Jump to content

யாவா - தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற மென்பொருட்கள், யாவா, C#> C++  போன்றவை எல்லாமே Object-oriented programming  என்ற குடும்பத்தில் அடங்குபவன. கிட்டத்தட்ட இவற்றின் செயற்பாடுகள் யாவும், ஒரே மாதிரியானவை. யாவா ஏன்  எனில் அது பிரபல்யமானதும், இலவசமானதுமாகும்.

Java Development Kit (JDK)
இது கணனி யாவா மென்பொருளைப் புரிந்து இயக்குவதற்குத் தேவையான ஒரு தொகுப்பு. நாங்கள் நிறுவப் போகின்ற மென்பொருளில் இது இருப்பதால் தனியாகத் தரவிறக்கத் தேவையில்லை.


உண்மையில் கணனி பற்றிச் சொல்லத் தேவையில்லை,  CPU> Memory, Hard Drive போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆது எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனாலும்  Computer என்பது எப்படிப் புரிந்து கொள்கின்றது என்பது அறிந்துகொள்வது அவசியம். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.
 

 

 

என்ன மென்பொருள் தேவை?

பின்வரும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுங்கள். இது இலவசமானது.
http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk-7-netbeans-download-432126.html

இந்த மென்பொருளை உங்களின் கணனியில் நிறுவிய பிற்பாடு, பின்வரும் வழியினுாடாக இவ் மென்பொருளை ஆரம்பியுங்கள்.
File --> New Project -->  Java || Java Application -->  Next -->
Project Name- TamilEelam
Project Location: எங்கு சேமிப்பது என்பது பற்றிய விபரம்
Project Folder:  அது எந்த என்பது பற்றிய விபரம். ( இந்த 3 விடயங்களும் மாற்ற  வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதன் விபரங்களை நினைவில் வைத்திருப்பது தேடும்போது பிரியோசமாக இருக்கும். )
---->
Finish

-------------------------------------
இதன் பிற்பாடு ஒரு புதிய சாளரம் உருவாகும். அதில்  வலது புறத்தில் நாங்கள் வழங்கிய TamilEelam. java என்ற பக்கமும், மறுபக்கம் அதன் கிளைத் தோற்றமும் தெரியும்.

பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருப்பதைத் தவிர, மிகுதி TamilEelam. java இல் தோன்றியிருக்கும். அது பற்றிப் பார்ப்போம்

/*
 * To change this template, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */

package TamilEelam;

/**
 *
 * @author thuyawan
 */

public class TamilEelam {

    /**
     * @param args the command line arguments
     */

    public static void main(String[] args) {
        // TODO code application logic here
    

System.out.println("Welcome to Java!");

 

    }
}


”//, /*   */”என்ற கோடுகளுக்குப்  பிற்பாடு எழுதப்படும் கருத்துக்கள் விளங்கங்கள் கொடுப்பதற்காக எழுதப்படுவவை. பல பக்கங்கள் கொண்ட வடிவமைப்பில் ஏன் இந்த கட்டளையை வழங்கினோம் என்று மறந்துபோய் இருக்கலாம். அதனால் விளக்கங்கள், அல்லது குறிப்பினை இப்படியான கோடுகளுக்குப் பின்னால் எழுதுவார்கள். இவை எவ்வகையிலும் மென்பொருளில் தாக்கம் செய்யமாட்டது. ஒற்றை வரிக் குறிப்புக்கள் எழுத ”//”, உம், பல வரிகளுக்கு ”/*   */” உம் பாவிக்கலாம்.

 

package TamilEelam;

 
இது ஏன் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை நாங்கள் உருவாக்கின்றபோது, அவற்றினைத் தொகுத்து ஒரு குடையின் கீழ் வைத்திருப்பதற்கானது. உதாரணத்துக்கு உரும்பிராய், நீர்வேலி என்பன தமிழீழம் என்பதற்குக் கீழ் வரும் என்பது போல.

 

public class TamilEelam {

 

 

யாவாவைப் பொறுத்தவரை குறைந்தது ஒரு class ஆவது கட்டாயம் இருக்க வேண்டும். class இன் முதல் எழுத்து uppercase(Capital Letter)  ஆக இருக்கும்.
 

public static void main(String[] args) {

 

இதை main method என்று அழைப்போம். ஒரு யாவா மென்பொருளை இயக்கும் பொழுது முதலில் அது இந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.

