Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புதிய வேலை தேடுவது எப்படி - சுயவிபரக் கோவை தயாரிப்பு / விண்ணப்பம் / தொலைபேசி நேர்முகத் தேர்வு / நேர்முகத் தேர்வு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சுயவிபரக் கோவை தயாரிக்கும் போது... நீங்கள் அதில் ஒட்டும் படத்தில் முக்கிய கவனம் எடுங்கள்.

சில வேலைக்கு... கட்டாயம் கோட் போட்டிருக்க வெண்டும்.

சிலதுக்கு... இளநீல, இள மண்ணிற, வெள்ளைச் சட்டை போன்றவை போதுமானது.

உங்களுக்கு "பற்றிக் சேர்ட்" பிடிக்கும், என்றுவிட்டு... அந்தச் சட்டையை, போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து அனுப்பாதீர்கள்.

முக்கியமாக படம் எடுக்கும் போது... புகையிரத நிலையங்களில் உள்ள, தானியங்கி படப்பிடிப்பு நிலையங்களில்... 5 €வுக்கு படம் எடுக்காது, தரமான புகைப்படக் கடைகளில்... படத்தை எடுங்கள். ஏனெனில்... உங்களது சுயவிபரக் கோவையை... வேலைக்கு விண்ணப்பிக்க அனுப்பும் போது, முதலில் பார்ப்பது... உங்கள் படத்தைத்தான். அதில் நீங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மாதிரி சிரித்துக் கொண்டிருந்தால்... வேலை கிடைச்ச மாதிரித்தான். :D

 

 

பிரித்தானியாவினைப் பொறுத்தவரை படம் அனுப்புவதும், வயது விபரம் குறிப்பதும் தடியை கொடுத்து அடியை வாங்குவது போலானது.

 

ஏனெனில் இந்த விபரங்கள் ஒரு வேலை கொள்பவர் கேட்பது சட்டப்படி தடை செய்யப்பட்டு உள்ளது. (Under the Age, Race and Sex discrimination at work act).

 

உதாரணமாக ஒரு வேலைக்கு இரண்டு வெள்ளையர்களும், இரண்டு கறுபர்களும் படங்களுடன் விண்ணபித்து, எடுக்கும் வெள்ளை, இரண்டு வெள்ளைகளை மட்டும் கூப்பிட்டால், (உள்ள இருந்து கதை வெளியில் போனால்), எடுக்கும் வெள்ளை துளைந்தார். 

 

நாமாக இதனை அனுப்பும் போது, தம்மை சிக்க வைக்கும் நோக்கமாக இருக்கலாம் என, அது உடனடியாக நிராகரிக்கப் படும்.

 

எனவே கவனமாக இருங்கள்.

 

அண்மையில் ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் தனது இயற் பெயருடன் 'Virgin Atlantic' விமான சேவை மக்கள் தொடர்பு பிரிவுக்கு வேலை விண்ணப்பித்து இருந்தார்.

 
அவருக்கு நிராகரிப்பு கடிதம் வந்து இருந்தது. அசராமல் அதே சுஜ விபரக் கொத்தில் பெயரை மட்டும் ஆங்கில பெயராக மாத்தி அனுப்ப, உடனடியாக நேர்முக அழைப்பு வந்தது.
 
பின்னர் என்ன, நிராகரிப்பு, அழைப்பு ஆகிய இரண்டு கடிதங்களையும் பத்திரிகைகளுக்கு கொடுக்க அந்த நிறுவனமோ அதனை சமாளிக்க பெரும்பாடு பட்டது.அவர் பெயருடன் சேர்த்து இரண்டு மூன்று வசனங்களையும் மாத்தி இருந்தார். அவை நாம் எதிர் பார்த்திருந்த வகையில் பொருந்தியதால் அழைக்கப் பட்டார் என்று சொல்லி உள்ளார்கள்.
 
அனேகமாக கறுவலுக்கு வேலை கிடைக்கும். இல்லாவிடில், அவர் முறையிடின் நிறுவனத்துக்கு சட்டச் சிக்கல் வரும்.  

 

 

Link to post
Share on other sites
 • Replies 63
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
இலங்கை மொறட்டுவ பல்கலைகழக பட்டதாரி ஒருவர் லண்டனில் பெற்றோல் நிலையமொன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.
 
அதே வேளை தனது துறை சார்ந்த வேலைகளும் தேடிக் கொண்டிருந்தார். ஒரு பிறந்த தின நிகழவில் அவர் விரும்பிய துறையில் வேலை செய்யும் ஒரு நபரைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். அவரும் இவரது சுஜ விபரக் கொத்தினை பரீசீலிக்க உடன்பட்டார்.
 
முதல் பக்கம் 3/4 பகுதியில் தனது பெயர் விலாசம், பிறந்த திகதி, இலங்கையில் ஆரம்ப பாடசாலை முதல், மொறட்டுவ பல்கலைக் கழகம் வரை விலாவாரியான விபரம் இருந்ததால், நண்பர் அனைத்தினையும் நீக்கி, பல்கலைகழகம் குறியாது, எடுத்த பட்டம் மட்டும் குறியுங்கள். நேர்முகத்தில் கேட்டால் விபரம் கொடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்.
 
அவரோ, ஆவலுடன் காரணம் கேட்டார். நண்பரும், வேலை தரும் வெள்ளைக்கு, இலங்கையும், சோமாலியாவும் அகதிகள் அனுப்பும் நாடுகள். இரண்டும் ஒன்று எனவே தேவை இல்லா தகவல்களை முதலில் கொடுக்க கூடாது என்று சொல்லி இருந்தார்.
 
நண்பர் சொல்ல வருவது புரியாமல், அவரோ, நீங்கள் எப்படி மொறட்டுவ பல்கலைகழகதினை, சோமாலியாவில் இருக்கக் கூடிய பல்கலைகழகம் ஒன்றுடன் ஒப்பிட முடியும் என்று கோபப் பட்டார்.
 
நண்பரோ, அசராமல், தம்பி மொறட்டுவ பல்கலைகழக தரம் குறித்து நீர் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. சோமாலியாவில் பல்கலைக் கழகம் இருக்குதோ என்று எனக்குத் தெரியாது. நான் சொல்ல வந்தது ஒரு வேலை தருபவரின் பார்வை. இதனை புரிய முடியாவிட்டால் உமக்கு, உமது படிப்புக்கு உரிய வேலை எங்கும் பெற முடியாது என்று கூறி விட்டார்.
 
அவர் இன்னும் பெற்றோல் நிலையமொன்றில் வேலை செய்து கொண்டுதான் இருக்கின்றார்.
 
நீதி: தேவை இல்லா விடயங்களை சுஜ விபரக் கொத்தில் தவிருங்கள்.
 
ஆங்கிலத்தில் ஒரு சொல்வடை உண்டு: Put yourself in other person shoes and see. அடுத்தவரின் நிலையில் இருபதாக ஊகித்து விடயத்தினை பார்த்தல்.
 
