Jump to content

“சுதந்திர காஷ்மீர்!” :உருகும் யாசின் மாலிக்


Recommended Posts

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
November 29, 2010

 

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

 

தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.

 

இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

 

இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.

 

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.

 

இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.

 

இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.

 

‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.

 

இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
 

armed-forces-special-powers-act-afspa-2.

 

ஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.

சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

 

armed-forces-special-powers-act-afspa-3.

 

 

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.

 

armed-forces-special-powers-act-afspa-4.

 

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.

இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.

 

http://www.vinavu.com/2010/11/29/armed-forces-special-powers-act-afspa/

 

Note: 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை என்பதால் இரோம் சர்மிளா 10 ஆண்டுகளாக போராடுகிறார் என்று உள்ளது. அவர் இன்றுவரை தொடர்ந்தும் போராடுகிறார்.

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

Irom Sharmila பற்றி கேட்டதுண்டா, அமைதியாக போராடினால் எந்த பாதிப்பும் நிகழாது. நீங்கள் இந்தியாவை அரக்கன் போல சித்தரிக்கறிர்கள்; பாகிஸ்தான் , பங்களாதேஷ் , சீனா , ரஷ்யா , ஆப்கான் ,பர்மா(ம்யன்ம்மர்)  பார்த்தல் என்ன சொல்லுவிர்கள் என தெரியவில்லை.  India is a soft power wic is well known thing.

     

 

இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு தன்னும் மரியாதை கொடுத்தார்களா உங்கள் இந்திய அரசு? அவரை கைது செய்து மூக்கால் உணவு வழங்கி கொடுமைப்படுத்துவது தான் மிச்சம்.

 

இது 2010 இல் வந்த கட்டுரை,

 

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

 

irom-sharmila.jpg

 

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த 2010 நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.

மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை.  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது வீட்டிற்குச் செல்லவில்லை.  மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.  உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.

அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.  வெல்லட்டும் அவரது போராட்டம்!  வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

 

http://www.vinavu.com/2010/12/07/irom-sharmila/

 

 

இது அண்மையில் வந்த செய்தி.

 

இரோம் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு பதிவு!

5 Mar 2013

 

Irom-Sharmila-charged-with-attempting-su

 

டெல்லி:மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை(AFPSA) வாபஸ் பெறக்கோரி, மணிப்பூரில் கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2006ல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஷர்மிளா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  மணிப்பூர் மாநிலம் இம்பாலில் கடந்த 2000ம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஷர்மிளா சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஷர்மிளா, இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். மூக்கு வழியே அவருக்கு திரவு உணவு செலுத்தப்படுகிறது.

தனது கோரிக்கையை வலியுறுத்தி 2006ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. நேற்று இவ்வழக்கில் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக, மணிப்பூரில் இருந்து டெல்லி வந்த ஷர்மிளா, நீதிமன்றத்தில் ஆஜரானார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று அரசு தரப்பில் சாட்சிகள் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த ஷர்மிளா, ‘‘ஆயுதப்படை சிறப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் சார்பில் 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன். எனது போராட்டம் வன்முறையை தூண்டவில்லை. காந்திய வழியில் அமைதியான முறையில் போராடி வருகிறேன். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே போராடி வருகிறேன். அரசும் ராணுவமும் கூட்டாக சதி செய்து மக்களை ஏமாற்றுகின்றன. எங்களுக்கு அமைதியும் நீதியும் வேண்டும்’’ என்றார்.

 

http://www.thoothuonline.com/irom-sharmila-charged-with-attempting-suicide-39489/

 

இரோம் ஷர்மிளா விடுதலை: உண்ணாவிரதம் தொடருகிறது!

14 Mar 2013

 

Court-orders-social-activist-Irom-Sharmi

 

இம்பால்:மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளா, முதல் வகுப்பு ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் படி விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ஆனால், விடுதலையான பிறகு ஷர்மிளா ‘ஷேவ் ஷர்மிளா’ அலுவலகத்திற்கு சென்று உண்ணாவிரதத்தை தொடருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

 

தற்கொலைக்கு முயன்றார் என்ற குற்றம் சாட்டி போலீஸ் ஷர்மிளாவை கைது செய்தது. போலீஸ் காவலில் ஜெ.என்.ஐ மெடிக்கல் சயன்ஸ் மருத்துவமனையில் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மூக்கின் வழியாக ஷர்மிளாவுக்கு திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டு வந்தது.

 

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த விசாரணையில் தன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவுச் செய்யப்பட்டதில் நிராசையடைந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

காந்தியின் தத்துவங்களை பின்பற்றி AFPSA வுக்கு எதிராக போராட மட்டுமே தான் செய்வதாகவும், இந்த கறுப்புச் சட்டத்தின் பின்னணியில் அட்டூழியங்கள் நடத்திய ராணுவத்திற்கு எதிராகத்தான் தனது போராட்டம் என்று ஷர்மிளா கூறினார்.

 

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்று கூறி கொண்டுவரப்பட்ட இச்சட்டம் சாதாரண மக்களை துன்புறுத்தவே பயன்படுத்தப்படுகிறது. மணிப்பூர் மாநில மக்களை அடக்கி ஒடுக்கவே மத்திய அரசு இச்சட்டத்தை வலுக்கட்டாயமாக திணித்துள்ளது என்று ஷர்மிளா குற்றம் சாட்டினார்.

 

அப்ஸாவை(AFPSA) வாபஸ் பெறும் வரை போராட்டத்தை தொடருவேன். போராட்டத்தில் நான் மரணித்தால் மீண்டும் மணிப்பூரில் பிறக்க விரும்பவில்லை. எனது அமைப்பிற்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும்’  என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

 

தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி போலீஸ் மீண்டும் ஷர்மிளாவை கைது செய்யும் என்றும் கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் இதனைத்தான் செய்துவருகின்றார்கள் எனவும் ஷர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்கஜித் தெரிவித்தார்.

 

http://www.thoothuonline.com/court-orders-social-activist-irom-sharmilas-release/

Link to comment
Share on other sites

Yasin-Malik-2_0_0.jpg

 

 

 

இது என்னது? அமைதி பேச்சுவார்தையா? that fellow is India's most wanted terrorist Hafizz saed even US announced bounty for him. This pics taken few months ago.  

