Archived

This topic is now archived and is closed to further replies.

hari

"விண்டோஸ் விஸ்டா"

Recommended Posts

"விண்டோஸ் விஸ்டா"

மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும். (விண்டோஸ் 95, 97, 98, 2000) அல்லது சொற்களின் சுருக்கப் பெயர் இருக்கும்.

(விண்டோஸ் எக்ஸ்பியில் எக்ஸ்பி என்பது எக்ஸ்பீரியன்ஸ் என்பதின் சுருக்கமாகும். மி (எம் இ) என்பது மில்லினம் எடிசன் என்பதன் சுருக்கமாகும்.) ஆனால் இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.

உலகில் இயங்கும் பத்து கம்ப்யூட்டர்களில் ஒன்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்கத் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டருக்கான சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு தான் இதற்கு முன் மைக்ரோசாப்ட் தந்த தொகுப்பாகும். இத்தொகுப்பு வந்தபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அளவிலான கால இடைவெளி இதுவரை இயக்கத் தொகுப்பு வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை. விண்டோஸ் விஸ்டா தொகுப்பில் பல மாற்றங்களையும் முன்னேறிய வசதிகளையும் தர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களின் வாழ்க்கை இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டரையே மக்கள் சார்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு அதிக நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் இந்த தொகுப்பு இருக்கும்.

தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களைப் புதிய முறையில் தொகுத்து

இயக்கும் பல வசதிகள் இத்தொகுப்பில் தரப்படும். மேலும் தேவைப்படும் தகவல்களுடன் கம்ப்யூட்டரை இயக்குபவரை இணைக்கும் புதிய வழிகள் இத்தொகுப்பின் மூலம் வழங்கப்படும். அத்துடன் வாழ்க்கைய பொருள் உள்ளதாக ஆக்கிடும் சாதனங்களுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் வழிகளையும் இது கொண்டிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிதாய் வர இருக்கும் விண்டோஸ் விஸ்டாவின் முக்கிய இலக்குகளாக மைக்ரோசாப்ட் அறிவித்திருப்பது –– மிகச் சிறந்த பாதுகாப்பு, தகவல்களை வகைப்படுத்த புதிய வழிகள் மற்றும் அதிகமான தொடர்பு சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி. "தெளிவானது, நம்பிக்கைக்குரியது மற்றும் இணைத்துவிட்டால் இது உங்கள் உலகத்திற்கு அதிக தெளிவைக் கொண்டு வரும்" –– என விண்டோஸ் விஸ்டாவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளத

Share this post


Link to post
Share on other sites

ஹரி இணைப்புக்கு நன்றி.

விஸ்டாவில் அப்பிள் கணனியில் உள்ள startmenu போலவே செய்துள்ளார்கள். ஆனாலும் வேறு பல சிறப்பம்சங்களும் உண்டு.

இறுதியான தொகுப்பு வந்தபின் தான் முழுமையான பயன்பாட்டைப் பெறலாம். இப்போது பலதுணைமென்பொருட்கள் விஸ்ராவில் வேலைசெய்யவில்லை. :cry:

Share this post


Link to post
Share on other sites