கருத்துக்கள உறுப்பினர்கள் கந்தப்பு 311 பதியப்பட்டது July 19, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share பதியப்பட்டது July 19, 2006 காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடுவதா?: சிறிலங்காவுக்கு ஆசிய மனித உரிமைகள் மையம் கண்டனம் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவுக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை: சர்வதேச அளவில் காணாமல் போதல் சம்பவங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் இத்தகைய பகிரங்க அறிவிப்பானது ஆச்சரியமளிக்கிறது. காணாமல் போவோர் தொடர்பான விசாரணைகளை தொடரும் நிலையில் நட்ட ஈடு உள்ளிட்டவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விசாரணைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்நிலைப்பாட்டை எந்த ஒரு சட்டத்தின் கீழும் தார்மீக ரீதியாகவும் நியாயப்படுத்தவே முடியாது. சிறிலங்கா ஒப்புக்கொண்ட மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது இது. தற்போதைய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் கீழ் நியமிக்கப்பட்ட நிலையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -புதினம் Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.