 

துளசி முதலில் காஷ்மீரில் எல்லை தாண்டிய திவிரவாதத்தை மறுத்திர்கள் ஆதாரத்தை காம்பித்த பிறகு நீங்கள் ஒன்றும் பேசவில்லை. இந்திய படைகள் திவிரதிகளைகளையும்  அவர்களுக்கு உதவியர்களையும் கொன்றது , இதில் தவறேதும் இல்லை. ராணுவம்  ஒரு பகுதில் நீண்ட நாள்கள் இருந்தால் மனித உரிமை மீறல் நடைபெரும் , ஏன் US/NATO  படைகள் ஆப்கான், ஈராக்கில்  மனித உரிமை மீறலை அரங்க்கேற்றவில்லையா?.      

 

அப்சல் குருவை ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி விட்டு குற்றத்தை நிரூபிக்காமலேயே திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தூக்கில் போட்டும் விட்டார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரங்கல் கூட்டமாகவும் நடத்திய கூட்டத்தில் யாசீன் மாலிக்கும் கலந்து கொண்டார். இதில் கூட அவர் அஹிம்சை முறையை விட்டு வன்முறையை முன்னேடுக்கவில்லையே..

 

யாசீன் மாலிக் தீவிரவாதி என்றால் அவரை சந்தித்த மன்மோகன் சிங்கும் தீவிரவாதி. :)

943524_526434247392361_1352447691_n.jpg

 

 

படம் : facebook

Link to comment
Share on other sites

நீங்கள் தான் இவர்களை பார்த்தல் தீவிரவாதிகள் மாதிரியா தெரியுது என வினவுநிர்கள் அதற்கு பதில் அந்த படம் . அதை தான் நான் கூற முயல்கிறேன் யாரையும் பார்த்து தீவிரவாதியா இல்லையா என சொல்லமுடியாது. காஷ்மீரில் பெண்கள் தீவிரவாத அமைப்பும் உண்டு.

 

அப்போ உலக திவிரவாதத்தை  எல்லாம் ஆதரிப்பீர்கள் போலும் , நான் திவிரவாதத்தை எந்த வடிவிலும் ஆதரிக்கமாட்டேன் திவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

 

 

Note:எனக்கு லீவு அதுனால எழுதுகிறான் அடுத்த வாரம் நான் பிஸியாகி விடுவேன் , பின்பு யாழ் இணயத்தை பார்ப்பதே அரிதாகி விடும். என்ன செய்ய வேலை அப்படி.

 

அவர்கள் முகத்தை பார்த்தால் தீவிரவாதி மாதிரியா தெரிகிறது என்று நான் கேட்கவில்லை. அவர்கள் அஹிம்சை வழியில் போராடுவதை பார்த்தால் தீவிரவாதம் மாதிரியா தெரிகிறது என்ற அர்த்தத்தில் கேட்டேன். அதற்கு நீங்கள் நான் முகத்தை பார்த்து ஜோசியம் சொல்லும் கணக்கில் ஒரு படத்தை போட்டு விட்டு அவரை பார்த்தால் தீவிரவாதி மாதிரியா தெரிகிறது என்று கேட்டதால் நானும் நக்கலாக பதிலளித்திருந்தேன். :)

 

நான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறேனா இல்லையா என்று கருத்து கூறியிருக்கவில்லை. :) மற்றவர்களுக்கு தீவிரவாதி என்று பட்டம் சுமத்துவதற்கு இந்தியாவுக்கு தகுதியில்லை. ஏனெனில் இந்தியா அப்பாவி மக்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு மக்களை அழிக்கும் தீவிரவாத செயலையே செய்கிறது என்பதையே கூறியிருந்தேன். :)

 

மற்றபடி யாசீன் மாலிக் தீவிரவாதி அல்ல, அவர் அஹிம்சை வழியில் போராடினாலென்ன மீண்டும் ஆயுதம் தாங்கி போராடினாலென்ன அவர் விடுதலைப்போராளி என்பதே என் கருத்து.

 

நீங்கள் என்ன தான் தலைகீழாக நின்று எதிர்ப்பு தெரிவித்தாலும் யாசீன் மாலிக் வருகைக்கு நாம் ஆதரவு தான். :D

Link to comment
Share on other sites

ராணுவம்  ஒரு பகுதில் நீண்ட நாள்கள் இருந்தால் மனித உரிமை மீறல் நடைபெரும் , ஏன் US/NATO  படைகள் ஆப்கான், ஈராக்கில்  மனித உரிமை மீறலை அரங்க்கேற்றவில்லையா?.      

 

இராணுவம் நீண்ட காலமாக ஒரு பகுதியில் இருந்தால் மனித உரிமை மீறல் நடைபெறும் தானே என்று சாதாரணமாக சொல்கிறீர்கள். ^_^ அப்படியானால் இராணுவம் என்னவும் செய்யலாமா? அதை சகித்துக்கொண்டு அவர்கள் அடக்குமுறைக்குள் வாழ வேண்டுமா? அடக்குமுறைகள் இருப்பதால் தானே எதிராக கிளர்ந்தெழுகிறார்கள். அவர்கள் பிரதேசத்தை அவர்களிடமே கையளிக்க வேண்டியது தானே? இந்திய இராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?

 

உங்கள் வக்கிர புத்தியையும் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கும் குணத்தையும் முதலில் நிறுத்துங்கள். ^_^ 

 

தமிழீழத்திலும் சிங்கள இராணுவம் எம்மக்களை கொடுமைப்படுத்துகிறது, அழிக்கிறது, பெண்களை பாலியல்வல்லுறவுக்குட்படுத்துகிறது. இராணுவம் என்றால் அப்படி தான் என்று சொல்லி விட்டு பேசாமல் இருக்க சொல்கிறீர்களா? ^_^

 

அப்படியானால் தமிழீழ கோரிக்கைக்கு மட்டும் எவ்வாறு ஆதரவளிப்பதாக சொல்கிறீர்கள்? வாக்குகளுக்காக தானே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசாங்கம் மக்களுக்கு ஒரே அட்டூழியங்களாக செய்து கொண்டிருக்கும். அவர்களுக்கெதிராக அற வழியில் போராடியும் அரசாங்கம் அதை கண்டும் காணாமலும் இருக்கிறது. பத்தாக்குறைக்கு அறவழியில் போராடுபவர்களை மேலும் மேலும் துன்பப்படுத்துகிறது. இரோம் சர்மிளாவை உதாரணமாக காட்டுகிறீர்கள். இந்திய அரசு என்னவும் செய்யும், ஆனால் அனைத்து மக்களும் இரோம் சர்மிளா மாதிரி கஷ்டப்படனும், அப்படி தானே? அவர் பற்றிய செய்திகளையும் இந்த திரியில் இணைக்கிறேன். :)

