Jump to content

பாவத்தின் சம்பளம்- த .அகிலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.-நுணா .

 

இங்குதான் உங்கள் அறியாமை வெளிவருகின்றது .எப்படி எல்லோரும் பிரபாகரன் ஆக முடியாதோ அதே மாதிரித்தான் எல்லோரும் அகிலனாகவும் முடியாது .

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் .

 

அர்ஜீன் அண்ணா அகிலனின் கட்டுரையை நாங்கள் ஏற்று இருப்போம் எப்ப என்டால் இந்தக் கட்டுரையை அகிலன் தன்ட தம்பி இயக்கத்திற்கு போய் இறப்பதற்கு முன் எழுதியிருக்க வேண்டும் அல்லது அவருடைய தம்பி இயக்கத்திற்கு போகாமலேயே எழுதி இருக்க வேண்டும்.இதில பிரச்சனையே முந்தி புலியைத் துதி பாடின அகிலன் தான் இப்பவும் வசை பாடுகிறார்.யாரும் போய்ப் போராட வேண்டும் ஆனால் என்ட வீட்டில் இருந்து யாரும் போய் போராடி இறந்தால் நான் வசை பாடுவேன் என்டதைத் தான் அகிலன் செய்கிறார்.அதைத் தான் பிழை என்கிறோம்  :wub:

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் புளட்டை முடித்தேன் என்கிறார்

இன்னொருத்தர் புலியை  முடித்தேன் என்கிறார்

 

எல்லோரும்  யமன்களாக இருக்கிறார்கள் 

மக்கள் மட்டும்  பலிக்கடாக்களாக எல்லோரையும் போராளிகளாக முன்னாள் பின்னாள் என்று நம்பியபடி............ :(

 

(பாவம் அந்த மனுசன் 

எல்லாருடைய  தொடர்புகளையும்  தெரிந்து கொண்டுவிட்டது போலும்.  பரிசில் வைத்து போட்டுவிட்டார்கள் :( )

Link to comment
Share on other sites

ஒருவர் புளட்டை முடித்தேன் என்கிறார்

இன்னொருத்தர் புலியை  முடித்தேன் என்கிறார்

 

எல்லோரும்  யமன்களாக இருக்கிறார்கள் 

மக்கள் மட்டும்  பலிக்கடாக்களாக எல்லோரையும் போராளிகளாக முன்னாள் பின்னாள் என்று நம்பியபடி............ :(

 

(பாவம் அந்த மனுசன் 

எல்லாருடைய  தொடர்புகளையும்  தெரிந்து கொண்டுவிட்டது போலும்.  பரிசில் வைத்து போட்டுவிட்டார்கள் :( )

 

கருணா சொன்னான் தான் தான் புலியை அழிச்சதாய்,  ரணில் சொல்லுறார் தான் அழிக்க காரணம் எண்று, பொன்சேகா தான் காரணம் எண்டுறார், மகிந்த சகோதரர்கள் தாங்களாம், அமெரிக்கா தாங்களாம், இந்தியாவும் தாங்களாம், ஏன் பாக்கிஸ்தானும் தாங்களாம்...   இப்படி எல்லாரும் உரிமை கோரும் போது  கண்ட தேவாங்குகள் சொல்லுறதுகளை சீரியசா எடுத்துக்கொண்டு... 

 

சரி யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் கேப்பிங்களா.... அப்படி கேட்டாலும் சும்மா போவியளா எண்டு இருக்காமல்...  உங்கட வயசுக்கு இப்படி எத்தினையை பாத்து இருப்பியள்... 

 

சும்மா வேலையை பாருங்கண்ணை கடுப்பை கிழப்பாமல்... 

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம்

 

 

தான் கூவித்தான் பொழுது விடிகிறதென்றுதான் சேவல் காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கிறது. கேக்கிறவன் கேணையெண்டா எருமையும் ஏறோபிளேன் ஓடுமாம். கருணாவும் இப்பிடித்தான் கதை சொல்லி புலியை அழிச்சேன் என்றது ஒருகாலம். ஆனால் இப்ப கருணா தெருவில வெளிக்கிட்டா காறித்துப்புது கருணாவின் ஊரே.

 

ஒரு இனத்தின் வாழ்வு கஸ்ரொ என்ற தனியொரு போராளிக்கு மட்டுமானதாக பிரபாகரன் என்ற தலைவன் எங்கும் பிரகடனப்படுத்தவில்லை. தன் உயிரைக் கொடுத்த ஒவ்வொரு போராளியும் தனது தேசத்துக்காக மட்டுமே தன்னுயிரைக் கொடுத்தார்கள்.

ஒன்றை ஆக்கியவர் ஒருநாளும் அதனை அழிக்க வேணுமென மனசாலும் நினைக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த ஆக்கத்துக்காக தான் பட்ட வலியும் துயரம் உரியவருக்கு மட்டுமே தெரியும். அயலில் அண்டி நிண்டு புதினம் பாத்து நானும் ஆக்கியோன் என உரிமம் கொண்டாடுகிற சுயநலத்திற்குத்தான் அழிக்க வேண்டுமென்ற நினைப்பும் வக்கிரமும் வரும்.

 

ஆணவம் பிடித்த அனைத்து போராயுதங்களோடும் வீரம் பேசிய கோலியாத்தை  தாவீது என்ற சின்னவன் கற்களால் அடித்து வீழ்த்தினான் என்ற வரலாறு சின்ன வயதில் படித்த நினைவு. அதே கோலியாத்தின் திமிரே இந்தப்பதிலில் இருக்கிறது.

 

கோலியாத்தின் பெரும் திமிருக்கு தாவீது பயன்படுத்திய சில கற்கள் மட்டுமே.

 

 

Link to comment
Share on other sites

தான் கூவித்தான் பொழுது விடிகிறதென்றுதான் சேவல் காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கிறது. கேக்கிறவன் கேணையெண்டா எருமையும் ஏறோபிளேன் ஓடுமாம். கருணாவும் இப்பிடித்தான் கதை சொல்லி புலியை அழிச்சேன் என்றது ஒருகாலம். ஆனால் இப்ப கருணா தெருவில வெளிக்கிட்டா காறித்துப்புது கருணாவின் ஊரே.

 

ஒரு இனத்தின் வாழ்வு கஸ்ரொ என்ற தனியொரு போராளிக்கு மட்டுமானதாக பிரபாகரன் என்ற தலைவன் எங்கும் பிரகடனப்படுத்தவில்லை. தன் உயிரைக் கொடுத்த ஒவ்வொரு போராளியும் தனது தேசத்துக்காக மட்டுமே தன்னுயிரைக் கொடுத்தார்கள்.

ஒன்றை ஆக்கியவர் ஒருநாளும் அதனை அழிக்க வேணுமென மனசாலும் நினைக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த ஆக்கத்துக்காக தான் பட்ட வலியும் துயரம் உரியவருக்கு மட்டுமே தெரியும். அயலில் அண்டி நிண்டு புதினம் பாத்து நானும் ஆக்கியோன் என உரிமம் கொண்டாடுகிற சுயநலத்திற்குத்தான் அழிக்க வேண்டுமென்ற நினைப்பும் வக்கிரமும் வரும்.

 

ஆணவம் பிடித்த அனைத்து போராயுதங்களோடும் வீரம் பேசிய கோலியாத்தை  தாவீது என்ற சின்னவன் கற்களால் அடித்து வீழ்த்தினான் என்ற வரலாறு சின்ன வயதில் படித்த நினைவு. அதே கோலியாத்தின் திமிரே இந்தப்பதிலில் இருக்கிறது.

 

கோலியாத்தின் பெரும் திமிருக்கு தாவீது பயன்படுத்திய சில கற்கள் மட்டுமே.

 

அதே .. <_<

 

Link to comment
Share on other sites

அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

நேசக்கரத்திற்காக நீங்கள் இழந்தவற்றை ஒருக்கா சொல்லுங்கோ ?

நேசக்கரம் தேவையில்லாத வேலையென்று 2009 மார்ச்மாதத்தோடு ஒதுங்கிப்போனீங்களே ?

 

எல்லா தொல்லைகளையும் தாங்கி 2010இல் ஒரு அமைப்பாக பதிவு செய்து இதற்கும்

உங்கள் யாரிடமும் ஒருசதம் கூட கேட்காமல் தனியொருத்தியாகவே எல்லாச் செலவுகளையும் தாங்கி ஒரு அமைப்பாக பதிவு செய்து  ஒரு அமைப்பாக ஓட வெளிக்கிட்ட போது தேசப்பற்று வந்து ஒரு அங்கத்தவராகவே சேர்ந்தீங்கள். அதிலும் கதையைத்தவிர செயல் ???? எவ்வளவெண்டது உங்களுக்கே வெளிச்சம் ???

கதைச்சே காலம் கடத்திக்கொண்டு அதுவே பெரிய வேலையெண்டு முரண்பட்டு 2011விட்டு ஒதுங்கும் போது பெரிய சபதங்களோடு இதே களத்தில் ஒரு திரியும் திறந்து சக கள உறவுகளிடம் பிரியாவிடை பெற்றுப் போனதெல்லாம் பதிவிலிருந்து அழிபடவில்லை.

