Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொலைவில்


Recommended Posts

தொலைவில்

எழுதியவர். வாசுதேவன்

பாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்து (வாழ்வின் சில தடயங்களாய்) என்று எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட்டு படித்துபார்த்து கருத்தை சொல் என்று தந்தான் அவனிடம் விடை பெற்று கொண்டு நான் இருக்கும் நகருக்கு திரும்புவதற்காக விமானநிலையம் வந்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அந்த ஒண்றரை மணி நெர பயணத்தில் அந்த புத்தகத்தை படித்து விடலாம் என தீர்மானித்து புத்தகத்தை திறந்தேன்.புத்தகத்திற்கு முன்னுரை கி.பி. அரவிந்தன் என்று போட்டிருந்தது முன்னுரையை படிக்கவில்லை காரணம் அதை படித்துதான் வாசு தேவனையோ அவனது படைப்புக்களையொ நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை என்பதால்தான்.பக்கங்களை புரட்டினேன் முதல் கவிதை "எ(வ்)வடம் எ(வ்)வடம் புளியடி புளியடி என்று தொடங்கியது என்ன இது சின்னபிள்ளை தனமாய் எழுதியிருக்கிறான் என நினைத்தவாறே தொடர்ந்து படித்தேன். மீண்டும் திருப்பவும் படித்தேன். எவ்விடம் எவ்விடம் ?

புளியடி புளியடி

எவ்விடம் போகினும்

போக்கிடம் நமக்கினி

புளியடி புளியடி

கண்மூடிகொண்டே நாம்

கையிருந்த மண்ணிழந்தோம்

எவ்விடம் போகினும்

போக்கிடம் நமக்கினி

புளியடி புளியடி

திசைகளையிழந்த நாம்

திரும்புவோம் என்பதும்

புளியடி புளியடி

என்றுதொடங்கி கைவிட்ட மண்ணை கண்டடையோம் இனி என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் ஏக்கங்களை அவன் மன உணர்வுகளை இதைவிட இலகுவாகவும் உண்மையாகவும் சிறு வயதில் நாங்கள் விழையாடுகின்ற சாதாரண விழையாட்டின் உவமையுடன் எழுதியிருந்ததை நினைத்த வியந்து போனேன்.சிறு வயதில் ஒருவர் கையில் ஒருபிடி மண்ணை குடுத்து அதில் ஒரு குச்சியை நட்டு மற்றவர் அவரின் கண்ணை பொத்தியபடி எவடம் எவடம் என கேட்டபடி அவரை வேறு இடத்திற்கு அழைத்து செல்ல சுற்றியிருக்கும் மற்றவர்களும் கண்மூடபட்டவரும் புளியடி புளியடி எனகத்துவார்கள். எங்காவது ஓரிடத்தில் அந்த கண்மூடபட்டவரை அந்த கைப்பிடி மண்ணை போட வைத்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அவரை கொண்டு வந்து விட்டு கண்களை அவிழ்த்து விடுவார்கள். அவர் அந்த பிடி மண்ணை தேடிப்பிடிக்கவேண்டும் . தேடிப்பிடித்தால் தான் அவர் வெற்றியாளர்.ஆனால் அந்த மண்ணை இன்னமும் தேடிபிடிக்காத அகதிகளாகவே நாம் இன்னமும் அலைந்து திரிகின்றோம்.

அதேபோலவே இன்னொரு கவிதையிலும் புலம் பெயர் தமிழனின் நிலையை அழகாக அப்புத்தகத்தில் ஆணியடிக்கிறார்.

ஊரின்றி ஒதுக்கப் பட்டவர்கள்

ஊரைவிட்டு தப்பி போனவர்கள்

தன்னுர் இன்றி வேறூர் போனவர்கள்

அடைக்கலம் புகுந்த ஊரில் நின்று

ஆர்ப்பரித்தனர்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

ஊர்களெல்லாம் உள்ளுர நகைத்து கொண்டன

என்று தம்ஊரை தேசத்தை மறந்து விட்டு புலம் பெயர் தேசங்களையெ தம் ஊராக நாடாக நினைத்து தம்பட்டம் அடிப்பவர் தலையில் ஓங்கி ஒரு குட்டு என்று கூட சொல்லலாம்.

அடுத்தபடியாக இப்புத்தகத்தில் வாசு தேவன் வேறு மொழிகளில் வருகின்ற இலக்கியங்களினதும் படைப்பாளிகளினதும் கற்பனை பாத்திரங்களை தனது கவிதைகளிலும் பாவித்திருப்பதால் . அந்த பாத்திரங்கள் அல்லது அந்த படைப்பாளிகள் பற்றிய சிறு விழக்கங்களையும் அந்தந்த கவிதைகளின் கீழ் விபரித்திருந்தால் மற்றை மொழி இலக்கியங்களையொ படைப்புகளையொ அறியாத எம்மவர்களிற்கு இவரின் கவிதைகளை இன்னமும் இலகுவாய் புரிந்து கொள்ள உதவியாய் இருந்திருக்கும் உதாரணத்திற்கு. பதினேழுவயதாயிருந்தவேளை