 

யாசீன் மாலிக் கூட இப்பொழுது அறவழியில் தான் போராடுகிறார். பிரிந்து செல்லக்கூடிய அனுமதியுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீரை அவர்கள் விருப்பப்படி அவர்களிடமே கொடுத்தால் ஏன் அவர்கள் போராடுகிறார்கள். பி.ஜே.பி யும் காங்கிரசும் சீமான் அண்ணாவுக்கு எதிராக கதைப்பதை வழமையாக கொண்டுள்ளது. அதே போல் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதையும் வழமையாக கொண்டுள்ளது. நீங்களும் அதற்காகவே இந்த திரியில் கருத்து எழுதுகிறீர்கள்.

 

ஏற்கனவே மணிப்பூர் இரோம் சர்மிளாவையும் அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியிடம் மக்கள் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார்கள். :)

 

துளசி நீங்கள் எதிலுமே தெளிவில்லாமல் பேசுகிறிகள் , இரோம் ஷர்மிளா முதலில் மணிப்ரில் சக்திவாய்த்த பெண்மணி கிடையாது அதனால் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. அடுத்து நீங்கள் கேட்பிர்கள் பிரபலமாக இல்லாவிடில் கோரிக்கையை ஏற்காத அரசு ? அது இல்லை வாதம் இவர் சொல்லவதை அங்கே உள்ள தீவிரவாத அமைப்புகள் கேட்காது அதனால் AFPSA நீக்க முடியாது .  AFPSA  நீக்கினால் மணிப்பூரில் அமைதி திரும்பும் என இரோம் ஷர்மிளா அரசுக்கு  உறுதி அளிக்க முடியுமா? அப்படி வாக்கு கொடுக்கும் துணிவு அவரிடம் உண்டா?. அவர் ஒரு அமைதியான திடமான சுயநலம் அற்ற போராளி என்பதில் ஐயமில்லை .அனால் அவர் காந்தியை ,நேரு , நேதாஜி  போல சக்திவாய்தவர் இல்லை , மேற்குரியர்கள் சொன்னால் மக்கள் கேட்பர் அவ்வாறான சூழ்நிலை மணிப்பூரில் அவருக்கு இல்லை ,அதனால் அவரது கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை.

அதே காஷ்மீர்  போராளிகள் பாகிஸ்தானையும்  சீனாவையும்  எதிர்த்து போராட வேண்டியது தானே அடிப்படையில் அவர்களும் தானே காஷ்மீரை ஆகிரமித்து உள்ளனர் அதை ஏன் அவர்கள் செய்யவில்லை. காஷ்மீர் மக்கள் விருப்படி அவர்கள் பிரிந்து செல்லாம் என instrument of accession  இருக்கிறதா காட்டுங்கள்? அப்படியே இருக்கு என்று வைத்து கொள்லாம் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இன்னைய வேண்டும் என்று விருப்பட்டால் என்ன செய்வது? அப்ப காஷ்மீர் காக்க 1948,1967, 1983(Siachin), 1999 போர் செய்த இந்தியா கேன பையல் ,  காஷ்மீரிகள் அறிவாளிகள் ???. Democracy is not a license that you can do whatever you want we also having principles and interests.     

 

 

ஏற்கனவே மணிப்பூர் இரோம் சர்மிளாவையும் அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியிடம் மக்கள் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

-மனம்மாற வரவேற்கிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்சல் குருவை ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி விட்டு குற்றத்தை நிரூபிக்காமலேயே திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தூக்கில் போட்டும் விட்டார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரங்கல் கூட்டமாகவும் நடத்திய கூட்டத்தில் யாசீன் மாலிக்கும் கலந்து கொண்டார். இதில் கூட அவர் அஹிம்சை முறையை விட்டு வன்முறையை முன்னேடுக்கவில்லையே..

 

யாசீன் மாலிக் தீவிரவாதி என்றால் அவரை சந்தித்த மன்மோகன் சிங்கும் தீவிரவாதி. :)

943524_526434247392361_1352447691_n.jpg

 

 

படம் : facebook

 

அப்சல் குரு ஒரு திவிரவாதி ஆதாரங்களில் அடிப்படையில் அவருக்கு தூக்குதண்டனை ஆனைத்து நீதி மன்றங்களாலும்  (CBI ,high , SC court)  வழங்கப்பட்டது , 2001 நடந்த சம்பவதிற்கு 2013 தண்டனை நிறைவேற்றியது இது எப்படி திடீர் ஆகும்?. கருணா அமைதியான வாழ்வை முற்பட்டார் ஏன் புலிகள் அவரை அதுவும் பிரிட்டின் வைத்து கொள்ள முற்பட்டனர் ,ஏன் அவர் அமைதியான வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?? என கூறுவது சரியாக இருக்கிறதோ அதே போல தான் யாசின் மாலிக்கும் அஹிம்சை முன்யெடுபதும் இவர் இன்றளவும் தீவிரவாதத்திற்கு துணை போகிறார். இதற்கு சான்று மேல உள்ள படம்.

சீமான் யாசின் மாலிக்கை சந்திப்பதும் மன்மோகன் யாசின் மாலிக்கை சந்திப்பதும் ஒன்றா?? சீமான் இலங்கையில் நடந்த போரில் இந்தியாவால் தடை செய்யப்பட்ட புலிகளின் அமைப்பை ஆதரித்தும் இந்தியா ஒருமைபாட்டுக்கும் எதிராக பேசினார் சிறை சென்றார் , மாலிக்கும் அப்படியே அதற்கு மேலும் செயல்பட்டர். மாலிக் சீமானின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்  something is smoking even layman can understand it. மன்மோகன் இவர்கள் மாதிரி இல்லை. இது சராசரி இந்தியனின் பார்வை    

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் நீண்ட காலமாக ஒரு பகுதியில் இருந்தால் மனித உரிமை மீறல் நடைபெறும் தானே என்று சாதாரணமாக சொல்கிறீர்கள். ^_^ அப்படியானால் இராணுவம் என்னவும் செய்யலாமா? அதை சகித்துக்கொண்டு அவர்கள் அடக்குமுறைக்குள் வாழ வேண்டுமா? அடக்குமுறைகள் இருப்பதால் தானே எதிராக கிளர்ந்தெழுகிறார்கள். அவர்கள் பிரதேசத்தை அவர்களிடமே கையளிக்க வேண்டியது தானே? இந்திய இராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?

