Jump to content

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்]


Recommended Posts

ரதி அக்கா,

 

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் என்னால் விளங்கப்படுத்திக்கொண்டிருக்க முடியாது.  :lol: நீங்கள் இரண்டாவது பந்தியில் சங்ககாராவுடன் எமது சகோதரர்களை ஒப்பிட்டு எழுதினதை வைத்து தான் நாங்கள் என்னமோ சங்ககாராவை எமக்காக கதைக்க சொன்ன ரீதியில் எனக்கு கருத்து எழுதி வைத்துள்ளீர்கள் என்று சொன்னேன். :D 

 

வேந்தன் அண்ணா Anbu Anbu என்ற நபரின் பெயர் போட்டு தான் கருத்து எழுதி வைத்திருக்கிறார். சுட்டிக்காட்டியும் நீங்கள் கவனிக்கவில்லை என்றால் அந்தோ பரிதாபம். :icon_idea:

 

நான் முதலே உங்களுக்கு 2,3 தடவை சொல்லியிருக்கிறேன்.உங்கட வேலையை மட்டும் ஒழுங்காய் பாருங்கோ என்று. புதிதாய் காணததைக் கண்டவர்கள் தான் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டு இருப்பினம்.அவையின்ட நினைப்பு தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரியும்,தாங்கள் மட்டும் தான் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் என்று

 

உங்களுக்கு மற்றவர்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் எனக்கு சொல்லிக்கொண்டு... :)

 

அதுசரி உங்களுக்கு பதில்சொல்ல முடியாவிட்டால் என்னை சின்னப்பிள்ளை என்று சொல்லி திசை திருப்பாதீர்கள். சங்கக்காரா மேல் பயங்கர அக்கறை கொண்ட நீங்கள் எனது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். :icon_idea:

 

ஒருவேளை வேந்தன் அண்ணா இணைத்த முகநூல் பதிவில் இருந்தபடியே சங்ககாரா நடந்திருந்தால் கூட அந்த ஆதாரத்தை வைத்து மட்டும் எப்படி அவருடைய உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று சொல்வீர்கள்? இதையும் இலங்கை அரசு சொல்லி தான் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற ரீதியில் ஏன் யோசிக்காமல் விட்டீர்கள்? :lol: மற்றவர்களுக்கு என்றவுடன் உடனடியாக அந்த வரிகளை தானே சம்பந்தமில்லாமல் தூக்கிப் பிடிக்கிறீர்கள். :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா,

 

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் என்னால் விளங்கப்படுத்திக்கொண்டிருக்க முடியாது.  :lol: நீங்கள் இரண்டாவது பந்தியில் சங்ககாராவுடன் எமது சகோதரர்களை ஒப்பிட்டு எழுதினதை வைத்து தான் நாங்கள் என்னமோ சங்ககாராவை எமக்காக கதைக்க சொன்ன ரீதியில் எனக்கு கருத்து எழுதி வைத்துள்ளீர்கள் என்று சொன்னேன். :D

 

 

நான் உங்கட‌,என்னோட‌ சகோதர‌ங்களை பற்றி எழுதினதுக்கு இப்படி ஒரு கார‌ணம் இருக்குது என இப்பத் தான் தெரியும் :( 
 

 

 

வேந்தன் அண்ணா Anbu Anbu என்ற நபரின் பெயர் போட்டு தான் கருத்து எழுதி வைத்திருக்கிறார். சுட்டிக்காட்டியும் நீங்கள் கவனிக்கவில்லை என்றால் அந்தோ பரிதாபம். :icon_idea:

 

வேந்தன் எழுதினது கிளியர் இல்லாமல் இருக்குது.அவர் எழுதினதை திரும்ப,திரும்ப வாசித்தும் எனக்கு விளங்கினது இது தான்; அவரும்,அந்த நண்பரும் அந்த இட‌த்தில் இருக்கும் போது இந்த சம்பவம் நட‌ந்தது போலவும்,அப்போது கவிதா அண்ணா இவரைப் பார்த்து சொன்னது போலவும் தான் இருந்தது...அந்த அன்பு இவராகக் கூட‌ இருக்கலாம் இல்லையா :unsure: 
 

 

 

 

 

உங்களுக்கு மற்றவர்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் எனக்கு சொல்லிக்கொண்டு... :)

 

அதுசரி உங்களுக்கு பதில்சொல்ல முடியாவிட்டால் என்னை சின்னப்பிள்ளை என்று சொல்லி திசை திருப்பாதீர்கள். சங்கக்காரா மேல் பயங்கர அக்கறை கொண்ட நீங்கள் எனது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். :icon_idea:

