Jump to content

குமரிக் கண்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் சொந்த ஊரிலேயே... குடியிருக்க வழியில்லை.

பழம் பெருமை, பேசி ஆறதல‌டைய வேண்டியது தான்.

உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழன் சொந்த ஊரிலேயே... குடியிருக்க வழியில்லை. அதற்கான காரணம் என்ன? தமிழன் தன் வேர்களை மறந்தது, மறக்கடிக்கப்பட்டது..........இன்னும் பல காரணங்கள். நோய் என்னவென்று தெரியாமல் அதற்கு மருத்துவம் செய்வது எப்படி? தமிழன் தன் வேர்களை நினைவுகொள்ள சிறிது ஞாபகப்படுத்தலே இந்த முயற்சி.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக எம் கண் முன்னே வீரவரலாறு படைத்த விடுதலை புலிகள் சேயையும் அதனை வழிநடத்திய வீரத்தலைவனையும் பார்த்திருக்கின்றோம் அதற்க்கு முன் இதையெல்லாம் பார்க்கும்போது ஒப்பிட முடிகின்றது     

ஒப்பிலா வீரம் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதன் இன்றைய எடுத்துக்காட்டு வீரவரலாறு படைத்த விடுதலை புலிகள். ஆனால் இன்று ஈழதமிழ்சமூகம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அல்லவா நின்று கொண்டிருக்கிறது. தமிழன் வெற்றிவாகை சூடவேண்டும் என்பதுதான் இன்றைய தேவை. அதற்கான முழுமுயற்சிகள் உளகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு சர்வதேசம் தலைனிமிர்ந்து பார்க்கும் சமூகமாக தமிழ்சமூகம் உயரவேண்டும் என்பதுதான் என் ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளின் கைரேகைத் தடங்கள் என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று. உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார். உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! வந்தார் கிரகாம் ஹான்காக்! தடாலடியாக 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என்று போட்டாரே ஒரு போடு! சும்மா கப்சா விடவில்லை.

இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார். ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடி யிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார். அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன. தமிழர்களின் சங்க இலக்கியம் வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவா வின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.

இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். 17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன. ஆழிப்பேரலைகள் எழுந்தன. அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது. அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும். தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது. இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சுழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது. நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் பெயர்.

இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது. எழுதுவதும் தவறு. சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும். எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!

ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி என்ற நூலில் பதிவு செய்தார். மால்டா இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை நூலில் பதிவு செய்தார். அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது. ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.

ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக் 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார்.

அவர் கண்டுபிடித்தது கொஞ்சமே! இன்னும் கூடுதலாக கடலடியில் நாம் ஆய்வு செய்தாக வேண்டாமா? மூழ்கிய நம் நகரங்களை முத்து குளிப்பது போல் மூழ்கி வெளியே எடுத்து வர வேண்டாமா? பூம்புகார் மட்டுமல்ல புதையுண்ட நம் குமரிக் கண்டத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? ஆய்வு செய்திடல் வேண்டாமா?

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் “மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம். பனி ஊழிக்காலத்தின் கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள். இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.

அந்தக் காலச் சுநாமி

எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை. பனிப்பாறைகளே இருந்தன. அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன. அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சுழ்நிலை இருந்தது. புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது. உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின. பல நாடுகளை அவை விழுங்கின. அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார். இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்!

அவர் மட்டுமல்ல உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள். உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன. இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை. இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள். நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

“கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன. சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது. அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம். 1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சூடு பிடிக்கத் தொடங்கியது. கோவாவில் உள்ள நேனஷல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.

நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை தேடிப் பார்க்க வேண்டாமா? தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.

நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள். கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள். அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று. அந்தக் கோண்டுவானா பற்றி நூலெழுதியவர் டொனால்டு பிளான். அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது. இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது. பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது. புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.

பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது. அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று. கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது. அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.

ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன. அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன. 500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன. இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது. கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவை இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது. இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே!

மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன. ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! சிந்து வெளி அதழ்வாய்வை எத்தனைக் காலத்துக்குப் பேசிக் கொண்டிருப்போம்! சுதந்திர இந்தியாவில் நாம் என்ன கண்டுபிடித்தோம்? மேனாட்டார் தான் இன்னமும் நமக்கு ஆய்வு செய்யக் கற்றுத் தர வேண்டுமா?

2011ல் நாம் இருக்கிறோம்! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது. 1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்) வெளியான கட்டுரையில் அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இது 8799 அடி ஆழமுடையது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள்.

ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது. அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார். இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது. அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள் பதப்படுத்தப்பட்ட “மம்மிக்கள்” கண்டெடுக்கப்பட்டன. நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.

பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நம் வங்காள விரிகுடாக்கடல் 2172000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌள நகர்கிறது. சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன. ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் – கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது. இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது. அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!

இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு. அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன. அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது. மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது. இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது. கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன. இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது. கடலரிப்பு நேருகிறது. கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன. காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன.

மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து புதிய செய்திகளை வெளிக் கொணர வேண்டும்.

வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன் கே.எஸ்.கிருஷணா எம்.வி.ரமணா கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் “வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு – தெற்கு தென்கிழக்கு திசையில் 300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர். கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது. கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன. 10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள். அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும்.

நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும். புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது. ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை வரவழைத்து சிறப்பிப்போம்! அவர் துணையோடோ நாமோ அவர் தொட்ட பணியை தொடருவோம்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது. அது இருக்குமிடம் தெரியவில்லை. மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.

பேசியது போதும்! செயலில் காட்டுவோம் செந்தமிழ் நாகரிகத்தின் சிறப்பை! செம்மொழி தமிழன் 10000 ஆண்டு வரலாற்றை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

 

182887_446764568750201_1003788008_n.jpg

 


1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

[பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

(இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010).]

 

Link to comment
Share on other sites

1) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

 

இது உண்மையில் குமரிக்கண்டம் இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாகவும் வாசித்தாகவும் நினைவு.

 

மடகஸ்கார் உலகத்தில் எந்த நாட்டுடனும் ஒத்துவராத தாவர மிருகங்கள் காணப்படும் நாடு. இதன் கருத்து இதில் இந்தியாவும் அடங்கும்.  ஆனல் அங்கு காண்ப்படும் லீமார் என்ற குரங்குக்கு  தாயினமாக இருந்திருக்க கூடிய ஒரு விலங்கினத்தின் தடயங்கள் இந்தியாவில் காணபட்டதாக கூறுகிறார்கள். லீமார் இந்தியாவில் இல்லை. ஆனால் லீமாரின் தாய் மிருக தடங்கள் காணப்படுவதை எழுந்தமானமாக சொல்வதாயின் அவை நிலத்தொடர்பில் இருந்திருக்கலாம் என்றுதான் சொல்லலாம்; ஆனால் அந்த தொடர்பு லீமார் என்ற விலங்கு கூர்ப்படைய முதலிலேயே அறுந்துவிட்டது என்பதாகும். லீமார் என்ற விலங்கு இன்றைய குரங்களுக்குச் சற்று முந்தைய விலங்கு. நிச்சயமாக மனித குரங்களுக்கு மிக்க பழைய விலங்கு. எனவே மனிதரை ஒத்த கொமோசப்பியன் தோன்ற பலகாலத்துக்கு முன்னர் மடகஸ்காரையும் இந்தியாவையும் இணைத்த நிலதொடர்பு நிச்சயமாக அறுந்துவிட்டது. எனவே அப்படி ஒரு தொடர்பு இருந்திருந்தால் அது 2-3 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் மடகஸ்காரின் மிருகங்கள் இந்தியாவில் பரம்ப முதல் அறுந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் அது இலக்கியங்களில் காணப்படும் குமரி கண்டம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கீழ்கண்ட இனைப்பில் உள்ளதை தயவு செய்து பார்க்கவும். ஊங்களின் வசதிக்காக கீழே கொடுத்துள்ளேன்.

 

http://evolution.berkeley.edu/evolibrary/news/091001_madagascar

 

Where did all of Madagascar's species come from?

Where did all of Madagascar's species come from?
October 2009

 

madagascarcollage.jpgdot_clear.gifdot_clear.gif Clockwise from the top: A chameleon, an aye aye, a fossa and a baobab. All are native to Madagascar. dot_clear.gifdot_clear.gif In celebration of the Year of Science's October theme, the geosciences and planet Earth, this month's story focuses on how geography and geology have shaped the evolution of life in one of Earth's most unique places. Madagascar, the fourth-largest island in the world, sits in the Indian Ocean several hundred kilometers off Africa's southeastern coast and provides a home to a remarkable variety of plant and animal species, including the aye aye, fossa, chameleon, and baobab tree. Madagascar has made the news lately because of a military-backed coup, which has threatened conservation efforts. Criminal groups have taken advantage of the political turmoil to illegally log rare trees in Madagascar's dwindling forests, and the future of the former president's plans to massively expand the island's conservation areas now seem uncertain.

Where's the evolution?
Conservationists are concerned about Madagascar because of the uniqueness of its biota, most of which is endemic — i.e., found nowhere else on Earth. Why is Madagascar home to so many unique plants and animals? Because the island's geography, geology, and climate have provided opportunities for species to evolve and diversify in isolation. Its species are a mix of those that have been living and evolving there for many tens of millions of years and those that arrived more recently and subsequently diversified.

Understanding where all of Madagascar's species came from (i.e., its biogeography) requires understanding Madagascar's own geologic history. One hundred and seventy million years ago, Madagascar was landlocked in the middle of the supercontinent Gondwana, sandwiched between land that would eventually become South America and Africa and land that would eventually become India, Australia, and Antarctica. Through movements of the Earth's crust, Madagascar, along with India, first split from Africa and South America and then from Australia and Antarctica, and started heading north. India eventually smashed into Asia — forming the Himalayas in the process — but Madagascar broke away from India and was marooned in the Indian Ocean. Madagascar has been on its own for the past 88 million years.

pangeamadagascar.gif

Some of Madagascar's present species are there because they "rode there" on the continents and were left on the island when it separated from India. Others arrived on the island after its split, immigrating from other places. In biogeography, these two scenarios are known as vicariance and dispersal. To understand the difference, imagine a species living on a continent, which is then split into two through tectonic action. When the continent splits, the two halves of the population are separated, and over many generations, they evolve into separate species. These species' distribution is the result of vicariance. Many different processes can cause vicariance — plate tectonics, the rise of mountain ranges, a shift in the course of a river, or just climate change that causes an unfavorable habitat to develop that ends up splitting a species' range into two. Dispersal, on the other hand, occurs when a species spreads or immigrates from one area to another. If part of a population moves to a new area, the two subpopulations may eventually evolve into separate species.