 

எல்லாருடைய இடைஞ்சல்களையும் தாண்டி அந்த சனத்துக்கு ஏதாவது செய்ய வேணுமென்ற விருப்பில் தனித்த ஒருத்தியாக நேசக்கரத்திற்காக நான் இழந்ததை உங்கள் யாராலும் திருப்பித்தர முடியாது. இன்றுவரை நிர்வாகச் செலவை சமாளிக் நான் கிளீனிங் செய்கிறேன். பெயருக்கு ஒருவராக இருந்த உங்களுக்கே இதனை அழிக்கும் உரிமை இருக்கென்றால் இதனை இந்தளவுக்கு வளர்க்க அணுவணுவாக கஸ்ரப்பட்ட எனக்கு எந்தளவு கோபம் வரவேணும்.

 

நேசக்கரம் நிர்வாக கொமிற்றியில் எங்கேயும் நீங்கள் இல்லை. இதுக்குள்ளை ஆக்கினேன் அழிப்பேன் என்ற வீரம் வேறு.

மக்களுக்கான விடயத்தில் முரண்பாடுகள் வேண்டாமென உங்கள் தாளங்களுக்கு மௌனமாக இருந்ததுதான் இன்றைய உங்களது இந்த அழிப்பேன் என்ற எக்காளத்துக்கு காரணமாகிவிட்டது.

உங்களைப்போலவே நானும் சவால் விடுகிறேன். முடிஞ்சா நேசக்கரத்தை அழியுங்கோ பார்க்கலாம் ?

பூவிசிறிக்கெல்லாம் நான் பயப்பட்டு ஒதுங்கமாட்டேன். பண்ண முடிஞ்சதை பண்ணுங்கோ. வருகிற சவாலையெல்லாம் எதிர்கொள்ள நான் தயார்.

சீனப்பட்டாசுக்கும் , சினைப்பர் வெடிக்கும் வித்தியாசம் நிறைய. உந்த சீனவெடியை எங்கேனும் உலகம் தெரியாதவைக்கு கொழுத்திப் போடுங்கோ அங்கினைதான் சீனவெடிச்சத்தம் பொருத்தம்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் இந்த கட்டுரை வாசித்த கூட்டதிற்கு நான் சென்றிருந்தேன் .அவர் இதை வாசிக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டே வாசித்தார் ,அவருக்கு இந்த சமூகத்தினல் இருக்கும் கோபம் தான் அதற்கு காரணம் என நினைக்கின்றேன் .

மிகவும் உண்மையான நேர்மையான அவரது ஆழ்மனத்தில் இருந்து வந்த ஒரு தரமான ஒரு கட்டுரை ,அகிலன் வாசித்துமுடிய பலராலும் பாராட்டபட்டது.

முக புத்தகத்தில் பதியப்பட்டு உலகெங்கும் இருந்து நல்ல விமர்சனங்கள் பலரால் எழுதப்பட்டிருந்தது .

 

யாழ் வாசகர்கள் ,

வழக்கம் போல இங்கு கட்டுரை வாசிக்காமலே ,எழுதியதை விழங்காமலே பின்னூட்டங்கள் .

அகிலன் யார் என்று தெரியாமல் பின்னூட்டங்கள் .

மாட்டை பற்றி எழுத சொன்னால் மாட்டை பிலா மரத்தில் கட்டிவிட்டு பிலா மரத்தை பற்றிய பின்னூட்டங்கள் .

தொடர்ந்தும் வகுப்பில் கடைசி வாங்கில் இருந்தவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .

தமிழ் இனம் நடத்திய விடுதலை போராட்டத்தை  சோபாசக்தியின் புத்தகத்தில் இருந்துதான் வாசித்து தெரிந்தவர்களுக்கு. அகிலனின் கட்டுரை முன்வாங்கில் இருந்து படிப்பது போன்ற ஒரு திருப்ப்தியைதான் கொடுக்கும்.

 
துரதிஸ்டவசமாக அதை நேரில் பார்த்தவர்களுக்கு இது ஒரு கள்ளு  கொட்டில் புசத்தல்தான்.
 
30 வருடமாக தமிழ் இனத்தின் மீது ஏகாபத்தியங்கள் வீசிய அனைத்து குண்டுகளையும் நஞ்சுகளையும். தமது உடலையும் உயிரையும் காவல் அரண் ஆக்கி அனைத்து குண்டுகளையும் தமது உடலில் தாங்கியவர்களை. குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு.
எதோ ஆப்ரிக்க கண்டத்தில் போர் நடப்பதுபோல் சுயலமாக இருந்த .............. சுய விளம்பர நீதி தேவதைகள்.
வந்து கொட்டும் நீதி கதைகளுக்கு காத்து கொடுப்பதற்கு ............  நாம் தமிழன் மாதிரி பிறக்கவில்லை .
 
தமிழனாக பிறந்து விட்டோம்.
 
உங்களுடைய முன்வாங்கு எமக்கு வெகு தூரம். நீங்கள் அங்கேயே இருந்து கொள்ளுங்கள்.
இலக்கியம் என்பதை. எழுத்து பிழை இன்றி எழுத தெரியாதா கூட்டம். இலக்கிய ஒன்றுகூடல் செய்யும் போது  ஏதாவது பினாத்தும். அதை கொண்டுவந்து இணையுங்கள்.
யாழின் நகைச்சுவை பக்கம் யாரும் எதையும் இணைப்பதில்லை.
Link to comment
Share on other sites

மரணம் என்றுமே நண்பனல்ல அப்படியிருக்க முடியவே முடியாது.

மரணம் பிரியமானவர்களுக்கு எதிரி

மரணம் எழுத்தாளர்களுக்கு பாடுபொருள்

மரணம் ஆன்மீகவாதிகளுக்குக் கச்சாப்பொருள்

மரணம் சிலருக்கு சாகசம்

மரணம் சில வேளைகளில் தந்திரோபாயம் அல்லது அப்படி அழைக்கப்படுகிற மண்மூட்டை

மரணம் சில வேளைகளில் பெரும் வியாபாரம்

மரணம் ஒரு பெரும் அரசியல்

மரணம் ஒரு இளவரசனைத் தன் இல்லாளைக் கைவிட்டு நைசாக எஸ்கேப்பாகும் படி தூண்டியிராவிட்டால். அவனது பெயரால் ஒரு வழிமுறையைக் அவன் தோற்றுவித்திருக்காவிட்டால் இன்றைக்கு ஒருவேளை நாம் இதைப் பேச நேர்ந்திருக்காது. சரி பேசுவது என்று தொடங்கிவிட்டோம் பேசிவிடுவதே சிறந்தது.

மீராபாரதி என்னை இந்தக் கூட்டத்தில் பேசும்படி அல்லது என்னுடைய கருத்தை முன்வைக்கும் படி மின்னஞ்சல் அனுப்பியபோது உண்மையில் நான் துணுக்குற்றேன். இதற்கான தகுதியை நான் வந்தடைந்த விதம் பற்றி. நான் பேச்சாளன் என்பதாலோ, அல்லது மரணத்தின் வாசனை என்கிற புத்தகத்தை எழுதினவன் என்பதாலோ அல்லது  3 கூட்டங்களில் எழுதிக்கொண்டு வந்து வைத்து வாசித்தேன் என்பதாலோ அல்ல இந்த அழைப்பு என்பதாகவே நான் உணர்ந்தேன். சில வேளைகளில் ஒரு 2009ம் ஆண்டே நான் வெளிநாட்டில் வசித்திருந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் யூரோ பெறுமானமுள்ள பணமும் இருந்திருந்தால் நான் இந்தச் சிறப்புத் தகுதியை வந்தடைந்திருக்கமாட்டேன். ஏனெனில் நான் புலிகளின் அனைத்துலகச் செயலகக் காரருக்குப் பத்தாயிரம் யூரோக்களைக் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து என்னுடைய தம்பியை மீட்டு அவன் தெரிவாகியிருந்த பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்கு அவனை அனுப்பியிருந்திருப்பேன். அவன் நைசாக ஸ்ரூடண்ட் விசா எடுத்து லண்டன் போய் புலிக்கொடியைப் பிடித்தபடி ஏதோ ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருப்பான். ஆனால் என்னுடைய கையாலாகாத் தனத்தால் அவன் கொல்லப்பட்டு நான் இத்தகைய அனுபவங்களை உடையவன் என்கிற தகுதியை வந்தடைந்தேன். உண்மையில் இந்தச் சிறப்புத் தகுதியால் நான் கவனப்படுத்தப்படும் போதெல்லாம் நான் டபுள்புறமோசன் கிடைத்த உணர்வை ஒரு போதும் அடைவதில்லை நான் கூனிக்குறுகி பெரும் குற்வுணர்வுக்குள்ளாகிறேன்.

அவ்வாறு என்னைச் சிறப்புக் கவனத்துக்குள்ளாக்குவது என்மீதான அன்பினால் அல்லது இரக்கத்தினால்,கரிசனத்தினாலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது என்னளவில் என்னைச் சீண்டுகிறது. ஒரு விசையைப்போல நான் கடந்து வந்துவிட விரும்பகிற அதே திசையிலேயே என்னை மீளச் செலுத்துகிறது.  என்னை  மட்டுமல்ல இழப்புள் இருக்கிறவர்களை வெளிக்கொண்டு வருதல்,ஆற்றுப்படுத்தல்,ஆறுதலளித்தல் எல்லாமே அபத்தநாடகங்களாகவே நிகழ்த்தப்படுகின்றன என்பது என் எண்ணம். உண்மையில் இழப்பினை அணுகும் விதம் பற்றிய அறிவூட்டல் இழப்புகளிற்கு வெளியில் இருக்கிறவர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். இழப்புகளிற்கு வெளியில் யார் இருக்கிறார்கள் எல்லோரிடம் இழப்பு இருந்துகொண்டுதானே இருக்கிறது இழப்பில்லா வீட்டிலிருந்து ஒரு சொம்புத் தண்ணீர் கொண்டு வா என்று யாரேனும் கேட்கக் கூடும். நானே வெளியேயும் உள்ளேயும் இருக்கிற இடைவெட்டில் நின்றுகொண்டே தொடர்கிறேன்.