 

உங்கள் வக்கிர புத்தியையும் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கும் குணத்தையும் முதலில் நிறுத்துங்கள். ^_^

 

தமிழீழத்திலும் சிங்கள இராணுவம் எம்மக்களை கொடுமைப்படுத்துகிறது, அழிக்கிறது, பெண்களை பாலியல்வல்லுறவுக்குட்படுத்துகிறது. இராணுவம் என்றால் அப்படி தான் என்று சொல்லி விட்டு பேசாமல் இருக்க சொல்கிறீர்களா? ^_^

 

அப்படியானால் தமிழீழ கோரிக்கைக்கு மட்டும் எவ்வாறு ஆதரவளிப்பதாக சொல்கிறீர்கள்? வாக்குகளுக்காக தானே? :)

 

நான் இந்தியாவை மற்ற நாட்டை பற்றி சொன்னால் நீங்கள் ஈழத்தை இழுகிரிர்கள்.

ஈழத்தில் எனது இனம் கொன்று ஒழிக்கப்பட்டது எனது தாய்மொழியை பேசியதால் எனது உறவுகளை  ஈவு இரக்கமின்றி  கொல்லப்பட்டனர் அதை எதனுடனும் ஒப்பிடமுடியாது. ஈழம் பெறுவது மட்டும் நோக்கம் அல்ல சிங்கள இனத்தை இந்திய துணை கண்டத்தில் ஒழிக்கவேண்டும் , எனது பாட்டன் சோழன் செய்ததை திரும்பவும் செய்ய போகிறோம் அவ்வளவுதான். சிங்களவர்கள் தமிழர்களை ஒழித்தனர் என்ற வரலாரை எழுத விடமாட்டோம். உனது(கோபம்) கடைசி வரிகள் என் உணர்வை

புண்படுத்திவிட்டது , பெண்ணே நீ பிழைதுப் போ.   

 

 

Link to comment
Share on other sites

துளசி நீங்கள் எதிலுமே தெளிவில்லாமல் பேசுகிறிகள் , இரோம் ஷர்மிளா முதலில் மணிப்ரில் சக்திவாய்த்த பெண்மணி கிடையாது அதனால் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. அடுத்து நீங்கள் கேட்பிர்கள் பிரபலமாக இல்லாவிடில் கோரிக்கையை ஏற்காத அரசு ? அது இல்லை வாதம் இவர் சொல்லவதை அங்கே உள்ள தீவிரவாத அமைப்புகள் கேட்காது அதனால் AFPSA நீக்க முடியாது .  AFPSA  நீக்கினால் மணிப்பூரில் அமைதி திரும்பும் என இரோம் ஷர்மிளா அரசுக்கு  உறுதி அளிக்க முடியுமா? அப்படி வாக்கு கொடுக்கும் துணிவு அவரிடம் உண்டா?. அவர் ஒரு அமைதியான திடமான சுயநலம் அற்ற போராளி என்பதில் ஐயமில்லை .அனால் அவர் காந்தியை ,நேரு , நேதாஜி  போல சக்திவாய்தவர் இல்லை , மேற்குரியர்கள் சொன்னால் மக்கள் கேட்பர் அவ்வாறான சூழ்நிலை மணிப்பூரில் அவருக்கு இல்லை ,அதனால் அவரது கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை.

அதே காஷ்மீர்  போராளிகள் பாகிஸ்தானையும்  சீனாவையும்  எதிர்த்து போராட வேண்டியது தானே அடிப்படையில் அவர்களும் தானே காஷ்மீரை ஆகிரமித்து உள்ளனர் அதை ஏன் அவர்கள் செய்யவில்லை. காஷ்மீர் மக்கள் விருப்படி அவர்கள் பிரிந்து செல்லாம் என instrument of accession  இருக்கிறதா காட்டுங்கள்? அப்படியே இருக்கு என்று வைத்து கொள்லாம் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இன்னைய வேண்டும் என்று விருப்பட்டால் என்ன செய்வது? அப்ப காஷ்மீர் காக்க 1948,1967, 1983(Siachin), 1999 போர் செய்த இந்தியா கேன பையல் ,  காஷ்மீரிகள் அறிவாளிகள் ???. Democracy is not a license that you can do whatever you want we also having principles and interests.     

 

 

ஏற்கனவே மணிப்பூர் இரோம் சர்மிளாவையும் அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியிடம் மக்கள் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

-மனம்மாற வரவேற்கிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

 

பல விடையங்கள் தெரியாத நான் கூட தெளிவாக பேசுகிறேன். ஆனால் பல விடையங்கள் தெரிந்த நீங்கள் தான் தெளிவில்லாமல் பேசுகிறீர்கள். :) உங்களுக்கு பதில் எழுதி வேலையில்லை என்று தான் மற்றவர்கள் பதிலளிப்பதை நிறுத்தி விட்டார்கள். :) ஆனாலும் நான் பதிலளித்தமைக்கு காரணம் உங்களுக்கு பதிலளிக்கும் நோக்கிலாவது இங்கு கட்டுரைகளை இணைத்து தெரியாத உண்மைகளை பலரும் அறிந்து கொள்ளலாம் என்பதற்காக தான். :)

 

மக்கள் பிரச்சினையை தாமாக தீர்த்து வைக்க வேண்டியது ஒரு நாட்டின் அரசாங்கத்தின் கடமை. அவ்வாறு தீர்த்து வைக்காத போது அதற்கெதிராக மக்கள் போராடினால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதை விடுத்து போராடுபவர் பிரபலமானவரா இல்லையா என்று பார்த்து தான் அவர்கள் கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்று முடிவெடுக்கப்படும் என நீங்கள் கூறுவது நகைப்புக்கிடமானது. காந்தி அன்று உண்ணாவிரதமிருக்கும் போது பிரபலமானவர்கள் உண்ணாவிரதமிருந்தால் தான் நாங்கள் செவிமடுப்போம் என்றோ அல்லது வெள்ளைக்காரன் உண்ணாவிரதமிருந்தால் தான் செவிமடுப்போம் என்றோ கூறப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு விடுதலையும் கிடைத்திருக்காது. :)

