Facebook

 21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்..!

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
-ஆசான் திருமூலர்
திருமந்திரம்-2008

விஞ்ஞான நோக்கம்:

ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது.

செயல்படும் முறை:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படத் துகள்களையே ((ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்=>!!!???)) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
திருமந்திரம்-2008

விளக்கம்:

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை ((ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்!!!???))
ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒருதுண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதுலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் நோக்கமும், செய்முறியும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர. ஏனெனில் நாம் இதை தற்பொழுது “மதிப்பெண்களுக்காக” படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்
க(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்த்தியர். ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீககருத்துக்களை(((உண்மையில் ஆன்மீகம் என்பது வேறு, கடவுள் என்பது வேறு, மதம் என்பது வேறு, மதபோதகர் என்பது வேறு,))) பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிருப்பித்து எழுதினார என்றால் கோட்ப்பாட்டு இயற்பியலில்(Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதிஉயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. எ.கா அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொளகை(Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை(General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை. 21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி:
தமிழருக்கு என தனி பண்பாடு கலாச்சாரம் உள்ளதா? உள்ளது எனில் தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழனா அல்லது பண்பாடு கலாசாரத்தை பின்பற்றுபவன் தமிழனா ?

பதில்:
தமிழனாக இருப்பவர்கள் எல்லோருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் தெரியும். ஆரிய அடிமைக் கூட்டத்திற்கு இது விளங்காது. தமிழருக்கு நிச்சயம் தனித்துவமான பண்பாடு உள்ளது. எப்படி ஆரியர்களுக்கு நயவஞ்சக குணம் அவர்கள் பண்பாட்டில் ஊறி உள்ளதோ, அதேபோல் தமிழர்கள் அனைவர்க்கும் மேன்மை பொருந்திய தனித்துவமான பண்பாடு உள்ளது . வந்தாரை வாழ வைப்பதில் இருந்து, எல்லா உயிர்களையும் தம்மைப் போல் நேசிப்பது வரை தமிழனின் பண்பாடு உலகில் எவருக்கும் குறைந்தது இல்லை.

தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழனா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லை என்பதே பதில். கருணாக்களும் , சங்கர மடாதிபதிகளும், சோ, இந்து ராம் போன்ற இந்துத்வா கொள்கை உடையோரும் தமிழ் தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் நயவஞ்சகம் நிறைந்த சூதுடைய குணம் அவர்களை தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறது.

யார் தமிழர்கள்? அவர்கள் பண்பாடு யாது ? மானமுள்ளவனாக, சுயமரியாதை உள்ளனவனாக, இயற்கையை நேசிப்பவனாக, அடுத்த இனத்திற்கு கனவினும் தீங்கு நினைக்காதவனாக, அடுத்தவர் பண்பாட்டை , மொழியை அழிக்க முயற்சி செய்யாதவனாக, தங்களுக்கு நம்மை செய்பரை உயர்த்திப் பிடிப்பவனாக, தனது சொந்த உழைப்பில் வாழ்பவனாக, அடுத்தவர் குடிகெடுக்க விரும்பாதவனாக, விருந்தோம்பலில் சிறந்தவனாக, மதவெறி பிடித்து ஆடாதவனாக, தம்மை அழிக்க வந்த பகை சக்தியை திருப்பி அடித்து விரட்டுபவர்களாக, தன்னுடைய தாய் மொழியை, தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசிப்பவர்களாக, தங்களது இலக்கியங்களை போற்றுபவர்களாக இருப்போர் அனைவரும் தமிழ்த் தாய் பிள்ளைகளே. தமிழர்கள் இந்தப் பண்பாட்டை பின்பற்றுபவர்கள் அல்ல. இந்தப் பண்பாட்டை இயற்கையிலேயே உள்வாங்கியவர்கள்.

இப்போது நரிகள் ஊளையிடலாம்...

 

நன்றி: முகநூல்தமிழர்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், ஆரியம் சார்ந்த இந்துக்கள், ஆரியம் சாராத இந்துக்கள், தமிழர் சமயத்தை பின்பற்றுபவர், கடவுள் மறுப்பாளர்கள் என பலரும் தமிழினத்தில் உள்ளனர். இவர்களுள் தமிழர் என்பது தான் தங்கள் முதன்மை அடையாளம் என நினைப்பவர்கள் அனைவரும் தமிழ்த் தேசத்தின் பிள்ளைகளே. தமிழ்த் தேசத்தின் பாதுகாவலர்களே.

ஆனால் ஏன் இந்துத்வாவை மட்டும் சில பதிவுகளில் தாக்குகிறீர் என சிலர் நம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு நம் பதில்..

நம்மை வலிந்து வந்து தாக்குபவர் யாராக இருந்தாலும் நாம் திருப்பி அடிப்போம். ஈழத்தில் பௌத்தம் தமிழர்களை தாக்கிய போது தான் திருப்பி தாக்கினோம். எங்கள் பண்பாட்டை, மொழியை, வரலாற்றை அழிக்க ஆரியம் எத்தனிக்கும் போது அதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதே போல் தமிழர் என்பதை முதன்மை அடையாளமாக கொள்ளாத முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கடவுள் மறுப்பாளர்கள் எங்கள் மேல் தாக்குதல் தொடுத்தால் நிச்சயம் திருப்பி அடிப்போம். மதவாத சக்திகள் எந்த வடிவத்தில் வந்து எங்கள் இனத்தை தாக்கினாலும் தமிழர்கள் பதிலடி கொடுப்போம்.