One key line of evidence for investigating biogeography is phylogenetics. We can use evidence gathered from living and fossil organisms to reconstruct their phylogeny — or evolutionary relationships. These phylogenies, combined with an understanding of the geologic history of a particular region, can help us figure out which lineages are where they are because of vicariance and which are there because of dispersal. For an example, examine the diagram below. One land mass splits sequentially into three separate islands, and then a mountain range rises on one of these islands, effectively splitting it. If a group of organisms was widespread on the original land mass and was sequentially split along with the geologic changes, we'd expect the sequence of splits in the phylogeny to match the sequence of splits in the geography (stages 1-4 in the diagram). Now imagine that additional tectonic action causes one more split. After that split, some members of species C disperse to the new island, and they evolve into a separate species (stage 5 in the diagram). The relationships of species A-D match the geographic splits, but species E's relationships do not. It is most closely related to C, but it lives on an island that split off from a distant land mass. This suggests that E must have arrived at its present location by dispersal.

biogeography2.gif

dot_clear.gifelephantbird.jpgdot_clear.gifdot_clear.gif An elephant bird skeleton and egg. dot_clear.gif So what about Madagascar? Do the phylogenies of Madagascar natives and their close relatives suggest that vicariance or dispersal has been at work? There are certainly some examples of vicariance. For example, the elephant bird — a ten foot tall relative of the ostrich that went extinct several hundred years ago — was endemic to Madagascar. Phylogenetic, genetic, and fossil evidence all suggest that the elephant bird, along with the ostrich, arrived on Madagascar and India when these land masses were still connected to Australia and Antarctica via a land bridge. When India and Madagascar split, the elephant bird wound up surviving on Madagascar, while the ostrich was carried north with India (and was eventually introduced to Eurasia when India collided with this continent). The presence of the elephant bird on Madagascar can be chalked up to vicariance; it was living on Madagascar land already, when Madagascar broke off of India.

However, most of the species on Madagascar today seem to be descended from individuals that dispersed there from Africa long after Madagascar was established as a separate island. For example, phylogenetic, genetic, and anatomical evidence all suggest that lemurs split from other primates on Africa around 62 million years ago and that the ancestral lemur lineage had dispersed to Madagascar by around 54 million years ago. Once on the island, the lemur lineage diversified. Now there are at least 50 species of lemur, all endemic to Madagascar.

 

dot_clear.giflemurphylogeny.gifdot_clear.gif

The evolutionary and biogeographic processes experienced by the lemurs are not unusual. Madagascar is home to many groups of endemic organisms with close within-group relationships. The simplest — or most parsimonious — explanation for this pattern is that, like the lemurs, the groups first arrived on the island by dispersal as a single lineage and then rapidly diversified. This diversification was likely spurred on by other geologic and climactic characteristics of Madagascar. The east coast of the island is lined with a mountain range — and this causes different parts of the island to get drastically different amounts of rain. Hence, the island is made of many different habitat types — from deserts to rainforests — that have shifted and changed over the past 88 million years. This likely provided many opportunities for subpopulations to become isolated and evolve traits for specializing in different niches. And that likely encouraged lineages to diversify.

Today, Madagascar is one of the most diverse places on Earth. Understanding where that diversity comes from requires understanding not just the living world, but the geologic, geographic, and climactic histories that have shaped the evolution of lineages on the island. Now, human history in the making threatens to undo tens of millions of years of evolution in just a few years of political turmoil — unless safeguards can be put in place to protect Madagascar's unique biota from the instabilities of human institutions.

 

nescentlogo.gifdot_clear.gif Video podcast on the geologic and evolutionary history of Madagascar provided by the National Evolutionary Synthesis Center (NESCent). To learn more, visit the NESCent website. dot_clear.gif

 

 



தமிழரின் கும்ரிக்கண்டம் ஆசுரேலியா வரை நீண்டது
அறிவியல் ஆதாரமுடன் நந்திவர்மன் பேச்சு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெரும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் நிரம்பிய அவையில் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றிய நந்திவர்மன் இலக்கியச் சான்றுகள் விழியாக கடல் கொண்ட கும்ரிக்கண்டம் பற்றிப் பேசி வந்துள்ளோம். உலகில் ஒரு சிலர் இதை ஏற்கவில்லை.மறுத்து நூல்கள் எழுதினார்கள். இலக்கிய சான்றுகளுக்கும் உருவகமாக கடல் கொண்ட தமிழகம் பற்றிய வரைபடங்கள் வெளி வந்தன். இதையும் கிண்டல் செய்தார்கள். ஒரு தாலுக்கா அள்வே நிலம் மூழ்கியது, பெரிய கண்டம் மூழகவில்லை என அமெரிக்காவில் வரலாற்றுப் பேராசிரியை ஆக உள்ள சுமதி இராமசௌமி அய்யர் நூலே எழுதினார். இதை மறுத்தும் உலகில் உள்ள 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன, ஒரு தாலுக்கா அளவு நிலம் மூழ்கியதற்கா உலகில் இத்தனை நாடுகளில் தொன்மங்கள் உருவாயின எனக் கேள்வி எழுப்பினார் நந்திவர்மன்.
கடல் கொண்ட தமிழகம் ஆசுதிரேலியாவையும் தாண்டி இருந்தது.சப்பானும் மூழ்கிய குமரிக்கண்டத்தின் பகுதியே எனப் படமுடன் விளக்கிய நந்திவர்மன், பூம்புகாரின் கடலடி ஆய்வு அந்நகரம் 9500 ஆண்டு முன்பு மூழ்கியதெனக் கண்டுபிடித்த கிரகாம் ஆன்க்காக்கு மாமல்லபுரம் அருகில் 6000 ஆண்டு மூழ்கிய நகரையும் கண்டுபிடித்தவர். ஆனால் அவரே துவாரகையை கண்டுபிடித்து கி.மு.7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கியபோது ஏற்றவர்கள் பூம்புகாரின் காலம் கி.மு 9500 ஆண்டு என்று சொன்ன போது ஏற்க மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் சொன்னார்.
aடுத்த நாள் கலைஞர் தொலைக்காட்சி விவதிப்போம் நிகழ்ச்சியில் சிறப்புச் செய்தியாளர் தம்பிராசாவுடன் உரையாடுகையில் தமிழக அரசே கலைஞசராட்சியில் மாநில அள்வில் கடலடி ஆய்வுக்கென தனி நிறுவனம் அமைக்க வேண்டும் என்றார்.
நந்திவர்மன் ஆற்றிய சொற்பொழிவு பின் வருமாறு
கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16174 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில் அனைத்துலக ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன்.
வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று.
பாறை ஓவியங்கள் – பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது.
விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35000 ஆண்டு முன்போ 25000 ஆண்டு முன்போ 10000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன. இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.
சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன்.
Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது.
1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம்.
ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின் தொன்மை இன்னும் பழமையானதாகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது. நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது.
ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள். இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது.
புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?

புகழ்மிகு News Week இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?

26.9.2003-ல் வெளியான Frontline எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?

இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும் ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில் – கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!
இன்று புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும்.
நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன. Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.
கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. National Institute of Oceanography யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது.
இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல் ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன்.
மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார். “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantis.org இணையத்தில் காணலாம்.
பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.
பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.
“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.
அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். 15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது.
துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.
இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை.
தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது. உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல் உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?

அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும். பசிபிக் பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும் செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது.
தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82 நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
264400_601986273154226_1524651239_n.jpg

 

 

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.



(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)


உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
லெமூரியா கண்டம் உண்மையா?
இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மொரீஷியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் ஒரே கண்டமாக இருந்தது
உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாஸ்கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து இருந்த நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பலபிரிவுகளாக பிளவுபடத்துவங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்துவங்கியபோது, மொரிஷியா கண்டம் காணாமல் போனதாக கருதிவந்தனர்.

அப்படி காணாமல் போன அந்த மொரிஷியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாக தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நார்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.
மொரீஷியஸ் தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?
எனவே, மொரீஷியஸ் தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்துகிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீஷியா கண்டத்தின் சிலபகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
இந்த பின்னணியில், நோர்வோ நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீஷியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
484176_224196344387285_1953857623_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமரிக் கண்டம் எனப்படும் லெமூரிய மண்ணில் தான் முதல் மாந்தன் தமிழன் தோன்றினான்.
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் ஆதிமொழி தமிழா?

அரவிந்தன் நீலகண்டன்

 

tsunami-300x200.jpgலெமூரியா! கடல் கொண்ட குமரிக் கண்டம்! திராவிடக் கதையாடலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு விஷயம். அண்மையில் முதல்வர் மு. கருணாநிதிகூட இதைக் குறித்துப் பேசியிருக்கிறார். தமிழ் பொதுப்புத்தியில் லெமூரியா குறித்து ஏறியிருக்கும் சித்திரத்தை இப்படிச் சொல்லலாம்:

குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள்.

வைகோ முதல் முதலமைச்சர் முக வரை, தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான்.

ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர். இது குமரிமைந்தன் அளிக்கும் சித்திரம்.

2008-ல் இண்டர்நெட்டில் வெளியான தமிழ் கட்டுரைத் தொடர் ஒன்றில் லெமூரியா மக்கள் குறித்துப் பின்வரும் துல்லியமான சித்திரம் அளிக்கப்படுகிறது:

தோழி! லெமூரியா மக்கள் ஏழு அடிவரை உயரமாக இருந்திருக்கிறார்கள். உடலின் எடை மிகமிக அதிகம். கைகள் நீளமாக, பெரியதாக, சதைப்பற்று மிக்கதாக இருந்திருக்கிறது. கால்கள் இதற்கு ஏற்றதுபோல நீளமாக இல்லை. ஆனால் வலுவாகத் திரண்டு இருந்திருக்கின்றன. தலைமுடியைப் பின்னியிருந்தனர். இக்கால மனிதனைவிட அவர்களின் விரல்கள் நுண்ணிய வேலைகள் செய்யக்கூடிய அளவுக்கு இருந்தன. அவர்கள் உடலில் அதிசயமான விஷயம் நெற்றி. அது அகன்று உயர்ந்திருந்தது. மூக்குக்கு மேல் பாதாம் பருப்பு போல – நெற்றி நடுவில் ஒரு புடைப்பு இருந்தது. இது மூன்றாவது கண் எனப்படுகிறது. இது முக்காலங்களை, பிறர் எண்ணங்களை, தொலை நிகழ்ச்சிகளை அறியும் அறிவுக்கண் என்கிறார் அறிஞர் கார்லே.