பச்சை நிறத்தில் எழுதிய கருத்து என்பது statements என அழைக்கப்படும். ஒவ்வொரு statements

உம் semicolon (;) முடிவில் இடப்பட வேண்டியது அவசியமாகும்.

System.out.println("Welcome to Java!"); என்பதை மேலுள்ளது போன்று எழுதி விட்டு Run அல்லது F6 பொத்தனை அழுத்தினீர்கள் எனில் கீழே தோன்றும் OutPut பெட்டியில் Welcome to Java! என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தவறுகள் விடப்பட்டிருப்பின் அது பற்றிய விளக்கமும் அங்கு தோன்றும்.

 

யாவாவில்  System.out.println(...) என்பதற்குள் எழுதப்படுகின்ற கருத்துக்கள் மட்டுமே வெளியில் தெரியும். 

குறிப்பு -  ஒவ்வொரு Class, Main method போன்றவற்றின் உள்ளடக்கங்கள் இப்படியான அடைப்புக்குறிக்குள் தான் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கவும். 
2. யாவாவின் Commands எல்லாமே உணர்திறன் கொண்டவை. நீங்கள் எழுதும்போது, அது  Capital Letter ஆகவா, இல்லை சாதாரண எழுத்திலா இருக்கின்றது என்பது பற்றி கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

----------------------------------------------

ஒரு ஆரம்ப வடிவமாக எழுதியிருக்கின்றேன். இதில் புரிவது கடினமாக இருப்பின், அல்லது ஏதும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்துக. மற்றும்படி சம்பந்தமில்லாத விடயங்கள், எழுதப்பட வேண்டாம். இதில் வேறு யாராவது தொடர்ச்சியாகப் எழுத விரும்பின் அது குறித்து ஆட்சேபனை இல்லை. சேர்ந்து எழுதலாம். ஆயினும் ஒழுங்கு முறையாகப் போவது நன்று.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.


இங்கே ப்ரோகிராம் எழுதுவதில் அடிப்படையை சற்று விளக்கமாக கூறினால் உதவியாக இருக்குமென நம்புகிறேன். 

 

உதாரணமாக 'Basic coding structure' பற்றி.

 

 

அடுத்து,

 

முதல் சந்தேகம்:

 

{ - இந்த அடைப்புக்குறியை எங்கு, எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி பல அடைப்புக்குறிகளைக் கொண்டு சரியாக முடிக்க வேண்டும் என்பது.

 

 

இரண்டாவது சந்தேகம்:

 

இந்த class, declaration, போன்றவைகளை ஏன், எப்படி, எங்கு உபயோகிப்பது போன்றவைகளை பற்றியும் விளக்கினால் நன்று.

 

 

இது கற்றுக்குட்டியான கேள்வியாக தோன்றலாம்..ஆனாலும் ஜாவா ப்ரோகிராம் பற்றி தெரியாதாகையால் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பயிற்சிகள்

மேலதிகமாக எத்தனை வேண்டுமானாலும் இப்படி இணைக்க முடியும்

 

package jaffna;

public class Jaffna {
 
    public static void main(String[] args) {
     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

  }
}

 

1. System.out.println என்பதில் வெறுமனே print என்று எல்லாவற்றுக்கும் கொடுத்தால் வசனங்கள் எல்லாம் ஒரே வரியில் அமையும். இங்கே (ln) என்பது (line) க் குறிக்கின்றது.

 

 

---------------

கணிதத்தோடும் விளையாடலாம்.
 

System.out.println(8+4-2);

இலக்கங்களைக் கணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மேற்கோள் குறி, ஆரம்பத்திலும் முடிவிலும் அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்க. இப்படியான சந்தர்ப்பங்களில் கணிதம் தொடர்பான கணனி அறிவு அவசியமாகும்.  8* 3 +5+8- 4/2 என்று எழுதினால் கணனி பின்வரும் வடிவத்திலேயே கணிப்பிடும். முதலில்  ”8* 3” பின்னர் ”4/2” பிற்பாடு ”+5+8” பின்னர் ”-” . இந்த வரிசையில் தான் ( *,/,+,-) கணிக்கப்படும்.