ஷரத்தூசா தனது வீட்டையும்

அருகிருந்த வண்ணான் குளத்தையும்

வாற் பேத்தைகளையும் துறந்து தூரத்து

தலை நகரமொன்றிற்கு புறப்பட்டான்

என்கிற கவிதையில் தன்னை ஹஷரத்தூசா என்கிற பாரசீக நாடோடி பாத்திரத்துடன் ஒப்பிட்டவர் ஷரத்தூசா என்பது யார் ?? என்ன என்றும் கோடேபோன்ற கற்பனை பாத்திரங்களிற்கும் சில விழக்கங்களை அளித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கவிதையில்தான் வருகின்ற வண்ணான் குளம் என்கிற ஒரு குளத்தின் காரண பெயரை வாசுதேவன் பயன்படுத்தியிருந்தமைக்கு சோபா சத்தியின் சத்தியகடதாசி (மொட்டை கடதாசி)யில் அவரது நண்பன் சுகனின் விமர்சனத்தில் புகலிடத்தில் புலவர்களிடம் விஞ்சி நிப்பது கவிமனமா?? சாதிமனமா?? என்று வழைமை போல புலம்பி தள்ளியிருந்ததையும் படிக்க நேர்ந்தது. இதில் மொத்தமாக புத்தகத்தை பற்றி விமர்சித்து விட்டு அதில் அந்த கவிதையையும் சுட்டி காட்டியிருந்தால் அதனை விமர்சனமாக ஏற்றுகொண்டிருக்கலாம் ஆனால் அந்த கவிதையில் வருகின்ற ஒரு வசனத்தை மட்டும் விமர்சித்து தள்ளியிருப்பதால் அது சுகனின் விமர்சன பார்வை அல்ல வழைமை போல விசமப்பார்வையே என்று புரிகிறது. பலகாலமாக புழக்கத்தில் இருந்து வரும் ஒருபெயரை ஒரு கவிதை வரிகளிலேயெ வாசு தேவனால் மாற்றிவிட முடியாது. வ" க்கு பதிலாக க" வையோ ம" வையோ போட்டு எழுதினால் யாருக்கு புரியும்???முடிந்தால் சுகன் போய் அந்த குளத்தின் பெரை மாற்றியமைத்து விட்டு வந்து இந்த விமர்சனத்தை எழுதினால் அதில் நியாயம் உண்டு.

இதை போன்ற விமர்சகர்களிற்கும் இறுதியில் பதில் சொல்லி போகிறார் எனக்கு தெரியும்

யாரும் எதிர்பாராத

ஒருகணத்தில்

எந்த றாடருக்கும்

அகப்படாத

ஒருபுனைவு வெளியில்

நான் உடைந்து

நொருங்கி

வீழ்ந்தபின்னர்

நீங்கள் எல்லோருமாக

சேர்ந்து

எனது கறுப்பு

பெட்டிகளை

தேடுவீர்கள்

அராலி வெளியின்

தாளம் பூ பற்றைக்குள்

அவற்றை நான்

கழற்றி எறிந்து

பல வருடங்களாகி விட்டன

என்பதை இப்போதே

சொல்லி விடுகிறேன்

நேரத்தை

விரயம் செய்யாது

பாதையை பார்த்து

பயணத்தை தொடருங்கள்............

vs4lz5.th.jpg

Link to comment
Share on other sites

வாசு தேவனை நானும் அறிவேன். மொழிபெயர்ப்பில் பல நல்ல படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்தவர். சுகனும் இன்னும் அதே போக்குத் தான்.

அந்த கவிதைப் புத்தகம் பற்றிய முழுதான விமர்சனம் இருந்தால் சாத்திரி வெளியிடலாமே. புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் இருப்பது கனடாவில். அறிமுகத்துக்கு நன்றி சாத்திரி...

நட்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்லாளன் அந்த கவிதை புத்தகம் பற்றிய முழுவிமர்சனம் யாரும் எழுதவில்லையென நினைக்கிறேன் ஆனால் அந்த புத்தகத்தை பெற்று கொள்ள வாசு தேவனின் மின்னஞ்சல் முகவரியை இங்கு இணைத்து விடுகிறேன் vasu@lapost.net

Link to comment
Share on other sites

எல்லாளன் அந்த கவிதை புத்தகம் பற்றிய முழுவிமர்சனம் யாரும் எழுதவில்லையென நினைக்கிறேன் ஆனால் அந்த புத்தகத்தை பெற்று கொள்ள வாசு தேவனின் மின்னஞ்சல் முகவரியை இங்கு இணைத்து விடுகிறேன் vasu@lapost.net

சாத்திரி உங்கள் அன்புக்கு நன்றி..... வாசுவிற்கு மடல் அனுப்பியிருக்கின்றேன்.

அது சரி ..நீங்களும் பாரீஸில் என்றால் உங்களையும் தெரிந்திருக்கக் கூடும். பழைய நண்பர்களைத் தொலைத்து விட்டுத் தேடுகின்றேன்.

முடிந்தால் தனி மடல் இடுங்கள்.

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.