சுஜ விபரக் கோவை எம்மை குறித்து சொல்வது போலவே, ஒரு வேலை குறித்த விபரம் (Job Description) ஒரு வேலையினை குறித்து சொல்கின்றது. நிறுவனத்தினை பற்றி அதன் இணையத் தளம் விபரம் தரும்.
 
இவை ஒரு வேலை கொள்பவரின் நிலையில் இருந்து பார்க்க உதவுவதுடன், ஒரு வேலையாள் எப்படி இருக்க வேண்டும் என அவர்கள் எதிர் பார்ப்பார்கள் என ஊகித்து எமது சுஜ விபரக்கொதினை சரியாக தயார் செய்து, நேர்முகம் ஒன்றினை வெல்ல வேண்டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது சுயவிவரக் கோவையை (6 பக்கங்கள்) நேர்முகத் தேர்வு செய்யும் மேலதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்ட பொழுது, பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடத்திற்குள் வாசிக்கக் கூடியதாக இரண்டு பக்கங்களிற்கு மேற்படாது இருக்க வேண்டும் எனக் கூறினார். வேலை செய்த இடங்களும் அங்கு பெற்ற அனுபவங்களையும் சுருக்கியதில் 5 பக்கங்களிற்கு வருகிறது. நல்ல வேலைத் திட்டங்களில் (Project) வேலை செய்ததால்,  அவற்றைக் காட்டாமல் இருக்க விருப்பமில்லை. இனித்தான் சுருக்க வேண்டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது சுயவிவரக் கோவையை (6 பக்கங்கள்) நேர்முகத் தேர்வு செய்யும் மேலதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்ட பொழுது, பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடத்திற்குள் வாசிக்கக் கூடியதாக இரண்டு பக்கங்களிற்கு மேற்படாது இருக்க வேண்டும் எனக் கூறினார். வேலை செய்த இடங்களும் அங்கு பெற்ற அனுபவங்களையும் சுருக்கியதில் 5 பக்கங்களிற்கு வருகிறது. நல்ல வேலைத் திட்டங்களில் (Project) வேலை செய்ததால்,  அவற்றைக் காட்டாமல் இருக்க விருப்பமில்லை. இனித்தான் சுருக்க வேண்டும்.

 

 

எனது 8 - 9 பக்கங்கள். 
 
ஒரு முகவர் 2 பக்கம் ஆக்குமாறு சொன்னார். வழக்கமாக என்னுடன் தொடர்பில் இருக்கும் முகவோரோ, உனது விபரக் கொத்து, நேர்முகங்களைப் பெறாத ஒன்றாக இருந்தால் மட்டுமே அதனை குறைப்பது குறித்து கவலைப் படலாம் என்றார்.
 
அது சரியாகப் பட்டது.
 
மேலும் ஒரு வேலை தந்த முகாமையாளர் இடம் நேரடியாக கேட்டபோது, சரியாக, job description உடன் பொருந்தினால், நம்பிக்கை அளிக்கும் வகையில், கூடுதலாக அலட்டாமல் இருந்தால்,  பக்ககளின் எண்ணிக்கை குறித்து கவலை இல்லை என்று சொன்னார்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது சுயவிவரக் கோவையை (6 பக்கங்கள்) நேர்முகத் தேர்வு செய்யும் மேலதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்ட பொழுது, பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடத்திற்குள் வாசிக்கக் கூடியதாக இரண்டு பக்கங்களிற்கு மேற்படாது இருக்க வேண்டும் எனக் கூறினார். வேலை செய்த இடங்களும் அங்கு பெற்ற அனுபவங்களையும் சுருக்கியதில் 5 பக்கங்களிற்கு வருகிறது. நல்ல வேலைத் திட்டங்களில் (Project) வேலை செய்ததால்,  அவற்றைக் காட்டாமல் இருக்க விருப்பமில்லை. இனித்தான் சுருக்க வேண்டும்.

 

கிட்டத்தட்ட வருசத்துக்கு 1 மில்லியன் வாங்கும் KPMG நிறுவன பங்காளி (partner) ஒருவரின் சுயவிபரக் கோவை பார்க்கும் வசதி கிடைத்தது. இரண்டே இரண்டு பக்கங்கள் தான் அண்ணா. சுருக்கமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் இருப்பது முக்கியம். நீங்கள் முக்கியமானது எனக் கருதும் வேலைத் திட்டங்களை கண்டிப்பாகக் காட்ட வேண்டும். வெவ்வேறு வேலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு சுய விபரக் கோவைகளையும் பாவிக்கலாம்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்வுக் குறிப்பு (Selection Criteria) எழுதுவது எப்படி - பகுதி 1

வேலை தேடும் போது உங்களது சுயவிபரக் கோவை எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது நீங்கள் எழுதும் தேர்வுக் குறிப்பு. இது வேலைக்கு வேலை, நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபட்டிருக்கும். வேலை வழங்குனர்கள் வேலை குறித்த விபரம் (Job Description) குறிப்பிட்ட பின்னர் தாங்கள் வேலைக்கு எடுப்பவரிலிருந்து என்ன வகையான வேலைகளை எதிர் பார்க்கிறார்கள் எனவும் அந்த வேலை தேடுபவரின் கடந்த கால அனுபவங்கள் என்ன வகையில் தங்களின் (நிறுவனத்தின்) வேலையை  செய்ய உதவும் எனவும் அறியவே நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. இந்த தேர்வுக் குறிப்புகளிலே இரண்டு உப பிரிவுகள் இருக்கின்றன. அவை

1) முக்கியமான தகமைகள்  - Essential Criteria 
2) விரும்பத் தகுந்த தகமைகள் - Desirable Criteria

முக்கியமான தகமைகள் என அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்திற்கும் நீங்கள் கண்டிப்பாக பதில் எழுதியே ஆக வேண்டும். விரும்பத் தகுந்த தகமைகளுக்கு நீங்கள் பதில் எழுதுவது உங்களது வேலை விண்ணப்பத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும்.

உங்களுடைய தேர்வுக் குறிப்பை விடயத்தை மையப் படுத்தியதாகவும் தெளிவாகவும் எழுதுவது அவசியம். அனாவசிய அலட்டல்கள் சலாப்பல்களைத் தவிர்க்கவும். வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வுக் குறிப்பு எழுதத் தொடங்க முன்னர் இந்த வேலை எனக்குப் பொருத்தமானதா, எனது அனுபவத்திற்கும் கல்வித் தகுதிகளுக்கும் இந்த வேலை பொருந்துகிறதா என அலசி ஆராய்வது அவசியம். பொருந்தாத வேலைக்கு நேரத்தை செலவழித்து விண்ணப்பித்து அந்த வேலை கிடைக்காமல் போவதிலும் அந்த நேரத்தை தகுதியான, பொருத்தமான வேலைக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தலாம். சில வேலைகளைப் பார்த்தவுடன் தெரியும் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என. குறிப்பாக சம்பள அளவு அநேகமான நேரங்களில் வேலையின் கடினத் தன்மை, அனுபவ எதிர் பார்ப்பைப் பிரதிபலிக்கும்.