அப்படி என்ன பெரிய பிரச்சினையாக இந்த விசயம் இவருக்கிருக்கிறது என்று ஒரு சிலர் விசனப்படவும் கூடும். தொடங்கிவிட்டேன் சில அனுபவங்களைச் சொல்லிவிடுகிறேன்.

கனடாவுக்கு நான் வந்த புதிது ஒரு நண்பர் இன்னொரு இந்திய எழுத்தாளருக்கு என்னை அறிமுகம் செய்கிறார் இவர் அகிலன் இவற்ற தம்பி ஒராள் கடைசி நேரம் செத்தவர். எனக்கு என்னுடைய தகுதியை நினைத்து அருவருப்பாயிருந்தது. என்னைப் பற்றிச் சொல்ல வேறொன்றும் இல்லாவிட்டால் அல்லது வேறெதையும் சொல்ல மனமில்லாவிட்டால் அறிமுகம் தேவையேயில்லை.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் கருணை காட்டுவார்கள் அதுவோ பெரும் கருணை ஏதேனும் விவாதித்தால் என்ன பெரிய விவாதம் ஏதாவது ஒரு விவகாரத்தில் புலிகளை விமர்சித்தால், அரசை விமர்சித்தால் அந்த நபர் நம்பிக்கொண்டிருப்பதற்கு எதிராயிருந்தால் நீங்கள் தம்பியை இழந்திருக்கிறீர்கள் அதனால் நாங்கள் உங்களோடு கதைக்கிறதில்லை என்பார்கள். அதாவது உங்களுடைய பார்வை முற்றிலும் தவறானது உங்கட தம்பி செத்துப்போனவர் என்பதால் அதை மன்னித்து விடுகிறோம் என்பதான் பாவனை அதிலிருக்கும். எனக்கு இதுவும் எரிச்சலாயிருக்கும் ஏதோ என் தம்பி ஒருவன்தான் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டவனா? வன்னியிலிருந்தவர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் எனச் சொல்கிறார்கள். நான் சொல்வது பிடித்துச் செல்லப்பட்டவர்களது எண்ணிக்கை அல்ல பிடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை. ஆகவே இது ஒரு வகை மாதிரி என்னுடைய குடும்பத்தின் பிரச்சினை பத்தாயிரம் குடும்பத்தின் பிரச்சினை அது ஒரு சமூகத்தின் பிரச்சினை இல்லையா? ஆனால் அதை என்னுடைய தகுதியாக்கி நீங்கள் பாவம் இழப்பிலிருக்கிறவர் கோபத்தில் கதைக்கிறியள் அதனால் நாங்கள் மறுத்துரைப்பதில்லை எனச் சொல்லுவார்கள். ஆக இந்த ஆறுதலளிக்கிறோம் கோஸ்டி மிகவும் ஆபத்தானவர்களால் நிறைந்திருக்கிறது.

இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் நீங்கள் எழுதவேண்டும். தம்பியைப் பற்றி எழுதுங்கய்யா உங்கடை அனுபவங்கள் பதியப்படவேண்டும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று நச்சரிப்பார்கள். நீங்கள் இதிலிருந்து வெளியே வரவேண்டும் அது இதெண்டு அன்புத் தொல்லை கொடுப்பார்கள் இப்படிப் பட்டவர்களை நான் மனசுக்குள் நினைப்பதுண்டு நல்லவன் ஆனா மூதேசி. சில வேளை  எனக்கு ஓங்கி முகத்திலேயே குத்துவிடவேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஏனெனனில் இப்படிக் கேட்பதும் துயரத்திலிருந்து விடுபடவைப்பதற்கான வழியல்ல மாறாக மீண்டும் மீண்டும் அதனுள்ளேயே அழுந்தவைக்கும் பாரக்கற்கள். இழப்பிலிருப்பவனை அவன் வழியிலேயே விட்டு விடுங்கள் காலம் எல்லாவற்றையும் ஆற்றும். அப்படி ஆற்றாவிட்டால் தான் என்ன? இழப்பினைத் திருப்பித்தர முடியாதபோது? எல்லாரும் யேசுநாதர்களா என்ன மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவதற்கு.

சொல்லப் போனால் இந்தச் சிறப்புக் கவனப்படுத்தல் சின்ன வயதிலிருந்து என்னோடு கூட வருவதுதான். அதற்குப் பெயர் தகப்பனைத் தின்னி. இப்போது இந்த தம்பியிழந்தான். இவ்வகையான சிறப்புத்தகுதியால் எனக்குக் கிடைக்கிற கடைசி மேடையாக இது இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல மரணத்தை வேண்டுகிறேன்.

இவ்வளவு நேரமும் நான் சொன்னதெல்லாம் என்னுடைய தம்பியின் இறப்பின் சற்றுப்பிந்திய சம்பவங்கள். உடனடியான சம்பவங்கள் காட்சிகள் இன்னும் கவனத்துக்குரியவை. என்னுடைய தம்பியின் இறப்புச் செய்தியை லண்டன்ல இருக்கிற தங்கையின் கணவர் எனக்குச் சென்னைக்கு போன் பண்ணிச் சொன்னவேளையில் உண்மையில் சென்னையில் நான் தங்கியிருந்த அறையில் என்னுடைய கணினியும் நானும் மட்டுமேயிருந்தோம். வெளிநாட்டில் என்னோடு நண்பராயிருந்தார் என்று நான் நம்பிய ஒரு எழுத்தாளருக்கு அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் பொருளாதார ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நான் சொல்வதற்கு வேறு யாருமில்லாமல் கூகுள் ரோக்கில் அவரைக் கூப்பிட்டுச் சொன்னேன்  அல்லது அழுதேன். அவர் அந்தக் கணம் ஆறுதலாயிருந்தார். போரின் மீது,புலிகள் மீது, அரசின் மீது, சமூகத்தின் மீது நிறையக் கோவப்பட்டார். அதனைத் தொடர்ந்த அவருடைய ஒன்றிரண்டு கதைகளில், கவிதைகளில் அந்த கோவத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இப்போது அண்மைக்காலமாக அந்தத் தீர்ப்புகளில் ஒன்றிரண்டைத் திருத்தியெழுதியிருப்பதை அவதானித்தேன். கணிணியில் எழுதிய எழுத்துக்கள் தானே காலம் மாற மாற மாறும்.ஆனால் இழப்பென்பது சிலையில் எழுதிய எழுத்து.  எல்லாவற்றிற்கும் மேலாக சில காலம் கழித்து கோவம் குறைந்து அவர் தளம் திரும்பிய பிறகு இப்போது நான் பெயர் சொல்லாமல் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே அவர் ஒரு இடத்தில் என்னைப் பற்றி மறைமுகமாகச் சொன்னார் இப்படி “ மச்சான் செத்தான் மாமன் செத்தான் எண்டு இயக்கத்தை எதிர்க்க வெளிக்கிட்டவன் என்று” அதனை அவர் பொதுசனவெளியிடம் கொஞ்சக் காலம் புலிகளை தான் விமர்சித்த பாவகாரியத்திற்கான தன்னுடைய பாவமன்னிப்புப் பிரார்த்தனையின் வாசகங்களாகத்தான் சொல்லியிருப்பார் என்று நாம் நம்புகிறேன். பாவமன்னிப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அதற்கும் கனகாலம் முன்பாகவே என்னிடம் புலிகள் குறித்த அப்படியான பார்வையிருந்தது என்பதை அவர் அறிவார். என்ன செய்வது எல்லோருக்குமானதுதானே ஆகாயமும் பூமியும். ஆனால் அது என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களற்றுக் கணினியும் நானுமாய்த் தனித்துவிடப்பட்ட கணத்தில் அறியநேர்ந்த சகோதரனின் மரணத்தை இவன் என் நண்பன் என நினைத்து ஆறுதலாச் சொல்லி இவனிடமா அழுதேன் என நான் வெட்கப்பட்டேன்.  அங்கீகாரமே எல்லாம் வல்லது என நண்பர் உணர்ந்திருந்தார் போலும் எதிர்ப்புணர்வும் மாற்றுக்கருத்தும் யாருக்கு வேண்டும் மண்ணாங்கட்டி.

இன்னொருவர் கொஞ்சப் பணத்தை எடுத்து என்பக்கமாக நீட்டி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் துயரத்தை பங்கு போடுகிறாராம். பற்றிக்கொள்ள ஏதுமற்றவரெனத் தன்னைச் சொல்லியபடி அவர் தமிழ்த்தேசியத்தை தாங்கும் பெருந்தூண்.

இன்னொருவர் வந்து என்னைப் பார்த்தபடியே நீண்டநேரம் மௌனமாய் அமர்ந்திருந்தார். திடீரென ஞாபகம் வந்தவரைப்போலக் கேட்டார் என்ன றாங்? எனக்கொருகணம் அவர் என்ன கேட்கிறார் எனத் தெரியவேயில்லை பிறகுதான் புரிந்தது புலிகள் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு வழங்குகிற இராணுவப் படிநிலையைக் கேட்கிறார் என்பது. நான் பதில் சொல்லாமல் அமைதியாயிருந்தேன். அவர் சிறிது நேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய்க் திரும்பவும் கேட்டார். உங்கட தம்பி அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவரா அல்லது தானாகச் சேர்ந்தவரா? தொடர்ந்து அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவராயிருந்தால் வீரவேங்கைதான் குடுத்திருப்பாங்கள் என்றார். அதற்கிடையில் என்னருகில் இருந்த இன்னொரு நண்பர் அவரைக் கையைப்பிடித்து வெளியில் அழைத்துச்சென்றுவிட்டார். இல்லையென்றால் நான் சத்தியமாய் அவரை அடித்திருப்பேன்.

