வந்தியத்தேவன்

ஓரினச்சேர்க்கை குற்றமா?

Recommended Posts

homosexuality-forum-300x225.jpgமுரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.

என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!

பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

ஒரு கணவனும் மனைவியையும் போலவே ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உறவைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிரச்னை எதுவுமில்லை. பொதுவிடங்களில் தவறாக நடக்கும்போது, அது கண்டிக்கப்படவேண்டிய தவறாக மாறுகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை. நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு, பேருந்துகளில் பெண்களை உரசுபவர்களை உத்தமர்கள் என்றா அழைக்கமுடியும்?

பால்ய விவாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அந்தக் காலகட்டத்துக்கு உகந்த ஓர் அமைப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், ஒரு மனிதனின் சராசரி வயது அப்போது 40. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மறுமணம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவ உலகின் பல அறிய சாதனைகள் மனித வாழ்வை சராசரியாக 60-க்கு கொணர்ந்தபோது, ஒரு பெண் காலம் முழுக்க விதவையாக இருக்கலாமா என்ற கேள்வி மறுமணத்தை ஏற்றுக் கொண்டது. நேற்று வரை சரியாக இருந்த ஒரு விஷயம் இன்று தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனோபாவமும் நிச்சயம் ஒருநாள் வரும்.

ஓரினச்சேர்க்கை தவறு என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம், அது சந்ததி பெருக்கத்துக்கு உதவாது என்பது. சந்ததியைப் பெருக்கும் உறவு முறையே இயற்கையானது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். எனில், பிரம்மச்சாரிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? குற்றவாளிகளாகவா? ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது போலவேதான் அவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்களா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம் 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்தும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே போல், அவர்களை வெறுப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

 

http://www.tamilpaper.net/?cat=1058

 

 

 

Share this post


Link to post
Share on other sites

குற்றமில்லை... அது, அவரவர் விருப்பம்.
மற்றவர்களின்... சுத்தந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
இங்கு ஒரு முக்கிய அமைச்சர் தனது, பதவி ஏற்பு வைபவத்துக்கு, தனது ----- ஃபிரண்டை கோட், சூட்டுடன் கூட்டிக் கொண்டு வந்தவர். அதனை... ஒருவரும், பெரிதாக எடுக்கவில்லை.
ஏனென்றால்.... அவரிடம் திறமை உள்ளது.
"வல்லவன் வீழ்ந்ததும் இல்லை, ---- ----கெட்டதுமில்லை." :icon_idea:  

 

Edited by நிழலி
தணிக்கை

Share this post


Link to post
Share on other sites

ஓரினச்சேர்க்கை குற்றமா என்பதற்கு அப்பால் இது அசாதாரண மனித நடத்தை என்று தான் கொள்ள வேண்டும். இது இயற்கைக்கு மாறான ஒரு நடத்தைக் கோலம் எனலாம். சில ஜீன்கள் சார்ந்து..மூளையில் ஏற்படும் நரம்பியல் இரசாயன மாற்றங்களால் இந்த நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லும் நிலையில் இவர்களைக் குற்றவாளிகளாகக் காண முடியாது. ஆனால் இயற்கைக்கு மாறானவர்கள் என்று சாதாரணமானவர்கள் ஒதுக்கி வைப்பதை தடுக்கவும் ஏலாது..! ஆனால் மனிதர்கள் என்ற வகையில் பிறப்புரிமைக் குறைபாடுள்ளவர்களை.. புறக்கணிப்பது சரியான செயல் அல்ல..! அந்த வகையில்... இவர்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. சேட்டை விட்டால் மட்டும்.. ஒட்ட நறுக்கி விடுவது நன்று..! குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களோடு ஆசிரியர்களாக உள்ள இவர்களில் சிலர் சேட்டைகளில் ஈடுபடும் முறைப்பாடுகள் இங்கு இங்கிலாந்தில் பிரச்சனைகளாகி வருகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படியானவர்களை கண்ணில் காட்டக் கூடாது. எனது நல்ல காலத்திற்கு இப்படியானவர்களை இதுவரை நேரிடையாக சந்திக்கும் நிலையை கடவுள் தரவில்லை..! கடவுளுக்கு நன்றி. :):icon_idea:

 

Share this post


Link to post
Share on other sites

--------- -----.அது அவரவர் விருப்பம் மற்றவர்களைதொந்தரவுசெய்யாதவரை.