அனேகமாக வசன அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கு. அவுசிலே சிறிய வேலைகளுக்கு 100 வசனத்தில் இருந்து பாரிய முகாமைத்துவ வேலைகளுக்கு 750 / 1,000 வசனம் வரை கேட்பார்கள். சுய விபரக் கோவையின் நீளம் பற்றிப் பலர் குறிப்பிட்டிருந்தீர்கள். சுய விபரக் கோவையில் இருந்து நீக்கும் பொருத்தமான விடயங்களை இந்த தெரிவுக் குறிப்பின் பொருத்தமான இடங்களில் சேர்க்கலாம்.

தேர்வுக் குறிப்பு எழுதும் உங்களது நோக்கம்; உங்களது வேலை சார்ந்த புலமை (skills), அனுபவம் (experience) உங்கள் கடந்த காலத்தில் உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறது எனவும், புதிய வேலையில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களை சந்திக்க அவை எவ்வாறு உதவும் எனவும் அனுபவங்கள் மூலம் தெளிவுபடுத்துவதாகும்.

உங்களது தகமைகள், அனுபவங்கள், உதாரணங்கள் என எல்லாவற்றையும் கலந்தடிச்சு எவ்வாறு தேர்வுக் குறிப்புகளை எதிர் கொள்வது என அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நாதமுனிக்கும் தும்பளையானிற்கும் நன்றி.

 

இப்பொழுது கிடைக்கும் வேலையெல்லாம் ஏஜென்சிக்காரர் கூப்பிட்டு அல்லது பழைய வேலைத்திட்டங்களில் தெரிந்தவர்கள் அழைத்துச் செய்யும் வேலைகள்தான். அதனால் சுயவிவரக் கோவையைப் பற்றி இதுவரை அக்கறை எடுக்கவில்லை.

தற்காலிக வேலை (contract )செய்வதால் நிறைய வேலை இடங்கள் வந்து விட்டது.  ஒவ்வொன்றும் வேறு விதமான வேலை அனுபவங்கள். அதனால் வெட்டிக் கொத்துவது கஷ்டமாக உள்ளது. எனது துறையில் உள்ள தொழில் ரீதியாக சுயவிவரக் கோவை எழுதிக் கொடுப்பவர்களின் உதவியை நாடலாம் என்றிருக்கிறேன்.

 

Link to post
Share on other sites

தும்பளையின் எழுத்துக்களும், நாதமுனி, தப்பிலி, தமிழ்சிறி, வந்தி போன்றவர்களின் பின்னூட்டங்களும் முத்துக்கள்.. :D இந்தத் திரியை நிர்வாகம் பின்குத்தி விட்டால் பலருக்கும் பிரியோசனமாக இருக்கும்..

 

என்னிடமும் சுயவிபரக் கோர்வை ஒன்று உள்ளது. எனக்கென்றால் நூறுவீதம் திருப்தி இல்லை. சில வேலைகள்/கடப்பாடுகள் குறித்த விவரிப்புகள் ஒன்றையொன்று பிரதியெடுத்தவை போல் இருக்கும். ஆனால் செய்த வேலை ஒரேமாதிரியானவை என்றால் என்ன செய்ய முடியும்? இந்தச் சுயவிவரக் கோர்வையை நானேதான் முழுவதுமாக செய்தேன்.

 

இப்போதெல்லாம் வந்தி சொன்னமாதிரி linkedin இல்தான் காலம் தள்ளுகிறேன். கனடாவில் நல்ல பிரியோசனம் உள்ளதாக தெரிகிறது.

Link to post
Share on other sites

நல்ல தகவல்கள் அடங்கிய கருத்துகள்.  என்னுடையை சுயவிபரக் கோவை தான் எனக்கு விரைவாக வேலை கிடைக்க வழிசெய்வது. 2 பக்கங்கள் மட்டும் கொண்ட விபரக் கோவை. வேலை செய்த எல்லா நிறுவனங்களின் விபரங்களையும் , அங்கு செய்த பணிகளையும் இட்டு நிரப்பாமல் கடைசியாக வேலை செய்த 3 நிறுவனங்களின் பெயர்களையும், பணிகளையும் இட்டு நிரப்புவதுடன் நிறுத்திக் கொள்வேன். நிறைய white space விடுவதும் தவறு.

 

சுயவிபரக் கோவையைப் போன்று அதி முக்கியமானது Cover letter. உங்களின் Cover letter தான் நீங்கள் அனுப்பும் சுயவிபரக் கோவையை பார்க்க வைப்பது. குறுகினதாக, அதே நேரத்தில் தேவையான விபரங்களை short ஆக சொல்லக் கூடியதாக cover letter அமைய வேண்டும். அத்துடன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போய்விட்டு வந்தவுடன் எழுதும் நன்றி கடிதமும் முக்கியமானது.  தும்பளையான், இவை பற்றியும் எழுத நினைத்துள்ளீர்களா?இசை கேட்டுள்ளபடி ஊசி பண்ணி விட்டேன் (Pinned) :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுஜ விபரமானது, வேலையினை அல்ல, நேர்முகத்தினை பெறுவதை தான் நோக்கமாகக் கொண்டது என்பதனை மறக்கக் கூடாது.

 

வேலைக்கான நேர்முகம் கிடைக்கவில்லை என்று கூறும் நபர்களில் 100 ல் 77 பேர் விபரக் கோவையில் தவறு உள்ளது.

 

மேலும் 90% ஆனவர்கள் விபரக் கொத்தில் பொய் சொல்கின்றனர். பொய் சொல்லாவிடில் வேலை கிடைக்கும் சந்தர்ப்பம் குறைவு.

 

ஏனெனில் கல்லை கண்டால் நாயைக் காணோம், நாயை கண்டால் கல்லை காணோம் என்பது போல், அனுபவம் கிடைக்க வேலை வேண்டும்.

 

ஆனால் வேலை கிடைக்க அனுபவம் வேண்டுமே.

 

இதனை ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள்.

 

எனவே ஓரளவுக்கு பொய் சொல்லவும், அதனை பொருந்தச் சொல்லவும் வேண்டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள் அடங்கிய கருத்துகள்.  என்னுடையை சுயவிபரக் கோவை தான் எனக்கு விரைவாக வேலை கிடைக்க வழிசெய்வது. 2 பக்கங்கள் மட்டும் கொண்ட விபரக் கோவை. வேலை செய்த எல்லா நிறுவனங்களின் விபரங்களையும் , அங்கு செய்த பணிகளையும் இட்டு நிரப்பாமல் கடைசியாக வேலை செய்த 3 நிறுவனங்களின் பெயர்களையும், பணிகளையும் இட்டு நிரப்புவதுடன் நிறுத்திக் கொள்வேன். நிறைய white space விடுவதும் தவறு.

 

சுயவிபரக் கோவையைப் போன்று அதி முக்கியமானது Cover letter. உங்களின் Cover letter தான் நீங்கள் அனுப்பும் சுயவிபரக் கோவையை பார்க்க வைப்பது. குறுகினதாக, அதே நேரத்தில் தேவையான விபரங்களை short ஆக சொல்லக் கூடியதாக cover letter அமைய வேண்டும். அத்துடன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போய்விட்டு வந்தவுடன் எழுதும் நன்றி கடிதமும் முக்கியமானது.  தும்பளையான், இவை பற்றியும் எழுத நினைத்துள்ளீர்களா?