 

இரோம் சர்மிளா போராடுவதற்கு காரணம் AFPSA அமுலாக்கப்பட்ட பின்னர் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை சுட்டுக்கொல்கிறார்கள் என்பதற்காக தான். பஸ் ஸ்டாண்டில் நின்ற அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதை பார்த்த பின்னர் தான் அவர் AFPSA க்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வராவிட்டால் எதற்கு தேசியக்கட்சிகள் என்று சீமான் அண்ணா கேட்டதில் தவறு ஏதும் இல்லை. :)

 

காஷ்மீர் மக்கள் சுதந்திர காஷ்மீரை தான் கேட்கிறார்கள். இந்த திரியில் தலைப்பிலேயே அது உள்ளது. பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களுக்கு உதவி செய்வதாக் சொல்லிக்கொண்டு அவர்களுக்கு உவத்திரம் கொடுத்தது தான் மிச்சம். சீனாவும் இன்னொரு பக்கம். அனைவருக்கும் மத்தியில் நின்று தவிப்பது காஷ்மீர் மக்கள் தான். அனைவரையும் வெளியேற சொல்லி தான் போராடுகிறார்கள். "பிரிந்து போகும் உரிமையுடன்" தற்காலிகமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீரை (அம்மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்காமல்) அவர்களிடமே கையளிக்க வேண்டும். காஷ்மீர் செல்வதற்கு தனியாக விசா எடுத்து செல்லும் முறையை சீனா இப்பொழுது கொண்டுவந்துள்ளது என்று எங்கோ வாசித்தேன். அது உண்மையாக இருப்பின் சீனாவின் சரி பிழைகளுக்கு அப்பால் சீனா காஷ்மீரை தனிநாடாக கொள்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.

 

இரோம் சர்மிளாவை அழைக்கும்படி மக்கள் கேட்டதற்கு என்னமோ மனம் மாற வாழ்த்துகள் என்று எழுதி வைத்துள்ளீர்கள். :) அவர்கள் தவறு செய்யவில்லை மனம் மாறுவதற்கு. :) யாசீன் மாலிக்குடன் தொடர்புகளை பேணும் அதேவேளை ஒடுக்கப்பட்ட பஞ்சாப், அசாம், மணிப்பூர், நாகலாந்து போன்ற இடங்களிலிருந்து தமது மக்களுக்காக குரல்கொடுத்து இந்திய அரசுக்கெதிராக போராடும் போராளிகளை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் மக்கள் முன் வைக்கிறார்கள். :) எழுத்தாளர் அருந்ததி ராயையும் அழைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

அப்சல் குரு ஒரு திவிரவாதி ஆதாரங்களில் அடிப்படையில் அவருக்கு தூக்குதண்டனை ஆனைத்து நீதி மன்றங்களாலும்  (CBI ,high , SC court)  வழங்கப்பட்டது , 2001 நடந்த சம்பவதிற்கு 2013 தண்டனை நிறைவேற்றியது இது எப்படி திடீர் ஆகும்?. கருணா அமைதியான வாழ்வை முற்பட்டார் ஏன் புலிகள் அவரை அதுவும் பிரிட்டின் வைத்து கொள்ள முற்பட்டனர் ,ஏன் அவர் அமைதியான வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?? என கூறுவது சரியாக இருக்கிறதோ அதே போல தான் யாசின் மாலிக்கும் அஹிம்சை முன்யெடுபதும் இவர் இன்றளவும் தீவிரவாதத்திற்கு துணை போகிறார். இதற்கு சான்று மேல உள்ள படம்.

சீமான் யாசின் மாலிக்கை சந்திப்பதும் மன்மோகன் யாசின் மாலிக்கை சந்திப்பதும் ஒன்றா?? சீமான் இலங்கையில் நடந்த போரில் இந்தியாவால் தடை செய்யப்பட்ட புலிகளின் அமைப்பை ஆதரித்தும் இந்தியா ஒருமைபாட்டுக்கும் எதிராக பேசினார் சிறை சென்றார் , மாலிக்கும் அப்படியே அதற்கு மேலும் செயல்பட்டர். மாலிக் சீமானின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்  something is smoking even layman can understand it. மன்மோகன் இவர்கள் மாதிரி இல்லை. இது சராசரி இந்தியனின் பார்வை    

 

உங்கள் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவது சந்தோசம். :)

 

ஈழத்திலுள்ள மக்களுக்கு பாதிப்பு என்று சொல்லும் நீங்கள் "அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டதால் தான் இலங்கைக்கு எதிராக புலிகள் போராடினார்கள்" என்ற உண்மையை நீங்கள் அறியாமல் அவர்களை இந்தியா பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டியதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்திய இறையாண்மை, இந்திய ஒருமைப்பாடு பற்றி கதைப்பவர்கள் ஒருநாளும் போராடும் மக்களின் நியாயத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்தியா எது சொன்னாலும் அதை உண்மை என சொல்லி கதைக்கும் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் மக்கள் அனைவரும் இன்னமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

நான் சொல்ல வந்தது குற்றம்சாட்டப்பட்ட ஹபீஸ் சயீது பக்கத்தில்  யாசீன் மாலிக் அமர்ந்திருந்தால் யாசீன் மாலிக்  தீவிரவாதி அல்லது தீவிரவாத ஆதரவாளர் என்றால் யாசீன் மாலிக் பக்கத்தில் மன்மோகன் சிங் நிற்பதால் அவரும் தீவிரவாதி அல்லது  தீவிரவாத ஆதரவாளர் என்று. அதை இல்லை என்று மறுக்கும் நீங்கள் யாசீன் மாலிக்கை தீவிரவாதி என்று சொல்வதையும் நிறுத்துங்கள். அதே நேரம் மன்மோகன் சிங் யாசீன் மாலிக்கை சந்திக்க முடியும் என்றால் சீமான் அண்ணாவும் சந்திக்க முடியும். அதற்கு உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி அதை மறுக்க முடியாது. எம்மிடம் கேள்வி கேட்கும் உங்களுக்கு மன்மோகன் சிங் யாசீன் மாலிக்கை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி கேட்க தெரியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

 

அப்சல் குரு மீது சூழ்நிலைகளின் அடிப்படையில் குற்றம் சாட்டி ஆதாரத்தை நிரூபிக்காமலேயே  2005 இல் மரண தண்டனை என தீர்ப்பளித்தார்கள். ஆனால் அவருடன் இன்னும் இருவருக்கும் மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவரை பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தார்கள், இன்னொருவருக்கு குற்றம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று சொல்லி 10 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றினார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இந்தியா எவ்வாறு மற்றவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பை வழங்குகிறது என்று.