வரலாற்றில் தமிழர்கள் வலிந்து போய் ஒரு இனத்தை அழித்தது கிடையாது. ஆனால் எங்களைத் தான் பல இனங்கள், மதங்கள் வலிந்து வந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு மதத்தை விட, சாதியை விட இனம் தான் பெரிது என்பதை உணர்ந்து வரலாறு காட்டிய வழியில் திடமான எதிர்காலத்தை அமைக்க தமிழினம் தன்னைத் தானே வழிநடத்தி செல்லும்.இப்போது மதவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் உத்தர தமிழ்நாடு பிரிவு (அதிலும் சமஸ்க்ரிதம்) ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழீழத்தில் அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்கிறதாம் . 25 கிராமங்களை தத்தெடுத்து சேவை செய்கிறதாம். தமிழ் மக்கள் என்னென்ன கேட்கிறார்களோ அவற்றையெல்லாம் வாங்கித் தருகிறதாம் . குழாய்கள், மிதிவண்டி, மாடுகள், உளவு இயந்திரங்கள் இவற்றையெல்லாம் கொடுத்து தமிழ் மக்களுக்கு உதவுகிறதாம் . இந்த செய்தியை ஆர் எஸ் எஸ் இயக்கம் முகநூலில் வெளியிட்டு பெரிய பரப்புரையை செய்து வருகிறது.

நம்முடைய கேள்விகள்.

இதைத் தானே இந்திய அரசு போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்வதாக சொல்லி ஆயிரம் கோடிகள் இலங்கை அரசுக்கு வழங்கியது. ஒருவேளை இந்திய அரசு ஆர்.எஸ்.எஸ் மூலமாக செய்கிறதா ?

தமிழகத்தில் இருந்து ஒரு மனிதாபிமானமுள்ள தமிழர் ஈழத்திற்கு சென்று தமிழ் மக்களுக்கு உதவிட சென்றால் , அவரை பிடித்துக் கொண்டு போய் நான்காவது மாடியில் விசாரணை செய்கிறது இலங்கை ராணுவம். இதுவரை தமிழர்களின் உதவிகள் எவையும் ஈழத் தமிழரை சென்றடையவில்லை. தமிழகத்தில் இருந்து தமிழர்கள் உதவி செய்ய முயன்று, அவர்களுக்கு இலங்கையின் உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை சிங்கள அரசு. ஆனால் ஆர்.எஸ்.எஸ் குழுவிற்கு மட்டும் ஈழத்திற்கு சென்று உதவுவதற்கு எப்படி அனுமதி அளித்தது இலங்கை அரசு ?

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை அரசிடம் கேட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் . இதில் இவர்களுக்கும் இந்திய அரசுக்கும் ஒரே நிலைப்பாடு தான். போர் நடக்கும் போது இந்த இயக்கம் என்ன செய்து கொண்டிருந்தது . 2000 தமிழர் கோவில்களை சிங்கள அரசு இடித்ததை இதுவரை ஏன் கண்டிக்க வில்லை இந்த மதவாத இயக்கம் ?

இன்று ஈழத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மதவாத இயக்கம் செல்ல வேண்டிய அவசியம் என்ன ? தமிழர்களுக்கு, தமிழக இயக்கங்களுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றபோது இந்துத்வா பயங்கர வாதிகளுக்கு எப்படி அனுமதி கிடைக்கின்றது ? இந்திய அரசும் , ரா உளவுத் துறையும் , ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது இவர்கள் அனைவரும் ஒரே லட்சியத்துடன் செயல்படுவதை தான் காட்டுகிறது. அந்த லட்சியம் தமிழினத்தை அழிப்பது ஒன்று தான் .

http://samvada.org/2013/news/rss-at-the-service-of-sri-lankan-tamils-rss-kshetra-karyavah-rajendran-at-chennai/
72552_636189669729220_1539563941_n.jpg

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி திரு வந்தியதேவன் அவர்களே!

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் என்னை ஒரு சாதி வெறியனாக மாற்ற முயற்சிக்கின்றது.

ஆனால் தமிழர் மதம் சாதி உணர்வை தூண்டவில்லை

சமத்துவத்தை தூண்டுகிறது.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வ உரை:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான பொதுவுடைமை சித்தாந்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய அய்யன் திருவள்ளுவரை போற்றாமல் இருக்க முடியவில்லை. தமிழனாய் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்.

 தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்.

தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள். அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை. தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
Photo: தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார். தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள். ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி. முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும். ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம். பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது. சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள். அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை. தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார். யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருவிலா வழிபாடு:

 

கடவுள் = கடந்து + உள் + இருப்பவர்

 

அவரே கடவுள்

 

துறவறத்தார்க்கு மட்டுமின்றி அறிவு விளக்கம் பெற்ற இல்லற்த்தாற்கும் உருவிலா வழிபாடே உகந்தது. உருவ வழிபாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப்படாமற்போம். அதோடு இறைவனின் அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே  இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றினைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294309
  • ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜 அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂 சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣
  • எங்களுக்கு, கலியாணம்.  வாழ்த்துங்கள்...  fபிரண்ட்ஸ்.  🥰
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.