இசை கேட்டுள்ளபடி ஊசி பண்ணி விட்டேன் (Pinned) :)

 

கண்டிப்பாக எழுத உள்ளேன். முகப்பு மடல் (cover letter), ஆர்வத்தின் அறிவிப்பு மடல் (expression of interest) என்பவையும் வேலை தேடும் படலத்தின் முக்கியமான பகுதிகள். நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர் நன்றிக் கடிதம் அனுப்புவது அவுசில் அவ்வளவு நடைமுறையில் இல்லை / நான் கேள்விப்படவில்லை. நானும் இதுவரைக்கும் யாருக்கும் நன்றிக் கடிதம் அனுப்பியதும் இல்லை. நேர்முகத் தேர்வுகளை எதிர் கொள்வது பற்றிய பகுதியின் பின்னர் இது சம்பந்தமாக சிறிது தேடல் செய்து எழுதுகிறேன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜ விபரமானது, வேலையினை அல்ல, நேர்முகத்தினை பெறுவதை தான் நோக்கமாகக் கொண்டது என்பதனை மறக்கக் கூடாது.

 

வேலைக்கான நேர்முகம் கிடைக்கவில்லை என்று கூறும் நபர்களில் 100 ல் 77 பேர் விபரக் கோவையில் தவறு உள்ளது.

 

மேலும் 90% ஆனவர்கள் விபரக் கொத்தில் பொய் சொல்கின்றனர். பொய் சொல்லாவிடில் வேலை கிடைக்கும் சந்தர்ப்பம் குறைவு.

 

ஏனெனில் கல்லை கண்டால் நாயைக் காணோம், நாயை கண்டால் கல்லை காணோம் என்பது போல், அனுபவம் கிடைக்க வேலை வேண்டும்.

 

ஆனால் வேலை கிடைக்க அனுபவம் வேண்டுமே.

 

இதனை ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள்.

 

எனவே ஓரளவுக்கு பொய் சொல்லவும், அதனை பொருந்தச் சொல்லவும் வேண்டும்.

 

மிகவும் உண்மை. நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வைப்பதே சுயவிபரக் கோவையின் வேலை. அத்துடன் சில சிறிய என நாம் கருதும் ஆனால் முக்கியமான அனுபவங்களைத் தந்த வேலை விபரங்களை உள்ளடக்க வேண்டும். ஆங்கிலத்தில் கூறினால், It's all about presentation.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதற்கு.. முதல், பொதுவான... சில கருத்துக்களை சொல்ல விளைகின்றேன்.
ஐரோப்பாவில்... ஜேர்ம‌ன் மொழி பேசும் ம‌க்க‌ளே.. அதிக‌ம்.
இங்கிலாந்து, இன்னும்... ஐரோப்பாவில் இருக்குதா? என்ற‌ ச‌ந்தேக‌ம் எம‌க்கு உண்டு. :icon_idea: 
(அது, ஒரு த‌னித்தீவு.)

 

நிற்க‌...
த‌ப்பிலி கூறிய‌து போல்... சுய‌ விப‌ர‌க் கோவையை... ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளில் எழுதுவ‌து, தொட‌ர்க‌தை வாசிப்ப‌து போல் இருக்கும். உதார‌ண‌த்துக்கு.... அந்த‌ வேலைக்கு விண்ண‌ப்பிக்கும் போது... நீங்க‌ள் ம‌ட்டும், விண்ண‌ப்பிக்க‌வில்லை. உங்க‌ளுட‌ன்... சேர்ந்து, ஆயிர‌த்துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விண்ண‌ப்பித்திருந்தால்.... அதனை வாசிப்பவருக்கு, அலுக்காதா? பாவம்.... அவர் என்ன செய்வார், உங்க‌ள‌து க‌ட்டுரை எல்லாம், குப்பைத் தொட்டிக்குள் போட்டுடுவார்.

 

என்னைப் பொறுத்த‌ வ‌ரையில்......
ஒரு ப‌க்க‌த்திலேயே.... எல்லாத்தையும் இர‌த்தின‌ச் சுருக்க‌மாக‌ உங்க‌ள் க‌ல்வித் த‌கைமைக‌ளையும், வேலை அனுப‌வ‌ங்க‌ளையும்.. குறிப்பிட்டு,  பின் இணைப்பாக‌ அத‌ன் சான்றித‌ழ்க‌ளையும் அனுப்பி விடுங்க‌ள்.

 

மிக‌ முக்கிய‌ம்.
எழுத்துக்க‌ளை க‌ண்ட‌ப‌டி நெருக்க‌மாக‌ எழுதாம‌ல்.. குறிப்பிட்ட‌ த‌லைப்புக்க‌ளை தொடும் போது... த‌டித்த‌ எழுத்தில் எழுதி... கொஞ்ச‌ம் மூச்சு விட்டு வாசிக்க‌... மில்லி செக்க‌ன் நேர‌ம் கொடுங்க‌ள். :)

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்ல வேண்டி இருக்கும் என்றவுடன், சட்டச் சிக்கல் தரும் பொய்கள் அல்ல.

 

உதாரணமாக, ஒரு சித்த வைத்தியர், MBBS என்று சொல்வதோ அல்லது வேலை செய்யும் அனுமதி இல்லாதவர் இருப்பதாக சொல்வதோ, ஆபத்தான பொய்கள்.

 

சாதரணமாக நீங்கள் ஒரு software application (Eg: Excel) நன்றாக செய்வீர்கள். சிறந்த பயிற்சியினை கொண்டுளீர்கள். ஆனால் ஒரு நிறுவனத்திலும்  வேலை செய்யவில்லை.

 

எனினும் நிறுவனத்தில் அந்த application ல் தரக் கூடிய எந்த வேலையும் செய்யக் கூடிய நம்பிக்கை இருக்கிறது என்றால் நீங்கள் மன்னார் & co , எதிர் மன்னார் & co எல்லாம் போட வேண்டியது தான்.

 

எதிர் மன்னாரில் நான் ரிப்போர்ட் பண்ணின மேனேஜர் இப்போ, தலை மன்னாரில் இருக்கின்றார் என்று நம்ம தமிழ்சிறியை சுட்டிக் காட்டுங்கள் - referance க்கு.

 

இசை, என்ன, நான் சொல்லுறது? :icon_mrgreen:  :rolleyes:  :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் உபயோகமான கருத்துக்கள்.
தொடருங்கள்
 
ஆவலுடன் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
மிகவும் உபயோகமான கருத்துக்கள்.
தொடருங்கள்
 
 

 

Link to post
Share on other sites

 

 

எதிர் மன்னாரில் நான் ரிப்போர்ட் பண்ணின மேனேஜர் இப்போ, தலை மன்னாரில் இருக்கின்றார் என்று நம்ம தமிழ்சிறியை சுட்டிக் காட்டுங்கள் - referance க்கு.