நேற்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் இரண்டு விசயங்களை  உணர்ந்தேன். ஒன்று அந்த நண்பருக்கு பிடித்துச் செல்லப்படுவதற்கு வன்னியில் யாருமில்லை. வைபோசாகப் பிள்ளை பிடித்தல் என்பதை எவ்வளவு நல்ல நிகழ்வாக அவசரகாலத்தில் அழைத்துச் செல்லுதல் என்று அவர் சொன்னார் அது எவ்வளவு அரசியல் நியாயப்படுத்தல் நிறைந்த சொல். அங்க நிக்கிறான் தப்பியோடிய தமிழன், என்று தோன்றிச்சுது.

இந்த இடத்தில் நினைவுக்கு வருவதால் இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போகிறேன். சொற்களாலானதுதான் இந்த அரசியல் வெளி. இலங்கை மனித சமூகத்தின் அரசியலே சொற்களின் வர்ணனைகளாலானது. இதே தொழிநுட்பத்தைத் தான் இலங்கை அரசும் பயன்படுத்துகிறது. அதாவது முன்னாள் போராளிகளை ஜெயிலில் அடைத்த வைத்திருப்பதற்கு அது வைத்திருக்கிற சொல் புனர்வாழ்வு பாருங்கள் எவ்வளவு அரசியல் நியாயமூட்டப்பட்ட சொல் அது.

சரி அந்த றாங் கேட்ட நண்பருக்கே மீண்டும் வருகிறேன். இன்னொரு முரணும் உண்டு அவர் சுரேஸ் பிரேமச்சந்திரனாக்கள் வைபோசா ஆள்பிடிச்சபோது(தமிழ்த்தேசிய இராணுவத்திற்கு) தான்தப்பிப் பிழைத்த கதைகளை சாகசமாக இன்றைக்கும் விபரிப்பார். ஒரே செயல் சில வருடங்கள் கடந்து செய்யப்படும்போது எப்படி நல்லசெயலாக பாதிக்கப்பட்டவராலேயே பார்க்கப்படுகிறது என்று வியந்தேன். இரண்டாவது அவர் என்ன றாங் என்ற அவருடைய கேள்விக்கு நான் பதிலளிக்காமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய தம்பிக்கு வழங்கப்பட்ட றாங் பெருமையோடு சொல்லப்பட முடியாதபடி குறைவானது என்பதனால் ஏற்பட்ட கள்ள மௌனம் என அவர் நினைத்திருப்பாரோ என்றும் நான் நேற்று நினைத்தேன்.

அது எவ்வளவு துயரமான உண்மை. வீரவேங்கைகளின் மரணமும், பிரிகேடியர்களின் மரணமும், இளவரசர்களின் மரணமும்,சாதாரண பாலகர்களின் மரணமும், தளபதிகளின் மரணமும், சிப்பாய்களின் மரணமும் எத்தனை வேறுபாட்டுடன் அணுகப்படுகிறது, அணுகப்பட்டது. இதற்கெல்லாம் உயிருள்ள சாட்சியங்கள் இன்னும் இருக்கிறார்கள். புரகந்த கழுவர அந்தப்படம் தான் எனக்கிந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. அதோடு கூடவே கொக்காவிலில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் எரியூட்டப்பட்ட 1500 படையினரின் சடலங்களும் நினைவுக்கு வருகின்றன. முல்லைத்தீவுப் படைமுகாமை புலிகள் கைப்பற்றியபோது அதில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை அப்போதைய சந்திரிகா அரசாங்கம் கையேற்க மறுத்தது. அந்தச் சடலங்களை வெற்றி இறுமாப்போடு வன்னிச் சனங்கள் சந்திரன் சிறுவர் பூங்காவில் சென்று பார்த்தனர். முல்லைமண் எங்களின் வசமாச்சு ஈழம் முற்றிலும் வெல்வது திடமாச்சு வெற்றி மெட்டு வானலைகளில் மிதந்தது. ஏழாம் வகுப்புச் சின்னப்பெடியன் இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு ஒழுங்கைக்குள் தனது நீலச் அரைச் சைக்கிளை ஓடித்திரிந்தான். அது நான் தான். பிறகு அதே சின்னப் பெடியன் கொக்காவில் ஏ9 வீதியோரக்காடுகளில் எரிக்கப்பட்ட அந்தச் சடலங்களின் பிணவாடை மறையும் முன்பாக மூக்கைப் பொத்தியபடி கிளிநொச்சியை விட்டு அதே சைக்கிளில் இடம்பெயர்ந்து மாங்குளம் நோக்கிப் போனான். வெற்றி என்பதும் தோல்வியின் முதற்படிதான் சில நேரங்களில்.  மரணம் எவ்வளவு பொய்யாக எவ்வளவு அரசியலாக,எவ்வளவு ஏமாற்றாக யுத்தத்தை முன்னெடுக்கும் தரப்புகளால் செய்யப்படுகின்றன என்பதற்கது சாட்சி.

இசைப்பிரியாவின்  இறந்த உடல் முதலில் துவாரகாவின் உடலாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டது. உங்களுக்கது நினைவிருக்கலாம். உலகம் பதைபதைத்தது. பிரபாகரனின் மகள் என்கிற பதட்டம் அதிலிருந்தது. பிறகுதான் அது இசைப்பிரியா என்கிற ஆறுதலான தகவல் தமிழ்த்தேசிய இணையப்போராளிகளை வந்தடைந்தது. அந்த ஆறுதலை அவர்கள் 2009 ல் வெளிப்படுத்திய விதம் மிகவும் அருவருக்கத்தக்கது. அப்போது நான் பேஸ்புக்கில் எழுதியது நினைவிருக்கிறது “அது அவளில்லாவிட்டால் பரவாயில்லையா?” உண்மையைச் சொன்னால் பரவாயில்லை என்பதுதான் அநேகரின் உள்ளக்கிடக்கை. இந்த மனோ நிலை எங்கிருந்து முளைக்கிறது? இந்தச் சாக்கடைச் சமூகத்திற்குத்தான் அறிவூட்டல் முதலில் தேவை. மரணம் என்பதில் இத்தனை வேறுபாடுகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிற ஒரு சமூகம். இழப்பில் இத்தனை தகுதி நிலைகளைக் கொண்டியங்கும் சமூக அமைப்பில் எப்படி இழப்பில் இருக்கிறவனுக்கு ஆறுதல் கிடைக்கும்.

சாவு இழப்புத்தான். ஆனால் ஐஐயோ என்று ஒன்றையும்,அப்படியா சந்தோசம் என்று இன்னொன்றையும் எப்படி இந்தச் சமூகத்தால் பார்க்கமுடிகிறது?

அண்மையில் சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் தண்டனை நிறைவேற்றல் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோவை பார்த்தேன். உடல் பதற சகமனிதனாயிருக்க வெட்கப்பட்ட ஒரு தருணம் அது. என்ன ஒரு கொடுரமான தருணம் அது. என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அது ஒரு பெரும் குற்றவுணர்வை எனக்குள் எழுப்பியது ஒரு பதினைந்து வருடங்கள் முன்னால் என்னுடைய அனுபவம் இது ஒரு பதினாலாவது வயதில் என்று நினைக்கிறேன் நாங்கள் இடம் பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்தோம் தேசத்துரோகியைச் சுடுவதற்காக ஸ்கந்தபுரச் சந்தைக்கு முன்னால் மரக்குற்றியில் ஏற்றிவைத்து குற்றப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள் அந்த மனிதனின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்க அவன் கால்களால் கூப்பியபடி தனக்கருகில் துவக்கேந்தி நின்றவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். துவக்குகள் ஏந்தியிருந்தவர்கள் சுடப்போகிறார்கள் என்றெதிர்பார்த்த தருணத்தில் சரேலென்று பிக்கப்பொன்றின் கதவுதிறந்து வெகு ஸ்டைலாக பிஸ்டலை உயர்த்தி ஒரே வெடி நான் அதை ஒரு புனிதக் காரியத்தைப் பார்ப்பதைப் போலவே பார்த்தேன். தேசத்துரோகிக்கு வேண்டியதுதான் வெட்கத்துடனும் துயரத்துடனும் சொல்கிறேன் அந்த மனிதன் பற்றி எந்த அக்கறையும் எனக்கிருக்கவில்லை. இறந்து போன அந்த மனிதனை விடவும் பிஸ்டலோடு வந்த கதாநாயகனின் தரிசனம் மகிழ்ச்சியளித்தது. அவர்தான் அந்த விசாரணைப்பிரிவின் பொறுப்பாளர், பொட்டம்மானின் வலது கை இப்படித்தான் சனங்களிடம் ஆரவாரமிருந்தது. இறந்த போன அந்த மனிதனைப் பற்றி ஒரு நாயும் சீண்டவில்லை. நான் அவனது கொலையை நியாயம் என்றே நினைத்தேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் நியாயமா அநியாயமா என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து யாரோ ஒரு பெண்ணின் தலை கொய்யப்படுவதைக் கண்டு வேதனைப் படும்போது காட்டிக் கொடுத்ததாய்ச் சொல்லப்பட்டுக் கொல்லப்பட்டவனின் கூப்பிய கால்களும் அந்த மரக்குற்றியில் யாரோ மண்ணள்ளிப் போட்டு மறைத்தபின்னும் எட்டிப்பார்த்த படியிருந்து உறைந்த இரத்தமும் என் நினைவுகளில் மேலெழுகின்றன. அவை என்னைப் பார்த்து பெரிய மனிதாபிமானி மாதிரி நடிக்காதே என்றென்னைக் கேட்குமாப்போல் இருக்கிறது.  நான் இந்த இரண்டு மரணங்களையும் பார்த்ததைப் போலத்தானே இந்தச் சமூகம் மரணத்தைக் கொலையை அணுகுகிறது. அப்படியானால் எங்கே அறிவூட்டல் தேவை?