 

மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்ட கைதியை இவ்வளவு காலமும் உயிருடன் வைத்திருந்தவர்கள் இப்பொழுது இரகசியமாக தூக்கில் போட்டது எவ்வாறு நியாயம்? அதை கூட நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்.

 

நான் இந்தியாவை மற்ற நாட்டை பற்றி சொன்னால் நீங்கள் ஈழத்தை இழுகிரிர்கள்.

ஈழத்தில் எனது இனம் கொன்று ஒழிக்கப்பட்டது எனது தாய்மொழியை பேசியதால் எனது உறவுகளை  ஈவு இரக்கமின்றி  கொல்லப்பட்டனர் அதை எதனுடனும் ஒப்பிடமுடியாது. ஈழம் பெறுவது மட்டும் நோக்கம் அல்ல சிங்கள இனத்தை இந்திய துணை கண்டத்தில் ஒழிக்கவேண்டும் , எனது பாட்டன் சோழன் செய்ததை திரும்பவும் செய்ய போகிறோம் அவ்வளவுதான். சிங்களவர்கள் தமிழர்களை ஒழித்தனர் என்ற வரலாரை எழுத விடமாட்டோம். உனது(கோபம்) கடைசி வரிகள் என் உணர்வை புண்படுத்திவிட்டது , பெண்ணே நீ பிழைதுப் போ.   

 

ஈழத்தில் என் இனத்துக்கு விடுதலை வேண்டும். ஏனென்றால்  தமிழீழம் என்பது இலங்கையில் தான் அமையும். எனவே இலங்கை இறையாண்மையையும் இலங்கை ஒருமைப்பாடையும் தான் அது பாதிக்கும். ஆனால் இந்தியாவில் போராடும் ஏனைய இனத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. ஏனென்றால் அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும். மிக சிறந்த நகைச்சுவை. :)

 

உங்கள் உணர்வை நான் புண்படுத்தினேனா இல்லையா என்பது இருக்கட்டும். நீங்கள் கொண்டிருக்கும் கொள்கையின் பால் வெளிப்படுத்தும் கருத்துகள் ஏனைய பலரின்  உணர்வுகளை, பலரின் போராட்டங்களை புண்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

 

ஈழத்தை ஆதரிப்பவராக இருந்தால் முதலில் புலிகளின் போராட்ட நியாயத்துக்கும் அவர்களின் தியாகத்துக்கும் மரியாதை கொடுக்க பழகுங்கள். உங்கள் உணர்வு உண்மையாக இருக்க வாழ்த்துகள். உங்களுக்கு இத்துடன் பதிலளிப்பதை நிறுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

அப்ஸல் குருவுக்கு திஹாரில் தூக்கு: அதிகரிக்கும் மர்மங்கள்!

10 Feb 2013

புதுடெல்லி: அப்ஸல் குருவின் சொந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும்,பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு அவருடன் நேர்முகம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கும் பதில் கிடைக்காத கேள்வி ஒன்று உள்ளது. ஆங்கில மருந்து கடைக்கு சொந்தக்காரரான மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்ட அப்ஸல் குருவுக்கும், மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்ஸல் குருவுக்கும் இடையேயுள்ள தூரத்தைக் குறித்தே அக்கேள்வி.

சிறையில் அவருடன் நேர்முக பேட்டியை எடுத்த கேரளாவைச் சார்ந்த ஆங்கில பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் இதனை விவரிக்கிறார்.

கஷ்மீருக்கு சுதந்திரத்தைக் கோரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் பழைய அனுதாபியில் இருந்து ஜெய்ஷே முஹம்மது போன்ற இயக்கங்களை நோக்கிய அப்ஸலின் பரிணாமத்தைக் குறித்த ரகசிய கதை. அதன் மர்மமான பின்னணி ஒருவேளை தூக்குமேடையில் முடிவடைந்த அப்ஸலின் இவ்வுலக வாழ்க்கையோடு பலியாகிவிட்டதாக இலக்கியவாதியான என்.எஸ்.மாதவனும் கூறுகிறார்.

சிறு வயதில் தந்தையை இழந்தபோதும் சகோதரர்களின் பாதுகாப்பில்  கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படிப்பதற்காக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். தொன்னூறுகளின் துவக்கத்தில் ஜே.கே.எல்.எஃபின் தீப்பொறி பறக்கும் அரசியல் உரைகளால் கவரப்பட்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருக்கு பயிற்சிக்காக சென்றேன். அது எனக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து விரைவாகவே சொந்த ஊருக்கு திரும்பி சாதாரண வாழ்க்கையை வாழ துவங்கினேன். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

ராணுவத்தினரால் குறிவைக்கப்பட்ட நான், அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. பெட்ரோலில் குளிப்பாட்டினார்கள். பனிக்கட்டி மீது கிடத்தப்பட்டேன். மிளகாய்ப் பொடியை புகைக்க வைத்தார்கள். பொய் வழக்கை சுமத்தினார்கள்.

எனக்காக வாதாட வழக்கறிஞர் இல்லை. இறுதியில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டேன். போலீஸ் கூறிய கதைகளை ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்டன. சமூகத்தையும், நீதிபீடத்தையும் கூட இக்கதைகள் ஈர்த்தன. இவ்வாறு நான் மரணத்தண்டனையை பெற்றேன் – வினோத்துடன் நடந்த நேர்முகப்பேட்டியில் அப்ஸல் இவ்வாறு துவங்கினார்.

மக்பூல் பட்டை தூக்கிலிட்டதை தொடர்ந்து கஷ்மீர் கொந்தளித்த சூழலில் தான் அப்ஸல் குரு வளர்ந்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வை விரும்பி கஷ்மீரிகள் மீண்டும் ஒருமுறை தேர்தலில் வாக்களிக்க முடிவெடுத்த காலம். தேர்தலில் அதிகமான முறைகேடுகள் நடந்தன. பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்ற முஸ்லிம் யுனைட்டட் ஃப்ரண்டின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பாதுகாப்பற்ற சூழலில் ஆயுதங்களை தூக்க தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். எல்லோரையும் போலவே மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜே.கே.எல்.எஃபில் சேர்ந்தார். பல வாரங்கள் கழிந்து ராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் மருந்து கடையை துவக்கினார். திருமணம் முடித்தார். புதிய வாழ்க்கையை துவக்கினார்.

ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸுடன்(எஸ்.டி.எஃப்) ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் தானும் குடும்பமும் தொந்தரவுக்கு ஆளாவோம் என்பதை அப்ஸல் நம்பினார். இக்காலக் கட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தேவீந்தர் சிங், சிறிய வேலை ஒன்றைச் செய்ய ஒப்படைத்தார். இதற்கு கட்டுப்பட்டதே தான் பாராளுமன்ற தாக்குதல் வழக்கி சிக்க காரணம் என்று அப்ஸல் குரு கூறினார். ஆனால், அந்த சிறிய வேலையை செய்து கொடுக்காமல் இருக்க அப்ஸலுக்கு முன்னால் வேறு வழியில்லை. முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று வாடகைக்கு ஒரு வீட்டை ஏற்பாடுச் செய்யவேண்டும் என்பதே அவ்வேலை. அப்ஸல் இதற்கு முன்பு முஹம்மதை கண்டதில்லை. (ஐந்து துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் முஹம்மதை போலீஸ் அடையாளம் கண்டது) டெல்லியில் இருந்த பொழுது தனக்கும், முஹம்மதுக்கும் தேவீந்தர் சிங்கின் போன் கால்கள் தொடர்ந்து வந்ததாக அப்ஸல் கூறுகிறார். முஹம்மது ஏராளமானோரை டெல்லிக்கு அழைத்து வந்ததையும் வினோதிடம் அப்ஸல் குரு தெரிவித்தார்.

சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்து நின்ற வேளையில் அப்ஸல் குரு கைதுச் செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேசன்களிலும், இதர இடங்களிலும் கொடூரமான சித்திரவதைகள். அவரது உறவினர் ஷவ்கத்,  மனைவி நவ்ஜோத், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி ஆகியோர் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக வாக்குமூலம் அளிக்க கோரி சித்திரவதை. ஊடகங்கள் நம்பும் வகையில் வாக்குமூலம் அமையவேண்டும். மறுத்தபொழுது குடும்பத்தினரை கொல்வோம் என்ற மிரட்டல். குடும்பத்தினரை உயிரோடு காண வேண்டுமெனில் போலீசுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்ற மிரட்டல். சிறிது காலம் கழிந்து வழக்கை பலகீனப்படுத்தும் வகையில் கொண்டுவரலாம் என்று ஸ்பெஷல் பிரிவு போலீஸ் அதிகாரி அப்ஸலுக்கு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிதான் அப்ஸலை பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தீவிரவாதியாக மாற்றியது.

“பாராளுமன்ற தாக்குதல் யார் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியாது. எஸ்.டி.எஃப் திட்டமிட்டு, டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நடைமுறைப்படுத்திய வழக்கில் என்னை சிக்கவைத்தார்கள். போலீசாருக்கு விருதுகள் கிடைத்தன. எனக்கு மரணத்தண்டனையும்”- அப்ஸல் குரு நேர்முகத்தில் கூறினார்.

பாராளுமன்ற தாக்குதல் நடக்கும்பொழுது அதற்கு நேரடி சாட்சியாக இருந்தவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் விநோத். பிரபல ஆங்கில பத்திரிகையின் டெல்லி செய்தியாளர் அவர். தொன்னூறுக்கும் மேற்பட்ட எம்.பிக்களை நேரில் சந்தித்து பேசி பாராளுமன்ற தாக்குதலின் மர்மங்களைக் குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்தார். ஆனால், அவரது பத்திரிகை கூட அதனை பிரசுரிக்கவில்லை.

 

http://www.thoothuonline.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/

 

Link to comment
Share on other sites

தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் யாசின் மாலிக் கலந்துகொண்டதை கண்டனம் செய்த இராமகோபாலனுக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி!

கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்திருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி பதில் அறிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.

யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி என்றும், பாரதத்திற்கு எதிராக செயல்படுபவர் என்றும், அவர் இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றும் வர்ணித்துள்ள இராம.கோபாலன், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதா என்றும் கேட்டுள்ளார்.

யாசின் மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது என்பதை இராம கோபாலானுக்கு கூறிக்கொள்கிறோம்.

காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? அப்படியானால், இந்துக்களுக்காக மட்டுமே இந்திய நாட்டில் பேசிவரும் இராம கோபாலன் போன்றவர்கள் இந்து பயங்கரவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

காஷ்மீர் மக்களுக்காக போராடினால் அது பாரதத்திற்கு எதிரானது என்று கூறுகிறார். இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும் வாழ்கின்றனர். ஆனால், இந்து மக்களுக்காக மட்டுமே பேசுகிறீர்களே? இந்த நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் இஸ்லாமிய, கிறித்தவ மக்களெல்லாம் இந்தியர்களாக இருந்தும் அவர்களுக்கு எதிராக பேசி, துவேஷத்தையும், மத மோதலையும் ஏற்படுத்தி, நாட்டில் இரத்தக்களறியை ஏற்படுத்தி வருகிறீர்களே, உங்கள் செயலபாடுகள் பாரத நாட்டிற்கும், அதன் ஒற்றுமைக்கும், சமூக இணக்கத்திற்கு எதிரானது இல்லையா?

பயங்கரவாதம் என்று பேச உங்களுக்கு எந்த வகையிலாவது அருகதை இருக்கிறதா? இறைவனின் பெயரால் அரசியல் நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் நீங்கள் பயங்கரவாதியா? அல்லது தனது மக்களின் உரிமைக்காக போராடும் யாசின் மாலிக் பயங்கரவாதியா?

யாசின் மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன? மத்திய அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தான் என்பதை இராம.கோபாலன் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக யாசின் மாலிக் நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறும் இராம.கோபாலன், தமிழின மக்கள் சிங்கள பெளத்த இனவாத அரசு இனப்படுகொலை செய்தபோது அதனைக் கண்டித்து ஒரு போராடத்தையாவது நடத்தியது உண்டா? இலங்கைத் தமிழர்கள் வழிபட்டுவந்த இரண்டாயிரம் கோயில்கள் இடித்துத்தள்ளப்பட்டதே, அதற்குக் காரணமான ராஜபக்சவை எதிர்த்து பேசியதுண்டா?