 

இசை, என்ன, நான் சொல்லுறது? :icon_mrgreen:  :rolleyes:  :icon_mrgreen:

 

அடேயப்பா.. :icon_idea: இப்பிடியெல்லாம் பலே கில்லாடிகள் இருப்பதால்தான் நேர்முகத்தேர்வு செய்யிற ஆக்களுக்கு வயித்தால போகாத குறை .. :D

 

ஆரம்ப வேலைக்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என நினைக்கிறன்.. ஆனால் ஒரு கட்டத்துடன் எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடவேணும்.. :rolleyes:

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. :icon_idea: இப்பிடியெல்லாம் பலே கில்லாடிகள் இருப்பதால்தான் நேர்முகத்தேர்வு செய்யிற ஆக்களுக்கு வயித்தால போகாத குறை .. :D

 

ஆரம்ப வேலைக்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என நினைக்கிறன்.. ஆனால் ஒரு கட்டத்துடன் எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடவேணும்.. :rolleyes:

 

 

 

அடேயங்கப்பா,

இம்புட்டு நாள் எடுத்திருக்கு பதில் போட, இசை பிசி போல!!

 

எங்களுக்கு நேர்முகம் செய்யிற ஆக்கள் பத்தி கவலை இல்லை. நேர்முகம் போற ஆக்கள் பத்தித் தான் கவலை. :icon_mrgreen:

 

இந்தியாவில படிச்சு இருக்கிறியள். அங்க இருந்து இன்று வந்து இறங்கி, நாளையே இங்க 5 - 6 வருசமா வேலையில் குப்பை கொட்டின மாதிரி சுய விபரம் கொடுத்து வேலை எடுத்துக் கொள்கின்றனரே. :rolleyes:

 

என்ன, விடயம் எண்டால், நான் குறித்தது போல், மிகத் தீவிரமான பயிற்சி யுடன் வருவதால் பொய் பொருந்துகிறது.  :D

 

கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை - நம்ம தலைவர் சொன்னது. :icon_idea:

Link to post
Share on other sites

அடேயங்கப்பா,

இப்புட்டு நாள் எடுத்திருக்கு பதில் போட, இசை பிசி போல!!

எங்களுக்கு நேர்முகம் செய்யிற ஆக்கள் பத்தி கவலை இல்லை. நேர்முகம் போற ஆக்கள் பத்தித் தான் கவலை. :icon_mrgreen:

இந்தியாவில படிச்சு இருக்கிறியள். அங்க இருந்து இன்று வந்து இறங்கி, நாளையே இங்க 5 - 6 வருசமா வேலையில் குப்பை கொட்டின மாதிரி சுய விபரம் கொடுத்து வேலை எடுத்துக் கொள்கின்றனரே. :rolleyes:

என்ன, விடயம் எண்டால், நான் குறித்தது போல், மிகத் தீவிரமான பயிற்சி யுடன் வருவதால் பொய் பொருந்துகிறது. :D

கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை - நம்ம தலைவர் சொன்னது. :icon_idea:

எனக்கு பல வருட நண்பர் ஒருவர் உள்ளார்.. தமிழகத்தைச் சேர்ந்தவர்.. அங்கே Oracle படித்து ஓரிரு வருடங்கள் அதை சிலருக்குப் படிப்பித்த அனுபவத்துடன் சிங்கை வந்தவர்.. ஒரு வேலை அனுபவம் உள்ளது மாதிரி ஒரு சான்றிதழை "ரெடி" பண்ணி எடுத்து வந்ததால் வேலை எடுத்துவிட்டார்.. :D பிறகு வேலையில் மிகுதியைக் கற்றுக்கொண்டு இப்போது திறமைமிக்க ஒரு நிபுணராக உள்ளார்..

பொய்யைப் பொய் என்று நினைத்துச் சொன்னால்தான் அது பொய்.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர், நம்மூர்காரர். ஆங்கிலம் பரவாயில்லை ரகம்.

 

ஒரு குறித்த மென்பொருளில், helpguide எல்லாம் A  முதல் Z வரை கரைத்துக் குடித்து வைத்து இருக்கின்றார்.

 

கூகுளில் அந்த மென்பொருள் தொடர்பில் ஒரு வேலையில் வரக்கூடிய பிரச்சனையினை வாசித்து அதனது தீர்வு குறித்து அறிந்து அதனை தனக்கு முன்னர் செய்த வேலையில் நடந்ததாயும், தான் அதனை எப்படி தீர்த்தார் என்றும் விபரித்து, நம்பிக்கையினை பெறுவார்.

 

நேர்முகத் தேர்வு பண்ணுபவர்கள் துண்டைக் காணம், துணியை காணம் எனும் நிலையில் வைத்து வேலையினை எடுத்துக் கொண்டு வருவார்.

 

அவர் அடிக்கடி சொல்வது: ''கடுமையான பயிற்சி, இலகுவான யுத்தம்''. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம்.

 

 

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியை தொடர்வது நன்று  எப்போதும் எல்லோருக்கும் பிரியோசனமாக இருக்கும்..

 

அண்மையில் எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து இதை எழுதுகிறேன்..நேர்முகத் தேர்வுக்கு சென்று வரும் போது கவனிக்க வேண்டிய விடையங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது..நேர்முக தேர்வு வைத்தவரின் வருகை அட்டை(visiting card)பெற்றுக் கொண்டு வரும் போது அது அவருடையது தானா என்பதை உறுதி செய்வது நன்று...அண்மையில் ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்தேன்..

 

நான் நேரடியாக நேர்முகத் தேர்வு வைத்தவருடைய அறைக்கு செல்ல இல்லை.வேறு ஒருவருடைய அறை அந்த நேரத்தில் வெறுமையாக இருந்த காரணத்தினால் அதற்குள் அழைத்து சென்றார்.தேர்வு வைத்தவர் ஒருவர்.வரவு அட்டை(visiting card)தரப்பட்டது வெறுமையாக கிடந்த அறைக்கு உரியவரது.பெயர்களும் வாய்க்குள் நுளையாத காரணத்தினால் பெயரையும் மறந்து விட்டேன்..

 

சரியான வரவு அட்டையைத் தானே தருவார்கள் என்று கவனிக்காமல் வாங்கி வந்து அவர்கள் கேட்ட விபரம் ஒன்றை, குறிப்பிட்ட அட்டையில் இருந்த பெயருக்கு,ஈமெயில் பண்ணி விட்டு பதில் வரும் என காத்திருந்தேன்.வேறு ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது மட்டுமல்ல பல தரப்பட்ட கேள்விகளை தொடுத்துக் கொண்டு போனதால் வேணாம் என்று போச்சுது.... :(  :( இப்படி எல்லாம் அனுபவங்கள் கிடைக்கிறது..ஆகவே சாதரணமாக ஒரு விசிற்றிங்கார்ட் கூட குழப்பத்தை உண்டு பண்ணிவிடுகிறது.அதில் கூட அவதானம் வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்வுக் குறிப்பு (Selection Criteria) எழுதுவது எப்படி - பகுதி 2

 

குறிப்பு - எழுதத் தொடங்கிய தொடர் குறையிலே நிக்கிறது என்று எப்பவும் அரித்துக் கொண்டு இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடிக்க முயற்சிக்கிறேன். தாமதமாக (நான்கு மாதங்கள் இடைவெளி விட்டது டூமச்!) எழுதுவதை எல்லாரும் பொறுத்தருள்க. தாமதத்திற்கு அதிகளவிலான வேலையும், அடுத்த மாதம் வாற சோதினையும் தான் மட்டும் காரணம் இல்லை, எனக்கும் வர வர பஞ்சி பிடிக்குது.  

