Jump to content

நடிகை ரேவதி- சுரேஷ் மேனன் விவாகரத்து


Recommended Posts

22-suresh-revathi-300.jpg

நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

 

ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

நன்றி http://tamil.oneindia.in/movies/news/2013/04/actress-revathi-get-divorce-173932.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

27 வருட, திருமண வாழ்க்கையின் பின்....
அவர்களுக்குள் எற்பட்ட, விவாகரத்து மனதை நெருடுகின்றது. :huh:

 

 

Link to comment
Share on other sites

இந்த செய்தி தொடர்பாக ரசிகன் ஒருவரின் கருத்து :

 

எனக்கு மிகவும் பிடித்த அழகிய நடிகை. மிகவும் பக்குவபட்ட நடிப்பால் என்னை கவர்ந்தவர். 27 வருஷமா நல்வாழ்க்கை வாழ்ந்துவிட்டு அவர்களின் பிரிவுக்காக நான் அவர் ரசிகன் என்ற முறையில் மிகுந்த மன வருத்தம் அடைகிறேன்

 

Link to comment
Share on other sites

தொடர்புபட்ட செய்திகள் :

 

 

விவாகரத்து செய்து கொண்ட  நட்சத்திர ஜோடிகள்

 

 

விஜயகுமாரி – எஸ்.எஸ்.ராஜேந்திரன்

 

23-1366692740-vijaykumar-rjenseran-600.j

 

லட்சிய நடிகர் என்று போற்றப்படும் எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி ஜோடி பிரபலம் அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி திரையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணைந்து பின்னர் பிரிந்து விட்டனர்.

 

சரிதா-முகேஷ்

 

23-1366692865-saritha-mkesh-600.jpg

 

மலையாள நடிகர் முகேஷ் உடன் திருமணம் செய்த சரிதா பல காலம் இணைந்து வாழ்ந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றனர்.

 

கமல்ஹாசன் – சரிகா

 

23-1366693013-kamal-sarikga-600.jpg

 

நடிகர் கமல்ஹாசன் வாணி உடனான பிரிவிற்குப் பின்னர் சரிகாவை மணந்தார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆன நிலையில் 20 ஆண்டுகள் வாழ்ந்த அவர்கள் கடைசியில் பிரிந்து விட்டனர்.

 

ராதிகா – பிரதாப் போத்தன்

 

23-1366693072-radhika-prathap-600.jpg

 

பிரதாப் போத்தனுடன் இணைந்து நடித்த ராதிகா அவரையே தனது வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். சில காலம் வாழ்ந்த அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

 

சரத்குமார் – சாயா

 

23-1366693284-sarath-mumar-600.jpg

 

சாயாவை காதலித்து கரம் பிடித்தவர் நடிகர் சரத்குமார். குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆனபின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.

 

ராமராஜன் – நளினி

 

23-1366693416-ramaraj--nalini-600.jpg

 

திரைஉலகில் பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி நளினி-ராமராஜன். பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். திருமணத்திற்குப் பின்னர் நடிக்காமல் இருந்தார் நளினி. பின்னர் ஏற்பட்ட கருத்து மோதலில் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது நளினி சீரியல் நடிகையாகிவிட்டார்.

 

சீதா – பார்த்திபன்

 

23-1366693570-parthiban-seetha-60.jpg

 

துணை இயக்குநராக இருந்தபோதே நடிகையாக அறிமுகமான சீதாவை காதலித்தவர் பார்த்தீபன். தன்னுடைய முதல் பட கதாநாயகியும் சீதா தான். எதிர்ப்புகளைத் தாண்டி இந்த ஜோடி இணைந்தது. இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின்னர் பிரிந்து விட்டனர்.

 

ரோகினி – ரகுவரன்

 

23-1366693723-raguvaran-rogini-600.jpg

 

நடிகர் ரகுவரன் - நடிகை ரோகினி இடையேயான திருமணம் மகன் பிறந்த பிறந்த பின்னர் சில ஆண்டுகளில் கருத்து மோதல் வெடித்து பிரிவில் முடிந்தது.

 

 

பிரபுதேவா – ரம்லத்

 

23-1366693807-prabhudeva-with-family-600

 

நடன இயக்குநர் பிரபுதேவா, தன்னுடன் நடனமாடிய ரமலத்தை காதலித்து போராட்டத்திற்குப் பின்னர் கரம் பிடித்தார். மூன்று குழந்தைகள் பிறந்த பின்னர் மற்றொரு நடிகையுடன் ஏற்பட்ட காதலால் விவாகரத்து பெற்றார்.

 

 

பிரகாஷ்ராஜ் – லலிதாகுமாரி

 

23-1366693890-prakashraj-lalithakuamr-60

 

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகை லலிதா குமாரி இடையே நடைபெற்ற திருமணம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மணவாழ்க்கை திடீரென்று முறிந்து போனது.

 

ஊர்வசி – மனோஜ். கே.ஜெயன்

 

23-1366694006-oorvasi-with-husband-12600

 

நடிகை ஊர்வசி, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு எர்ணாக்குளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

 

ரேவதி - சுரேஷ்மேனன்

 

23-1366694090-revathi-sureshmenon-2-600.

 

பிரபல நடிகையாக இருந்த போதே கேமரமேன் சுரேஷ்மேனன் உடன் காதல் ஏற்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பரஸ்பர விவாகரத்து கிடைத்தது.