 

 

மேடையில் பல பேருக்கு முன்னாலே பேட்டி கொடுக்கிறதும்,எங்கட ஆட்களை கண்டதும் கையைக் காட்டி கெட்ட வார்த்தைகள் கதைப்பதற்கும் வித்தியாசமிருக்குது.அப்படி அவர் கதைத்திருந்தால்/செய்திருந்தால் அது நிட்சயமாய் அவர் உள் மனதில் இருந்து தான் வந்திருக்கும்.அது ஒரு சின்ன பிள்ளைக்கு கூட‌ விளங்கும்.அது உங்களுக்கு விளங்காத படியால் தான் அப்படி எழுதினேன் :D 
 

 

 

எது எப்படி இருந்தாலும் வேந்தன் இதில் அப்பாவி என்று விளங்கிட்டுது.யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு ஏமாந்திட்டார்...இத்துட‌ன் இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.யாருடைய மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்...நன்றி :icon_idea:
 

 

 

Link to comment
Share on other sites

நான் உங்கட‌,என்னோட‌ சகோதர‌ங்களை பற்றி எழுதினதுக்கு இப்படி ஒரு கார‌ணம் இருக்குது என இப்பத் தான் தெரியும்  
 
வேந்தன் எழுதினது கிளியர் இல்லாமல் இருக்குது.அவர் எழுதினதை திரும்ப,திரும்ப வாசித்தும் எனக்கு விளங்கினது இது தான்; அவரும்,அந்த நண்பரும் அந்த இட‌த்தில் இருக்கும் போது இந்த சம்பவம் நட‌ந்தது போலவும்,அப்போது கவிதா அண்ணா இவரைப் பார்த்து சொன்னது போலவும் தான் இருந்தது...அந்த அன்பு இவராகக் கூட‌ இருக்கலாம் இல்லையா

 

மேடையில் பல பேருக்கு முன்னாலே பேட்டி கொடுக்கிறதும்,எங்கட ஆட்களை கண்டதும் கையைக் காட்டி கெட்ட வார்த்தைகள் கதைப்பதற்கும் வித்தியாசமிருக்குது.அப்படி அவர் கதைத்திருந்தால்/செய்திருந்தால் அது நிட்சயமாய் அவர் உள் மனதில் இருந்து தான் வந்திருக்கும்.அது ஒரு சின்ன பிள்ளைக்கு கூட‌ விளங்கும்.அது உங்களுக்கு விளங்காத படியால் தான் அப்படி எழுதினேன்

 

எது எப்படி இருந்தாலும் வேந்தன் இதில் அப்பாவி என்று விளங்கிட்டுது.யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு ஏமாந்திட்டார்...இத்துட‌ன் இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.யாருடைய மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்...நன்றி
 

 

சங்ககாரா பற்றி கதைக்கும் போது, நாங்கள் இங்கு இருந்துகொண்டு ஊரிலுள்ள எமது சகோதரர்களை ஏன் போராடாமல் /ஆர்ப்பாட்டத்துக்கு செல்லாமல் இருக்கிறீர்கள் என்று சொல்லுவமா என்று  கேள்விகேட்டு எனக்கு நீங்கள் பதில் எழுதினால் அதற்கு அர்த்தம் சங்ககாராவையும் ஏன் எமக்காக கதைக்கேல்லை என்று நான் கேட்கிறேன் என்று நினைத்துள்ளீர்கள் என்பது தான். :) உங்களுக்கே நீங்கள் எழுதியது விளங்காவிட்டால் ஒன்றும் செய்ய ஏலாது. :lol:

 

வேந்தன் அண்ணா இணைத்தது கிளியரா தான் இருக்கு. உங்களுக்கு தான் விளங்கேல்லை. ஒழுங்கா விளங்காமல் தான் கருத்து வைத்துள்ளீர்கள் என்பதை இப்பவாவது ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. :lol: இனியாவது வடிவா விளங்கிக்கொண்டு பதில் போடுங்கள். :D

 