கடந்த பதிவிலே, தேர்வுக் குறிப்பின் அவசியம் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் மேலோட்டமாகக் கூறி இருந்தேன். இந்தப் பதிவிலே, எப்படியான ஒரு கட்டமைப்பை வைத்து ஒரு சிறந்த தேர்வுக் குறிப்பை உருவாக்குவது எனப் பார்ப்போம்.

தேர்வுக்கட்டமைப்பு எழுதுவதற்கு என்று ஒரு குறித்த முறை இல்லாவிட்டாலும், அவுசிலே நாம் பிரதானமக நான்குவகைகளைப் பயன்படுத்துகிறோம்.

STAR - Situation Task Approach Result   
CAR - Circumstances Activities Results
PAR - Problem Activities Results
SAR - Situation Activities Results

இதிலே பிரபலமானதும் முக்கியமானதும் STAR கட்டமைப்பே. மற்றைய மூன்று கட்டமைப்புக்களும் இதனை போன்றனவே. நான் முன்பே கூறியது போல தேர்வுக்கட்டமைப்பின் முக்கிய நோக்கம் வேலைக்கு விண்ணப்பித்தவரின்  கடந்த கால அனுபவங்கள், பயிற்சிகள், தனிப்பட்ட தகுதிகள், பட்டறிவு புதிய வேலையில் எழக்கூடிய சவால்களைச் சந்திக்க என்ன வகையில் உதவும் என நிரூபிப்பதாகும். தேர்வுக்கட்டமைப்பை புள்ளி முறையிலோ (dot points), பந்திகளாகவோ (paragraph), இரண்டும் கலந்துமோ எழுதலாம். நான் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றவாறு முறைகளைத் தெரிவு செய்வேன்.

முதலாவதாக வேலையின் விபரத்தை (job description) நன்கு வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும். தேவையாயின் அந்த பதவிக்குரிய reporting structure / organisation structure ஐயும் சிறு வரைபடமாக கீறிக்கொள்வது உங்களது கடந்த கால அனுபவங்களை, நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும். கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப உங்களது பதிலை மாற்றியமைப்பது உங்களின் கெட்டித்தனம்.

இரண்டாவது உங்களது ஆரம்ப சொற் தொடர் (opening sentence). நீங்கள் ஒவ்வொரு தேர்வுக் குறிப்பிற்குமான பதிலை ஆரம்பிக்கும் போது, தேர்வுக் குறிப்பிற்கான உங்களது வாதாட்டத்தை (claims against criteria) தெளிவாகக் குறிப்பிட்டே ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக "demonstrated capacity to communicate effectively" என்பதற்கு பதிலை எழுதும் போது "I possess strong written communication skills, which I have developed over the course of my career" என ஆரம்பிக்க வேண்டும். பின்னர் இந்த வசனத்தை உங்கள் கடந்த வேலை அனுபவங்கள் மூலம் கட்டி எழுப்ப வேண்டும்.

மூன்றாவதாக தேர்வுக் குறிப்பை எழுதத் தொடங்க முன்னர் கொஞ்சம் ஆழச் சிந்தித்து (brainstorm ideas)  குறிப்பெடுத்துக் கொள்ளுவது எழுதத் தொடங்கும் போது  விடயங்கள் இலகுவாக ஞாபகத்துக்கு வர உதவும் அத்துடன் முக்கிய விடயங்கள் விடுபட்டுப் போவதையும் தவிர்க்க முடியும். குறிப்பாக இவ்வாறு சிந்திக்கும் போது  இவ்வாறான சம்பவங்கள் எனது பழைய வேலைகளில் வந்திருக்கிறதா, எப்படியான தீர்வு கண்டேன், இதில் எனது பங்கு என்ன, என்ன பாடம் படித்தேன், குழுவாக, தனியாக எனது பங்களிப்பு எனப் பல விடயங்களை உள்ளடக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் குறிப்பெடுக்கும் போது நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி நிலையையும் கருத்தில் கொள்வது அவசியம் (அதாவது அந்தப் பதவி முகாமைத்துவம் சம்பந்தமானதா, நேரடியாக உங்களது களம் சம்பந்தமானதா எனவும் அறிவது).

ஐந்தாவதாக நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தில், அவர்களின் ஊழியர்களிடம் எதிர்பார்க்கும்  ஏதாவது தலைமைத்துவ பொறிமுறைகள் (Integrated Leadership System) இருக்கிறதா என பார்த்து அப்படி இருந்தால் அதன் அடிப்படையிலேயே உங்களது தேர்வுக்குறிப்பை கண்டிப்பாக ஒழுங்கமைக்க வேண்டும்.

உதாரணமாக அவுஸ் அரசாங்க வேலைகளுக்கு கண்டபடி விண்ணப்பிக்க முடியாது. APS ILS (Australian Public Service Integrated Leadership System) என ஒரு கட்டமைப்பை வைத்திருக்கிறார்கள். அதிலே APS 1 - 6, EL - SES பதவி நிலைகளிலே எதிர்பார்க்கப்படும் தகுதிகள், செயற்படும் விதம் என்பவை பற்றி பல்வேறு வகையான தெரிவுக் குறிப்புக்களுக்கான விளக்கங்கள் வைத்திருக்கிறார்கள். தெரிவுக் குறிப்பு எழுதும் போது, விண்ணப்பிக்கும் பதவிக்கான  இந்த APS ILS ஐ பின்பற்றி எழுதாவிட்டால் நேர்முகத் தேர்வுக்கே ஒருநாளும் கூப்பிட மாட்டார்கள். எமது தற்போதைய ILS ஐ ஒரு உதாரணத்துக்காக இறுதியில் இணைக்கிறேன். இந்த ILS இல் சிறிய பதவிகளில் இருந்து பெரிய பதவிகள் நோக்கிப் போகும் போது  தலைமைத்துவப் பண்புகளுக்கும் பொறுப்புக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதைக் காணலாம்.

அடுத்த பகுதியிலே, ஒரு தெரிவுக் குறிப்பிலே எழுதக் கூடியவை/கூடாதவை, என்ன வகையான மொழிப் பாவனை என்பது பற்றி பார்க்கலாம்.

 


ILS APS 3 profile

Supports strategic direction

Achieves
results

Supports productive working relationships


Displays personal drive and integrity

Communicates with influence

Supports shared purpose and direction

Understands and supports the organisation's vision, mission and business objectives. Follows direction provided by supervisor. Recognises how own work contributes to the achievement of organisational goals. Understands the reasons for decisions and recommendations.