Edited by நிழலி
தணிக்கை

Share this post


Link to post
Share on other sites

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்குப் புரையேறியதால் குழந்தை இறந்தது. தாய்ப்பால் குடிக்கும்போது முலையில் மூக்கு அழுந்தியதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. ஆதலினால் தாய்ப்பால் கொடுப்பதும் குழந்தைக்கு கெடுதியை விளைவிப்பதாக நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேற்கூறிய நியாயத்தின்படியே ஓரினச்சேர்க்கையையும் நியாயப்படுத்தி வாழ்வியலைச் செப்பனிடலாம்.

''இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருக்க காய் கவர்ந்தற்று''

 

Share this post


Link to post
Share on other sites
பிறக்கும் போது  உறுப்புக்கள் ஊனமாக பிறக்கும் ஒருவரை இச்சமுதாயம் ஏற்றது போல் இவர்களையும் ஏற்க வேண்டும்.இவர்கள் பிறப்பிலேயே (பெரும்பாலும்) ஓரின சேர்க்கையாளர்களாகவே பிறக்கிறார்கள்.நாகரீக உலகில் இவர்களை ஏற்று திருமணம் செய்ய கூடி சட்டங்கள் வந்து விட்டன.
 
எனவே சமுதாயம் அவர்களை தண்டிப்பது நியாயமில்லை.சமுதாயத்தில் ஓரங்கமாக இவர்களை ஏற்க வேண்டும்.
 
பெண்களிடம் சேட்டை விடுபவர்களுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையை சேட்டை விடும் இவர்களும் பெறுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

குற்றமோ குற்றமில்லையோ தெரியாது ஆனால் சகிக்க முடியாது என்று சொல்லலாம்.  2 பெண்கள் ஒருவர் மிக இளவயதிலேயோ திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர், மற்றப் பெண் இப் பெண்னின் நண்பியாம், இணையத்தள மூலம் அறிமுகம். இதில் ஒரு பெண் தனது பெற்றோர் சகோதரங்களோடு இருக்கின்றா அவ்வோடு தான் மற்றப் பெண்ணும் இருக்கின்றா. இருவரும் பழகும் விதம் என்னவோ ஒரு சந்தேகத்தைதைத் தருக்கின்றது. உண்மையான நட்ப்பா அல்லது ஓரினச் சேர்க்கையா யாரறிவர்?  ஆண்டவா மன்னித்துவிடு  இருவரும் நண்பிகளாயின். இருவரும் தமிழ்ப் பெண்களே. 

Share this post


Link to post
Share on other sites

ஒருபால் உறவை சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மேற்குநாடுகளில் இருந்தும் இதுபோன்ற விடயங்கள் பெரும்பான்மையான தமிழர்களுக்கு பேசாப் பொருளாகத்தான் இருக்கின்றது.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் இருந்து விலக்கிப் பார்ப்பதால்தான் பல துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன.

Share this post


Link to post
Share on other sites

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

சுப்பண்ணையின் பின்னூட்டத்தையும் சிறிது ஊன்றிக் கவனிப்பது நல்லது.

 

 

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

Share this post


Link to post
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும். அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் . அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள். அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

Share this post


Link to post
Share on other sites

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

Share this post


Link to post
Share on other sites

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

 

இது.. சிலம்பாட்டமா? கோலாட்டமா?

Share this post


Link to post
Share on other sites

சிலம்பாட்டம் இல்லை இது சில்லரையாட்டம்.....

Share this post


Link to post
Share on other sites

ஆறறிவுள்ள இரண்டு பேர் சேர்ந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆடு, மாடுகளை வற்புறுத்துவதுதான் தவறு.. :D ஏனென்றால் அவைகளால் ஒரு "மே..".. இதைத்தவிர வேறு ஒன்றையும் கூறி அலற முடியாது அல்லவா? :icon_idea:

 

மற்றது.. ஒருபாலினர் கூடி வாழ்தலை "திருமணம்" என்று அங்கீகரிக்கிறார்கள்.. இதில் எனக்கு நூறு வீதம் உடன்பாடு உள்ளதுமாதிரி தெரியவில்லை.. வேறு பெயரில் அழைக்கலாம்.. ஏனென்றால் இன்று இரு ஒருபாலினர் கூடி அதை திருமணம் என்பர்.. நாளைக்கு ஆறுபேர் கூடியிருந்து அதையும் திருமணம் என்று அங்கீகரிக்கச்சொல்லிக் கேட்டால் எங்கே போய் முட்டுவார்கள்? :rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது கருத்தாடல் முறையில் நியாயங்களாக பட்டாலும்....இயற்கையான வாழ்வுமுறைக்கு ஒருபோதும் ஒருங்கிணைய மாட்டாது. இயற்கைக்கு செய்யும் துரோகங்களில் இதுவுமொன்று.