இவற்றுக்கெல்லாம் ஆதாரம்? அபிதான சிந்தாமணியிலிருந்து எரிக் வான் டானிகன்வரை. கூடவே தமிழ்ப் பற்றையும் சம்மான அளவில் விரவிவிட்டால் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், தங்களை ஆரியர்கள் என நினைக்கும் வடபுல சதிகாரர்களின் சதிவலைக்குள் அகப்பட்டுவிட்டவர்கள் ஆகிவிடுவீர்கள் நீங்கள். ஆனால் லெமூரியா குறித்த விஷயங்கள் எல்லாமே பொன்னுலகக் கற்பனைகள்தானா? எதிர்பார்ப்பு கலந்த ஊகங்கள் மட்டும்தானா? இவற்றிலெல்லாம் எந்த அளவு உண்மை இருக்க முடியும்? எந்த அளவு அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் இவை குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? இன்றைய தேதியில் இந்த விஷயம் குறித்து மிகவும் அறிவியல்பூர்வமாக எழுதப்பட்ட ஒரே தமிழ் நூல் சு.கி. ஜெயகரன் எழுதிய ‘குமரி நிலநீட்சி’ என்கிற நூல்தான். நிலவியலாளரான ஜெயகரன் ஏற்கனவே ‘மூதாதையரைத் தேடி’ என்னும் நூலின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர்தாம். அவரது சகோதரர் தியோடர் பாஸ்கரன் என்றால் இன்னும் பரிச்சயமானவராகத் தெரிவார் ஜெயகரன்.

மிகுந்த அக்கறையுடன் பண்டைய இலக்கிய நூல்களில் உள்ள தரவுகளையும் நிலவியல் தரவுகளையும் நம் புவியின் பரிணாம வரலாற்றையும் இணைத்து, குமரி நில நீட்சியின் உண்மை என்ன என்பதை அவர் அறிய முயன்றிருக்கிறார். எப்படி ஐரோப்பியக் காலனியாதிக்கத்தின்போது அவர்களின் இனவாதக் கோட்பாடுகளும் மதநம்பிக்கைகளும், இந்த லெமூரியக் கண்டம் என்கிற கருத்தாக்கம் உருவாகப் பங்களித்தன என்பதையும், இதனுடன் எப்படி நம் பண்டைய இலக்கியங்களில் இருந்த சில நினைவுகள் இணைக்கப்பட்டு இன்று நாம் காணும் குமரிக்கண்டக் கோட்பாடு உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் விவரிக்கிறார். பிரம்ம ஞான சபையின் கட்டற்ற கற்பனைகளும் தமிழ்த் தேசியவாதிகளின் பிரசாரத் தேவைகளும் லெமூரியாவின்/ குமரிக்கண்டத்தின் வரைபடங்களைக்கூட உருவாக்கின. உதாரணமாக, புலவர் குழந்தை தமது ‘இராவண காவியம்’ என்கிற நூலில் அளித்த வரைபடம், தென்மேற்கே மடகாஸ்கர் வரையிலும் தென்கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பைக் காட்டியது.

ஜெயகரன் பண்டைய தரவுகளை முழுக்க கற்பனை எனத் தள்ளவில்லை என்பது முக்கியமானது. அவை மிகைப்படுத்தப்பட்ட, ஆனால் உண்மையான ஒரு பேரழிவின் நினைவிலிருந்து உருவாகியிருக்கலாம் என ஊகிக்கிறார். அது எத்தகைய நிகழ்வு? மானுடப் பண்பாட்டின் எந்தக் காலகட்டத்தில் அது நிகழ்ந்திருக்கவேண்டும்?

Kumari_Kandam_map-300x202.pngகுமரிக்கண்டம் போலவே மேற்கத்திய நாடுகளின் தொன்ம நினைவாக விளங்குவது அட்லாண்டிஸும் அதன் அழிவும். பிளேட்டோவின் குறிப்புகளிலிருந்து முளை விட்டு, பின்னர் பெரும் தொன்ம நினைவாக ஐரோப்பிய மனத்தை அது ஆக்கிரமித்து நிற்கிறது. இன்றைக்கும் அதனைத் தேடுகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். மேற்கத்திய உலகின் பெரும்பாலான மறைஞான நம்பிக்கையாளர்களின் குறுங்குழுக்கள் – கல்ட்கள் – அட்லாண்டிஸைத் தம் தாயகமாகச் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், திரா தீவு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் சீற்றத்தில் அழிந்த நிகழ்ச்சியே இந்த அட்லாண்டிஸ் தொன்மமாக மாறியிருக்கலாம் என தீவிரமான ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுவதை ஜெயகரன் சுட்டுகிறார். இதைப் போல குமரி நிலநீட்சியின் அழிவு குறித்த தொன்மத்துக்கும் மைய வரலாற்று நிகழ்ச்சி இருக்கலாம் அல்லவா? அதை அவர் தேடுகிறார்.

பல அறிவியல் தரவுகளின் அடிப்படையில் பின்வரும் ஊகத்தை ஜெயகரன் முன்வைக்கிறார்:

பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் உலகம் இறுதியாகச் சந்தித்த பெரும்-பனிக்காலம் நிலவியது. அப்போது கடல் நீர் மட்டம் கணிசமாகத் தாழ்ந்திருந்தது – இன்றைக்கு இருப்பதைவிட 150—100 மீட்டர் தாழ்வாக இருந்தது. கண்டங்களின் கடலடித் தொடர்ச்சியான நிலப்பரப்புகள் பல அப்போது நீர்மட்டத்துக்கு மேலே இருந்தன. அவ்வாறு இலங்கையையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் நிலப்பரப்புகள் மேலே இருந்தன. ஆனால் அடுத்த எட்டாயிரம் ஆண்டுகளாக மெல்ல பூமி வெப்பமடைந்தது. பெரும் பனிப்பாறைப் பரப்புகளாக இருந்த நீர் உருக ஆரம்பித்தது. நீர் மட்டங்கள் உயரலாயின. பல நிலப்பரப்புகள் நீரில் அமிழ்ந்தன. அவ்வாறு அமிழ்ந்தவற்றில் இலங்கை இந்தியப் பிணைப்பு நிலப்பகுதிகளும் அடங்கும். இந்த நிகழ்ச்சியே நம் நினைவில் கடல் கொண்ட குமரி நிலநீட்சியாகப் பதிந்தது.

இது ஜெயகரன் முன்வைக்கும் ஊகம். அப்படியானால் சுமார் பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்கு வெளியே இருந்த நிலப்பரப்பு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்? ஜெயகரன் கூறுகிறார்: “அன்று நிலப்பரப்பாக இருந்த இன்றைய பாக் நீரிணைப்பகுதி, வடகிழக்காக 250 கிமீ நீளமும் தென்மேற்காக 150 கிமீ அகலமும் கொண்டதாக இருந்தது.” தென்னிந்தியாவையும் இலங்கையையும் அன்று இணைத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 36,000 சதுர கிமீ. இது கணிசமான நிலப்பரப்பு என்பதைக் கவனிக்கவும். கன்னியாகுமரிக்குத் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் 80 கிமீ தள்ளி கடல் அமைந்திருந்தது. அதாவது கன்னியாகுமரியையும் தாண்டி தெற்கே ஏறத்தாழ 6500 சதுர கிமீ நீளம் அகன்றிருந்தது.

அங்கு எத்தகைய தாவரங்கள் இருந்தன, எத்தகைய விலங்கினங்கள் வாழ்ந்தன என்பதையெல்லாம், ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டும் முடிவுகளின் மூலம் விவரிக்கிறார். அவற்றைச் சேகரித்து உண்ட, வேட்டையாடிய மானுடச் சிறு குழுக்கள் அங்கு வாழ்ந்திருக்கவேண்டும். அவர்களே நம் மூதாதையர். அவர்களே இந்த நிலப்பரப்புகள் மூழ்கியதைக் குறித்த தொல்நினைவுகளைச் சுமந்து வந்திருக்கவேண்டும். அந்நினைவுகள் பின்னர் இலக்கியங்களில் தொன்மங்களாகப் பரிணமித்தன. சென்ற நூற்றாண்டில் கண்டம் என்று ஆக்கப்பட்டது. கறாரான அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த ஊகங்களை உருவாக்கி முன்வைக்கிறார் ஜெயகரன். இதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கும் மடகாஸ்கருக்குமாகப் பரந்து விரிந்திருந்த குமரிக்கண்டம் குறித்த கற்பனை நிலப்பரப்பு குறைந்திருக்கலாம். அரசியல் நோக்கம் கொண்ட அதீதக் கற்பனைக் கதைகளும் சுருங்கியிருக்கலாம். ஆனால், குமரி நிலநீட்சி குறித்த நம் அறிவியல் அறிதல் கணிசமாக முன்னகர்ந்திருக்கிறது.

ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளின் முன்னேற்றங்களில் தேவையற்ற குறுக்கீடுகளை உருவாக்குவது கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளின் அறிக்கை. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் லெமூரியாதான் மனிதர்கள் உருவான இடம் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அத்துடன் இது திராவிட இனப் பண்பாடு என்றும், இதனைப் பகுத்தறிவற்ற ஆரிய இனத்தின் பண்பாட்டிலிருந்து வேறுபடுத்தவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அண்மைக்கால ஆராய்ச்சிகள் குறித்து வயது முதிர்ந்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு எவ்வித அறிதலும் இல்லாதததை ஒரு தவறு எனச் சொல்லமுடியாது. ஆனால், குறைந்தது அறிவியலின் பாதை எத்தகையதாக இருக்கிறது என்பது குறித்த ஓர் அடிப்படை அறிவையாவது தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது. அதிகாரத்தின் பீடத்தில் இருக்கும் ஓர் அரசியல்வாதி, 19-ம் நூற்றாண்டு கற்பனைகளையும் இனவாதக் கோட்பாடுகளையும் அறிவியல் என்றும் பகுத்தறிவு என்றும் முன்வைக்கும் அபத்தச் சூழலை, துரதிர்ஷ்டவசமாக தமிழகம் காணவேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய பகுத்தறிவற்ற அரசியல் முழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு முன்னகர வேண்டியது தமிழனுக்கு ஏற்பட்டிருக்கும் மற்றொரு கடமைச்சுமை.

ஏனெனில் மரபணுவியலும் தொல்-மானுடவியலும் ஆப்பிரிக்காவிலிருந்து மானுடர்கள் உதயமானது முதல் அவர்களின் பரவுதலையும் புலப்பெயர்வுகளையும் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்துவருகின்றன. இந்தச் சர்வதேச ஆராய்ச்சியில் தமிழகம் முக்கியமான பங்கை ஆற்றவேண்டியுள்ளது.