நன்றி http://tamil.oneindia.in/movies/news/2013/04/top-10-shocking-celebrity-break-ups-in-kollywood-173956.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு நன்றி.  (சில தகவல்கள் எனக்கு தெரியாதவை. இன்று அறிந்து கொண்டேன். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு நன்றி.  (சில தகவல்கள் எனக்கு தெரியாதவை. இன்று அறிந்து கொண்டேன். )

 

பலர் வேறு, சோடி சேர்ந்து... தூள் கிளப்புகின்றார்கள் அக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் பிரிவு எதற்காக???

புரிந்து கொள்ளவோ

ஏற்கவோ முடியவில்லை.... :(

Link to comment
Share on other sites

29 வருஷ வாழ்கையும் வேஸ்ட் பிரகாஷ் ராஜ் மாதிரி பிடிக்கலியா let's be friends என்று சொலிட்டு வேளைக்கே பிரிஞ்சிடனும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது... கமல் மாதிரி....
இரண்டுக்கு, அடுத்து மூன்று.... என்று வாழப், பழகிக்கணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை கசந்தால் இலகுவாய் கிடைக்கிறது விவாகரத்து.

Link to comment
Share on other sites

தொண்ணூறுகளிலேயே இவர்கள் பிரிந்துவிட்டார்களே.. பிற்பாடு சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை.. இப்போதுதான் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொள்கிறார்கள் போலை இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அடித்துகொண்டு பிரிந்துவிடுகிறார்களே? இவர்களின் வாரிசுகளின் மனநிலையைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்தார்களா? கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டால், குடும்பத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு விடுதலை போலும்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை..... 18 மணித்தியாலத்துக்கு இடையில்,  1501 பேர் பார்வையிட்டுள்ளார்கள். :D

 

Link to comment
Share on other sites

இந்த திரியை..... 18 மணித்தியாலத்துக்கு இடையில்,  1501 பேர் பார்வையிட்டுள்ளார்கள். :D

 

அத்தனைபேரும் வாழ்க்கையில் வெறுத்து போய்யுள்ளார்கள், எப்படா தமக்கும் விவாகரத்து (விடுதலை) கிடைக்குமென்று :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனைபேரும் வாழ்க்கையில் வெறுத்து போய்யுள்ளார்கள், எப்படா தமக்கும் விவாகரத்து (விடுதலை) கிடைக்குமென்று :D

 

திருமணம் செய்ய முதல் இருக்கும் சந்தோசத்தை....

பலர் திருமணத்திற்குப் பின், அனுபவித்தில்லைப் போலுள்ளது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்ய முதல் இருக்கும் சந்தோசத்தை....

பலர் திருமணத்திற்குப் பின், அனுபவித்தில்லைப் போலுள்ளது. :D  :lol:

 

ரூ லேட்.. தமிழ்சிறீயண்ணா. இதுகளைத் தான் சின்ன வயசிலேயே யோசிக்கனும். அப்ப வேற சிந்தனையில இருந்திட்டு போய் படுகுழில விழுந்திட்டு.. அப்புறம் எப்படா தப்புவன்னு தருணம் பார்த்துக் காத்திருக்கக் கூடாது.

 

இவர்கள் மட்டுமல்ல.. சுகன்யா.. பானுப்பியா.. அம்பிகா.. சொர்ணமாலியா.. சோனியா அகர்வால்.. இப்படிப் பலர்.. விட்டிட்டு ஓடிட்டினம்..!

 

கூடி வாழ்பவர்களில் பலர் போக்கிடமில்லாமல் இதையும் விட்டா என்ன கதி என்று வாழ்பவர்களே அதிகம்..! இதெல்லாம் ஒரு வாழ்க்கை..! எப்பவும் சிட்டுக்குருவி போல சுதந்திரமா வாழனும்.. அதுதான் வாழ்க்கை. கலியாணம் என்று நம்மைச் சுற்றி நாமே ஒரு வேலையைப் போட்டிட்டு அதுக்குள்ள குந்தி இருப்பதல்ல மனித அல்லது உயிரின வாழ்க்கை..! :):icon_idea:

அதற்காக தனிமனித ஒழுக்கம் குலைத்து தறிகெட்ட தனமாக வாழ்வதும் அல்ல வாழ்க்கை..! எல்லாத்திற்கும் மனதளவில்.. ஒரு அளவுகோல் வைச்சிருப்பது அவசியம்..! :)

Link to comment
Share on other sites

ரேவதி எப்பவோ பிரிந்து விட்டார்.

கமல், ராதிகா, பிரகாஸ்ராஜ், பிரபுதேவா ஆகியோரை மண முறிவிற்குள்ளானவர்கள் எனும் வட்டத்திற்குள் எடுக்க முடியாது. அவர்கள் நெடுக்கர் சொன்ன 'சிட்டுக்குருவி' வாழ்க்கை வாழுபவர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

:icon_idea:

அதற்காக தனிமனித ஒழுக்கம் குலைத்து தறிகெட்ட தனமாக வாழ்வதும் அல்ல வாழ்க்கை..! எல்லாத்திற்கும் மனதளவில்.. ஒரு அளவுகோல் வைச்சிருப்பது அவசியம்..! :)

 

மனம் ஒரு ஆதிவாசிடைப் எந்த நேரம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லாது.திடிர் திடிர் என்று செட்டைவிடும் ஆகவே கலியாணம் கட்டி அந்த அளவுகோலால் .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அடித்துகொண்டு பிரிந்துவிடுகிறார்களே? இவர்களின் வாரிசுகளின் மனநிலையைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்தார்களா? கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டால், குடும்பத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு விடுதலை போலும்.

 

 

நன்றாக சொன்னீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டால் ரேவதிக்கு இப்ப ஆண்துணை இல்லையெண்டுறியள்.....அதுதான் ஊரிலை சொல்லுறமாதிரி ஆண்பாதுகாப்பு   :wub:  :wub: 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.