Thinks strategically

Understands the work environment and contributes to the development of work plans and team goals. Demonstrates an awareness of the implications of issues that may impact on own work objectives.

Harnesses information and opportunities

Knows where to find information, and asks questions to ensure a full understanding of an issue. Uses common sense to recognise the importance of available information. Keeps self and others well informed on work progress.

Shows judgement, intelligence and commonsense

Researches and analyses information and makes recommendations based on evidence. Identifies issues that may impact on tasks. Suggests improvements to work tasks and business practices.

Identifies and uses resources wisely

Reviews task performance and communicates outcomes to supervisor. Understands individual and team capabilities and makes effective use of own capabilities.

Applies and builds professional expertise

Contributes own expertise to achieve outcomes for the business unit.

Responds positively to change

Establishes task plans to deliver objectives. Responds in a positive and flexible manner to change. Shares information with others and adapts to a changing environment.

Takes responsibility for managing work projects to achieve results

Sees tasks through to completion. Works within agreed priorities. Commits to achieving quality outcomes. Maintains accurate records and files. Seeks feedback from supervisor to gauge satisfaction and seeks assistance when required.

 

Nurtures internal and external relationships

Builds and sustains positive relationships with team members and clients. Actively participates in teamwork and activities. Responds under direction to changes in client needs and expectations.

Listens to, understands and recognises the needs of others

Actively listens to colleagues and clients. Shares information and ensures others are kept informed of issues. Works collaboratively and operates as an effective team member.

Values individual differences and diversity

Understands, values and responds to different personal styles. Tries to see things from different perspectives. Treats people with respect and courtesy.

Shares learning and supports others

Identifies learning opportunities. Makes time for people and supports the contribution of others. Understands and acts on constructive feedback.

Demonstrates public service professionalism and probity

Adopts a principled approach and adheres to the APS Values and Code of Conduct. Acts professionally at all times and operates within the boundaries of organisational processes and legal and public policy constraints. Operates as an effective representative of the work area in internal forums.

Engages with risk and shows personal courage

Provides accurate advice on issues. Acknowledges mistakes and learns from them, and seeks guidance and advice when required.

Commits to action

Takes personal responsibility for accurate completion of work and seeks assistance when required. Commits energy and drive to see that goals are achieved.

Promotes and adopts a positive and balanced approach to work

Focuses on achieving objectives even in difficult circumstances. Remains positive and responds to pressure in a calm manner.

Demonstrates self awareness and a commitment to personal development

Seeks feedback from others. Communicates areas of strengths and works with supervisor to identify development needs. Reflects on own behaviour and recognises the impact on others. Seeks self-development opportunities.

Communicates clearly

Confidently presents messages in a clear, concise manner. Focuses on key points and uses appropriate language. Structures written and oral communication to ensure clarity.

Listens, understands and adapts to audience

Seeks to understand the audience and tailors communication style and message accordingly. Listens carefully to others and checks to ensure their views have been understood. Checks own understanding of others’ comments.

Negotiates confidently

Listens to, and considers different ideas and discusses issues credibly and thoughtfully. Identifies relevant stakeholders.

 

 


Capability descriptions and behavioural indicators

 

  Supports strategic direction APS 3

Capability

Supports shared purpose and direction

Thinks strategically

Harnesses information and opportunities

Shows judgement, intelligence and commonsense

Description

Understands and supports the organisation's vision, mission and business objectives. Follows direction provided by supervisor. Recognises how own work contributes to the achievement of organisational goals. Understands the reasons for decisions and recommendations.

Understands the work environment and contributes to the development of work plans and team goals. Demonstrates an awareness of the implications of issues that may impact on own work objectives.

Knows where to find information, and asks questions to ensure a full understanding of an issue. Uses common sense to recognise the importance of available information. Keeps self and others well informed on work progress.

Researches and analyses information and makes recommendations based on evidence. Identifies issues that may impact on tasks. Suggests improvements to work tasks and business practices.

Behavioural indicators

- Follows direction provided by supervisor; understands the relationship between business priorities and specific tasks.

- Understands and supports the organisation’s vision, mission and business objectives.

- Understands the reasons for decisions and recommendations and is able to explain how they are relevant to their work.

- Demonstrates an awareness of the implications of issues for own work.

- Thinks and plans ahead.

- Understands the work environment; informs supervisor of potential issues that may impact on work objectives contributes to the development of work plans and team goals.

 

- Is aware of the corporate goals and understands the team priorities; keeps self and others well informed on work progress.

- Knows where to find relevant information; asks questions to gain a full understanding of an issue; uses commonsense and established guidelines to determine what information should be conveyed to others.

 

- Researches and analyses information and makes recommendations based on evidence.

- Identifies issues which could impact on designated tasks; identifies uncertainties of processes and designated tasks.

- Participates in decision-making.

- Suggests improvements to work practices to work tasks and business practices.

 

 


 

  Achieves results APS 3

Capability

Identifies and uses resources wisely

Applies and builds professional expertise

Responds positively to change

Takes responsibility for managing work projects to achieve results

Description

Reviews task performance and communicates outcomes to supervisor. Understands individual and team capabilities and makes effective use of own capabilities.

Contributes own expertise to achieve outcomes for the business unit.

Establishes task plans to deliver objectives. Responds in a positive and flexible manner to change. Shares information with others and adapts to a changing environment.

Sees tasks through to completion. Works within agreed priorities. Commits to achieving quality outcomes. Maintains accurate records and files. Seeks feedback from supervisor to gauge satisfaction and seeks assistance when required.

Behavioural indicators

- Identifies key individuals who need to be involved; understands team and individual capabilities and makes effective use of own capabilities.

- Monitors task progress against performance expectations to ensure deadlines are met; communicates outcomes to supervisor.

- Reschedules and reorganises work to reflect changes in priority.

- Applies and develops capabilities to meet performance expectations; demonstrates knowledge of the features of new programmes, products or services relevant to the position; contributes own expertise for the benefit of the business unit.

 

- Constructs task plans to deliver objectives.

- Demonstrates flexibility and copes effectively with day-to-day work changes and shifting priorities.

- Shares appropriate information with colleagues during times of change; responds to change under guidance from supervisor.

- Regularly seeks feedback from supervisor to gauge their satisfaction and incorporates this feedback into the performance of new tasks.

- Maintains accurate records and files; uses appropriate information management systems to keep information up to date; sees tasks through to completion.

- Works to agreed priorities, outcomes, and time constraints; is responsive to changes in requirements.

 

 


 

  Supports productive working relationships APS 3

Capability

Nurtures internal and external relationships

Listens to, understands and recognises the needs of others

Values individual differences and diversity

Shares learning and supports others

Description

Builds and sustains positive relationships with team members and clients. Actively participates in teamwork and activities. Responds under direction to changes in client needs and expectations.

Actively listens to colleagues and clients. Shares information and ensures others are kept informed of issues. Works collaboratively and operates as an effective team member.

Understands, values and responds to different personal styles. Tries to see things from different perspectives. Treats people with respect and courtesy.

Identifies learning opportunities. Makes time for people and supports the contribution of others. Understands and acts on constructive feedback.