ஆனால் நாங்கள் எங்களின் விருப்பதற்கமைவாக கணிக்க வேண்டும் எனில் அடைப்புக்குறிக்குள் இட்டுத் தான் கணிக்க வேண்டும். முதலில்  8(3 +5) எனும்போது மட்டும் தான் 3 +5= 8 என்று கணித்து 8*8 64 என்று பதிலைப் பெறலாம்.

 

 

System.out.println (8* 3 +5+8- 4/2);

System.out.println (8*( 3 +5)+8- 4/2);

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்
நானும் கற்றுக்குட்டி தான். இது கூட எனக்குப் பயிற்சிக்காகத் தான். மற்றும்படி நீங்கள் சொன்ன விடயங்கள் ஆரம்பத்தில் அவசியமில்லை என நினைக்கின்றேன். சில விடயங்கள் எப்படி இயங்குகின்றன எனப் புரிந்து கொண்டால் தானாக அதன் தேவைகள் புரிந்து கொள்ள முடியும்.

netbeans பாவிக்கச் சொன்னதற்குக் காரணம், தவறுகள் பற்றிய விளக்கங்களை அது தரும் என்பதால். { - இந்த அடைப்புக்குறிகள் இப்போது Class, Method இல் பாவிப்பது பற்றிய தேவைகள் சொல்லியிருக்கின்றேன்.  Conditions, loops என்னமும் போகாதபடியால் அங்கே பாவிப்பது தொடர்பாகப் பிறகு சொல்லலாம். இப்போது அதை விளக்கம் கொடுத்தால் பிறகு Condition பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிவரும். ஒழுங்குமுறையாகப் பிற்பாடு இருக்காது.

 

netbeans  இல் ஒரு { அழுத்தும்போது, எங்கு இதன் ஆரம்பமோ, முடிவோ இருக்கின்றது என்பது பற்றி அறிய முடியும். உண்மையில் இதன் அமைப்பு ஒரு வெங்காய வடிவத்தில் இருக்கும். { { {  } } }  என்ற வடிவிலேயே திறந்து மூடப்பட வேண்டியது அவசியமாகும்.

 

 


 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

ஆனால் ஆரம்பத்திலயே java வினை உபயோகிக்க கற்றுகொடுப்பது உசிதமாக தெரியவில்லை
நீங்கள் C இலிருந்து ஆரம்பிக்கலாமே...? ஏனென்றால் C உபயோகிக்கும் போது ஒரு கணணி மொழின் அடிப்படை கூறுகளை (Constructs)

இலகுவாக விளங்கிக்கொள்ளலாம் அத்துடன் அவற்றில் குறிப்பிடத்தக்க அறிவு வந்தவுடன் Object oriented languages கற்பது இலகுவாகி விடுமே .

கடினமான ஒன்றை கற்பதனை விட இலகுவானதை கற்று பின் ஒப்பீட்டு முறையில் Java வினை கற்பது இலகு
என்பது என் கருத்து

 

"Class கட்டாயம் இருக்கவேண்டும்" என்பதற்க்கு பதில்  ஏன் class கட்டாயம் இருக்க வேண்டும்

அதன் பயன் என்ன என்பது பற்றி வாசகர்கள் தெளிவுறவேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்

 

அதனை நன்றாக பிரித்து அறிந்துகொள்ள  C மொழி உதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய திரிகளின் இணைப்பிற்கு நன்றி தூயவன்.

 

ஜாவா அரிச்சுவடியை கற்பதற்கு ஏதேனும் சிறந்த பயிற்சி இணையதளங்கள்(Tutorial & Mock tests) இருக்கின்றனவா?

 

அறியத் தாருங்கள் ஓய்வு நேரங்களில் கற்றுத் தேற விரும்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறித்தனம்.... இப்படியே காலத்தை இழுத்துக் கொண்டு போய்விட்டது. ராசவன்னியன் உங்களுக்காக விரைவில் புத்தகங்களை இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

நேரமின்மை மற்றும் மொழியாக்கம் காரணமாக எழுதுவது மிகச் சிரமமே. ஆனால் C# பற்றி யாருக்காவது சந்தேகம் என்றால் என்னால் தெளிவு படுத்த இயலும்

 

C# இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(Object oriented language). c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.