Share this post


Link to post
Share on other sites

இதுவரையில் இன்னொரு ஆணோடு உறவு கொள்ளாத ஆண்களும்........

இன்னொரு  பெண்ணுடன் உறவு கொள்ளாத பெண்களும்தான்..........
இதை தவறு என்று சொல்கிறார்கள்.
 
இயற்கையின்பால்........... ஆண்களும் பெண்களும் நேர் எதிரானவர்கள்.
ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தே. ஒரு நாள் எனும் முழுமை ஏற்படுகிறது.
இருளும் ஒளியும் ஒரு முழுமையாகிறது......
மைனஸ் பவருடன் பொசிடிவ் பவர் கலக்கும்போதே மின்சாரம். அல்லது ஒரு சக்தி கிடைக்கிறது.
 
ஒரு எதிரும் + ஒரு மறையும் = ஒரு முழுமை 
இது இயற்கையாக இருந்து வந்துள்ளது.
 
இப்போது மனிதன் இயற்கையாக இல்லை. கிட்டதட்ட 20 வருடம் கழித்து ஒரு செவ்வாய் கிழமையில் நான்  என்ன செய்துகொண்டிருப்பேன்? என்று ஒரு திகதியை தொட்டு பார்த்தால். 75% நான் வேலையில் இருப்பேன் என்று சொல்லகூடியதாக இருக்கிறது.  மனிதன்  இயந்திரம் ஆகிவிட்டான். மனங்கள் இரும்புகள் ஆகி வருகின்றன.
60-70 வயதுகளில் பாலியல் சம்பந்தமான விடயங்களில் ஒரு தளர்ச்சி நிலை ஏற்பட்டு மனிதன்  தனது குடும்பம் கோவில் என்று இருந்த நாட்கள் இல்லாது போய்விட்டது .
வயாக்கிராவை போட்டுவிட்டு 18-19 வயது இளம் குமரிகளுக்கு வலை விரிக்கிறார்கள் தாத்தாக்கள்.
இரவு சாட்ரூமில் சந்திச்சு 
மறுநாள் மாலை ரெஸ்ட் ருரண்டில் சந்திச்சு 
இரவு கட்டிலுக்கு போய்.
ஞாஜிறு காலை டாட்ட சொல்லி விட்டு போகிறார்கள்.
 
நாகரிக வளர்ச்சி என்று பெண்களை வியாபார பொருட்கள் ஆக்கி வீதி எங்கும் கட்டவுட் வைத்து  வருகிறார்கள். நாளும் நாளும் இந்த வீதிகளில் நடந்தே ஒரு ஆண் வளருகிறான்.
போன போக்கில் தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேடுகிறான். பெண்ணும் அதே நிலை.
இதற்குள் நாகரிக உலகம் தந்திரமாக கற்று கொடுத்த 
ஐ லவ் யூ ஹொனி ............. சீனி............. சர்க்கரை. போன்ற வார்த்தைகளை கொண்டு சில காலம்  உறவை தக்க வைத்து கொள்கிறார்கள்.
இதற்கு முன்பே அட இவளவுதானா? என்று பாலியல் விடயங்களில் சலித்து போகிறார்கள்.
வறுமையான அல்லது வெறுமையான உறவை தக்க வைக்க சிலர் விடாது போராடுகிறார்கள். சிலர் என்ன உயிரா போகிறது என்று கிளம்பி விடுகிறார்கள்.
 
ஆண்களுக்கு அலட்டுவது பிடிக்காது 
பெண்களுக்கு அலட்டுவதே பிடிக்கும்.
 
காலபோக்கில் ஒரு பெண் ஒய்யாரமாக இன்னொரு பெண்ணின் மடியில் கதை பேச தலை சாய்கிறாள்.
ஏமாற்று காசு திருட்டு அழகு என்ற ஆணவம் எல்லாம் உள்ள பெண்ணை விட்டு விலகி ஒரு ஆண்  உண்மையுடன் இன்னொரு ஆணுடன் கை கோர்கிறான்.
 
இதில் தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. மனித வாழ்வு திசை மாறி போய்விட்டது. இயற்கையில் இருந்து பிரிந்து  செயற்கை என்று ஆகிவிட்டது.
உண்மை என்று இப்போதும் உலகில் இருப்பது "மரணம்" ஒன்றுதான். மனித உடலுக்குள் இரும்புகள் கம்பிகளை  சொருக தொடங்கி விட்டார்கள். கால் போக்கில் அதுகும் இல்லது போனால்.
உண்மை இல்லாத உலகில்............ எதை பொய் என்று சொல்லி வாதாடுவது????
நானே ஒரு பொய் ......... அடுத்தவனை பார்த்து எப்படி பொய்யன் என்று சொல்வது??