Behavioural indicators

- Develops positive relationships with team members; actively participates in teamwork and group activities.

- Builds and sustains relationships; liaises with team members and clients.

- Responds under direction to changes in client needs and expectations; manages client expectations by clarifying expectations and deadlines; keeps clients informed on progress; provides courteous, prompt and professional service to clients.

 

- Operates as an effective member of the team; works collaboratively.

- Actively listens to colleagues and clients; supports team members; is aware of the contributions made by other people.

- Shares information with own team and seeks input from others; contributes to team discussions and planning; ensures people are kept informed of progress and issues.

- Recognises the value of individual differences; understands that others may work in different ways.

- Recognises that others have different views and experiences.

- Tries to see things from the other person's perspective.

- Maintains an awareness of the personalities, motivations and other diverse qualities of people; treats people with respect and courtesy.

- Makes time for people and supports the contribution of others.

- Identifies development opportunities for self and shares learning with others.

- Congratulates people on achievements

- Understands and acts on constructive feedback.

 


 

  Displays personal drive and integrity APS 3

Capability

Demonstrates public service professionalism and probity

Engages with risk and shows personal courage

Commits to action

Promotes and adopts a positive and balanced approach to work

Demonstrates self awareness and a commitment to personal development

Description

Adopts a principled approach and adheres to the APS Values and Code of Conduct. Acts professionally at all times and operates within the boundaries of organisational processes and legal and public policy constraints. Operates as an effective representative of the work area in internal forums.

Provides accurate advice on issues. Acknowledges mistakes and learns from them, and seeks guidance and advice when required.

Takes personal responsibility for accurate completion of work. Commits energy and drive to see that goals are achieved.

Focuses on achieving objectives even in difficult circumstances. Remains positive and responds to pressure in a calm manner.

Seeks feedback from others. Communicates areas of and works with supervisor to identify development needs. Reflects on own behaviour and recognises the impact on others. Seeks self-development opportunities.

Behavioural indicators

- Adheres to the APS Values and Code of Conduct and consistently behaves in an honest, ethical and professional way.

- Treats people fairly and equitably and is transparent in dealings with them.

- Makes decisions for the corporate good without favouritism or bias; places the aims of the organisation above personal ambitions.

- Understands and complies with legislative, policy and regulatory frameworks.

- Operates in a professional manner when representing the work area in internal forums.

- Listens when own ideas are challenged.

- Provides accurate advice to colleagues and clients; checks and confirms the accuracy of information prior to release.

- Takes responsibility for mistakes and learns from them; acknowledges when in the wrong.

- Seeks advice and assistance from colleagues and supervisor when uncertain.

- Takes personal responsibility for accurate completion of work and seeks help when required.

- Gets on with the job at hand and applies self with energy and drive; commits to meeting the objectives; follows up to ensure that issues are finalised.

- Recognises the issues impacting on the achievement of desired outcomes.

- Maintains effective performance levels even in difficult circumstances.

- Works to achieve objectives.

- Maintains an optimistic outlook and focuses on the positives in difficult situations; supports a positive working environment.

- Stays calm under pressure; does not react personally to criticism.

- Reflects on own behaviours and work style and is aware of how they impact on others.

- Seeks self-development opportunities; is willing to learn new approaches and acquire new capabilities; applies new knowledge in the workplace.

- Communicates areas of strength, works with supervisor to identify individual developmental requirements needed to complete assigned tasks.

- Agrees own performance standards with supervisor; seeks feedback on behaviour and work performance from supervisor, and is responsive to guidance.

- Reviews performance; identifies strengths as well as developmental requirements needed to complete assigned tasks.

 

 


 

  Communicates with influence APS 3

Capability

Communicates clearly

Listens, understands and adapts to audience

Negotiates confidently

Description

Confidently presents messages in a clear, concise manner. Focuses on key points and uses appropriate language. Structures written and oral communication to ensure clarity.

Seeks to understand the audience and tailors communication style and message accordingly. Listens carefully to others and checks to ensure their views have been understood. Checks own understanding of others’ comments.

Listens to, and considers different ideas and discusses issues credibly and thoughtfully. Identifies relevant stakeholders.

Behavioural indicators

- Focuses on clear communication of key points.

- Limits the use of jargon and abbreviations; explains information using language appropriate for the audience.

- Presents messages confidently.

- Structures messages clearly and succinctly, both orally and in writing.

- Adjusts presentation style on the basis of non-verbal cues.

- Maximises personal communication strengths and takes into account shortcomings.

- Focuses on gaining a clear understanding of others' comments by listening and asking clarifying questions; checks to ensure their own views have been understood.

- Understands the key concerns of the audience.

- Tailors communication style and language according to the needs of individuals or the audience.

 

- Listens to, considers and acknowledges differing ideas.

- Discusses issues credibly and thoughtfully without getting personal or aggressive.

- Identifies relevant stakeholders.

 

 

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மிகச்சரியான தருணத்தில் இந்தத் திரியை மீண்டும் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு மிகுந்த நன்றி!.

 

 

என்னுடைய சுயவிபரக்கோர்ப்பை மிகச்சரியான முறையில் திருத்தி அமைத்துத்தர யாராவது முன்வருவீர்களா?!...

Link to post
Share on other sites

எனக்கு மிகச்சரியான தருணத்தில் இந்தத் திரியை மீண்டும் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு மிகுந்த நன்றி!.

 

 

என்னுடைய சுயவிபரக்கோர்ப்பை மிகச்சரியான முறையில் திருத்தி அமைத்துத்தர யாராவது முன்வருவீர்களா?!...

தமிழ்த்தங்கை.. உங்களின் துறை என்னவென்று தெரிந்தால் அந்த துறையில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.. உங்கள் சுயவிவரங்களை தணிக்கை செய்துவிட்டு அனுப்பி வைத்தால் என்னால் முடிந்ததை செய்கிறேன். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்தங்கை.. உங்களின் துறை என்னவென்று தெரிந்தால் அந்த துறையில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.. உங்கள் சுயவிவரங்களை தணிக்கை செய்துவிட்டு அனுப்பி வைத்தால் என்னால் முடிந்ததை செய்கிறேன். :D

இசை அண்ணா, நான் கணக்கியலாளர் போன வருஷம் வரை பிரச்சனை இல்லை. பிறகு எங்கட கம்பனி அமெரிக்காவுக்கு இடத்தை மாற்றிக்கொண்டு போனதால்... இப்ப எனக்கு 'தற்காலிக வேலைகள் தான் கிடைக்கின்றன.

என் உறவினர் ஒருவர் தான் எனுடைய சுய விபரகோர்ப்பை வடிவமைத்தார், எல்லாம் உண்மை தான் ஆனால் பல 'எங்கிருந்தோ வெட்டி ஒட்டின மாதிரிக்கிடக்குது. அதுதான் கொஞம் பயமா இருக்கு !

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/
  • யாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர், அவரைப் பற்றிய தகவல் சுகாதாரத் திணைக்களத்தினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆகவே தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-ஒரு-தனிமனிதனின்-ச/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.