ஞாநி சங்கரன் என்பவர் சங்கக்காரா பற்றிய இந்த பதிவை வைத்து மாணவர் போராட்டத்தை எதிர்த்தும் சங்கக்காராவுக்கு ஆதரவாகவும் எழுதிக்கொண்டிருக்கிறார். அது பற்றி கவிதா என்பவர் "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க" என்று கூறியிருக்கிறார். சங்கக்காரா பற்றி Anbu Anbu என்பவர் கருத்து வைக்கும் போது இவற்றையும் சுட்டிக்காட்டி கருத்து எழுதியுள்ளார். அதை தான் வேந்தன் அண்ணா யாழில் இணைத்திருக்கிறார். நான் உட்பட பலருக்கும் அவ்வாறே அது விளங்கியுள்ளது. உங்களை தவிர. :icon_idea:

 

இங்கு Anbu Anbu என்பது வேந்தன் அண்ணாவா இல்லையா என்ற ஆராய்ச்சி எனக்கோ உங்களுக்கோ தேவையில்லை. :icon_idea: ஆதாரம் இணைக்க முடியுமா என்று மட்டும் கேட்டிருக்கலாம். அவரை அவ்வளவு பேசி எழுதியிருக்க வேண்டியதில்லை. :)

*******

உங்களுக்கு என்றவுடன் நியாயம் காற்றில் பறக்குது. மேடையில் சங்ககாரா பயத்துடன் கதைக்கிறார் மற்ற நேரங்களில் அவ்வாறே நடந்தால் அவர் தனது அடி மனதிலுள்ள இனவெறியை காட்டுகிறார். நல்லா சொல்லுங்கோ. உங்களை மாதிரி பலர் காப்பாற்ற நினைக்கும் வரை இனவாதிகள் தமது இனவாத கருத்துகளை இலங்கையிலிருந்து சொல்லலாம். ^_^ அவர்களாக இனவாத கருத்துகளை சொன்னாலும் கூட அவர்கள் உயிருக்கு பயந்து தான் சொல்கிறார்கள் என்று சொல்லி காப்பாற்ற உங்களை போன்றவர்கள் உள்ளார்கள். ^_^

 

இவரும் இலங்கை கிரிக்கெட் வீரர் தான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120234

 

இன்னும் இலங்கையில் தான் உள்ளார். வேறொரு சாட்டு சொல்லி விட்டு இந்தியாவில் நடைபெறும் ipl இல் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். அவரால் கிரிக்கெட்டை புறக்கணிக்க முடிந்த போது தமிழகம் என்ன சொன்னாலும் தான் ஏனைய இடங்களில் விளையாடியே தீருவேன் என்று சொன்ன குமார் சங்கக்காரா பயத்தில் சொல்கிறாராம். :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120297&page=1

 

இத்துடன் நானும் இத்திரியில் உங்களுக்கு பதிலளிப்பதை நிறுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

 

நாங்கள் எங்கட இனத்திலும்,புலியிலும் பற்று வைத்திருக்கிறோம்.அதே மாதிரி அவரும் அவரின்ட இனத்திலும்,ஆமியிலும் பற்று வைத்திருக்கலாம்[எங்களுக்குத் தெரியாது அவர் விரும்பி/விரும்பாமலா கதைத்தார் என்று]...ஆனால் தன்ட இனத்தில் உள்ள பாசத்தினால் எங்கள் இனம் மீது தேவையில்லாதவற்றை[வார்த்தைகளை உபயோகித்தல்] செய்தால் அது நிட்சயம் துவேசம் தான்...இங்கு அவரை நல்லவராக்குவதில் எனக்கு எந்த லாபமும் இல்லை அதே போல கெட்டவராக்குவதில் எந்த நட்டமும் இல்லை.ஆனால் எல்லாத்திற்கும் மேலாக நியாயம் என்று ஒன்று இருக்குதல்லவா

 

நியாயம், மனச்சாட்சி இரண்டையும் ஒதுக்கிவிட்டு கருத்து எழுதுவதில் நீங்கள் மட்டும்தான் யாழில் தலைமை வகிக்கிறீர்கள்.  ஆயிரம் சரி த்மிழர் பக்கம்தான் இருக்கு. ஆனால் நியாயம் சங்கக்கார என்று படிப்பவர்கள் எல்லோரையும் முட்டாகள் ஆக்கி முடிக்கிறீர்கள்.