ஜெயகரன் முன்வைக்கும் ஊகம் இறுதி விடையல்ல. அது அறிவியல் தரவுகள் சார்ந்து முன்வைக்கப்படும் ஊகம். நாளைக்கு விரிவானதொரு தொல்-கற்கால நாகரிகமோ, அற்புதமான குகைச்சித்திரங்களை உருவாக்கிய ஒரு நாகரிகமோ, கடலடியிலிருந்து கிடைக்கலாம். ஆனால் சில விஷயங்களை நிச்சயமாக உறுதியாகக் கூறமுடியும். குமரிக்கண்டம் என்று மடகாஸ்கரையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. அதில் அணு ஆயுத, வானூர்தித் தொழில்நுட்பங்களும் இருக்கவில்லை. நெற்றிக்கண் புடைப்பால் முக்காலமும் அறியும் மனிதர்களும் வாழவில்லை. ஆனால் அதைவிட சுவாரசியமான விஷயங்கள் தொல்-வரலாற்றில் நிகழ்ந்திருக்கக்கூடும் என மரபணுவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஸ்டீஃபன் ஓபன்ஹெய்மர் குழந்தை நல மருத்துவர். மரபணு ஆராய்ச்சிகளில் தேர்ச்சி பெற்றவர். பல காலம் தென்கிழக்காசியப் பகுதிகளில் பணியாற்றியவர். இவர் முன்வைக்கும் சில அறிவியல் ஊகங்கள் உண்மையிலேயே குமரிக்கண்டக் கோட்பாட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் உள்ளன. தென்கிழக்காசியப் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்து, அது மூழ்கியிருக்கலாம் என அவர் கருதுகிறார். இந்த நிலப்பரப்பு குமரிக்குத் தெற்கே இல்லை. மாறாக தென்கிழக்கே தொலைவில் இன்றைய மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை இணைப்பதாக இருந்திருக்கக்கூடும் என அவர் கருதுகிறார்.

இன்றைக்கு 14,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது நிலவியலாளர்கள் ப்ளிஸ்டோஸீன் என்கிற நிலவியல் காலகட்டத்தின் இறுதித் தருணங்கள் எனக் கருதும் காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் கடல்மட்டம் வேகமாக உயர்ந்து, பெரும் வெள்ள அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் புலம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் 11,500 ஆண்டுகளுக்கு முன்னால் மற்றொரு கடல் மட்ட உயர்வும் வெள்ள அழிவும்; பிறகு, மீண்டும் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல். உலகமெங்கும் இந்த நீர்மட்ட உயர்வுகள் கரையோர மக்களுக்கு அழிவையும் புலம்பெயர்வுக்கான கட்டாயத்தையும் ஏற்படுத்தின. ஆனால், தென்கிழக்கு ஆசியாவில் இருந்ததாகத் தான் ஊகிக்கும் பெரும் நிலபரப்புதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு என்கிறார் ஓபன்ஹெய்மர்.

பெரும் நீர் அழிவுகளால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் கடல் பயணத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் தொல்-கற்காலத் தொடக்கநிலைத் தொழில்நுட்பத்தையும் பண்பாட்டையும் பரப்பினார்கள் என்பது ஓபன்ஹெய்மரின் வாதம். இவர் தனது வாதத்துக்குப் பெரும் துணையாக முன்வைப்பது மரபணுவியல் தரவுகளை. ஆனால் ஓபன்ஹெய்மர் மிகவும் மேலோட்டமாகத் தெரியும் தரவுகளையே தமிழக தொல்-பழங்காலம் குறித்து முன்வைக்கிறார். அவரை இதற்காக நாம் குறை சொல்லமுடியாது. நெற்றிக்கண் லெமூரியர்கள் என்று தொடங்கி, ஆதி மனிதன் லெமூரியன்தான் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் யார் நம்மை சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்!

ஓபன்ஹெய்மர் மற்றொரு முக்கிய விஷயத்தை முன்வைக்கிறார். ஆப்பிரிக்காவில் 1,60,000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மானுடத்தின் முக்கியக் கிளை (ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே புலம்பெயர்ந்த கிளை) 85,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியக் கடற்கரை வழியாகத் தென்கிழக்காசியா வரை வந்தடைந்திருந்தது. அப்போது மிகப்பெரிய அழிவு ஒன்று சம்பவித்தது. 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோபா என்கிற சுமத்திரா தீவின் எரிமலை வெடித்தது. கடந்த 20 லட்சம் ஆண்டுகளின் மிகப்பெரிய இயற்கை அழிவு நிகழ்ச்சி இதுவே ஆகும். எரிமலை சாம்பல்கள் சூரிய ஒளியை மிகப்பெரும் பரப்புக்கு மறைத்தன. பெருங்குளிர் யுகம் ஒன்று ஆரம்பித்தது. இங்கு கிளை பரவியிருந்த மானுடத்தை இப்பேரழிவு பெருமளவு அழித்தது. இந்திய மூதாதை மரபணுத் தனித்தன்மைகளுக்கு இந்தப் பேரழிவு காரணமாக இருந்தது என்கிறார் ஓபன்ஹெய்மர். பின்னர் இந்தியாவில் மீள் குடியேற்றமும் ஏற்பட்டது.

ஜெயகரனின் அறிவியல் ஊகங்களும் ஓபன்ஹெய்மரின் ஊகங்களும் இணைத்துப் பேசப்படவேண்டியவை. ஜெயகரனின் நூல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் ஓபன்ஹெய்மரின் நூலைப் போன்றே அது சர்வதேசப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். ஓபன்ஹெய்மருக்கு ஒரு மேற்கத்திய ஆராய்ச்சியாளருக்கேயான பல வசதிகள் உண்டு. ஜெயகரன் சர்வதேச அளவில் தலைசிறந்த நிலவியலாளர்களில் ஒருவரே என்றாலும், ஓபன்ஹெய்மருக்குக் கிடைக்கும் வசதிகளோடு ஒப்பிட்டால், ஜெயகரனுக்குக் கிடைக்கும் வசதிகள் குறைவு. ஊடக ஒளிவட்டங்களும் குறைவு. (ஆனால் ஒப்பீடளவில் ஜெய்கரனின் நிலைப்பாடுகள் மிகவும் கவனமாகவும் அதிக அறிவியல் கறார் தன்மையுடனும் இருக்கின்றன. ஓபன்ஹெய்மரின் தரவுகள் விரிவானவையாகவும், மரபணுவியல் தரவுகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் உள்ளன. இது எனது தனிப்பட்ட அவதானிப்பு.)

அண்மையில் ஒரு செய்தி 80,000 ஆண்டுகள் பழமையான கற்காலக் கருவிகள் காஞ்சிபுரத்தின் அருகில் கிடைத்துள்ளதாகக் கூறுகிறது. சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்தியாலயாவின் பண்பாடு மற்றும் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் பேராசிரியர் ராமகிருஷ்ண பசுபதி இந்த ஆதி கற்காலக் கருவிகள் 100,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கக்கூடும் என்று கணக்கிடுகிறார். எனில் அவை தோபா எரிமலை நிகழ்வுக்கு முன்னர் அல்லது அந்த நிகழ்வின் கடுமையை அனுபவித்த மக்கள் பயன்படுத்தியவையாக இருக்கக்கூடும்.

தொல்-கற்கால மானுடம் நாம் நினைத்ததைக் காட்டிலும் விரிவான பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததா என்பது சுவாரசியமான கேள்வி. 20,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்களில் வானியல் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பின்னர் எழுந்த இலக்கியங்களான ரிக்வேதம் போன்றவற்றில் தொல்-கற்காலத்தைச் சார்ந்த சில வானியல் சுழல்கள் குறித்த தரவுகள் பதிவாகியுள்ளன. எனில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறதா? ஆஸ்திரேலியப் பழங்குடிகளுடன் தென்னிந்திய மக்களுக்கும் அந்தமான் பழங்குடிகளுக்கும் உறவுகள் இருக்கின்றனவா? நம் பண்டைய இலக்கியங்கள், மரபணுவியல், நிலவியல் அனைத்துமாக இணைந்து ஒரு பெரும் மர்மத்தை மெல்ல மெல்ல முடிச்சவிழ்கின்றன. இன்றைய தமிழர்களுக்கு நிச்சயமாக அந்தச் சித்திரத்தில் பெரும் பங்கு இருக்கும். ஆனால் நம் அரசியல் சித்தாந்த அசட்டு மிகைக் கற்பனைகளின் சட்டகங்களுக்குள் அவை அடங்காது.

மேலதிக விவரங்களுக்கு:

* சு.கி.ஜெயகரன், குமரி நிலநீட்சி, காலச்சுவடு, 2002

* ஸ்டீபன் ஓபன்ஹெய்மர், Eden in the East: The Drowned Continent of Southeast Asia, Phoenix, 1999

* ஸ்டீபன் ஓபன்ஹெய்மர் முன்வைக்கும் மானுடகுலத்தின் தோற்றமும் பரவலும் குறித்த ஒரு பார்வை: ஓர் அருமையான கிராபிக்ஸ் உருவாக்கம்: http://www.bradshawfoundation.com/journey/

* மேலே கூறப்படும் நிகழ்வுகளில் நமக்கு முக்கியமான பகுதிகளின் விளக்கங்கள் இந்தச் சுட்டிகளில் உள்ளன:

* http://www.bradshawfoundation.com/journey/beach2.html

* http://www.bradshawfoundation.com/journey/australia2.html

* Evidences of Human activities since Early Stone Age at Kanchipuram, Archeology Daily News, 12-மார்ச்-2009

* http://www.archaeologydaily.com/news/20090312744/Evidences-of-Human-activities-since-Early-Stone-Age-at-Kanchipuram.html

* தெய்வத்தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே: http://www.andhimazhai.com/news/viewmore.php?id=8443

* எப்படி பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆராய்ச்சி போல் கோர்த்து அளிக்கிறார்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியாளர்கள் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20504083-edition_id=20050408&format=html

 

Source: http://www.tamilpaper.net/?p=761

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.

வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடும் பொருட்டு

அனுமன் முதலான வானரப்படைகளை பாரதவர்ஷத்தின் தென் புறத்திற்கு சுக்ரீவன் அனுப்பிகிறான்.

விந்திய மலை தொடங்கி, தென் துருவப்பகுதியை அடையும் வரை பார்க்ககூடிய

நிலம், மலை, நாடுகள், கடல் போன்ற நீர்நிலை ஆகிய அனைத்தையும் சுக்ரீவன் வர்ணிக்கிறான்.

அவன் வர்ணித்ததில், இந்தியாவின் தற்போதைய தென் பகுதி வரை நம் போன கட்டுரையில் பார்த்தோம்.

 

அதைத் தொடர்ந்தும் சுக்ரீவன் சில நிலப்பகுதிகளை வர்ணிக்கிறான்.

அவ்வாறு அவன் வர்ணிக்கும் இடங்களில் இன்று இந்தியப் பெருங்கடலே உள்ளது.

மாலத்தீவுகளைத் தவிர சொல்லிக் கொள்கிறபடி ஒரு நிலப் பாகமும் இல்லை.

