Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி)

எண்பத்தி மூன்றினிலே - ஆ

இலங்கைத் தீவினிலே

எண்பத்தி மூன்றினிலே

இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி

இருபத்து நான்கிற் தொடங்கியதே துயர்

இலங்கைத் தீவினிலே

கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென

கண்டவர் யாரும் வருந்திட எங்களைப்

புண்படச் செய்தனரே-ஒரு

போக்கிடமற்ற அகதிகளாக்கியே

எண்பட்ட யாவரையும் தமிழ்

என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...)

நெஞ்சங் குமுறிடவே-கற்பு

நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப்

பஞ்சைத் தமிழ் மகளிர்-கொடும்

பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட

அஞ்சிய பாலகர்கள்-தங்கள்

அன்னையர் மார்பில் அமுதமருந்தியே

துஞ்சிய செய்திகளும்-பல

துயரக் கதைகளும் மறந்திடுமோ-அந்த (எண்பத்தி...)

தேயிலைத் தோட்டத்திலே - அந்தத்

தெற்கு இலங்கையிலே

ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர்

அன்று இனவெறியாற் கொலையுண்டதும்

நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை

நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும்

காயும் இனவெறியால் - எம்மேல்

காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

வெலிக்கடைச் சிறையில் - மனம்

வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே...

சிலிர்க்குதேயுடலம்...அந்தோ!

சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே...

பலிக்கு வெட்டினரே...

பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே

படையலிட்டனரே-அந்தப்

பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

ஆண்ட அரச படை - எங்கள்

அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும்

மூண்ட பெருந்தீயில் - செல்வம்

முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும்

மாண்டவர் கண்களையே - அந்த

மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும்

மீண்டும் நினைவலையில் - வந்து

மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)

சிங்கள பௌத்தவெறி - எங்கள்

செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை

எங்கு முறையிடுவோம் - எமக்(கு)

ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ!

தங்கையர் தம்பிகளே! - தமிழ்

ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர்

பொங்குக பொங்குகவே - ஒரு

போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)

மேற்குலகந்தனிலே - பொருள்

மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்

நாட்டை மறப்போமோ! - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே - அன்னை

வீட்டை மறப்போமோ! - என்று

விம்மியழுது புலம்பிடும் எம்குரல்

கேட்டிருப்பாய் காற்றே - அந்த

கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்

மீட்டு முரையாயோ - நாங்கள்

விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)

ஆற்றல் இழந்தவராய் - எங்கள்

அன்னை மொழியை மறந்தவராய்ப் - பெருங்

காற்றிற் கலந்தவராய் - கலாச்

சாரம் கலைகள்அழிந்தவராய் - நாம்

மாற்றினமாகுவதோ - இல்லை

மண்ணினை மீட்டு நாம் சென்றங்கு வாழ்வதோ

சாற்றிடுவாய் தாயே - ஹே!

சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)

Link to comment
Share on other sites

ராஜா 83 கலவரத்து உணர்வுகளை போடல் போல் எழுதியமை நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு உணர்வு பூர்வமான கவிதை..........

Link to comment
Share on other sites

83 யூலையை எங்கள் மனக்கண்முன் உங்கள் கவிதையில் தந்தீர்கள். கவிதைக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு பூர்வமான கவிதை

Link to comment
Share on other sites

நான் இந்தக் கவிதை அடங்கிய தொகுப்பை முழுமையாய் வாசித்திருக்கிறேன்.

சந்தம் நிறைந்த அருமையான கவிதைகள்.

வாழ்த்துக்கள் சொல்வதற்கு வயதில்லை என்பதால் என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே படித்த ஞாபகம், அருமை அருமை.

Link to comment
Share on other sites

அந்த இருண்ட நாட்களை நினைவு படுத்தி எழுதிய கவிதை நன்று. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகந்தனிலே - பொருள்

மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்

நாட்டை மறப்போமோ! - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே - அன்னை

வீட்டை மறப்போமோ! - என்று

விம்மியழுது புலம்பிடும் எம்குரல்

கேட்டிருப்பாய் காற்றே - அந்த

கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்

மீட்டு முரையாயோ - நாங்கள்

விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம்

கவிஞரின் வேதனை பாட்டில் புலப்படுகிறது.

கவிஞரே உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அந்த நினைப்புகள்

இருக்கின்றன....... கொஞ்சம் செளிம்பு படிந்திருக்கிறது அவ்வளவுதான்.

பித்தத்திற்கும்இ செளிம்புக்கும் தேசிக்காய்தான் மருந்து....

இங்கு நான் தேசிக்காய் என்று குறிப்பிட்டது விழிப்புணர்வை...

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகாரா

நான் உங்கள் நெருப்புக்குயில்கள் கவிதைக்கு எதிர்க் கவிதை எழுதினேன். ஆனால் நீங்கள் எனது கவிதையைப் பாராட்டியுள்ளீர்கள். இது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது. எம்மிடம் சிவப்புச் சிந்தனைகள் இருப்பது நல்லதே. நானும் ஒரு காலத்தில் சிவப்புச் சிந்தனையாளனாக இருந்திருக்கிறேன். ஆனால் அச்சிந்தனைகள் எமது தேசியப்பற்றை எள்ளளவும் பாதிக்காமல் இருத்தல்வேண்டும். நீங்கள் தமிழ்த் தேசியத்தில் உறுதியான பற்று வைத்திருப்பது தெரிகிறது. எனது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் கரு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.