 

நாடு முழுக்க 70% மின்சாரக்கட்டண உயர்வை காண்கிறது. சீனக் கம்பனிகள் 25% வீத உயர்வை மட்டும்தான் காணப்போகிறது.(அதுவும் வெளியே மட்டும்தான் அப்படி சொல்கிறார்கள். உண்மைகள் தெரியாது) அதற்கான தீர்வுகள் பற்றி பேச(அமெரிக்க தொழில் நுட்ப உதவுடன் மினகட்டன குறைப்புகள்) அமெரிக்க தூதுவராலயம் வரும் படி கேட்ட போது, மகிந்த பக்கம், தாம் விலைவாசிபற்றி அமெரிக்கவுக்கு ரிபோட் பண்ண தேவை இல்லை என்று மறுத்துவிட்டது. தமிழர் என்றால்  யார் என்றே தெரியாமல் இருக்கும் அப்பவி சிங்களவர்கள் கூடத்தான் இந்த கஸ்டங்களை அனுபவிக்க போகிறார்கள். தமிழருக்காக வேண்டாம், தயவுசெய்து அவர்களுக்காக சங்கக்காராவும், சங்கக்காராவின் சகோதரர்களும், இந்த காட்டுமிராண்டு அரசை எதிர்த்து ஒரு வசனம் சொல்ல மாட்டார்களா? இதை செய்தால் தன்னும் நீதி அவர்கள் பக்கம் இருந்து விட்டு போய்விடுமா? வக்காலத்து வாங்குவது என்றால் அதற்கு ஒரு தரம், சுயகௌரவம் என்பவை எல்லவற்றையும் இழந்தா செய்ய வேண்டும்.  

 

தமிழர் பக்கம் இருக்க முடியாது, தனக்கு என்று ஒரு தீவையே வாங்கி வைத்திருக்கும் இந்த சுரண்டல்க்காரன் பக்கம்தான் நீதி இருக்க முடியும் என்று அடித்து அடித்து எழுத என்னதான் துரோகம் இவருக்கு தமிழர் செய்துவிட்டார்கள். ஏன் தான், இவர் சிங்கள என்ற முறையில், ஈழத்தில் இல்லாத தமிழ் நாட்டு மாணவர்கள் இவரின் விளையாட்டை பகிஸ்கரிப்பத்தில் நியாயம் இருக்க முடியாது. 

 

இவ்வளவு நேரம் எழுதிவிட்டிர்கள். இதன் பின்னர் தன்னும் நீங்கள் கேட்ட முதல் கேள்வியான "மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?" என்பதை நியாப்படுத்த முடிந்ததா? அது தன்னும் முடியாவிட்டால் தொடர்ந்து எழுதி என்ன நிரூபிக்க முயல்கிறீர்கள்?(இந்த கேள்வி அந்த இடத்திற்கு தொர்பில்லாதது) 

 

நீங்கள் வந்து இறங்கும் வரை, இந்த திரி, நாம் தமிழ் நாட்டு மாணவர்களை வாழ்த்தமட்டுமே பாவித்தோம். செய்தி பதியப்பட்டவுடன் நான் மாணவர்களை வாழ்த்திமட்டுமே எனது கருத்தை பதிந்து விவாதத்தை உருப்படியான திசையில் ஆரம்பித்து வைத்தேன். நீங்கல் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள் போலிருக்கு. திரியையே வேறு எங்கோ கொண்டு செலுத்துகிறீர்கள். திரியில் எழுதுபவர்களை மிரட்டி வெளியே தள்ள முயற்சிக்கிறீர்கள்.

 

சும்மா நாங்கு வசனத்தில் 1.,2., 3.,4. என்று போட்டு ஏன்தான் தமிழ் நாட்டு மண்ணவர்கள் சங்கக்காரவுக்கு எதிராக போராடக் கூடாது என்று எழுத்துங்கள். அல்லது சும்மா சாளாப்பாமல் திரியை விட்டு விலகி போக முடியுமா என்றுபாருங்கள். குழந்தை பிள்ளைகள் மாதிரி மற்றவர்களை மட்டும் வெளியே தள்ளி உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் வைக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Sangakkara is a Sinhala Buddhist. He will never accaept or acknowledge the war crimes and crimes against humanity happened on Tamils by his own people. He will try his best to hide it. During the recent Australian cricket tour, he spoke about development and tourism. Hasn't mentioned a single word about the sufferings of Tamils in Srilanka. He will never do it, that is the fact.

 

I can recall what he said just before the Worldcup final in 2011. If Rathy can still remeber it........."I dedicate this victory(if they defeat India in finals) for our beloved soldiers who scrificed their lives to safeguard our motherland from terrorists. Their sacrifices need to be remebered when and wherever possible". What does this mean to you Rathy ? I am pretty sure that you understand what he said.