நினைவு கொள்ளல் நல்லதுதான். தேவைதான். நமது உரிமைதான் ஆனால் இன்றைக்கு அது பெரும் அரசியலாகவும் வியாபாரமாகவும் தமிழ் மொழிக்குப் புதிய சொற்களைக் கண்டடைவதற்கான நாளாகவும்தான் இருக்கிறது. மே 18 ஐ என்ன பெயரில் அழைப்பது என்பதிலேயே தமிழ்த்தேசிய ஜனநாயக இதயத்தில் ஒரு பெயரில்லை. அதற்கே ஆயிரம் அடிபாடு நீங்கள் தமிழ்த்தேசியத்தை இந்த அடிபாடுகளிலிருந்து பார்க்காதீர்கள் என்பதாய் மரத்திலிருந்து பாம்பொன்று காதுக்குள் சொல்லும்.  இன்றைக்கு புலிகள் இயக்கமே பலதாய் பிரிந்திருக்கிறது அதற்குள் ஒற்றுமை வேண்டி ஒரு சிலர் பேசுகிறார்கள். காலப்போக்கில் மற்றவற்றைப் பின்தள்ளி ஒரு அமைப்பு ஏகப்பிரதிநித்துவம் பெறும், மற்ற இரண்டோ மூன்றோ அமைப்புக்களும் ஒட்டுக்குழுவாகவும்,துரோகக் கும்பலாகவும் உறுதிப்படுத்தப்படும். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக இதயம் பலத்துடன் இருப்பதாகப் பத்தியாளர் எழுதுவார்கள். இதுதானே முப்பத்துச் சொச்சம் இயக்கங்களுக்கும் நடந்தது. வாழ்க்கை மட்டுமல்ல வரலாறும் வட்டம் தானோ? நினைவு கொள்ளுதலில் எவ்வளவு அரசியல் இருக்கிறது? யார் நினைவு கொள்ளப்படுகிறார்? யாரால் நினைவு கொள்ளப்படுகிறார் என்பதில் தானே எல்லாம் இருக்கிறது இல்லையா? யார் யாரை நினைவு கொள்ளுவது யார்  யாரைக் கழிப்பது ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமா? ஓரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் தியாகிகள் தினத்துக்கும் மாவீரர் தினமளவு பிசினஸ் நடக்குமா? மன்னிக்கோணும் கவனம் கிடைக்குமா? எங்களுக்குள் இவ்வளவு சிக்கல் இருக்கிறதே இதை எப்படித் தீர்ப்பது? நாங்களே இன்னொருவர் நினைவுகொள்ளும் உரிமையை மறுத்தபடி நமது உரிமைக்காய் குரலெழுப்புகிறோம் நடக்குமா? அது வேறு இது வேறு கனி ருசியானது அருந்து அருந்து மரத்தில் தொங்கும் அதே பாம்பு உருவேற்றும்.

அரசாங்கம் இன்றைக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது அல்லது நினைவு கூர்கிறது. ஆனால் இந்த யுத்த வெற்றியைப் பெறுவதற்காக எத்தனை ஆயிரக்கணக்கான ஏழைச்சிங்களவர்களின் வீடுகளுக்கு சவப்பெட்டிகளை வெகுமானமாக இனவாதம் அழித்திருக்கிறது.  உண்மையில் சிங்களவர்கள் வீடுகளில் இந்த நாளன்று யுத்தத்தில் இழந்த தங்கள் பிள்ளைகளை நினைக்காமல் உறவினர்கள் இருப்பார்களா? வெற்றிக் கொண்டாட்டங்களின் உற்சாக ஓசையில்,இராணுவ அணிவகுப்பின் சப்பாத்துக் குளம்பின் ஓசையில்,வெடிக்கப்படும் மரியாதை வேட்டுக்களின் பேரொலியில் மேலெழமுடியாது தேய்ந்தடங்கிப் போகிறது தாய்மாரின் விசும்பல். உண்மையில் வெற்றியைக் கொண்டாடுகிறவர்களுக்கு அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை தெரிவதேயில்லை ஏனெனில் அதை அவர்கள் செலுத்துவதில்லை. இந்த வெற்றி என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் மனிதகுலத்தையே வெட்கம் கொள்ளவைக்கும் செயலுக்காக எத்தனை பேரின் மரணங்களை அந்தச் சின்னத்தீவுக்கு இராஜபக்ச குடும்பம் பரிசளித்திருக்கிறது.

இதே நிபந்தனைகள்தான் நமக்கும் ஒரு காலத்தில் பொருந்திப் போயிருந்தது நண்பர்களே. சமாதான காலத்தில் நம்முடைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சாவல் விட்டார் “40000 சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள்” என்று அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையது. ஆனையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது உலகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தன இனிப்புக்கள் பரிமாறப்பட்டன. அதே நேரம் நூற்றுக்கணக்கான வீடுகளில் சவப்பெட்டிகளுக்கு தாய்மார்கள் துணையிருந்தார்கள். ஆனால் பரிமாறப்பட்ட எந்த இனிப்பிலும் இந்தத் தாய்மாரின் கண்ணீரின் உப்புச் சுவடேயில்லை. வெற்றி ஆராவாரத்தில் துயிலுமில்லப்பாடல் ஒலியடங்கித் தேய்ந்தது. எப்படி இந்த உலகம் இத்தனை கொடுரமானதாய் சீவிக்கிறது? சவப்பெட்டிகளை தயார்ப்படுத்துங்கள் என்று சவால் விட்டவர் இன்றைக்கும் இருக்கிறார் அதே சவாலை அவர் எப்போதும், இன்னொரு சந்தர்ப்பத்திலும் விடத் தயாராயே இருப்பார் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு உறுதியாகத் தெரியும் களத்தில் செத்து மடியப்போவது தானல்ல என்பது.

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

சுயநலமிக்கவை….

பதுங்குகுழியின்

தழும்புகளை,

கண்ணிவெடியில்

பாதமற்றுப்போனவளின் பயணத்தை,

மற்றும்

வானத்தில் மிதந்த

ஒரு பேரிரைச்சலுக்கு

உறைந்து போன குழந்தையின் புன்னகையை…

நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற

ஓய்வுப்பொழுதொன்றில்

வெற்றுத்தாளில் அழத்தொடங்குகின்றன.

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

அயோக்கியத்தனமானவை.

துப்பாக்கிகளிடையில்

நசிபடும் சனங்களின் குருதியை

டாங்கிகள் ஏறிவந்த

ஒரு சிறுமியின் நிசிக்கனவை

மற்றும்

தனது ஊரைப்பிரியமறுத்த

ஒரு கிழவனின் கண்ணீரை

போரின் நிழல்விழா வெளியொன்றின்

குளுமையிலிருந்து

பாடத்தொடங்குகின்றன..

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

சுயநலமிக்கவை….

அயோக்கியத்தனமானவை…

ஆயினும் என்ன

பிணங்களை விற்பதற்கு முன்பாக

துயரங்களை விற்றுவிடுவதுதான்

புத்திசாலித்தனமாது..

இதை என்னுடைய வலைப்பதிவில் 2009 ஜனவரியில் போட்டிருக்கிறேன் அதற்கும் சில மாதங்கள் முன்பு எழுதியிருந்திருப்பேன். துயரங்களை விற்றுத் தீர்ந்து பிணங்களை விற்கும் காலத்தில் நாம் இப்போதிருப்பதாய் உணர்கிறேன்.

வென்றவர்கள் தோற்றவர்களாகவும் தோற்றவர்கள் வென்றவர்களாகவும் மாறி மாறிக் கொன்றதில். தமிழ்த்தாய்மார்களுக்குப் பிள்ளைகளுமில்லை அவர்களின் கல்லறைகளுமில்லை. கல்லறைகளைக்கூட விட்டுவைக்காத நாகரீகமற்ற நீசர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். பிழைத்தலுக்காக பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் என்ற பெயரில் வசூலை இந்தப்பக்கத்தில் நடத்துகிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதை விடவும் பல பத்தாண்டுகளுக்கு முன்பே மண்ணுக்காய் போராட்டம் என்ற பெயரில் செத்துப்போன எத்தனையோ பேர் செத்தும் அங்கீகரிக்கப்படாதவர்களாய் தசாப்தங்கள் கடந்தும் ஒரு அனுங்கல் குரலில் நாங்களும் ஈழத்தமிழர்களுக்காய் இனவாதத்திற்கெதிராய்ப் போராடியவர்கள் தான் என்று முனகிக் கொண்டிருக்கிறார்கள்.

“மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்று கொத்துரொட்டிக் கடைப் பெயர்ப்பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதற்காகத் தானா இந்தவிலை? இதற்காகவா இத்தனை மரணங்கள்? உண்மையில் இந்தச் சமூகம் அந்த மரணங்களை மதிக்கிறதா? எல்லாவற்றையும் தங்களது இருப்பிற்கானதாகவும், பிழைத்தலுக்காகவும் , உணர்ச்சி அரசியலுக்காகவும் ஆகுதியாக்கிக் கொண்டிருக்கிற இந்தச் சமூகம் உண்மையில் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்வதை விட்டு விட்டு. மரணங்களைக் கொண்டாடாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும். எல்லா இடங்களிலும் மரணத்தின் விளைவுகள் ஒன்றேதான் என்பதை இந்தச் சமூகம் அறிந்து கொள்ளட்டும். பெருமைப்படுத்திவிட்டாலோ அல்லது சிறுமைப்படுத்திவிட்டாலோ மரணம் அல்லது இழப்பு உருவம் மாறிவிடாது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளட்டும். ஆற்றுப் படுத்துதல் பற்றி பிறகு பார்க்கலாம்.

மே 19 2013 அன்று கனடாவில் இடம்பெற்ற மரணம் இழப்பு மலர்தல் நிகழ்வில் நிகழ்த்திய உரையில் எழுத்து வடிவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்திற்காக நீங்கள் இழந்தவற்றை ஒருக்கா சொல்லுங்கோ ?

நேசக்கரம் தேவையில்லாத வேலையென்று 2009 மார்ச்மாதத்தோடு ஒதுங்கிப்போனீங்களே ?

 

எல்லா தொல்லைகளையும் தாங்கி 2010இல் ஒரு அமைப்பாக பதிவு செய்து இதற்கும்

உங்கள் யாரிடமும் ஒருசதம் கூட கேட்காமல் தனியொருத்தியாகவே எல்லாச் செலவுகளையும் தாங்கி ஒரு அமைப்பாக பதிவு செய்து  ஒரு அமைப்பாக ஓட வெளிக்கிட்ட போது தேசப்பற்று வந்து ஒரு அங்கத்தவராகவே சேர்ந்தீங்கள். அதிலும் கதையைத்தவிர செயல் ???? எவ்வளவெண்டது உங்களுக்கே வெளிச்சம் ???

கதைச்சே காலம் கடத்திக்கொண்டு அதுவே பெரிய வேலையெண்டு முரண்பட்டு 2011விட்டு ஒதுங்கும் போது பெரிய சபதங்களோடு இதே களத்தில் ஒரு திரியும் திறந்து சக கள உறவுகளிடம் பிரியாவிடை பெற்றுப் போனதெல்லாம் பதிவிலிருந்து அழிபடவில்லை.

 

எல்லாருடைய இடைஞ்சல்களையும் தாண்டி அந்த சனத்துக்கு ஏதாவது செய்ய வேணுமென்ற விருப்பில் தனித்த ஒருத்தியாக நேசக்கரத்திற்காக நான் இழந்ததை உங்கள் யாராலும் திருப்பித்தர முடியாது. இன்றுவரை நிர்வாகச் செலவை சமாளிக் நான் கிளீனிங் செய்கிறேன். பெயருக்கு ஒருவராக இருந்த உங்களுக்கே இதனை அழிக்கும் உரிமை இருக்கென்றால் இதனை இந்தளவுக்கு வளர்க்க அணுவணுவாக கஸ்ரப்பட்ட எனக்கு எந்தளவு கோபம் வரவேணும்.

 

நேசக்கரம் நிர்வாக கொமிற்றியில் எங்கேயும் நீங்கள் இல்லை. இதுக்குள்ளை ஆக்கினேன் அழிப்பேன் என்ற வீரம் வேறு.

 

மக்களுக்கான விடயத்தில் முரண்பாடுகள் வேண்டாமென உங்கள் தாளங்களுக்கு மௌனமாக இருந்ததுதான் இன்றைய உங்களது இந்த அழிப்பேன் என்ற எக்காளத்துக்கு காரணமாகிவிட்டது.

 

உங்களைப்போலவே நானும் சவால் விடுகிறேன். முடிஞ்சா நேசக்கரத்தை அழியுங்கோ பார்க்கலாம் ?

பூவிசிறிக்கெல்லாம் நான் பயப்பட்டு ஒதுங்கமாட்டேன். பண்ண முடிஞ்சதை பண்ணுங்கோ. வருகிற சவாலையெல்லாம் எதிர்கொள்ள நான் தயார்.

 

சீனப்பட்டாசுக்கும் , சினைப்பர் வெடிக்கும் வித்தியாசம் நிறைய. உந்த சீனவெடியை எங்கேனும் உலகம் தெரியாதவைக்கு கொழுத்திப் போடுங்கோ அங்கினைதான் சீனவெடிச்சத்தம் பொருத்தம்.

 

சவாலுக்கு சவால்.. என்று மாற்றர் ரெம்ப நீளும் என்று பார்த்தா.. எதிர் தரப்பு.. பெட்டிக்குள் அடங்கின சர்ப்பமானதால்.. சப்பென்று போயிட்டே..! கோலியாத்துக்கு தாவீதின் கவன் கல்லின் கனதி விளங்கிட்டுது போல..! புஸ்வாணமாக கவன் கல்லு என்ன பஞ்சு மூட்டையா..??! :lol:david+kill+goliath.jpg

 

 

துணிச்சலான பெண்மணி தான்..! ஒரு ஆணின் சுயதம்பட்ட.. வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நம்ப வேண்டியதாப் போச்சுது..! :D

 

Link to comment
Share on other sites

 

தமிழ் இனம் நடத்திய விடுதலை போராட்டத்தை  சோபாசக்தியின் புத்தகத்தில் இருந்துதான் வாசித்து தெரிந்தவர்களுக்கு. அகிலனின் கட்டுரை முன்வாங்கில் இருந்து படிப்பது போன்ற ஒரு திருப்ப்தியைதான் கொடுக்கும்.

 
துரதிஸ்டவசமாக அதை நேரில் பார்த்தவர்களுக்கு இது ஒரு கள்ளு  கொட்டில் புசத்தல்தான்.
 
30 வருடமாக தமிழ் இனத்தின் மீது ஏகாபத்தியங்கள் வீசிய அனைத்து குண்டுகளையும் நஞ்சுகளையும். தமது உடலையும் உயிரையும் காவல் அரண் ஆக்கி அனைத்து குண்டுகளையும் தமது உடலில் தாங்கியவர்களை. குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு.
எதோ ஆப்ரிக்க கண்டத்தில் போர் நடப்பதுபோல் சுயலமாக இருந்த .............. சுய விளம்பர நீதி தேவதைகள்.
வந்து கொட்டும் நீதி கதைகளுக்கு காத்து கொடுப்பதற்கு ............  நாம் தமிழன் மாதிரி பிறக்கவில்லை .
 
தமிழனாக பிறந்து விட்டோம்.
 
உங்களுடைய முன்வாங்கு எமக்கு வெகு தூரம். நீங்கள் அங்கேயே இருந்து கொள்ளுங்கள்.
இலக்கியம் என்பதை. எழுத்து பிழை இன்றி எழுத தெரியாதா கூட்டம். இலக்கிய ஒன்றுகூடல் செய்யும் போது  ஏதாவது பினாத்தும். அதை கொண்டுவந்து இணையுங்கள்.
யாழின் நகைச்சுவை பக்கம் யாரும் எதையும் இணைப்பதில்லை.

 

செம கொமடி இது .

சோபா பேனை தூக்கமுதலே விடுதலை போராட்டத்தில் இணைந்தவர்கள் நாங்கள் .(நீங்கள் எழுதியது நாட்டை விட்டு ஓடி வந்த யாழ் இணைய போராளிகளுக்கு பொருந்தலாம் ).

ஏதோ மூலையில் சென்றிக்கு நின்றவர்கலேல்லாம் இங்கு வந்து தாங்களே போராட்டம் நடாத்தியது மாதிரியும் ,சர்வதேச அரசியல்  பற்றி பேசுவதும்  அதைவிட வேடிக்கை .

ஆறு போத்தல்கள் கள் அடித்தவன் சும்மா படுத்திருக்க அரை போத்தல் கள் அடித்தவன் வெறி என்று புசத்திதிரிகின்றான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா சொன்னான் தான் தான் புலியை அழிச்சதாய்,  

ரணில் சொல்லுறார் தான் அழிக்க காரணம் எண்று,

பொன்சேகா தான் காரணம் எண்டுறார்,

மகிந்த சகோதரர்கள் தாங்களாம்,

அமெரிக்கா தாங்களாம்,

இந்தியாவும் தாங்களாம்,

ஏன் பாக்கிஸ்தானும் தாங்களாம்...  

இப்படி எல்லாரும் உரிமை கோரும் போது  கண்ட தேவாங்குகள் சொல்லுறதுகளை சீரியசா எடுத்துக்கொண்டு... 

 

எல்லோரும்  சொன்னார்கள் அறிந்து கொண்டோம்

இதையும் அறிந்து வைத்திருப்போம்

 

சரி யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் கேப்பிங்களா.... அப்படி கேட்டாலும் சும்மா போவியளா எண்டு இருக்காமல்...  உங்கட வயசுக்கு இப்படி எத்தினையை பாத்து இருப்பியள்... 

 

வரலாறே வழி காட்டி என்றார் தலைவர்

அவரே சொன்னார்

முதுகில் குத்துபவனே மிகவும் ஆபத்தானவன்

 

 

சும்மா வேலையை பாருங்கண்ணை கடுப்பை கிழப்பாமல்... 