பயன்கள்:

1. டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்(Console Application)

2. விண்டோஸ்  பயன்பாடுகள்(Windows Application)

3. இணைய பயன்பாடுகள்(Web Application - Asp.Net, Sharepoint Development)

4. திறன்பேசி (Pocket PC,WindowsCE - Embeded Application)

5. Office Solutions (Excel Add-ins, Word Add-in etc.,)

 

 

 

சி-ஷார்ப் மொழியைப் பயன்படுத்தி சி, சி++ போல சிஸ்டம் சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவதோடு, விசுவல் பேசிக் போல அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களையும், ஏ.எஸ்.பி. போல இணைய பக்க வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும்.

 

டாட் நெட் என்ற கட்டமைப்பில் விஷுவல் பேசிக் டாட் நெட், ஏ.எஸ்.பி. டாட் நெட் மற்றும் சி-ஷார்ப் டாட் நெட் என்று மூன்று பிரிவுகளில் புரோகிராம் எழுத முடியும். டாட் நெட்டின் சிறப்பம்சமே... ஒரு மொழியை மற்றொரு மொழியோடு தொடர்புபடுத்தி புரோகிராம் எழுதும் தன்மையே... டாட் நெட்டில், சி ஷார்ப்பை விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் தொடர்பு கொடுத்து வெப் பக்க வடிவமைப்புகளையும் உருவாக்கமுடியும். சி-ஷார்ப்பை நேரடியாக, தனியாகப் பயன்படுத்தி கன்சோல் அப்ளிகேஷன் மூலம் சிஸ்டம் சாஃப்ட்வேர்களையும் தயாரிக்க முடியும்.

 

சி-ஷார்ப் டாட் நெட்டின் விண்டோஸ் அப்ளிகேஷனுக்காக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் விஷுவல் பேசிக் டாட் நெட்டின் மூலம் புரோகிராம் எழுதமுடியும். சி-ஷார்ப் மொழியின் வரைமுறைகளோடு (syntax), விஷுவல் பேசிக் டாட் நெட்டின் டூல்ஸ்களைப் பயன்படுத்தி, அதிலுள்ள மேலான வசதிகளை சி-ஷார்ப்பி்ல் இணைத்துக்கொண்டு புரோகிராம் எழுத முடியும். விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்களை விட விஷுவல் பேசிக்கை சி-ஷார்ப் டாட் நெட்டில் இணைத்து உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள் மிக சிறப்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் சி-ஷார்ப்பில் உள்ள கிளாஸ் மற்றும் ஆப்ஜெடக்டுகள் எழுதப்படும் புரோகிராம்களுக்கு, மிகுந்த பாதுகாப்பையும், உறுதியையும் அளிப்பதாக உள்ளது.

 

Source :http://bhashaindia.com/tamil/Pages/csharp.aspx

Link to comment
Share on other sites

சி-ஷார்ப் பற்றிய எளிய நூல்(Basic c# programming guide) http://www.tutorialspoint.com/csharp/csharp_tutorial.pdf

 

நீங்கள் இணையத்திலே நிறைவேற்றத்தகு நிரல்செய்து பார்க்க(Compile and Execute C# Online ) http://www.compileonline.com/compile_csharp_online.php

 

இலவச தொகுப்பி சி-ஷார்ப் http://www.csharptools.com/view/editors

 

சி-ஷார்ப்  பற்றிய அறிமுகம் இந்த வலைப்பதிவில் காணலாம் 

http://sivalingam.zebrawebdesigns.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-3/

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

Link to comment
Share on other sites

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

 

கனடா சந்தை வாய்ப்புகளைப் பொறுத்தவரைக்கும் மென்பொருள் உற்பத்தித் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் Microsoft இன் .Net Languages இற்கே வருகின்றன.  பல அமெரிக்க கம்பெனிகளும் .Net Languages  தொடர்பான வேலை வாய்ப்புளுக்கான பல விளம்பரங்களைப் பிரசுரிப்பதை கண்டுகொண்டு இருக்கின்றேன். Java இனை கூடியவரைக்கும் அளவில் பெரிய நிறுவனங்கள், வங்கிகளே அதிகளவு பயன்படுத்துகின்றன.

 

இவற்றினை தவிர Android development உம் எதிர்காலத்தில் மிகவும் முன்னனிக்கு வரும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.