ஆனால் சுக்ரீவன் அங்கெல்லாம் காணக்கூடிய பகுதிகளை விவரிக்கவே,

ராமாயண காலத்திலும்,

அதற்கு முற்பட்டும்,

இந்தியக் கடலில் கண்ணுக்குத் தென்படும்படியாக நிலங்கள் இருந்தன என்பது புலனாகிறது.

இந்தப் பகுதியில் குமரிக் கண்டம் இருந்தது என்று சங்க நூல்கள் மூலமாக நாம் அறியவே,

சுக்ரீவனது வர்ணனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன்னால் ராமாயணம் நிகழந்தது என்று பார்த்தோம் (பகுதி 14).

எனவே சுக்ரீவன் விவரிக்கும் பகுதிகள்

இந்தியப் பெருங்கடலில் 7000 ஆண்டுகளுக்கு முன்வரை

கடல் மட்டத்துக்கு மேலே இருந்தன என்பது ருசுவாகிறது.

 

 

 

ராமாயண வர்ணனைகளுடன்,

செயற்கைக் கோள் மூலமும்,

பல ஆழ் கடல் ஆராய்ச்சிகள் முலமும்

நமக்குக் கிடைத்து வரும் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்

கடல் கொண்ட பண்டைய பாண்டியன் நிலங்களின் அமைப்பை அறிந்து கொள்ளலாம்.

அந்த அமைப்புகளைத் தேடும் முயற்சியில்,

இரண்டாம் சங்கம் நடை பெற்ற கபாடபுரம் எங்கிருந்தது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம்.

 

 

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பாகத்தில் உள்ள மலய பர்வதம் பகுதியில் கொல்லம் உள்ளது.

அங்கிருந்து தென்புறம் சென்றால் பாண்டிய நகரமான கவாடபுரத்துக்குச் செல்லலாம் என்று சுக்ரீவன் கூறினான் என்பதை முன் பகுதியிலேயே கண்டோம்.

கொல்லம் குமரி’ என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் சொல்லவே,

கொல்லம் பகுதி இருக்கும் மேற்குக் கரை ஓரமாக, கொல்லத்துக்குத் தெற்கே கவாடமும்,

கொல்லத்தை ஒட்டிச் செல்லும் நீண்ட மலைத் தொடர் குமரி மலையாகவும் இருக்க வேண்டும்.

ஆழ்கடலில் இந்த மலை செல்வதை இந்தப் படத்தில் நன்கு காணலாம்.

இந்த மலைத் தொடர் ராஜஸ்தானத்தில் உள்ள ஆரவல்லி மலையின் தொடர்ச்சியாகும்.

அது தற்போதைய இந்தியாவின் மேற்குக் கடலில் (அரபிக் கடல்) இந்தியாவை ஒட்டியும்,

இந்தியப் பெருங்கடலில் நீண்டும் செல்வதைக் காணலாம்.

இந்த மலைத் தொடர், ஆஃப்ரிக்காக் கண்டத்தின் கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவை ஒட்டிச் செல்கிறது.

இப்படி நீண்டிருக்கும் மலைத்தொடரின் அரேபியக் கடல் பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேல் இருப்பதே லட்சத் தீவுகள் ஆகும். இந்தியாவின் தென் பகுதியில் இதே தொடரில் வெளியில் தெரியும் பகுதிகள் மாலத்தீவுகள் ஆகும். 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலமுரியா கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை

“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000

எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)

இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை

விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)

இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி

கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்

வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)

குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)

சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,

அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை

எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு

2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா

3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா

4. தொலை கிழக்கில் – சீன நாடு

5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்

6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!

குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது

2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது

3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது

4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்

2. இடைக்காலத்தமிழ்

3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.

2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.

3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு

உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்

வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்

மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்

ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

 

 

சங்கங்கள்

நான்கு தமிழ்ச் சங்கங்கள்

பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன போதிலும் நான்காம் தமிழ்ச் சங்கம் இன்றும் இயங்கி கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே. தமிழ்ச் சங்கங்களைப் பற்றியும், சங்க வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் அறிய பல இலக்கியச் சான்றுகள் உதவுகின்றன.

சங்கச் சான்றுகள்

1. கடைச்சங்கப் புலவராகிய சீத்தலைச்சாத்தனார்

“புலம்புரிச் சங்கம் பொருளொடு முழுங்க” என மணிமேகலையில் கையாண்டுள்ளார். மற்றுமோரிடத்தில்,

“பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மனிய மழை வளமிழந்தது புலவரை எல்லாம் வம்மின் யான் உங்களைப் புரந்தரகில் லேன்”

என்கிறார். இதன் மூலம் பாண்டியர்கள் சங்கம் வளர்த்தனர் எனத் தெளிவாகிறது.

2. முச்சங்கச் செய்திகளையும் வரலாறுகளையும் தனியொரு அகவற்பாவாலும், சிலப்பதிகாரத்தாலும், இறையனார் களவியல் உரைகளாலும் அறிய முடிகிறது. பிற்கால திருவிளையாடலிலும் சில சங்கச் செய்திகள் உள்ளன.

3. “மதுராபுரிச் சங்கம் வைத்தும்

மகா பாரதம் தமிழ்ப் படுத்தும்” எனச் செப்புகிறது சின்னமனூர் செப்பேடு – பாண்டியன் மெய்க்கீர்த்தி.

4. “தலைச் சங்கப் புலவனார் தம்முள்” – பெரிய புராணம்

5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” – ஔவையார்.

6. “புகலி ஞானசம்பந்தன் உரை செய்

சங்கமலி செந்தமிழ்கள்” – திருஞானசம்பந்தர். திருவாதவூர்

7. “இமிழ்குரல் முரசன் மூன்றுடன் நாளும்

தமிழ்கெழு கூடல் தண் கோல்வேந்தே” – காரிக் கண்ணனார் புறம் 56.

8. “தொல்லாணை நல்லாசிரியர்

புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்” – மதுரைக்காஞ்சி 761 – 763.

9. “தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை” – சிறு பாணாற்றுப்படை 66-67

10. “நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார்

புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” – கலித்தொகை 35

11. “சங்க முத்தமிழ்” – ஆண்டாள் பெரிய திருமொழி

12. “பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாது” புறந்திரட்டு – புகழ்மாலை

மேல்காணும் பல்வேறு இலக்கியச் சான்றுகளின் வாயிலாக முச்சங்கங்கள் இருந்த உண்மைகளை தெளிவாக உணரமுடிகிறது. மேலும் நக்கீரனாரின் இறையனார் அகப்பொருளைரையும் கடைச் சங்கம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது. இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.

 

 

http://www.tamileluthu.org/nolaivayil/lemuria/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
247072_457335804348180_1255334730_n.jpg

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்...!

கடலில் மூழ்கிய பழந்தமிழரின் தலைநகரான "குமரிக்கண்டம்" பற்றிய வரலாற்று உண்மைகள் கண்டிப்பாக SHARE செய்யவும்

ஈழத்தமிழரும்(நாகர்), இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்புகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது.

இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும். இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது.

இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம். தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர்.

இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன. பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை.

அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில்(ஓடுகள்) ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது,

அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது. ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை.

ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது.

இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்?

தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்?

ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்!

இராமேசு(ஸ்)வரம் தொடக்கம் கோடிக்கரை(கோடியாக்கரை) வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும்.

அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது(தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்). காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும்.

இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும் (மாமல்லபுரம்) ஒன்று. காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம் (சீர்காழி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது.

இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என் நாடு நம் நாடு. நாம் வாழ்ந்த நாடு.
பூம்புகார்... ஒரு பார்வை... பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 20.01.2002ல் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.
பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “ அன்டர்வோர்ல்டு “ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை)
மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக்கதை என்றே பேசப்பட்டு வந்தது.
ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.
581931_300382660087596_785836000_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Kumari Kandam- The Lost Continent(குமரிக்கண்டம்)

“Lemuria” in Tamil nationalist mysticist literature, connecting Madagascar, South India and Australia (covering most of the Indian Ocean). Mount Meru stretches southwards from Sri Lanka. The distance from Madagascar to Australia is about 4,200 miles

Kumari Kandam or Lemuria (Tamil:குமரிக்கண்டம்) is the name of a supposed sunken landmass referred to in existing ancient Tamil literature. It is said to have been located in the Indian Ocean, to the south of present-day Kanyakumari district at the southern tip of India.



References in Tamil literature
There are scattered references in Sangam literature, such as Kalittokai 104, to how the sea took the land of the Pandiyan kings, upon which they conquered new lands to replace those they had lost. There are also references to the rivers Pahruli and Kumari, that are said to have flowed in a now-submerged land. The Silappadhikaram, a 5th century epic, states that the “cruel sea” took the Pandiyan land that lay between the rivers Pahruli and the mountainous banks of the Kumari, to replace which the Pandiyan king conquered lands belonging to the Chola and Chera kings (Maturaikkandam, verses 17-22). Adiyarkkunallar, a 12th century commentator on the epic, explains this reference by saying that there was once a land to the south of the present-day Kanyakumari, which stretched for 700 kavatam from the Pahruli river in the north to the Kumari river in the south. As the modern equivalent of a kavatam is unknown, estimates of the size of the lost land vary from 1,400 miles (2,300 km) to 7,000 miles (11,000 km) in length, to others suggesting a total area of 6-7,000 square miles, or smaller still an area of just a few villages.

This land was divided into 49 nadu, or territories, which he names as seven coconut territories (elutenga natu), seven Madurai territories (elumaturai natu), seven old sandy territories (elumunpalai natu), seven new sandy territories (elupinpalai natu), seven mountain territories (elukunra natu), seven eastern coastal territories (elukunakarai natu) and seven dwarf-palm territories (elukurumpanai natu). All these lands, he says, together with the many-mountained land that began with KumariKollam, with forests and habitations, were submerged by the sea.Two of these Nadus or territories were supposedly parts of present-day Kollam and Kanyakumari districts.

None of these texts name the land “Kumari Kandam” or “Kumarinadu”, as is common today. The only similar pre-modern reference is to a “Kumari Kandam” (written குமரிகண்டம், rather than குமரிக்கண்டம் as the land is called in modern Tamil), which is named in the medieval Tamil text Kantapuranam either as being one of the nine continents, or one of the nine divisions of India and the only region not to be inhabited by barbarians. 19th and 20th Tamil revivalist movements, however, came to apply the name to the territories described in Adiyarkkunallar’s commentary to the Silappadhikaram. They also associated this territory with the references in the Tamil Sangams, and said that the fabled cities of southern Madurai and Kapatapuram where the first two Sangams were said to be held were located on Kumari Kandam.