 

பல திரிகளுக்கும்

கற்பனைக்கதைகளுக்கும்

புலநாய்வுகளுக்கும் எழுதுவதில்லை.

இதற்கு எழுத முடிவெடுத்ததற்கு காரணம்

இனி  வேடம் போட  விடக்கூடாது என்பதற்காக. :( 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிலன் யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் முந்தி புலிகளுக்கு ஆலவட்டம் பிடித்திருந்தால் இன்று தனது கருத்தை(வேறுபட்ட கருத்தை )  சொல்ல முடியாதா?

நீண்ட கால போராட்டங்களில் சுயநலனும் பொதுநலனும் இணைபிரியாத தோழர்கள். தியாகிகளுக்கூடவும் துரோகிகளுக்கூடவுமே  போராட்டம் அடுத்த கட்டத்தை அடையும். ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும் போராட்டத்திற்காக தந்தார் என்பதற்காக எல்லோரும் அப்படி தரவேண்டும் என்று எதிர்பார்பதோ அன்றி தராதவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று  வகையிடுவதோ போராட்டத்தை -அப்படி ஒன்று இருந்தால்; அடுத்த கட்டத்திர்ற்கு நகர்த்தாது.

 

Link to comment
Share on other sites

sathiri, on 22 May 2013 - 11:12 PM, said:snapback.png

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

 

உந்தச்ச"வாலுகள்" எல்லாம் புலிகளின்ர வன்னித்தலைமை இருக்கேக்க
 எங்க போனதெண்டு  தெரியேல.... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

 

ஆக்கியவர்களால் எல்லாவற்றையும் அழிக்க முடியாது சாத்திரி. நீங்கள் சாந்திக்கு நேசக்கரத்தை அழித்துவிடுவோம் என்று பயமுறுத்துவது, சின்னப்பிள்ளைகளை வெருட்டுவது போல் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களைப்போலவே நானும் சவால் விடுகிறேன். முடிஞ்சா நேசக்கரத்தை அழியுங்கோ பார்க்கலாம் ?

பூவிசிறிக்கெல்லாம் நான் பயப்பட்டு ஒதுங்கமாட்டேன். பண்ண முடிஞ்சதை பண்ணுங்கோ. வருகிற சவாலையெல்லாம் எதிர்கொள்ள நான் தயார்.

 

 

அன்புடன் சாந்தியக்கா அறிவது................

 
சவாலுக்கு எதிர் சவால் விட்டு நீங்கள் உங்கள் கைகளில் அழுக்கை பூசி கொள்கிறீர்கள். உங்களது அமைப்பின் பெயரை  ஒருமுறை நினைந்து பாருங்கள். "நேசக்கரம்" இதை எங்கல்லாம் நீட்ட முடிகிறதோ அங்கெல்லாம் உங்கள் கை நீளும்போதே உங்களின் கடந்தகால உழைப்பிற்கும் களைப்பிற்கும் ஒரு மன ஆறுதல் உங்களுக்கு  கிடைக்கும்.
எதோ ஒரு காரணத்திற்காக யார் மீதாவது உங்கள் கை நீண்டால்.......... உங்களுக்கு இறுதிவரை இது ஒரு மன உளைச்சலாகவே இருக்கும்.
அன்னை தெரேசாவை நினைத்து பாருங்கள், வெறும் கையோடு இந்தியா சென்ற அவர் வெறும் அன்பு என்ற ஆயுதத்தால் எத்தனை குழந்தைகளை தத்தெடுத்தார். இந்தியாவில் கர்சிக்கவும் கட்டுரை வரையவும் ஆக்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. பசித்த சிசுக்களுக்கு உணவு கொடுக்கத்தான் யாரும் இருக்கவில்லை.
"சுயவிளம்பர பிரியர்களை" இலகுவாக அங்கிருந்து பிரித்து எடுக்க முடியாது. தமிழனின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். உண்மையான காரணம் "சுயநலம்" 30 ஆயிரம் பேர் தம்மை தன்னிலை அற்று மண்ணுக்காக அழிக்க தயாரான போது. 3 இலட்சத்திற்கு மேலானவர்கள்  அவர்கள் முதுகில் சவாரி செய்து வாழ்க்கை நடத்த தயாரானார்கள். இது போதாது என்று அவர்களுக்கு எதிரே  30 நாடுகள் எதிரிகளாகவும் துரோகிகளாகவும். இதட்குள்ளாலும்   30 வருடம் நடந்தார்கள் என்பதை  நேரில் பார்தபடியால்தான் நாம் நம்புகிறோம்  அடுத்த சந்ததி இதை ஒரு புராண கதை என்று புறம் தள்ளிவிடும். ஒருவனுக்கு  உணவில்லை என்றால் .............. ஒருவனுக்கு உடை இல்லை ....... இன்னொருவனுக்கு  உறைவிடம் இல்லை. இங்கெல்லாம் முடிந்த அளவிற்கு உங்கள் கரத்தை நேசத்துடன் நீட்டும் நீங்கள். அறிவில்லாத மனிதர்களை நோக்கியும்  உங்கள் கரத்தை முடிந்தால் நீட்டுவதே உங்களுக்கு   பெருமை சேர்க்கும். தயவு செய்து வார்த்தைகளை நீட்டி விடாதீர்கள். இந்த உலகில் நன்மை செய்ய துணிந்தவர்கள்  நின்மதியாக வாழ்ந்ததாக   உதாரனத்திட்கே ஒரு கதையை நான் வாசிக்கவில்லை. கற்களையும் முட்களையும்   வீசிக்கொண்டே இருப்பார்கள். "பிரபாகரனைப்போல்" எந்த கல்லுக்கும்  கலங்காதவன் வரலாறு படைக்கிறான். அவர்கள் அறிவுக்கு எட்டியதைதானே அவர்களால் செய்ய முடியும்  சிலர் வாந்திகளை படைக்கிறார்கள். 
ஜேசுவின் வாழ்க்கை அசாதாரணமானது மரணம் வந்து முன்னின்ற போதும் இம்மியளவும் அசையாது  தனது மறு கன்னத்தையும் காட்டியதால் இன்று 2000 வருடம் கழிந்தும் எங்களுக்கு ஜேசுவை தெரிகிறது. அப்போதும் இந்த மக்களுக்கு அழிவு இவனால்தான் வந்தது என்று  கட்டுரை வரைய யாரவது இருந்திருப்பார்கள். மழைகால ஈசல்கள்போல்  மழைகாலம் முடிய  அவர்கள் கதை முடிந்துவிடும். ஜேசுவின் கதை முடியாது இப்போது அந்த போராளியை கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். 
உங்களுடைய உழைப்பினால் ஒருவனுக்கு வாழ்வு கிடைக்கிறது என்றால் அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். இடையில்  நின்று யாருடனும் மல்லு கட்டுவதால் என்னதான் வந்து தொலைக்க போகிறது ? ஒருமுறை சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடியிருந்து கும்மாளமடிச்சம்......கட்டிப்பிடிச்சு கொட்டியழுதம்...கூடயிருந்தவனையே கருவறுத்தம் இதுதான் தமிழனின் விதி.அது இங்கும்? 

 

Link to comment
Share on other sites

தம்பியை களமாடவிட்டு அவன் வீரமரணத்தில் பிழைப்பு நடத்தும் அண்ணா அகிலன் அவர்களே.!
காலத்தின் தேவையை நீங்கள் உணராதது போல் , போராட்டத்திற்கு எதுவித பங்களிப்பும் 
செய்யாத உங்கள் மனநிலையை நியாயப்படுத்துவதற்காக தம்பிக்கும் நீர் பாடம் எடுத்திருப்பீர்.வன்னியில் புலிகள் எந்தக் காலகட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது உமக்குத் தெரியும்.அப்படியிருக்க ஏதோ விடுதலைப்புலிகள் தொடக்கத்திலிருந்தே இந்த நடவடிக்கையில் 
ஈடுபட்டுவருபவர்கள்போல் கூறுகிறீர்.பணத்திற்காக எவரும் விலைபேசப்படவில்லை.
எதிர்காலத்தில் உங்களைப் போன்றவர்களின் குருட்டுத்தனமான கேள்விகள் எழலாம் என்பதற்காகவே 17,18 வயதிற்கு மேற்பட்ட  புலித் தளபதிகளுடைய பிள்ளைகள் முதலில் 
இணைத்துக் கொள்ளப்பட்டனர்.பிரிகேடியர்  சொர்ணம் அவர்களின் மூத்த புதல்வி முகிலும்,மேதகு தலைவரின் புதல்வி துவாரகாவும் சேர்ந்து களமுனையில் களமாடினர்.நேருக்குநேர் நின்று எதிரியுடன் மோதினர்.முள்ளிவாய்க்கால் இறுதிநாளுக்கு 
முன்னரே இருவரும் களப்பலி ஆயினர்.வீரவேங்கை துவாரகா,வீரவேங்கை முகில் இந்தப் பிஞ்சுகளும் வீரவரலாறாயினர் 