 

It is very easy to say that..:because he is living in Srilanka, it is hard for him to raise his voice against Mara regime". But the truth is, most of the Sinhalese see the defeat of LTTE as the defeat of Tamils and their cry for a seperate Tamil Homeland. Therefore I don't accept your excuse of Sangakkara pretending to be a Srilankan propagandaist because he is scared of his and his lovedones lives at home.

 

Accept the fact, he is Sinhala Buddhist in the first place. Then he is a cricketer.

 

If you are a die hard fan of Srilankan cricket and it is hard for you to criticise them, it is okay. I can understand that. But don't try to show Sinhala Buddhist cricketers as Gods of peace !!

 

எழுத்துக் கூட்டி வாசிச்சுப் பாத்தும் விளங்குதில்லை. அப்ப இனி இங்கிலிசிலையும் கருத்து எழுதலாம் எண்டு சொல்லுறியள்?

 

Link to comment
Share on other sites

a935789_480765231997435_230166696_n.jpg

சமிபத்தில் கிளப்பிவிட்ட புரளி: 83 கலவரத்தின் போது சிங்களவர்களிடமிருந்து பல தமிழர்களை காப்பற்றியவரின் மகன் தான் சங்கக்காரா..

 

Link to comment
Share on other sites

சங்ககாரவுக்கு கிடைத்த அதே வாழ்க்கை எனக்கு கிடைத்திருந்தால் சங்ககார தற்போது செய்யும் பிரச்சாரங்களைவிட நான் சற்று அதிகமாகவே செய்து இருப்பேன் என்று நினைக்கின்றேன். பந்துவீச்சாளர் முரளிதரனின் நிலைப்பாடும் ஏறக்குறைய சங்ககாரவினுடையதற்கு ஒப்பானது என்பதையும் சுட்டிக்காட்டத்தேவையில்லை. காரணங்கள் எவை?

 

சுகபோகமான வாழ்க்கை, புகழ், பணம், செல்வச்செழிப்பு, கெளரவம் இவை எல்லாம் ஒருவனுக்கு கிடைக்கும்போது.. இவற்றை தொடர்ந்தும் எதிர்காலத்தில் தக்கவைப்பதற்கு அவனுக்கு உள்ள இலகுவான வழிவகைகளில் ஒன்று தனது நாட்டிற்காக பிரச்சாரம் செய்வது என்றால்.. அதன்மூலம் அவனுக்கு நேரடியான பெரிய பாதிப்பும் ஏதும் இல்லை என்றால்.. எவன்தான் இவ்வாறு செய்வதற்கு முன்வரமாட்டான்?

 

சங்ககாரவின் வயது நாற்பதை நெருங்குகின்றது. எதிர்காலத்தில் அரசியலில் நுழைவதற்கும் அவரிற்கு நாட்டம் இருக்கலாம். அல்லது வியாபாரத்துறையில் கொடிகட்டி பறப்பதற்கும் விருப்பம் இருக்கலாம். எனவே, இப்படியான பிரச்சாரம் மூலம் தன்னை இலகுவாக எதிர்காலத்தில் வளப்படுத்திக்கொள்ளலாம் என்பதை உணரும்போது நிச்சயம் பிரச்சாரம் சூடு பறப்பதாகவே அமையும்.

 

இது தவறு என்று கூறுவதற்கு இல்லை. நமக்காக இரங்குவதற்கு அல்லது குரல் கொடுப்பதற்கு சங்ககார எமக்கு மாமனா, மச்சானா? போரின் வடுக்களை நேரடியாக உணராத ஒருவர், போரின் வடுக்களினால் நேரடியாக பாதிக்கப்படாத ஒருவர் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை தக்கவைத்து தன்னை இன்னும் முன்னேற்றுவதற்கான வழிவகைகளை தேடுகின்றார். யதார்த்தரீதியான பார்வையில் இவரில் குறைபிடித்து எதை சாதிப்பது என்பது புரியவில்லை. 

 

அர்ச்சுனா ரணதுங்கா, ஜெயசூரியா வரிசையில்... சங்ககார இணைந்துள்ளார். இன்று தமிழர் என்று சொந்தம் கொண்டாடப்படும் இலங்கை துடுப்பாட்ட அணியின் தலைவர் மத்தியூசும் நாளை சங்ககாரவின் பாதையில் பயணிக்கக்கூடும். தனது நாட்டிற்காக பிரச்சாரம் செய்யக்கூடும். நாம் என்ன செய்யமுடியும்?

