Jump to content

நாகராஜ சோழன். எம்.ஏ.எம்.எல்.ஏ. திரைவிமர்சனம்


Recommended Posts

சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம்  ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்  கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என  இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா  வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே  படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.

சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு

சத்யராஜ்  கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே  இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு  கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு சீமான்  பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை  வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர்  வரும் காட்சிகளில் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க .

 

;இது  போக மிருதுளா  ஹன்சிபா , கோமல் ஷர்மா என  சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை. அமைதிப்படை முதல் பாகத்தை எதிர்பார்த்து செல்பவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14583:chola-tasks-emeemele-home&catid=39:cinema&Itemid=107

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ - விமர்சனம்
 
ரு கேடுகெட்ட அரசியல்வாதிக்கு தன் மகனே ஆப்பு வைக்கும் அதிரடிப் படம் தான் அமைதிப்படை. நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. (அமைதிப்படை-2) படத்திலும் அதே கதையமைப்பு தான். அரசியலைப்பற்றி அதேவிதமான சரவெடி வசனங்களை அள்ளிவீசி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். 
 
n1.jpg
 
வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆப்பு வைப்பது, என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. 
 
ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைதிப்படை படத்தில் வந்த நாகராஜசோழன் கேரக்டர் இதிலும் தொடர்கிறது. 
 
சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். பிறகு... வழக்கமான அலப்பறைகள் தொடர்கிறது. 
 
தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். அதில் ஒரு பெரிய அமௌண்டை கொள்ளையடிக்கலாம் என்பது அவரின் கணக்கு. ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது. 
 
n3.jpg
 
இதற்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக் வைக்கிறார் நாகராஜசோழன். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது. 
 
ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு சூன்யம் வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே... அதே எனர்ஜி - அதே டைமிங்! பிண்ணிட்டாங்களே...!
 
சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல். சி.எம் முதல் பி.எம் வரை ஒருத்தர கூட விட்டுவைக்காம, சும்மா... கலாய்ச்சுட்டாங்களே! 
 
n2.jpg
 
தன் வில்லத்தனமான நடிப்புக்கு வேறுயாரும் நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனும் அதே குசும்போட இருக்கிறார். படத்தில் சில பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும், இவங்க இருவரும் லொள்ளு செய்கிற காட்சிகள் தான் அசத்தலாக இருக்கிறது. சீமான் அரசியல் மேடைகளில் பேசுகிற அதே உணர்ச்சியுடன் படத்திலும் பேசி நடித்திருக்கிறார். 
 
படத்தில் மலைவாழ் மக்களின் வலிகளை நாம் புரிந்துகொண்டாலும், அதைக் காட்சிப்படுத்திய வித்தில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்க முடியும். காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது படத்தின் மைனல். ஆனால் மேக்கிங்கில் இளைய இயக்குனர்களோடு போட்டி போட்டிருக்கிறார். 
 
டி.ஷங்கரின் தரமான ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஜேம்ஸ் வசந்தனின் இசை சுமாரானது என்றே சொல்ல முடியும். பின்னணி இசையை கொஞ்சம் ஜாக்கிரத்தையாகவே கையாண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.  
 
n6.jpg
 
அமைதிப்படை முதல் பாகத்தை மிஞ்ச முடியாது என்றாலும், அந்தப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்த நாகராஜசோழனை பார்த்து ரசிக்க முடியும் என்பது நிச்சயம். 
 
சரவெடி வசனங்களில் சில...
 
சத்யராஜ் : இந்த தேர்தல்ல என்ன இலவசமா கொடுக்கலாம்?
 
மணிவண்ணன் : மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு ஜனரேட்டர் இலவசமா கொடுக்கலாம்.
 
----------------
 
சத்யராஜ் : மணியா... இந்தா... அவன சுட்டுத்தள்ளு
மணிவண்ணன் : அட, எனக்கு சுடத்தெரியாங்கண்ணா...
சத்யராஜ் : நீ எப்ப இதெல்லாம் பழகுறது?
மணிவண்ணன் : கைநடுக்கதுல உங்கள சுட்டாலும் சுட்டுடுவேன்
சத்யராஜ் : நீ செஞ்சாலும் செய்வ. துப்பாக்கிய குடு. 
 
----------------
 
சத்யராஜ் : என்னய்யா நடக்குது
மத்திய அமைச்சர் : அண்ணா, என் கையில எதுவும் இல்ல. சட்டத்த மீறி என்னால எதுவும் செய்ய முடியாது
சத்யராஜ் : அமைச்சரே, உங்கள நான் ஜெயிக்க வச்சதே சட்டத்த மீறித்தான். மறந்துட்டீங்களா
 
----------------
 
எதிர்கட்சித்தலைவர் : என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்
சத்யராஜ் : அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில ’ஏய்’ அப்படின்னு சவுண்டு கொடுக்குற 
 
----------------
 
சீமான் : மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும். மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாற தான் இருக்கும்
ஜெகன் : அப்போ பாற தான் மிஞ்சுமா
சீமான் : அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன் : அப்போ, வெறும் தர தான் மிஞ்சுமா
சீமான் : அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறாங்களே
 
இன்னும் படத்தில் எவ்வளவோ இருக்கு...!

 

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2218

 

Link to comment
Share on other sites

தென்னிந்திய சினிமாவைத் தியட்டரில் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தால் இது போன் றபடங்களைத் தான் முதலில் போய் பார்க்க வேண்டும். எமக்காகக் குரல் கொடுப்பவர்களுக்காக....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.