.இவர்களின் வீரமரணங்கள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

தயவுசெய்து அகிலன் அவர்களே விளங்கிக்கொள்ளுங்கள்.யாராவது உங்கள் தம்பியின் ( றாங்) இராணுவப் பதவிநிலை கேட்டால் மாவீரன் எனச் சொல்வதோடு,உங்களால் முடியாததை அவன் செய்தான் எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.கட்டாய ஆட்சேர்ப்பில் 
என்தம்பி பிடித்துச் செல்லப்பட்டதால்தான் அவன் செத்தான் என அவனின் வீரமரணத்தை மாசுபடுத்தாதீர்கள்.அப்படி இணைக்கப்பட்டவர்கள் பயிற்சியின் பின்னர் முன்னணிப் போர்வீரர்களாக களமாடி நெருப்புமழைக்குள் வாழ்ந்து சாதனை வீரர்களாய் சரித்திரம் படைத்தவர்கள்.அந்தப் புலித் தம்பிகளில் ஒருவனின் அண்ணானாக நீர் செய்யவேண்டியதெல்லாம் அவனின் கனவை நனவாக்குவது ஒன்றே.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தம்பியை களமாடவிட்டு அவன் வீரமரணத்தில் பிழைப்பு நடத்தும் அண்ணா அகிலன் அவர்களே.!
காலத்தின் தேவையை நீங்கள் உணராதது போல் , போராட்டத்திற்கு எதுவித பங்களிப்பும் 
செய்யாத உங்கள் மனநிலையை நியாயப்படுத்துவதற்காக தம்பிக்கும் நீர் பாடம் எடுத்திருப்பீர்.வன்னியில் புலிகள் எந்தக் காலகட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது உமக்குத் தெரியும்.அப்படியிருக்க ஏதோ விடுதலைப்புலிகள் தொடக்கத்திலிருந்தே இந்த நடவடிக்கையில் 
ஈடுபட்டுவருபவர்கள்போல் கூறுகிறீர்.பணத்திற்காக எவரும் விலைபேசப்படவில்லை.
எதிர்காலத்தில் உங்களைப் போன்றவர்களின் குருட்டுத்தனமான கேள்விகள் எழலாம் என்பதற்காகவே 17,18 வயதிற்கு மேற்பட்ட  புலித் தளபதிகளுடைய பிள்ளைகள் முதலில் 
இணைத்துக் கொள்ளப்பட்டனர்.பிரிகேடியர்  சொர்ணம் அவர்களின் மூத்த புதல்வி முகிலும்,மேதகு தலைவரின் புதல்வி துவாரகாவும் சேர்ந்து களமுனையில் களமாடினர்.நேருக்குநேர் நின்று எதிரியுடன் மோதினர்.முள்ளிவாய்க்கால் இறுதிநாளுக்கு 
முன்னரே இருவரும் களப்பலி ஆயினர்.வீரவேங்கை துவாரகா,வீரவேங்கை முகில் இந்தப் பிஞ்சுகளும் வீரவரலாறாயினர் 

.இவர்களின் வீரமரணங்கள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

தயவுசெய்து அகிலன் அவர்களே விளங்கிக்கொள்ளுங்கள்.யாராவது உங்கள் தம்பியின் ( றாங்) இராணுவப் பதவிநிலை கேட்டால் மாவீரன் எனச் சொல்வதோடு,உங்களால் முடியாததை அவன் செய்தான் எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.கட்டாய ஆட்சேர்ப்பில் 
என்தம்பி பிடித்துச் செல்லப்பட்டதால்தான் அவன் செத்தான் என அவனின் வீரமரணத்தை மாசுபடுத்தாதீர்கள்.அப்படி இணைக்கப்பட்டவர்கள் பயிற்சியின் பின்னர் முன்னணிப் போர்வீரர்களாக களமாடி நெருப்புமழைக்குள் வாழ்ந்து சாதனை வீரர்களாய் சரித்திரம் படைத்தவர்கள்.அந்தப் புலித் தம்பிகளில் ஒருவனின் அண்ணானாக நீர் செய்யவேண்டியதெல்லாம் அவனின் கனவை நனவாக்குவது ஒன்றே.

 

சொந்த இனத்தையே விலைபேச துணிந்தவர்களுக்கு..................

அம்மா தம்பியெல்லாம் ஒரு தூசு.
யாராவது சொன்னால்தான் அப்படி  யாரோ இவர்கள் வாழ்கையில் இருந்ததே அவர்களுக்கு  ஞாபகம் வரும்.
இங்கே சுயவிளம்பர பலகைக்கு தம்பி நல்ல வர்ணமாக இருக்கிறார் என்று எடுத்து அடித்திருக்கிறார்கள்.
அந்த மாவீரனுக்கு தமிழ் மண் என்றும் தலை வணங்கும். 
Link to comment
Share on other sites

 

அன்புடன் சாந்தியக்கா அறிவது................

 
சவாலுக்கு எதிர் சவால் விட்டு நீங்கள் உங்கள் கைகளில் அழுக்கை பூசி கொள்கிறீர்கள். உங்களது அமைப்பின் பெயரை  ஒருமுறை நினைந்து பாருங்கள். "நேசக்கரம்" இதை எங்கல்லாம் நீட்ட முடிகிறதோ அங்கெல்லாம் உங்கள் கை நீளும்போதே உங்களின் கடந்தகால உழைப்பிற்கும் களைப்பிற்கும் ஒரு மன ஆறுதல் உங்களுக்கு  கிடைக்கும்.
எதோ ஒரு காரணத்திற்காக யார் மீதாவது உங்கள் கை நீண்டால்.......... உங்களுக்கு இறுதிவரை இது ஒரு மன உளைச்சலாகவே இருக்கும்.
அன்னை தெரேசாவை நினைத்து பாருங்கள், வெறும் கையோடு இந்தியா சென்ற அவர் வெறும் அன்பு என்ற ஆயுதத்தால் எத்தனை குழந்தைகளை தத்தெடுத்தார். இந்தியாவில் கர்சிக்கவும் கட்டுரை வரையவும் ஆக்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. பசித்த சிசுக்களுக்கு உணவு கொடுக்கத்தான் யாரும் இருக்கவில்லை.
"சுயவிளம்பர பிரியர்களை" இலகுவாக அங்கிருந்து பிரித்து எடுக்க முடியாது. தமிழனின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். உண்மையான காரணம் "சுயநலம்" 30 ஆயிரம் பேர் தம்மை தன்னிலை அற்று மண்ணுக்காக அழிக்க தயாரான போது. 3 இலட்சத்திற்கு மேலானவர்கள்  அவர்கள் முதுகில் சவாரி செய்து வாழ்க்கை நடத்த தயாரானார்கள். இது போதாது என்று அவர்களுக்கு எதிரே  30 நாடுகள் எதிரிகளாகவும் துரோகிகளாகவும். இதட்குள்ளாலும்   30 வருடம் நடந்தார்கள் என்பதை  நேரில் பார்தபடியால்தான் நாம் நம்புகிறோம்  அடுத்த சந்ததி இதை ஒரு புராண கதை என்று புறம் தள்ளிவிடும். ஒருவனுக்கு  உணவில்லை என்றால் .............. ஒருவனுக்கு உடை இல்லை ....... இன்னொருவனுக்கு  உறைவிடம் இல்லை. இங்கெல்லாம் முடிந்த அளவிற்கு உங்கள் கரத்தை நேசத்துடன் நீட்டும் நீங்கள். அறிவில்லாத மனிதர்களை நோக்கியும்  உங்கள் கரத்தை முடிந்தால் நீட்டுவதே உங்களுக்கு   பெருமை சேர்க்கும். தயவு செய்து வார்த்தைகளை நீட்டி விடாதீர்கள். இந்த உலகில் நன்மை செய்ய துணிந்தவர்கள்  நின்மதியாக வாழ்ந்ததாக   உதாரனத்திட்கே ஒரு கதையை நான் வாசிக்கவில்லை. கற்களையும் முட்களையும்   வீசிக்கொண்டே இருப்பார்கள். "பிரபாகரனைப்போல்" எந்த கல்லுக்கும்  கலங்காதவன் வரலாறு படைக்கிறான். அவர்கள் அறிவுக்கு எட்டியதைதானே அவர்களால் செய்ய முடியும்  சிலர் வாந்திகளை படைக்கிறார்கள். 
ஜேசுவின் வாழ்க்கை அசாதாரணமானது மரணம் வந்து முன்னின்ற போதும் இம்மியளவும் அசையாது  தனது மறு கன்னத்தையும் காட்டியதால் இன்று 2000 வருடம் கழிந்தும் எங்களுக்கு ஜேசுவை தெரிகிறது. அப்போதும் இந்த மக்களுக்கு அழிவு இவனால்தான் வந்தது என்று  கட்டுரை வரைய யாரவது இருந்திருப்பார்கள். மழைகால ஈசல்கள்போல்  மழைகாலம் முடிய  அவர்கள் கதை முடிந்துவிடும். ஜேசுவின் கதை முடியாது இப்போது அந்த போராளியை கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். 
உங்களுடைய உழைப்பினால் ஒருவனுக்கு வாழ்வு கிடைக்கிறது என்றால் அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். இடையில்  நின்று யாருடனும் மல்லு கட்டுவதால் என்னதான் வந்து தொலைக்க போகிறது ? ஒருமுறை சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

இக்களத்தில் கருத்தால் அதிகம் மோதியது நீங்களும் நானும் நெடுக்கும். ஆனால் ஒருபோதும் யாரையும் யாரும் அழிக்க வேண்டுமென்று என்றைக்கும் எழுதியதுமில்லை எண்ணியதுமில்லை.

ஆற்றுப்படுத்தும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். உங்கள் அக்கறைக்கு தரும் கௌரவமாக

இங்கே இனி நான் எதையும் எழுதமாட்டேன்.

உங்களையும் உங்கள் போல அக்கறையோடு மின்னஞ்சல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்மையைப் புரிந்த 17உறவுகளுக்கும் நன்றிகள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.