 

கொள்கைரீதியாக விளையாட்டும், அரசியலும் வேறுபடுத்தப்படுவதையே நம்மில் பலரும் விரும்பலாம். ஆனால், தமது சுய லாபங்களிற்காக அல்லது வெளி அழுத்தங்களினால் உந்தப்படும் விளையாட்டுவீரர்கள் விளையாட்டில் அரசியலை புகுத்தும்போது அது எப்படியான மாற்றங்களை உருவாக்கும் என்பதை காலமே காண்பிக்கவேண்டும்.

 

தயா மேலே இணைத்த காணொலியில் சங்ககாரவின் பேச்சை கேட்கும்போது அவர் எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் தனது  செல்வாக்கு நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளும் ஒத்திகையாகவே உணரமுடிந்தது. ஜனநாயகரீதியான பார்வையில் பார்த்தால் இது தவறாகவும் தெரியவில்லை. 

 

பழி ஒரு இடம். பாவம் ஒரு இடம்.

Link to comment
Share on other sites

சங்கக்கார தன் இனத்திற்கு நன்மையானதைச் செய்கிறார்.. மாணவர்கள் எம்மினத்திற்கு நன்மையானதைச் செய்கிறார்கள்..! கிரிக்கட்டின் அகோர ரசிகர்கள் சங்கக்காரவுக்கு நன்மையானதைச் செய்கிறார்கள்.. :D  சங்கக்காரவுக்கு நன்மை என்பது சிங்கள இனத்திற்கு நன்மை. :wub:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பின் கருத்தை வாசித்தபோது......

 

நாம் செய்வது சரி  என்றே சொல்லவருகின்றார்.

மாணவர்கள் செய்வதும் சரியே

காரணம் எம்மினப்பற்று.

 

Link to comment
Share on other sites

நாம் உணர்ந்து பட பல இன்னும் இருக்கு.

 

சங்ககாரா நமது எதிரி அல்ல. நணபனுமல்ல. அதுவல்ல நமது பிரச்சனை.

 

நாம் இந்தியா முழுக்க எமது நியாயத்தை பரப்பவேண்டும். இதற்கு சங்ககாரவை காப்பாற்றிவிட்டு மேலே போக முடியாது. தமிழ் நாட்டில் சங்ககாராவை விட்டு விட்டு மற்றவர்களுக்கு மாத்திரம் எதிராக பிரசாரம் செய்யுங்கள் என்று கேட்க முடியாது. சங்ககாரா தன்னை கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களிடமிருந்தோ, இலங்கையிடமிருந்தோ பிரித்துக் கதைத்தது கிடையாது. சர்ச்சைக்குரிய  அவரின் பேச்சு முழுவதாக வேறு நோக்கத்தில் பதியப்பட்டது. இது கக்கீம், கணகரத்தினம் போன்றோர் ஐ.நா.வில் பேசி இலங்கையை காப்பாற்ற செய்த சேவை போன்றதே. சங்ககாரா பேசியது அவரது கொள்கை விளக்க பேச்சல்ல. அது கிகெட் வாரியத்தில் பேசும் பேச்சுமல்ல. அதை சங்ககாரா எந்த அரசியல் மேடையிலாவது பேசியிருக்கிறாரா என்பது தெரியாது. அந்த தொடர்பில்லாத பேச்சை வைத்து மாணவர் போராட்டத்தை கெடுக்க முயன்றது கருணாநிதி குடும்பம்.  அது பணம் சம்பந்தமானது. 

 

இதை விளங்கியவரும், விளங்காதவரும் உண்டு. ஆனால் மாற்றுக்கருத்துகள் செய்ய முயன்றது மிக வித்தியாசமன முயற்சி. கிடைத்த துரும்பில் தூங்கி தமைத்தாம் நிலைப்படுத்த முயன்றது தான் அவர்கள் செய்ய முயன்றது. 

 

 

Link to comment
Share on other sites

இது தவறு என்று கூறுவதற்கு இல்லை. நமக்காக இரங்குவதற்கு அல்லது குரல் கொடுப்பதற்கு சங்ககார எமக்கு மாமனா, மச்சானா? போரின் வடுக்களை நேரடியாக உணராத ஒருவர், போரின் வடுக்களினால் நேரடியாக பாதிக்கப்படாத ஒருவர் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை தக்கவைத்து தன்னை இன்னும் முன்னேற்றுவதற்கான வழிவகைகளை தேடுகின்றார். யதார்த்தரீதியான பார்வையில் இவரில் குறைபிடித்து எதை சாதிப்பது என்பது புரியவில்லை.