இந்துக் கோயில்களை இடித்துவிட்டு, புத்த விகாரைகளை நிறுவிவரும் ராஜபக்ச, திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அதனை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன்? சிங்கள கடற்படையினரால் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்களே, அவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்காக இப்படி அறிக்கை போர் நடத்தியதுண்டா?

பாரத தேசத்தின் ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள், காவிரியிலும், முல்லைப் பெரியாற்று அணையிலும் கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்தபோது என்றைக்காவது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு வழிபடச் சென்ற சாந்தவேலு என்ற பக்தர், கொதிநீரைக் கொட்டிக் கொல்லப்பட்டாரே, அதனைக் கண்டித்து இராம கோபாலன் ஒரு அறிக்கை விட்டதுண்டா? அவர் ஒரு இந்து, ஏன் அவரை கொதி நீர் ஊற்றிக் கொன்றீர்கள் என்று கேள்வி கேட்டீரா? அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மெளன விரதம் அனுஷ்டித்த நீங்கள், யாசின் மாலிக் எங்களுக்காக பேச வரும்போது மட்டும் கண்டனக் குரல் எழுப்புவது பச்சை மதவாத அரசியல் என்பதன்றி, வேறென்ன?

இன்றைய உலகில் தம் இனத்திற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடும் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தும் ஒரு ஆட்சி, அதிகார மமதை சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால், பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார் என்பதை நமக்கு பின் வரும் சந்ததிகள் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் முன்னெடுக்கும் தமிழின அரசியலும் தெரியும், நீங்கள் முன்னெடுக்கும் மதவாத அரசியலும் புரியும், யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

391627_522946657772580_1140967858_n.jpg

சீமான் எதிர்ப்புவாதிகள் அவரின் கேள்விகளுக்கு விடைகளை அளிக்கலாமே!!!

 

Link to comment
Share on other sites

இந்த சீமான் தானே தமிழ் நாட்டிலிருக்கும் அயல் மானிலகாரர்களை துரத்தவேண்டும் என்று கூவியது?
சீமானுக்கும் ராமகோபாலனுக்கும் என்ன வித்தியாசம்?

 

Link to comment
Share on other sites

இந்த சீமான் தானே தமிழ் நாட்டிலிருக்கும் அயல் மானிலகாரர்களை துரத்தவேண்டும் என்று கூவியது?

சீமானுக்கும் ராமகோபாலனுக்கும் என்ன வித்தியாசம்?

 

சீமான் அப்படியெல்லாம் சொல்லவில்லை.. யாரும் இங்கு வாழலாம்.. ஆனால் நாமே ஆளுவோம் என்று சொல்லுறார்.. இதில் தவறில்லை.. ஐம்பது வருடங்கள் தமிழரல்லாத முதல்வர்கள் தமிழ்நாட்டை ஆண்டதன் பயன்கள் எண்ணில் அடங்காதவை அல்லவா? :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த சீமான் தானே தமிழ் நாட்டிலிருக்கும் அயல் மானிலகாரர்களை துரத்தவேண்டும் என்று கூவியது?

சீமானுக்கும் ராமகோபாலனுக்கும் என்ன வித்தியாசம்?

 

 

ஆதாரத்தை இணைக்கவும்.
 
தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கேட்டால் தண்ணீர் இல்லை என்கிறார்கள் அயல் மாநிலத்தார். ஆனால் திரைப்பட நடிக நடிகைகளில் இருந்து கந்து வட்டிக்காரர் வரை தொழில் செய்து உழைக்க தமிழ் நாடு வேண்டும். அயல் மாநிலத்தில் தமிழ் நாட்டுக்காரர் ஒரு ஊர்வலம் செய்யட்டும் பார்க்கலாம்.அப்போ தமிழர்களுக்கு விழும் அடியை பார்க்க வேண்டும்.எத்தனை முறை கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் தமிழர்கள் அடி வாங்கி உள்ளார்கள்.ஆக ஏனைய மாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கும் போது பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இப்போ சீமான் அயல் மாநிலத்தவர்களை வெளியேறச்சொன்னது (சொல்லி இருந்தால்) எப்படி பிழையாகும்.நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என கேனையர்களாக இருக்க தமிழ் நாட்டு இளைஞர்களுக்கே வேலை இல்லாத போது அயல் நாட்டவர் தமிழ் நாட்டின் வழங்களையும் வேலைகளையும் அள்ளி செல்கிறார்கள்.

 

அப்சல் குரு ஒரு திவிரவாதி ஆதாரங்களில் அடிப்படையில் அவருக்கு தூக்குதண்டனை ஆனைத்து நீதி மன்றங்களாலும்  (CBI ,high , SC court)  வழங்கப்பட்டது , 2001 நடந்த சம்பவதிற்கு 2013 தண்டனை நிறைவேற்றியது இது எப்படி திடீர் ஆகும்?. கருணா அமைதியான வாழ்வை முற்பட்டார் ஏன் புலிகள் அவரை அதுவும் பிரிட்டின் வைத்து கொள்ள முற்பட்டனர் ,ஏன் அவர் அமைதியான வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?? என கூறுவது சரியாக இருக்கிறதோ அதே போல தான் யாசின் மாலிக்கும் அஹிம்சை முன்யெடுபதும் இவர் இன்றளவும் தீவிரவாதத்திற்கு துணை போகிறார். இதற்கு சான்று மேல உள்ள படம்.

சீமான் யாசின் மாலிக்கை சந்திப்பதும் மன்மோகன் யாசின் மாலிக்கை சந்திப்பதும் ஒன்றா?? சீமான் இலங்கையில் நடந்த போரில் இந்தியாவால் தடை செய்யப்பட்ட புலிகளின் அமைப்பை ஆதரித்தும் இந்தியா ஒருமைபாட்டுக்கும் எதிராக பேசினார் சிறை சென்றார் , மாலிக்கும் அப்படியே அதற்கு மேலும் செயல்பட்டர். மாலிக் சீமானின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்  something is smoking even layman can understand it. மன்மோகன் இவர்கள் மாதிரி இல்லை. இது சராசரி இந்தியனின் பார்வை    

 

எப்படி சராசரி இந்தியனின் பார்வை  தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் போது இன்பமுற்றது என கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.