In Tamil national mysticism
In the late 19th and early 20th centuries, Tamil nationalists came to identify Kumari Kandam with Lemuria, a hypothetical “lost continent” posited in the 19th century to account for discontinuities in biogeography. In these accounts, Kumari Kandam became the “cradle of civilization”, the origin of human languages in general and the Tamil language in particular. These ideas gained notability in Tamil academic literature over the first decades of the 20th century, and were popularized by the Tanittamil Iyakkam, notably by self-taught DravidologistDevaneya Pavanar, who held that all languages on earth were merely corrupted Tamil dialects.

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida“,
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar)
Mathivanan uses “Aryan Invasion” rhetoric to account for the fall of this civilization:

“After imbibing the mania of the Aryan culture of destroying the enemy and their habitats, the Dravidians developed a new avenging and destructive war approach. This induced them to ruin the forts and cities of their own brethren out of enmity”.
Mathivanan claims his interpretation of history is validated by the discovery of the “Jaffna seal”, a seal bearing a Tamil-Brahmi inscription assigned by its excavators to the 3rd century BC (but claimed by Mathivanan to date to 1600 BC).

Mathivanan’s theories are not considered mainstream by the contemporary university academy internationally.

Popular culture
Kumari Kandam appeared in the The Secret Saturdays episodes “The King of Kumari Kandam” and “The Atlas Pin.” This version is a city on the back of a giant sea serpent with its inhabitants all fish people.
Loss and imagination
Sumathi Ramaswamy’s book, The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories (2004) is a theoretically sophisticated[citation needed] study of the Lemuria legends that widens the discussion beyond previous treatments[citation needed], looking at Lemuria narratives from nineteenth-century Victorian-era science to Euro-American occultism, colonial, and post colonial India. Ramaswamy discusses particularly how cultures process the experience of loss.


Professor Karsten M. Storetvedt, the chair in geomagnetism at the University of Bergen, Norway, and an author of the Global Wrench Theory (GWT), says that the equator regions have always been most prone to natural catastrophes like earthquakes and volcano eruptions. A part of explanation is that planet rotation and especially the difference in rotation speed between poles and equator force earth mantel to strain and to break more easily where the strain is strongest, that is at the equator regions. These tectonic processes played important role in the disappearance of the ancient continent known as Lemuria to western scholars. Sri Lanka together with India, Indonesia and Malaysia were a part of this continent. Many islands in the Pacific and Indian oceans are remnants of this continent that in ancient time covered the whole area of today’s ocean. Storetvedt, who seems to reject the theory of continental drift and plate tectonics, says that descriptions of cataclysms in early literature when land suddenly went underwater are logical. But they should be proven to be scientific facts. This can be done with the help of sea-floor analysis that is possible to carry out. Modern theories find supportive evidences both in ancient literature and language history.
For More Information,
Source: http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article482101.ece
http://lemuria-kumarinadu.blogspot.com/
300306_307769106015831_451230897_n.jpg

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.

ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"

மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன

(௧) வெள்ளிடை மன்றம்

(௨) எலாஞ்சி மன்றம்

(௩) நெடுங்கல் மன்றம்

(௪) பூதச்சதுக்கம்

(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்

(௧) இளவந்திச்சோலை

(௨) உய்யணம்

(௩) சன்பதிவனம்

(௪) உறவனம்

(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், சிலவற்றை சான்றுகள் இல்லாமல் நம்புவது கடினமாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்கர் பிரபாகரன் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் குமரிக்கண்டாமோ லெமூரியாக் கண்டமோ இருக்கவில்லை என  மிக அழகாக நிறுவியுள்ளார். அவரின் ஆக்கத்துக்கு சுயாதா விருது கிடைத்துள்ளது. அவரிடமிருந்து எடுக்க முடிந்தால் அதை இங்கே போடுகிறேன். எம்மைக் கொண்டே எம்மை எமாற்றுவதை தமிழர் என்றுதான் புரிந்துகொள்ளப் போகின்றனரோ?????

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களாகிய நாம் நம் அறிவுச்சொத்துக்களையெல்லாம் இழந்து நிற்கிறோம். நம் பெருமை நமக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை.

 


 
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ
்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்
று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.


-- வரலாற்று தேடல் ஆரம்பம்

தமிழ் என் தாய்மொழி
1069418_564622220263221_1095988061_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழன் யார்?: பாகம் 5

=================

குமரித் தீவு இருந்தமைக்கான அறிவியல் ஆதாரங்கள்

(Source: Mr.Orissa balu)

குமரித்தீவு என்பது ஒரு தொடர்ச்சியான கண்டம் அல்ல. அது சுமார் 12000 சிறு தீவுகள் அடங்கிய தீவு கூட்டம். இயற்க்கை எம் இனம் மீது கொண்ட கோபம் காரணமாக, எல்லாம் இப்போ தண்ணீரால் மூழ்கி கிடக்கிறது. இன்று குமரி தீவு பற்றி ஆய்வு செய்யும் நபர்கள், ஆய்ந்து அறிந்து சொல்லும் தீவுக் கணக்கு 12000. ஆனால் அந்த அத்தனை தீவுகளையும் தன் கைக்குள் வைத்திருந்த கடலோடி தமிழன், என் முப்பாட்டன் 12000 என்ற கணக்கை எப்போவோ சொல்லிட்டு போய்ட்டான்.

ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி: (முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்)

=========================

ஸ்வஸ்தி ஸ்ரீ

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி

வேங்கை நாடும் கங்க பாடியும்

நுளம்ப பாடியும் தடிகை பாடியும்

குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

எண் திசை புகழ் தர ஈழமண்டலமும்

இரட்ட பாடி ஏழரை இலக்கமும்

முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்

திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்

எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே

செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு[3]

http://www.eelanatham.net/story/சர்வதேச-ரீதியாக-ஆதித்தமிழர்களின்-கடல்பயண-நிபுணத்துவம்

லெனின் பாபு லெமூரியா
46152_423206037798730_577792693_n.jpg

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
மயன் யாருக்கும் தெரியாத தமிழன் குமரிக்கண்டத்தில் இருந்தது....

குமரி கண்டதை பற்றி கிஷன் படிக்கும் போதும் பல தெரியாத விஷயம் தெரியவந்தது, அதுல ஒரு விஷயம் தான் மயன் என்னும் சிற்பி குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர்...

மேலும் வியப்புடன் கிஷன் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்....

1) மாமுனி மயன் என்பது அவர் பெயர், மாயன் இனத்தவர் இல்லை பச்சை தமிழன், அவர் ஒரு சிற்பி.

2) மயனே தமிழர்களின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன.

3) மயமதம் என்னும் கட்டிடகலை நூலை இயற்றியவர், இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன்.

இப்போம் புரிஞ்சி இருக்குமே இவர் தான் உலகின் முதல் Civil Engineer.

என்ன பண்ணி என்ன??? நாம எழுதுன நூல வாசிக்க ஆளுஇல்லையே என்பது தான் வருத்தம்....

எது எப்படியோ குமரிக்கண்டத்தில் இருந்து ஒரு மாமுனியை கண்டுபிடித்து கிஷன் உங்களிடம் பகிர்ந்து கொண்டான்.... நீங்கள் உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்காக -NaNa

— with Senthil Varadhan and 3 others.
1175143_490334354396814_1826735204_n.jpg

 

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Orissa Balu

டியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

1238816_10151809477927192_199519044_n.jp
1176235_10151809478622192_1167009834_n.j
1234880_10151809479017192_1602470918_n.j

 

Orissa Balu குமரிக்கடலில் தொல்லியல் சார் கடலியல் ஆய்வு என்று பன்முக பார்வையில் கடல் தொடர்பான அணைத்து மக்களையும் சந்தித்து ஒரு நம்பக தன்மையை என் ஆய்வுகள் மட்டுமே ஏற்படுத்தி உள்ளது

தி.மு. க ஆட்சி முடியும் தருவாயில் இரண்டு முறை சந்திப்பு நடந்தது

நேரடி குமரி கடலியல் கள ஆய்வு அறிஞர்கள் இல்லாமல்

என் பெயர் பலரால் பரிந்துரை செய்யபட்டும் தொல்லியல் ஆணையர் திரு ஸ்ரீதரன் அவர்கள் ,

என் நிகழ்ச்சியை பார்த்தவர் என்பதால் என்னை அவருக்கு கீழாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் என் பெயரை பரிந்துரை செய்ய வில்லை அவருக்கும் ஆட்சி மாறும் என்ற எண்ணம் இருந்ததால் , என் தொடர் முயற்சி தள்ளி வைக்க பட்டது

பொதுவாக மானுடவியல் , தொல்லியல் துறை அதிகாரிகள் அனைவரும் இன்று வரை எனக்கு நல்ல நண்பர்கள்

குறிப்பாக முன்னாள் இயக்குனர் முனைவர் நடன காசி நாதன் மேடைகளில் பேசும் போது என் பெயரை தவறாமல் சொல்வார்

1956 வரை குமரி திருவிதாங்கூர் அரசாக இருந்தன்மையால் அங்கு நடந்த ஆய்வுகள் மெட்ராஸ் மாகாண மக்களுக்கு அதிகம் தெரியவில்லை

இன்றும் குமரிக்கடலில் பல் வேறு பணிகளுக்காக ஆய்வுகள் நடந்து வருகின்றன ஆனால் தொல்லியல் தொடர்பாக இல்லை

இன்றும் அரசு இதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்றும் பல முயற்சிகள் செய்து வருகிறேன்

குமரிகண்டம் தொடர்பாக நீலக்கண்டன் இயக்கி ஒரு படம் உலகத் தமிழ் மாநாட்டில் இலக்கிய தரவுகளுடன் வெளி வந்தது

அதில்கடல் சார் தொல்லியல் தரவுகள் துளி கூட கிடையாது

இப்பொழுது மீன் வளத் துறை மற்றும் குமரி கடலில் ஆய்வு செய்பவர்களை என் ஆய்வு நிறுவனம் மூலம் குமரிக்கடலின் மீன்வளம் எதனால் வந்தது என்பதற்காக இந்த முறை அக்டோபர் முதல் பெப்ரவரி வரை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறேன்

என் ஆய்வின் மூலம் கடலில் நிலம் மூழ்கி உள்ளது என்பதை உறுதி செய்து வருகிறேன்

 

Orissa Balu குமரிக்கடல் ஆய்வு தமிழ் உணர்வு உள்ளவர்களால் மட்டுமே உயிருக்கு பயப்படாமல் செய்ய முடியும் என்பது என் கள ஆய்வில் நான் உணர்ந்தது

குமரிக்கடல் தென்மேற்கு மற்றும் வடக்கிழக்கு என்ற இரண்டு பருவங்களை சந்திக்க கூடியது