 

இங்கு தமிழக மாணவர்கள் சங்கக்காராவை எமக்காக கதைக்கும்படி கேட்கவில்லை. அவர் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் அவரையும் ஏனைய இலங்கை கிரிக்கெட் வீரர்களையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இலங்கை கிரிக்கெட் அரசியலாகி விட்டதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

 

அப்படியிருக்க சங்கக்காராவின் அப்பா இப்படி. அதனால் சங்கக்காராவுக்கு தமிழர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற செய்தி பரப்பப்படுவது மாணவர் போராட்டத்தை குழப்புவதற்கான முயற்சி. முகநூலில் பரப்பப்பட்ட அந்த செய்தி இந்த திரியிலும் இணைக்கப்பட்டதனாலேயே சங்ககாரா பற்றிய தகவல்களும் இத்திரியில் இணைக்கப்பட்டன.

 

மற்றபடி சங்கக்காரா எமக்காக கதைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நடக்கிற காரியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம்.

Link to comment
Share on other sites

April 2013 எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்

 
IPL இல் சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இலங்கை கிரிகெட் வீரர் குமர சங்ககராவை சென்னையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் விளையாட அனுமதிக்காததற்கு இன்று காலை எழுத்தாளர் ஞானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதைப் பற்றிய எனது பார்வையே இந்த கட்டுரைக்குக் காரணம். வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.
 
 
GNANI+DOLLOR+NAGARAM.JPG
 
 
ஞானியின் முகநூல் ஸ்டேடஸ்....

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு ( குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எனது கருத்தும் கேள்வியும்...

உங்களை நல்ல எழுத்தாளர் என்று சொல்லும் பலரிடம், நீங்கள் சூழலுக்கேற்ப பேசும் அரசியல் தந்திரவாதி, என்று சொல்லிய என் கருத்தும் இப்போது வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானி அவர்களே ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தடை சங்ககராவிற்கு மட்டுமான தடையல்ல. ஒட்டுமொத்த இலங்கை வீரர்களுக்கான தடை. இலங்கை என்ற நாட்டிற்கான தடை. இந்தத் தடையால் இதுவரை என்ன நடந்துவிட்டது ? என்று நீங்கள் கேட்கலாம்.

 
இதுவரை தமிழக மாணவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்தை தமிழகம் தாண்டி வேறெந்த மாநில மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் 1,40,000+ தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெளிமாநிலத்திலும் நாடுகளிலும் வாழும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்கள் அதற்கு சாட்சி.
 
இந்தத் தடைமூலம், மற்ற மாநில இளைஞர்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். சக தமிழ் நண்பர்களிடம் கேட்கிறார்கள். இதைப் பற்றிய செய்தியும், தமிழர்களின் இனப்படுகொலையை செய்யப்பட்டதின் பின்னணியும் மற்றவருக்கும் புரியும்படியான ஒரு துருப்புச் சீட்டாக இது அமைகிறது. ஒரு வகையில் இது இலங்கை மீது சர்வதேச அழுத்தம் தேவை என்ற கருத்தை வலுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.  

அதோடு உங்கள் ஸ்டேடஸ் பார்க்கையில் எனக்கு சில கேள்விகள் மனதில் உதிக்கிறது. முடிந்தால் பதில் அளிக்க முயற்சிக்கவும்.

1. இது சங்ககராவிற்கு மட்டுமேயான தடை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சங்ககராவை நாங்கள் கெட்டவன் என்றும் சொல்லவில்லை. இருந்தும், ஒரு தகப்பன் நல்லவன் என்பதால் அவனுக்கு பிறக்கும் மகனும் நல்லவனாகவே இருப்பான் என்று நீங்கள் நினைப்பது மிகவும் குழந்தைத் தனமாகவே இருக்கிறது. நல்ல தந்தைக்கு பிறந்த மகன்கள் பலர் சுயநல வாதியாக, ஊதாரியாக, சமூகப் பொறுப்பில்லாமல் திரிவதை உங்கள் வீடு எனது வீட்டின் பக்கத்திலேயே பார்க்கலாம்.

உங்கள் கூற்றுப்படி, சக்ககரா நல்ல தந்தைக்குப் பிறந்ததால் நல்லவர், அவருக்கு தடைவிதிக்கக் கூடாது என்றால், தவறான தந்தைக்குப் பிறந்த மகனும் தவறானவன் என்று சொல்வீர்களா ?