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆணுக்கு பெண் ....பெண்ணுக்கு ஆண் ...அதாவது ஒருவனுக்கு ஒருத்தியாக  இறைவன் படைத்தான் .............வாழ்வியல்[ பாலியலும் உள்ளடக்கப்பட்ட]] சம்பந்தமாக அவளே அவனுக்கும் ,அவனே அவளுக்கும் துணையாயிருப்பார்கள்  என எதிர்பார்த்தார்.....ஆனால் பாவிமனிசாங்கள்     இறைவன் எதிர்பார்த்த அந்த ஒருமையை மாற்றி பன்மையாக்கிவிட்டார்கள் ...............இறைவனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ..ஆனால் மனிதனின் வேகம் கூடியதே தவிர குறையவில்லை .இதனால் இறைவனே இந்த விடயத்தில் ஒதுங்கிவிட்டார் .................அப்புறம் நாமும் ஒதுங்கி இருப்பதே நல்லது ...........மனிசான் செய்யும் ஒவ்வொன்றும் பின்னால் அவனே அனுபவிப்பான் ...............

 

மரணசடங்கிற்கு போகும் ஒவ்வொருமுறையும் எனக்குள்ளே எழும் கேள்விகள் பல .............[ ஆணவமும்,அதர்மமும் ,அட்டகாசமும் அடங்கி போர்த்துப்படுத்திருப்பதை காணுவேன் ,]

 

Edited by தமிழ்சூரியன்
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு.

 

உண்மைதான் நிழலி

எனக்கு மட்டுமல்ல  பலருக்கும் அதுதானே முதலில் ஞாபகம் வருகிறது.

அத்துடன் அது  இல்லாமல் எப்படி அன்பு வரமுடியும்? (இப்படி இன்னொரு திரியில் நீங்களே  கேட்டதாக ஞாபகம்??)

 

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும்.    உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

எனக்கு அது தான் ஞாபகம் வருகிறது

அத்துடன் ஒரு அசிங்கமாக  வாந்தி  வருவதுபோல் ஒரு மனநிலை வருகிறது

நான் என்ன  செய்யட்டும்??? 

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

உங்களது இந்த மனநிலைக்கே நான் விருப்பு வாக்கு போட்டேன்.

ஆனால் இதில் மாற்றுக்கருத்து எனக்குண்டு.

அதாவது  எல்லாவற்றையும் ஏற்கணும் அங்கீகரிக்கணும் என்று வெளிக்கிட்டால மனித வாழ்க்கை  என்பது ஒரு கட்டத்தில் ஒழுங்கு முறைக்குள் வராத பொருளாகிவிடும்.  அத்துடன் சமீபகாலமாக பிரான்சில் அதிகம பேசப்படும் இந்த விடயத்தை பார்த்தபோது இதில் பல தொடர் விளைவுகள் உண்டு. முக்கியமாக பிள்ளை  பெறுதல்.  வளர்த்தல். மற்றும் பிள்ளைகளை தத்தெடுத்த வளர்த்தல்.........................................

அதனால் அந்த பிள்ளைகள் வாழ்வில் வரக்கூடிய  அவலங்கள்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது முக்கியமானது நிழலி.

உங்களது இந்த நிலைக்கும்  சேர்த்தே விருப்பு வாக்கு.

ஆனால்

நான் இதற்கு முதல் தலைமுறையைச்சேர்ந்தவன்.

என்னுடைய  மகன் ஒரு பெண்ணைக்காதலிப்பதையே  ஏற்கமுடியாத நிலையில் தான் என் மனம் இன்றும் உள்ளது.

இந்தநிலையில் எனது பிள்ளையை  ஓரினச்சேர்க்கை..............???

நடக்கிற விடயமா............???

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம்

1- 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. 

2- மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.

3- பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

 

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும்.

 

உங்களது முதலாவது கேள்விக்கு திரியில் பதிலிருக்கு சாத்திரி.

 

அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் .

இவ்வாறு எழுதிவிட்டு

 

அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள்.

 

மாற்றுதிறனாளிகள் என்கிறீர்கள்

இரண்டுக்கும் என்ன  வித்தியாசம்  சாத்திரி?????

 

அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் குரக்கன் என்று சொல்வதைத்தான் தமிழகத்தில் கம்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பசியால் காய்ந்துபோன மாடு குரக்கன் வயலுக்குள் போய் விழுந்தமாதிரி.. இதை காய்ந்துபோன வெளிநாட்டு மாப்பிளைகள் நினைவில் வைத்திருப்பது நல்லது.. :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.