கடலில் பாறைகள் நிறைந்த இடம்

கடலின் தன்மையை புரிந்து செயல் படுவது என்பது படிப்பிற்காக ஆய்வு செய்பவர்களால் முடியாது

மீனவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன்

குறிப்பாக மீனவ குடும்ப பெண்களுக்கு

பொதுவாக கடலோடும் ஆண்கள் தங்கள் தொழில் பற்றி சொல்ல விருப்ப பட மாட்டார்கள்

கல்லூரி மாணவிகளின் மூலம் நான் அணுகியபோது , மீனவ பெண்கள் தங்கள் குடும்பத்தினர் கடலில் பார்த்த பல செய்திகளை என்னுடன் பகிர்ந்த போது தான் நான் தெளிவானேன்

என் ஆய்வுகள் நூலாக வரும் போதும் , குறும் படங்களாக வரும் போது வியந்து போவீர்கள்

Orissa Balu in FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஊடக நண்பர் சஞ்சீவி அவர்களின் பார்வைக்கு

--------------------------------------------------------------------------------------

கடல் கொண்ட தென்னாடு என்ற குமரி’க்கண்ட ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய தேவைகளும் புதிய கோணங்களும்

சிவ பாலசுப்ரமணி (கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு) அவர்களால் தென்மொழி இதழ் மார்ச்சு2012 இல் வெளிவந்த கட்டுரை

============================================

உலக அறிஞர்கள் கூறுகிற ‘இலெமூரியா’க் கண்டத்துடன் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல் கொள்ள அழிந்த நிலங்களை தொடர்புபடுத்தி, 1885இலேயே சி.டி.மெக்ளின், இலெமூரியா தென்னிந்தியாவாகிய தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே நீதிபதி நல்லசாமி அவர்கள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடலில் மூழ்கிய பகுதிகளும் தான் இலெமூரியா என்று குறிப்பிடப்படுகிறது என்று 1898இல் உறுதிப்படுத்தினார்.

அவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கக்கால உறுப்பினராவார்.

ஆங்கில அரசின் அறமன்ற நடுவராகப் பணியாற்றிய நல்லுசாமி அவர்கள், போப், மாக்சுமுல்லர் இவர்களுடன் நல்லதொடர்பில் இருந்தவர். போப் ஐயர், ‘என் கல்லறையின்மேல் ஒரு தமிழ் மாணவர் உறங்கிறார்’ என்று எழுதுங்கள் என்று எழுதியமடல் நல்லுசாமி அவர்களுக்கே. சைவ சித்தாந்தம், Divine Light என்று இருமொழிகளிலும் சிவனிய இதழ்களை நடத்தி வந்தார்.

மடகாசுக்கர், ஆசுத்திரேலியா, தென்னிந்தியாவாகிய தமிழ்நாடு ஆகிய நிலப்பரப்புத் தன்மைகளின் ஒற்றுமை, இவற்றில் படர்ந்திருக்கும் நிலத்திணைகள், வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் காட்டி இப் பகுதிகளை இணைத்த ஒரு பெருநிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது பின்பு மூழ்கியிருக்க வேண்டும் என்ற கருதுகோள் உருவானது.

லெமூர் என்ற தேவாங்கு வாழும் மடகஸ்கார் மட்டும் அதன் படிமங்கள் கிடைத்த ஊட்டி மலைத்தொடர் மற்றும் புதிய பப்புவான் கினியா போன்ற இடங்களை ஒன்று இணைத்து மறைந்த ஆவி என்ற பொருளில் லெமுரிய என்ற பெயர் வந்தது

ஆனால் அண்மையில் நாட்டார் வழக்கியலில் லெமூர் என்கின்ற தேவாங்கை தமிழர் கடல் சார் பயணத்தில் மேற்கு திசையை காட்ட பயன் படுத்தினார் என்ற சொல்லும் நம்மை சிந்திக்க வைக்கிறேது

1912இல் செருமானிய அறிஞர் வெக்னர் உருவாக்கிய கண்டப் பெயர்ச்சிக்கோட்பாடு வந்தபின், இந்தியா என்ற நிலப்பரப்பே மடகாசுக்கர் பகுதியிலிருந்து பிரிந்து இப்போது ஆசியாவோடு இணைந்து மோதி இமயமலையை உருவாக்கியிருக்கிறது என்ற கருதுகோள் உருவானது.

இது நிகழ்ந்து பலகோடியாண்டுகள் ஆகிறபடியாலும் மாந்தன் தோன்றியது மிகவும் பிற்காலம் ஆனபடியாலும் கழக இலக்கியங்களின் காலம் அதனினும் மிகவும் பிற்காலமானதால் இதற்கும் தமிழிலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்ட கருத்திற்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

லெமுரியா அல்லது குமரிக்கண்டம் , குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்று எழுதிய அப்பாத்துரையாரின் கருத்துப்படியும், கால்டுவெல் மொழிஆய்வின்படியும் அதன்வழி தேவநேயப்பாவாணரின் மொழி அகழ்வாய்வின்வழியும் உருவான குமரிக்கண்டக் கொள்கையும் மாந்தன் தோற்றம் பரவல் கொள்கையும்

தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்டமும் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் அடங்கியதல்ல.

எலனா பிளவாத்ஸ்கி ஆரம்பித்து வைத்த லெமுரியா தொடர்ச்சி சுப்பிரமணியன் சாஸ்திரி அவர்களால் வரைபடம் போட பட்டு நம்பகத்தன்மையை இழந்தது

மேற்கூறிய குமரிக்கண்டம் இருந்திருப்பதற்கான சான்றுகள் எவையும் நிலவியல் சான்றுகளுடன் நிறுவப்படவில்லை.

1959-1964 இல் நடந்த இந்திய மாகடல் கடலாய்வின்வழி கண்டறிந்த மூழ்கிய அல்லது மேல்தெரிகின்ற மலைத்தொடர்களும் தொடர்ச்சியான தீவுகளும் ஒரு நிலப்பரப்பு விட்டு விட்டு தீவுகளாய் இருந்திருப்பதற்கான சான்றுகளாக இருப்பதால் கடலில் ஒரு நிலப்பரப்பு மூழ்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

இப்போது எங்களுடைய கடலாய்வு நேரடியாகக் கடலில் களஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை கடல் கொண்ட தென்னாட்டின் ஆய்விற்கான எந்தக் கள ஆய்வும் எந்த அரசாலும் தொடர்ந்து மேற்கொள்ளப் படவில்லை.

குறைந்த அளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள பட்டன .

எனினும் எங்களுடைய சில ஆய்வுகளிலேயே பல செய்திகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்த ஆய்வின்படி இதுவரை உலகில் அதிக மீன்வளம் மிக்கப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆழம் குறைந்த கடல்பகுதிகளாகவே உள்ளன. அவற்றில் இந்தியப் பெருங்கடலில் ஆழம் குறைந்த பரப்புகள் கொண்ட பகுதிகள் ஆங்காங்கு நிறைய பகுதிகள் உள்ளன. குமரிக்கு நேர்கீழ் சற்றுத்தொலைவிலேயே 4500 சதுர மைல் கல் உள்ள பெரும்பரப்பு ஒரு சீரானதாக இல்லையெனினும் 140 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

அடுத்து மீன்வளம் நிறைந்த பகுதியாக உள்ள பகுதிகளின் புள்ளி விளக்கப்படி அவை மாந்தன் வாழ்ந்து மூழ்கிய இடிபாடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இவைதாம் மீன்கள் குஞ்சுபொரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் எனவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பகுதிகள் எனவும் ஆய்வுலகம் குறிப்பிடுகிறது.

குமரிக்கடலில் பெரும்பகுதி இவ்வாறு இடிபாடுகள் நிறைந்த தரைப்பகுதிகளாக இருப்பது நம் களஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் அப்பகுதி மீன்வளத்தில் சிறந்த பகுதியாக உள்ளது என்பதும் தெரியவந்தது. 55 கி.மீ. தொலைவில் அதுபோன்ற தீவுகளும் ஆழங்குறைந்த திட்டுகளும் இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இலக்கத்தீவுப் பகுதியிலிருந்து மடகாசுகர் பகுதிக்கு இடையில் தொடர்ச்சியான தீவுகள் ஏராளமாக இருப்பது தெரியவருகிறது.

மலையுச்சிகளும், கண்டங்களும் மடகாசுகர் பகுதியைச் சுற்றி ஏராளமாக உள்ளன.

அவை தென்னிந்தியாவை நோக்கி உள்ளன. நம் நாட்டில் உள்ள சக்கரைவள்ளிக்கிழங்கு கீழைத் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அவை ‘குமரா’ என்று அழைக்கப்படுகிறது.

அது தமிழ்ப் பெயர் என்றே கருதப்படுகிறது. அந்த வள்ளிக்கிழங்கு கடலில் மிதந்தோ, அடித்துக்கொண்டோ போய் அத் தீவுகளில் தானாகப் பயிர் தோன்றியிருக்க முடியாது. அவற்றை நட்டு வளர்த்துத்தான் பயிர் செய்திருக்க முடியும். எனவே இவை கடற்செலவால் மட்டுமே பரவலாகச் சென்று பயிர்செய்திருக்கக் கூடும்.

கடற்செலவில் வள்ளிக்கிழங்குக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. அந்நாளில் கடற்செலவு உணவுக்கு மிகவும் ஏற்றது. கடற்செலவின்போது 6 மாதத்திற்குக் கெடாமல் கப்பலில் வைத்துக் காத்துக் கொள்ளமுடியும். இது கீழைத் தீவுகளிலிருந்து பசுபிக்கு கடலில் தென்அமெரிக்கா வரையுள்ள தீவுகளில் நிரம்பக் காணப்படுகிறது. பாய்மரக்கப்பலுக்கு முன்பே பலவகையில் நீரோட்டத்தை நம்பிக் கடல் செலவு செய்துள்ளனர் என்பது நம் ஆய்வில் தெரியவருகிறது. அதற்குரிய மிதவை, தெப்பம், ஓடம், தோணி, படகு, கட்டுமரம் என்று பலபெயர்களில் செலவுப் பொருள்கள் இருந்துள்ளன. ஒரியா, பர்மா, கடாரம், அந்தமான் போன்ற கரையோர ஊர்களில் இப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன் ஊர்ப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக வழங்குகின்றன.

உலகின் 8,50,000 கி.மீ. கடற்கரையில் 3,50,000 கி.மீ. கடற்கரை மாந்தனின் கையகத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் தமிழர்களின் பதிவுகள் இருப்பது தெரியவருகிறது.

இவை ஆமைகளின் வலசை இடங்களாக இருப்பதுதான் இதற்குக்காரணம். ஆமைகளின் போக்குகளையும், செங்கால்நாரையின் போக்குகளையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆமைகள் கடலின் நீரோட்டத்தின் துணைகொண்டே உலகை வலம் வந்தன. அந் நீரோட்டங்களை ஆமைவழியே தொடர்ந்து தமிழர்களும் நன்கு அறிந்திருந்தனர்.