2. இதேபோல் இனப்படுகொலை, நிறவெறியில் ஈடுப்பட்ட பல நாடுகளை சர்வேதேச அரங்கம் நிராகரித்திருப்பதற்கு தேவைக்கு அதிகமாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்கா அணியை 22 வருடங்கள் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதையை உலகம் அறியும்.

இப்போது தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை சங்ககராவிற்கு எதிரானதென்றால், தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்ட தடை அந்த பதினோரு வீரர்களுக்கு மட்டுமே எதிரான தடை, நாட்டிற்கு எதிரானதல்ல என்பீர்களா ? இல்லை என்றால் உங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

3. தென் ஆபிரிக்க மக்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் அல்ல. இருந்தும் நிறவெறி பிடித்த அந்த நாட்டோடு இந்திய அணியை அந்த காலகட்டத்தில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா ?

4. தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் ஈழப் பிரச்னையை இங்கு பேச வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன். அப்படியானால் நீங்கள் இதுவரை எழுதியது தமிழகத்தைப் பற்றி மட்டும் தானா ? வேறு நாடுகளைப் பற்றி எழுதியதே இல்லையா ? சூழலுக்கேற்ற வேடம் ஏன் ?

5. மற்ற இலங்கை வீரகளுக்கான தடையைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், சன் ரைசர் சங்ககராவைப் பற்றிமட்டும் பேசுவது ஏன் ? (அவரின் அப்பா நல்லவர் என்பதாலா ? இல்லை சன் ரைசர் என்பதாலா ?). இதில் பெருத்த உள்நோக்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன.

6. சில விதமான தடைகள் மூலமே, ஒரு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அரங்கம் அடிபணிய வைக்க முடியும் என்பதை பாமரனும் அறிவான், இனபடுகொலை செய்த அரசை அடிபணியவைக்க இது துளியேனும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

7. ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழர்கள்தான் அவர்களுக்கு அசல் எதிரி என்றால், அவர்களுக்காக போராடாத நண்பர் நீங்கள் என்னத்தை வாரி வாரி நல்லது செய்துவிட்டீர்கள் ? அவர்களுக்கு எதிராக எழுதுவதா ? இல்லை உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா ?

8. ஈழத்தில் என்ன வேண்டும் என்பதை ஈழத்தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள், எத்தனை ஈழத்தமிழர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறீர்கள் ? வெளிநாடுகளில் தனி ஈழம் வேண்டும் என்று போராடும் ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இல்லை அவர்களின் வாசகம் உங்களுக்கு புரியவில்லையா ?

9. இலங்கையில் எங்களுக்கு சாப்பிட மட்டுமே வாய்திறக்க அனுமதி உண்டு எனச் சொல்லும் ஈழத்தமிழர்களை உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்குத் தெரியும். வெட்டி வசனம் பேசுவதை விட்டுவிட்டு அவர்களோடு பேசிப்பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.

முறைப்படி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தடை கோரியது தமிழர்கள் செய்த தவறு என்று இப்போது எனக்குப்படுகிறது.

பல ஆண்டுகளாக எழுதும் நீங்கள், சற்று அடிப்படையை ஆராய்ந்து எழுதுங்கள். அரசியல் விமர்சகர் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இஷ்டத்திற்கு விமர்சிக்கலாம் என்பதல்ல. இனியேனும் உங்கள் உள்நோக்கத்தை ஓரம் கட்டிவிட்டு உண்மையை எழுத முயற்சி செய்யுங்கள்.

 
நன்றி ! 
 
அன்புடன்,
அகல் 

 

http://kakkaisirakinile.blogspot.com.au/2013/04/blog-post_26.html

Link to comment
Share on other sites

கரும்பு சொன்னது போல சங்ககாராவின் அரசியலில் மேலை வாறதுக்கான ஒத்திகையாக மட்டும் இதை எடுத்து கொள்ள முடியாது... 

 

1983ல்  இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்,  அவர்களுக்கு பாதுகாப்பு தனது குடும்பம் கொடுத்தது எண்று சொல்லும் சங்ககாரா  அவர்கள் தமிழர்கள் எனும் காரணத்துக்காக மட்டும் தான் கொல்லப்பட்டார்கள் எனும் காரணத்தை மறைத்து  தனது இனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனவளிப்பை மறைக்கிறார்..  தமிழர் போராட்டத்தை பயங்கரவாதம் என்கிறார்...  

 

சங்ககாரா  எதிர்கால நோக்கம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்...  அவரும் பொதுவான சிங்கள பேரினவாதியே... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.