தமிழர்களின் திருமணங்களில் ‘முளைப்பாரி’ கொண்டு போவது ஒரு சடங்காக இருக்கும். இது உழவுத் தொடர்பானது. தங்களுக்குப் பயிற்சி மிகுந்த பயிர்களை மணமகள் தான் வாழப்போகும் புதிய இடத்திற்குச் சீராகக் கொண்டு சென்று அங்குப் பயிர்செய்வது என்ற வழக்கத்தின் தொடர்ச்சியே இந்த ‘முளைப்பாரி’ திருமணச்சடங்கு. உலகின் கடற்கரையோர குடியேற்ற மக்களிடமும் இந்த வழக்கம் பரவலாக உள்ளது.

இது தமிழர்களின் பரவல் முறையைப் பின்பற்றியதாகும்.

பெரியஅளவில் எந்த அரசும் ஆர்வம் காண்பிக்காத நிலையிலேயே கடல் கொண்ட தென்னாடு தொடர்பான ஆய்வு இருந்தது.

இது தொடங்கினால் அது தமிழர்களின் பண்டை வாழ்வை தொல்வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக முடியும் என்பதாகவே இந்த ஆய்வு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இலக்கியத்தில் உள்ள கடல்கோள்கள், கண்டம் மூழ்குதல் என்ற செய்திகளெல்லாம் சிறிது காலத்திற்குமுன்வரை மிகைப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டது.

அவற்றில் உண்மை இல்லையென்றும் பழம்பெருமை பேசுவதாகும் என்றே புறந்தள்ளப்பட்டிருந்தது.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இதுபற்றி ஆய்வுகள் மீண்டும் புத்தாக்கம் பெற்றன. ஆழிப்பேரலை, எரிதிரை என்றெல்லாம் பெயர் மீட்டெடுத்து அதன் ஆய்வின் தேவையை ஆய்வுலகம் எடுத்துக்கொண்டது. மீண்டும் ஆழிப்பேரலை தோன்றுமா அது எத்தன்மையில் தோன்றும். இந்தியப் பெருங்கடலின் தன்மை என்ன? அக்கடலின் அடிப்பரப்பு எவ்வாறுள்ளது. இதுவரை கடல்கோள்கள் நடந்த்தா?

கடல்பின் வாங்கியதா?

114 கிலோ மீட்டர் வரை பல வேறு காலத்தில் கடல் உள்நுழைந்துள்ளதன் வரலாறு என்ன?

அரியலூர், குடியம், மானாமதுரை, பனக்குடி போன்று நடுநாட்டிலும் கடல் வந்து போனதற்கான சான்றுகள் உள்ளனவா என்பவற்றைத் தெரிந்துகொள்வது அதன் ஆய்விற்கு வழிவகுத்தது.

குமரி கண்ட ஆய்வின் தேவை இவ்வாறாக விரிவுபெற்றுள்ளது.

உலக நாகரிகத்தில் தமிழர் பரவல் தமிழ்மொழிப் பரவல் இவ்வாறு பலதுறை ஆய்வுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தின் 17 இலக்கம் ஆண்டுகட்குமுன் மாந்தன் நெருக்கமாக வாழ்ந்திருந்தது இன்று சாந்திபாப்பு போன்ற ஆய்வாளர்கள்வழி பழங்கற்கால ஆய்வுகள் உலகிற்கு எட்டியுள்ளது. உலகின் முகாமையான ஆய்விதழ்கள் அதை நுட்பமாக ஆராய்ந்து உறுதிசெய்து வெளியிடுகின்றன.

தென் கிழக்கு ஆசியாவில் அன்றைய மதராசில் பல்லாவரம் பகுதிகளிள் முதல் முதலாக கல்கோடாரிகள் எடுத்த சார் ராபர்ட் ப்ருசே பூட் மற்றும் கிங் அவர்களின் கடுமையான கள ஆய்வுகள் , உலக நாகரிகத்தில் நம்முடிய கற் கால மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த பகுதிகளை அவர்கள் பயன படுத்திய கல் ஆயுதங்கள் இருந்த இடத்திற்கு மெட்ராஸ் கற் கால் மனிதர்களின் நாகரிகம் என்று பெயரிட்டது , பெரும்பானமையான் தமிழர்களுக்கு தெரியாது

நம் தொன்மையை முழுமையாய் வெளி படுத்த இன்னும் முறைப்படுத்தப்பட்ட கடல் ஆய்வுகள் முழமையாக தொடங்க வில்லை.

மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பழம் ஆய்வுகள், நிலத்திணை ஆய்வுகள் இன்று யாரும் தொடாமல் உள்ளது. ஒவ்வொரு நிலத்திணையையும் தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தி வாழ்முறைக்குத் தக உருவாக்கியுள்ளார்கள் என்பதை உலகமே வியக்கிறது.

தென்னை, பனை, மா, பலா, முந்திரி ஆகியவற்றை இத்தனை வகையில் முழுவதுமாக பயன்படுத்த முடியுமா என்று வியக்கும் வகையில் இவர்கள் தங்கள் வாழ்முறையில் பயன்படுத்துகின்றனர்.

மீன்பிடிமக்கள், பாய்மரத்தைப் பயன்படுத்திய கடலோடி மக்களின் பலதொழில்நுட்பங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

பறவைச் சிறகுகளின் தொழில்நுட்பத்தைக் கண்டு அதையப்பக் கப்பல்களில் பாய்மரங்களை அமைத்தவர்கள் தமிழர்களே. பாய்மரத்துணியை பருத்தியிலிருந்து நெய்து புளியங்கொட்டையும் பிற மாவுகளையும் கலந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை இன்றளவும் செய்துவரும் ‘வாதிரி’ என்றழைக்கப்படும் தமிழ்ப்பிரிவினர் இன்றும் வாழ்கிறார்கள்.

விசைப்படகுகள், நீராவிக்கப்பல்கள் வந்தபின் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிவியல் படுத்தப்படாமலேயே மறைந்துவிட்டன.

கீழைக்கடல் முழுவதும் கடல் மேலாண்மை செய்துள்ளதைத் தமிழ் மக்களே இன்றைக்கு நம்பவில்லை. கடாரம் கொண்டான் என்றால் அதுவெறும் பெருமை என்றே நம்ப மறுக்கிறார்கள்.

தமிழரின் மரபு விளையாட்டுகளான சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு, தாயம், பல்லாங்குழி போன்றவை உலக கடலோர ஊர்களில் இன்றும் நிலவுகின்றன.

உலகம் சுற்றிய தமிழக கடலோடி மீனவ மக்கள் இன்றைக்கும் கடற்கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள் .

அவர்களில் பலர் உலக எல்லைக் கடவு வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெறும் பாய்மரக்கப்பலில் அந்தமான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று வலம் வருவதைப் பெரியதாகக் கருதுவதேயில்லை. மிக எளிமையாக அதன் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர்.

ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு மடகாசுக்கர் வழியாகத்தான் முதலில் தென்னிந்தியாவை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு கட்டலான் என்ற பழங்குடிமக்களின் வரைபடம் துணையாக இருந்தது. ‘கட்டலான்’ என்ற இனமே கடலான் என்னும் தமிழ்ப்பெயர் கொண்ட தமிழ்சார் குடியேற்ற மக்களே என்பது அடுத்த ஆய்வு. தமிழ்நாட்டின் பழங்கல்வெட்டான மாங்குளம் கல்வெட்டில் ‘கடலன்வழுதி’ என்ற பாண்டிய மன்னனின் பெயர் இடம்பெற்றுள்ளது காணலாம்.

சுறாவேட்டை, முத்துக்குளித்தல், சங்குகுளித்தல், சிப்பியெடுத்தல் போன்ற தொழில்களின் மக்கள் இங்கு தமிழரிடை அழியா இனமாகத் தங்கள் அடையாளத் தொழிலிலேயே ஈடுபட்டுத் தனித்து வாழ்ந்துவருவதுபோல் பிலிப்பைன்சு, சீனா, சப்பான் நாடுகளின் கரையோரங்களில் பெரும்பான்மை மக்களின் தொடர்பில் இல்லாமல் இந்தத் தொழிலோடு வாழ்ந்து வருகின்றனர். ‘முத்து’ என்ற சொல்கூட அங்கு வழக்கில் உள்ளது.

தென்அமெரிக்கா முதல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு இடைப்பட்ட கீழைநாடுகளின் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்று வில்லியம் மார்சுடன் (William Marsden) குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் கடல் மட்டம் குறைந்த கடற்பரப்பிலேயே அதைத் தொடர்ந்து வந்தனர். மடகாசுக்கர்க்கும் தமிழகத்திற்கும் இடையில் ஆயிரக்கணக்கான தீவுகளும் கடல் ஆழம் குறைந்த திட்டுகளுமே இவர்களின் வருகைக்குத் துணைபுரிந்தது.

இவர்களில் வரவுகாலத்தில் கி.பி. 1350இல் கடலூழி தோன்றியிருந்ததால் கடல்மட்டம் சற்று

குறைந்து இருந்தது இவர்களின் வருகையின் போது அவர்களின் கவனத்தை ஈர்த்தது .

ஐரோப்பிய மக்களின் கடற்செலவு வரலாறு சென்னைப் பல்கலைக்கழக பழைய நூலகத்திலும் இலண்டன் நூலகத்திலும் 300க்கும் மேற்பட்ட நூல்களில் குறிப்புகளாகக் கிடைக்கின்றன.

எனவே கடல் கொண்ட தென்னாட்டின் மூழ்கிய நிலங்கள் தொடர்பான ஆய்வின் தேவைகள் புதிய கோணங்களில் தோன்றி பழைய வரலாறு என்ற நிலையிலிருந்து நிலப்பாதுகாப்பு என்ற வகையில் விரிந்துள்ளன.

அதன்வழி கடல் கொண்ட தென்னாடு வரலாறும் மூழ்காமல் மீட்டெடுக்க ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கள ஆய்வும் இவ்வழியில் வெற்றியுடன் எளிதே தொடர்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

http://ta.wikipedia.org/wiki/ஒரிசா_பாலு

-PAXP-deijE.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலுவுக்கு தமிழ் நாட்டரசு fund கொடுத்துள்ளது பற்றி நீங்கள் அறிய மாட்டீர்கள். அவரைப் பற்றி ஒருவர் கூறினார், எம்முடன் இருந்து கதைக்கும் போது பாலு குமரிக் கண்டம் இல்லை என்றே கூறுகிறான். ஆனால் வெளியே குமரிக்கண்டம் இருந்தது என்று கூறி  ஆய்வு செய்வதாக  பணத்தை வாங்குகிறான் என்றார். இல்லை என்றால் பணத்தைக கொடுக்க மாட்டார்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.